Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகள் சரணடைவற்கு இந்தியா கொடுத்த புரபோஷல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் சரணடைவற்கு இந்தியா கொடுத்த புரபோஷல்!- 01

April 6, 2018
book1_080114114410.jpg

மாவைக்கும் கஜேந்திரகுமாருக்கும் தெரியாத வேற லெவல் டீலிங் இது

பீஷ்மர்

ஈழ யுத்தத்தின் இறுதியில் விடுதலைப்புலிகளை சரணடைய வைக்க பல முயற்சிகள் நடந்தன என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவையெல்லாம் எப்படி நடந்தன? அவற்றிற்கு என்ன நடந்தது? யாரெல்லாம் அதில் சம்பந்தப்பட்டார்கள் என்பதை விலாவாரியாக நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. தேர்தல் சமயங்களில் மாவை சேனாதிராசாவும், கஜேந்திரகுமாரும் மாறிமாறி பிடுங்குப்படுவதுதானா அந்த விவகாரம்?

நிச்சயம் இல்லை. யுத்தத்தின் இறுதிநாட்களில், எல்லா கதவுகளும் அடைபட்ட பின்னரே நமது உள்ளூர் அரசியல்வாதிகள் அரங்கிற்கு வந்தனர். அதற்கு பல மாதங்களிற்கு முன்னரே இந்த சமரச, சரணடைவு பேச்சுக்கள் உள்வட்டத்திற்குள் ஆரம்பித்து விட்டது.

 

கிளிநொச்சி, புதுடில்லி, வொஷிங்டன் பின்னர் மலேசியா, ஒஸ்லோ என ஐந்து நகரங்களை மையமாக வைத்து நடந்த சிக்கலான இரகசிய பேச்சுக்கள் பற்றிய விபரங்களை இந்த பகுதியில் தரவிருக்கிறோம்.

இதற்கு முன்னர் ஒரு பிளாஷ்பேக்கிற்கு உங்களை அழைத்து செல்கிறோம்.

2009 ஜூன் மாதம். சென்னையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசிய அப்போதைய இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசும்போது இப்படி பேசினார். ‘இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரை நிறுத்துவதற்கு பல முயற்சிகள் நடந்தன. இந்திய அரசும் நிறைய முயற்சிகள் மேற்கொண்டது. ஆனால், இலங்கை அரசும் புலிகள் தரப்பிலும் அதற்கு செவிசாய்க்கவில்லை. மத்திய அரசு சொன்னபடி நடந்திருந்தால், புலிகள் அமைப்பு அழியாமலிருந்திருக்கும். பிரபாகரனும் உயிர் தப்பியிருக்க வாய்ப்பு உண்டு. இறுதியுத்தத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்களையும் தடுத்திருக்கலாம்’. என்றார்.

ப.சிதம்பரம் சொன்ன நிறைய முயற்சிகள் எவை?

44-300x168.jpeg ப.சிதம்பரம்

இந்த சமயத்தில் காங்கிரசின் தமிழ்நாட்டு முக்கியஸ்தர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட பலர், வைகோ மற்றும் நெடுமாறன் மீது கடுமையான குற்றச்சாட்டுக்கள் சுமத்தினார்கள். ‘இந்தியா மேற்கொண்ட சமரச முயற்சிகளை வை.கோ, நெடுமாறன் இருவரும் குழப்பிவிட்டனர். புலிகளிற்கு தவறான தகவல்களை கொடுத்து புலிகளை அழித்துவிட்டனர்’ என குற்றம்சாட்டினார்கள். அது உண்மையா?

எட்டு வருடங்களின் முன்னர் அந்த நாட்களில் நடந்த இரகசிய உள்சுற்று பேச்சுக்களிற்கு உங்களை அழைத்து செல்வதற்கு முன்னர், ஒரு விசயத்தை சொல்லிவிடுகிறோம். இந்த பேச்சுக்களில் கலந்துகொண்டது மிகச்சிலர்தான். புலிகள் தரப்பில் பிரபாகரன், நடேசன், பொட்டம்மான், கஸ்ரோ ஆகியோர் வன்னியிலிருந்து இதை கையாள, மலேசியா, அமெரிக்கா, நோர்வே ஆகிய நாடுகளில் உள்ள மூவரும் சம்பந்தப்பட்டிருந்தனர். அவர்கள் இப்பொழுதும் இருக்கிறார்கள். இந்தியாவில் மொத்தம் ஐவர் இதில் சம்பந்தப்பட்டவர்கள். அதில் தி.மு.க தலைவர் கருணாநிதியின் குடும்ப உறுப்பினரும், பாஜகவின் முடிவெடுக்கும் மட்டத்தில் உள்ள உயர் தலைவரும், ஒரு வடஇந்திய பத்திரிகையாளரும் அடக்கம்!

 

அமெரிக்க ஸ்ரேற்ஸ் டிப்பார்ட்மென்ற் ஆட்களையும், நோர்வே டிப்ளோமற்ஸையும் இந்த கணக்கில் சேர்க்கவில்லை.

பல திசைகளிலும் இருந்த இந்த புள்ளிகளிற்குள் எப்படி தொடர்பேற்பட்டது என்பதை குறிப்பிடுகிறோம்.

இந்த சமரச முயற்சிகள் எப்பொழுது தொடங்கியதென்றால்… மிகச்சரியாக சொன்னால், 2008 செப்ரெம்பரில் நடந்தது. அப்பொழுதுதான் இடைத்தரகர் ஒருவர் மூலம் இந்திய மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கும் புலிகளிற்கும் தொடர்பு ஏற்பட்டது. யார் அந்த இடைத்தரகர் என்பதை பின்னர் குறிப்பிடுகிறோம். புலிகள் விட்டுக்கொடுப்பிற்கு தயாராகிறார்கள் என்ற விசயம் 2008 செப்ரெம்பரில் சிதம்பரத்திற்கு தெரிந்தது!

அதுவரை விட்டுக்கொடுப்புடனான சமரச முயற்சியொன்றிற்கும் புலிகள் தயாராக இருக்கவில்லை. தமது ராஜதந்திர தொடர்புகள் மூலம் யுத்தத்தை நிறுத்த முயற்சித்துக் கொண்டிருந்தார்களே தவிர, தமது தரப்பில் விட்டுக்கொடுப்பு எதற்கும் தயராக இருக்கவில்லை. செப்ரெம்பர் மாத முயற்சியும் கிட்டத்தட்ட அதேவகையானதுதான். யுத்தத்தை கொஞ்சம் தாமதித்தால், இரண்டு நாடுகளின் அழுத்தம் மூலம் யுத்தத்தை நிரந்தரமாக நிறுத்தலாம் என நினைத்தார்கள். அந்த நாடுகள் இந்தியா, அமெரிக்கா!

 

2008 இறுதியில்தான் அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்தது. 2009 ஜனவரியில்தான் புதிய அதிபர் பதவியேற்பார். புதிய அதிபராக பராக் ஒபாமா பதவியேற்பார் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. புலிகளின் அமெரிக்க நெற்வேர்க்கிலிருந்தும் இதேவிதமான ரிப்போர்ட்தான் வன்னிக்கு அனுப்பப்பட்டிருந்தது. இதனால்தான் ஒபாமாவிற்கான தமிழர் அமைப்பு என்ற ஒரு அமைப்பும் உருவாக்கப்பட்டிருந்தது. சில சட்டச்சிக்கல்கள் காரணமாக இப்போது மேலோட்டமாக மட்டும் ஒரு விசயத்தை சொல்கிறோம். ஒபாமாவின் தேர்தல் பிரசாரத்திற்காக விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு நெற்வேர்க்கிலிருந்தும் ஒரு தொகை பணம் சென்றது!

அதேபோல இந்திய பொது தேர்தலையும் புலிகள் எதிர்பார்த்திருந்தனர். இந்தியாவில் புலிகள் வேட்டையாடப்பட்டதால், ஐரோப்பிய நாடுகளை போல தமது உறுப்பினர்களை கொண்ட நெற்வேர்க் கிடையாது. ஆதரவாளர்களின் மூலமே விசயங்களை முடித்துக் கொண்டார்கள். இந்த ஆதரவாளர்கள் அரசியல்வாதிகள் என்றால், அவர்கள் மூலமே அரசியல் காய்நகர்த்தல்களையும் செய்தார்கள். 2009 ஏப்ரலில் இந்திய பொதுதேர்தல் நடக்கவிருந்தது. இதில் பாஜக கூட்டணி வெற்றியடையுமென பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள புலிகளிற்கு ஆதரவான அரசியல் தலைவர்களும் இதேவிதமான கருத்தைதான் சொன்னார்கள். அவர்களின் அபிப்பிராயத்தை புலிகள் பெரிய விசயமாக எடுக்கவில்லை. பாஜக ஆட்சிக்கு வருமென புலிகள் தீவிரமாக நம்பியதற்கு இரண்டு காரணம்தான் உண்டு. முதலாவது, ஊடக கணிப்புக்கள் அப்படித்தான் சொல்லியது. இரண்டாவது, வட இந்திய பத்திரிகையாளர் ஒருவர். இந்தியாவிலிருந்து வெளியாகும் ஆங்கில பத்திரிகையொன்றின் ஆசிரியர்பீடத்தின் உயர்பொறுப்பில் இருந்தார். ஜவகர்லால் நேரு பல்கலைகழகத்தில் இதழியல்துறையில் வருகைதரு விரிவுரையாளராகவும் இருந்தார்.

 

இலங்கையின் மூத்த சட்டவாதியொருவர் இப்பொழுது அவுஸ்திரேலியாவில் உள்ளார். அவர் மூலம் புலிகளின் அனைத்துலக தொடர்பாளர் கஸ்ரோவுடன் அவருக்கு தொடர்பேற்பட்டது. கஸ்ரோ ஆங்கிலத்தில் சரளமாக உரையாட மாட்டார். இது தொடர்பு சிக்கலை ஏற்படுத்தியது. வடஇந்தியர் சாதாரண ஆள் கிடையாது, அரசு உயர்மட்டங்களுடன் தொடர்பை வைத்துள்ள ஆள் என்பதை தெரிந்ததும் புலிகளின் அமெரிக்க நெற்வேர்க்கில் இருந்த ஒரு சட்ட புலமையுள்ளவருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்தார்.

castro-196x300.jpg புலிகளின் சர்வதேச விவகார பொறுப்பாளரான கஸ்ரோ

பாஜக அரசின் மூத்த தலைவர் ஒருவருடன் 2008 ஒக்ரோபரில் அந்த வடஇந்திய பத்திரிகையாளர் பேசினார். புலிகளின் வாக்குறுதி, எதிர்பார்ப்புடன் அவர் சென்றிருந்தார். பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் நலன்களிற்கு இடையூறாக இருக்கமாட்டோம் என்ற புலிகளின் வாக்குறுதியை பத்திரிகையாளர் வழங்கினார். அதேபோல, பாஜக ஆட்சிக்கு வந்ததும் யுத்தத்தை உடனடியாக நிறுத்த வைக்க வேண்டுமென்றும் கேட்டார். அந்த தலைவர் சிவசேனையில் தீவிர ஈடுபாடுடையவர். அவரை கவிழ்ப்பதற்கு வட இந்திய பத்திரிகையாளர் ஒரு உத்தியை கையாண்டார். வடக்கு கிழக்கில் இராணுவத்தால் அழிக்கப்பட்ட இந்து ஆலயங்கள் பற்றிய ஆவணத் தொகுப்பொன்றையும் தயாரித்து தர வேண்டுமென வன்னிக்கு சொல்லி, அதை எடுத்து வைத்திருந்தார். அந்த ஆவண தொகுப்பையும் பாஜக தலைவரிடம் கொடுத்தார். அந்த சந்திப்பில் பாஜக தரப்பிலிருந்து சொல்லும்படியான ரெஸ்பொன்ஸ் வரவில்லை.

ஆனால், ஒரு வாரத்தில் அந்த பத்திரிகையாளரை மீண்டும் சந்திக்க அழைத்த பாஜக தலைவர், புலிகள் கேட்ட வாக்குறுதியை கொடுத்தார். அதாவது, 2009 ஏப்ரலில் இந்திய பொது தேர்தலில் பாஜக வெற்றியடைந்திருந்தால், இலங்கையில் யுத்தத்தை நிறுத்த முழு அழுத்தம் கொடுத்திருக்கும்.

2008 நவம்பர் மாவீரர் தினத்திற்கு முன்னர், விசுவடுவில் பிரபாகரன் அனைத்து தளபதிகள், இளநிலை தளபதிகளை அழைத்து சந்திப்பொன்றை செய்தார். அதில் அவர் சொன்னது- ‘இந்த யுத்தத்தை வெல்வதென்றால் இரண்டு விசயம் நடக்க வேண்டும். ஒன்று புதிதாக 25,000 போராளிகளை திரட்டி என்னிடம் தாருங்கள். நான் இந்த யுத்தத்தை வென்று காட்டுகிறேன். அல்லது, கிளிநொச்சியை இராணுவம் கைப்பற்றாமல் ஏழு மாதங்கள் தடுத்து வைத்திருக்க வேண்டும்’.

