Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாருடையக் குரலாகப் பேசுகிறார் ரஜினி?

Featured Replies

யாருடையக் குரலாகப் பேசுகிறார் ரஜினி?

 

 
rajini

படம். | எஸ்.ஏ. மாரிக்கண்ணன்.

‘அப்பா, ரஜினி பேசியதை கேட்டீங்களா?’ பெங்களூரிலிருந்து மகன் போனில் கேட்கிறான். தொடர்ந்து, ‘அத பார்த்து அத்தனை பேரும் திட்டித் தீர்க்கறாங்க. மோடியின் குரலா ரஜினி பேசறதா வறுத்தெடுக்கிறாங்க!’ என்றும் பின் மொழிகிறான். இது என் மகனின் கருத்து மட்டுமல்ல, சமூக வலைத்தளங்களை திறந்தால் அத்தனை பேருமே ரஜினியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

‘சமூக விரோதிகள் போராட்டக்களத்தில் ஊடுருவி விட்டார்கள். அதனால்தான் இந்த உயிர்ப்பலிகள்!’ என்கிறார். ‘போராட்டக்களத்திற்கு மக்கள் வரும்போது ஜாக்கிரதையாக இருக்கணும்!’ என எச்சரிக்கிறார்.‘போலீஸ், உளவுத்துறை செயலிழந்து விட்டது!’ என்பவர், ‘இப்படியே தொழிற் சாலைகளுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்தால் நம் நாட்டுக்கு தொழிற்சாலைகள் எதுவுமே வராது. தொழில் தொடங்க யாருமே வர மாட்டாங்க!’ என்றும் அங்கலாய்க்கிறார். ‘ஏற்கனவே நம் மண்ணில் விவசாயம் முடிஞ்சு போச்சு. இனி தொழிலும், தொழிற்சாலைகளும் இல்லைன்னா என்ன ஆகும்?’ என்றொரு அச்சத்தை மக்கள் முன் விதைக்கிறார். அது மட்டுமா? ‘திமுக, அதிமுக இதுல ரெண்டுமே அரசியல் செய்யறாங்க. அதுல அப்பாவி மக்கள்தான் பலியாகிறாங்க!’என்பவர், ‘முதல்வரை ராஜினமா செய்யச் சொல்லி இன்னமும் ஏன் ரஜினி கேட்கவில்லை!’ என்ற நிருபரின் கேள்விக்கு, ‘அது தேவையில்லை சார். எல்லாத்துக்குமே முதல்வர் ராஜினமா செய்யணும்ன்னா நிலைமை என்னாவது? அது நமக்கு தேவையில்லை!’ என்றும் முரண்படுகிறார்.

 

என்ன அரசியல் இது? யாருடைய குரலாய், யாருக்கான குரலாய் ஒலிக்கிறார் ரஜினி.

உளவுத்துறை செயலற்று போச்சு என்றால் எந்த மாதிரி அவை செயலற்றது. அதை சொல்ல வேண்டாமா? போலீஸின் உளவுத்துறை என்பது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய தேசத்தில் மட்டுமல்ல, உலக நாடுகளில் கூட எத்தகைய செயல்களில் ஈடுபடும் என்பது ஆட்சியாளர்களுக்கும், போராளிகளுக்கும் தெரியும். கலகம் நடக்கப் போவதையும் சொல்லும். அதில் குளிர் காயவும் செய்யும். யார் ஆளுகிறார்களோ அவர்களின் செயலாகவே அது செயல்படும்.

ஒரு சம்பவம்:

எனக்கு தெரிந்து ஒரு சம்பவம். கேள்வி கேட்டதற்காக ஒரு அதிகாரி திருப்பூரில் ஒரு பத்திரிகை நிருபரை அடித்து, சட்டையை கிழித்து பின்னால் கையை கட்டி பக்கத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு தன் ஊழியர்களை விட்டு இழுத்துச் சென்றார். போலீஸாரும் அவரின் ஏவலின் பேரில் அந்த நிருபரை நையப்புடைத்தார்கள். இந்த சம்பவத்தை கண்ணெதிரே பார்த்த சமூக ஆர்வலர் ஒருவர் துடித்துப் போய் மற்ற பத்திரிகை நிருபர்களுக்கு போன் செய்ய, பத்திரிகை உலகம் பதட்டமடைந்தது. நடந்ததை விசாரித்து உடனடியாக பத்திரிகையாளர் மன்றங்கள் போராட்டக் களத்தில் இறங்கியது. இந்த சம்பவம் நடந்தது இரவு 9 மணி. 9.45 மணிக்கு விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலான பத்திரிகையாளர்கள் குறிப்பிட்ட இடத்தில் அசெம்பிள் ஆகி சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

அது நாலு முனை சந்திப்பு உள்ள பிரதான சாலை. ஒரு மூலைக்கு நான்கைந்து பத்திரிகையாளர்கள் நின்றிருந்தாலே அதிகம். அதற்குள் சில பஸ்களிலிருந்த பயணிகள் ஓடி வந்தார்கள். மறியலில் ஈடுபட்ட பத்திரிகையாளர்களை தாக்கினார்கள். எனவே மற்ற சாலை மூலைகளில் அமர்ந்திருந்தவர்களும் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று அந்த பயணியுடன் வம்புக்கு நின்றார்கள். இந்த நேரத்தில் எதிர்திசையில் ஒரு இருசக்கர வாகனம் உடைக்கப்பட்டது. இன்னொரு கடை தாக்கப்பட்டது. அங்கே பத்திரிகையாளர்கள் தவிர அசெம்பிள் ஆனவர்கள் சில உளவுப் போலீஸார் மட்டுமே. வாகனங்கள் உடைப்பு, கடை உடைப்பு போன்ற வன்முறைகளில் நிச்சயம் பத்திரிகையாளர்கள் ஈடுபடவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். சமூக விரோதிகளும் யாரும் இல்லை. அப்படியானால் இந்த வன்முறையில் ஈடுபட்டது பொதுமக்களா? நிச்சயம் இல்லை.

பின்னாளில் ஒரு உளவுத்துறை போலீஸ்காரர் பேசுகிறார்: ‘போராட்டம்ன்னா சும்மாவா? நீங்க நாலுபேர் போராடினாலும் அதை நாங்க எஃப் ஐ ஆர் போட்டு வச்சுக்குவோம். அதற்கு வலுவான எவிடன்ஸ் வேண்டாமா? கிடைச்சா பார்ப்போம். இல்லைன்னா கிரியேட் செய்வோம். அதுதான் போலீஸ்!’ என்றார்.

இதேபோல் கோவை கலவரம், குண்டுவெடிப்பு என பெரும் பதட்டத்தில் ஆழ்ந்து ஒரு வருடம் கழித்து துணைப் பிரதமர் அத்வானி கோவைக்கு வந்தார். வ.உ.சி பூங்கா மைதானத்தில் கடும் பாதுகாப்பு வளையத்தில் நின்று பேசினார். அப்போது கோவையின் எம்பியாக இருந்த பாஜகவை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன், அப்போது கோவை பொறுப்பில் இருந்த போலீஸ் அதிகாரியை கண்டபடி தாக்கிப் பேசினார். பாஜக தொண்டர்களை கூட்டத்திற்கு வரவிடாமல், அவர்களை செயல்பட விடாமல் செய்பவர் குறிப்பிட்ட அதிகாரிதான்!’என்பதை பட்டியலிட்டார்.

அதே சமயம் ஒரு குறிப்பிட்ட உளவுத்துறை அதிகாரி பத்திரிகையாளர்கள் கேலரிக்கு வந்தார். ‘ஏழு தீவிரவாதிகள் வங்கத்திலிருந்து ஊடுருவல்!’ என்ற செய்தித் தகவலை தனக்கு நெருக்கமான பத்திரிகை நிருபர்களிடம் ஓதி விட்டார். அவர்கள் உடனுக்குடனே தம் அலுவலகங்களுக்கு போன் செய்தனர். மாலை பத்திரிகைகளில், ‘ஏழு தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவல்!’ என்ற கொட்டை எழுத்துக்களை காண நேர்ந்தது. இது எல்லாம் ஒரு சேம்பிள்தான்.

