Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழம் தமிழர் தாயகமாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.... காசி ஆனந்தன்,

Featured Replies

தமிழீழம் தமிழர் தாயகமாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.... காசி ஆனந்தன்,

 

மட்­டக்­க­ளப்­பினை பிறப்­பி­ட­மாகக் கொண்ட இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் ஆரம்­ப­கால இளைஞர் அணி செயற்­பட்­டா­ளரும் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லிகள் அமைப்பின் அர­சியல் விவ­கார பிரிவின் மத்­திய குழு உறுப்­பி­ன­ரும் உணர்ச்சிக் கவி­ஞ­ரு­மான காத்­த­முத்து சிவா­னந்தன் என்ற இயற்­பெ­யரைக் கொண்ட காசி ஆனந்தன், பெரும்­பான்மை இனத்தின் போக்­குகள், தமிழ் இன, தமிழ்மொழியின் வர­லாற்றுப் பெரு­மைகள், தமி­ழர்­க­ளுக்­கான தாயகம், தமிழ்த் தலை­மை­களின் செயற்­பாடுகள், தமி­ழி­னத்­துக்­கான மாற்­றுத்­த­லைமை உள்­ளிட்ட விட­யங்கள் தொடர்பில் "கேச­ரி"க்கு வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வியில் குறிப்­பிட்டார். அச்­செவ்­வியின் முழு­வ­டிவம் வரு­மாறு,

புரி­த­லற்ற செயற்­பா­டுகள்

பிரித்­தா­னி­யர்கள் ெவளியே­றி­ய­வுடன் தந்தை செல்­வ­நா­யகம் இலங்கைத் தமி­ழ­ர­சுக்­கட்­சியை ஆரம்­பித்தார். அவர் சிங்­கள இன வெறுப்­பு­டனோ அழிப்­பு­டனோ கட்­சியை ஆரம்­பித்­தி­ருக்­க­வில்லை. சிங்­கள மக்­க­ளுடன் ஒரு நாட்­டுக்குள் வாழ முடியும் என்ற நம்­பிக்­கை­யு­டன்தான் கட்­சியை ஆரம்­பித்­தி­ருந்தார். தந்தை செல்­வாவின் அத்­த­கைய நல்­லெண்ண முயற்­சியை சிங்­கள மக்கள் புரிந்து கொண்­டி­ருக்­க­வில்லை. அவர்கள் தமது சிங்­கள–பௌத்த பேரி­ன­வாத எண்­ணத்தையே முன்­னி­லைப்­ப­டுத்­த­லா­னார்கள். அதன் விளை­வாக தற்­போது இலங்கைத் தீவு எங்கோ சென்­று­கொண்­டி­ருக்­கின்­றது.

அகிம்சை, ஆயு­த­போ­ராட்ட காலங்கள் உள்­ளிட்ட அனைத்­தையும் ஒட்டுமொத்­த­மாக வைத்துப் பார்க்­கின்­ற­போது இலங்கை இரு தேசங்­களைக் கொண்­டது என்­ப­துதான் சாரம்­ச­மா­கின்­றது. இரு­தேசக் கொள்கை என்­பது ஒன்றும் இன­வெ­றி­ பி­டித்த கொள்கை அல்ல. அதனை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். வர­லாற்று அடிப்­ப­டையில் இலங்­கைத்­தீவு இரு தேசங்­க­ளாக இருந்­துள்­ளது என்­பது மறு­த­லிக்க முடி­யா­த­வொன்­றா­கின்­றது.

சிங்­க­ள­வர்­க­ளுக்கு கண்டி அரசு, கோட்டை அரசு என தனி அர­சுகள் இருந்­துள்­ளன. அதே­போன்று தான் தமி­ழர்­க­ளுக்கும் யாழ்ப்­பாண அரசு, மட்­டக்­க­ளப்பு அரசு, வன்னி அரசு, திரு­கோ­ண­மலை அரசு என்று இருந்­துள்­ளன. யாழ்ப்­பா­ணத்­தில் சங்­கி­லியன், வன்­னியில் பண்­டார வன்­னியன், திரு­கோ­ண­ம­லையில் குளக்­கோட்டன், மட்­டக்­க­ளப்பில் உல­க­நாச்­சியன் என்று தமி­ழர்­களும் அரசு கொண்டு வாழ்ந்த வர­லா­றுகள் காணப்­ப­டு­கின்­றன.

