Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளின் முக்கியஸ்த்தர்கள் உள்ளிட்ட காணாமல் போனோர் பலரின் பட்டியல் வெளியானது…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் முக்கியஸ்த்தர்கள் உள்ளிட்ட காணாமல் போனோர் பலரின் பட்டியல் வெளியானது…

June 20, 2018

காணாமல்போன மற்றும் காணமல் ஆக்கப்பட்டதாக கருதப்படும் நபர்களின் பெயர்பட்டியல் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், 2009 இலங்கையில் இடம்பெற்ற யுத்த காலப்பகுதியில் காணாமல் போன மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களாக கருதப்படும் நபர்கள் தொடர்பான விடயங்கள் சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்திற்கமைய இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  இது தொடர்பான தகவல்களை  http://www.disappearance.itjpsl.com/#lang=tamil  என்ற இணையத்தள முகவரியினூடாக அறிந்துகொள்ளலாம். அத்தோடு 351 நபர்களது பெயர் மற்றும் விபரங்கள் இதுவரை இந்த இணையத்தளத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. மேற்படி இணையத்தளத்தில் பட்டியலிடப்பட்ட நபர்கள் பற்றிய தகவல்கள் அறியப்பட்டிருப்பின் காணாமல்போனோர் அலுவலகத்துடன் தொடர்புகொள்ளுமாறும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கையில் காணமற்போனவர்களை நினைவுபடுத்தும் இணையத்தளம்.

மே 2009 இல் போரின் இறுதி நாட்களின் போது இராணுவத்தின் பாதுகாப்பில் இருந்து காணாமல்போனவர்களின் விபரங்களை நாங்கள் முதலில் பட்டியலிட்டு வருகின்றோம். மேலதிக தகவல்களை /திருத்தங்களை  itjpsl@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தயவுசெய்து அனுப்பி வைக்கவும்.

குறிப்பு: சிலர் LTTE பெயரிலும் சிலர் அவர்களது சொந்தப் பெயரிலும் பதிவு செய்யப்பட்டிருப்பதால் சிலரின் பெயர் விபரங்கள் ஒன்றுக்கு மேற்பட்டதடவைகள் இருக்கலாம். வெற்றுப் பெட்டிகள் இன்னும் போதிய தகவல்கள் இல்லை என்பதை குறிக்கின்றன.353 DISAPPEARANCES

Type All 336 ENFORCED DISAPPEARANCE, 17 MISSING

Dates All 15.01.2009 10.05.2009 14.05.2009 15.05.2009 17.05.2009 18.05.2009 19.05.2009 22.06.2009 2010 21.04.2009 04.03.2009 30.04.2009

Locations All Colombo Wadduvakkal Omanthai Jaffna Peninsula Vavuniya Mullivaikkal Detention NandiKadaal Lagoon Mullaitivu PTK Valingermadam Vallipunam Mathalan

