Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகள் தாக்குதல் எதிரொலி: இந்திய கடல் எல்லையில் போர் கப்பல் - விமானம் தீவிர கண்காணிப்பு

Featured Replies

விடுதலைப்புலிகள் தாக்குதல் எதிரொலி: இந்திய கடல் எல்லையில் போர் கப்பல் - விமானம் தீவிர கண்காணிப்பு

இலங்கையில் சிங்கள ராணுவத்தை எதிர்த்து போராடும் விடுதலைப்புலிகள் முதல் முறையாக விமான தாக்குதல் நடத்தினார்கள். இதில் இலங்கை விமானப்படை தளம் கடுமையாக சேதம் அடைந்ததுடன் ராணுவ வீரர்களும் பலியானார்கள்.

இந்த தாக்குதல் அதிர்ச்சியில் இருந்து இலங்கை மீள்வதற்குள் விடுதலைப்புலிகள் டிராக்டரில் வெடிகுண்டுகளை நிரப்பிச் சென்று மற்றொரு ராணுவ தளம் மீது தற் கொலை படை தாக்குதல் நடத்தினார்கள்.

அடுத்தடுத்த தாக்குதல்களில் இலங்கை ராணுவம் நிலைகுலைந்து விட்டது. விடுதலைப்புலிகளின் விமான தாக்குதலால் பயந்துபோன இலங்கை அரசு, இது இந்தியாவுக்கும் ஆபத்து என்று அலறியுள்ளது.

விடுதலைப்புலிகளின் தாக் குதலால் அங்கு பதட்டம் ஏற்பட்டு சண்டை தீவிரம் அடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்தியாவும் தமிழக கடலோரத்தில் பாது காப்பை பலப்படுத்த உத்தர விட்டுள்ளது.

ராமேசுவரத்தை அடுத்த அரிச்சமுனை கடற்கரை யில் இருந்து சுமார் 18 கடல் மைல் தொலைவில் இலங்கையின் தலைமன் னார் கடற்கரை உள்ளது. இந்திய கடல் எல்லையில் கூடுதல் கண்காணிப்பில் ஈடு படும் படி இந்திய ராணுவத் தினருக்கு மத்திய அரசு உத்தர விட்டுள்ளது.

இந்திய கடற்படை, கடலோர காவல்படை வீரர்கள் முதலில் அரிச்சமுனை கடற்கரையில் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அதன் பின்பு முகுந்தராயர் சத்திரம் பகு திக்கு முகாமை மாற்றிக் கொண்டனர். இப்போது இலங்கையில் போர்பதட்டம் அதிகரித்து உள்ளதால் அங்கு தாக்குதல் நடந்த 24 மணி நேரத்தில் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையின் முகாம் மீண்டும் அரிச்சமுனை கடற்கரைக்கு மாற்றப்பட்டு உள்ளது.

அரிச்சமுனை முகாமில் இந்திய கடற்படையின் 12 கமாண்டர்கள் முகாமிட்டு உள்ளனர். இவர்களுக்கு 5 அதி நவீன போர்ப்படகுகள் கொடுக்கப்பட்டு உள்ளன. இதில் போர்க்கப்பல்களையே தடுத்து நிறுத்தும் அளவுக்கு அதிநவீன ஆயுதங்களும், இரவிலும் எதிரிகளை நோட்டமிடும் `பைனாகுலர் களும் உள்ளன. இதன் மூலம் கடற்படை வீரர்கள் இரவு-பகல் என 24 மணி நேரமும் இந்திய கடல் எல்லையை கண்காணித் தப்படி உள்ளனர்.

இந்திய கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட சென்னை, விசாகபட்டிணம் துறைமுகங்களில் இருந்து போர் கப்பல்கள் மண்டபம் முகாமுக்கு செல்கின்றன.

இது போல ராமேசுவரம், உச்சிப்புளி, அரிச்சமுனை, முகுந்தராயர்சத்திரம் கடல் பகுதிகளில் இந்திய போர் விமானங்களும், ஹெலி காப்டர்களும் தாழ்வாக பறந்து கண்காணிப்பு பணி யில் ஈடுபட்டு வருகின் றன. இலங்கையில் இருந்து சந்தேகப்படும்படி வரும் படகுகள், வானில் இருந்த படியே கண்காணிக்கப்படு கிறது.