அவ்­வா­றி­ருக்­கையில் தற்­போது வரையில் சிங்­க­ள­வர்கள் இன­ரீ­தி­யான பெரும்­பான்­மையை மையப்­ப­டுத்தி சிங்­கள–பௌத்த மேலா­திக்­க­வாதத்தின் பால் ஒட்­டு­மொத்­த­மாக தமி­ழி­னத்தையே அழித்து துடைத்­தெ­றிந்து விட­வேண்டும் என்ற நோக்­கத்­தையே தற்­போது வரையில் கொண்­டி­ரு­கின்­றனர். தற்­போதும் இம் மன­நி­லையில் சிங்­கள மக்கள் இருப்­ப­தா­னது ஒரு­மித்த நாட்­டுக்குள் அவர்­க­ளுடன் இணைந்து வாழ்­வதை கேள்­விக்­குட்­ப­டுத்­து­வ­தா­கவே அமை­கின்­றது.

பூர்­வீக தேசத்தை பூர்­வீக இன மக்கள் இழப்­பது என்­பது மிகப்­பெரும் துய­ராகும்.சிங்­கள மக்கள் இலங்கைத் தீவிலுள்ள சிக்­கலை வெறி­கொண்டு பார்க்­க­க்கூ­டாது. அவர்கள் இதனை அறிவுபூர்­வ­மாக பார்க்­க­வேண்டும். ஆகக்­கு­றைந்­தது அவர்கள் அவ்­வாறு சிந்­திக்கக்கூட இல்லை. இங்கு ஒரு முக்­கி­ய­மான விட­யத்­தை குறிப்­பிட விரும்­பு­கின்றேன்.

 

 

 

மறு­த­லிக்க முடி­யாத வர­லாற்றுப் பின்­னணி 

ஆபி­ரிக்­காவில் தோன்றிய "ஹோமோ­சேப்­பியன்ஸ்" இனம் கண்­டத்­திட்­டுக்கள் வழி­யாக தமிழ்நாட்­டுக்கு வந்­திருக்­கின்­றது. அதா­வது 50ஆயிரம் ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் தோன்­றிய இன­மாக தமி­ழினம் இருக்­கின்­றது. இதனை பாவணர் என்ற மொழி ஆய்­வாளர் ஆய்வு செய்து லெவி போன்ற ெவளிநாட்டு ஆய்­வா­ளர்கள் ஏற்­றுக்­கொண்­டுள்­ளனர். அதன் பின்னர் கீழ்த்திசை வழி­யாக அவுஸ்­தி­ரே­லிய கண்­டத்­துக்கு தமிழ் மொழி நகர்ந்­துள்­ளது. அவுஸ்­தி­ரே­லிய பழங்­குடி இனத்­தவர் பேசும் மொழியில் தமிழ் இருப்­பதும் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. பனி ஊழிக்­காலம் வந்­த­போது தமி­ழ­கத்­தி­லி­ருந்து வடக்கு நோக்கிப் போன­வர்கள் சிந்­துெவளி, சுமே­ரியா போன்ற வர­லாறுகளில் இருப்­பதும் உறு­தி­யாக்­கப்பட்­டுள்­ளது.

அவ்­வா­றான வர­லாறு இருக்­கையில் தமி­ழ­கத்­தி­லி­ருந்து 10 ஆயிரம் ஆண்டு­க­ளுக்கு முன்னர் பனி ஊழிக்­கா­லத்தில் தான் இலங்கைத் தீவு பிரிந்­துள்­ளது. ஆகவே இலங்கைத் தீவில் தமிழ்மொழியின் வர­லாறு மிகப்­ப­ழ­மை­யா­னது. இதன் பின்னர் கி.பி. ஆறாம் நூற்­றாண்டில் தான் சிங்­கள மொழியும் சிங்­கள இனமும் தோற்றம் பெறு­கின்­றன. 5ஆம் நூற்­றாண்டின் பிற்­ப­கு­தியில் எழு­தப்­பட்ட மகா­வம்சம் கூட பாளி மொழியில் தான் எழு­தப்­பட்­டுள்­ளது. அப்­போது கூட சிங்­கள மொழி இருந்­தி­ருக்­க­வில்லை.