  • ஆரமுதன் – ஆறுமுகம் விஜியரட்ணம்
  • அகிலன் மாஸ்ரர்
  • அலக்ஸ்
  • அம்பி / சீராளன் – ( பரமேஸ்வரன்)
  • அம்பி / சீராளன் – ( பரமேஸ்வரன்)
  • அம்பியின் மகள் – 1 (பரமேஸ்வரன் பிரியாழினி)
  • அம்பியின் மகள் – 2
  •  
  •  
  • அம்பியின் மகன் -(பரமேஸ்வரன் பிரதீபன்)
  • அம்பியின் மனைவி – புரட்சிகா ( பரமேஸ்வரன் சசிகலா)
  • ஆனந்தன்
  • அன்பழகன் – (தர்மலிங்கம் தயாபரன்)
  • அன்பன் – மூர்த்தி சந்திரபோஸ்
  •  
  • அன்பு – அப்புக்குட்டி கோபாலகிருஸ்ணன்
  • அன்புமதி – (தங்கவேலு தீபா)
  • அரசன்
  • அரசண்ணா
  • அரவிந்தன்
  • அறிவரசன்
  • ஆரியன்
  • ஆர்த்தி – (முத்துராசா ஸ்ரீசஞ்சிலா)
  • ஆறுமுகம் தர்சினி
  • அருண் மாஸ்டர்
  • அருணன்
  •  
  •  
  • அருநந்தா கிருஸ்னர்
  • அருநம்பி / அருள்நம்பி (லெப்.கேணல்) – புண்ணியமூர்த்தி முகலன்
  • அகஸ்டீன் ஜெயராணி
  • பாபு (மலரவன்) – ( அண்ணாமலை அருணன்)
  • பாபுவின் மகள்
  •  
  • பாபுவின் மகள்
  • பாபுவின் மனைவி
  •  
  •  
  •  
  • பேபி – சுப்ரமணியம் (இளங்குமரன்)
  • பேபி சுப்ரமணியம் மகள் – அறிவுமதி
  • பேபி சுப்ரமணியம் – மனைவி ரட்ணா – (ஜெயமதி கிருபாகரன்)
  • பாலகுமாரன்
  •  
  •  
  •  
  • பாலகுமாரின் மெய்ப் பாதுகாவலர் – காளி மாஸ்ரர்
  • பாலகுமாரின் சாரதி – குமரன் – தம்பிப்பிள்ளை ஐங்கரன்
  • சூரியதீபன் பாலகுமாரன்
  • பாலேஸ்
  • பாலதாஸ் (தமிழ்குமரன்)
  • பாஸ்கரன்
  • பவான் – கமில்ரன்
  •  
  • பவநிதி
  • சந்திரன் . லெ. கேணல்.
  • சந்திரன் தர்சன்
  • சித்திராங்கன்
  • டயாதாஸ் / நக்கீர் – (சின்னராசா ஞானேந்திரன்)
  • திலீப் – புறோக்கர்
  • தினேஷ் மாஸ்டர்
  • இசைவாணன் இந்திரகுமார் இந்திரராசா
  • எழிலன் – சின்னத்துரை சசிதரன்
  • எழிலரசன் – சுதாநந்தராசா சுதாகரன்
  •  
  •  
  • எழில்வாணண் – (கிருஸ்ணமூர்த்தி ஜெயகுலன்)
  • இளையவன் -(இராசமூர்த்தி ஜெயவினோதன்)
  • எழில்வண்ணன் மாஸ்ரர்
  • அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப்
  • ஞானவேல் – (சிதம்பரநாதர் ராஐகுலசிங்கம்)
  • ஞானம்
  •  
  •  
  • ஞானேந்திரன் சின்னராசா
  • கரிகரன்
  •  
  • ஹென்றி/தென்னவன் – அருள்நாயகம் பசில்நாயகம்
  • இளம்பரிதி – ஆஞ்சினேயர் (சின்னத்தம்பி மகாலிங்கம்)
  •  
  • இளம்பருதியின் மகன் தமிழ்ஒளி
  • இளம்பருதியின் மகள் – மாகாலிங்கம் எழிழினி
