Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொக்குவிலில் வாள்வெட்டு!! – துரத்தி மடக்கிப் பிடித்த பிரதேச இளைஞர்கள்!!

Featured Replies

கொக்குவிலில் வாள்வெட்டு!! – துரத்தி மடக்கிப் பிடித்த பிரதேச இளைஞர்கள்!!

 
 

கொக்குவிலில் வாள்வெட்டில் ஈடுபட்ட குழு ஒன்று அந்தப் பகுதி இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் வாள்வெட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் சற்று முன்னர் நடந்துள்ளது. 4 மோட்டார் சைக்கிள்களில் வந்த குழு ஒன்றே வாள்வெட்டை நடத்தியுள்ளது.

வாள்வெட்டை நடத்திய குழுவைப் பிரதேச இளைஞர்கள் துரத்திச் சென்றனர். அந்தக் குழுவில் ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் மடக்கிப் பிடிக்கப்பட்டார். அவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

http://newuthayan.com/story/12/கொக்குவிலில்-வாள்வெட்டு-துரத்தி-மடக்கிப்-பிடித்த-பிரதேச-இளைஞர்கள்.html

கொக்குவில் வாள்வெட்டு – பிரதேச இளைஞர்களால் பிடிக்கப்பட்டவர் காவற்துறையில் ஒப்படைப்பு…

கொக்குவிலில் இடம்பெற்ற  வாள்வெட்டு சம்பவத்தில்  ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன், வாள்வெட்டில் ஈடுபட்ட குழுவை சேர்ந்த ஒருவர் அந்தப் பகுதி இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

நான்கு மோட்டார் சைக்கிள்களில் சென்ற  குழுவொன்றே இவ்வாள்வெட்டை நடத்தி தப்பிச் சென்ற வேளையில்,  பிரதேச இளைஞர்கள் துரத்திச் சென்று அந்தக் குழுவில் ஒருவரை மோட்டார் சைக்கிளுடன் மடக்கிப் பிடித்து  காவற்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

வாள்வீச்சின் பிரதான மையமாக கொக்குவில் – இன்றும் இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டு…

Jun 10, 2018 @ 06:22

 

யாழ்ப்பாணம் கொக்குவில் மேற்குப் பகுதியில் இன்று (10.06.18) இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார். கொக்குவில் மேற்கு, காந்திஜி சனசமூக நிலையத்தில் கூடிய 4 பேர், அங்கு நின்றிருந்த இளைஞனை வாளால் வெட்டியபின் தப்பிச்சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. காயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் காவற்துறையினர், வாள்வெட்டு சம்பவத்தின்போது கைவிட்டுச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றைக் கைப்பற்றியுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த வாள்வெட்டுடன் தொடர்புடையவர்கள் இணுவில், மல்லாகம் மற்றும் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்தவர்களென தகவல்கள் வெளியானதை அடுத்து அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

http://globaltamilnews.net/2018/83043/

  • தொடங்கியவர்

கொக்குவிலில் மடக்கப்பட்டது வாள்வெட்டுக் கும்பல்!! – மக்கள் அதீத கவனிப்பு!!

யாழ்ப்பாணம் கொக்குவில் மேற்கு காந்தி சனசமுக நிலையத்துக்கு அண்மையில் இன்று முற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. 4 மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்த கும்பல், அந்தப் பகுதி இளைஞன் ஒருவரை தாக்கியது. இளைஞன் காயமடைந்தார்.

 

 

dwd-750x430.jpg

 
 

 

 

 

கொக்குவில் மேற்கில் வாள்வெட்டு நடத்திய கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டனர் என்று என்று பொலிஸார் தெரிவித்தனர்.

ஆனைக்கோட்டையைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், கைது செய்யப்பட்டவர்கள் ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

dddddw-750x430.jpg

 
 
 

யாழ்ப்பாணம் கொக்குவில் மேற்கு காந்தி சனசமுக நிலையத்துக்கு அண்மையில் இன்று முற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. 4 மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்த கும்பல், அந்தப் பகுதி இளைஞன் ஒருவரை தாக்கியது. இளைஞன் காயமடைந்தார்.

அங்கிருந்து தப்பித்த கும்பலை, அந்தப் பகுதி இளைஞர்கள் ஒன்றுகூடி துரத்தித்தினர். கும்பல் ஒருவர் இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டார். அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டது. பிடிபட்டவர் மக்களால் கவனிக்கப்பட்டார். அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் மேலும் இருவர் பிடிக்கப்பட்டனர்.

ஆவா குழு என தம்மை அடையாளப்படுத்தும் ஆனைக்கோட்டையைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். 3 சந்தேகநபர்களும் மானிப்பாய் பொலிஸாரால் ஏறகனவே கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

weqweqw.jpg

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சந்தேகநபர்கள் மூவரும் நாளை யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்தப்படுவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

http://newuthayan.com/story/18/கொக்குவிலில்-மடக்கப்பட்டது-வாள்வெட்டுக்-கும்பல்-மக்கள்-அதீத-கவனிப்பு.html

Edited by நவீனன்

பிடிபடுற வாள்வெட்டு கோஸ்டிகளை பிணையில் விடாமல் ஆளுக்கு ஒரு கோடாரியை கொடுத்து சுள் என்று சூரியன் சுட்டு எரிக்கிற பற்றை காட்டுக்குள் இறக்கி மரம் கொத்தும்/விறகு வெட்டும் வேலைக்கு விடவேணும் ஆட்கள் திருந்தும்வரை.

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

பிடிச்சு சொறீலங்கா பொலிசிட்டையா கொடுத்தியள். அப்ப அவனுங்க நாளைக்கு மீண்டும் வெளில வந்து சுதந்திரமாக வெட்டுவாங்க.

சொறீலங்கா பொலிஸ் எப்ப யாழ்ப்பாணம் வந்திச்சோ.. அப்ப தொடங்கிட்டுது எல்லா சமூக விரோதச் செயல்களும்.

காரணம்.. சொறீலங்கா பொலிஸின் ஆதரவில்லாமல் வடக்குக் கிழக்கில் சமூக விரோதம் நடக்க வாய்ப்பே இல்லை. ?

6 hours ago, நவீனன் said:

3 சந்தேகநபர்களும் மானிப்பாய் பொலிஸாரால் ஏறகனவே கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.