அதென்ன ஏழு மாத கணக்கு? கிளிநொச்சி?

இதில்தான் விசயமே இருக்கிறது. என்னதான் அமெரிக்கா இந்த விசயத்தில் தலையிட்டாலும், இந்தியாவின் விருப்பமின்றி எதுவும் நடக்காதென்பது புலிகளிற்கும் தெரியும். ஏப்ரல் தேர்தலில் பாஜக வென்றாலும், பதவியேற்று எல்லாம் பங்சன் பண்ண தொடங்க, மே மாதமாகும்.

கிளிநொச்சிதான் புலிகளின் தலைநகரம் என்ற அபிப்பிராயம் உள்ளது. மே மாதம் வரை இராணுவத்தால் கிளிநொச்சியை பிடிக்க முடியவில்லையென்றால், ‘உங்களால் இனி முடியாதப்பா. அங்கே மக்கள் இறந்துகொண்டிருக்கிறார்கள்’ என இராஜதந்திர அழுத்தம் கொடுக்கலாம். மாறாக, கிளிநொச்சியை இராணுவம் கைப்பற்றினால், பாஜக அழுத்தம் கொடுத்தாலும், ‘இதோ பாருங்கள் மிஸ்டர் இந்தியா, புலிகளின் தலைநகரத்தையே நாம் கைப்பற்றி விட்டோம். இன்னும் நான்கு மாதம் பொறுங்கள். கடைசி புலியையும் வேட்டையாடி விடுகிறோம்’ என இலங்கை முரண்டுபிடிக்கலாம்.

 

இந்த இழுபறி காலமாக புலிகள் கணித்தது ஒரு மாதம். ஆக மொத்தம் 2009 யூன் மாதம் வரை ஒரு கணக்கை போட்டு வைத்திருந்தார்கள் புலிகள்.

ஒரு இடைத்தரகர் மூலமாக செப்ரெம்பர் மாதமே காங்கிரசின் ப.சிதம்பரத்திற்கு புலிகளின் சமரச நிலைப்பாடு அறிவிக்கப்பட்டதென்று சொன்னேன் அல்லவா, அது யாரால் அறிவிக்கப்பட்டது? புலிகள் அனுப்பிய தகவல் என்ன? அதற்கு பதிலாக சிதம்பரம் அனுப்பிய புரபோஷல் என்ன? இடைத்தரகராக இருந்தது யார் போன்ற விசயங்களை அடுத்தவாரம் குறிப்பிடுகிறேன்.

(தொடரும்)

 

http://www.pagetamil.com/630/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

“பொட்டம்மானை மட்டும் ஒப்படையுங்கள்; யுத்தத்தை நிறுத்தலாம்“- இந்தியா கொடுத்த புரபோஷல் – 2

April 6, 2018
lead14.jpg

அன்ரன் பாலசிங்கத்துக்கு இந்தியா அனுப்பிய கடைசி செய்தி

பா.ஜ.கவுடன் மட்டும் தொடர்பேற்படுத்தி பலனில்லை, காங்கிரசுடனும் தொடர்பேற்படுத்த வேண்டுமென புலிகள் நினைத்தனர். பொது தேர்தலில் பா.ஜ.க சில சமயம் வெற்றியடையாவிட்டால், நிலைமை மோசமாகிவிடலாம். காங்கிரசுடன் தொடர்பிருப்பது அவசியம். அந்த பேச்சு சரி வந்தால், சில சமயங்களில் அவர்களே யுத்தத்தையும் நிறுத்தவும்கூடும்.

 

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தால் புலிகளிற்கு எதிராக நடப்பார்கள் என்பது புலிகளிற்கு தெரியும். அதனால்தான் 1991இல் ராஜிவ் காந்தியையும் கொன்றார்கள்.

2008 செப்ரெம்பரில் புலிகளின் செய்தியொன்று ப.சிதம்பரத்திற்கு கிடைத்தது. அந்த செய்தியை கொண்டு வந்தவர் மலேசிய வர்த்தக புள்ளி. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துடன்  வர்த்தக தொடர்பில் இருப்பவர். இந்த வர்த்தகத்தில் சில சிக்கல்கள் ஏற்பட்டு பின்னர் நீதிமன்றத்திற்கு சென்றது உபரி தகவல். இதற்கு மேல், மலேசிய வர்த்தக புள்ளியை அடையாளப்படுத்த முடியாது. அது சட்டசிக்கல்களை ஏற்படுத்தும்.

புலிகளின் மெசேஜை அந்த வர்த்தக புள்ளிதான் ப.சிதம்பரத்திற்கு பாஸ் செய்தார். யார் மூலம் தகவலை பாஸ் செய்தால் காரியம் சாதிக்கலாமென்பதை புலிகள் அறிந்து வைத்திருந்தனர். “யுத்தத்தை நிறுத்த வேண்டும். பேச்சுக்காக புலிகள் விட்டுக் கொடுப்பிற்கும் தயாராக இருக்கிறார்கள். மக்கள் கொல்லப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அதற்காக போதியளவு இறங்கி வரவும் தயாராக இருக்கிறார்கள்“ என்பதே அந்த மெசேஜ்.

இந்த இடத்தில் மிகமுக்கிய இன்னொரு சம்பவத்தையும் சொல்ல வேண்டும். இதுவும் ஒரு பிளாஷ்பேக்தான். சிதம்பரத்தின் மூலம்தான் புலிகள் காங்கிரசுடன் தொடர்பை ஏற்படுத்துகிறார்கள் என நினைக்காதீர்கள். சிதம்பரத்துடனான தொடர்பு ஏற்படுத்தப்படுவதற்கு இரண்டு வருடங்களின் முன் “வெட்டு ஒன்று துண்டு இரண்டாக“ புலிகள்- காங்கிரஸ் பேச்சு நடந்து முடிந்திருந்தது. 2004ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியை பிடித்ததும் அந்த பேச்சு நடந்தது.

 

bala-anna-kili-300x225.jpgபுலிகள்தான் இந்த பேச்சையும் ஆரம்பித்தார்கள். இந்தியாவின் நலன்களிற்கு குறுக்காக புலிகள் நிற்கமாட்டார்கள், உத்தியோகபற்றற்ற முறையிலான தொடர்பையாவது இரண்டு தரப்பும் பேணலாம், இதன் மூலம் தேவையற்ற குழப்பங்கங்களை தீர்க்கலாமென புலிகள் இந்தியாவிற்கு தகவல் அனுப்பினார்கள். இது 2005 இல் நடந்தது.

 

இந்த தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட்டவர்கள் இருவர். முதலாவது ஆள், நோர்வேயின் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம். இரண்டாவது ஆள், பிரித்தானியாவிலுள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் வடஇந்தியர். அவர் றோ அமைப்பை சேர்ந்தவர். புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் இலண்டனில் தங்கியிருந்தபோது, இந்தியாவுடன் நடந்த உத்தியோகபற்றற்ற பேச்சுக்கள் எல்லாம் இந்த றோ ஆள் மூலம்தான் பாலசிங்கத்துடன் நடத்தப்பட்டது.

உங்களிற்கு நன்றாக நினைவிலுள்ள ஒரு சம்பவத்தை உதாரணமாக சொல்லலாம். 2000 ஆம் ஆண்டு யாழ்ப்பாண குடாநாட்டை புலிகள் கைப்பற்றலாமென்ற நிலைமையிருந்தது. இப்போது இந்தியா தலையிட்டதாக சொல்கிறார்கள் அல்லவா, எப்படி தலையிட்டது தெரியுமா? இந்த றோ ஆள்தான் பாலசிங்கத்திற்கு இந்தியாவின் நிலைப்பாட்டை அறிவித்தார்.

2005 இல் நோர்வே தூதர் எரிக் சொல்ஹெய்ம் புலிகளின் செய்தியை இந்தியாவிற்கு சொன்னார். சொல்ஹெய்ம் ஒரு இராஜதந்திரி. “ம்… பார்க்கலாம்“ என்ற அளவில் அவருடன் இந்தியா அளவாகத்தான் பேசியது.  ஆனால் இலண்டனில் உள்ள றோ ஆள்தான் இந்தியாவின் நிலைப்பாட்டை தெளிவாக சொன்னார். அந்த யோசனையை கேட்டு புலிகள் உண்மையிலேயே ஆடிவிட்டார்கள்.

 

2006 இன் மத்திய பகுதி. அன்ரன் பாலசிங்கம் கடுமையான நோய்வாய்ப்பட்டிருந்த சமயம். சமாதான பேச்சுக்கள் முறிந்து, வன்னியில் படைநடவடிக்கைகள் தீவிரம் பெற தொடங்கியிருந்தது.  தனது இறுதிக்காலம் நெருங்கிவிட்டதை பாலசிங்கம் உணர்ந்திருந்தார். இந்த சமயத்தில் பிரபாகரன்- பாலசிங்கம் உறவிலும் முன்னரை போல சுமுகமிருக்கவில்லை. இந்தியாவை சமாளித்தால்தான் விடுதலைப்புலிகளிற்கு எதிர்காலம் பிரகாசமாகுமென்பதை பாலசிங்கம் உணர்ந்திருந்தார்.  தனது மரணத்திற்கு முன்னர் இந்தியாவை சமாளிக்க விரும்பினார். கடுமையான நோய்வாய்ப்பட்டிருந்த சமயத்திலும் இந்திய மத்திய அரசிற்கு சில தகவல்களை கொடுத்தார். புலிகள் ஒருபோதும் இந்தியாவின் நலன்களிற்கு எதிராக செயற்படாது, இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு  புலிகளை அங்கீகரிக்க வேண்டுமென கேட்டிருந்தார்.

885961142-300x200.jpg எரிக் சொல்ஹெய்ம்

இந்த தகவல்கள் எல்லாம் இலண்டனில் இருந்த றோ ஆளின் மூலம் காங்கிரசின் உயர்மட்டத்திற்கும், சௌத் புளொக் கொள்கை வகுப்பாளர்களிற்கும் சென்றது. அவர்கள் சில வாரம் இந்த விடயத்தில் தீவிர ஆலோசனை நடத்திவிட்டு புலிகளிற்கு பதில் அனுப்பினார்கள். இலண்டன் ஆள் மூலம்தான் அந்த பதில் வந்தது.

“ராஜிவ் கொலை விசயத்தில் பிரபாகரன், பொட்டம்மான் இருவருமே குற்றவாளிகள். இருவரையும் தண்டிக்க வேண்டுமென்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடு. கடந்தகால சம்பவங்களிற்காக புலிகளும் வருந்துகிறார்கள். சில விசயங்களில் விட்டுக்கொடுப்பாகவும் நடக்க தயாராக இருக்கிறார்கள். இந்தியாவும் இதை புரிந்துகொண்டு சில விட்டுக்கொடுப்புக்களிற்கு தயாராக இருக்கிறது. பிரபாகரன் உங்கள் தலைவர். அவரை தண்டிக்கப்போகிறோம் என்பது பொருத்தமில்லாததுதான். இதில் இந்தியா விட்டுக்கொடுப்பாக நடக்கிறது. ஆனால் கண்டிப்பாக பொட்டம்மானை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். அவர் இந்திய சட்டங்களின்படி தண்டிக்கப்படுவார்“

இதுதான் இலண்டனில் இருந்த றோ ஆள், பாலசிங்கத்திற்கு கொடுத்த இந்தியாவின் செய்தி.

இந்த செய்தி பிரபாகரனிற்கு உடனே அறிவிக்கப்பட்டது. இதற்கு மேல் இந்த விடயத்தில் எதையும் பேச பிரபாகரன் தயாராக இருக்கவில்லை. இதனால் 2006 இறுதிக்காலத்துடனேயே இந்த பேச்சு இல்லாமல் போய்விட்டது. இதுதான் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபின்னர் புலிகள் மேற்கொண்ட முதலாவது தொடர்பு முயற்சி.

இதற்கு இரண்டு வருடங்களின் பின்னரே மீண்டும் காங்கிசுடன் புலிகள் தொடர்பை ஏற்படுத்தினார்கள். ப.சிதம்பரம் தமிழராக இருந்ததும், மத்திய அரசில் செல்வாக்கானவராக இருந்ததும் புலிகள் அவரை தொடர்புகொள்ள காரணமாக அமைந்தது.