  • இளம்பருதியின் மகள் – மகாலிங்கம் மகிழினி
  • இளம்பருதியின் மனைவி – மகாலிங்கம் சிவாஜினி
  • இளந்திரையன் (மார்சல்) – இராசையா
  • இளவேங்கை மாஸ்ரர்
  •  
  •  
  • இளம்பருதி
  •  
  •  
  • இளம்பருதி (கோல்சர் பாபு) – (நடராஜா சிவகணேஸ்)
  • இளமுருகன் – இராமச்சந்திரன் உதயச்சந்திரன்
  • இளஞ்சேரன் – பொன்னம்பலம் ஜெயகாந்தன்
  • இன்பன் – அன்ரனி அமலசோதி
  • இன்சுரபி ( முத்துகுமார் சிவதர்சினி)
  • இன்தமிழ்
  • ராமசாமி நாகராசா
  • இரும்பொறை மாஸ்டர் – செல்வநாயகம் பத்மசீலன்
  • செல்வநாயகம் குகசீலன் – இரும்பொறை மாஸ்ரரின் சகோதரன்
  • செல்வநாயகம் தவசீலன் – இரும்பொறை மாஸ்ரரின் சகோதரன்
  • இசைவாணி – (கருப்பையா சசிகுமாரி)
  • இசைவாணன் – (அருட்செல்வம் ஜீவராஜ்)
  • இசையாளன் – கந்தசாமி திவிச்சந்திரன்
  • இசையாளன்
  • இயலரசன் -( பாலச்சந்திரன் ரவீந்திரன்)
  •  
  • ஜான்
  • ஜனனி
  • ஜவான் – தமிழன்பன்
  • சற்சுதன் எழில்நிலா – ஜவான் உடைய மகள்
  • ஜெகசோதி புஸ்பகாந்தன்
  • ஜெரி – விக்ரர் அமரசிங்கம் – விமலசிங்கம்
  •  
  •  
  • ஜெயராஜ்
  • கடலரசன் – (வேலுப்பிள்ளை திருக்குமரன் )
  • ரேணா – கடலரசனின் மனைவி (திருக்குமரன் சுபாசினி)
  • கலைகோன் – பாலகிருஷ்ணன் கோகிலகிருஷ்ணன்
  • கலைவீரன் – (காளிமுத்து தங்கராசா)
  • கலையரசி
  • கலையொலி – (முத்துராசா சிறிசர்மிலா)
  • கனகன் – லோகநாதன் அருணாசலம்
  •  
  •  
  • கண்ணன் – நல்லதம்பி சுதன்
  • கண்ணன் – (சுடரெளி)- (ஞனச்செல்வம் உதயராசா)
  • கண்ணன்
  •  
  •  
  • காந்தா
  •  
  • கந்தைய்யா சதீஸ்குமார்.
  • கந்தம்மான் – பொன்னம்பலம் கந்தசாமி
  • கந்தசாமி சுகந்தினி
  • காந்தி
  •  
  • கரிகாலன்
  • கார்மேகன்- (நாகராசா கோவிந்தராசா)
  • கருவண்ணன்
  • கதிர்
  •  
  • கதிர்காமதாஸ் ஞானஐயர்
  • கதிர்நம்பி – கணேசமூர்த்தி அனுசாந்
  • கவியுகன்
  • கேசவநாதன் பொன்ராசா
  • கிட்டிணபிள்ளை பிரதீபா
  •  
  •  
  •  
  •  
  • கிண்ணி – (பரமானந்தசிவம் ரமணன்)
  • கிரி
  • கிருபா மாஸ்ரர்
  • கிருபாகரன்
  • கிருபானந்தன் சசிகரன்
  • கோபி – வீரபாண்டியன்
  • கொலம்பஸ் – உருத்திரமூர்த்தி கிருஸ்ணகுமார்
  •  
  • கோமதி
  • குகா – (செர்ணலிங்கம் குகனேஸ்வரி)
  •  
  • குயிலன்
  • குலம் / சுடரேந்தி – (ரட்ணம் வரதராசா)
  • குமணண்
  • குமரன்
  • குமரன்
  •  
  • குமாரசாமி கலாநித்தியா
  •  
