Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கீத் நொயார் கடத்தல் – மகிந்தவிடம் விரைவில் விசாரணை

Featured Replies

கீத் நொயார் கடத்தல் – மகிந்தவிடம் விரைவில் விசாரணை

 

mahinda-rajapaksha-300x200.jpg‘தி நேசன்’ ஆங்கில நாளிதழின்  இணை ஆசிரியர் கீத் நொயார்  கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.

2008 ஆம் ஆண்டு மே மாதம் நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்கள் மிக விரைவில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.

சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்ட பின்னர், சில விடயங்கள் தொடர்பாக மகிந்த ராஜபக்சவிடம் தெளிவுபடுத்திக் கொள்வதற்கு, விசாரணையாளர்கள் முடிவு செய்திருப்பதாக, மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கீத் நொயார் கடத்தப்பட்ட தகவலை உடனடியாக மகிந்த ராஜபக்சவுக்குத் தாமே தெரியப்படுத்தியதாகவும், அதன் மூலமே அவர் காப்பாற்றப்பட்டதாகவும் சபாநாயகர் கரு ஜெயசூரிய கூறியிருந்தார்.

இதுதொடர்பாக வாக்குமூலம் ஒன்றைப் பெறுவதற்கு மகிந்த ராஜபக்சவிடம், சிறிலங்கா காவல்துறையினர் வசதியான நாள் ஒன்றைத் தருமாறு கோரியுள்ளனர்.

கீத் நொயார் கடத்தல் தொடர்பாக, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, முன்னாள் தேசிய புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண, உள்ளிட்டோரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.

அத்துடன் முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர இன்னமும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2018/06/07/news/31271

  • தொடங்கியவர்

கீத் நொயார் கடத்தல், கொலை முயற்சி விவகாரம்: முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிடம் விசாரணை செய்ய சி.ஐ.டி. தீர்மானம்

city-01GMGPage1Image0005-54d5286a8e57ea525faa9404a5941fb27bef1394.jpg

 

(எம்.எப்.எம்.பஸீர்)

கோத்தபாய, ஹெந்தவித்தாரண ஆகியோரையும் விசாரிக்கும் சாத்தியம் 
''த நேஷன்'' பத்திரிகையின் முன்னாள் இணை ஆசிரியர் கீத் நொயார் கடத்தப்பட்டு சட்ட  விரோதமாக தடுத்து வைக்கப்பட்டமை, சித்திரவதை செய்யப்பட்டமை, ஆயுதத்தால் தாக்கப்பட் டமை, கொலை செய்ய முயற்சிக்கப்பட்டமை மற்றும் நொயார் குடும்பத்தினருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தகவல்களை  

வெளிப் படுத்திக்கொள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் விசாரணைகளை முன்னெடுக்க குற்றப் புலனயவுப் பிரிவு தீர்மானித்துள்ளது.  

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுக்கும் விசாரணைகளில் ஒரு அங்கமாக கடந்த 2018.05.22 ஆம் திகதி சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் பெற்றுக்கொண்ட வாக்கு மூலத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களை உறுதி செய்துகொள்ளவும் மேலதிக தகவல்களை வெளிப்படுத்தவும் இந்த விசாரணைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கேசரிக்கு தெரிவித்தார்.

 இந் நிலையில் விசாரணைகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் திகதியொன்று கோரப்பட்டுள்ளதாகவும், அவர் திகதியொன்றினை ஒதுக்கி கொடுத்த பின்னர் பெரும்பாலும் அவரது வீட்டிலோ அலுவலகத்திலோ வைத்து இந்த விசாரணை, வாக்கு மூலத்தினைப் பெற்றுக்கொள்ள எதிர்ப்பார்ப்பதாகவும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.

 இதனிடையே மிக விரைவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிடம் வககு மூலம் பெற்ற பின்னர், அடுத்த கட்டமாக முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷ, முன்னாள் உளவுத் துறை பிரதானி ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரால் கபில ஹெந்தவிதாரன ஆகியோரும் கீத் நொயார் விவகாரத்தில் விசாரணை செய்யப்படவுள்ளதாகவும் அவர்களும் விசாரணை வலயத்துக்குள் இருப்பதாகவும் விசாரணைகளை முன்னெடுக்கும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

அத்துடன் இந்த விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுதத் நாகஹமுல்ல ஆகியோரின் மேற்பார்வையில் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகரவின் கட்டுப்பாட்டில் உதவி பொலிஸ் அத்தியட்சர் திசேராவின் ஆலோசனைக்கு அமைய சமூக கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா தலைமையிலான பொலிஸ் குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