இவ்­வா­றான வர­லாற்­றுப்­ பின்­ன­ணி­களை வைத்­துப் ­பார்க்­கின்­ற­போது இலங்கைத் தீவில் சிங்­கள மக்­களின் வர­லாறு 1400 ஆண்­டு­க­ளா­கவே இருக்­கின்­றது. இத­ன­டிப்­ப­டையில் பார்க்­கின்­ற­போது 50 ஆயிரம் ஆண்­டுகள் வர­லாற்றுப் பின்­ன­ணியைக் கொண்­டுள்ள தமி­ழி­னத்தை 1400 ஆண்­டுகள் வர­லாற்­றுப்­ பின்­னணி கொண்ட சிங்­கள இனம் அழித்­தொ­ழித்து ஆதிக்கம் செலுத்த நினைப்­பது மிகப்­பெரும் கொடு­மை­யா­கின்­றது.

இக் கொடு­மையை எதிர்த்துத் தான் போராட்­டங்கள் ஆரம்­பிக்­கப்­பட்­டு பல்­வேறு வடி­வங்­களில் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. முள்­ளி­வாய்க்­கா­லுடன் அனைத்தும் முடி­வுக்கு வந்து விட்­ட­தாக தற்­போ­தைய சிங்­கள ஆட்­சி­யா­ளர்கள் முழு­மூச்­சுடன் மார் தட்டிக் கூறு­கின்­றார்கள். தனி ஈழம் எல்லாம் கிடை­யாது என்றும் பறை­சாற்­று­கின்­றார்கள். உலகம் முழுவதும் வாழ்­கின்ற ஒரு இனம் தான் தமி­ழினம். ஆகக்­கு­றைந்­தது சிங்­கள ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு ஒரு தேசிய இனத்தின் உணர்வை மதிக்­கின்ற மனி­த­நேயப் பண்பு கூட தற்­போ­து­ வ­ரையில் ஏற்­ப­ட­வில்லை என்­பது மிகவும் வேத­னை­யான விடயம்.

 

 

 

தாயகம் தமி­ழீ­ழமே

"தமிழ் ஈழத்­திற்­கான விடு­தலைக் கோரிக்­கையை முன்­வைக்கக் கூடாது. அவ்­வாறு கோரு­வது தேசத்­து­ரோகம்...", என்று தற்­போது ஆணித்­த­ர­மாக பெரும்­பான்மை ஆட்­சி­யாளர்கள் கூறு­கின்­றார்கள். இலங்கைத் தீவில் எண்­ணிக்­கையில் பெரும்­பான்­மை­யாக சிங்­க­ள­வர்­களே இருக்­கின்­றார்கள் என்ற அடிப்­ப­டையில் அதனை நியா­யப்­ப­டுத்தி விடலாம். ஆனால் ஒரு தமிழ்ப் பொது­மகன் என்­னு­டைய தாயகம் தமி­ழீழம் என்று கூறு­வது எந்­த­வ­கையில் தேசத்­து­ரோகம் என்­பது தான் எனது கேள்­வி­யா­கின்­றது.

சிங்­கள ஸ்ரீ­லங்கா எவ்­வாறு சிங்­க­ள­வர்­களின் தாயக­மா­கின்­றதோ அதே­போன்று தான் தமி­ழீழம் என்­பது தமி­ழர்­களின் தாயக­மா­கின்­றது. தமி­ழீழம் தனி­யாக அமைய வேண்டும் என்­ப­தா­னது நாட்­டினை பிரிக்க முயல்­கின்­றார்கள் என்ற அடிப்­ப­டையில் தேசத்­து­ரோ­க­மாகக் கரு­தலாம். ஆனால் தமி­ழர்­களின் தாயகம் தமி­ழீழம் என்­பதில் எவ்­வி­த­மான பிரி­வி­னையும் இல்­லையே...! அது தேசத்­து­ரோக வரை­ய­றைக்­குள்ளேயே இடம்­பெ­றாதே...!

