Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாணவர்களின் உணர்வெழுச்சிகளைக் கட்டுப்படுத்திவிட முடியாது; பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்!

Featured Replies

மாணவர்களின் உணர்வெழுச்சிகளைக் கட்டுப்படுத்திவிட முடியாது; பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்!

 

 
Image

அடக்கு முறைகள் மூலம் மாணவர்களின் உணர்வெழுச்சிகளைக் கட்டுப்படுத்தி விட முடியாது என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கிருஸ்ணமீனன் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்வின்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.,

மே 18-ஆம் திகதி மாபெரும் இன அழிப்பின் அடையாளமான முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நினைவு கூரும் வகையில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் அமைக்கப்பட்டு வந்த வேளையில் நிறுத்தப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவாலயத்திலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று மாலை இடம்பெற்றது.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இன்று மாலை 6.00 மணிக்கு இடை நடுவில் நிறுத்தப்பட்ட நினைவாலயப் பகுதியில் கூடி, சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தினர்.

நினைவாலயத்தின் பொதுச் சுடரைப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கிருஸ்ணமீனன் ஏற்றி வைக்க கூடி நின்ற மாணவர்கள் அடுக்கி வைக்கப்பட்ட சுடர்களை ஏற்றினர். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.

தமிழத் தேசிய விடுதலைப்போராட்டத்தின்பால் மக்களை வழிநடத்தும் வகையில் காலத்துக்குக் காலம் மாவீரர் நினைவாலயம், பொங்குதமிழ்ப் பிரகடன நினைவிடம் ஆகியவற்றைப் பல்கலைக் கழக வளாகத்தினுள் அமைத்து, அடக்கு முறைகளுக்கு மத்தியிலும் அந்தந்தக் காலங்களில் நிகழ்வுகளை உணர்வு பூர்வமாக ஒழுங்குபடுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் கடந்த மாதம் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உரிய அறிவித்தல்கள் வழங்கப்பட்ட பின், வளாகத்தினுள் மாவீரர் நினைவாலயத்துக்குத் தெற்குப் புறமாக முள்ளிவாய்க்கால் நினைவாலயக் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. எனினும் இனவாத அரசின் அடக்கு முறைகளின் வெளிப்பாடாக கொழும்பிலிருந்து கிடைத்த உயர் மட்ட அழுத்தங்கள் காரணமாக அதன் கட்டுமானப் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

இதேவேளை, முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களின் நினைவேந்தல் நிகழ்வுகளை இன்றைய தினம் காலை வடக்கு மாகாண சபையுடன் இணைந்து கூட்டாக மேற்கொண்ட போதிலும், இத்தகைய அடக்கு முறைகள் மூலம் மாணவர்களின் உணர்வெழுச்சிகளைக் கட்டுப்படுத்தி விட முடியாது என்ற செய்தியைச் சொல்வதற்காகவே இந்த அறைகுறைக் கட்டுமானங்களுடனான நினைவாலயத்தில் இன்றைய மாலை நிகழ்வுகள் இடம்பெற்றன என்று யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கிருஸ்ணமீனன் தெரிவித்தார்.

http://www.ibctamil.com/events/80/100704

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.