போரில் காய மடைந்தவர் கள் யாராவது தப்பி வருகி றார்களாப என்றும் விமானங் களில் இருந்த படியே வீரர்கள் கண்காணித்து வருகிறார்கள்.

கண்காணிப்பு பணிகள் பற்றி இந்திய கடற்படையின் ஏரியா கமாண்டர் முகர்ஜி கூறியதாவது:-

இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையை இந்தியா உன்னிப்பாக கவ னித்து வருகிறது. அந்நியர் ஊடுரு வலை தடுக்க இரவு, பகல் என 24 மணி நேர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப் பட்டு உள்ளது. கடற்படையின் அனைத்து பிரிவுகளும் உஷார் நிலையில் உள்ளது. கடற்கரையின் ஒவ்வொரு பகுதிகளையும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி பகுதிகளில் கூடுதல் ரோந்து பணிக்கு ஏற்பாடு செய்துள்ளோம். சந்தேகப்படும் இடங்களில் சோதனையிடவும் வீரர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மண்டபம் முகாம் கடலோர காவல்படையின் கமாண்டர் எஸ்.கே.சவுத்திரி கூறுகையில், கடலோர காவல்படை வீரர்கள் ராமேசுவரம் கடற்கரை பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் சோதனை பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கடலிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. கடலோர காவல் படைக்கு சொந்தமான `கப்பா காட்டன் என்ற போர் கப்பல் ரோந்து சுற்றி வருகிறது என்றார்.

இலங்கையில் நடக்கும் தாக்குதல் காரணமாக ராமேசுவரம் கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் பீதியில் உள்ளனர். அவர்களின் அச் சத்தைப் போக்க இந்திய கடற்படையும், கடலோர காவல் படையும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

உச்சிப்புளி விமான தளத்தில் இருந்து நிமிடத்திற்கு நிமிடம் போர் விமானங்கள் பறந்து சென்று நிலைமையை கண்காணித்து வருகிறது. வழக்கமான ரோந்து பணியை விட கூடுதலாக ரோந்து பணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு வளையம் போடப்பட்டு உள்ளது. அந்நியர்கள் ஊடுருவல், வெளிநபர்களின் வருகை கண்காணிக்கப்படுகிறது. 18 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் சோதனைக்கு பின்னரேஅனு மதிக்கப்படுகிறது. கடற்கரையிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

http://www.tamilwin.com/

IAF sets up radars as LTTE flies high

March 28, 2007 13:12 IST

Indian Air Force has set up eight radars as a precautionary measure to monitor the skies in the aftermath of Tamil Tiger rebels launching their first aerial strike in Sri Lanka two days ago.

The radars were fixed at Seeniappa Darga Casurina jungle near Sundaramudaiyan village in Ramanathapuram district and trials were going on, a senior IAF official told PTI on Wednesday, adding that a team of 50 Air Force personnel, under a commander, would be posted there to monitor the skies.

There was also a plan to set up a permanent air-base near Seeniappa Dargah, the official, who wished not to be named, said.

The decision to set up radar facility comes two days after LTTE made an aerial attack at a military airbase in Colombo, killing three persons and injuring 16.

Sri Lankan president Mahinda Rajapakse had on Tuesday warned that LTTE's air strike capability was a threat to the entire South Asian region, particularly India and Indonesia.

Meanwhile, the Indian Navy has begun round-the-clock patrolling of the seas from the Forward Observation Point near Dhanushkodi. Twelve marine commandos have been posted at FOP, to which communication links have been established.

The Coast Guard will also patrol the International Maritime Border in the Palk Straits, official sources said.

Besides these measures, police check-posts had been asked to inspect every vehicle passing through coastal roads, they said.

There was also a programme to monitor all the uninhabited islets in the Palk Straits, officials said. Several interceptor crafts and speed boats had been deployed at the point where refugees landed.

For the first time, naval personnel would carry Medium Machine Guns. Night vision binoculars had been already given to the Marine commanders. Apart from interceptor aircraft, mechanised trawlers, speed boats, two state-of-the-art ships had been deployed in the Gulf of Mannar.

Air surveillance will also be stepped up and the Naval air station at Uchipuli was conducting regular sorties.

http://in.rediff.com/news/2007/mar/28ltte.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.