தேசிய இனச் சிக்­கலைத் தீர்ப்­ப­தற்கு ஆத்­மார்த்­த­மாக செயற்­பட சிங்­கள ஆட்­சி­யா­ளர்கள் விரும்­பு­வார்­க­ளாயின் தமி­ழர்­களின் தாயகம் தமி­ழீழம் என்­பதை அர­சி­ய­ல­மைப்பில் உள்­வாங்­கிக் ­கொள்ள வேண்டும். பிரித்­தா­னிய அர­சி­ய­ல­மைப்­பை உதா­ர­ணத்­துக்கு எடுத்­துக்­கொண்டால் அதில் வேல்ஸ், ஸ்கொட்­லாந்து, அயர்­லாந்து என்­றெல்லாம் பெயர்கள் இடம்­பெற்­றுள்­ளன. இப் பிர­தே­சங்­களில் தனித்­த­னி­யான தேசிய இனங்கள் உள்­ளன. அந்த தேசிய இனங்­களின் தேசங்­களின் பெயர்கள் அர­சி­ய­ல­மைப்பில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்டு இடம்­பெற்­றுள்­ளன.

அதே­போன்று தான் இந்­தி­யாவை எடுத்­துக்­கொண்­டாலும் இங்கு பல்­தே­சிய இனங்கள் காணப்­ப­டு­கின்­றன. அந்­தந்த தேசிய இனங்­க­ளுக்கு சொந்­த­மான தாய­கங்­களின் பெயர்கள் இந்­திய அர­சி­ய­ல­மைப்பில் இடம்­பெற்­றுள்­ளன. குறிப்­பாக ஒரு காலத்தில் தனி­நாட்­டுக் ­கோ­ரிக்­கையை எழுப்­பிய தமிழ்நாட்டின் பெயரே அர­சி­ய­ல­மைப்பில் உள்­ளது. அவ்­வாறு இருக்­கையில் இலங்கை அர­சியலமைப்பில் தமி­ழர்­களின் தாயக­மான தமி­ழீ­ழத்தின் பெயர் இடம்­பெ­று­வதில் என்ன தவறு இருக்­கின்­றது...?

 

 

 

   திட்­ட­மிட்ட செயற்­பா­டுகள்

எமது தாய­கத்தில் புற்­று­நோ­யாகப் பரவும் சிங்­கள குடி­யேற்­றங்­களைத் தடுத்து நிறுத்­து­வதில் எம்மால் எந்­த­ள­வுக்கு வெற்­றி­பெற முடிந்­தி­ருக்­கின்­றது என்­பதை சிந்­தித்துப் பார்க்க வேண்டும். "எமது தாயகத்தை விழுங்­கா­தீர்கள்... திட்­ட­மிட்ட குடி­யேற்­றங்­களை நிறுத்­துங்கள்...", என்று நாம் வலியுறுத்திக்­கொண்­டி­ருந்­தாலும் அவர்கள் அச் செயற்­பாட்டை கைவிட்­ட­தாக இல்லை. இந்த செயற்­பாட்டின் உள்நோக்கத்­தினை புரிந்து கொள்­ள­வேண்டும். தமி­ழர்­களின் தாயகம் தமி­ழீழம் என்­பதை நன்கு புரிந்து கொண்­டுள்ள சிங்­க­ள­வர்கள் அதனை – அவ்­வா­றான தாய­கத்­தினை இல்­லா­தொ­ழிக்­கின்ற செயற்­பாட்­டினைத் தான் திட்­ட­மிட்டுச் செய்­கின்­றார்கள். முள்­ளி­வாய்க்கால் பேர­வ­லத்­துக்கு முன்­ன­தாக கிழக்கு மாகா­ணத்தில் சிங்­கள குடி­யேற்றம் வெகு­வாக முன்­னெ­டுக்­கப்­பட்­டது. முள்­ளி­வாய்க்­கா­லுக்கு பின்னர் வடக்கு மாகா­ணத்தில் அதே­ செ­யற்­பாடு தற்­போது முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. அது­மட்­டு­மன்றி சிங்­கள மொழி, பௌத்த மதம் என்று அனைத்­தையும் திணிக்­கின்ற செயற்­பா­டுகள் தான் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. ஏ–9 வீதியில் வவு­னி­யா­வுக்கும் யாழ்ப்­பா­ணத்­திற்குமிடையில் காணப்­ப­டு­கின்ற அரச மரங்­க­ளுக்குக் கீழ் எல்லாம் எவ்­வாறு புத்தர் வந்தார்...? அனைத்­துமே முள்ளி வாய்க்­கா­லுக்கு பின்னர் முளைத்த பௌத்த கோவில்களே...

