Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளவரசர் ஹரி - அமெரிக்க நடிகை மேகன் திருமணம் இன்று

Featured Replies

இளவரசர் ஹரி - அமெரிக்க நடிகை மேகன் திருமணம் இன்று

 

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் - டயானா தம்பதியரின் இளைய மகன் இளவரசர் ஹாரி மற்றும் அவரது காதலியான அமெரிக்க நடிகை மேகன் திருமணம் இன்று கோலாகலமாக லண்டனில் இடம்பெறவுள்ளது.

prince-harry-meghan-markle-wedding.jpg

33 வயதாகும் இங்கிலாந்து இளவரசர் ஹரிக்கும் 36 வயதாகும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிலுக்கும்  இடையில் காதல் மலர்ந்தது.

இதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொள்ள விரும்பினர். இவர்களது காதல் திருமணத்துக்கு இளவரசர் ஹரியின் பாட்டியும், இளவரசர் சார்லஸின் தாயாருமான ராணி இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து அவர்களது திருமணம் நிச்சயமானது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு மேற்கே பெர்க்‌ஷயரில் அமைந்துலுள்ள வின்ட்சார் கோட்டையில், 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட புனித ஜார்ஜ் தேவாலயத்தில் இன்று மதியம் இளவரசர் ஹரி-மேகன் திருமணம் மிகவும் கோலாகலமாக இடம்பெறுகிறது.

4C64FEDC00000578-5746013-image-a-2_15266

இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தடபுடலாக இடம்பெற்று வருகின்றன. இந்த திருமணத்தை கேன்டர்பரி பேராயர் ஜஸ்டின் வெல்பி நடத்தி வைக்கிறார்.

திருமண நிகழ்வில் பங்கேற்று மணமக்களை வாழ்த்துவதற்காக 11.20 மணிக்கு ராணி குடும்பத்தினர் தேவாலயத்திற்குள் வருவார்கள். அதைத்தொடர்ந்து திருமண வழிபாடுகள் நடைபெறும்.

இந்த தேவாலயத்தினுள் 800 பேர் அமரும் வசதி உள்ளது. சுமார் 600 பேருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த திருமண விழாவையொட்டி வின்ட்சார் கோட்டையின் மீது இன்று விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருமணம் முடிந்ததும், மணமக்கள் கேசில் ஹில், ஹை வீதி, ஷீட் வீதி, கிங்ஸ் சாலை, ஆல்பர்ட் சாலை, லாங்க் வாக் வழியாக ஊர்வலம் சென்று, பின்னர் வின்ட்சார் கோட்டைக்கு திரும்புவார்கள்.

4C68914A00000578-5746013-image-a-10_1526

அதைத்தொடர்ந்து அங்கு செயின்ட் ஜோர்ஜ் அரங்கத்தில் வரவேற்பு  நிகழ்வு இடம்பெறுகிறது.  மணமக்கள் கேக் வெட்டுவார்கள். லண்டன் வயலட் பேக்கரி, பிரத்தியேக கேக்கை தயாரித்து வழங்குகிறது. இந்த கேக்கை வெட்டி, வரவேற்பு விழாவில் கலந்துகொள்கிற 600 பேருக்கும் வழங்கப்படும்.

4C66887000000578-5746013-image-a-16_1526

மாலையில் இளவரசர் ஹரி, மேகன் தம்பதியருக்கு ஹரியின் தந்தை இளவரசர் சார்லஸ் தனிப்பட்ட முறையில் வரவேற்பு அளிக்கிறார். இதில் மணமக்களும், குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்களும் பங்கேற்பார்கள்.