  • குமாரவேல் – கதிர்காமத்தம்பி கருணாநிதி
  •  
  • குணம்
  • குட்டி
  • லோரன்ஸ்
  • லோரன்ஸ் (கராஜ் )
  • லோரன்ஸ் திலகர்
  • மயில்வாகனம் சுபதீபன்
  • மஜீத் – நடேசு முரளிதரன்
  • மஜீத்தின் பிள்ளை – முரளிதரன்
  • மஜீத்தின் மகன் – முரளிதரன் சாருஜன்
  • மஜீத்தின் மனைவி – முரளிதரன் கிருஸ்ணகுமாரி
  • மலரவன் – (மோகனமூர்த்தி கேதீஸ்)
  • மலரவன் (ஐயாத்துரை ஜெயந்தா )
  •  
  •  
  • அருணாச்சலம் அகிலன்
  • மணிமாறன் கலைவாணி
  • மணியரசன்
  • மனோஜ்
  • மந்தாகினி (மலைமகள்)
  • மறவன் – (தங்கராசா சபீசன்)
  • மாரிமுத்து ரூபகரன்
  • மாதவன்
  • மது
  •  
  •  
  •  
  • மதுரன்
  • மயில்வாகனா . T
  • மிரேஸ் / நகுலன் – (மகேஸ்வரன் திவாகரன்)
  • மோகன் மாமா
  • மௌனகரன்
  •  
  • முகில்மாறன் கோகிலவதனி
  • முகுந்தன் – (கந்தையா குணரட்னம்)
  • முகிலன்
  • முகுந்தன்
  • முரளி
  • முரளி – பரராஜசிங்கம் கிரிதரன்
  •  
  • முரசொலியன் – தேவராசா வாகீசன்
  • முருகதாஸ் மகேந்திரம்
  • நாவலன்
  • நடராசா சதீஸ்
  • நடராசா சிறீக்காந்
  • நடேசனின் மகள் – (பிரியதர்சினி மகேந்திரன்)
  •  
  • நடேசனின் மகன்- (ஐனகன் மகேந்திரன்)
  • நாகேஷ்
  • நகுலேந்திரன் – (தர்மரட்ணம் மகேஸ்வரன்)
  • நளா
  • நளாயினி
  • நல்லநாதன் அகிலன்
  • நல்லதம்பி
  • நரேன்
  • நரேன் – தமிழர் புனர்வாழ்வுக் கழகம்
  • நீதன்
  • நெல்சன்
  • நியூட்டன்- (பூதத்தம்பி இரவீந்திரன்)
  • நேயன்
  • நிலான்
  • நிலவழகி
  • நிசாந்தன்
  • நிசாந்தன் மாஸ்ரர்
  • பாரி – ( செல்வரத்தினம்)
  • பத்மலோஜினி (வைத்தியர்)
  • பகீரதன் – நடேசமூர்த்தி விஸ்ணுகுமார்
  •  
  • பகீரதன் – சிவராசா பகீரதன்
  • பழனியாண்டி செல்வகுமார்
  • பஞ்சன் – மகாதேவன் ஞானகரன்
  • பாண்டியன்
  • பாப்பா / எழிலரசன் (கிருஸ்ணன் வேல்அழகன்)
  • பரா – இளையதம்பி பரராஜசிங்கம்
  • பிரபாசன் பாலச்சந்திரன்
  •  
  •  
  • பரஞ்சோதி
  • பார்புகழன்
  • பார்த்தீபன்
  •  
  • பத்மநாதன் சுதாகரன்
  • பத்மநாதன் பார்த்தீபன்
  •  
  • பிரபு – பொன்னம்பலம் சிறிபாஸ்கரன்
  • பிரணவா
  • பிரசாந் – கனகலிங்கம் சரத்சந்திரா
  • பிரதீப்
  •  
  • பிரதீபன் தர்சிகா
  •  
  • பிரேமதாஸ் டென்சிலா
  • பிரியன் – சுவாமிநாதர் தயாசிறி
  •  
  •  
  •  
  • பிரியனின் பிள்ளை – தயாசிறி கலைச்சுடர்
  • பிரியனின் மனைவி – தயாசிறி சந்தனா
