Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதலாவது T20 சர்வதேசப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு 45 ஓட்டங்களால் வெற்றி.

Featured Replies

முதலாவது T20 சர்வதேசப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு 45 ஓட்டங்களால் வெற்றி.

Bild könnte enthalten: eine oder mehrere Personen und im Freien

முதலாவது T20 சர்வதேசப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு 45 ஓட்டங்களால் வெற்றி.
போட்டியின் சிறப்பாட்டக்காரர் ரஷீத் கான்.

https://www.facebook.com/SooriyanFMSriLanka/

  • தொடங்கியவர்

முதல் டி20 - வங்காளதேச அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்

 
அ-அ+

உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் நடைபெற்ற டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணியை வீழ்த்தியது. #AFGvsBAN #RashidKhan

 
முதல் டி20 - வங்காளதேச அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்
 
 
டேராடூன்:
 
வங்காளதேசம் - ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்று தொடங்கியது. முதல் போட்டி உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
 
201806040025151937_1_DexgIKIXkAElwHG._L_styvpf.jpg
 
இதையடுத்து வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மொகமது ஷசாத், உஸ்மான் கனி ஆகியோர் களமிறங்கினர். கனி 26 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ருபெல் பந்தில் போல்டானார். அவரைத்தொடர்ந்து அஸ்கார் ஸ்டானிக்சாய் களமிறங்கினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஷசாத் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து வந்த நஜிபுல்லா சத்ரான் 2 ரன்னிலும், மொகமது நபி டக் அவுட்டும் ஆகினார். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 91 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது.
 
அதன்பின் ஸ்டானிக்சாய் உடன் சமியுல்லா ஷென்வாரி ஜோடி சேர்ந்தார். ஷென்வாரி 36 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஷபிகுல்லா ஷபிக் அதிரடியாக விளையாடி 8 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஸ்டானிக்சாய் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. வங்காளதேச அணி பந்துவீச்சில் அபுல் ஹசன், மஹ்மதுல்லா ஆகியோர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.
 
 
201806040025151937_2_Dex8sPkUEAANmU9._L_styvpf.jpg
 
அதைத்தொடர்ந்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தமிம் இக்பால், லிட்டன் தாஸ் ஆகியோர் களமிறங்கினர். தமிம் முஜீப் வீசிய முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து ஷகிப் அல் ஹசன் களமிறங்கினார். அவர் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடி வந்த லிட்டன் தாஸ் 30 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
 
அதன்பின் களமிறங்கிய முஷ்பிகுர் ரஹிம் 20 ரன்னிலும், மஹ்மதுல்லா 29 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதைத்தொடர்ந்து வந்த வீரர்கள் ஆப்கானிஸ்தான் அணியினரின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் வங்காளதேச அணி 19 ஓவர்களில் 122 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில் ஷபூர் சத்ரான், ரஷித் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்களும், மொகமது நபி 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 
 
201806040025151937_3_J3QVOtVi._L_styvpf.jpg
 
இதன்மூலம் 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஆப்கானிஸ்தான் அணியின் ரஷித் கான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை நடக்கிறது. #AFGvsBAN #RashidKhan

https://www.maalaimalar.com/News/TopNews/2018/06/04002515/1167645/Bangladesh-beat-Afghanistan-by-45-runs-in-First-T20.vpf

  • தொடங்கியவர்

ரஷித் கானின் சிறப்பான பந்துவீச்சால் வங்காளதேசத்தை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றியது ஆப்கானிஸ்தான்

 
 
 
 
ரஷித் கானின் சிறப்பான பந்துவீச்சால் வங்காளதேசத்தை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றியது ஆப்கானிஸ்தான்
 
டேராடூன்:
 
வங்காளதேசம்- ஆப்கானிஸ்தான் இடையே மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நடந்த முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது.
 
இந்நிலையில், இரண்டாவது டி20 போட்டி நேற்று டேராடூனில் நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
 
அந்த அணியின் தமிம் இக்பால் 43 ரன்னிலும், முஷ்பிகுர் ரகுமான் 23 ரன்னிலும்,  அபு ரைடர் ரோனி 21 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் விரைவில் அவுட்டாகினர்.
 
இதனால் வங்காளதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது.
 
ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 4 விக்கெட்களும், மொகமது நபி 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
 
இதையடுத்து, 135 ரன்களை இலக்காக கொண்டு ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஆடிய மொகமது ஷசாத் 24 ரன்களும், உஸ்மான் கனி 21 ரன்களும் எடுத்து அவுட்டாகினர்.
 
அடுத்து இறங்கிய சாமுல்லா ஷென்வாரி அதிரடியாக ஆடி 3 சிக்சர், 2 பவுண்டரியுடன் 49 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
 
இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 18.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மொகமது நபி 15 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
 
இதைத்தொடர்ந்து, வங்காள தேசத்துடனான டி-20 தொடரை ஆபகானிஸ்தான் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி, முன்னிலை வகிக்கிறது. #Afghanistan #Bangladesh #T20

https://www.maalaimalar.com/News/Sports/2018/06/06025605/1168116/Afghanistan-won-the-series-against-bangladesh.vpf

  • தொடங்கியவர்

 

 

Afghanistan vs Bangladesh Highlights || 1st T20 || 2018

 

Afghanistan vs Bangladesh Highlights || 2nd T20 || 2018

  • தொடங்கியவர்

5 பந்தில் 3 விக்கெட்டுகள் அள்ளிய ரஷித்கான்: வங்கதேசத்தை விரட்டி டி20 தொடரை வென்ற ஆப்கன்

 

 
rasid

ரஷித்கானின் மாயஜால சுழற்பந்துவீச்சால், வங்கதேசம் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றி அசத்தியது ஆப்கானிஸ்தான் அணி. டேராடூனில் நேற்று இந்த போட்டி நடந்தது.

மிரட்டல் சுழற்பந்துவீச்சுக்கு சொந்தக்காரரான ரஷித்கான் 4 ஓவர்களில் 12 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி வங்கதேசம் வீழ்ச்சிக்கு சிம்மசொப்னமாக இருந்தார். முதல் போட்டியிலும் ஆட்டநாயகன் விருதைவென்ற ரஷித்கான் இந்த ஆட்டத்திலும் 2-வது முறை ஆட்டநாயகனாக தேர்வானார்.

   
 
 

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்று வென்று ஆப்கானிஸ்தான் அணி முதல்முறையாக டி20 தொடரைக் கைப்பற்றியுள்ளது.

19வயதான ரஷித்கான் பந்துவீச வந்ததில் இருந்து வங்கதேச வீரர்கள் நடுங்கினார்கள். அதிலும் அவரின் ஒவ்வொரு பந்திலும் சிக்ஸர், பவுண்டரி அடிக்க முயற்சித்தும் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. வங்கதேச வீரர்களுக்கு நிற்கவைத்து படம் காட்டிய ரஷித்கான் 16-வது ஓவரில் 5 பந்துகளில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ‘கிலி’ ஏற்படுத்தினார்.

ரஷித்கானுக்கு உறுதுணையாக முகம்மது நபியும் பந்துவீச்சில் கலக்கினார். இருவரும் சேர்ந்து 31 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி வங்கதேசத்தின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்தனர்.

வாழ்க்கை நிச்சயமில்லாத, எந்தநேரமும், வெடிகுண்டுகளுக்கும், துப்பாக்கி குண்டுகளுக்கும் மத்தியிலும் வாழ்ந்து, கிரிக்கெட் பயிற்சி எடுத்த ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு, டி20 தொடரை முதல்முறையாக வெல்வது மிகப்பெரிய ஊக்கத்தை அளிக்கும். அதிலும் சுழற்பந்துவீச்சாளர் ரஷித்கான் கடந்த ஓர் ஆண்டாக வீட்டுக்குச் செல்லாமல் கிரிக்கெட் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டிங்கிலும் ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாகச் செயல்பட்டது. அனுபவம் வாய்ந்த வங்கதேச வீரர்கள் சீட்டுக்கட்டுபோல விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஆனால், , அனுபவமே இல்லாத ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள் மோசமான பந்துகளைத் தேர்வு செய்து சிறப்பாக பேட் செய்தனர்.

shenwarijpg

ஆப்கான் வீரர் ஷென்வாரி பந்தை பவுண்டரிக்கு விரட்டிய காட்சி

 

அதிலும் முகமது ஷேசாத், ஷென்வாரி நிதானமாக பேட் செய்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். கடைசி நேரத்தில் முகம்மது நபி அதிரடியாக சிக்ஸர்களும், பவுண்டரிகளும் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். ஒட்டுமொத்தத்தில் கிரிக்கெட்டில் கத்துக்குட்டியாக இருக்கும் ஆப்கானிஸ்தான் அணி டி20 தொடரை முதல் முறையாக வென்றுள்ளது அந்த அணி அடுத்தகட்டத்துக்கு செல்வதற்கு உதவும்.

தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பலம் பொருந்திய அணிகளுக்கு அவ்வப்போது ‘ஷாக்’ கொடுத்த வங்கதேச அணிக்கு ஆப்கானிஸ்தான் அணி அதிர்ச்சி அளித்துள்ளது.

எதிரணியை களத்தில் சீண்டிவிடுவது, எதிரணி வீரர்களை கோபமூட்டுவது, வெற்றி பெற்றவுடன் மைதானத்தை வலம் வந்து அநாகரீகமாக செயல்களை செய்யும் வங்கதேச அணிக்கு இந்த தோல்வி பாடமாக அமைந்துள்ளது. இந்த தொடரை வென்றபின் ஆப்கானிஸ்தான் அணியினர் எந்தவிதமான கொண்டாடத்திலும் ஈடுபடாமல் இயல்பாகவே நடந்து கொண்டது வங்கதேச வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய நல்ல பழக்கமாகும்.

டாஸ்வென்ற வங்கதேச அணி முதலில் பேட் செய்தது. 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் சேர்த்தது. 135 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 7 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட்டுகளை இழந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப பெற்றது.

வங்கதேச வீரர்கள் லிட்டன் தாஸ், தமிம் இக்பால் களமிறங்கினார்கள். லிட்டன் தாஸ் இந்த முறையும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு வந்த சபீர் ரஹ்மான்(13), முஸ்பிகுர் ரஹ்மான்(22) ரன்களில் ஆட்டமிழந்தனர். 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் சேர்த்திருந்தது. முகமதுல்லா 14 ரன்களில் ஆட்டமிழந்தார்.

sahkibjpg

வங்கேச அணியின் கேப்டன் சஹிப் அல்ஹசன்

 

வங்கதேச வீரர்கள் பெயரளவுக்குதான் அனுபவ வீரர்கள் என்று சொல்லிக்கொண்ட போதிலும், ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் பேட்டை வைத்து தடவினார்கள். அதிலும் ரஷித்கான் பந்துவீச்சைக் கண்டு பெட்டிப்பாம்பாக அடங்கிவிட்டனர்.

101 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த வங்கேதச அணிய ரஷித்கான் பந்துவீச்சில் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளையும், அவரின் அடுத்த ஓவரில் மற்றொரு விக்கெட்டையும் இழந்து தடுமாறினார்கள். ரஷித்கான்

வீசிய 16-வது ஓவரில் கேப்டன் சகிப் அல் ஹசன்(3), 5-வது பதில் தமிம் இக்பால்(43), 6-வது பந்தில் மெசாடக் ஹூசைன்(0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

கடந்த முதல் போட்டியிலும் ரஷித்கான் ஓவரில் அடுத்தடுத்து வங்கதேச வீரர்கள் விக்கெட்டை பறிகொடுத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

20 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 8 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் சேர்த்தது. அபு ஹைதர் 21ரன்னிலும், நஸ்முல் இஸ்லாம் 6 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆப்கானிஸ்தான் தரப்பில் முகமது நபி 2 விக்கெட்டுகளையும், ரஷித்கான் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

135ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்கோடு உஸ்மான் கானி, ஷேசாத் களமிறங்கினார்கள். இருவரும் நிதானமாக பேட் செய்து ரன்களைச் சேர்த்தனர். ஷேசாத் 34 ரன்னில் ஆட்டமிழந்தார். உஸ்மான் கானி 21 ரன்னிலும் கேப்டன் அஸ்கர் 4 ரன்னிலும் வெளியேறினார்கள். ஷென் வாரி நிதானமாக பேட் செய்து 49 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 3 சிக்சர், 2 பவுண்டரிகள் அடங்கும். ருபல் ஹூசைன் வீசிய 19-வது ஓவரைச் சந்தித்த முகமது நபி அந்த ஓவரில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் விளாசி வெற்றியை உறுதி செய்தார். 7 பந்துகள் மீதமிருக்கையில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