 

இந்த சமயத்தில் புலிகள் இன்னொரு வழியிலும் இந்தியாவை நெருங்கினார்கள். திமுக அப்போது காங்கிரஸ் கூட்டணியில் இருந்தது. திமுக தலைவர் கருணாநிதியின் புதல்வி கனிமொழி ஒரு கவிஞர். வழக்கமான அரசியல்வாதிகளுடன் ஒப்பிடுகையில் முற்போக்கான சிந்தனையுடையவர். அமெரிக்காவில் உள்ள தமிழ்நாட்டு பேராசிரியர் ஒருவர் மூலம் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசனிற்கும், கனிமொழிக்குமிடையில் தொடர்பு ஏற்பட்டது. ஏற்கனவே சிதம்பரத்திற்கு அனுப்பிய அதே செய்தியை கனிமொழிக்கும் புலிகள் அனுப்பினார்கள். சிதம்பரத்திற்கு அனுப்பிய விவரத்தையும் சொல்லி, சிதம்பரத்தை இந்த விடயத்தில் அக்கறையெடுக்க வலியுறுத்துமாறும் நடேசன் கேட்டுக் கொண்டார்.

செப்ரெம்பரில் சிதம்பரத்திற்கு புலிகள் ஒரு மெசேஜ் அனுப்பினாலும், அது சரணடைவிற்கான சமரசமல்ல. இந்தியாவின் நாடி பிடித்து பார்த்து, புலிகளின் தரப்பில் விட்டுக்கொடுப்பிற்கு தயார் என்ற செய்தியை மத்திய அரசிற்கு முன்னரே தெரியப்படுத்தலாம் என்பதே நோக்கம்.

2009 ஜனவரியில் அமெரிக்கா, ஏப்ரலில் இந்தியா தேர்தல்களை புலிகள் எதிர்பார்த்தார்கள் என்பதையும் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். அமெரிக்காவை இலங்கை விவகாரத்தில் தலையிட வைக்கும் பொறுப்பை குமரன் பத்மநாதன் ஏற்றிருந்தார். அவரிடம் 2008 இல் மீண்டும் சர்வதேச பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டுவிட்டது. மலேசியாவில் இருந்தபடி கே.பி விடயங்களை கையாண்டார். எனினும், அமெரிக்க தலையீட்டு முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. தேர்தலில் வென்றாலும், ஈழ விவகாரத்தில் ஒரு அளவிற்கு மேல் நம்மால் செயற்பட முடியாதென பராக் ஒபாமா தரப்பிலிருந்து கூறப்பட்டிருந்தது.

இராணுவத்தை முன்னகர விடாமல் தடுத்து வைப்பதும் புலிகளிற்கு முடியாத காரியமாக இருந்தது. இந்தியாவிற்கு புலிகள் மெசேஜ் அனுப்பிய பின்னர், 2008 ஒக்ரோபரில் மணியங்குளம், வன்னேரிக்குளம், ஜெயபுரம், நாச்சிக்குடா, கிராஞ்சி, ஜெயபுரம், பூநகரி, வலைப்பாடு என வரிசையாக நகரங்கள் இராணுவத்திடம் விழுந்து கொண்டிருந்தது.

பிரபாகரன் போட்ட ஏழு மாத கணக்கை பற்றி கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம். இந்தியாவிற்கு அனுப்பிய தூது, இந்திய, அமெரிக்க தேர்தல்கள் அனைத்தையும் மனதில் வைத்து, இராணுவத்தின் முன்னகர்வை தடுக்க புலிகள் ஜெயபுரத்தில் பெரும் மண் அணையொன்றை அமைத்திருந்தார்கள். அந்த மண் அணை அமைக்கப்பட்ட விதம், அதை இராணுவம் எப்படி தகர்த்தது என்பது பற்றிய விபரங்களை விலாவாரியாக பின்னர் குறிப்பிடுவோம்.

புலிகள் ஜெயபுரத்தில் இருந்து நாச்சிக்குடா வரை பன்னிரண்டு அடி உயர மண் அணை அமைத்திருந்தனர். இதன் முன்பக்கத்தில் பாரிய குழி. இராணுவம் கவச வாகனத்தில் வர முடியாது. முன்னேறி வரும் இராணுவமும் அந்த குழியை கடந்துதான் மண் அணையில் ஏற முடியும். இதற்குள் மண் அணையின் உச்சத்தில் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ள பதுங்குகுழியில் இருக்கும் புலிகள், இராணுவத்தை சுட்டுவிட முடியும். இந்த மண் அணையில் புலிகளின் அணிகள் நிலைகொண்டிருந்தபோது தளபதி பானு அந்த பகுதிக்கு பொறுப்பாக இருந்தார். இந்த மண் அணையை இராணுவம் கைப்பற்றியது புலிகளின் சரியான திட்டமிடலின்மை காரணமாகவே. மண் அணையை புலிகள் முழுமையாக அமைக்கவில்லை. ஜெயபுரத்திற்கும் பல்லவராயன்கட்டிற்கும் இடைப்பட்ட வெட்டவெளி பகுதியில் 400 மீற்றர் நீளமான பகுதியில் மண் அணை அமைக்கப்படவில்லை. அதுபோல கிராஞ்சிக்கு அண்மையிலிருந்த நீர்ப்பரப்பு ஒன்றிற்கு எதிரிலும் மண் அணை அமைக்கப்படவில்லை. இரண்டு பகுதியிக்குள்ளாளும் இராணுவம் முன்னேறாது என பானு கணக்கிட்டிருந்தார். இரண்டரை மாதம் இந்த மண் அணையை தகர்க்க முடியாமல் இராணுவம் திண்டாடி, இறுதியில் இரவோடு இரவாக இராணுவ அணியொன்று வெட்டவெளியை கடந்து, புலிகள் மண் அணை அமைக்காத பகுதிக்குள்ளால் நுழைந்து, புலிகளின் பெரும் மண் அணையை உடைத்துக்கொண்டு உள்நுழைந்தனர்.

 

சிதம்பரம் மூலம் இந்தியாவுடன் பேச்சு நடத்தும் சமயத்தில் இராணுவத்தால் தொடர்ந்து முன்னேற முடியாதென்ற நிலைமையை ஏற்படுத்த வேண்டுமென புலிகள் திட்டமிட்டதும் நடக்கவில்லை.

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0% புலிகளின் சிறிய மண் அணையொன்றை உடைக்க முயன்ற இராணுவ சிப்பாய்களின் கதி

குறைந்த பட்சம் அமெரிக்க தேர்தல்வரையாவது இராணுவத்தை கிளிநொச்சிக்கு அண்மையாகவும் வராமல் தடுக்க வேண்டுமென புலிகள் நினைத்தார்கள். அதுவும் நடக்கவில்லை.

புலிகளின் சர்வதேச பொறுப்பாளராக குமரன் பத்மநாதன் அப்பொழுது தாய்லாந்து, மலேசியாவில் இருந்து செயற்பட்டார். அமெரிக்க தரப்புடன், கே.பியின் ஆட்கள்தான் பேசினார்கள். பராக் ஒபாமாவின் முதன்மைசெயலாளர் மட்டத்தில் இந்த பேச்சுக்கள் நடந்தன. இந்திய தேர்தலில் பா.ஜ.க வெல்லுமென நிலவிய கணிப்பைத்தான் ஒபாமாவின் வட்டாரங்களும் நம்பினார்கள். பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததும், 2009 மே, யூன் மாதங்களில் இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து, யுத்தத்தை நிறுத்தலாம், அதுவரை எதுவும் சாத்தியமாகும் வாய்ப்பில்லையென்பதை அமெரிக்க தெளிவாக சொல்லிவிட்டது.

இந்த இழுபறிகள் நடந்து கொண்டிருக்க, 2009 ஜனவரியில் இராணுவம் பரந்தன், கிளிநொச்சி நகர்களை கைப்பற்றியது. இந்தியா, அமெரிக்காவை தலையிட வைக்க எந்த இடங்களை இழக்ககூடாதென நினைத்தார்களோ, அந்த இடங்களை இராணுவம் கைப்பற்றிவிட்டது.

நிலைமை கைமீறி போகிறதென நினைத்த நடேசன், பிரபாகரனுடன் ஆலோசிக்காமல் இந்தியாவுடன் ஒரு சமரச முயற்சியில் இறங்கினார். புலிகளின் முக்கியஸ்தர் பாலகுமாரன், சமாதானசெயலக பொறுப்பாளர் புலித்தேவன், கடற்புலிகளின் தளபதி சூசை, நீதித்துறை பொறுப்பாளர் பரா, நிதித்துறை பொறுப்பாளர் தமிழேந்தி உள்ளிட்டவர்களுடன் ஆலோசித்துவிட்டே முயற்சியை ஆரம்பித்தார். மலேசியாவிலிருந்த கே.பிக்கும் விசயத்தை சொன்னார்கள். நடேசன் வன்னியிலிருந்து ஒரு முனையில் சமரச முயற்சியை நகர்த்த, கே.பி இன்னொரு தரப்பினூடாக சமரச முயற்சியில் ஈடுபடுவதாக முடிவானது.

நடேசன் உடனடியாகவே காரியத்தில் இறங்கினார். காங்கிரசை அணுக நடேசன் தேர்வுசெய்தது ஒரு பெண்ணை!

அவர் யார்? நடேசனின் முயற்சிக்கு இந்தியாவின் ரியாக்சன் எப்படியிருந்தது? பிரபாகரன் அதை அறிந்தாரா? இவற்றை பற்றி அடுத்தவாரம் குறிப்பிடுகிறேன்.

(தொடரும்)

 

http://www.pagetamil.com/641/

  • கருத்துக்கள உறவுகள்

உதை யார் எழுதுவது ?  டி பி எஸ்ஸா ?

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ரதி said:

உதை யார் எழுதுவது ?  டி பி எஸ்ஸா ?

 

யாரோ!

யாழ் களத்தில் உள்ள ஜாம்பாவான்கள்தான் உண்மை பொய்களைக் கண்டறியவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள்  சமரசங்களுக்கு தயாராக  இருக்கவில்லை

கடைசிவரை 

மார்தட்டி  நின்று அழிந்து போனார்கள்  என்பவர்களுக்கு  வேண்டுமானால் இது  செய்தியாகலாம்....

மற்றும்படி

ஒரு பிடியாவது  தமிழர்களது  தாகம் சார்ந்து சர்வதேச வாக்குறுதியை  பெறவும்

யுத்தத்தை  நிறுத்தவும்

மக்கள் அழிவை  தடுக்கவும்

அவர்களது  எல்லா  வளங்களையும்  

ஒவ்வொரு  செக்கன்களையும்  பயன்படுத்தினார்கள் என்பது தான் வரலாறு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியில் குறிவைக்கப்பட்ட பிரபாகரன்; தகவல் வந்தது அமெரிக்காவில் இருந்து!- இந்தியா கொடுத்த புரபோஷல் 03

April 6, 2018
27541082_1823140264405504_80019725521636

மலேசியா வழியாக புலிகளிற்கு அனுப்பப்பட்ட சற்றலைற் போனில் விசயமிருந்தது!

பீஷ்மர்

தி.மு.க தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழிக்கும் விடுதலைப்புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் நடேசனிற்குமிடையில் பேச்சுவார்த்தைகள் நடந்ததாக ஒரு செய்தி வெளியாகியிருந்ததை அறிந்திருப்பீர்கள். அமெரிக்காவில் உள்ள பேராசிரியர் ஒருவர் மூலம் நடேசனிற்கும், கனிமொழிக்குமான தொடர்புகள் ஏற்பட்டதை கடந்த அத்தியாயங்களில் குறிப்பிட்டிருந்தோம்.

யுத்தம் முடிந்த பின்னர்தான் இந்த பேச்சு விபரங்கள் வெளியில் கசிந்தன. இரு தரப்பிலிருந்தும் பரிமாறப்பட்ட கடிதங்கள் சிலவும் வெளியாகின. இந்த கடிதங்கள் லீக் ஆனதில் அதிகம் அப்செற் ஆனவர் கனிமொழி. புலிகள் விடயத்தில் தி.மு.க வேடம்போட்டது என்ற அப்பிராயம் சாதாரண மக்களிடம் ஏற்பட்டதில் இந்த கடித பரிமாற்ற விசயம் லீக் ஆனதும் முக்கிய பங்குவகித்தது. இந்த தொடர்பில் சம்பந்தப்பட்ட இருவர் நடேசன், கனிமொழி. இறுதிப்போரில் நடேசன் மரணமாகி விட்டார். விசயம் வெளியாவதென்றால், தன்னைத்தவிர வேறு வழியில்லையென கனிமொழி நினைத்திருந்தார். அவர் வாயே திறக்காமலிருந்த, நடேசனுடனான கடித பரிமாற்றங்கள் லீக் ஆனது அவரை அதிர்ச்சியடைய வைத்தது. எப்படி அந்த விசயங்கள் லீக் ஆனதென்பதை கடைசியில் சொல்கிறோம்.