யார் அந்தச் சமூக விரோதிகள்?

இதேபோல் தூத்துக்குடி போராட்டத்தில் என்ன நடந்தது. ஸ்டெர்லைட் ஆலை குடியிருப்புகளின் மையப்பகுதி கேமராக்கள், ஆட்சியர் அலுவலகக்கேமராக்கள் எல்லாம் எதை பதிவு செய்தன. அவை குப்புறக்கவுத்தப்பட்டு இருந்ததாக தகவல்கள் வருகிறதே. உண்மையில் அப்படித்தான் இருந்ததா? அப்படியானால் அதை செய்தவர் யார்? சமூக விரோதிகள் ஊடுருவல் என்கிறார்களே. அவர்கள் எல்லாம் எதற்காக ஊடுருவினார்கள். ஒரு ஆலை வேண்டாம் என்று மக்கள் போராடுகிறார்கள். அது உயிருக்கு எத்தகைய சேதத்தை விளைவிக்கிறது என்பதை அனுபவப்பூர்வமாக சொல்கிறார்கள். அவர்கள் மத்தியில் நான்கைந்து பேர் ஊடுருவி எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம். அதில் எண்ணெய் விட, விட எரியும் பிரச்சனையாக இருக்கும் மையப் பொருளான ஆலையை மூட நடவடிக்கை எடுப்பது முக்கியமா? அந்த சமூக விரோதிகளை குறி வைக்கிறேன் என்று அப்பாவி மக்களை சுட்டுக் கொல்வது முக்கியமா?

சரி, சமூக விரோதிகள், சமூக விரோதிகள் என்கிறார்களே. அப்படியானவர்கள் யார்? அவர்கள் எந்த அமைப்பை சேர்ந்தவர்கள்.அந்த அமைப்புகள் தமிழகத்திலோ, இந்தியாவிலோ தடை செய்யப்பட்ட இயக்கங்களா? அவை எத்தனை அமைப்புகள். அந்த அமைப்பினர் எத்தனை பேர். பத்து பேரா? நூறு பேரா? ஆயிரம், லட்சம் பேரா? பத்து, நூறு பேர் பத்தாயிரம், இருபதாயிரம் பேர் கொண்ட மக்கள் கூட்டத்தில் புகுந்து மூளைச்சலவை செய்து போராட்டத்தை தூண்டுகிறார்கள் என்றால், அதை விட அதிகமான அதிகாரிகளை, அலுவலர்களை, ஊழியர்களை கொண்டுள்ள, கூடவே ரத,கஜ, துரக, பதாதைகளை வைத்துள்ள அரசு இயந்திரம் அதே மக்களிடம் தன் தரப்பு நியாயத்தை எடுத்துச் சொல்லி அவர்களை வழிநடத்த வேண்டியதுதானே? சமூக விரோதிகள் பல்லாயிரக் கணக்கில் இருந்தார்கள் என்று நியாயப்படுத்தினால், அந்த அளவு சமூக விரோதிகளை கட்டுப்படுத்த இதுவரை அரசு ஏன் தவறியது? அதை மற்றவர்கள் பேசுகிறார்களோ இல்லையோ பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வந்திருக்கும் ரஜினி, அந்த மக்களின் குரலாக பேச வேண்டாமா?

ஒரு சொட்டு வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு தந்த தமிழனுக்கு ரஜினி தரும் பரிசா?

அடுத்தது ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட நியாயத்தை பேசும் ரஜினி அதே வேகத்தில் தொழிற்சாலைக்கு எதிராக போராட்டம் செய்தால் தொழில்கள் வராது என்கிறார். இது என்ன முரண்? ஸ்டெர்லைட் ஆலை மட்டுமல்ல, கோவையில் 1970களில் பவானி நதியை நாசமாக்கிய விஸ்கோஸ் ஆலை, 1980 களில் நொய்யலை விஷமாக்கிய திருப்பூரில் ஸ்தாபித்து நிற்கும் எண்ணிறைந்த சாயப்பட்டறைகள், 1990களில் ஈரோடு பவானியை நிர்மூலமாக்கின தோல் ஆலைகளின் வரலாறு ரஜினிக்கு தெரியாதா? அதன் மூலம் நிர்மூலமான லட்சக்கணக்கான ஹெக்டேர் நஞ்சை நிலங்கள் எத்தனை எத்தனை. ‘ஏற்கனவே நம் தமிழகத்தில் விவசாயம் முடிஞ்சு போச்சு என்பதால் தொழிற்சாலைகளை அனுமதிக்க சொல்லும் ரஜினி, விவசாயத்தை முடித்துக் கட்டியதே ஸ்டெர்லைட் போன்ற பெருமுதலாளிகளின் ஆலைகள்தான் என்பதை ஏன் மறைக்கிறார்? அப்படி மறைப்பதன் மூலம், ‘காவிரியில் கர்நாடகாக்காரன் விவசாயம் செய்து

அமோகமாக கொழிக்க வேண்டும். தமிழகத்தில் காப்பர், அம்மோனியம், ஜிங், காட்மியம், பிளாட்டினம், மீத்தேன் என வரும் ஆலைகளை நிறுவி தமிழன் பாழாய் போக வேண்டும்!’ என தமிழினப் போராளிகளின் எரியும் கூற்றுக்கு ரஜினி எண்ணெய் விடுவதாக ஆகாதா? இதுதான் ஒரு சொட்டு வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு தந்த தமிழனுக்கு ரஜினி தரும் பரிசா?

‘திமுக, அதிமுக இரண்டு பேருமே இந்த ஆலை விவகாரத்தில் அரசியல் செய்யறாங்க!’ என்று சொல்லும் இதே ரஜினிதான், ‘தமிழகத்தில் சிஸ்டம் கெட்டுப் போச்சு!’ என ஆறு மாதத்திற்கு முன்பே அறிவித்தார். ‘போர் வரட்டும் பார்த்துக்கலாம். இப்போது வேண்டாம். இன்னமும் நாம் அரசியலில் குதிக்கவில்லை. எனவே அதில் குதித்தவர்கள் நீந்தட்டும். இப்போதைக்கு நீங்களும் அரசியல் பேச வேண்டாம். நானும் பேச மாட்டேன்!’ என்றும் அறிவித்தார் அப்போது. காவிரிப் பிரச்சனை, மீத்தேன் வாயு பிரச்சனை, ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் என மக்கள் படுபாதகப் பிரச்சனைகளை முன்னெடுத்து போராட்டங்கள் பல செய்த போது கூட, ‘நாங்கள் ரஜினி மன்றங்களை கட்டமைத்துக் கொண்டிருக்கிறோம். பூத் கமிட்டிகளை போட்டுக் கொண்டிருக்கிறோம். எந்த விஷயத்தையும் வாய்திறக்கக் கூடாது என தலைவரே உத்திர விட்டுள்ளார்!’ என்பதையே திரும்பத் திரும்ப அழுத்தந்திருத்தமாக சொல்லி வந்தனர் ரஜினி மன்ற நிர்வாகிகள்.