  • பிரியவதனா
  •  
  •  
  • பூவண்ணன்
  • பிரபா
  •  
  • பிறேமதாஸ் சுந்தரம்
  • புகழ் மாஸ்ரர்
  • புலிமைந்தன்
  • புலியரசன்
  • புரட்சி மாஸ்ரர்
  •  
  • புதுவை ரத்தினதுரை
  • ரகு – மச்சக்காளை கண்ணன்
  • ராஜா – செம்பியன் -(தம்பைய்யா கணேசமூர்த்தி)
  • ராஜா முருகேசு
  • ராஜாவின் மகன் – கணேசமூர்த்தி சாருஜன்
  • ராஜாவின் பிள்ளை – கணேசமூர்த்தி ஆதிரையன்
  • ராஜாவின் பிள்ளை – கணேசமூர்த்தி நிகிலன்
  • இராஜரட்ணம் டிலக்சன்
  • இராஜேந்திரம் ஜெபநேசன்
  • ரஜிந்தன்
  •  
  • ராகுலன் – தேவதாசன் ரூபன்
  • இராமசந்திரன் உதயச்சந்திரன்
  • ரமேஸ்- (வினாசித்தம்பி விக்கினேஸ்வரன்)
  • ரமேஷ் (இளங்கோ)
  • ரமேசன் பரமநாதன்
  • ராசன்
  • இராசையா இராதனன்
  • ரவி – திருமாறன் – (இராசு ரவீந்திரன்)
  • றேகா – மகேந்திரராஜா
  • ரூபன்
  • ரூபன் – (சின்னத்தம்பி சிறீலதன்)
  • ரூபன் – சுந்தரம் பிரேமதாஸ்
  • சைலேகா – மரியாம்பிள்ளை மேரி சைலேகா
  •  
  • சங்கீதன் (வோல்ரர்)
  • சஞ்சை
  • சாந்தன் – செல்லைய்யா விஸ்வநாதன்
  • சாரதா
  • சத்துருக்கன்
  • சத்யா – கதிரவேலு சுதாகரன்
  •  
  • செல்வா சுகந்தி
  •  
  • செல்வகுமார் முருகேசு
  •  
  • செல்வராசா வைரமுத்து
  • செல்வராசா செல்வகுமார்
  • செம்பியன்
  • செங்கதிர்
  •  
  • செங்கையான்
  • சேந்தன் – (பாஸ்கரன் கரிகரன்)
  • செந்தில்முருகன் கார்த்திக்
  • சக்தி ( கதிர்காமசேகரம்பிள்ளை சத்தியமூர்த்தி)
  • சக்தியின் மகள் – (சத்தியமூர்த்தி இசைநிலா )
  • சக்தியின் மகன் -(சத்தியமூர்த்தி தமிழின்பன்)
  • சக்தியின் மகன் -(சத்தியமூர்த்தி தமிழ்முகிலன்)
  • சக்தியின் மனைவி – ஜக்குலின் – ( (சத்தியமூர்த்தி கவிதா)
  • சங்கர்
  •  
  • சிலம்பரசன்
  •  
  • சின்னண்ணை
  • சின்னத்தம்பி
  • சின்னவன் – (ஜெகதேவன் வாகீசன்)
  • சித்திவினாயகம் ரமணி – (ரேணாவினுடைய சகோதரி)
  • சிவம்
  • சிவனேசராசா லக்சியா
  • சிவராசசிங்கம் வள்ளி
  • எஸ்.எம் அண்ணா – (குகநேசன் குகராஜா)
  •  
  • சொலமன் – (துரைரட்ணம் ஜெயக்குமார்)
  • சோபிகா கணேசபிள்ளை
  • சுப்பிரமணியம் பிரதீபா
  • சுப்பிரமணியம் சிவமோகன்
  • சுடரின் மகள் – 1
  • சுடரின் மகள் – 2
  • சுடரின் மனைவி
  • சுடரவன்
  •  
  • சுடரவன் லெப் .கேணல்
  • சுகி
  • சுகிர்தன் – ராமச்சந்திரன் ஜனார்த்தனன்
  •  
  • சுலக்சன் மாஸ்ரர்
  • சுமன் – (செல்வகுமார்)