 

2009 ஜனவரியில் பரந்தன் நகரத்தை இராணுவத்தின் 58வது டிவிசன் கைப்பற்றியது. அடுத்தடுத்த நாட்களில் கிளிநொச்சி நகரும் இராணுவத்திடம் விழுந்தது. கிளிநொச்சி நகரை மையமாக வைத்து புலிகள் ஒரு இராஜதந்திர விளையாட்டை செய்ய விரும்பியிருந்தார்கள். கிளிநொச்சியை இராணுவத்தால் பிடிக்க முடியாது, யுத்தம் தொடர்வது வீணாண உயிரிழப்பைத்தான் ஏற்படுத்தும் என்பதை சொல்லாமல் சொல்லும் இராஜதந்திர விளையாட்டை செய்தார்கள். இதற்காக கிளிநொச்சியை சுற்றி பெரும் மண்அணைகளை அமைத்து, இராணுவம் உள்நுழைய முடியாதபடி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். கிளிநொச்சியை கைப்பற்றுவது உண்மையிலேயே இராணுவத்திற்கு தலையிடியாகத்தான் இருந்தது.

கிளிநொச்சியை சுற்றியுள்ள மண் அணைகளை உடைக்க முடியாதென்பதை தெரிந்ததும், கரடிப்போக்கில் ஏ9 பிரதானவீதியை சந்தடியில்லாத நகர்வு மூலம் இராணுவம் கைப்பற்றி, பரந்தனையும் கிளிநொச்சியையும் வீழ்த்தினர்.

kanimozhi-250x300.jpg கனிமொழி

நிலைமை கட்டுமீறி போவதை உணர்ந்த நடேசன் ஒரு இரகசிய பேச்சு முயற்சியை ஆரம்பித்தார். நடேசன் இப்படியொரு முயற்சியை ஆரம்பிப்பதற்கு காரணமாக இருந்தவர் கே.பி. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தை சேர்ந்தவர்களுடனும் கே.பி அப்போது பேசிக்கொண்டிருந்தார். இதை பிரபாகரனிற்கும் தெரியப்படுத்தியிருந்தார். ஆனால் சரணடைவு மூலமே சமாதானத்தை ஏற்படுத்தலாம் என்பது போன்ற பேச்சுக்கள் எதுவும் அப்பொழுது நடக்கவில்லை.

ஆனால், 2009 ஜனவரியிலேயே புலிகளை சரணடைய வைத்தாவது யுத்தத்தை நிறுத்தும் முயற்சியை கே.பி ஆரம்பித்து விட்டார்!

 

2009 ஜனவரியில் அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகளிற்கு கே.பி ஒரு புரபோஷலை அனுப்பியிருந்தார். அமெரிக்கா கப்பல் புலிகளை ஏற்ற வருகிறதென பின்னாளில ஒரு கதை உலாவியதே, இந்த புரபோஷல்தான் அந்த கதையை உருவாக்கியது!

அமெரிக்க புரபோஷல் பற்றிய விபரங்களை பின்னர் குறிப்பிடுகிறேன். அமெரிக்காவுடன் ஒரு பக்கமாக பேச்சை ஆரம்பித்ததை போல, இந்தியாவுடனும் பேச்சை ஆரம்பிக்க வேண்டுமென வன்னியிலிருந்த நடேசனை தொடர்பு கொண்டு கே.பி சொன்னார். கிளிநொச்சியின் வீழ்ச்சியுடன், யுத்தத்தை இனி வெல்ல முடியாதென்ற அபிப்பிராயம் நடேசனிற்கு வந்துவிட்டது. எப்படியாவது ஒரு சமரச முயற்சியை செய்ய வேண்டுமென நடேசன் யோசித்துக் கொண்டிருந்த சமயத்தில்தான், கே.பி பேசினார்.

இந்திய மத்திய அமைச்சர் சிதம்பரத்திற்கு, மலேசிய வர்த்தக புள்ளியொருவர் மூலம் புலிகள் 2008 செப்ரெம்பரில் ஒரு தகவல் அனுப்பினார்கள் என்பதை கடந்த அத்தியாயங்களில் குறிப்பிட்டிருந்தோம். ஒரு மாதத்தில் புலிகளுடனான சகல தொடர்பையும் அந்த வர்த்தகபுள்ளி துண்டித்து விட்டார். தனிப்பட்ட தொலைபேசி இலக்கத்தையும் மாற்றிவிட்டு, அலுவலகத்தை தொடர்புகொண்டாலும் “Boss இல்லை“ என்பதை போன்ற பதிலை சொல்ல வைத்தார். அதற்கு காரணம்- மலேசிய உளவுத்துறை!

 

புலிகளின் செய்தியொன்றை அந்த மலேசிய பிரபலம் சிதம்பரத்திற்கு பாஸ் பண்ணிய விவகாரம் மலேசிய உளவுத்துறைக்கு ஒரு வாரத்திற்குள் கிடைத்துவிட்டது. மலேசிய உளவுத்துறை புலிகளின் இந்திய தொடர்பை ட்ரக் பண்ணிக்கொண்டும் இருக்கவில்லை. அவர்களிற்கு இது முக்கியமில்லாத விசயம். ஆனால், நாட்டிற்கு அத்தியாவசியமான விசயத்தைபோல எப்படி இதை ட்ரக் பண்ணி பிடித்தார்கள்?

2009 மே வரை புலிகளும் இந்த விசயத்தில் தலையை பிய்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் விடை கிடைக்கவில்லை. இன்று வரை மர்மமாக உள்ள விசயங்களில் அதுவும் ஒன்று.

புலிகளிற்கும் இந்தியாவிற்குமிடையில் தூதராக செயற்பட்ட வர்த்தகரை மலேசிய உளவுத்துறை ஏன் தடுத்தது? அவர் தூதராக செயற்படுகிறார் என்ற விசயத்தை மலேசிய உளவுத்துறைக்கு தெரிவித்தது யார்?

புலிகள் இயக்கம் அழியும்வரை இதற்கான விடையை தேடினார்கள். கடைசி நேர நெருக்கடியில் இதற்கு சரியான பதிலை கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் அப்பொழுது புலிகளிற்கு ஒருவர் மீது உறுதிப்படுத்தப்படாத சந்தேகம் இருந்தது.

அவர் கே.பி!

மலேசிய வர்த்தக புள்ளியின் மூலம் புலிகளும் இந்தியாவும் நெருங்கி வரலாம் என்ற சூழ்நிலை இருந்தது. இந்த சமரச முயற்சியை உடனடியாக நிறுத்தாவிட்டால், புலிகள் அனுகூலமடைய வாய்ப்புண்டு. இதையெல்லாம் தெரிந்த ஒருவர்தான், புகுந்து விளையாடியிருக்க வாய்ப்புண்டு. உள்ளேயிருந்த யாரோதான் டபிள்கேம் ஆடியிருக்கிறார்கள் என்பது புலிகளிற்கு தெரிந்தது. அவர் யார்?

2008 ஒக்ரோபரில் இருந்தே கே.பி மீது புலிகளிற்கு ஒரு சந்தேகம் இருந்து கொண்டிருந்தது. புலிகளின் வெளிநாட்டு உளவுப்பிரிவு நெட்வேர்க்கிலிருந்து கே.பி சம்பந்தமான சில இரகசிய தகவல்கள் பொட்டம்மான் மூலமாக பிரபாகரனின் காதிற்கு போயிருக்கிறது. வெளிநாட்டு உளவுப்பிரிவுகளின் மூலம் இலங்கை உளவுப்பிரிவிற்கு கே.பியுடன் தொடர்பு ஏற்பட்டு விட்டது, அவர்களது திட்டப்படியே அவர் இயங்குகிறார் என்பதே அவர்கள் அனுப்பிய தகவல்.

ee-300x225.jpg கே.பி

என்றாலும், பிரபாகரன் இதை அவ்வளவாக நம்பவில்லை. இன்னும் முழுமையாக உறுதிப்படுத்தும்படிதான் பதில் சொன்னார். அப்போதைய நெருக்கடியான சமயத்தில் இப்படியான பஞ்சாயத்தொன்றை அவர் விரும்பிபாலிருந்திருக்கலாம். கே.பியின் உயர்மட்ட பொறுப்பாளர்கள் யாராவது வெளிநாட்டு உளவுப்பிரிவுகளுடன் தொடர்பை வைத்திருந்திருக்கவும் வாய்ப்புள்ளது, ஏற்கனவே ஒருமுறை கே.பி மீது வீணாண சந்தேகம் கொண்டு அவரை ஒதுக்கியது பிரபாகரனின் மனதில் இருந்ததால், இம்முறை வந்த குற்றச்சாட்டை அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை.

என்றாலும், சில எச்சரிக்கையான நடவடிக்கைகள் எடுத்திருந்தார். கே.பியுடன் அல்லது அவரது நெற்வேர்க்கில் உள்ள யாருடனும் 2009 ஜனவரியின் பின்னர் செய்மதி தொலைபேசியில் பிரபாகரன் பேசியதில்லை.

 

அவசியமான தகவல் என்பதால் இடையில் இன்னொரு கொசுறு தகவலையும் சொல்லிவிடுகிறேன். இதுவும் புலிகளின் செய்மதி தொலைபேசிகள் பற்றிய செய்திதான்.

புலிகள் இயக்கத்திற்காக முதன்முதலில் செய்மதி தொலைபேசிகள் வாங்கப்பட்டது மலேசியாவில். அது மலேசிய உரிமையாளரின் நிறுவனமல்ல. அமெரிக்க செய்மதி தொலைபேசி நிறுவனத்தின் சப் டீலர் நிலையமே மலேசியாவில் இயங்கியது. ஒரே தடவையில் அதிக தொலைபேசிகளை வாங்குவது யாரையும் சந்தேகம் கொள்ள வைக்கும். புலிகள் முதல்முறை வாங்கியது ஐம்பது தொலைபேசிகள்!

2006 இன் பின்னர் புலிகளின் பல இலக்குகள் மீது இலங்கை விமானப்படை துல்லிய தாக்குதலை நடத்தியிருந்தது. இதில் புலிகளிற்கு கணிசமான சேதம் ஏற்பட்டது. புலிகளின் உயர்மட்ட தலைவர்களின் இருப்பிடங்களும் தாக்குதலிற்கு இலக்கானது. பிரபாகரனை குறிவைத்து இரண்டு தடவைகளும், பொட்டம்மானை குறிவைத்து ஒரு தடவையும் விமானத்தாக்குதல்கள் நடந்தன.

ஒருமுறை மிக் விமானங்கள் தாக்குதல் நடத்தியபோது அந்த முகாமில் பிரபாகரனும் இருந்தார்!

2050308-300x203.jpgஇன்னொரு தாக்குதலில் மனைவி மதிவதனி, கடைசி மகன் பாலச்சந்திரன் சிக்கினார்கள். அதிர்ஸ்டவசமாக இரண்டு தாக்குதலிலும் அவர்கள் தப்பித்தார்கள். பொட்டம்மானின் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது, அவர் திடீரென வெளியில் சென்றதால் தப்பித்து கொண்டார். முகாம் முற்றாக அழிந்ததுடன், பல போராளிகள் மரணமானார்கள்.

 

இந்த தாக்குதல்கள் பொதுவான இலக்குகள் மீதான தாக்குதல் அல்ல, யார் மீது தாக்குதல் நடத்துகிறோம் என்பதை விமானப்படை தெரிந்து கொண்டே தாக்குதல் நடத்தியது என்பதுதான் புலிகளை அதிர்ச்சியடைய வைத்தது. பின்னர்தான் புலிகள் சுதாகரித்து விசயத்தை ஊகித்து பிடித்தனர். அமெரிக்க நிறுவனத்தின் செய்மதி தொலைபேசியில் இருந்தது விசயம்!

பெருந்தொகையில் செய்மதி தொலைபேசிகள் ஒரு தடவையில் விற்பனையானது அந்த அமெரிக்க நிறுவனத்திற்கு சந்தேகத்தை ஏற்படுத்த, அவர்கள் அந்த தொலைபேசிகளில் இருந்து மேற்கொள்ளப்பட்ட உரையாடல்களை Track பண்ண ஆரம்பித்தார்கள். அப்பொழுதுதான் புலிகளின் பாவனையில் தமது தொலைபேசிகள் இருந்தது அந்த நிறுவனத்திற்கு தெரிய வந்தது. இந்த தகவல் அமெரிக்கா உளவுப்பிரிவான சி.ஐ.ஏக்கு சென்றது. புலிகளின் முன்னாள் சர்வதேச நெற்வேர்க்கில் இருந்தவர்களின் ஒரு பகுதியினரை கையாளும் சி.ஐ.ஏ குழுவிற்கு இந்த விடயம் அனுப்பப்பட, தொலைபேசிகளை யார் பாவிக்கிறார்கள், பாவிக்கப்படும் லொக்கேஷன் போன்ற விபரங்கள் கொழும்பிற்கு வந்தன!