எங்காவது போகும்போது வரும்போது பத்திரிகையாளர்கள் எதிர்ப்படும் போது ஒரு சில கேள்விகளுக்கு பட்டும் படாமல் பதில் சொல்லி வந்த ரஜினியை, ‘பரவாயில்லை. ரஜினி இன்னமும் அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை. அதனால் வாய்மூடி மவுனம் காக்கிறார்!’ என்று ஒரு சாரார் பொறுத்துக் கொண்டாலும், இன்னொரு சாரார் பொங்கி பிரவகித்தனர். அவற்றில் ரஜினிக்கு எதிரான குரல்கள் வன்மமாகவும் வெடித்தது. இந்த சூழ்நிலையில்தான் 14 பேர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டு, 144 தடை உத்திரவை காரணம் காட்டி தமிழக முதல்வரே மக்களை சந்திக்க மறுத்த நிலையில், அந்த 144 தடை உத்தரவு நீக்கப்பட்ட பின்னர் சாவகாசமாக தூத்துக்குடி சென்றிருக்கிறார். பாதிக்கப்பட்ட மக்களை ஆஸ்பத்திரியில் சந்தித்திருக்கிறார் ரஜினி. அரசியலுக்கு வருவதாக சொன்ன பிறகு முதன் முதலாக பொதுவெளியில் மக்களை சந்தித்து பேசின ரஜினி, அதே பொதுவெளியில் பத்திரிகையாளர்களையும் சந்தித்திருக்கிறார். அதில் நிருபர்கள்

கேள்விகளுக்கு நிறைய முரண்பட்ட பதில்களையும் சொல்லியிருக்கிறார். அதில் முரணுக்கெல்லாம் முரண். ‘முதல்வரை ராஜினாமா செய்யச் சொல்லி ஏன் ரஜினி இன்னமும் கேட்கவில்லை?’ என்ற கேள்விக்கான பதில்தான்.

‘சிஸ்டம் கெட்டுப் போச்சு!’ என்று ஆறுமாதங்களுக்கு முன்பே தமிழக அரசை பற்றி கமெண்ட் கொடுத்த ரஜினி, அந்த சிஸ்டத்திற்கு காரணியான அமைச்சரவையை பதவி விலகச் சொல்வதிலோ, முதல்வரை ராஜினமா செய்யச் சொல்வதிலோ என்ன தவறு இருக்க முடியும்? ‘அது தேவையில்லை. எல்லாத்துக்கும் ராஜினமான்னா என்னாவது?’ என்கிறார். ஒரு பக்கம் ஸ்டெர்லைட் ஆலை கூடாது. அவர்கள் கோர்ட்டுக்கு போனால், ஆலையை திறக்க முயற்சித்தால் அதை விட மோசமான செயல் வேறொன்று இருக்க முடியாது என்பவர் அதே வேகத்தில் ஆலைகளுக்கு எதிரான போராட்டம் என்றால் தொழிற்சாலைகள் வராது என்று தொழிலதிபர்களுக்கு வக்காலத்து வாங்குகிறார். அப்படி ஆலைகள் வரும்போது அந்த ஆலைகள் எப்படிப்பட்டவை என்பதை கவனமாக பரிசீலித்து அரசு அதற்கு அனுமதிக்க வேண்டும் என்கிறார். அதை மீறி தவறு நடந்தால் அதைப் பற்றி பத்திரிகைகள், மீடியாக்கள், அத்தனை டிவிக்களிலும் அதைப் பற்றி அம்பலப்படுத்த வேண்டும். அதேபோல் சமூக விரோதிகளை இனம் காட்டுவதும் மீடியாக்களின் கடமை என்கிறார்.

அப்படியானால் அவர் பாஷையில், ‘சிஸ்டம் கெட்டுப்போன’ அரசாங்கத்தில் இது எப்படி சாத்தியம்?’ என்ற கேள்வியை அவரேதான் அவருக்குள் கேட்டுக் கொள்ள வேண்டும். இங்கே அவர் மோடியின் குரலாக மட்டுமல்ல, தொழிலதிபர்களின் குரலாய், தமிழக ஆட்சியாளர்களின் குரலாய், அதிகார வர்க்கத்தின் குரலாய் ஒலித்தாரேயன்றி மக்களின் குரலாய் ஒலிக்கவில்லை. ஒரு வேளை, ‘இதுதான் அவரின் அசல் குரல்!’ என்றால் தமிழக அரசியலுக்கான குரலாக அது இருக்காது.

தெளிவான ஆலோசனை இருந்தும் பதற்றமடைந்த ரஜினி?

ரஜினி தூத்துக்குடி செல்வதற்கு இரண்டு நாட்கள் முன்பே அவருக்கு நெருக்கமான அரசியல் ஆலோசகர், ‘பாதிக்கப்பட்ட மக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும். என்ன பேச வேண்டும். நிருபர் சந்திப்பில் கேள்விகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும்!’ என்றெல்லாம் தெளிவுபட எடுத்துரைத்தாராம். ஆனால் அதையெல்லாம் அவர் சுத்தமாக மறந்து விட்டார். ஆரம்பம் முதலே பதட்டமாகி விட்டது போல் தான் பேசினார். நிருபர் சந்திப்பில் அது கூடுதலாகவே தெரிந்தது. பல இடங்களில் சினிமா வசனம் போல் பேசுகிறார். அது அரசியலுக்கு நல்லதல்ல. குறிப்பாக துக்கம் விசாரிக்கப் போகும் ஊரில் இத்தனை ரசிகர்கள் அவரைக் காண வந்ததே தப்பு. அது அவருக்கு எதிர்வினையே காட்டும். இதை ரஜினிக்கு அரசியல் ஆலோசனை கொடுத்த அந்த பிரமுகர் தூத்துக்குடி விசிட்டை ரஜினி முடித்துவிட்டு கிளம்பியபோதே போனில் தெரிவித்து விட்டாராம். இதைப் பற்றி நம்மிடம் பேசிய ஒரு பிரமுகர், ‘அரசியலுக்கு தொண்டர்கள் பலமும் முக்கியம். பொது இடத்தில் பேச்சு சாதுர்யமும் முக்கியம். ரசிகர்கள் அரசியல் தொண்டர்களாக மாறுவதில் கூட பல்வேறு சூட்சுமங்கள் இருக்கிறது. அதை இந்த ரஜினியின் தூத்துக்குடி விசிட் சுத்தமாக மாற்றி விட்டது!’ என்று குறிப்பிட்டார்.

http://tamil.thehindu.com/opinion/reporter-page/article24038815.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, நவீனன் said:

யாருடையக் குரலாகப் பேசுகிறார் ரஜினி?

 

 
rajini

படம். | எஸ்.ஏ. மாரிக்கண்ணன்.

‘அப்பா, ரஜினி பேசியதை கேட்டீங்களா?’ பெங்களூரிலிருந்து மகன் போனில் கேட்கிறான். தொடர்ந்து, ‘அத பார்த்து அத்தனை பேரும் திட்டித் தீர்க்கறாங்க. மோடியின் குரலா ரஜினி பேசறதா வறுத்தெடுக்கிறாங்க!’ என்றும் பின் மொழிகிறான். இது என் மகனின் கருத்து மட்டுமல்ல, சமூக வலைத்தளங்களை திறந்தால் அத்தனை பேருமே ரஜினியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

‘சமூக விரோதிகள் போராட்டக்களத்தில் ஊடுருவி விட்டார்கள். அதனால்தான் இந்த உயிர்ப்பலிகள்!’ என்கிறார். ‘போராட்டக்களத்திற்கு மக்கள் வரும்போது ஜாக்கிரதையாக இருக்கணும்!’ என எச்சரிக்கிறார்.‘போலீஸ், உளவுத்துறை செயலிழந்து விட்டது!’ என்பவர், ‘இப்படியே தொழிற் சாலைகளுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்தால் நம் நாட்டுக்கு தொழிற்சாலைகள் எதுவுமே வராது. தொழில் தொடங்க யாருமே வர மாட்டாங்க!’ என்றும் அங்கலாய்க்கிறார். ‘ஏற்கனவே நம் மண்ணில் விவசாயம் முடிஞ்சு போச்சு. இனி தொழிலும், தொழிற்சாலைகளும் இல்லைன்னா என்ன ஆகும்?’ என்றொரு அச்சத்தை மக்கள் முன் விதைக்கிறார். அது மட்டுமா? ‘திமுக, அதிமுக இதுல ரெண்டுமே அரசியல் செய்யறாங்க. அதுல அப்பாவி மக்கள்தான் பலியாகிறாங்க!’என்பவர், ‘முதல்வரை ராஜினமா செய்யச் சொல்லி இன்னமும் ஏன் ரஜினி கேட்கவில்லை!’ என்ற நிருபரின் கேள்விக்கு, ‘அது தேவையில்லை சார். எல்லாத்துக்குமே முதல்வர் ராஜினமா செய்யணும்ன்னா நிலைமை என்னாவது? அது நமக்கு தேவையில்லை!’ என்றும் முரண்படுகிறார்.

