Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். மாநகர சபை கட்டடத்தை அடாத்தாக கைப்பற்றிய தொலைகாட்சி நிறுவனம்….

Featured Replies

யாழ். மாநகர சபை கட்டடத்தை அடாத்தாக கைப்பற்றிய தொலைகாட்சி நிறுவனம்….

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…


யாழ்.புல்லுக்குளம் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள கட்டட தொகுதியின் சில பகுதிகளை யாழில்.உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று அடாத்தாக கைவசப்படுத்தி வைத்திருப்பதாக யாழ்.மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்தார்.

 

யாழ்.மாநகர சபையின் இரண்டாம் அமர்வு இன்றைய தினம் யாழ்.மாநகர சபை சபா மண்டபத்தில் நடைபெற்றது. அதன் போது ,  குறித்த கட்டடத்தில் 54 கடைத் தொகுதிகள் உள்ளன. அவற்றில் பல தொகுதிகளுக்கு கட்டடம் கட்டப்பட்ட காலத்திலிருந்து வாடகை எதுவும் செலுத்தப்பட்டிருக்கவில்லை எனவே அது தொடர்பில் தனக்கு பதில் வழங்கவேண்டும் என்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் இன்று சபையில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதன் போது பதிலளித்த யாழ் மாநகர ஆணையாளர் குறித்த கட்டடத்தில் உள்ள 54 கடைகளில் 32 கடைகளை யாழ் மாநகரசபை பொறுப்பேற்றுவிட்டதாகவும். கட்டடம் கட்டுவதற்கு ஒப்பந்தம் வழங்கியபோது ஒப்பந்தகாரர் கட்டடத்தைக் கட்டி ஏனையவர்களுக்கு விற்பது எனவும் அதன்பின்னர் யாழ் மாநகரசபை அக்கட்டடங்களை பொறுப்பேற்று அதனைக் கொள்வனவு செய்தவர்களிடம் வாடகைப் பணத்தினைப் பெற்றுக்கொள்ளும் என்றும் குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளித்து உரையாற்றிய உறுப்பினர் மணிவண்ணன் அப்படியானால் குறித்த கட்டடத்தில் யாழ் மாநகரசபை பொறுப்பேற்றிருக்காத தொகுதிகள் இன்னமும் அதனைக் கட்டிய ஒப்பந்த காரரான மனோகரன் என்பவர் வசம் உள்ளதா? அவர் அதனை தான் வாடகைக்கு விட்டு வருமானம் ஈட்டிக்கொள்கிறாரா உள்ளிட்ட தெளிவுபடுத்தல்கள் வழங்கப்படவேண்டும் என கேள்வியெழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த யாழ் மாநகர முதல்வர் ஆர்னோல்ட் குறித்த கட்டடம் தொடர்பில் தானும் ஆராய்ந்ததாகவும் குறித்த கட்டட ஒப்பந்தகாரர் தான் சில சிக்கல் நிலைகளில் சிக்குண்டிருப்பதாக குறிப்பிட்டதாகவும் குறிப்பிட்டதோடு யாழ்ப்பாணத்திலிருந்து செயற்படும் தொலைக்காட்சி ஒன்றினால் குறித்த கட்டடத்தின் சில பகுதிகள் கட்டட ஒப்பந்தகாரரான மனோகரன் என்பவரிடமிருந்து கைப்பற்றப்பட்டிப்பதாகவும் அதனை தான் சபைக்கு பகிரங்கப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

மீண்டும் அதற்குப் பதிலுரைத்த உறுப்பினர் மணிவண்ணன் மனோகரனை அழைத்து இது தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்படவேண்டும் எனக் குறிப்பிட்டதோடு கால தாமதமின்றி குறித்த தொலைக்காட்சி பயன்படுத்தும் கட்டடத்தை யாழ் மாநகரசபை கைப்பற்றுவதற்கான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

http://globaltamilnews.net/2018/78281/

 

 

புலனாய்வாளர்களுக்கு கட்டடத்தை வழங்கிய முன்னாள் முதல்வர்….

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

JMC.jpg?resize=800%2C444
யாழ்.மாநகர சபைக்கு சொந்தமான கட்டத்தினை வாடகை அறவிடாமல் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குனராஜா வழங்கியமையை தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் ந. லோகதயாளன் ஆதார பூர்வமாக ஆவணங்களுடன் சபையில் குற்ற சாட்டை முன் வைத்தார்.

