Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் வாழ்க்கையை குழப்ப முயற்சிக்கவில்லை - கோத்தா

Featured Replies

தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் வாழ்க்கையை குழப்ப முயற்சிக்கவில்லை - கோத்தா

 

(ஆர்.யசி)

கடந்த ஆட்சியில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் சாதாராண வாழ்க்கை சூழலை குழப்பவோ அவர்களின் இன, மத, கலாசார நடவடிக்கைகளுக்கு பங்கம் விளைவிக்கவோ ஒருபோதும் முயற்சிக்கவில்லை. அவர்களின் வாழ்க்கையை பாதுகாக்கவே இப்போதும் நாம் முயற்சித்து வருகின்றோம் என  முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

GOTHA.jpg

பேருவளையில் நேற்று இடம்பெற்ற இப்தார் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

ராஜபக்ஷவினர் குறித்து சிறுபான்மை மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டுள்ள பொய்யான கருத்துக்கள் இன்று வெளிச்சத்துக்கு வரும்  நிலைமை காணப்படுகின்றது. 

குறிப்பாக  பாதுகாப்பு செயலாளராக நான் கடமையாற்றிய காலத்தில் முஸ்லிம் மக்களை பாதுகாக்கவும் அவர்களின் அபிவிருத்திக்காக நான் முன்னெடுத்த  நடவடிக்கைகள் குறித்தும் என்னுடன் கடமையாற்றிய நபர்களுக்கு நன்றாகத் தெரியும்.

அன்று யுத்தம் முடிவடைந்த  பின்னர் வடக்கு, கிழக்கில் நாம் முன்னெடுத்த அபிவிருத்திகள், தமிழ் முஸ்லிம் மக்களை பாதுகாக்க நாம் முன்னெடுத்த வேலைத்திட்டங்களை அனைவரும் அறிந்திருப்பார்கள். 

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட  தமிழ் முஸ்லிம் மக்களை நாம் ஒருபோதும் கைவிடவில்லை. இந்த நாட்டில் வாழும் சகல மக்களுக்கும் இந்த நாட்டின் கௌரவமான மக்களாக வாழக்கூடிய நாடாக எமது நாட்டை மாற்றியமைக்க வேண்டும் என்பதே எமது கொள்கையாகும். 

எதிர்காலத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் உருவாகும் ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்கு எவ்வித அச்சமுமின்றி மத நடவடிக்கைகளை தடுக்காத, வியாபாரத்தை சரியாக முன்னெடுத்து செல்லும் சூழலை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றார்.

http://www.virakesari.lk/article/34025

  • தொடங்கியவர்

மஹிந்த ஆதரவளித்தால் களமிறங்குவதற்கு தயார் :தமிழ் மக்களை பிரிவினையின் பக்கம் திருப்பும் முயற்சி இடம்பெறுகின்றது என்கிறார் கோத்தா

03-3ea0dadfdb4973346803b35cea9938165b0f4d94.jpg

 

(ஆர்.யசி)

மஹிந்த ராஜபக் ஷ என்ற தனிநபரை கொண்டே நாட்டில் அடுத்த அரசியல் மாற்றம் இடம்பெறும். அவ்வாறான சூழலில் என்னை ஜனாதி பதி வேட்பாளராக நியமித்தால் நான் களமிறங்கத் தயார் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ தெரிவித்தார்.

இராணுவத்தை கொண்டு தமிழ் மக்களை கட்டுப்படுத்த முயற்சிக்கவில்லை. ஆனால் வடக்கு மக்களை பிரிவினைவாத பக்கம் திருப்பும் முயற்சிகள் வடக்கு அரசியல் தலைமைகளின் மூலமாக முன்னெடுக்கப்படுவதை தடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மாத்தறையில் நேற்று முன்தினம் நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் மற்றும் தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து கருத்துக்களை முன்வைக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்

நான் இன்னும் முழுமையான அரசியலில் பயணத்தில் கால் வைக்கவில்லை. கடந்த காலங்களில் இராணுவத்துடன் எனது காலம் கடந்தது. அதன் பின்னர் பாதுகாப்பு செயலாளராக கடமை புரிந்தேன். அப்போது எமது நாட்டில் பாரிய யுத்த சூழல் ஒன்று நிலவியது. அதனை வெற்றி கொண்ட பின்னர் நாட்டினை பொருளாதார ரீதியில் வெற்றி கொள்ள நாம் முன்வந்தோம். எனினும் கடந்த 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் எமது வேலைத்திட்டங்கள் நிறுத்தப்பட்டன.

எமது நடவடிக்கைகளை தொடர்ந்தும் இந்த அரசாங்கம் முன்னெடுத்து வந்திருக்கும் என்றால் நாடு பாரிய அபிவிருத்திகளை கண்டிருக்கும். ஆனால் அவை முழுமையாக நிறுத்தப்பட்டுவிட்டது. எமது எதிர்பார்ப்புகளும் சிதைந்து விட்டன. எனவே மீண்டும் நாட்டினை சரியான பாதையில் முன்னெடுத்து செல்ல வேண்டும். அதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் பங்களிப்பு அவசியம் என்பதை மறுக்க முடியாது. தேசிய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்திலும் மஹிந்த ராஜபக் ஷவின் ஆதரவு நிலைத்து நிற்கின்றது. நல்லாட்சிக்கு வாக்களித்த மக்களின் அரைவாசி பேர் தமது முடிவு தவறு என நினைக்கின்றார்கள்.