 

என்ன அரசியல் இது? யாருடைய குரலாய், யாருக்கான குரலாய் ஒலிக்கிறார் ரஜினி.

அதிகம் எழுதத்தேவையில்லை.....இந்த ஒரு கிறுக்கல் படமே போதும்.

Dedjt5tV0AEjcIs.jpg

  • தொடங்கியவர்

ரஜினி வாய்ஸ் - யாருடையது? யாருக்கானது?

 
 

 

‘‘தூத்துக்குடியில் கலவரம் ஏற்படுத்தியவர்கள் விஷக்கிருமிகள்... சமூக விரோதிகள். தமிழ்நாட்டில் சமூக விரோதிகள் அதிகமாக உள்ளனர். இவர்களை இரும்புக்கரம் கொண்டு அரசு அடக்க வேண்டும். இல்லாவிட்டால், தமிழ்நாட்டுக்கே ஆபத்து. தமிழ்நாட்டில் அடிக்கடி போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. இப்படிப் போராட்டபூமியாக மாறினால், தமிழ்நாட்டுக்கு எந்தத் தொழிலும் வராது. போலீஸைத் தாக்கியவர்களை விடக்கூடாது. போராடிக்கொண்டே இருந்தால் தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும்” என்று பரபரப்பு கிளப்பியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். அவரது கருத்தை எதிர்த்தும் ஆதரித்தும் பல குரல்கள் எழுந்துள்ளன.

பி.ஜே.பி-யும், அ.தி.மு.க-வும் அவர் சொல்வதை ஆதரித்துள்ளன. ‘இது பி.ஜே.பி மற்றும் அ.தி.மு.க-வின் குரல்’ என்று தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். தி.மு.க கூட்டணிக் கட்சிகள் ரஜினியைக் கடுமையாக விமர்சித்துள்ளன. ‘ரஜினி சொல்லும் கருத்து யாருடையது? யாருக்கானது?’ என்று அரசியல் பிரமுகர்களிடம் கேட்டோம். அவர்களின் பதில்:

p44b_1527873312.jpg

நல்லகண்ணு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்

“தூ
த்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடந்ததும் ரஜினி பேசியது வேறு; தூத்துக்குடிக்கு அவர் சென்றபிறகு பேசியது வேறு. நான்கைந்து நாள்களுக்குள் என்ன நடந்தது? அவருக்கு எங்கிருந்து அழுத்தம் வந்தது? அவரது நோக்கம் மாறியது ஏன்? அதற்குப் பின்னால் இருக்கும் சக்திகள் யார் என்பதையெல்லாம் உற்றுக் கவனிக்க வேண்டும். ‘போராடிக்கொண்டே இருந்தால், தமிழகம் சுடுகாடாகிவிடும்’ என்று ரஜினி சொல்கிறார். அந்த நடிகருக்கு அரசியல் பற்றிய தெளிவும் இல்லை; சுற்றுச்சூழல் பற்றிய தெளிவும் இல்லை; தொழில் வளர்ச்சி என்றால் என்ன என்பதும் தெரியவில்லை. இதைத்தான் அவரது பேச்சு காட்டுகிறது. தூத்துக்குடி மக்கள் ஒன்றும் அங்குள்ள துறைமுகத்தை மூடச்சொல்லவில்லை. வேறு பல தொழிற்சாலைகள் எதையும் அவர்கள் மூடச்சொல்லவில்லை. ஸ்டெர்லைட்டை மூடச்சொல்லி இப்போது அல்ல, 20 ஆண்டுகளுக்குமேல் அங்கு போராட்டங்கள் நடக்கின்றன. இரண்டு மாதங்களுக்கு முன்பு, அங்கு அந்த ஆலைக்கு எதிரான போராட்டத்தை நடத்தி நான் கைதுசெய்யப்பட்டேன். தூத்துக்குடியை மட்டுமல்ல, தாமிரபரணி கரைப் பகுதி விவசாயத்தையே அந்த ஆலை அழித்துள்ளது; உயிர்க்கொல்லி நோய்களைத் தந்துள்ளது. தினமும் இந்த நிறுவனத்துக்காக மூன்று கோடி லிட்டர் தண்ணீர் எடுத்து, தூத்துக்குடியை வறட்சி மாவட்டமாக மாற்றியுள்ளனர். எனவேதான், அதை மூடச்சொல்லி மக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் விஷக் கிருமிகள் புகுந்துள்ளனர் என்று ரஜினி சொல்கிறார். அப்படியானால், அவர்களைத்தானே போலீஸ் அடையாளம் கண்டுபிடித்திருக்க வேண்டும். தவிர்க்க முடியாமல் துப்பாக்கிச்சூடு நடத்தியிருந்தாலும், அவர்கள்மீதுதானே அதை நடத்தியிருக்க வேண்டும். துப்பாக்கிச்சூட்டில் இறந்த மாணவியும், மற்றவர்களும் விஷக்கிருமிகளா? இதற்கு ரஜினியிடம் என்ன பதில் இருக்கிறது. அவரைத் தவறாகப் பயன்படுத்தி மக்கள் போராட்டங்களைக் கொச்சைப்படுத்த சிலர் நினைக்கின்றனர். அந்தத் தவறானவர்களையும், அதற்குத் துணைபோகும் ரஜினியையும் மக்கள் அடையாளம் கண்டு அப்புறப்படுத்த வேண்டும்.”

p44_1527873347.jpg

பொன்.ராதாகிருஷ்ணன்
மத்திய இணை அமைச்சர்

‘‘த
மிழகத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியுள்ளார்கள் என்று கடந்த ஒன்றரை வருடங்களாக நான் சொல்லிக்கொண்டே இருக்கிறேன். எங்களுடைய இந்தக் கருத்தைத் தமிழக மக்களும் உணர்ந்துள்ளார்கள். தமிழக மக்களின் இந்த உணர்வைத்தான், ரஜினியும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். ஆனால், தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் அ.தி.மு.க-வும் எதிர்க்கட்சியாக இருக்கும் தி.மு.க-வும் மக்கள் பிரச்னைகளைப் பற்றிப் பேசாமல் இருப்பதற்காக, தங்களுக்குள் ஒரு மறைமுக ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறார்கள். அதன் ஒரு வடிவம்தான், தி.மு.க-வினர் சட்டசபையில் மக்களின் குரலை எதிரொலிக்காமல், அறிவாலயத்தில் உட்கார்ந்துகொண்டு நாடகம் நடத்திக் கொண்டிருப்பது.’’

வைகைச்செல்வன்
அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர்

“ஸ்
டெர்லைட் போராட்டம் 100-வது நாளில் வேறு திசை நோக்கிச் சென்றுவிட்டது. சமூக விரோதிகளால் அறவழிப்போராட்டத்துக்குக் குந்தகம் ஏற்பட்டுவிட்டது. அதைத்தான் ரஜினி சொல்லியிருக்கிறார். பெரும்பாலான பொதுமக்களின் கருத்தும் இதுதான். ரஜினி எங்களுக்காகப் பேச வேண்டியதில்லை. அவர், தனி அமைப்பு நடத்துகிறார். தனிக்கட்சி ஆரம்பிக்கப்போவதாகச் சொல்கிறார்கள். அவர் சொல்வதை எப்படி அ.தி.மு.க-வின் வாய்ஸ் என்று சொல்ல முடியும். ‘உளவுத்துறையின் தோல்வியே போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவக் காரணம். ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை’ என்று அ.தி.மு.க அரசுக்கு எதிரான கருத்துகளையும் ரஜினி சொல்லியிருக்கிறார். ஆனால், அவர் சொன்ன ‘சமூக விரோதிகள்’ என்ற வார்த்தையை மட்டும் எடுத்துக்கொண்டு, எதிர்க்கட்சியினர் அரசியல் லாபத்துக்காகக் கூச்சல் போடுகிறார்கள். இதெல்லாம் எடுபடாது. ரஜினியின் பேச்சை நடுநிலையாளர்கள் கருத்தாகவே பார்க்கிறேன்.’’ 