வங்கதேசம் தரப்பில் மொசாடக் ஹூசைன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

http://tamil.thehindu.com/sports/article24095111.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

  • தொடங்கியவர்

கடைசி டி20 - பரபரப்பான ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது ஆப்கானிஸ்தான்

 
அ-அ+

உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற கடைசி டி20 போட்டியில், பரபரப்பான ஆட்டத்தில் வங்காளதேசத்தை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி தொடரை முழுமையாக வென்றது. #BANvAFG #AFGvBAN

 
 
 
 
கடைசி டி20 - பரபரப்பான ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது ஆப்கானிஸ்தான்
 
டேராடூன்:
 
வங்காளதேசம் - ஆப்கானிஸ்தான் இடையே மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் நடந்து வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான், தொடரை கைப்பற்றியது. 
 
இந்நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் அக்சார் ஸ்டானிக்சாய் பேட்டிங் தேர்வு செய்தார்.
 
இதையடுத்து, ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மொகமது ஷசாத், உஸ்மான் கனி ஆகியோர் களமிறங்கினர். ஷசாத் 26 ரன்னிலும், கனி 19 ரன்னிலும், ஸ்டானிக்சாய் 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். நபி 3 ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார். சத்ரான் 15 ரன்னில் ஆட்டமிழந்தார். 
 
இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது. சமியுல்லா ஷென்வாரி அதிகபட்சமா 33 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.
 
வங்காளதேசம் சார்பில் நஸ்முல் இஸ்லாம், அபு ஜயத் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.
 
201806080019178849_1_afgan-3._L_styvpf.jpg
 
இதைத்தொடர்ந்து, 146 ரன்களை இலக்காக கொண்டு வங்காளதேசம் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக லித்தன் தாஸ், தமிம் இக்பால் இறங்கினர். தாஸ் 12 ரன்னிலும், தமிம் 5 ரன்னிலும், அடுத்து இறங்கிய சவுமியா சர்க்கார் 15 ரன்னிலும் அவுட்டாகினர்.
 
அடுத்து இறங்கிய முஷ்பிகுர் ரகிம் ஓரளவு பொறுப்புடன் ஆடினார். இவர் இறுதி வரை போராடி 46 ரன்களில் அவுட்டானார். அடுத்து ஆடிய கேப்டன் ஷகிப் அல் ஹசன் 10 ரன்னில் வெளியேறினார்.
 
அடுத்து ஆடிய மகமதுல்லா இறுதி வரை போராடினார். வங்காளதேசம் வெற்றி பெற கடைசி 2 ஓவர்களில் 30 ரன்கள் தேவைப்பட்டது.
 
19வது ஓவரில் முஷ்பிகுர் 21 ரன்கள் எடுத்தார். ஆட்டத்தின் கடைசி ஓவரில் வெற்றி பெற 9 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், ரஷித் கான் சிறப்பாக பந்து வீசினார்.
 
முதல் பந்தில் முஷ்பிகுர் ரகிமை அவுட்டாக்கினார். இரண்டாவது பந்தில் மகமதுல்லா ஒரு ரன் எடுத்தார். மூன்றாவது பந்தில் 2 ரன்னும், நான்காவது பந்தில் ஒரு ரன்னும், ஐந்தாவது பந்தில் ஒரு ரன்னும் எடுத்தனர்.
 
ஆட்டத்தின் கடைசி ஓவரில் வங்காளதேசம் அணி வெற்றி பெற 2 ரன்கள் தேவைப்பட்டது. எதிர்பாராவிதமாக, விக்கெட் விழ, பரபரப்பான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது. இறுதியில், வங்காளதேசம் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்து, ஒரு ரன்னில் பரிதாபமாக தோற்றது.
 
ஆப்கானிஸ்தான் சார்பில், முஜிப் உர் ரகுமான், கரிம் ஜனாத் மற்றும் ரஷித் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
 
இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் 20 ஓவர் தொடரை முழுமையாக 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருது முஷ்பிகுர் ரகிம் மற்றும் தொடர் நாயகன் விருது ரஷித் கானுக்கும் வழங்கப்பட்டது. #BANvAFG #AFGvBAN

https://www.maalaimalar.com/News/Sports/2018/06/08001918/1168576/afghanistan-beat-bangladesh-by-1-run-in-third-t20.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.