Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் ஒப்பரேசன் ஆவா!! – தாவடியில் வளைத்துப் பிடித்தது பொலிஸ்!!

Featured Replies

யாழில் ஒப்பரேசன் ஆவா!! – தாவடியில் வளைத்துப் பிடித்தது பொலிஸ்!!

யாழ்ப்பாணம் தாவடிப் பகுதியில் வைத்து கொக்குவில் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 

 

நீர்வேலிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று தெரிவிக்கப்படும் முக்கிய சந்தேகநபர் ஒருவரைப் பொலிஸார் இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் ஆவா குழுவைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் தாவடிப் பகுதியில் வைத்து கொக்குவில் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த 08 ஆம் திகதி நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவிலில் வைத்து 8 பேர் கொண்ட குழுவினர் இருவரை சரமாரியாக வெட்டினர். அந்த வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் யாழ்ப்பாணம் பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸார் சந்தேகநபரைக் கைதுசெய்துள்ளனர்.

 

ஒப்பரேசன் ஆவா

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகள் அதிகரித்ததை அடுத்து யாழ்ப்பாணப் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்கசரின் கீழ் ஒப்பரேசன் ஆவா என்ற பொலிஸ் குழு உருவாக்கப்பட்டது. அந்தக் குழுவே தாவடியில் சந்தேநபரைக் கைது செய்தது என்று கூறப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர் கடந்த ஆண்டு கோப்பாய் பொலிஸார் இருவர் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தொடர்பிலும் சந்தேகநபராக உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

http://newuthayan.com/story/23/யாழில்-ஒப்பரேசன்-ஆவா-தாவடியில்-வளைத்துப்-பிடித்தது-பொலிஸ்.html

  • தொடங்கியவர்

ஆவாகுழுவின் முக்கியஸ்தர் போல் வெனிஸ்டனே கைது செய்யப்பட்டதாக காவற்துறை தெரிவிப்பு

aava-arrest-1.jpg?resize=663%2C496

 

ஆவா குழுவைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவரை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாண காவல்துறையினர் இ தெரிவித்துள்ளனர். போல் என்ற முக்கியஸ்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் நீண்ட காலம் தேடப்பட்டு வந்த போல் வெனிஸ்டன் எனப்படும் போல் என்பவரையே இவ்வாறு கைது செய்துள்ளதாகவும் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

காவல்துறையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களை அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் இதற்கு முன்னர் சில சந்தர்ப்பங்களில் போலை கைது செய்ய எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்திருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

http://globaltamilnews.net/2018/80178/

  • தொடங்கியவர்

வளைத்துப் பிடித்த பொலிஸ் தடுமாற்றம்!! – யாழ். நீதிமன்று வழங்கிய உத்தரவு!!

சந்தேகநபர் மீது இருவேறு வாள்வெட்டுக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து யாழ்ப்பாணம் பொலிஸாரும் கோப்பாய் பொலிஸாரும் மன்றில் சமர்ப்பணம் செய்தனர்.

 

Vaalveddu-1-740x430.jpg

 
 
 

வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவரை பிணையில் செல்ல அனுமதித்தது யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஆவா குழுவின் முக்கிய நபர் என்று கூறப்படுகின்றது.

சந்தேகநபர் மீது இருவேறு வாள்வெட்டுக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து யாழ்ப்பாணம் பொலிஸாரும் கோப்பாய் பொலிஸாரும் மன்றில் சமர்ப்பணம் செய்தனர்.

கொக்குவில் முதலி கோவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் என யாழ்ப்பாணம் பொலிஸார் சமர்ப்பணம் செய்தனர்.

 

சந்தேகநபருக்கு நீர்வேலி வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புள்ளது என்று கோப்பாய் பொலிஸார் மன்றில் சமர்ப்பணம் செய்தனர்.

“இருவேறு சம்பவங்களுடனும் சந்தேகநபர் தொடர்புடையவர் என்று எவ்வாறு குற்றச்சாட்டை முன்வைக்கிறீர்கள்?” என மன்று பொலிஸாரிடம் கேள்வி எழுப்பியது.

அதற்கு பொலிஸார் உரியவாறு பதிலளிக்கத் தவறியதால், சந்தேநபரை ஆள் பிணையில் செல்ல நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் அனுமதித்தார்.

நீ்ர்வேலி வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் எனத் தெரிவித்து கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த 23 வயது இளைஞன், நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை தாவடியில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.

யாழ். பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் செயற்படும் சிறப்பு பொலிஸ் குழுவினர் சந்தேகநபரைக் கைது செய்தனர். சந்தேகநபரிடமிருந்து கார் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

http://newuthayan.com/story/22/வளைத்துப்-பிடித்த-பொலிஸ்-தடுமாற்றம்-யாழ்-நீதிமன்று-வழங்கிய-உத்தரவு.html

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.