p44a_1527873377.jpg

ரவிக்குமார்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர்

“து
ப்பாக்கிச்சூடு நடைபெற்ற மே 22-ம் தேதி, தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் வெளியிட்ட பதிவுக்கும், மே 30-ம் தேதி அவர் பேசியதற்கும் முரண்பாடுகள் உள்ளன. போலீஸை மிகக் கடுமையாகக் கண்டித்துவிட்டு, ‘அரசுதான் பொறுப்பு’ என்று அன்று சொன்ன ரஜினி, இப்போது, ‘சமூக விரோதிகள்தான் பொறுப்பு’ என்று கூறுகிறார். அப்படியானால், அரசைத்தான் சமூக விரோதி என்று சொல்கிறாரா? ‘பிரச்னை வந்தால் நீதிமன்றத்தில் தீர்வுகாண வேண்டும்’ என்று ரஜினிகாந்த் சொல்கிறார். கடந்த 24 ஆண்டுகளாக, ஸ்டெர்லைட் தொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும், பசுமை தீர்ப்பாயத்திலும் மக்கள் நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். உச்ச நீதிமன்றம் சொன்னதைக்கூட தமிழக அரசு நிறைவேற்றவில்லை. நீதிமன்றத்தின் ஆணைப்படி, டெபாசிட் செய்யப்பட்ட 100 கோடி ரூபாய்க்கு சுமார் 50 கோடி ரூபாய் வட்டி சேர்ந்துள்ளது. அந்தப் பணத்தை அந்தப்பகுதியின் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக, சுகாதார மேம்பாட்டுக்காக மாவட்ட ஆட்சித்தலைவர் செலவிடவில்லை. இது நீதிமன்ற அவமதிப்பு. ‘நீதிமன்றத்தை அவமதித்தவர்களும் மக்களைப் பற்றி அக்கறை காட்டாதவர்களும் சமூக விரோதிகளா, அல்லது தங்களது உயிருக்காகப் போராடிய அப்பாவி மக்கள் சமூக விரோதிகளா?’ என்பதை ரஜினி தெளிவுபடுத்த வேண்டும். தூத்துக்குடியில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து அந்த மக்களின் குரலை ஆட்சியாளர்களுக்கு அவர் எடுத்துச்சொல்வார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அவரோ ஸ்டெர்லைட் கம்பெனியின் குரலாக ஒலித்திருக்கிறார். இது மிகவும் வருத்தத்துக்குரியது.’’

மருது அழகுராஜ்
ஆசிரியர், ‘நமது புரட்சித் தலைவி அம்மா’ நாளேடு

‘‘வி
ஷக்கிருமிகளான சமூக விரோதிகளை ஜெயலலிதா ஒடுக்கினார் என்பதை ரஜினி மனம்திறந்து பாராட்டியிருப்பது வரவேற்கத்தக்கது. ஸ்டெர்லைட் எதிர்ப்புக் கலவரம் குறித்துத் தமிழக முதலமைச்சர் எந்தக்கருத்தை முன்வைத்தாரோ, அதையே வழிமொழிந்து, சமூக விரோதிகள் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்ததால்தான், அது வன்முறை வெறியாட்டமாக வடிவம் எடுத்தது என்று ரஜினியும் எடுத்துரைத்திருப்பது வரவேற்கத்தக்கது. தூத்துக்குடி போன ரஜினிகாந்த், எப்போதுமே வன்முறைக்கு எதிரான இயக்கம் அ.இ.அ.தி.மு.க என்பதை வழிமொழிந்திருப்பதும், ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட சமூக விரோதிகள் யார் என்பதை, கருத்து ஜாடை காட்டி அம்பலப்படுத்தியிருப்பதும், மனச்சாட்சி குன்றாது மக்களிடமும் பத்திரிகையாளர்களிடமும் ரஜினிகாந்த் பேசியிருப்பதும் வரவேற்கத்தக்கது.”

p44d_1527873408.jpg

சரத்குமார்
ச.ம.க தலைவர்

“போ
ராட்டம்தான் வாழ்க்கை. போராடக்கூடாது என யாரையும் சொல்ல முடியாது. ஆனால் ரஜினிகாந்த், ‘போராட்டங்கள் நடத்தினால், தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும்’ என்கிறார். அப்படியென்றால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இல்லை என்று அவர் கூறுகிறாரா? மக்கள் போராட உரிமை இல்லை என அவர் கூறுகிறாரா? நம் அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்ட பேச்சுரிமையைப் பறிக்க நினைக்கிறாரா அவர்? பிரச்னையைச் சரிசெய்வதை விட்டுவிட்டு, மக்களைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யக் கூடாது. சமூக விரோதிகள், விஷக்கிருமிகள் என்ற ரஜினியின் பேச்சு, மக்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளது. அவர்மீது உடனடியாக தேசத்துரோக வழக்கு பதிய வேண்டும். ‘சமூக விரோதிகள் ஊடுருவல்’ என்று ரஜினி கூறியிருப்பது பி.ஜே.பி-யின் எதிரொலியாகவே இருக்கிறது.”

செ.கு.தமிழரசன்
இந்திய குடியரசுக் கட்சி

“ர
ஜினியின் இந்தக் கருத்து மிகவும் யதார்த்தமானது. அவரைச் சந்தித்து தமிழக அரசியல் சூழல் குறித்துப் பேசியிருக்கிறேன். அவரைப்பற்றி நன்கு தெரிந்த காரணத்தினால், என் பார்வையில் அது யதார்த்தமாகத் தெரிகிறது. ‘சமூக விரோதிகள் ஊடுருவல்’ என்று அவர் கூறிய கருத்து, எப்படித் தவறானதாக இருக்க முடியும்? சமூக விரோதிகள் என்ற வார்த்தை, தமிழக அரசியலுக்கு என்ன புதிதா? அல்லது இந்திய அரசியலுக்குத்தான் புதிதா? ‘மக்களின் அந்த உணர்வுமிக்க போராட்டத்தில், சமூக விரோதிகள் ஊடுருவியதால் இப்படியான பிரச்னை ஏற்பட்டது’ என்று அவர் பேசியதில் என்ன தவறு உள்ளது? அதில் எந்த அரசியல் வண்ணமும் இல்லை. யாரையும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமும் அதில் இல்லை. இதற்கு அரசியல் சாயம் பூசுவது அபத்தமானது.”

p44e_1527873434.jpg

நாஞ்சில் சம்பத்

“தூ
த்துக்குடி மக்களின் தன்னெழுச்சிப் போராட்டத்தில், 13 உயிர்களைப் பலிகொடுத்த பிறகே ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. அந்த ஆலை மீண்டும் திறக்கப்படும் என்று அதன் அதிபர் கூறுகிறார். இந்த வலையில் திமிங்கலங்கள் சிக்கிக்கொண்டிருக்கின்றன என்பதே உண்மை. வாழ்வுரிமைக்காக நடக்கும் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவது, தத்துவத்தின்மீது தொடுக்கப்படும் போர். போராட்டத்தில்தான் வாழ்க்கையே புதைந்து கிடக்கிறது. வங்கக்கடல் ஓரம் மூன்று லட்சம் இளைஞர்கள் திரண்டு போராடியதால்தான் மத்திய, மாநில அரசுகள் பணிந்தன. ஜல்லிக்கட்டு நடத்த ஆணை வந்தது. இப்படிப்பட்ட போராட்டங்களைக் கொச்சைப்படுத்தியதன் மூலம் பல லட்சம் இளைஞர்களின் உணர்வுகளை ரஜினி காயப்படுத்திவிட்டார். போராட்டத்தில் கலந்துகொண்ட தம்பிமார்கள், இவருடைய பேட்டியைப் பார்த்து நெஞ்சுடைந்து போனார்கள். ஆபத்து என்று அலறுவதும், சுடுகாடு என்று அரற்றுவதும், சமூகத்தைச் சீரழித்தவரே சமூக விரோதிகள் என்று சொல்வதும் இந்தச் சமூகத்துக்கு விடப்பட்டுள்ள அறைகூவல். அகிம்சையை ஆயுதமாக ஏந்திப் போராடிய அண்ணல் காந்தியடிகள் ரஜினியின் பேட்டியைக் கேட்டுவிட்டுக் கல்லறையில் புரண்டு படுத்திருப்பார்.”
 
