Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு! வீதியில் குருதிக் கறை!! – முன்னாள் போராளி இலக்கா?

Featured Replies

வடக்கில் சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு! வீதியில் குருதிக் கறை!! – முன்னாள் போராளி இலக்கா?

வெள்ளை நிறக் காரில் சிவில் உடையில் வந்த குழு முன்னாள் போராளியின் நண்பரைக் கடத்தித் தமது வாகனத்தில் மறைத்து வைத்துள்ளனர். வாகனம் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்துள்ளது. வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த முன்னாள் போராளி வாகனத்தை அவதானித்துள்ளார்.

 

நள்ளிரவில் சிவில் உடையில் வந்தவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி முன்னாள் போராளி ஒருவரைக் கைது செய்ய முயன்றனர். அவர்களுடன் முன்னாள் போராளி போராடியதில் அவர்கள் தமது முயற்சியைக் கைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் போராளிக்குக் காயம் ஏற்படாத போதும் சம்பவ இடத்தில் குருதிக் கறைகள் காணப்படுகின்றன.

இந்தச் சம்பவம் இன்று இரவு (17.05) மன்னார் உயிலங்குளத்தில் நடந்துள்ளது. சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகின்றது.

வெள்ளை நிறக் காரில் சிவில் உடையில் வந்த குழு முன்னாள் போராளியின் நண்பரைக் கடத்தித் தமது வாகனத்தில் மறைத்து வைத்துள்ளனர். வாகனம் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்துள்ளது. வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த முன்னாள் போராளி வாகனத்தை அவதானித்துள்ளார்.

 

அப்போது அந்த வாகனத்தில் இருந்து பதுங்கியவாறு இறங்கிய மூவர் முன்னாள் போராளியை நோக்கிச் சரமாரியாகச் சூடு நடத்தியுள்ளனர். சுதாரித்துக் கொண்ட முன்னாள் போராளி அவர்களை நெருங்கி அவர்களுடன் இழுபறிபட்டுள்ளார். அதை எதிர்பார்க்காத அவர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். கடத்தி வைத்திருந்த நண்பரையும் அவர்கள் கைவிட்டுச் சென்றுள்ளனர்.

அவர்கள் கொண்டுவந்திருந்த கை விலங்கு ஒன்றையும் விட்டுச் சென்றுள்ளனர். சம்பவ இடத்தில் குருதிக் கறை காணப்படுவதால் சிவில் உடையில் வந்தவர்கள் காயமடைந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் சம்பவ இடத்துக்குச் சென்று நிலைமைகளை அவதானித்தார். சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்குத் தெரிவிக்கப்பட்டது. வந்தவர்கள் பொலிஸார் எனில் காரணத்தைக் கூறிக் கைது செய்யுங்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

பொலிஸார் சம்பவ இடத்துக்கு உடனடியாக வரவில்லை. சுமார் 2 மணித்தியாலத்துக்குப் பின்னரே சம்பவ இடத்துக்கு வந்தனர் என்று கூறப்படுகிள்றது.

சிவில் உடையில் தப்பிச் சென்றபோது அவர்களின் வாகனத்துக்குப் பின்புறம் பொலிஸ் வாகனத்தை ஒத்த வாகனம் ஒன்றும் சென்றது என்று அங்கிருந்தவர்கள் கூறுகின்றனர். எனினும் பொலிஸார் சம்பவம் தொடர்பில் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று தெரிவித்துள்ளனர்.

http://newuthayan.com/story/01/வடக்கில்-சரமாரியாகத்-துப்பாக்கிச்-சூடு-வீதியில்-குருதிக்-கறை-முன்னாள்-போராளி-இலக்கா.html

  • தொடங்கியவர்

மன்னார் பகுதியில் அசாதாரண நிலை: 8 பேர் அடங்கிய குழுவால் துப்பாக்கிச் சூடு - சம்பவ இடத்தில் முக்கியஸ்தர்கள்

 

புதுக்குடியிருப்பு - உயிழங்குளம், மன்னார் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினால் அந்த பகுதியில் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எட்டு பேர் அடங்கிய குழுவினால், இன்று இரவு ஒன்பது மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் நகரில் இருந்து 10 கிலோமீற்றர் தொலைவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

அந்த பகுதியில் வசிக்கும் வர்த்தகரான ஜேசுதாசன் சுவாம்பிள்ளை என்பவரின் வீட்டிற்கு எட்டு பேர் அடங்கிய குழுவினர் சென்றுள்ளதுடன், சுவாம்பிள்ளையை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டையும் மேற்கொண்டுள்ளனர்.

எனினும் சாதுர்யமாக செயற்பட்ட சுவாம்பிள்ளை தற்பாதுகாப்பிற்காக துப்பாக்கிதாரிகளுடன் போராடியுள்ளார். இதன்போது கைத்துப்பாக்கியில் இருந்த தோட்டாக்கள் மூன்று சம்பவம் இடம்பெற்ற இடத்தில் வீழ்ந்துள்ளன.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

இதனையடுத்து சந்தேகநபர்கள் தப்பிச்செல்ல முற்பட்டனர். விரைந்து செயற்பட்ட அவர்கள் தாம் வந்த காரில் தப்பிச் செல்ல முற்பட்ட போதிலும் அந்த நேரத்தில் குறித்த காரை இயக்க முடியாமல் போயுள்ளது.

