Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு மாதம் அவ­கா­சம் தாருங்­கள்- கட­லட்டை பிடிப்­பில் ஈடு­ப­டும் மீன­வர்­கள் கோரிக்கை!!

Featured Replies

ஒரு மாதம் அவ­கா­சம் தாருங்­கள்- கட­லட்டை பிடிப்­பில் ஈடு­ப­டும் மீன­வர்­கள் கோரிக்கை!!

 

Capture-42-750x401.jpg

 
 

நாங்­கள் அதி­க­ளவு பணத்தை முத­லீடு செய்­துள்­ளோம். நோன்­புக் காலத்­தில் எங்­க­ளுக்கு தொழில்­தடை விதித்­தால் நாங்­கள் நெருக்­க­டிக்­குள்­ளா­கு­வோம். மனி­தா­பி­மான அடிப்­ப­டை­யில் ஒரு மாத கால அவ­கா­சம் தாருங்­கள்.

இவ்­வாறு வட­ம­ராட்சி கிழக்கு கடற்­ப­ரப்­பில் கட­லட்டை பிடிப்­பில் ஈடு­ப­டும் மீன­வர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

வட­ம­ராட்சி கிழக்கு கடற்­ப­ரப்­பில் கட­லட்டை பிடிப்­பில் ஈடு­ப­டும் மீன­வர்­கள், வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கத்தை நேற்று மாலை திடீ­ரென நேற்­றுச் சந்­தித்­த­னர்.

 
 

யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கத்­தில், இன்று நடை­பெ­றும் மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டத்­தில் இந்த விவ­கா­ரம் தொடர்­பில் பேசப்­ப­ட­வுள்ள நிலை­யில் நேற்­றைய தினம் இந்­தச் சந்­திப்பு, வல்­வெட்­டித்­து­றை­யில் நடை­பெற்­றுள்­ளது.

இங்­குள்ள உள்­ளூர் சங்­கங்­க­ளுக்கு பல லட்­சம் ரூபா பணம் கொடுத்­துள்­ளோம். அவர்­க­ளின் பட­கு­க­ளுக்­கும் பெரு­ம­ளவு பணம் கொடுத்­துள்­ளோம். இவ்­வாறு பணத்தை வாரி­யி­றைத்­துத்­தான் தொழில் செய்­கின்­றோம்.

பரு­தித்­துறை சமா­சத்­துக்கு உட்­பட்ட இரண்டு சங்­கங்­க­ளுக்­கும் பணம் கொடுத்­துள்­ளோம். எனவே எமக்கு கால அவ­கா­சம் தாருங்­கள். நாங்­கள் தென்­னி­லங்கை மீன­வர்­கள் இல்லை. வடக்­கின் மன்­னார் மாவட்­டத்­தைச் சேர்ந்த, மீன­வர்­கள்­ தான்.

எனவே எங்­கள் பிரச்­சி­னையை மனி­தா­பி­மா­னத்­து­டன் அணு­குங்­கள் என்று, அவர்­கள் வடக்கு மாகாண சபை உறுப்­பி­ன­ரி­டம் கோரிக்கை விடுத்­த­னர்.

‘அவர்­க­ளு­டைய கருத்­துக்­கள் செவி­ம­டுக்­கப்­பட்­டுள்­ளன. அவை தொடர்­பில் அனை­வ­ரு­டன் கலந்­து­ரை­யாடி தீர்வு எட்­டப்­ப­டும்’ என்று சிவா­ஜி­லிங்­கம் தெரி­வித்­தார்.

வட­ம­ராட்சி கிழக்­கில் சட்­ட­வி­ரோ­த­மான முறை­யில் கட­லட்டை பிடிப்­பில் வெளி­மா­வட்ட மீன­வர்­கள் ஈடு­ப­டு­வது தொடர்­பாக ஆரா­யும் கூட்­டம் வட­ம­ராட்சி கிழக்கு பிர­தேச செய­ல­கத்­தில் நேற்று முன்­தி­னம் நடை­பெற்­றது. இதன் பின்­னர், வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கம், ச.சுகிர்­தன், கடற்­தொ­ழில் சங்­கப் பிர­தி­நி­தி­கள் ஆகி­யோர், வாடி அமைத்­துள்ள மீன­வர்­க­ளைச் சந்­தித்து, கட­லுக்­குள் இறங்­கக் கூடாது என்று தெரி­வித்­தி­ருந்­த­னர். இந்த நிலை­யி­லேயே, வாடி அமைத்­துள்ள மீன­வர்­கள் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் சிவா­ஜி­லிங்­கத்தை நேற்­றுச் சந்­தித்­துள்­ள­னர்.

http://newuthayan.com/story/09/ஒரு-மாதம்-அவ­கா­சம்-தாருங்­கள்-கட­லட்டை-பிடிப்­பில்-ஈடு­ப­டும்-மீன­வர்­கள்-கோரிக்கை.html

  • தொடங்கியவர்

வட­ம­ராட்சி கிழக்­கில்- கட­லட்டை விவ­கா­ரத்தை விசா­ரணை செய்­ய -குழு நியமிப்பு!!