அ.மார்க்ஸ்
எழுத்தாளர்

“ர
ஜினி இப்படிப் பேசாமல் இருந்திருந்தால்தான் வியப்பு. ‘தொழிலாளர்கள்’, ‘விவசாயிகள்’, ‘போராட்டங்கள்’ முதலான சொற்கள் கெட்டவார்த்தைகள் ஆகிவிட்ட ஒரு கார்ப்பரேட் உலகின் அரசியலைப் பேசுகிறவர்கள்தான், ரஜினியும் கமலும். இவர்கள் பேசுவது அரசியல் அல்ல; ‘எதிர் அரசியல்’. மக்கள் என்போரை உரிமைகளுக்காகப் போராடுகிறவர்களாக அல்லாமல், தங்கள் போஸ்டர்களுக்குப் பாலூற்றி வணங்கும் ரசிகர்களாகவே பார்த்துப் பழக்கப்பட்டவர்கள். ‘இனி தமிழகத்துக்குக் காவிரித் தண்ணீர், விவசாயம் எல்லாம் கிடையாது. இனி கார்ப்பரேட்கள் கடைவிரிப்பதற்கான களம்தான், தமிழ்நாடு. அவர்களைக் கும்பிட்டு வாழ்ந்துகொள்ளுங்கள். அவர்களின் பிரதிநிதியாக நான் இருக்கிறேன்’ என்பதுதான் ரஜினி சொன்ன சேதி. திராவிட, பொதுவுடைமை இயக்கங்களைக் கண்மூடித்தனமாக எதிர்ப்பவர்கள் ரஜினிக்கே வலுச்சேர்க்கின்றனர்.”

p44f_1527873464.jpg

பாலபாரதி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

“மு
ழுக்க முழுக்க மத்திய பி.ஜே.பி அரசின், மாநில அ.தி.மு.க அரசின் குரலாகவே ரஜினியின் குரல் ஒலிக்கிறது. மக்களின் போராட்டத்தைச் சமூக விரோதம் என்பது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. புதிதாக அரசியலுக்கு வரப்போகிறார் என்றபோது, இந்த சிஸ்டம் சரியில்லை என்று அவர் கூறினார். இப்போதோ, அவரின் கருத்துகள் ஆள்வோருக்கும் கார்ப்பரேட்களுக்கும் ஆதரவாக இருக்கின்றன. ‘இத்தனை நாள் எங்கே போனீர்கள்’ என்று தூத்துக்குடியில் கேட்ட இளைஞருக்கு இவரால் பதில்கூற முடியவில்லை. வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதாகத் தனக்கு உள்ள பிரபலத்தைப் பயன்படுத்தி, ‘தமிழ்நாடு சுடுகாடாக மாறும்’ என நச்சுக் கருத்துகளை விதைக்கிறார். திரைப்படத்தில் மட்டும் நடித்துவந்தவர், இப்போது மக்களிடமும் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.”

சுப.உதயகுமார்
பச்சைத் தமிழகம் கட்சித் தலைவர்

“ச
மூக விரோதிகள் வந்ததாகச் சொல்லும் இவர், தகவல் தெரிந்தவுடன் உடனே போலீஸுக்கு அல்லவா சொல்லியிருக்க வேண்டும்? யார் அந்த சமூக விரோதிகள், எத்தனை பேர் என்ற விவரங்களைச் சொல்லாமல், கமுக்கமாக உட்கார்ந்திருந்தால், சட்டப்படி இவர் ஒரு குற்றவாளி. மக்களுக்கு ஆதரவாக இருக்கிற மாதிரி பேசி, அந்த மக்களையே கொச்சைப்படுத்தும் வலதுசாரி அரசியலைச் செய்கிறார். இது வடிகட்டிய பாசிச அரசியல்! தமிழ் மக்கள் மத்தியில் பி.ஜே.பி இடம்பிடிக்க முடியாது என்பதால், இங்கு மக்களிடம் உள்ள திரைமோகத்தைப் பயன்படுத்தி, மறைமுகமாக வலதுசாரி அரசியலைப் புகுத்த உள்வேலை செய்கிறார்கள்.

p44ee_1527873495.jpg

ஹென்றி டிபேன்
மனித உரிமைச் செயற்பாட்டாளர்

“பா
திக்கப்பட்ட பகுதிகளுக்கு அவர் போகவில்லை. மருத்துவமனையில் சிலரைப் பார்த்துவிட்டு வந்திருக்கிறார். எந்த அடிப்படையில் இவர் கருத்துச் சொல்கிறார்? காவல்துறையால் சித்திரவதை செய்யப்பட்ட மக்களைப் பார்த்தாரா? சட்டத்துக்குப் புறம்பாக அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களைப் பார்த்தாரா? இறந்துபோனவர்களின் குடும்பத்தினரைப் பார்த்துவிட்டு வந்திருக்கிறாரா? ஊர்வலத்தில் கலெக்டர் அலுவலகத்தின் முன்பு வாசலில் வெறும் நான்கு பேர் மட்டும் நிற்கக்கூடிய போட்டோக்களைப் பார்த்திருக்கிறாரா? எந்தப் பிரச்னையிலும் கேள்வி கேட்பவர்கள் தீயசக்திகள், வெளிசக்திகள் என்றால் நாட்டில் பாதிப்பேர் தீயசக்திகள்தான். அரசியலுக்கு வரவேண்டும் என இருப்பவர் பேசும் பேச்சா இது?’’

https://www.vikatan.com

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

34343832_1390898124388264_53947376611958

  • தொடங்கியவர்

ரஜினி இயங்குகிறாரா? இயக்கப்படுகிறாரா?

SK-02Page1Image0003-e53282a7924dd338a7f9cfdc22e04308621fd659.jpg

 

நல்லதம்பி நெடுஞ்செழியன்   

ரஜினி சுய­மாக இயங்­கு­கிறாரா? இயக்­கப்­ப­டு­கிறாரா ? இயக்­கப்­ப­டு­கி­றா­ரென்றால் அவர் பின்­னா­லி­ருந்து இயக்கு­வது யார் ? எதற்­காக இயக்­கப்­ப­டு­கின்றார்? என்­றெல்லாம் கேள்­விகள் எழுப்­பப்­பட்­டாலும், அவரை இயக்கும் சக்தி யாரென்­பது வெளிப்­ப­டை­யா­னது.

ரஜி­னியின் பேச்­சு­களும் செயற்­பா­டு­களும் இதனை உறு­திப்­ப­டுத்­து­வ­தாக இருக்­கின்­றன. அதனை மென்­மேலும் உறு­திப்­ப­டுத்தும் வகையில் அவர் சில தினங்­க­ளுக்கு முன்னர் தூத்­துக்­கு­டிக்கு மேற்­கொண்ட விஜ­யமும் அங்கு அவர் எதிர்­கொண்ட எதிர்ப்­புக்­களும் அவர் தெரி­வித்த கருத்­துக்­களும் அமைந்­துள்­ளன.

கடந்த 30 வரு­ட­கா­ல­மா­கவே அர­சி­யலில் ஈடு­படப் போவ­தாக தெரி­வித்­து­வரும் ரஜினி இது­வரை கட்­சியை அமைக்­க­வில்லை, கட்­சிக்குப் பெயர் வைக்­கவும் இல்லை. அண்­மைக்­கா­ல­மாக ரஜினி "மக்கள் மன்றம்" என்ற ஒரு அமைப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­துடன் அவ்­வப்­போது தமி­ழக அர­சையும் அரசின் செயற்­பா­டு­க­ளையும் அமைச்­சர்­க­ளையும் விமர்­சனம் செய்து வரு­வ­தையே வழக்­க­மாக கொண்­டி­ருக்­கிறார்.

