Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் வெளிமாவட்ட மீனவர்களை வெளியேற்றக் கோரி மாபெரும் பேரணி….

Featured Replies

யாழில் வெளிமாவட்ட மீனவர்களை வெளியேற்றக் கோரி மாபெரும் பேரணி….

 

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

VA-East-Protest3.jpg?resize=800%2C450

 

வடமராட்சி கிழக்கில் அத்துமீறி சட்ட விரோத தொழிலில் ஈடுபட்டு வருகின்ற வெளிமாவட்ட மீனவர்களை வெளியேற்றக் கோரி மாபெரும் பேரணியொன்று யாழில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் இன்று காலை இப் பேரணி நடைபெற்றது.

யாழ் பிரதான வீதியிலுள்ள சமாச முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட இப் பேரணி பிரதான வீதுயூடாக யாழ் மாவட்டச் செயலகத்தை சென்று நிறைவடைந்த்து. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கே மேலும் பாதிப்பை ஏற்படுத்துகின்ற வெளிமாவட்ட மீனவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டுமெனக் கோரி மாவட்ட அரச அதிபரிடம் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

VA-East-Protest1.jpg?resize=800%2C450VA-East-Protest2.jpg?resize=800%2C600  VA-East-Protest4.jpg?resize=800%2C600

http://globaltamilnews.net/2018/83147/

  • தொடங்கியவர்
‘அரசியல்வாதிகளே வெளியேறுங்கள்’
 
 

- சொர்ணகுமார் சொரூபன், எஸ்.ஜெகநாதன் 

வடமராட்சி கிழக்கில் அத்துமீறி சட்டவிரோத தொழில் நடவடிக்கையில் ஈடுபடும் வெளிமாவட்ட மீனவர்களை வெளியேற்றக்கோரி இன்று (11) இடம்பெற்ற பேரணியில், அரசியல்வாதிகளை வெளியேறுமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கூச்சல் இட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

image_d9a02593e6.jpgimage_322f90af8a.jpg

யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த பேரணியானது,  யாழ். பிரதான வீதியில் உள்ள சமாசத்தின் வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டு யாழ். மாவட்ட செயலகத்தில் நிறைவடைந்தது.

பேரணியின் ஆரம்பத்தில், தனது பங்களிப்பை வழங்குவதுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா சமாசத்துக்குச் சென்றிருந்தார்.

இதன்போது ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், அரசியல்வாதிகள் வெளியில் செல்லுங்கள். வேண்டுமென்றால் வீதியில் பேரணி ஆரம்பமாகும் போது, கலந்துகொள்ளலாம். ஆனால் சமாசத்திற்குள்ளோ அல்லது எமது பேரணியின் இதர செயற்பாட்டிலோ இருக்கவேண்டாம் என கூச்சல் இட்டனர். இதனால் மாவை சேனாதிராசா உடனடியாக அவ்விடத்தில் இருந்து வெளியேறினார்.

தொடர்ந்தும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் எஸ்.சுகிர்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் எஸ்.கஜேந்திரன், தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் வருகை தந்தனர். எனினும் அவர்களையும் போராட்டக்காரர்கள் அனுமதிக்கவில்லை.

அரசியல்வாதிகள் எமது போராட்டங்களுக்கு வருகிறீர்கள், பலவற்றை கதைக்கிறீர்கள், ஆனால் அவற்றை செயல்படுத்தாமல் விட்டுவிடுகிறீர்கள். நாடாளுமன்றத்தில் எமது பிரச்சினை தொடர்பில் குரல் கொடுப்பதில்லை, மக்களின் அன்றாட பிரச்சினை, அத்தியாவசியபொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றுக்கும் குரல் கொடுப்பதில்லை, மீன்பிடி தொழில் செய்யும் எமக்கு பாரிய பிரச்சினை மண்னெண்ணை விலை உயர்வு. அதற்கும் எமது அரசியல்வாதிகள் குரல்கொடுக்கவில்லை. இதை விட்டுவிட்டு “நினைவேந்தலுக்கு வழங்கிய ஏழு ஆயிரம் ஷரூபாயை திருப்ப தரச்சொல்லி” ஒருவர் கேட்கிறார். என்ன இது?” என அரசியல்வாதிகள் மீதான தமது ஆதங்க கருத்துக்களை போராட்டக்காரர்கள் வெளிப்படுத்தினர்.

மீனவசமூகம் என்பது பரந்துபட்டதாகும் நாம் வாக்காளிக்காவிட்டால் நீங்கள் யாரும் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அந்தஸ்தை பெற்றிருக்க முடியாது. எமது பிரச்சினைக்கு தீர்வு காண்பதுக்காக எந்தவித ஏற்பாடுகளையும் செய்யாது “சும்மா போராட்டம் என்றவுடன் புதுவேட்டி கட்டிக்கொண்டு வந்திடுவார்கள்” என போராட்டக்காரர்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/அரசியல்வாதிகளே-வெளியேறுங்கள்/71-217424

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.