 

jaff-750x430.jpg

 
 

வட­ம­ராட்சி கிழக்­கில் கட­லட்டை பிடிப்­பில் ஈடு­ப­டும் மீன­வர்­க­ளுக்கு, கடற்­தொ­ழில் நீரி­யல்­வ­ளத் திணைக்­க­ளத்­தின் அதி­கா­ரி­கள் உத­வு­கின்­ற­னர் என்று முன்­வைக்­கப்­பட்ட குற்­றச்­சாட்­டுத் தொடர்­பில் விசா­ரணை நடத்­து­வ­தற்கு யாழ்ப்­பாண மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக் குழு­வின் இணைத் தலை­வர்­க­ளால் குழு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது.

வட­ம­ராட்சி கிழக்­கில் வெளி­மா­வட்ட மீன­வர்­கள் வாடி அமைத்து சட்­ட­வி­ரோ­த­மான முறை­யில் கட­லட்டை பிடிப்­பில் ஈடு­ப­டு­வது தொடர்­பில் மாகாண சபை உறுப்­பி­னர் ச.சுகிர்­த­னால், ஒருங்­கி­ணைப்­புக் குழு­வின் கவ­னத்­துக்கு கொண்டு வரப்­பட்­டது.

மாவட்­டச் செய­லர் இதன்­போது கருத்­துத் தெரி­வித்­த­போது, பிர­தேச செய­லர் அரச அதி­காரி. அவர்­க­ளைப் பழி­வாங்­கக் கூடாது. அங்­குள் சிலர் பணத்­தைப் பெற்று காணி­யைக் கொடுக்­கின்­ற­னர். கடற்­தொ­ழில் நீரி­யல் வளத் திணைக்­க­ளப் பணிப்­பா­ள­ரி­ட­மி­ருந்து அனு­ம­திக் கடி­தம் கொண்டு வந்த பின்­ன­ரும், பிர­தேச செய­லர் அனு­மதி வழங்க மறுத்­தால், கொழும்பு அதி­கா­ரி­கள் நாங்­கள் இனத் துவே­சத்­து­டன் நடந்து கொள்­கின்­றோம் என்று கேள்வி எழுப்­பு­கின்­ற­னர் என்று குறிப்­பிட்­டார்.

 

மரு­தங்­கேணி பிர­தேச செய­லர் கருத்­துத் தெரி­வித்­த­போது, வட­ம­ராட்சி கிழக்­கில் இப்­போது ஆயி­ரத்து 500 பேர் வெளி­மா­வட்ட மீன­வர்­கள் கட­லட்டை பிடிப்­பில் ஈடு­ப­டு­கின்­ற­னர். கடற்­தொ­ழில் நீரி­யல்­வ­ளத் திணைக்­க­ளப் பணிப்­பா­ள­ரால், சில நிபந்­த­னை­க­ளின் அடிப்­ப­டை­யி­லேயே அனு­மதி வழங்­கப்­ப­டு­கின்­றது. கட­லி­ருந்து 5 கிலோ மீற்­ற­ருக்கு அப்­பால் சென்று தொழில் செய்­ய­வேண்­டும். பக­லில் மாத்­தி­ரமே தொழில் மேற்­கொள்­ள­மு­டி­யும். ஒரு பட­கில் இரண்டு சுழி­யோ­டி­க­ளும், பட­கோட்­டி­யும் மாத்­தி­ர­முமே செல்­ல­லாம் என்று நிபந்­த­னை­க­ளு­டன்­தான் அனு­மதி வழங்­கப்­ப­டு­கின்­றது.