  •  
  •  
  • சுமனுடைய மகள்- (செல்வகுமார் தணிகைச்செல்வி)
  •  
  • சுமனின் மனைவி கலைமகள் – (செல்வகுமார் சுதர்சினி)
  •  
  • சுந்தர்
  • சுதர்சன் சிவசுப்ரமணியம்
  • தமிழினியன்
  •  
  • தமிழழகன் – (சிவசம்பு ஜெகராஜா)
  •  
  • தமிழரசன்
  • தமிழ்நதி – (சுப்பிரமணியம் சுகந்தினி)
  • தமிழ்ஒளி (மாயா செல்வநாதன்)
  • தனபாலசிங்கம் விஐயராசா
  • தங்கைய்யா
  • தங்கராசா கலைச்செல்வன்
  • தணிகையரசு லெப் .கேணல்
  • தங்கன் – சோமசுந்தரம் சுதாகரன் (சுதா)
  •  
  •  
  • தங்கனின் மகள் – சுதாகரன் துவாரகா
  •  
  • தங்கனின் மகள் – சுதாகரன் துர்க்கா
  • தங்கனின் மகன் – சுதாகரன் துவாரகன்
  • தங்கனின் மனைவி – சுகந்தி
  • தரன்
  • தர்சா
  • தர்சினி
  •  
  • தவபாலன் – (இறைவன்)
  • தேவராசா
  •  
  • தயா
  •  
  • தேன்மதி – (சின்னத்துரை சந்திரமதி)
  • தேசிகன் – (பொன்னையா திருனேசன்)
  • திலகன்
  • திலீபன்
  • திருமால் – (கந்தையா அகிலேஸ்வரன்)
  •  
  • திருமாறன் (கொலம்பஸ்)
  •  
  • திவிச்சந்திரன்
  • துவாரகன் வைரவமூர்த்தி
  • உதயன் – கிருஸ்ணகுட்டி சுகுமாறன்
  • நளினி – உதயனின் மனைவி – சுகுமாறன் கருணாவதி
  • வடிவேல் குமரேஸ்வரன்
  • வாகீசன் – (ராமநாதன் நிமலநாதன்)
  • வாகீசனுடைய மகன் – நிமலநாதன் கலையரசன்
  • வாகககீசனின் மனைவி – நிமலநாதன் சுமதி
  • வாகீசன் பிள்ளை – நிமலநாதன் சின்பரசி
  • வாகீசன் பிள்ளை – நிமலநாதன் கோகலை
  • வைத்தி . லெப் கேணல்
  • (வாகைசூடி) – சொக்கலிங்கம் சுரேந்திரன்
  •  
  • வழுதி மாஸ்ரர். லெப் கேணல்
  • வரதன் லிஜென்டா
  •  
  • வசந்தி – (வீரன் மோகனதேவி)
  • வீமன் – ஏகாம்பரநாதன் பாலச்சந்திரகுமார்.
  • வீரப்பன் மாஸ்ரர்
  • வீரத்தேவன் – மகாலிங்கம் ஜெயகாந்தன்
  •  
  • வேலரசன் – வாலி சிவராசசிங்கம்
  • வேலவன்
  •  
  • வெள்ளை
  • வேல்மாறன்
  • வேல்ராஜ்
  • வேலுப்பிள்ளை ஜெயரட்ணம்
  • வேங்கைமணியன்
  • வேந்தன் (துரைராஜசிங்கம் பரணீதரன்)
  • வித்தியா கரன்
  • வித்தியாவினுடைய கணவர் கரன்
  • விஜியபாஸ்கர்
  •  
  • விஜிதரன்
  •  
  •  
  •  
  • விஜிதரன் வில்வராசா
  • விக்னேஸ்வரி
  • வில்லவன்
  • வில்லவன் – (கருப்பையா திலீபன்)
  • வின்சன்
  • வில்சன் விமல்ராஜ்
  • யாழினியன் – ஆனந்தராசா மனோவசீகரன்
  • யோகன் / செம்மணண்
  •  
  • யோகி – (யோகரட்ணம் யோகி)
  • யுகனதேவி வையாபுரி