கி.பி.3ஆம் நூற்­றாண்டில் தான் பௌத்த மதம் இலங்­கைக்கு வரு­கின்­றது. பௌத்த மதம் இலங்­கைக்கு வரு­கின்­ற­போது தேவ­நம்­பிய தீசன் அதனை ஏற்­றுக்­கொள்­கின்றார். தேவ­நம்பிய தீசன் என்­பது சைவப்­பெயர். இவ்­வாறு இந்து மதத்­திற்கு பின்னர் வருகை தந்த ஒரு மதம் அந்த தேசத்திலுள்ள பூர்­வீக மதத்­தினை ஒழிக்க நினைப்­பது என்­பது எந்­த­வ­கையில் நியாயம்...? அந்­தந்த இனக்­கு­ழுக்­க­ளுக்கு அந்­தந்த மதங்கள் பெரி­யவை தான். அதற்­காக இன்­னொரு மதத்­தினை அழிக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை.

 

 

 

செல்­வாவின் தீர்க்கதரி­ச­னமும் தற்­போதைய தலை­மை­களும்

இதனை தீர்க்­க­த­ரி­ச­ன­மாக உணர்ந்து கொண்­ட­தால் தான் தந்தை செல்வா 1977ஆம் ஆண்டு வட்­டுக்­கோட்­டையில் "தமி­ழர்­களின் தாயகம் தமி­ழீழம்" என்­பதை கருப்­பொ­ரு­ளாகக் கொண்டு தீர்­மா­னத்­தை நிறை­வேற்­றினார். தற்­போ­தைய தலை­மைகள் தமி­ழீழ கோரிக்­கையை கைவிட்­டு­விட்டோம் என்று கோரலாம். அதனை என்னால் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. தமி­ழீழ கோரிக்­கையை கைவிட்டு விட்டோம் என்­பது தாயக கோரிக்­கையை கைவிட்­டு­விட்டோம் என்­ப­த­னையே ெவளிப்­ப­டுத்­து­கின்­றது.

தந்தை செல்­லாவின் பாச­றையில் நான் இளம் வயதில் இணைந்த போது அவ­ரி­ட­மி­ருந்து பல­ வி­ட­யங்­களைக் கற்­றி­ருக்­கின்றேன். என்­னு­டைய சக­பா­டிகள் பலரும் அதே பாச­றையில் தான் கற்­றார்கள். அவர்கள் தற்­போது தாய­கத்தில் செயற்­பாட்டு அர­சி­யலில் இருக்­கின்­றார்கள். தந்­தை செல்வாைவப் பொறுத்­த­வ­ரையில் எந்­த­வொரு காலத்திலும் அவர் கொள்­கையின் அடிப்­ப­டை­களை விட்­டுக்­கொ­டுக்­கவே மாட்டார். அர­சியல் தலை­வர்­க­ளிடத்தில் இருக்க வேண்­டிய கொள்கை சார்ந்த மிக உய­ரிய பண்பு தந்தை செல்வா விடமிருந்­தது.