 

யாழ்,மாநகர சபையின் இரண்டாம் அமர்வு இன்றைய தினம் யாழ்.மாநகர சபை சபா மண்டபத்தில் இடம்பெற்றது. அதன் போதே குறித்த குற்றசாட்டை முன் வைத்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,

யாழ்ப்பாணம் மாநகர சபைக்குச் சொந்தாக யாழ் நகரின் மத்தியின் கடைத் தொகுதி மேல் மாடியில் இலக்கம் 05 கடையினை சபையின் அனுமதியினைப் பெறாமல் முன்னாள் முதல்வர் தன்னிச்சையாக வழங்கியுள்ளார்.

இதன் அடிப்படையில் 2014ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் 2017ம் ஆண்டு மே மாதம் வரையான காலப் பகுதிக்கான வாடகை மற்றும் வரி , தண்டம் உட்பட 10 லட்சத்து 16 ஆயிரம் ரூபா சபைக்குச் செலுத்த வேண்டியுள்ளது.

குறித்த பணம் சபைக்குச் செலுத்தப்படவில்லை. இதேபோன்று இலக்கம் 2 கடையினையும் வழங்கிய வகையில் 56 ஆயிரத்து 12 ரூபா நிலுவை உள்ளது.

இதேபோன்று சங்கிலியன் வீதியில் அமைந்திருந்த சபைக்கான கட்டிடத்தினை இராணுவ புலனாய்வாளர்களிற்கு கொடுத்த நிலையில் அக் கட்டிடத்தில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையம் 22 மாதங்களாக தனியார் வீட்டில் வாடகை அடிப்படையில் இயங்கியது இதற்காக மாதம் ஒன்றிற்கு 13 ஆயிரம் ரூபா வீதம் பணம் வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலும் 2 லட்சத்து 76 ஆயிரம் ரூபா பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு குறித்த மூன்று சம்பவங்களிற்குமான சான்று ஆவணங்களும் என் கை வசம் உண்டு இதனால் சபைக்கு ஏற்பட்ட நட்டம் மற்றும் நிதி கிடைக்காமை போன்றவற்றினால் 13 லட்சத்து 48 ஆயிரத்து 12 ரூபா பணம் வீணக்கப்பட்டமை சபை ஆவணங்கள் மூலமே உறுதியாகின்றது.

எனவே இதனையும் இது போன்ற வேறு சம்பவங்கள் இருப்பினும் அவற்றையும் கோரிப்பெற்று உடன் ஓர் வலுவான குழுவை நியமித்து விசாரணை செய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என இச் சபையில் தீர்மானத்தை முன்மொழிந்து கோருகின்றேன்” – எனத் தெரிவித்தார். அத்துடன் தான் முன் வைத்த குற்றசாட்டுகளுக்காண ஆதாரங்கள், ஆவணங்களையும் சபையில் காண்பித்தார்.

குற்றசாட்டை ஒப்புக்கொண்ட முன்னாள் முதல்வர்.

இந்நிலையில் தனது ஆட்சிக்காலத்திலேயே குறித்த கட்டடம் வாடகைக்கு வழங்கப்பட்டதை ஏற்றுக்கொண்டிருந்த முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா கட்டடம் வழங்கப்பட்ட ஓரிரு மாதங்களிலேயே தமது ஆட்சிக்காலம் முடிவுற்றுவிட்டது என்றும் பின்னர் வாடகை அறவிடாததற்கும் தனக்கும் சம்பந்தமில்லை எனவும் சங்கிலியன் வீதியில் உள்ள குறித்த கட்டடம் இராணுவப் புலனாய்வாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை என்றும் காவற்துறையினர் அலுவலகம் அமைக்கவே வழங்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்து உரையாற்றிய உறுப்பினர் லோகதயாளன் பொலிசார் அலுவலகம் அமைக்க வழங்கப்பட்டிருந்த அக்காலப்பகுதிகளில் ஏன் காவற்துறை அலுவலகம் என ஒரு விளம்பரப் பலகை கூட வைக்கவில்லை என்றும் அங்கு மக்களுடன் தொடர்புடைய எந்தவிதமான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். அதனை தொடர்ந்து இது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பது என சபையில் தீர்மானிக்கப்பட்டது.

 

 

http://globaltamilnews.net/2018/78287/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.