http://globaltamilnews.net/2018/84493/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் போனோர் பட்டியல் வெளியானது: தளபதிகள் தினேஸ் மாஸ்டர், ரமேஸ், வேலவனும் உள்ளடக்கம்!

June 21, 2018
Col-Vasanthan-696x389.jpg

யுத்தத்தின் இறுதியில் காணாமல் போன விடுதலைப்புலிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்திற்கமைவாக இந்த விரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

யுத்தத்தின் இறுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட 351 பேரின் பெயர் விபரங்களே இந்த பட்டியலில் உள்ளதாக அவதானிகளால் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

யோகி, இராணுவப்பேச்சாளர் இளந்திரையன், கல்விக்கழக பொறுப்பாளர் பேபி சுப்ரமணியம், எழிலன், இளம்பரிதி மற்றும் இராணுவத்துறையை சேர்ந்த ரமேஸ், வீமன், கீர்த்தி, நாகேஷ், தினேஸ் மாஸ்டர், இம்ரான் பாண்டியன் படையணி தளபதிகள் வேலவன், ஆராவமுதன், வீமன், லோரன்ஸ், மஜீத், கொலம்பஸ், நிதித்துறையை சேர்ந்த மனோஜ், குட்டி, கோள்சர் பாபு உள்ளிட்டவர்களின் பெயர் விபரங்களே வெளியிடப்பட்டுள்ளன.

இவற்றில் பலர் குடும்பமாக சரணடைந்துள்ளது தெரிய வந்துள்ளது. பேபி சுப்ரமணியத்தின் மனைவி, மகள், விளையாட்டுத்துறை பொறுப்பாளர் ராஜாவின் மனைவி சிறு பிள்ளைகள் உள்ளிட்ட பலரது குடும்பங்களும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளன.

இந்த பட்டியலை பார்வையிட விரும்புபவர்கள் கீழுள்ள இணைப்பிற்கு சென்று பார்வையிடலாம்.  http://www.disappearance.itjpsl.com/#lang=english

http://www.pagetamil.com/9032/

 

 

காணாமல்போன விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் படம் வெளியீடு

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைத் தலைவர் என்று அடையாளப்படுத்தப்படும் சின்னத்தம்பி மகாலிங்கம் என்ற இளம்பரிதி இறுதிகட்டப் போரின்போது முள் வேலிக்குள் அடைக்கப்பட்டிருந்ததாகவும், பின்னர் அங்கிருந்து அகற்றப்பட்டு வேறு இடத்திற்குக் கொண்டு சென்றதை கண்டதாகவும் சாட்சியங்கள் கூறியுள்ளதாக ITJP என்ற சர்வதேச உண்மைகள் மற்றும் நீதித் திட்டம் (International Truth and Justice Project) எனும் அமைப்பு கூறியுள்ளது.

LTTEபடத்தின் காப்புரிமைWWW.DISAPPEARANCE.ITJPSL.COM/ Image captionசர்வதேச உண்மைகள் மற்றும் நீதித் திட்டம் வெளியிட்டுள்ள படம்

இளம்பரிதியின் மனைவி, இரண்டு பெண் பிள்ளைகள், ஒரு ஆண்பிள்ளை ஆகியோரும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களை கடைசியாக வட்டுவாகல் பகுதியில் கண்டதாக சாட்சியங்கள் பதிவாகியுள்ளதாகவும் ITJP குறிப்பிட்டுள்ளது.