ஆகவே மீண்டும் சரியான தெரிவு ஒன்று அவசியம் என மக்கள் நினைக்கின்றனர். ஆகவே மக்களின் விருப்புக்கு அமைய அடுத்த கட்டம் நகர வேண்டும். இதில் நான் எந்தளவு பொருத்தமான அரசியல் வாதி என்பதை என்னால் கூற முடியாது. எனினும் மஹிந்த ராஜபக் ஷவிற்கு இந்தக் காரியம் தெரியும். இதில் அவர் யாரை நியமிப்பார் என்பதை பொறுத்தே வேட்பாளர் தெரிவுகள் அமையும். அவர் என்னை தெரிவு செய்தால் நான் தேர்தலில் வேட்பாளராக களமிறங்க தயார்.

இன்று எமது நாட்டில் தேசிய பாதுகாப்பு குறித்து அரசாங்கத்திற்கு தெளிவு இல்லை. கடந்த காலத்தில் யுத்தம் நிலவிய போதும் நாம் யுத்தத்தை வெற்றி கொண்டோம். பயங்கரவாத தலைவர்களை அழித்த போதும் அவர்களின் செயற்பாடுகள் இன்றும் உள்ளன. பிரிவினைவாத கொள்கை இன்றும் வடக்கு மக்கள் மத்தியில் உள்ளது. அவை இன்றும் மாற்றம் காணவில்லை. வடக்கு கிழக்கில் மீண்டும் ஒரு பிரிவினைவாத கொள்கை பரவாத வகையில் பாதுகாப்பை வழங்கவே நாம் தீர்மானம் எடுத்தோம். அதற்காக இராணுவ கட்டுப்பாடு அல்ல. அவர்களின் வாழ்க்கையை இராணுவத்தை கொண்டு அடக்க முயற்சிக்கவில்லை.

ஆனால் நாட்டினை பாதுகாக்க வேண்டிய சில நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்தோம். 2014ஆம் ஆண்டு காலத்தில் வடக்கில் எந்த பாதைகளும் மூடப்படவில்லை. அவர்களை சோதிக்கும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. அவர்களை சாதாரணமாக வாழ இடம் கொடுத்து முக்கிய பகுதிகளில் மாத்திரம் இராணுவத்தை பலப்படுத்தி வைத்திருந்தோம். ஆனால் இன்று அவை இல்லை,. ஆனால் வடக்கும் பாதுகாப்பில் இல்லை. எமது நிர்வாகத்தில் பிரிவினைவாதத்தை பலப்படுத்தும் போஸ்டர் ஒன்றைக் கூட ஓட்டுவதற்கு நாம் அனுமதிக்கவில்லை. ஆனால் மக்களை பாதிக்கும் நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. பிரிவினைவாதத்தை முன்னெடுக்கும் சில நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்ட போதும் நாம் உடனடியாக அவற்றை தடுத்து நிறுத்தினோம். ஆனால் இன்று நிலைமைகள் அவ்வாறு அல்ல. பழைய வரலாறுகளை மீண்டும் நாட்டில் ஏற்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக தெரிகின்றது.

மக்களின் மனங்களை குழப்பி மீண்டும் நாட்டில் பிரிவினையினை முன்னெடுக்கும் சூழல் ஒன்று உருவாகி வருகின்றது. கடந்த காலங்களில் இடம்பெற்ற அதே தவறுகளை மீண்டும் வடக்கில் செய்யத் தூண்டும் நடவடிக்கைகள் தடுக்கப்பட வேண்டும். உலகில் எந்த ஒரு நாட்டிலும் இல்லாத அளவில் பயங்கரவாத தலைவர்களை நினைவுகூரும் செயற்பாடுகள் இன்று இடம்பெற்று வருகின்றன. புலிகள் பதுக்கிவைத்த ஆயுதங்கள் இன்றும் வடக்கில் உள்ளன. சர்வதேச நாடுகளில் செயற்படும் புலம்பெயர் புலி அமைப்புகள் மூலமாக நிதி வருகின்றது.

இன்று தொழிநுட்ப வளர்ச்சி இவற்றை முன்னரைவிட விரைவான பயங்கரவாத நடவடிக்கைகள் வரையில் கொண்டு செல்லும். பிரிவினை குறித்து தொடர்ந்தும் மக்கள் மத்தியில் பேசிக்கொண்டு இறுதியில் மக்களை நாட்டுக்கு எதிராக திருப்பும் நடவடிக்கைகளை இன்று வடக்கின் தலைவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். ஆகவே இவற்றினை கட்டுபடுத்த வேண்டும். அதேபோல் தெற்கில் தலைதூக்கும் இனவாத நடவடிக்கைகளையும் தடுக்க வேண்டும். இனங்களுக்கு இடையில் ஏற்படும் முரண்பாடுகளை தடுக்க வேண்டும்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-05-28#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.