இதற்கு பின்னர்தான் அந்த தொலைபேசிகளை தவிர்த்துவிட்டு துரையா (thuraya) வகையை பாவிக்க தொடங்கினார்கள்.

சரி, இப்பொழுது விசயத்திற்கு வருவோம். இந்தியாவுடன் ஒரு சமரச முயற்சியை மேற்கொள்ள கனிமொழியை அணுக நடேசன் முடிவெடுத்தார். அமெரிக்க பல்கலைகழக பேராசிரியர் ஒருவர் மூலமாக அந்த தொடர்பு கிடைத்ததென்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். அப்பொழுது மத்தியில் ஆட்சி செய்த காங்கிரசின் பங்காளியாக தி.மு.க இருந்தது.

“எப்படியாவது யுத்தத்தை நிறுத்த வேண்டும். மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் மக்களின் அழிவை தடுக்க வேண்டிய பொறுப்பு இந்தியாவிற்கும் உள்ளது. மக்களின் உயிரிழப்பை தடுப்பதற்கு உடனடியாக யுத்த நிறுத்தம் அமுல்செய்யப்படுவதுதான் ஒரேவழி. யுத்த நிறுத்தம் செய்ய புலிகள் தயாராக இருக்கிறார்கள். இலங்கை விடாப்பிடியாக இருந்தாலும், அதை வழிக்கு கொண்டுவர இந்தியாவால் முடியும். சில எதிர்பாராத விட்டுக்கொடுப்புக்களிற்கும் நாம் தயாராக இருக்கிறோம்“

இதுதான் கனிமொழிக்கு முதன்முதலாக வாய்மொழியாக கொடுக்கப்பட்ட செய்தி.

கனிமொழி நிஜமாகவே புலிகளிற்கு உதவ வேண்டுமென நினைத்தாரா என்பதை நம்மால் இன்றுவரை உறுதியாக சொல்ல தெரியவில்லை. கனிமொழி இதை பற்றி வாய்திறந்தால்தான் அதை தெரிந்து கொள்ளலாம். ஆனால் நடேசனுடன் முதன்முதலில் தொலைபேசிய பின்னர், உடனடியாக டி.ஆர்.பாலுவுடன் தீவிரமாக ஆலோசனை செய்தார். தி.மு.கவை சேர்ந்த டி.ஆர்.பாலுவும் அப்போது மத்திய அமைச்சரவையில் கபினெற் அமைச்சராக இருந்தார். அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அன்ரனியும், டி.ஆர்.பாலுவும் கூட்டாக கேரளாவில் வர்த்தக பங்காளிகளாக இருந்தனர். இது கனிமொழிக்கும் தெரியும். அதனால்தான் பாலுவுடன் இதைப்பற்றி பேசினார்.

 

டி.ஆர்.பாலுவும் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அன்ரனியை சந்தித்து பேசினார். ஆனால் ஆரம்பத்திலேயே அன்ரனி இதில் தயங்கினார். காரணம், அன்ரனி மத்திய அரசில் அவ்வளவு செல்வாக்கானவர் கிடையாது.  சிரேஷ்ட தலைவர் என்றபோதும் decision maker ஆக இருக்கவில்லை. அது ஏ.கே.அன்ரனிக்கும் தெரியும். ஆனால், காங்கிரஸ் தலைமையுடன் பேசிப்பார்த்து விட்டு சொல்கிறேன் என்றிருக்கிறார். அவர் பேசினாரா இல்லையா என்பது யாருக்கும் தெரியாது. ஒருவாரத்தின் பின்னர், காங்கிரஸ் தலைமை யுத்த நிறுத்தத்திற்கு தயாராக இல்லை என்ற செய்தியை டி.ஆர்.பாலு மூலமாக கனிமொழிக்கு அறிவித்தார்.

இதற்கு பின்னர்தான் ப.சிதம்பரத்தை கனிமொழி அணுகினார். ப.சிதம்பரம் ஒரு decision maker ஆக இருந்தார். ஏற்கனவே மலேசிய வர்த்தகர் மூலம் புலிகளிற்கும் சிதம்பரத்திற்குமிடையில் indirect தொடர்பொன்று ஏற்பட்டிருந்தது. கனிமொழி தொடர்புகொண்டபோது, இது சிதம்பரத்திற்கு புதிய விசயமாக இருக்கவில்லை. காங்கிரஸ் உயர்மட்டத்தில் அவர் இதைப்பற்றி முன்னரே பேசியிருக்க வேண்டும். இந்த பேச்சில் நேரடியாக ஈடுபவதில் கனிமொழி ஏதோ அசௌகரியத்தை உணர்ந்திருக்க வேண்டும். நாம் முன்னர் குறிப்பிட்ட அமெரிக்க பேராசிரியர் (கனிமொழியின் நண்பர். நடேசன்- கனிமொழி தொடர்பை ஏற்படுத்தியவர்) சிதம்பரத்துடன் பேசும் ஏற்பாட்டை செய்து கொடுத்தார்.

அந்த அமெரிக்க பேராசிரியர் ஊடாக சிதம்பரம் புலிகளிற்கு அனுப்பிய முதலாவது தகவல்- “மக்கள் கொல்லப்படுகிறார்கள். புலிகளும் நெருக்கடியை சந்திக்கிறார்கள். இந்த சமயத்தில் நாம் (இந்தியா) தலையிடுவதென்றால் சில விசயங்களில் தெளிவான அபிப்பிராயத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். நீங்கள் (புலிகள்) தனிஈழக் கோரிக்கையை வைத்திருக்கும் வரை இந்தியாவால் உங்களிற்கு உதவ முடியாது. நீங்கள் தனிஈழ கோரிக்கையை கைவிட தயாரா?“ என்பதே.

(தொடரும்)

 

http://www.pagetamil.com/666/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் திட்டத்தை நிராகரித்ததற்கு பிரபாகரனின் கல்யாண வாக்குறுதியும் காரணம்!! – இந்தியா கொடுத்த புரபோஷல் 04

April 6, 2018
18sld11.jpg

பீஷ்மர்

அமெரிக்க பேராசிரியர் ஒருவரின் ஊடாக இந்திய மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை நடேசன் தொடர்பு கொண்டார் என்பதை கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தேன்.  புலிகளின் தகவலையடுத்து ப.சிதம்பரம் உடனடியாகவே புலிகளிற்கு தொடர்பாளர்கள் மூலம் ஒரு தகவல் அனுப்பினார். அது- “மக்கள் கொல்லப்படுகிறார்கள். புலிகளும் நெருக்கடியை சந்திக்கிறார்கள். இந்த சமயத்தில் நாம் (இந்தியா) தலையிடுவதென்றால் சில விசயங்களில் தெளிவான அபிப்பிராயத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். நீங்கள் (புலிகள்) தனிஈழக் கோரிக்கையை வைத்திருக்கும் வரை இந்தியாவால் உங்களிற்கு உதவ முடியாது. நீங்கள் தனிஈழ கோரிக்கையை கைவிட தயாரா?“ என்பதே.

இது நடந்தது 2009 ஜனவரி மத்தியில். அப்பொழுது கிளிநொச்சி முழுமையாக வீழ்ச்சிடைந்து விட்டது. தமது ராஜதந்திர நகரத்தை வைத்து புலிகளால் பேரம் பேச முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது. கிளிநொச்சியை இழந்த பின்னர் புலிகள் பேரம் பேச முடியாது, நமது ஆலோசனைகளை கேட்டு நடக்க வேண்டும் என்ற தொனி ப.சிதம்பரம் அனுப்பிய தகவலில் தெரிந்தது. இது புலிகளிற்கு தெரியாதது அல்ல. ஆனாலும், அவர்களால் எதுவும் செய்ய முடியாத நிலைமை. காரணம், இந்திய தகவல் புலிகளிற்கு கிடைத்த சமயத்தில் தர்மபுரத்தை இராணுவம் கைப்பற்றியிருந்தது.

 

ப.சிதம்பரத்தின் தகவல் பிரபாகரனிற்கும் உடனடியாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் அந்த தகவல் கிடைத்ததை போலவே காட்டிக் கொள்ளவில்லை. இந்த வகையான சரணடைவு, கொள்கையில் விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கள் பிரபாகரனிற்கு பிடிப்பதில்லை. ஆயுதத்தை தூக்கிய பின்னர் தனது கொள்கையிலிருந்து பிரபாகரன் விலகியதில்லை. விட்டுக்கொடுத்ததுமில்லை. பிரபாகரனது திருமண சமயத்தில் புலிகளிற்குள் ஒரு குழப்பம் ஏற்பட்டது. அதுவரை, புலிகளிற்குள் யாரும் திருமணம் செய்யக்கூடாதென்ற இறுக்கமான விதி இருந்தது. உமாமகேஸ்வரன், ஊர்மிளாவுடன் நெருக்கமாக பழகினார் என்பதற்காகவே புலிகளை விட்டு வெளியேற்றப்பட்டிருந்தார். இப்பிடியான நிலையில் பிரபாகரன் திருமணம் செய்வதை அமைப்பிற்குள் ஏற்பார்களா?

Image result for srilankan army capture kilinochi கிளிநொச்சியை கைப்பற்றிய இலங்கை இராணுவம்

இல்லை. ஏற்கவில்லை. தளபதிகள், போராளிகளிற்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டது. அன்ரன் பாலசிங்கம்,பொன்னம்மான், விக்டர் ஆகியோர் பிரபாகரனின் திருமணத்தை ஆதரித்தார்கள். மாத்தையா, சந்தோசம், குமரப்பா  போன்ற ஏனைய மத்திய குழு உறுப்பினர்கள் இதை ஆதரிக்கவில்லை. அப்பொழுது தமிழகத்திலும், இலங்கையிலும் போராளிகள் முகாமைத்து தங்கியிருந்தனர். இரண்டு இடங்களிலுமுள்ளவர்களை சமரசப்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் இருந்த மூத்த போராளிகளுடன் முதலில் அன்ரன் பாலசிங்கம் பேசினார். பின்னர் ஒவ்வொரு முகாமாக பொன்னம்மான் சென்று, போராளிகளுடன் பேசினார். பிரபாகரன் பேசி ஒலிப்பதிவு செய்யப்பட்ட ஒலிநாடா ஒன்றை போராளிகள் மத்தியில் ஒளிபரப்பினார்கள். அந்த ஒலிநாடாவில் பிரபாகரனின் பேச்சு இப்படித்தான் முடிந்தது- “நான் திருமணம் செய்வதால், தமிழீழ கோரிக்கைக்கோ, இயக்கத்திற்கோ துரோகம் செய்யமாட்டேன். இந்த இரண்டில் ஏதாவது ஒன்றிலிருந்தாவது நான் விலகினாலும், அமைப்பிலுள்ள யாராவது என்னை சுடலாம்“.

 

இன்னொரு சம்பவத்தையும் குறிப்பிட வேண்டும். இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன தொடரில் இதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தாலும், புதிய வாசகர்களிற்காக மீண்டும் குறிப்பிடுகிறேன்.

2007 இல் நடந்தது. சமாதான பேச்சுக்கள் குழம்பி மீண்டும் யுத்தம் ஆரம்பித்திருந்தது. புலிகளின் முக்கியஸ்தரான பாலகுமாரன் ஒரு கடிதம் பிரபாகரனிற்கு அனுப்பியிருந்தார். அதில் யுத்தத்தை நிறுத்தி சமாதான பேச்சு மேற்கொள்ள வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த கடிதத்திற்கு பிரபாகரன் பதிலளிக்கவில்லை. தான் அனுப்பிய கடிதம் பிரபாகரனிற்கு போய் சேர்ந்ததா, படித்தாரா இல்லையா என ஒன்றும் தெரியாமல் பாலகுமாரன் திண்டாடிக் கொண்டிருந்தார். பாலகுமாரன் புலிகளின் முக்கியஸ்தர் என்று அழைக்கப்பட்டாலும், முடிவெடுக்கும் வட்டத்திற்குள்ளோ, பிரபாகரனிற்கு நெருக்கமாகவோ இருக்கவில்லை. அதனால் எந்த தகவலையும் நினைத்த வேகத்தில் பிரபாகரனிடம் அவரால் சேர்ப்பிக்க முடியாது.

உண்மையில் அந்த கடிதம் பிரபாகரனிடம் உடனே சேர்ப்பிக்கப்பட்டு விட்டது. அதை படித்த பின்னர், வேண்டுமென்றே பாலகுமாரனுடனான தொடர்பை பிரபாகரன் துண்டித்திருந்தார். பாலகுமாரனுடன் தொலைதொடர்பு சாதனங்களில் பேசிக்கொள்ளும் அளவிற்கு நெருங்கிய வட்டத்திற்குள் பிரபாகரன் வைத்திருக்கவில்லை. எங்காவது நிகழ்வுகள், அரசியல்துறை சந்திப்புக்களிலேயே பேசிக்கொள்வார். அது யுத்த சமயம் என்பதாலோ என்னவோ, பாலகுமாரனும் பிரபாகரனும் நீண்டநாட்களாக நேரில் சந்தித்து கொள்ளவில்லை. இது பாலகுமாரனிற்கு சங்கடத்தை கொடுத்தது. வேண்டுமென்றேதான் பிரபாகரன் தன்னை சந்திப்பதை தவிர்க்கிறார் என நினைத்தார்.