இவர்கள் 18.05.2009ஆம் திகதி காணாமல் போனதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், அவர்களது குடும்ப படமும் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையின் போரின் இறுதிக் காலகட்டத்தில் காணாமல் போனோர் குறித்த ITJP இன் பெயர்ப் பட்டியல் தமது கவனத்தை ஈர்த்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

2009ஆம் ஆண்டு மே மாதத்தில் இலங்கைப் படையினரின் காவலில் இருந்தபோது காணாமலாகக்கப்பட்டதாகக் கூறப்படும் நபர்களின் பெயர்ப் பட்டியல் ஒன்று சர்வதேச உண்மைகள் மற்றும் நீதித் திட்ட இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பெயர்ப் பட்டியல் இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கவனத்திற்கு வந்துள்ளது என இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பெயர்ப் பட்டியல் 351 பெயர்களைக் கொண்டுள்ளது. சிறுவர், சிறுமியர் உள்ளிட்ட குடும்பங்களின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இலங்கை நாடாளுமன்ற சட்டம் ஒன்றினால் (2017ஆம் ஆண்டின் 09ஆம் இலக்கச் சட்டத்தினால் திருத்தப்பட்ட 2016ஆம் ஆண்டின் 14ஆம் இலக்கச் சட்டம்). காணாமல் போனோர் குறித்து கண்டறிவதற்கான அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டது.

காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க கோரும் போராட்டத்தில் பங்கெடுத்துள்ள பெண் (கோப்புப் படம்)படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகாணாமல் போனவர்களை கண்டுபிடிக்க கோரும் போராட்டத்தில் பங்கெடுத்துள்ள பெண் (கோப்புப் படம்)

காணாமல்போன நபர்களைத் தேடுதல், கண்டறிதல், குறித்த நபர்கள் எந்தச் சந்தர்ப்பத்தில் காணாமல் ஆக்கப்பட்டனர் என்பதைத் தெளிவுபடுத்தல், அவர்களது தலைவிதி, காணாமல் போகும் சம்பவங்களைக் குறைப்பதன் ஊடாக சம்பந்தப்பட்ட அதிகார சபைக்கு பரிந்துரைகளை மேற்கொள்ளுதல், காணாமல் போன நபர்கள் மற்றும் அவர்களது உறவினர்களின் நலன்களைப் பாதுகாத்தல், காணாமல் போன நபர்கள் அல்லது உறவினர்களுக்கு வழங்கக் கூடிய முறையான நிவாரணங்களை அடையாளம் காணுதல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கான அதிகாரமுடைய இலங்கையிலுள்ள நிரந்தரமானதும், சுந்திரமானதுமான அமைப்பாக இது கருதப்படுகிறது.

எனவே, தொடர்பான தகவல்களை இலங்கையில் அல்லது வெளிநாட்டிலுள்ள எவரேனும் அறிந்திருந்தால் காணாமல் போனோருக்கான அலுவலகத்துடன் பகிர்ந்துகொள்ளுமாறு இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன், சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தினால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலிலுள்ள நபர்கள் தொடர்பான ஏதேனும் விரிவான தகவல்கள், கிடைக்கும் பட்சத்தில் அவற்றை அறியத்தருமாறு கோரப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தச் சட்டத்தின் 27ஆம் பிரிவினால் விவரிக்கப்பட்டுள்ள வகையில் காணாமல் போயுள்ளதாகக் கருதப்படும் பாதுகாப்புப் படையினர், போலீசார் உள்ளடங்கலான ஏதேனும் நபர்களின் வேறு விபரங்கள், தகவல்கள், எவரிடமும் அல்லது எந்த அமைப்பிடமும் இருக்கும் பட்சத்தில் அவற்றையும் பகிர்ந்துகொள்ளுமாறு இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

இந்தத் தகவல்களை நாவல, நாரேஹேன்பிட வீதியில் அமைந்துள்ள ''காணாமல் போனோருக்கான அலுவலகத்தில்'' அல்லது ompsrilanka@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் பகிர்ந்துகொள்ளுமாறு இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

https://www.bbc.com/tamil/sri-lanka-44551867

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.