எதிர்­வரும் தமி­ழக சட்­டப்­பே­ரவைத் தேர்­தலில் அனைத்துத் தொகு­தி­க­ளிலும் போட்­டி­யிட்டு ஆட்­சியைப் பிடிக்­கப்­போ­வ­தா­கவும் தனது ஆட்சி 'ஆன்­மிக'ஆட்­சி­யா­கவே இருக்கும் என்றும் தெரி­வித்­தி­ருந்தார். ஆன்­மிக ஆட்சி என்­ப­தற்கு அவர் இது­வரை சரி­யான விளக்­க­ம­ளிக்­க­வில்லை .

இந்­தியா ஒரு மத­சார்­பற்ற நாடு. இந்­துக்கள் அதி­க­மாக வாழ்ந்­தாலும் குறிப்­பி­டத்­தக்க அளவில் முஸ்­லிம்­களும் ,கிறிஸ்­த­வர்­களும், சீக்­கி­யர்­களும் வாழ்­கின்­றனர். இவர்­களில் எவ­ரையும் ஒதுக்­கி­விட்டு ஆட்­சியைப் பிடிக்­கவோ அல்­லது ஆட்சி நடத்­தவோ முடி­யாது. ஒன்­றுடன் ஒன்­றாகப் பிண்ணிப் பிணைந்­துள்­ளன.

தமி­ழ­கத்தைப் பொருத்­த­வ­ரையில் சகல மதத்தைச் சேர்ந்த மக்­களும் சமா­தா­ன­மாக ஒற்­று­மை­யாக, சகோ­த­ரத்­து­வத்­துடன் வாழ்­கின்­றனர். இந்­தி­யாவில் வேறு எந்த மாநி­லத்­திலும் இல்­லாத மத ஐக்­கியம் தமி­ழ­கத்தில் காணப்­ப­டு­கி­றது. கடந்த காலங்­களில் இந்த ஐக்­கி­யத்தை சீர்­கு­லைப்­ப­தற்கு இந்­துத்வா அமைப்­புக்கள் தீவிர முயற்­சி­களை .மேற்­கொண்­டன. அது மத ரீதி­யி­லான சாதி ரீதி­யி­லான வன்­மு­றை­களைத் தூண்டும் முயற்­சி­யாக இருந்­த­போதும் அது எடு­ப­ட­வில்லை.

இவ்­வா­றான நிலையில் ' ஆன்­மிக'அர­சி­யலைக் கொண்டு வரப்­போ­வ­தாக அறி­வித்­ததன் மூலம் எவ்­வா­றான ஆட்­சியைக் கொண்­டு­வ­ரப்­போ­கிறார் ரஜினி? என்ற கேள்வி எழுந்து அது மக்கள் ஐக்­கி­யத்தைக் சீர்­கு­லைக்­காதா? பிரச்­சி­னை­களை உரு­வாக்­காதா? என்று சகல தரப்­பி­னரும் கேள்வி எழுப்­பி­யி­ருந்­தனர்.

ஒரு தெளி­வான கொள்கை என்று எதுவும் இல்­லாமல் ஆட்­சியைப் பிடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்­கத்­துடன் மட்டும் ரஜினி செயற்­ப­டு­வ­தாக சமூக ஆய்­வா­ளர்கள் ஏற்­க­னவே சுட்­டிக்­காட்டி வந்­துள்­ளனர்.

தூத்­துக்­குடி சம்­பவம் பற்றி சகல தரப்­பி­னரும் ஒரு ஒத்தக் கருத்­தினைக் கொண்­டி­ருக்கும் நிலையில், ரஜினி மற்றும் அவர் சார்ந்­தி­ருக்கும் அமைப்­புக்­களைச் சேர்ந்­த­வர்கள் மாத்­திரம் அதற்கு எதிர்­மா­றான கருத்­துக்­களை தெரி­வித்­தி­ருப்­பது அனை­வ­ரையும் அதிர்ச்­சி­யிலும் ஆச்­ச­ரி­யத்­திலும் மூழ்­க­டித்­துள்­ளது.

தூத்­துக்­கு­டியில் 13 பேர் கொல்­லப்­பட்­ட­மையும் நூற்­றுக்­க­ணக்­கானோர் தாக்­கு­த­ளுக்­குள்­ளாகி பாதிக்­கப்­பட்­டி­ருப்­பதும் பொது மக்­க­ளுக்கு எதி­ரான மிக மோச­மான செயற்­பாடு எனவும் அப்­பட்­ட­மான மனித உரிமை மீறல் செயல்­பாடு எனவும் குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கின்­றது. எதிர்க்­கட்­சிகள் பொது அமைப்­புக்கள், மனித உரிமை அமைப்­புக்கள் என அனைத்துத் தரப்­பி­னரும் பொலி­ஸாரின் இந்த செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ரான கண்­ட­னங்­களை வெளி­யிட்டு வரு­கின்­றனர்.

எனினும் பொலி­ஸாரின் இந்த செயற்­பா­டு­களை நியா­யப்­ப­டுத்தி பா.ஜ.கவின் தலை­வர்­க­ளான எச். ராஜா, தமி­ழிசை சௌந்­த­ர­ராஜன், பொன்.இரா­தா­கி­ருஸ்ணன் போன்­றோரும் தமி­ழ­கத்தின் அ.தி.மு.க அர­சியல் வாதிகள் சிலரும் கருத்து வெளி­யிட்­டி­ருந்­தனர்.

தற்­போது அதே பாணியில் நடிகர் ரஜி­னியும் கருத்து தெரி­வித்­தி­ருப்­பது தமி­ழக மக்­க­ளி­டையே அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அரசின் செயற்­பா­டு­களை அதா­வது பொலி­ஸாரின் நட­வ­டிக்­கையை நியா­யப்­ப­டுத்தும் வகையில் ரஜினி பேசி­யி­ருப்­பது தான் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

தூத்­துக்­குடி சம்­பவம் நடை­பெற்று ஒரு வாரத்தின் பின்னர் நிலை­மை­களை பார்­வை­யிட ரஜினி அங்கு சென்றார். பாதிக்­கப்­பட்ட மக்­களை சந்­தித்த அவ­ரிடம் மக்கள் கேட்ட கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்க முடி­யாமல் திணறிப் போயி­ருக்­கிறார். எல்­லா­வற்­றுக்கும் மேலாக நலம் விசா­ரித்த ரஜி­னி­யிடம் "நீங்கள் யார்? எங்­கி­ருந்து வரு­கி­றீர்கள்? “ என்று முகத்தில் அடித்தாற் போல் கேள்வி கேட்ட தூத்­துக்­குடி இளை­ஞனின் ஆதங்­கமும் வெறுப்பும் ரஜி­னியை நன்­றா­கவே அதிர்ச்­சி­ய­டையச் செய்­துள்­ளது என்­பதை மறுக்­க­மு­டி­யாது.

சென்ற இடத்­தி­லெல்லாம் மக்கள் கேட்ட கேள்­வி­க­ளாலும் காட்­டிய வெறுப்­புக்­க­ளாலும் அதிர்ச்­சியும் கோப­மு­ம­டைந்த ரஜி­னிகாந்த் அதனை பின்னர் பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளிடம் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார் அப்­போது பத்­தி­ரி­கை­யா­ளர்­களின் கோபத்­துக்­குள்­ளா­னதும் உண்மை.