Image result for க.வே.பாலகுமாரன்

இந்த சம்பவங்கள் நடந்த சில மாதங்களின் பின்னர் வட்டக்கச்சியில் சாள்ஸ் அன்ரனி படையணியின் ஆண்டு நிறைவு விழா நடந்தது. புலிகளின் முக்கியஸ்தர்கள் எல்லோரும் கலந்து கொண்ட நிகழ்வில் பிரபாகரனும் கலந்து கொண்டார். பிரபாகரனிற்கு அருகில் உட்காரும் வாய்ப்பு பாலகுமாரனிற்கு கிடைக்கவில்லை. பாலகுமாரனை கண்டதை போல, பிரபாகரனும் காட்டிக்கொள்ளவில்லை.

நிகழ்வின் இறுதியில் பிரபாகரன் புறப்பட்டார். பாலகுமாரனை அவர் கணக்கெடுக்கவேயில்லை. பிரபாகரனிற்கு முன்னால் சென்ற பாலகுமாரன் “தம்பி… ஒரு கடிதம் அனுப்பியிருந்தனான். கிடைத்ததா?“ என்றார். அப்பொழுதுதான் பாலகுமாரனை பார்பவரைபோல பார்த்து சிரித்துவிட்டு,   பார்த்து “பாலகுமாரண்ணைக்கு ஒரு சி.டி கொடுத்து விடுங்கள்“ என்றுவிட்டு போய் விட்டார்.

 

உதவியாளர் ஒரு சிடி கொடுத்தார். ஏதாவது சமரச திட்ட எழுத்து வடிவங்களாக இருக்குமோ என்றும் பாலகுமாரன் யோசித்தார். வீட்டுக்கு சென்று, சிடியை போட்டால், அது ஒரு திரைப்படம்!

படத்தின் டைட்டிலை பார்த்ததுமே, பாலகுமாரனிற்கு முகம் இருண்டது. பாலகுமாரனது யோசனைக்கு பிரபாகரன் ஒரு திரைப்படத்தின் மூலம் பதிலளித்திருக்கிறார், அது சாகப் பயந்தவர்களின் யோசனை என்பதை போன்ற செய்தியை சொல்லும் திரைப்படம் அது.

அந்த திரைப்படம் முன்னூறு வீரர்கள்- ஸ்பாட்டன்ஸ்!

பிரபாகரனிற்கு மிக பிடித்தமான திரைப்படம். தமது அமைப்பிலிருக்கும் ஒவ்வொரு போராளியும் இந்த திரைப்படத்தை பார்த்திருக்க வேண்டுமென விரும்பினார்.அது புலிகளால் தமிழாக்கம் செய்யப்பட்டது. இந்த திரைப்படத்தை பல பத்து தடவைகளிற்கு மேல் பிரபாகரன் பார்த்து விட்டார். கிரேக்க வரலாற்று கதையே இந்த திரைப்படம்.

இந்தியா புலிகளை சரணடைய வைக்க தயாரித்த திட்டம் குறித்த கட்டுரையில், இந்த இரண்டு சம்பவங்களையும் குறிப்பிட்டதற்கு காரணம் உள்ளது. பிரபாகரனின் மனநிலையை தெரிந்துகொள்ளாமல், இந்தியா இந்த விடயத்தை கையாண்டது, அதனால்தான் இந்திய யோசனை வெற்றியடையவில்லை என்பதை குறிப்பிடவே அவற்றை சொன்னேன்.

 

ப.சிதம்பரத்தின் செய்தி கிடைத்த பின்னரும், பிரபாகரன் எந்த ரியாக்ஷனும் இல்லாமல் இருந்தது நடேசனிற்கு சங்கடமாக இருந்தது. பிரபாகரனுடன் பேசிவிட்டு, விரைவில் பதில் தருகிறேன் என தொடர்பாளர்களிடம் கூறிவிட்டு, பிரபாகரனை தொடர்பு கொள்ள முடியாமல் இருப்பது நல்லதல்ல என யோசித்துவிட்டு, ஒருநாள் பிரபாகரனை நேரில் சந்தித்து, சிதம்பரத்தில் செய்தி தொடர்பாக பேசினார். மறுநாள், புதுக்குடியிருப்பில் இதைப்பற்றி ஆராயலாம் என்றார் பிரபாகரன்.

2009 ஜனவரி மத்தி. புதுக்குடியிருப்பில் (மிகச்சரியாக சொன்னால் புதுக்குடியிருப்பு-ஒட்டுசுட்டான் வீதியில் கிழக்கு பக்கம் அமைந்திருந்த கணினி பிரிவின் முகாமில் நடந்தது. அந்த முகாமில்தான் நீச்சல் தடாகம் இருந்தது. பிரபாகரன், பாலசந்திரன் நீச்சல் தடாகத்தில் உள்ள படம் இணைத்துள்ளோம். இந்த முகாமில்தான் எடுக்கப்பட்டது. புதுக்குடியிருப்பு- ஒட்டுசுட்டான் வீதியின் மேற்கு பக்கமாக இருந்த நிலக்கீழ் பதுங்குகுழியை கொண்ட பிரபாகரனின் முகாம் மக்கள் பார்வைக்காக முன்னர் திறந்து விடப்பட்டிருந்தது. இந்த சந்திப்பு நடந்த முகாமை மக்கள் பார்வைக்காக இராணுவம் திறந்து விடவில்லை)

 

article-2114461-12270189000005DC-920_468

 

பிரபாகரன், பொட்டம்மான், நடேசன், சூசை, பானு, கஸ்ரோ, தமிழேந்தி ஆகிய ஏழுபேர் கலந்து கொண்ட உயர்மட்ட கலந்துரையாடல் நடந்தது. இந்த சந்திப்பில் பிரபாகரன் மிக கடினமாக கதைத்தார். “இராணுவத்தின் முன்னகர்வை தடுத்து நிறுத்த முடியாவிட்டால், இயக்கத்தின் அழிவை யாராலும் தடுக்க முடியாது, என்னிடம் ஏதாவது திட்டம் இருக்கிறதென யாரும் நினைக்காதீர்கள். என்னிடம் எந்த திட்டமும் இல்லை. நீங்கள் ஏதாவது செய்யதால்தான் உண்டு“ என வெளிப்படையாக பேசினார்.

உடனடியாக தேவைப்படும் ஆயுதங்கள் கிடைக்காமல் இராணுவத்தை தடுத்து நிறுத்துவது சிரமம் என்ற கள யதார்த்தத்தை உடைக்க, ஏதாவது செய்ய வேண்டுமென சூசை, கஸ்ரோவிடம் மற்ற தளபதிகள் கேட்டு கொண்டனர். அதாவது வெளிநாட்டில் இருந்து கப்பலில் ஆயுதங்கள் கொண்டுவர வேண்டும். இனி அதற்கான வாய்ப்பு கிட்டத்தட்ட இல்லையென சூசை வெளிப்படையாகவே சொன்னார்.

கள யதார்த்தத்தை கூட்டிக்கழித்து பார்த்து, தமிழீழ கோரிக்கையை கைவிட நாம் தயாராக இருக்கிறோம் என்ற செய்தியை இந்தியாவிற்கு அறிவிப்பதென முடிவெடுக்கப்பட்டது.

Image result for à பா.நடேசன்

புலிகளின் தனி ஈழ கோரிக்கை சமரச முயற்சிகளின்போது நெருக்கடியை ஏற்படுத்துவதுண்டு. பேச்சுக்கு வரும் அரசாங்கம், புலிகளின் தனி ஈழ கோரிக்கையை ஏற்றுக்கொண்டு விட்டதென தெற்கில் எதிர்கட்சிகள் பிரசாரத்தை ஆரம்பிப்பார்கள். இந்த சிக்கலை தவிர்க்க, பேச்சுக்கு முன்னரே அரசும் புலிகளும் ஒரு புரிந்துணர்வு வேலை செய்வார்கள். 2002 சமாதான பேச்சு சமயம் நினைவிலுள்ளவர்களிற்கு நாம் சொல்வது புரியும். அப்போதைய வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் பாங்கொங்கில் பேச்சுவார்த்தைக்கு முன்னர் சொன்னார்- “புலிகள் தமிழீழ கோரிக்கையை கைவிட்டால்தான் பேச்சை ஆரம்பிக்கலாம். நாட்டை பிரித்து கொடுக்க நாம் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை“ என.

புலிகளின் பேச்சு குழுவிற்கு தலைமைதாங்கி சென்ற அன்ரன் பாலசிங்கம் அதற்கு பதிலளித்தார். “தமிழ் மக்களின் பல தசாப்தகால அரசியல் அபிலாசைகளை தீர்க்க வேண்டுமென்றுதான் பேச்சிற்கு வந்திருக்கிறோம். பேச்சின் முன்னரே நாம் நிபந்தனைகளை விதிக்கவில்லை. சுயாட்சி அடிப்படையிலான நிலையான தீர்வு கிடைத்தால் அதையும் பரிசீலிக்க தயாராகவே இருக்கிறோம்“ என்றார். இந்த பேச்சுக்களின் தொடர்ச்சியாக “தமிழீழ கோரிக்கையையும் கைவிடலாம். ஆனால் பொருத்தமான மாற்று தீர்வொன்று கிடைத்தால்“ என சொல்லியிருந்தார். இப்படியான இராஜதந்திர நகர்வொன்றை செய்யலாமென அன்றைய சந்திப்பில் முடிவெடுக்கப்பட்டது. ஏனெனில், இராணுவத்தின் நகர்வை நிறுத்தியே ஆக வேண்டும். சிறிய இடைவெளி கிடைத்தால்தான் அமைப்பை மீள ஒழுங்கமைக்கலாம்.

 

இந்த தொடரின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட வட இந்திய ஊடகவியலாளரையும் இந்த சமரச திட்டத்திற்குள் களமிறக்க புலிகள் விரும்பினார்கள். அதற்கு காரணம், கனிமொழி சமரச முயற்சியில் ஈடுபாட்டுடன் நடக்கமாட்டார் என பிரபாகரன் நினைத்தார். ஏற்கனவே இந்தியாவில் இருந்த சமயத்தில் கருணாநிதியுடன் புலிகளிற்கு ஆரம்பத்தில் தொடர்பிருந்தது. கருணாநிதியின் அணுகுமுறை பிரபாகரனிற்கு பிடிக்கவில்லை. கருணாநிதியின் இயல்பு பிரபாகரனிற்கு தெரியும். கருணாநிதியின் ஆலோசனைகளை புறந்தள்ளி கனிமொழி நடப்பார் என்பதை பிரபாகரன் நம்பவில்லை. ஆனால் நடேசனிற்கு கனிமொழியில் நம்பிக்கையிருந்தது. என்றாலும் பிரபாகரனின் அபிப்பிராயப்படி வடஇந்திய பத்திரிகையாளரும் இந்த புரஸஷில் சம்மந்தப்பட்டார்.

சிதம்பரத்தை டில்லியில் நேரில சந்தித்து பேச்சு நடத்தினார். “புலிகள் எப்படியான தீர்வு முயற்சிக்கு சம்மதிப்பார்கள்? இப்பொழுது யுத்தத்தை நிறுத்துவதென்றால் இலங்கை கடுமையான நிபந்தனைகளை விதிக்கும். புலிகளை காப்பாற்றுவதாக நமது முயற்சி இருக்காது. புலிகளை முழுமையாக ஆயுத நீக்கம் செய்தால்தான் இந்த பிராந்தியம் அமைதியாக இருக்குமென்பதே இந்தியாவின் நிலைப்பாடு. இந்தியாவின் நிலைப்பாடு, இலங்கையின் எதிர்பார்ப்புக்களை ஈடுசெய்வதாகவே இந்தியாவின் திட்டம் இருக்கும். அதற்கு சம்மதித்தால் மட்டுமே புலிகள் இந்த நெருக்கடியிலிருந்து மீளலாம். எந்த விட்டுக்கொடுப்பிற்கும் தயாராக இருக்கிறார்களா என்பதை புலிகளிடம் கேட்டு சொல்லுங்கள்“ என வடஇந்திய பத்திரிகையாளரிடம் சிதம்பரம் கூறினார்.

அன்றே இந்த தகவல் புதுக்குடியிருப்பில் இருந்த நடேசனிற்கு வந்தது. நடேசன் இதுபற்றி கலந்துரையாடிய ஒரே ஆள்- கே.பி. எப்படியான பதில் சொல்லலாமென இருவரும் ஆலோசித்துவிட்டு அனுப்பிய பதில்- “ஆம். யுத்தத்தை நிறுத்த விட்டுக்கொடுப்பின் எல்லைவரை செல்ல நாம் தயார்“!