வாடி அமைப்­ப­தற்கு, அங்­குள்ள காணி உரி­மை­யா­ளர்­க­ளி­டம் பணம் கொடுக்­கின்­ற­னர். இரவு நேரத்­தில் தொழி­லுக்­குச் செல்­கின்­ற­னர். வாடி அமைப்­ப­தற்கு காணி கொடுத்­த­வர்­களை இர­க­சி­ய­மாக அழைத்­துப் பேசி­ய­போ­தும், அவர்­கள் வெளி­மா­வட்ட மீன­வர்­களை வெளி­யேற்ற இணங்­க­வில்லை. பிர­தேச செய­லர் என்ற வரம்­பை­யும் மீறி சில விட­யங்­க­ளைச் செய்­துள்­ளோம் என்று கூறி­னார்.

வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கம் கருத்­துத் தெரி­வித்­த­போது, கடற்­தொ­ழில் நீரி­யல்­வ­ளத் திணைக்­கள அதி­கா­ரி­க­ளின் பட­கு­கள் அங்கு தொழில் ஈடு­ப­டு­கின்­றன. அவர்­கள் தங்­க­ளது சொந்­தப் பெயர்­க­ளில் அத­னைச் செய்­ய­வில்லை. மாமன், மச்­சா­னின் பெயர்­க­ளில் அதைச் செய்­கின்­ற­னர். அவர்­கள் டைன­மற் பாவித்து மீன்­பி­டிக்­கின்­ற­னர். வெளி­மா­வட்ட மீன­வர்­கள் வழங்­கப்­பட்ட அனு­ம­திக்கு மாறாக தொழில் நட­வ­டிக்­கை­யில் ஈடு­ப­டு­கின்­ற­போ­தும் நட­வ­டிக்கை எடுப்­ப­தில்லை என்று குற்­றம் சுமத்­தி­னார்.

கடற்­தொ­ழில் நீரி­யல்­வ­ளத் திணைக்­கள அதி­காரி கருத்­துத் தெரி­வித்­த­போது, கட­லட்டை பிடிப்­ப­தற்­கான அனு­மதி கடந்த 5 ஆண்­டு­க­ளாக வழங்­கப்­ப­டு­கின்­றது. வழங்­கப்­பட்ட நிபந்­த­னையை மீறி தொழில் செய்­த­வர்­க­ளுக்கு எதி­ராக நாம் சட்­ட­ந­ட­வ­டிக்கை எடுத்­துள்­ளோம். இது­வரை 16 பட­கு­க­ளு­டன் 46 மீன­வர்­க­ளைக் கைது செய்­துள்­ளோம்.

அந்­தப் பகுதி மக்­கள், வெளி­மா­வட்ட மீன­வர்­கள் தங்கி நின்று தொழில் செய்­வ­தற்கு காணி கொடு­கின்­ற­னர். இது­தான் எங்­க­ளுக்­குப் பிரச்­சினை. எங்­க­ளு­டைய மீன­வர்­களை கடல்­அட்டை பிடிப்­ப­தற்கு நாங்­கள் ஊக்­கு­விக்­க­ வேண்­டும் – என்­றார்.

இதன் பின்­னர் கருத்­துத் தெரி­வித்த வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் சயந்­தன், வெளி­மா­வட்ட மீன­வர்­க­ளால் அங்கு சுகா­தா­ரச் சீர்­கேடு இடம்­பெ­று­கின்­றது என்று கூறு­கின்­றார்­கள். அத­னைக் கட்­டுப்­ப­டுத்த பொதுச்­சு­கா­தார பரி­சோ­த­கர்­கள் ஊடாக நட­வ­டிக்கை எடுக்­க­லாம். மக்­க­ளுக்­குத் தெரி­யா­மல் சங்­கங்­கள் காணி­களை பணத்­துக்கு வழங்­கி­யி­ருந்­தால், அந்­தச் சங்­கங்­க­ளுக்கு எதி­ராக கூட்­டு­றவு அமைச்சு ஊடாக நட­வ­டிக்கை எடுக்­க­லாம். வழங்­கப்­பட்ட நிபந்­த­னைக்கு மாறாக கட­லட்டை பிடிப்­ப­வர்­கள் தொழி­லில் ஈடு­பட்­டால் கடற்­தொ­ழில் நீரி­யல்­வ­ளத் திணைக்­க­ளம் நட­வ­டிக்கை எடுக்­க­லாம் என்­றார்.

கடற்­தொ­ழில் சமா­சப் பிர­தி­நிதி கருத்­துத் தெரி­வித்­த­போது, கடற்­தொ­ழில் கூட்­டு­ற­வுச் சங்­கங்­கள் பணத்தை வாங்­கிக் கொண்டு காணி கொடுக்­கின்­றன என்று கூறப்­ப­டு­வது தவறு. கடந்த காலத்­தில் அர­சி­யல்­நோக்­கு­டன் உரு­வாக்­கப்­பட்ட கிரா­மிய அமைப்­புக்­களே பணத்­தைப் பெற்­றுக் கொண்டு காணியை வழங்­கி­யுள்­ளன என்­றார்.