4C67709400000578-5746013-image-a-15_1526

இளவரசர் ஹரி, மேகன் திருமண விழாவில் மேகனின் தந்தை தாமஸ் மார்கில் கலந்துகொள்ளமாட்டார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டமையே காரணம். எனவே அவருக்கு பதிலாக அவரது மனைவி டோரியா ராக்லண்ட் மணமகள் மேகனை தேவாலயத்துக்குள் கைபிடித்து அழைத்து செல்வார்.

http://www.virakesari.lk/article/33618

  • தொடங்கியவர்

கோலாகலமாக நடந்து முடிந்தது இளவரசர் ஹாரி -மெகன் திருமணம்

 

இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் மெகன் மார்கில் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியின் இரண்டாவது மகன் ஹாரி தனது தோழியும், காதலியுமான அமெரிக்க நடிகை மெகன் மார்கலை திருமணம் செய்ய உள்ளதாக கடந்த ஆண்டு அரசக் குடும்பம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து அவர்களது திருமணம் மே  மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

 

இந்த நிலையில் இங்கிலாந்தில் உள்ள வின்ட்சர் கோட்டையில் இளவரசர் ஹாரி மெகன் மார்கல் திருமணம் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.

உறுதிமொழி ஏற்றுக் கொண்ட மணமக்கள் இருவரும் மோதிரம் மாற்றி கொண்டு தங்கள் திருமண சடங்கை முடித்தனர். இந்த திருமண விழாவில் உலகின் பெரும்பாலான இடங்களிலிருந்து பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்தத் திருமணம் நிகழ்ச்சி ட்விட்டரில் நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.

#RoyalWedding #Prince Harry ஆகிய  ஹாஸ்டேக்  உலக அளவில் ட்ரெண்ட் ஆகின. இந்தத் திருமண விழாவில் செரீனா வில்லியம்ஸ், டேவிட் பெக்கம் போன்ற விளையாட்டு பிரபலங்களும் கலந்து கொண்டன.

பிரதமர் தெரசா மே வாழ்த்து

இளவரசர் ஹாரி மற்றும் மெகனின் திருமண நிகழ்வுக்கு இங்கிலாந்து பிரதமர் தெர்சா மே ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். திருமணம் அரசு குடும்பத்தின் விழா  என்பதால் பிரதமர் மே உள்ளிட்ட அரசியல்வாதிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

இளவரசர் ஹாரியை திருமணம் செய்தன் மூலம் இங்கிலாந்து இளவரசியாகும் முதல் கருப்பின கலப்பின பெண் என்ற பெருமையை மெகன் பெற்றிருக்கிறார்.

http://tamil.thehindu.com/world/article23936279.ece?homepage=true

 

 

 

 

 

அரச குடும்ப திருமணம்: மெகனுக்கு திருமண மோதிரத்தை அணிவித்தார் இளவரசர் ஹாரி

  •  

இங்கிலாந்தில் உள்ள விண்ட்சர் கோட்டையில் பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் மெகன் மார்கில் திருமணம் இன்று நடைபெற்றது.

LIVE | அரச குடும்ப திருமணம்: மெகனுக்கு திருமண மோதிரத்தை அணிவித்தார் இளவரசர் ஹாரி

05:10 இளவரசர் ஹாரி மற்றும் மெகன் மார்கிலுக்கு திருமணம் நடைபெற்றது. உறுதிமொழி ஏற்று, மோதிரம் மாற்றிக் கொண்ட மணமக்கள்.

LIVE | அரச குடும்ப திருமணம்: மெகனுக்கு திருமண மோதிரத்தை அணிவித்தார் இளவரசர் ஹாரி

04:51 ஒருவருக்கு ஒருவர் அன்போடு பார்த்துக் கொள்ளும் ஹாரி - மெகன்

ஹாரி - மெகன்

04:46 உறுதிமொழி ஏற்றுக் கொண்ட மமக்கள்

மகிழ்ச்சியாக சிரித்தபடி இளவரசர் ஹாரி மற்றும் மெகன் மார்கில் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.

LIVE | அரச குடும்ப திருமணம்: இளவரசர் ஹாரி - மெகன் திருமண நிகழ்வுகள் தொடங்கின!

04:38திருமண நிகழ்வுகள் தொடங்கின

திட்டமிடப்பட்டிருந்ததைவிட ஆறு நிமிடங்கள் தாமதமாக திருமண நிகழ்வுகள் தொடங்கின.

 

 

04:35 மெகன் மார்கிலை அழைத்துச் செல்கிறார் இளவரசர் சார்ல்ஸ்.