மறுநாள் புலிகளின் பதில், ப.சிதம்பரத்திடம் சேர்ப்பிக்கப்பட்டது. புலிகள் விட்டுக்கொடுப்பிற்கு தயாராக இருந்த விவகாரத்தை சிதம்பரம் ஆச்சரியமாகத்தான் கேட்டார். எப்படியோ புலிகளை பலமிழக்க செய்ய கிடைத்த வாய்ப்பை தவறவிட அவர் தயாராக இல்லை. உடனே காரியத்தை ஆரம்பித்தார். யுத்தத்தை நிறுத்த புலிகள் என்ன செய்ய வேண்டுமென்ற ஒரு சமரச புரபோஷலை தயாரித்து அனுப்பலாமென முடிவு செய்தார். இந்த தகவலும் புலிகளிடம் போனது. நடேசனும் சம்மதித்தார்.

இந்த புரபோஷலை தயாரிக்க சிதம்பரம் யாரை அணுகினார் தெரியுமா? அதை அடுத்தவாரம் குறிப்பிடுகிறேன்.

(தொடரும்)

http://www.pagetamil.com/678/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் சரணடைவு திட்டம்… பிரபாகரன் எழுதிய ஒரு வார்த்தை பதில்!-இந்திய புரபோஷல் 05

April 15, 2018
Untitled-2-copy-1-696x359.jpg

இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து யுத்தத்தை நிறுத்துவதென்றால் விடுதலைப்புலிகள், தமிழீழ கொள்கையை கைவிட வேண்டுமென்ற வாக்குறுதியை தர வேண்டுமென் இந்திய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேட்டிருந்தார். ஒரு தந்திரோபாய அடிப்படையில் தமிழீழ கோரிக்கையை கைவிட தயாராக இருப்பதாக அறிவிப்பதென விடுதலைப்புலிகள் தீர்மானித்தார்கள். புலிகளின் வாக்குறுதியையடுத்து, யுத்தத்தை நிறுத்துவதற்கு முன்னர் புலிகள் என்னென்ன நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும், எப்படி யுத்தம் நிறுத்தப்படும் என்பது தொடர்பான ஒரு புரபோஷல் தயாரிக்க ப.சிதம்பரம் தயாராகினார் என்பதை கடந்தபாகத்தில் குறிப்பிட்டிருந்தோம்.

இனி நாங்கள் குறிப்பிடவுள்ள பகுதிக்குள் சில விசயங்களை அவ்வளவு வெளிப்படையாக பேச முடியாத நிலைமையுள்ளது. சில விசயங்கள் சட்ட சிக்கலையும் ஏற்படுத்தலாம். அதனால் சில விசயங்களை பூடகமாகவே குறிப்பிட வேண்டிய நெருக்கடியில் இருக்கிறோம். வாசகர்கள் அதை புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறோம்.

 

2009 ஜனவரி இறுதியில் மூவர் கொண்ட குழுவொன்று இலங்கையில் யுத்தத்தை நிறுத்த விடுதலைப்புலிகள் என்ன செய்ய வேண்டுமென்ற புரபோஷலை தயாரிக்க ஆரம்பித்தது. யார் அந்த மூவர் குழு?

ஒருவர் இந்திய இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற ஜெனரல். இலங்கை விவகாரத்தில் நன்றாக பரிச்சயமானவர். அரசுக்கும் புலிகளிற்கும் இடையில் நிலவிய சமாதான உடன்படிக்கை காலத்திலும் அவர் சிறிதுகாலம் இலங்கையில் பணியாற்றினார். பின்னர், யுத்தத்தின் இறுதியில் விடுதலைப்புலிகளின் சரணடைவின்போதும் அவரது பெயர் அடிபட்டது. இதற்குமேல் அவரைப்பற்றி குறிப்பிட முடியாது.

இன்னொருவர் சௌத் புளக்கில் பணியாற்றிய முன்னாள் றோ அதிகாரி. மற்றையவர் ஒரு சிங்கள பேராசிரியர். பாதுகாப்பு விவகாரங்களில் தேர்ச்சிபெற்றவர். இப்போது கிழக்காசிய நாடொன்றில் இருக்கிறார். இவர் ஒரு ஆலோசகராக மட்டுமே செயற்பட்டார். மற்றைய இருவருமே புரபோஷலை தயாரித்தனர்.

இந்த முயற்சிகள் நடந்து கொண்டிருக்க இதற்கு சமாந்தரமாக, புலிகளின் வெளிநாட்டு பிரிவை சேர்ந்தவர்கள் இன்னொரு பேச்சை நடத்தினார்கள். அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகள், நோர்வே இராஜதந்திரிகளுடன் நடந்த இந்த பேச்சுக்களை கே.பி கவனித்தார்.

 

ஆரம்பத்தில் அமெரிக்கா நிறைய வாக்குறுதிகள் கொடுத்திருந்ததுதான். ஆனால் பின்னர் அதிலிருந்து பின்வாங்க தொடங்கியது. குறிப்பாக பிராந்திய வல்லரசான இந்தியாவை மீறி தலையிட அமெரிக்க தயாராக இருக்கவில்லை. இந்தியாவுடன் பேசி ஒரு சமரச திட்டமொன்றிற்கு வாருங்கள் என அமெரிக்கா 2009 ஜனவரி மத்தியிலேயே கூறிவிட்டது. இந்த தகவலும் வன்னிக்கு வந்திருந்தது. இதனாலேயே சிதம்பரத்தின் புரபோஷலுக்கு புலிகள் ஒத்துழைத்தார்கள்.

இதேவேளை, நோர்வே இராஜதந்திரிகளின் மூலம் இன்னொரு கோணத்தில் பேச்சுக்கள் நடந்தன. இந்த பேச்சுக்களில் நோர்வே சார்பில் எரிக் சொல்ஹெய்மும், புலிகள் சார்பில் கே.பியும் பங்குபற்றினார்கள் என்பதை ஆரம்பத்திலேயே குறிப்பிட்டிருந்தோம். என்றாலும், அந்த பேச்சில் கலந்துகொண்டது எரிக் சொல்ஹெய்ம் அல்ல, அப்போதைய இலங்கைக்கான நோர்வே தூதர் டோர் ஹட்டேர்ம் என சில ஊடகங்கள் தவறாக எழுதியுள்ளன. இந்த பேச்சுக்களில் பெரிய மர்ம முடிச்சுக்கள் இருந்ததால், அந்த ஊடகங்கள் அப்படி தவறாக விளங்கிக் கொண்டிருக்கலாம். இந்த பேச்சு தொடர்பான தகவல்கள் வெளியில் தெரியக்கூடாதென்பதால், சிலபல திசைதிருப்பல் வேலைகளையும் இரண்டு தரப்பும் செய்திருந்தார்கள். அந்த நடவடிக்கைகளை உண்மையென பலரும் நம்பியிருந்தார்கள். புலிகளுடன் பேச்சு நடத்தியது டோர் ஹட்டேர்ம் என்ற தோற்றத்தை ஏற்படுத்தவே நோர்வே விரும்பியது. இராஜதந்திர சிக்கல்களை தவிர்க்கவே இந்த ஏற்பாட்டை செய்தார்கள்.

 

எரிக் சொல்ஹெய்ம் புலிகளின் ஆதரவாளர் என்ற அபிப்பிராயத்தை சிங்கள மக்கள் மத்தியில் அரசியல்வாதிகள் சிலர் ஏற்படுத்தியிருந்தனர். அப்போதைய மகிந்த ராஜபக்ச அரசில் பாதுகாப்பு விவகாரங்களில் செல்வாக்கானவர்களாக இருந்த கோத்தபாய ராஜபக்ச, சரத் பொன்சேகா இருவருமே எரிக் சொல்ஹெய்ம் எதிர்ப்பாளர்கள். சொல்ஹெய்ம் புலிகள் சார்பான சமரச திட்டமொன்றில் பங்கெடுக்கிறார் என தெரிந்தால், நிச்சயம் அதை ஆதரிக்க மாட்டார்கள். ஆகவே, இலங்கை தூதர் டோர் ஹட்டேர்ம்தான் இந்த பேச்சில் கலந்துகொள்கிறார் என்பதை போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த நோர்வே விரும்பியது.

இந்த விசயம் புலிகளிற்கும் சொல்லப்பட்டது. கண்டிப்பாக இரகசியம் பேண வேண்டும், எங்காவது தகவல் லீக் ஆனால் நோர்வே இதிலிருந்து விலகிக்கொண்டு விடும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

ஒஸ்லோ, இலண்டன், கோலாலம்பூர் ஆகிய இடங்களில் சொல்ஹெய்ம் இந்த பேச்சுக்களில் ஈடுபட்டார். கோலாலம்பூருக்கு இதற்காக இரண்டு பயணங்களும் செய்திருந்தார். கொழும்பிற்கான நோர்வே தூதர் டோர் ஹட்டேர்ம் ஒருமுறை கோலாலம்பூருக்கு சென்று, புலிகளின் வெளிநாட்டு பிரிவின் இரண்டாம் மட்ட ஆட்களுடன் ஒருமுறை பேச்சு நடத்தினார். இது சம்பிரதாய பேச்சு.

இந்தியா, அமெரிக்க ஆகியவற்றோடு புலிகள் ஒரு சமரச திட்ட பேச்சு நடத்திக் கொண்டிருந்த சமயத்தில் மூன்றாவதாக புலிகள் பேச்சு நடத்தியது நோர்வேயின் இராஜதந்திரி எரிக் சொல்ஹெய்முடன். அது புலிகளின் தலைமை வன்னியிலிருந்து பத்திரமாக மீட்டுத்து, வெளிநாடொன்றில் பத்திரமாக தங்க வைப்பது தொடர்பானது. அதை பின்னர் விரிவாக இன்னொரு கட்டுரையில் குறிப்பிடுகிறோம். இப்பொழுது அதை பற்றிய மேலோட்டமான தகவல்களை தருகிறோம்.

 

பர்மாவிற்கும் விடுதலைப்புலிகளிற்குமிடையிலும் இருந்த நெருங்கிய தொடர்பை பற்றி தமிழ் பக்கத்தில் விரிவாக பின்னர் குறிப்பிடுவோம். பர்மாவில் ஏற்பட்ட வெள்ள அழிவில் அங்குள்ள தமிழர்கள் பாதிக்கப்பட்ட விசயம் இலங்கை தமிழ் ஊடகங்களில் வெளிவராமல் தடுக்க, பர்மா அதிகாரிகள் விடுதலைப்புலிகளிடம் கேட்டுக்கொண்ட விசயத்தையெல்லாம் அந்த தொடரில் குறிப்பிடுவோம்.

பர்மாவிற்கும் புலிகளிற்குமிடையில் இருந்த தொடர்பை அமெரிக்கா ஆதாரங்களுடன் உறுதிசெய்த பின்னரே, பர்மாவை கிடுக்குப்பிடி பிடிக்க தொடங்கியது. புலிகளிற்கு எதிரான சர்வதேச வலைப்பின்னலை அமெரிக்கா உருவாக்கியபோது, பர்மாவையும் அதற்குள் இணைக்க வேண்டிய அவசியமிருந்தது. பர்மா புலிகளிற்கு உதவிக்கொண்டிருந்தால், அமெரிக்காவின் வலைப்பின்னல் பலவீனமாகிவிடும். முக்கியமாக புலிகளிற்கு ஆயுத சப்ளை முற்றாக நிறுத்தப்பட வேண்டுமென்றால், பர்மா புலிகளிற்கு உதவக்கூடாது.

அமெரிக்கா 2005 தொடக்கம் பர்மாவை கடுமையாக இறுக்கியதன் பின்னணி காரணங்களில் இதுவும் ஒன்று. பொருளாதாரதடை விதித்து, புலிகளிற்கு உதவினால் அதிக நெருக்கடியை சந்திப்பீர்கள் என்ற மெசேஜை கொடுத்தார்கள். அமெரிக்காவின் பிடி இறுகத் தொடங்க, புலிகளுடனான உறவை பர்மா தவிர்க்க தொடங்கியது. புலிகளுடன் பேசிக் கொண்டிருந்தார்கள்தான். ஆனால், எந்த உதவியும் செய்யவில்லை. முன்னர் பர்மாவின் பெயரில் ஆயுதம் வாங்கி அப்படியே புலிகளின் கார்கோக்களில் மாற்றப்பட்ட சம்பவங்கள் எல்லாம் இருந்தன. ஆனால் பின்னாட்களில் புலிகளின் வெளிநாட்டு பிரிவு ஆட்கள் பர்மாவிற்கு செல்வதே சிரமமாகியது.

