Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருகோணமலை நீதிமன்றை சென்றடைந்தார் நீதிபதி மா.இளஞ்செழியன்.

Featured Replies

திருகோணமலை நீதிமன்றை சென்றடைந்தார் நீதிபதி மா.இளஞ்செழியன்.

 

33939740_2177214305845038_60039075916404

 
 

சற்றுமுன் திருகோணமலை நீதிமன்றத்தை சென்றடைந்தார் நீதிபதி மா.இளஞ்செழியன்.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிபதி இளஞ்செழியன் திருகோணமலை மேல் நீதிமன்றத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது “கிழக்கில் இன்று மீண்டும் சூரியன் உதித்து விட்டது” என்ற கோஷத்துடன் நீதிபதி வரவேற்கப்பட்டார்.

http://newuthayan.com/story/10/திருகோணமலை-நீதிமன்றை-சென்றடைந்தார்-நீதிபதி-மா-இளஞ்செழியன்.html

  • தொடங்கியவர்

நீதிபதி இளஞ்செழியனுக்கு திருகோணமலையில் பெரும் வரவேற்பு!!

 

Screenshot_2018-05-30-13-30-06-1.png

 
 
 

”கிழக்கில் இன்று மீண்டும் சூரியன் உதித்து விட்டது” என்ற கோசத்துடன் நீதிபதி மா. இளஞ்செழியன் திருகோணமலை மேல் நீதிமன்றில் இன்று வரவேற்கப்பட்டார்.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாக இருந்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக இடம் மாற்றம் பெற்றுச் செல்லும் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றார்.

இதையடுத்து திருகோணமலை மேல் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.  ஆயுதம் தாங்கிய பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

 

வருடாந்த இடமாற்றத்தின் கீ்ழ் மூன்று ஆண்டுகள் ஒரே மாகாண மேல் நீதிமன்ற அமர்வில் கடமையாற்றியதன் அடிப்படையில், நாடு முழுவதும் மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டது.

அதனடிப்படையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டார்.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாக மா. இளஞ்செழியன் இருந்த காலப்பகுதியில் பல வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், குற்றவாளிகளுக்குச் சரியான தண்டனையும் வழங்கியிருந்தார்.

இதனால் வடக்கில் மட்டுமல்லாது தெற்கிலும் நீதிபதி இளஞ்செழியனின் புகழ் கொடிகட்டிப் பறந்தது.
இந்த நிலையில் தற்போது திருகோணமலையில் தனது பணிகளைத் தொடரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Screenshot_2018-05-30-13-30-06-300x146.pScreenshot_2018-05-30-13-29-53-300x148.p

http://newuthayan.com/story/14/நீதிபதி-இளஞ்செழியனுக்கு-திருகோணமலையில்-பெரும்-வரவேற்பு.html

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.