அதில் விஷேடமாக தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் பகுப்பாய்வை மையப்படுத்தி இடம்பெறும் விசாரணைகளில் பல தகப்வல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதிலும் அண்மைய பகுப்பாய்வின் போது சந்தேகத்துக்கு இடமான இரகசிய அழைப்பொன்று தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவு தகவல்களை வெளிப்படுத்துஇக்கொண்டுள்ள நிலையில், அந்த அழைப்பு குறித்து தற்போது இந்த விவகாரத்தில் கைதாகி விளக்கமரியலில் உள்ள முன்னாள் இரணுவ புலனயவுப் பனிப்பாளரான மேஜர் ஜெனரால் அமல் கருணாசேகர்விடம் சிறையில் வைத்து சிறப்பு விசாரணைகளை முன்னெடுக்க குற்றப் புலனாய்வுப் பிரிவு கல்கிசை மேலதிக நீதிவான் லோச்சனா அபேவிக்ரமவிடம் அனுமதியைப் பெற்றுக்கொண்டுள்ளது.

 நேற்று முன்தினம், கீத் நொயார் விவகாரத்தில் கைதாகி பிணையில் உள்ள இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மேஜர் ஆர்.டி.எம்.டப்ளியூ.புளத்வத்த, எஸ்.ஏ.ஹேமசந்திர, யூ.பிரபாத் வீரகோன், பி.எல்.ஏ.லசந்த விமலவீர, எச்.எம். நிசாந்த ஜயதிலக, எம்.ஆர். நிசாந்த குமார , சி. ஜயசூரிய ஆகியோர் தொடர்பிலான வழக்கு விசாரணை இடம்பெற்ற போது இந்த அனுமதியை குற்றப் புலனாய்வுப் பிரிவு பெற்றுக்கொண்டுள்ளது. இந்த 7 பேர் தொடர்பிலான மேலதிக வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஜூலை 18 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக இந்த விவகாரத்தில் தகவல்களை வெளிப்படுத்த, கீத் நொயார் கடத்தப்பட்ட போது உள்நாட்டலுவல்கள் அமைச்சராக இருந்த தற்போதைய சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் புலனாய்வுப் பிரிவு விசாரணை செய்தது. இதன்போது, ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட இரவில் நேஷன் பத்திரிகையின் அப்போதைய ஆசிரியர் லலித் அழககோன், உரிமையாளர் கிரிஷாந்த குரே ஆகியோர் என்னை தொடர்புகொண்டனர். கீத் நொயார் கடத்தப்பட்டுள்ளதாகவும் அவரை எப்படியேனும் மீட்டுத்தருமாறும் அவர்கள் என்னிடம் கோரினர். அதனையடுத்து நான் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைத்தேன். அவரிடம், கீத் நொயார் கடத்தப்பட்டுள்ளார். நிச்சயம் இது திட்டமிட்ட நடவடிக்கை. இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்தில் இருக்க வெட்கப்படுகின்றேன். கீத் நொயாருக்கு எந்த ஆபத்தும் ஏற்படக் கூடாது. அவரது உயிருக்கு ஆபத்து நேர்ந்தால் அமைச்சுப் பதவியை துறந்து, பிரசித்தமாக காரணத்தை அறிவித்துவிட்டு அரசாங்கத்திலிருந்து உடன் வெளியேறுவேன் எனக் கூறினேன். அதற்கு அவர் அவசரப் பட வேண்டாம், கீத் நொயாருக்கு எதுவும் ஆகாது என கூறினார். ' என கருஜயசூரிய வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.

 இந் நிலையிலேயே இது குறித்து முன்னாள் ஜனடஹிபதி மஹிந்தவிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்வுள்ளன.

இதனைவிட கீத் நொயார் கடத்தப்பட்ட சில நிமிடங்களில், அப்போதைய நேஷன் பத்திரிகை ஆசிரியர் அப்போதைய அமைச்சரும் தற்போதைய சபாநாயகருமான கரு ஜயசூரியவை அழைத்தமை தொடர்பிலும் அதன் பின்னர் கரு ஜயசூரிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அழைத்தமை தொடர்பிலும் விசாரணைகள் தொடர்கின்றன.

 அதன்பின்னர் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மஹிந்த - கோத்தா, கோத்தா - கபில ஹெந்த விதாரண, ஹெந்த விதாரண - அமல் கருணாசேகர, அமல் கருணாசேகர - மேஜர் புளத்வத்த ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற தொலைபேசி கலந்துரையாடல்கள் தொடர்பிலும் தகவல்கள் வெளிபப்டுத்தப்ப்ட்டுள்ளன. அவை குறித்தே கோத்தபாய ராஜபக்ஷ, ஹெந்தவிதாரண ஆகியோரை விசாரணை செய்ய புலனாய்வுப் பிரிவு ஆலோசித்துள்ளது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-06-08#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.