இதேவேளை, சம்பவம் குறித்து சுவாம்பிள்ளை மன்னார் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து அந்த பகுதிக்கு வந்த மன்னார் பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வு பொலிஸார் சந்தேகநபர்கள் வந்த காரை சரிசெய்து அனுப்பி வைத்துள்ளதாக சுவாம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

மேலும் சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் சுவாம்பிள்ளையின் சாரதி தங்கதுரை கைது செய்யப்பட்டிருந்ததாகவும், பின்னர் சம்பவம் இடம்பெற்ற பகுதியில் தங்கதுரை விடுவிக்கப்பட்டிருந்ததாகவும், அவர் கைது செய்யப்பட்டிருந்த போது பயன்படுத்திய கைவிலங்கு அந்த பகுதியில் விட்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சந்தேகநபர்களை தப்பிக்க வைத்த குற்றப் புலனாய்வு பொலிஸ் அதிகாரிகளில் மூவரை நன்கு தெரியும் எனவும், அவர்களை அடையாளம் காட்ட முடியும் என சுவாம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

இந்த சம்பவம் குறித்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதனுக்கு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவர், வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபருடன் கலந்துரையாடியிருந்தார்.

இது குறித்து உடன் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக 2006ம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சுவாம்பிள்ளை அதிஸ்டவசமாக உயிர் தப்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நாளை முள்ளிவாய்க்கால் நினைவு தினம் வடக்கு, கிழக்கு பகுதியில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

http://www.tamilwin.com/community/01/182909?ref=home-top-trending

  • தொடங்கியவர்

மன்னாரில் முன்னாள் போராளி வீட்டில் துப்பாக்கிச்சூடு; அரச புலனாய்வுத்துறையினர் என தகவல்!

 

 
 
Image

மன்னார் உயிலங்குளம் புதுக்குடியிருப்பு கிராமத்தில் நேற்று (17.05.2018) வியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில் வெள்ளை நிற காரில் சிவில் உடையில் சென்றவர்கள் முன்னாள் போராளி ஒருவரை கடத்திச் செல்ல முற்பட்டுள்ளதோடு, துப்பாக்கிச் சூட்டினையும் மேற்கொண்டு தப்பிச் சென்றவர்கள் கொழும்பில் இருந்து வருகை தந்த அரச புலனாய்வுத்துறையினர் என தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது.,

மன்னார் உயிலங்குளம் புதுக்குடியிறுப்பு கிராமத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில் வெள்ளை நிற காரில் சிவில் உடையில் 8 பேர் கொண்ட குழுவினர் அங்கு சென்று முன்னாள் போராளி ஒருவரை கடத்திச் செல்ல முற்பட்டுள்ளனர்.

குறித்த பகுதிக்கு வெள்ளை நிற காரில் வந்த குறித்த குழுவினர் முதலில் குறித்த முன்னாள் போராளியான விவசாயியின் வாகன சாரதியை பிடித்து அவரை தாக்கி கைவிலங்கிட்டு தமது வாகனத்தில் ஏற்றி குறித்த போராளியின் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

பின்னர் குறித்த முன்னாள் போராளியான விவசாயியை பிடித்துக்கொண்டு செல்ல முற்பட்ட போது துப்பாக்கியுடன் வந்த குழுவினருக்கும், முன்னாள் போராளி மற்றும் அவர்களின் உறவினர்களுக்கும் இடையில் தர்க்க நிலை ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து துப்பாக்கியுடன் வந்த குறித்த குழுவினர் சரமாரியாக சுமார் 4 தடவைகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த குழுவினருக்கு முன்னாள் போராளி உள்ளிட்ட உறவினர்கள் கடுமையாக தாக்கியுள்ளதோடு, கைவிலங்கிடப்பட்டு வாகனத்தில் பதுக்கி வைத்திருந்த வாகன சாரதியையும் மீட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த குழுவினர் தமது காரில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதன் போது குறித்த சாரதியின் இரண்டு கையடக்கத்தொலைபேசிகள், 50 ஆயிரம் ரூபாய் பணம் அகியவை அவருடைய மேல் ஆடையுடன் கொண்டு சென்றுள்ளனர்.

சம்பவ இடத்தில் வெற்று ரவைகள் - 4, வெடிக்காத ரவைகள் 2, கைவிலங்கு ஆகியவை காணப்பட்டது.

உடனயடியாக பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனுக்கு தகவல் வழங்கியதோடு, பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் மன்னார் பொலிஸார் அங்கு வந்து விசாரனைகளை மேற்கொண்டனர். இதன் போது குறித்த காரில் துப்பாக்கியுடன் சிவில் உடையில் வந்தவர்கள் தாங்கள் பொலிஸார் என தெரிவித்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்து அங்கு காணப்பட்ட தடையப்பொருட்களான வெற்று ரவைகள்; 4,வெடிக்காத ரவைகள் 2, கைவிலங்கு ஆகியவற்றை எடுத்துச் சென்றனர். எனினும் இது வரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

மேலும் குறித்த சம்பவம் இடம் பெற்ற இடத்தில் இரத்தக்கறைகளுடன் ஆடை ஒன்று கிடந்ததாகவும், தூப்பாக்கியுடன் சிவில் உடையில் வந்தவர்கள் காயமடைந்திருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் அரச புலனாய்வுத்துறையினர் என சந்தேகிப்பதாகவும், பொலிஸார் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்தனர்.

கடும் தாக்கதலுக்குள்ளான குறித்த புலனாய்வாளர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் அறிய முடிகின்றது.

http://www.ibctamil.com/crime/80/100690

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.