பர்மா நல்லபிள்ளையாக சொல்பேச்சு கேட்கிறது என்றதை உறுதிசெய்ததன் பின்னர்தான் பர்மா மீதான தடைகளை அமெரிக்கா நீக்க தொடங்கியது. இந்த சமயத்தில்தான் புலிகளின் முக்கிய தலைவர்களை பர்மாவிற்கு கொண்டு செல்வது தொடர்பாக, புலிகளின் வெளிநாட்டு பிரிவினர் பர்மிய அதிகாரிகளுடன் பேசினர். புலிகளிற்கு இரகசியமாக அரசியல் அடைக்கலம் கொடுக்க பர்மா விருப்பமாக இருந்தபோதும், அமெரிக்க நெருக்கடியால் அதற்கு தயாராக இருக்கவில்லை.

இந்த இடத்தில் சிலருக்கு குழப்பமாக இருக்கலாம். புலிகளின் சரணடைவு தொடர்பாக புலிகளின் ஒரு பகுதியுடன் அமெரிக்க அதிகாரிகள் பேசிக் கொண்டிருக்க, இன்னொரு பகுதியால் புலிகளின் நெற்வேர்க்கிற்கு எதிராக அமெரிக்கா செயற்பட்டது என்பது. அரசியலில் இதெல்லாம் சகஜமானதுதான். அமெரிக்கா புலிகளின் விசயத்தில் கவனம் செலுத்தியதுதான். அமெரிக்காவின் திட்டம் எப்படியென்றால், வன்னியில் புலிகள் சரணடைய வேண்டும். அதிலிருந்துதான் அமெரிக்க புரசஸ் ஆரம்பிக்கும். புலிகளாக வன்னிக்குள்ளிருந்து தப்பி வந்து, இன்னொரு நாட்டில் அடைக்கலம் புகுவதையெல்லாம் அமெரிக்கா அடியோடு விரும்பவில்லை. காரணம், மீண்டும் புலிகள் மீளுருவாகலாம் அல்லவா!

 

இந்திய புரபோஷல் தயாரிப்பில் ஒரு விசயத்தில் கவனமாக இருந்தார்கள். உள்ளடக்கம் என்னவென்பது வெளியில் கசியக்கூடாதென காங்கிரஸ் விரும்பியது. முன்னரே விசயம் வெளியில் கசிந்தால் வீணாண சிக்கல்கள் வருமென நினைத்தார்கள்.

அதேபோல, நோர்வே இராஜதந்திர வட்டாரங்களுடன் நடத்தும் பேச்சு விசயங்கள் வெளியில் கசியக்கூடாதென புலிகளும் விரும்பினார்கள். இந்திய, அமெரிக்காவுடன் நடத்தப்படும் பேச்சுக்குள் இந்த விசயங்கள் கசிந்து கலக்ககூடாதென நினைத்தார்கள்.

ஆனால், இதில் முரண்நகை என்னவென்றால், இரண்டு திட்டங்களும் வெளியில் கசிந்து விட்டன!

இந்திய புரபோஷல் வெளியில் கசிந்து இலங்கைக்கு தெரிய வந்துவிட்டது. அதற்கு சிங்கள பேராசிரியர் காரணமாக இருப்பாரோ என இந்தியா முதலில் நினைத்தது. யுத்தம் முடிவின் பின்னர்தான், ஓய்வுபெற்ற ஜெனரல்தான் காரணமென்பது இந்தியாவிற்கு தெரிந்தது.

புலிகளின் விசயம் எப்படி கசிந்தது தெரியுமா?

இந்த பேச்சு நடந்தபோது, புலிகளின் வெளிநாட்டு பொறுப்பாளராக கே.பி நியமிக்கப்பட்டு விட்டார். அவரது அணியிலிருந்த பலர் வெளிநாட்டு உளவு அமைப்புக்களில் வளையத்திற்குள் போய்விட்டார்கள் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். இதனால்தான் தகவல் வெளியில் கசிந்திருக்கலாமென புலிகள் கருதினார்கள். புலிகளின் திட்டம் கசிந்ததால் என்ன நடந்ததென்பதை பற்றி பின்னர் குறிப்பிடுகிறேன். இப்பொழுது இந்திய புரபோஷல் பற்றி சொல்கிறோம்.

இந்திய புரபோஷல் புலிகளிடம் வந்து சேர ஏப்ரல் மாதமாகி விட்டது. புரபோஷலை பார்த்த புலிகளிற்கு பயங்கர அதிர்ச்சி. அதன் சாரம்சத்தை குறிப்பிடுகிறோம்.

புலிகள் தனிஈழ கோரிக்கையையும், ஆயுதங்களையும் கைவிடுவதாக பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். அதாவது சரணடைவுதான். புலிகளின் அரசியல், இராணுவ போராளிகள் பிரித்தெடுக்கப்பட்டு, புனர்வாழ்விற்குட்படுத்தப்படுவார்கள். அதில் இலங்கை சட்டங்களை மீறியவர்கள் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள். அரசியல் பிரிவை சேர்ந்தவர்கள் மட்டும், புனர்வாழ்வின் பின்னர் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடலாம். இராணுவத்துறையை சேர்ந்தவர்களிற்கு அரசியலில் ஈடுபட அனுமதி கிடைக்காது. பிரபாகரன் இலங்கை நீதி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும். அவரை விடுதலை செய்ய இந்திய அரசு, இலங்கையிடம் பரிந்துரைக்கும். புலிகளின் தளபதிகளும் நீதி விசாரணைக்கு உள்ளாக்கப்படுவார்கள்.

 

இதெல்லாவற்றையும் விட, புலிகளை அதிர்ச்சியடைய வைத்தது புரபோஷலின் இறுதிப்பகுதியில் இருந்த விசயம். இந்திய பிரதமர் ராஜிவ்காந்தி கொல்லப்பட்டது இந்தியாவின் ஆன்மாவின் மீது நடத்தப்பட்ட தாக்குதல். அதற்கு மன்னிப்பே கிடையாது. அதன் சூத்திரதாரியான பொட்டம்மான் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அவர் இந்தியாவில் நீதி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்

இறுதியில், தமிழ் மக்களிற்கு நியாயமான அரசியல் தீர்வு கிடைப்பதற்கு இந்தியா பாடுபடும் என்ற குறிப்போடு முடிந்தது.

இதை படிப்பவர்களிற்கு, யுத்தத்தின் முடிவும், சமகாலத்தில் இந்திய அரசின் அறிக்கைகளும் நினைவுக்கு வரலாம். யுத்தத்தின் முடிவில் புலிகள் இயக்கம் எப்படியான நிலைமைக்கு ஆளானதோ, அதை ஏப்ரலில் ஏற்படுத்த முயன்றது இந்திய புரபோஷல். இன்றுவரை, இலங்கைக்கு வரும் இந்திய தலைவர்கள் “ஈழத்தமிழர்களிற்கு நியாயமான அரசியல் தீர்வு கிடைக்க இந்தியா தன்னாலான அனைத்தையும் செய்யும்“ என தவறாமல் வாய்பாட்டைப்போல சொல்வதையும் கவனியுங்கள்.

இந்திய புரபோஷல் புலிகளினால் ஆராயப்பட்டது. இதற்கு யாருமே ஆதரவாக இருக்கவில்லை. இது ஏற்றுக்கொள்ளகூடியதல்ல, புலிகள் என்ற அமைப்பையே இல்லாமலாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது என்பதுதான் எல்லா தளபதிகளின் அபிப்பிராயமாக இருந்தது. அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன் மட்டும் இந்தியாவுடன் இன்னொரு முறை பேசிப்பார்க்கலாமென்றார். இந்தியாவை ஆரம்பத்திலிருந்தே சரியாக கணக்கிட்டு வைத்திருந்தார் பிரபாகரன். அவர்களுடன் பேசி பலனில்லையென்பது அவரது முடிவு. என்றாலும், நடேசன் கடைசி முயற்சியாக கனிமொழி ஊடாக பேச முயன்றார். அதுவும் வெற்றியளிக்கவில்லை.

இப்பொழுது உங்களை இந்த தொடரின் ஆரம்ப பகுதிக்கு அழைத்து செல்கிறோம். நடேசனிற்கும் கனிமொழிக்குமான மின்னஞ்சல் விபரங்கள் எப்படி வெளியில் கசிந்ததென்பதை பின்னர் குறிப்பிடுவோம் என சொல்லியிருந்தோம் அல்லவா. அதை இப்பொழுது சொல்கிறோம்.

நடேசனின் மின்னஞ்சல்களை கவனித்து வந்தது, அவரது உதவியாளரான ஒரு போராளி.  மின்னஞ்சல் கடவுச்சொல் எல்லாம் அவருக்கு தெரிந்திருந்தது. இறுதி யுத்தத்தில் தப்பித்த அவர், இப்பொழுது பிரான்சில் இருக்கிறார். அங்கிருந்து நடேசனின் மின்னஞ்சலை லொக் இன் செய்து, கனிமொழியுடனான மின்னஞ்சல் பரிமாற்றங்களை வெளியில் கசிய விட்டது அவர்தான்.

இந்திய புரபோஷலை புலிகள் நிராகரித்த சமயத்தில், அதாவது 2009 ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவுடன் பேசி ஒரு புரபோஷலை புலிகளிற்கு அனுப்பினார். அதுவும் கிட்டத்தட்ட இந்திய புரபோஷலை ஒத்ததுதான். இந்தியா அனுப்பிய புரபோஷலும், மேற்கு நாடுகளுடன் கலந்துபேசி தயாரிக்கப்பட்டதென கே.பி அனுப்பிய புரபோஷலும் கிட்டத்தட்ட ஒரே விதமாக இருந்தது புலிகளை அதிர்ச்சியடைய வைத்தது. இரண்டு தரப்பிற்கும் ஏதாவது தொடர்பிருந்ததா, புலிகளை அழிக்கும் வெளிநாட்டு கூட்டு செயற்பாட்டிற்கு புலிகளின் வெளிநாட்டு பிரிவும் ஒத்தாசையாக இருந்ததா என்பதற்கு இதுவரை பதில் இல்லை. இதற்கெல்லாம் பதில் கண்டுபிடிக்கும் அவகாசம் புலிகளிற்கு கிடைக்கவில்லை.

கே.பி அனுப்பிய புரபோஷலை பிரபாகரன் யாருடனும் ஆலோசிக்கவில்லை. அப்பொழுது புலிகள் முள்ளிவாய்க்காலிற்குள் சிக்கியிருந்தனர். அப்பொழுதும் சரணடைவு என்ற பேச்சை பிரபாகரன் எடுக்கவில்லை. ஒரேயொரு வரியில் கே.பிக்கு பதில் அனுப்பினார். அந்த புரபோஷலின் பின் பகுதியில் பிரபாகரன் எழுதிய ஒரே வார்த்தை-

“இதை நான் நிராகரிக்கிறேன்“

(முற்றும்)

 

http://www.pagetamil.com/1613/

  • கருத்துக்கள உறவுகள்
On ‎6‎/‎7‎/‎2018 at 4:20 AM, கிருபன் said:

யாரோ!

யாழ் களத்தில் உள்ள ஜாம்பாவான்கள்தான் உண்மை பொய்களைக் கண்டறியவேண்டும்.

நான், நீங்கள்  தந்த இணைப்பில் போய் இது வரை இனைத்ததை வாசித்து விட்டேன்...டிபிஎச் எலுதி இருக்க சான்ச் இல்லை...கடைசி வரை அங்கிருந்து விட்டு தப்பி வந்த பல பேருடைய கதையை தொகுத்து ஒருவர் எலுதுகிறார் போல் உல்லது...இதர்கு பின்னால் இந்தியா இருக்குமோ என‌ சந்தேகம் உள்ளது

பொட்டம்மனை ஒபடைக்க சொன்னதாக அந்த நேரமே லீக்காகி இருந்தது..இந்திய அரசிற்கு கடைசி ய்த்தத்தில் என்ன நடந்தது என தெரியும்,சிங்களா அரசிற்கு தெரியும்,உலக நாடுகளுக்கு தெரியும்...உன்மை தெரியாதவர்கள் தமிழ் மக்கள் மட்டும் தான்
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் வாசிக்காமல் எதையும் ஒட்டுவதில்லை என்பதால் நேரம் எடுக்கும்!

புலிகளின் உயர்மட்டத்தினரோடு நன்கு பரிச்சயமானவர்தான் இந்த கட்டுரைகளை எழுதுகின்றார். ஆனாலும் எல்லாவற்றுக்கும் ஆதாரங்கள் இல்லையென்றும் சொல்லமுடியாது. மேற்கு நாடுகளும் இந்தியாவும் ஏன் இலங்கையும் கூட ஆதாரங்களை வைத்திருக்கின்றனர். நீங்கள் கூறியதுபோன்று தமிழர்களுக்குத்தான் இவை தெரியாமல் உள்ளன.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.