தந்தை செல்வாவிடம் அர­சியல் விட்­டுக்­கொ­டுப்பு என்­பதே என்றும் இருந்­தது கிடை­யாது. ஆனால் அவர்­களின் வழி வந்­த­வர்கள் தற்­போது எத­னை­யெல்லாம் விட்­டுக்­கொ­டுக்கக் கூடாதோ அத­னை­யெல்லாம் விட்­டுக்­கொடுக்கத் தயார் என்­பதை உறு­திப்­ப­டுத்­து­கின்­றார்கள். அது­வொரு தவ­றான அணு­கு­மு­றையும் அர­சியல் பண்­பா­டு­மாகும். நாம் எங்கு நிமிர்ந்து நிற்க வேண்­டுமோ அங்கு நிமிர்ந்து நிற்க வேண்டும். அவ்­வாறு நிமிர்ந்து நிற்க முடி­யா­தென்றால் தலை­மை­யி­லி­ருந்து ஒதுங்­கிப்­போ­வது தான் சிறந்த வழி­யாகும்.

தலைமை என்ற ஸ்தானத்தில் இருக்­கின்­ற­போது தந்தை செல்வா எடுத்து வைத்த ஒவ்­வொரு அடி­யையும் கவ­ன­மாகப் பார்க்க வேண்டும். அந்த அனு­ப­வங்­களை நுணுக்­க­மாக எடுத்­து­கொள்ள வேண்டும். தந்தை செல்­வாவின் பாச­றையில் உரு­வாகி தற்­போது தமி­ழி­னத்­திற்கு தலைமை ஏற்­றுள்ள தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினர் தமி­ழர்­களின் தாயக விட­யத்­தினை கவ­னத்தில் ­ கொள்­ள­வேண்டியது மிக முக்கிய மானதாகும்.

அவர்கள் "தமி­ழர்­களின் தாயகம் தமி­ழீழம்" என்­பதை அர­சி­ய­ல­மைப்பில் இடம்­பெறச் செய்­வ­தனை வலி­யு­றுத்த வேண்டும். அதற்கு அழுத்­தங்­களை அளிக்க வேண்டும். அந்­தக் ­கோ­ரிக்­கையை முன்­னி­லைப்­ப­டுத்தி மக்கள் மயப்­ப­டுத்தப்பட்ட போராட்­டத் திற்கு வடிவம் கொடுக்க வேண்டும். "அதனை அவர் கள் தற்­போது வரையில் ஏன் செய்­யா­தி­ருக்­கின்­றார்கள்...?", என்­பது தான் எனது ஆதங்­க­மாக இருக்­கின்­றது.  

அதே­நேரம் தந்­தை செல்வாவின் காலத் தில் எமது தாயக தேசத்தின் அனைத்துப் பகு­தி­க­ளிலும் கட்­சிக்­கா­ரி­யா­லயங்கள் அமைந்­ தி­ருந்­தன. மக்­களின் கருத்­துக்கள், தேவை கள் ஆகி­ய­வற்றை பெற்­றுக்­கொள்­வ­தற்­கான அனைத்து வாய்ப்­புக்­களும் அளிக்­கப்­பட்டன. 

பின்னர் அவற்றினடிப்­ப­டையில் கலந்­து­ரை­ யா­டல்கள் இடம்­பெற்ற பிறகு தான் கட்­சி யின் தீர்­மானம் எடுக்­கப்­படும். ஆனால் தற்­போ­தைய சூழலில் முக்­கி­ய­மான அர­சியல் தீர்­மா­னங்கள் கூட அவ்­வாறு எடுக்­கப்­ப­டு­வ­தாக நான் அறி­ய­வில்லை. வாராந்த, மாதாந்த கலந்­து­ரை­யா­டல்கள் இடம் பெ­று­வ­தாகவும் தக­வல்கள் எதுவுமே இல்லை. ஆகக்­கு­றைந்­தது கட்­சிக்­கா­ரி­யா­லயங்கள் முறை­யாக இயங்­கு­கின்­றனவா என்­ப­தற்­கான பதி­வுகள் கூட இல்லை. விடு­த­லையை எதிர்­பார்த்­தி­ருக்­கின்ற இன­மொன்­றிற்கு தலை­மை­யேற்று விடு­த­லையைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­கு­ரிய வினைத்­தி­ற­னு டன் இவர்கள் செயற்­ப­ட­வில்லை.  