LIVE | அரச குடும்ப திருமணம்: சற்று நேரத்தில் இளவரசர் ஹாரி - மெகன் திருமணம்!படத்தின் காப்புரிமைTHE ROYAL FAMILY

04:30தேவாலயத்திற்கு வந்தார் மணப்பெண் மெகன் மார்கில்

ரோல்ஸ் ராய்ஸ் காரிலிருந்து இறங்கிய மணப்பெண்ணுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

LIVE | அரச குடும்ப திருமணம்: இளவரசர் ஹாரி - மெகன் திருமண நிகழ்வுகள் தொடங்கின!

04:27 பிரிட்டன் இளவரசி மற்றும் எடின்பர்க் கோமகன் தேவாலயத்தை வந்தடைந்தனர்.

04:22 காரில் வந்து கொண்டிருக்கும் மெகன் மார்கிலை மக்கள் உற்சாகமாக வரவேற்கின்றனர்.

LIVE | அரச குடும்ப திருமணம்: விண்ட்சர் கோட்டையை வந்தடைந்தார் இளவரசர் ஹாரி

04:21மணமகள் மெகனுக்காக காத்திருக்கும் ஹாரி!

மெகனுக்காக புனித ஜார்ஜ் தேவாலயத்தில் காத்திருக்கும் ஹாரி, தன் மூத்த சகோதரருடன் பேசிக் கொண்டிருக்கிறார்.

Prince Harry arrives at Windsor Castle

04:06:இளவரசர்கள் ஹாரி மற்றும் வில்லியம் தேவாலயத்தை வந்தடைந்தனர்.

கேம்பிரிட்ஜின் கோமகனுடன் தேவாலயத்திற்கு வந்த இளவரசர் ஹாரி பதற்றமில்லாது அமைதியாக காணப்பட்டார்.

Prince Harry arrives at Windsor Castleபடத்தின் காப்புரிமைAFP

04:00: திருமணத்திற்கு இன்னும் அரை மணி நேரமே உள்ளது. விருந்தினர்கள் பலரும் வந்து கொண்டிருக்கின்றனர்.

 

 

03:51 தேவாலயத்திற்கு புறப்பட்டார் மணப்பெண் மெகன் மார்கில் .

தனது தாயுடன் மெகன் மார்கில், ரோல்ஸ் ராய்ஸ் காரில் புறப்பட்டுள்ளார்.

தேவாலயத்திற்கு மணப்பெண் மேகன் மார்கில் புறப்பட்டார் Image captionதேவாலயத்திற்கு மணப்பெண் மேகன் மார்கில் புறப்பட்டார்

03:31 தொலைக்காட்சி பிரபலமான ஜேம்ஸ் கார்டன் தன் மனைவியுடன் திருமணத்திற்கு வந்துள்ளார்.

ஜேம்ஸ் கார்டன்படத்தின் காப்புரிமைPA Image captionமனைவியுடன் ஜேம்ஸ் கார்டன்

03:16 புகழ் பெற்ற டென்னிஸ் வீராங்களை செரீனா வில்லியம்ஸின் உடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

 

 

03:15 புகழ்பெற்ற ரக்பி வீரர் ஜானி வில்கின்ஸன் தன் மனைவியுடன் திருமணத்திற்கு வந்தார்.

03:14 இளவரசர் ஹாரியின் முன்னாள் காதலிகள் திருமண விழாவிற்கு வருகை தந்தனர்.

க்ரெஸிடா பொனஸ் மற்றும் செல்ஸி டேவி ஆகியோருக்கு திருமண அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

Royal wedding, David Beckkam, Clooneyபடத்தின் காப்புரிமைPA Image captionடேவிட் பெக்காம் மற்றும் நடிகர்கள் அமல் குளூனி, ஜார்ஜ் குளூனி

அமெரிக்க திரைப்பிரபலமான ஓப்ரா வின்ஃப்ரி, ஜார்ஸ் மற்றும் அமல் க்ளூனி, டேவிட் மற்றும் விக்டோரிய பெக்ஹம், புகழ் பெற்ற ரக்பி வீரரான ஜானி வில்கின்ஸன் ஆகியோர் திருமணத்திற்கு வருகை தந்துள்ளனர்.

