Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாகா­ண­ ச­பை­களை இழந்­து­விடும் நிலை­யை கூட்­ட­மைப்பு ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது: சாடு­கிறார் பஷில் ராஜ­பக் ஷ

Featured Replies

மாகா­ண­ ச­பை­களை இழந்­து­விடும் நிலை­யை கூட்­ட­மைப்பு ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது: சாடு­கிறார் பஷில் ராஜ­பக் ஷ

5-4fd3357b9b49e5b6c410f72721bbf18808d72b8d.jpg

 

(ரொபட் அன்­டனி)

தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பு தற்போ­தைய நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு வழங் கும் ஆதரவை எமக்கு வழங்­கி­யி­ருந்தால் நாம் தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வு கண்­டி­  ருப்போம். வடக்கு, கிழக்கில் யுத்­தத்தின்  பின்னர் எமது அர­சாங்கம் பாரிய அபி­வி­ருத்தி வேலைத்­ திட்­டங்களை முன்­னெ­டுத்­தது. ஆனால் கூட்ட­மைப்பு எமக்கு ஆத­ரவு வழங்­க­வில்லை என்று  சிறி­லங்கா பொது­ஜன பெர­மு­ன  வின் முக்­கி­யஸ்தர் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.  

நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு கூட்­ட­மைப்பு பாரிய ஆத­ரவை வழங்­கி­வ­ரு­கி­றது. மைத்­தி­ரி­பால சிறி­சேன அதி­கா­ரத்­திற்கு வரு­வ­தற்கு உத­விய கூட்­ட­மைப்பு பிர­த­மரை காப்­பாற்­று­வ­தற்கும் துணை­போ­னது. எனினும் அவர்­க­ளினால் மக்­களின் தேவை­களை நிறை­வேற்ற முடி­ய­வில்லை என்றும் அவர் குறிப்­பிட்டார்.

எதிர்க்­கட்சித் தலைவர் பதவி கூட்டு எதி­ர­ணிக்கு வழங்­கப்­ப­ட­வேண்­டு­மென தெரி­விக்­கப்­பட்டு வரு­கின்­றமை குறித்து விப­ரிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

முன்னாள் அமைச்சர் பஷில் ராஜ­பக்ஷ இது தொடர்பில் மேலும் குறிப்­பி­டு­கையில்;

 

 எமது ஆட்­சிக்­கா­லத்தில் வடக்கு, கிழக்கில் பாரிய அபி­வி­ருத்தி திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. ஆனால் அப்­போது தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு எமக்கு ஒத்­து­ழைப்பு வழங்­க­வில்லை. வடக்கு, கிழக்கில் பாரிய அபி­வி­ருத்தி திட்­டங்­களை முன்­னெ­டுத்த அப்­போ­தைய எமது அர­சாங்­கத்­திற்கு தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு ஆத­ரவு வழங்­கி­யி­ருந்தால் எம்மால் தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வு கண்­டி­ருக்க முடியும். எனினும் கூட்­ட­மைப்பு நாம் எதிர்­பார்த்த ஆத­ரவை வழங்­க­வில்லை. மாறாக தற்­போ­தைய நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு கூட்­ட­மைப்பு பாரிய ஆத­ரவை வழங்­கு­கின்­றது. எனினும் எதுவும் நடக்­க­வில்லை. கூட்­ட­மைப்பு தமிழ் மக்­களை ஏமாற்­றி­யுள்­ளது.

 

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ வடக்கு மாகா­ண­ச­பையைப் பெற்­றுக்­கொ­டுத்தார். ஆனால் அத­னையும் இழக்கும் நிலை­மைக்கு கூட்­ட­மைப்பு சென்­று­விட்­டது. மாகா­ண­சபைத் தேர்­தலை நடத்­தாமல் பிற்­போ­டு­வ­தற்கு கூட்­ட­மைப்பு ஒத்­து­ழைப்பு வழங்­கி­வ­ரு­கின்­றது. மாறாக மாகா­ண­சபைத் தேர்­தலை விரை­வாக நடத்­து­வ­தற்கு எந்­த­வி­த­மான அழுத்­தத்­தையும் தமிழ் கூட்­ட­மைப்பு பிர­யோ­கிக்­காமல் இருக்­கி­றது.

அதி­கா­ரப்­ப­கிர்வை கோரு­கின்ற கூட்­ட­மைப்­பினர் இன்று மாகா­ண­ச­பை­க­ளுக்கு தேர்தல் நடத்­தப்­ப­டாமல் ஆளு­நரின் கீழ் அவை இயங்­கு­வ­தற்­கான சூழலை உரு­வாக்க இட­ம­ளித்­துள்­ளனர். எனவே சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினர் மக்களின் தேவைகளை நிறைவேற்றவில்லை. மாறாக ஜனாதிபதியையும் பிரதமரையும் காப்பாற்றுவதிலேயே உறுதியாக உள்ளனர். மக்களின் எதிர்பார்ப்புக்களை சிதறடித்துள்ள சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினர் பதவிவிலகவேண்டும் என்றார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-05-26#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.