தந்தை செல்வா காலத்­திலும் சரி, அதன் பின்னர் தம்பி பிர­பா­க­ரனின் காலத்­திலும் சரி, தாய­கத்­திற்­காக தங்­களை அழித்­துக்­கொள்­ளக்­கூ­டிய தியாக உணர்வு தமி­ழி­னத்­த­வர்­க­ளி­டத்தில் இருந்­தது. தற்­போ­தைய நிலை யில் அந்த உணர்­வினை முற்­றாக சிதைக்­கின்ற வகை­யி­லான செயற்­பா­டுகள் தான் அங்­குள்ள தலை­மை­க­ளால் மேற்­கொள்­ளப் ப­டு­கின்­றன. அத­னை­ வி­டவும் மக்கள் பிர­தி­ நி­தி­க­ளுக்கும் மக்­க­ளுக்குமிடை­யி­லான இடை­ெவளிகளும் அதி­க­மாக உள்­ளதாக அறி­கின்றேன். இந் நிலை­மைகள் விடு­தலை நோக்­கிய பயண உணர்வை முற்றாக மழுங்கடித்துவிடும் அபாயத்தின் சமிக்ஞை யாகவே உள்ளது.  

     தொடரும் ஆதரவுகள்

நான் கல்லூரியில் கல்வி கற்றுக்கொண் டிருந்தபோது உங்களின் கல்வியோடு சேர்த்து தமிழீழ மக்களுக்காக இயலுமான உதவிகளை தமிழகத்திலிருந்து மேற்கொள் ளுங்கள் என்று என்னிடத்தில் வன்னியசிங் கம் ஐயா குறிப்பிட்டார். அன்று முதல் நான் அத்தகைய செயற்பாடுகளை ஆரம்பித்தேன். எமக்கு அண்டை நாடு இந்தியா. எமது போராட் டத்திற்கு இந்தியா பக்கபலமாக நிற்க வேண்டும். அந்த அடிப்படையில் தான் நான் இந்த நிமிடம் வரையில் தமிழக–மத்திய அர சாங்கத்தினூடாக நடவடிக்கைகளை முன் னெடுப்பதில் காத்திரமான பணிகளை முன் னெடுத்து வருகின்றேன்.  

 விக்கி தலைமையில் எழுச்சி

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கி னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பினூடாக வந்திருந்தாலும் கூட அவர் தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் இனத்திற்காக வும் செயற்படக்கூடிய நம்பிக்கையான ஒரு தலைவராகவும் மக்கள் பிரதிநிதியாகவும் உள்ளார். ஏனையவர்களை விடவும் அனுப வத்தில் குறைந்தவராகவும் பிற்பட்ட காலத் தில் விடுதலைக்கான பயணத்தில் இணைந்து கொண்டவராக இருந்தாலும் தமிழ் மக்களுக்காக செயற்பட வேண்டும் என்பதில் உறுதியாக செயற்படுகின்ற ஒரு தலைவராக இருக்கின்றார்.  

அறிவு, அனுபவம், அகவை, இன உணர்வு, நேர்மை, ஆகியவற்றை மையப்படுத்திய விக்கினேஸ்வரனின் கொள்கை வழியில் ஏனைய இளம் தலைவர்கள் ஒரு அமைப்பாக எழுச்சியடைவதை தற்போதைய சூழலுக்கு அவசியமானதாக நான் கருதுகின்றேன். ஏனைய தலைவர்கள் தமிழ் மக்களுக்காக இயங்கினாலும் விக்கினேஸ்வரனின் தலை மையில் எழுச்சி ஏற்படுவதை வரவேற் கின்றேன் என்றார் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-05-19#page-6

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.