Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருடர் யார் என்பது புதிராகவே உள்ளது - மஹிந்த

Featured Replies

திருடர் யார் என்பது புதிராகவே உள்ளது - மஹிந்த

 

 
 

(இராஜதுரை ஹஷான்)

தேசிய அரசாங்கத்தில் திருடர் யார் என்ற விடயம் புரியாத புதிராகவே உள்ளது. என்னை பார்த்து திருடர் என்று குறிப்பிட்டவர்கள் இன்று தங்களை தாங்களே திருடர்கள் என்று  குறிப்பிட்டு கொள்கின்றனர் என  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

mahinda.jpg

மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று இடம்பெற்ற பதவி பிரமாண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாறும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பெறுபேறுகள் தேசிய அரசாங்கத்திற்கு எதிராகவும், பொதுஜன பெரமுனவிற்கு சாதகமாகவும் கிடைக்கப்பெற்றது.  ஏனைய தேர்தல் தொகுதிகளின் பெறுபேறுகளை விட மாரஹகம தேர்தல் தொகுதியின் பெறுபேறுகள் முக்கியமானதாகவே காணப்படுகின்றது ஏனென்றால்  பொது ஜன பெரமுனவின் வெற்றியை தடுக்க அரசாங்கம் மாஹரகம தேர்தல் தொகுதியின் வேட்புமனுக்களை நிராகரித்தது. ஆனால் அரசாங்கத்தின் நோக்கம்  நிறைவேறவில்லை.

பிணைமுறியுடன் தொடர்புப்பட்ட 118 பேரின் விபரங்களை அரசாங்கம் வெளியிடாமல் பல விடயங்களையும் மூடி மறைக்கின்றது. அரசாங்கமும், அரசியல் கட்சிகளும் இரு வேறு துருவங்களாக தனித்து செயற்பட்டு வருகின்றமை தொடர்பில் எவரும் கவனம் செலுத்தாமல் பிறரின் குறைகளை கண்டுப்பிடிப்பதற்கு முழுமையான நேரத்தினை செலவிடுகின்றனர்.

அரசாங்கத்தின் விடயங்களை மக்கள் மத்தியில் அரசியல் கட்சிகள் முறையாக கொண்டு செல்லாமல் தமது கட்சியின் நலன்கனை மாத்திரம் கருத்திற் கொண்டு செயற்பட்டமையே தேசிய அரசாங்கத்தின் பலவீனத்திற்கு பிரதாக காரணம். மறுபுறம் முறையற்ற நிதி முகாமைத்துவம் பின்பற்றாமையின் காரணமாக நாட்டில் அனைத்து துறைகளிலும் வட்டி வீதம் உயர்மட்டத்திலே காணப்படுகின்றது.

முறையற்ற அரசியல் நிர்வாகத்தினை மேற்கொள்ளும் தேசிய அரசாங்கத்தில் ஜனாதிபதி பிரதமரை திருடர் என்பதும், பிரதமர் ஜனாதிபதியை திருடர் என்பதும் சாதாரண விடயமாகவே காணப்படுகின்றது. ஆனால் தற்போது பாராளுமன்றத்தில் 118 உறுப்பினர்களும் திருடர்களாகவே காணப்படுகின்றனர் என்றார்.

http://www.virakesari.lk/article/34612

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.