பொது­வாக தங்­க­ளது உரி­மை­க­ளுக்­கா­கவும் தேவை­க­ளுக்­கா­கவும் நல்ல விட­யங்­க­ளுக்­கா­கவும் வீதியில் இறங்கி போராடும் மக்­களை தீவி­ர­வா­திகள், பயங்­க­ர­வா­திகள், சமூக விரோ­திகள் என்று அர­சாங்­கங்கள் குற்­றஞ்­சாட்டி வரு­வது புதிய விட­ய­மல்ல. இது சகல நாடு­க­ளிலும் நடந்­து­வரும் விட­ய­மாகும். ஆட்­சி­யி­லி­ருக்கும் கட்­சி­களின் மக்கள் விரோத செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ராக எதிர்க்­கட்­சிகள் போராட்டம் நடத்­தும்­போது அதனை தேச விரோத செயற்­பா­டுகள் என ஆளும்­கட்சி குற்­றஞ்­சாட்­டு­வதும் பின்னர் எதிர்க்­கட்சி ஆட்­சிக்கு வந்­ததும் அதே குற்­றச்­சாட்­டுக்­களை தெரி­விப்­பதும் வழக்­க­மாகும்.

தமிழ் நாட்டைப் பொறுத்­த­வ­ரையில் ஆரம்பம் முதற்­கொண்டே பா.ஜ.க மீது மக்­க­ளுக்கு நல்­ல­பிப்­பி­ராயம் இல்லை. பா.ஜ.க.வின் செயற்­பா­டுகள் இந்­துத்வா ஆதிக்கம், சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ரான செயற்­பா­டுகள், திரா­விடக் கட்­சி­களை ஒழிக்க வேண்­டு­மென்ற பிர­சாரம் உள்­ளிட்ட பல விட­யங்கள் இதற்குக் கார­ண­மாக இருக்­கின்­றன.

எனவே அண்மைக் கால­மாக பா.ஜ.கவினர் "தமி­ழகம் பயங்­க­ர­வா­தி­களின் கூடா­ர­மாக மாறிக் கொண்­டி­ருக்­கி­றது" என்று தெரி­வித்து வரு­கின்­றது. அவ்­வா­றா­ன­வர்­களை அடை­யாளம் கண்­டுள்­ள­தாக தெரி­வித்து வரும் அதே­வேளை அவர்­களை பகி­ரங்­க­மாக வெளிப்­ப­டுத்­து­வ­தையும் தவிர்த்து வரு­கி­றது. இத­னையே தமி­ழ­கத்தில் இடம்­பெறும் போராட்­டங்­களின் போதெல்லாம் தெரி­வித்து வரு­கி­றது.

இது ஒரு­பு­ற­மி­ருக்க மக்­களின் உரி­மை­க­ளுக்­கா­கவும் தேவை­க­ளுக்­கா­கவும் தமி­ழக வாழ்­வு­ரி­மைக்­க­ழகத் தலைவர் வேல்­மு­ருகன் நாம் தமிழர் கட்­சித்­த­லைவர் சீமான் மே- 17 அமைப்பின் தலைவர் திரு­மு­ருகன் காந்தி உள்­ளிட்ட பலர் போராட்­டங்­களை நடத்தி வரு­கின்­றனர்.

மக்­க­ளுக்­காக போராடும் இது­போன்ற தலை­வர்கள் தூத்­துக்­குடி கல­வர பூமி சென்று பார்­வை­யிட அனு­மதி கோரி­ய­போது அதற்கு அரசு அனு­மதி வழங்­க­வில்லை. அதே­வேளை ரஜி­னி­காந்­துக்கு அர­சாங்கம் தூத்­துக்­குடி செல்ல அனு­மதி வழங்­கி­யது. வேல்­மு­ரு­கனும் சீமானும் மக்கள் பிர­தி­நி­தி­யா­கவே தூத்­துக்­குடி செல்ல அனு­மதி கேட்­டனர். ஆனால் ரஜினி, மக்கள் பிர­தி­நி­தி­யாக தூத்­துக்­குடி சென்­றாரா? அல்­லது அரசின் பிர­தி­நி­தி­யாக தூத்­துக்­குடி சென்­றாரா? என்ற கேள்வி எல்­லோ­ரி­டமும் எழுந்­தது.

அர­சின்­மீது கோபமும் அதி­ருப்­தியும் கொண்­டுள்ள தூத்­துக்­குடி மக்­க­ளிடம் அரசு பொலி­ஸாரின் செயற்­பா­டு­களை நியா­யப்­ப­டுத்­தவும் அர­சுக்கு எதி­ரான தப்­பான அபிப்­பி­ரா­யத்தை இல்­லாமல் செய்­வ­தற்­குமே ரஜினி அங்கு அனுப்­பப்­பட்டார். ரஜினி சென்று சொன்னால் அதனை மக்கள் ஏற்­றுக்­கொள்­வார்கள் என்ற திட்­டத்­து­ட­னேயே அனுப்­பப்­பட்டார். ஆனால் அங்கு நடந்­ததோ வேறு! மக்கள் ரஜி­னியை நிரா­க­ரித்­தனர். எதிர்ப்­பையே எதிர்­கொண்டு ரஜினி சென்னை திரும்­பினார்.

ஜல்­லிக்­கட்டு போராட்டம் நடை­பெற்ற போது அது தீவி­ர­ம­டை­வ­தற்கு சமூக விரோ­தி­களே காரணம் என்று தெரி­வித்­தி­ருந்த ரஜினி தற்­போது தூத்­துக்­கு­டியில் மக்கள் நடத்­திய போராட்டம் தாக்­கு­தலில் முடி­வ­டை­வ­தற்கும் சமூக விரோ­தி­களே காரணம் என்று கூறி­யி­ருக்­கிறார்.

தூத்­துக்­கு­டியில் ஸ்டெர்லைட் தொழிற்­சா­லையை எதற்­காக மூடும்­படி போராட்டம் நடத்­தி­னார்கள். அந்­தப்­போ­ராட்டம் ஏன் நடத்­தப்­பட்­டது என்­பதைப் பற்­றி­யெல்லாம் ரஜினி சிந்­திக்­க­வில்லை. இறு­தியில் 100நாட்­களின் நிறைவில் போராட்டம் எதற்­காக உச்­சிக்­கட்­டத்தை அடைந்­தது என்­பது பற்­றியும் பொது­மக்கள் மீது துப்­பாக்கிப் பிர­யோகம் செய்­யும்­படி உத்­த­ர­விட்­ட­வர்கள் பற்­றியும் ரஜினி சிந்­திக்­க­வில்லை. பொலிஸார் மீது தாக்­குதல் நடத்­தி­யது பற்­றியும் சமூக விரோ­திகள் செயற்­பா­டு­களே காரணம் என்றும் கூறி­யி­ருக்­கிறார்.

எடுத்­த­தற்­கெல்லாம் போராட்டம் நடத்­தினால் தமிழ்­நாடே சுடு­காடு ஆகி­விடும் என்று பேசி­யி­ருக்­கிறார். மக்கள் எதற்­காக போராட்டம் செய்­கி­றார்கள்? அவர்­க­ளது தேவை என்ன? அவர்­க­ளுக்கு எதைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் உணராத ரஜினியால் எவ்வாறு மக்களுக்கு தலைமை கொடுக்கமுடியும்? ஒரு மாநிலத்துக்கு எப்படி தலைமை தாங்கமுடியும் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் திராவிடக் கொள்கையில் ஊரிப்போன தமிழக மக்களை திசைத் திருப்புவதற்கு வடஇந்தியாவின் இந்துத்வா ஆதிக்க சக்திகளும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. போன்ற கட்சிகளும் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன. ஜெயலலிதா மறைவின் பின்னர் அ.தி.மு.க. ஊடாக அதற்கான முயற்சிகள் மேற்கொண்டதும் அது வெற்றியளிக்கவில்லை. இவ்வாறானதொரு நிலையில் திரைப்படத்தின் மூலம் தமிழக மக்களிடையே பிரபலம் பெற்றுள்ளவரும் தமது கொள்கைக்கு சார்பானவருமான ரஜினிகாந்தை முன்னிலைப்படுத்தி குறித்த சக்திகள் தமது திட்டத்தை செயற்படுத்த முனைவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ரஜினியை இயக்கும் சக்திகளின் திட்டத்தை ரஜினி செயற்படுத்த முனைகின்றாரா? அந்தத் திட்டத்துக்கு தமிழக மக்கள் ஒத்துழைப்பார்களா? என்பதை காலமே தீர்மானிக்கும்.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-06-03#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.