இதன் பின்­னர் கருத்­துத் தெரி­வித்த பரு­தித்­துறை பிர­தேச சபை­யின் தவி­சா­ளர், தவ­றான தக­வல்­க­ளைத் தெரி­வித்து ஒருங்­கி­ணைப்­புக் குழு­வைத் தவ­றாக வழி­ந­டத்­த­வேண்­டாம். இங்­குள்ள காணி உரி­மை­யா­ளர்­க­ளுக்­கும், கட­லட்டை பிடிப்­பில் ஈடு­ப­டும் வெளி­மா­வட்ட மீன­வர்­க­ளுக்­கும் இடை­யில் எப்­படி தொடர்பு ஏற்­ப­டு­கின்­றது. இந்­தத் தொடர்பை ஏற்­ப­டுத்­திக் கொடுப்­ப­வர்­களே கடற்­தொ­ழில் நீரி­யல்­வ­ளத் திணைக்­கள அதி­கா­ரி­கள்­தான். அவர்­கள்­தான், காணி வைத்­தி­ருக்­கும் பல­வீ­ன­மான உரி­மை­யா­ளர்­களை அடை­யா­ளம் கண்டு, கட­லட்டை பிடிக்­கும் மீன­வர்­க­ளுக்­குத் தெரி­யப்­ப­டுத்­து­கின்­ற­னர்.

இது­மட்­டு­மல்­லாது, வட­ம­ராட்சி கிழக்­கில் பல­நாள் கல படகு 3 கடற்­தொ­ழில் சங்­கங்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டது. இரண்டு கடற்­தொ­ழில் சங்­கங்­க­ளின் பட­கு­கள் இப்­போ­தும் அந்­தச் சங்­கங்­க­ளி­டமே இருக்­கின்­றது. உடுத்­து­றைச் சங்­கத்­துக்­கு­ரிய பல­நாள் கல படகு, கடற்­தொ­ழில் நீரி­யல் வளத் திணைக்­கள அலு­வ­ல­ரால் வாட­கைக்­குப் பெறப்­பட்டு வேறு இடத்­தில் தொழி­லில் ஈடு­ப­டு­கின்­றது.
அந்­தப் பகுதி மீன­வர்­க­ளுக்கு பாத­க­மா­கச் செயற்­ப­டும் கடற்­தொ­ழில் நீரி­யல்­வ­ளத் திணைக்­கள அதி­கா­ரி­களை இட­மாற்­றம் செய்­ய­வேண்­டும். இவர்­கள் மரு­தங்­கே­ணிப் பிர­தேச செய­ல­ருக்­கும் ஆபத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளார்­கள் – என்­றார்.

இதன் பின்­னர் மீண்­டும் கருத்­துத் தெரி­வித்த கடற்­தொ­ழில் நீரி­யல்­வ­ளத் திணைக்­கள அதி­காரி, ஆத­ர­மில்­லாது எங்­கள் அதி­கா­ரி­கள் மீது குற்­றம் சுமத்­த­வேண்­டாம். அந்­தப் பகு­தி­யைச் சேர்ந்த இரண்டு கடற்­தொ­ழில் சங்­கங்­கள் அனு­மதி வழங்­கி­ய­மைக்­கான கடி­தம் எங்­க­ளி­டம் ஆதா­ர­மாக இருக்­கின்­றது.

எமது பகு­தி­யைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கு கட­லட்டை பிடிப்­ப­தற்­கான அனு­மதி திணைக்­க­ளத்­தால் வழங்­கப்­ப­டாது என்று இங்கே கூறு­கின்­ற­னர். நாகர்­கோ­வில் கிழக்கு கடற்­தொ­ழி­லா­ளர் சங்­கத்­துக்கு அதற்­கான அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது – என்­றார்.

இறு­தி­யில் கருத்­துத் தெரி­வித்த இணைத் தலை­வர்­கள், இந்­தக் குற்­றச்­சாட்­டுக்­கள் தொடர்­பில் விசா­ரணை நடத்த குழு நிய­மிக்­கப்­ப­டும் என்று குறிப்­பிட்­ட­னர்.

http://newuthayan.com/story/09/வட­ம­ராட்சி-கிழக்­கில்-கட­லட்டை-விவ­கா­ரத்தை-விசா­ரணை-செய்­ய-குழு-நியமிப்பு.html

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.