US TV star Oprah Winfrey, wearing pink, and British actor Idris Elba arrive at the chapelபடத்தின் காப்புரிமைPA

திருமண நிகழ்வில் தனது தந்தை கலந்துகொள்ள மாட்டார் என்று மெகன் மார்கில் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

33 வயதான இளவரசர் ஹாரியிடம் திருமணம் குறித்து கேட்ட போது, அவர் "பதற்றமில்லாமல்" இருப்பதாக தெரிவித்தார். மெகன் மார்கில், தான் "அற்புதமாக உணர்வதாக" குறிப்பிட்டார்.

அரச குடும்ப திருமணத்திற்கு பிரிட்டன் பிரதமர் தெரீசா மே வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Theresa Mayபடத்தின் காப்புரிமைTHERESA MAY

திருமணம் அரசாங்கத்தின் விழா அல்ல என்பதினால், பிரதமர் மே உள்ளிட்ட அரசியல்வாதிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

https://www.bbc.com/tamil/global-44181425

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இளவரசர் ஹாரி - மெகன் திருமணத்தின் மகிழ்ச்சிமிக்க தருணங்கள் (புகைப்படத் தொகுப்பு)

இங்கிலாந்தில் உள்ள விண்ட்சர் கோட்டையில் பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் மெகன் மார்கில் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. திருமண நிகழ்வின் மகிழ்ச்சிமிக்க தருணங்களை புகைப்படங்களாக வழங்குகின்றோம்.

Prince Harry, Meghan markle, royal wedding

திருமணம் முடிந்து புனித ஜார்ஜ் தேவாலயத்தைவிட்டு செல்லும் மணமக்கள்

Prince Harry, Meghan markle, royal wedding

 

தேவாலயத்தின் படிகளில் நின்றபடி மெகனுக்கு ஹாரி கொடுத்த முதல் பரிசு

Prince Harry, Meghan markle, royal wedding

 

திருமணம் முடிந்தவுடன் ஹாரியும், மெகனும் சூசெக்ஸின் கோமகன், கோமகள் என்றழைக்கப்படுவார்கள்

Prince Harry, Meghan markle, royal wedding

 

nதிருமண நிகழ்வை எடின்பெர்க் கோமகன் மற்றும் பிற அரச குடும்ப உறுப்பினர்களுடன் கண்டுகளித்த ராணி

Prince Harry, Meghan markle, royal wedding

 

மணமக்கள் உறுதிமொழி ஏற்று மோதிரங்களை மாற்றிக் கொண்டனர்

Prince Harry, Meghan markle, royal wedding

மெகனின் முகத்திரையை விளக்கும் ஹாரி

Prince Harry, Meghan markle, royal wedding

 

Prince Harry, Meghan markle, royal wedding

 

இளவரசர் சார்லஸ் மணமகளுக்கு துணையாக நின்று மெகனை தேவாலயத்திற்குள் அழைத்து வந்தார்

Prince Harry, Meghan markle, royal wedding

 

Prince Harry, Meghan markle, royal wedding

 

விண்ட்சர் கோட்டையிலுள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்திற்கு மெகன் வந்தபோது

Prince Harry, Meghan markle, royal wedding

தாய் டோரியாவுடன் மணமகள் மெகன் மார்கில்

Prince Harry, Meghan markle, royal wedding

 

தேவாலயத்திற்கு வருகைத்தந்த கேம்பிரிட்ஜ் கோமகள் மற்றும் மணமக்களின் உதவியாளர்கள்

Prince Harry, Meghan markle, royal wedding

 

உற்சாகத்துடன் கூட்டத்தினரை நோக்கி கையசைக்கும் மணமகன் ஹாரி

Prince Harry, Meghan markle, royal wedding

 

விண்ட்சர் கோட்டையின் வாசலில் காத்திருக்கும் மக்கள்

Prince Harry, Meghan markle, royal wedding

 

Prince Harry, Meghan markle, royal wedding

 

Prince Harry, Meghan markle, royal wedding

 

Prince Harry, Meghan markle, royal wedding

 

nபுனித ஜார்ஜ் தேவாலயம்

Prince Harry, Meghan markle, royal wedding

https://www.bbc.com/tamil/global-44181432

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.