Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகவு

Featured Replies

மகவு

 

 
k3

பொண்ணோட அம்மாவும் பையனோட அம்மாவும் சேர்ந்து நடத்துற திருமணம்ன்னாலும் எந்தக் குறையும் யாரும் காண முடியாத அளவுக்கு மூணுநாள் சடங்குகள் எல்லாத்தையும் சிறப்பா செய்து ஊரு, உறவெல்லாம் மெச்சும்படியா நடத்தி வெச்ச கல்யாணம் சங்கரன், பார்வதி கல்யாணம். வந்தவங்களெல்லாம் வாயார வாழ்த்தினர். தெய்வ சங்கல்பம் என்றே புகழ்ந்தனர். அந்த பரமசிவனும் பார்வதியும் கண்ணுக்கு காட்சி தருவதுபோல தம்பதிகள் இருந்ததா நெகிழ்ந்து புகழ்ந்தனர். பொருத்தமின்னா அப்படி ஒரு பொருத்தம்.
உறவினர்களிலும், நண்பர்களிலுமாக ஒருவர், "டேய் சங்கரா நல்லா ஷேமமா, அந்நியோன்யமா இருக்கணும்டா. சீக்கிரமா புதுவரவு இருக்கட்டும்டா''
லேசான வெட்கத்துடன் சங்கரனும், அந்த நெற்றியில் படர்ந்த பச்சை நரம்பும் நிறம்மாறிச் சிவந்தது பார்வதிக்கு.
கல்யாணம் முடிஞ்ச ஒரு வாரத்தில் ஹனிமூனுக்காக கோவா புறப்பட்டனர் சங்கரனும் பார்வதியும். கோவாவைச் சேர்ந்து ஒருநாள்தான்; போன் வந்தது.
"சங்கரா மாமா பேசுறேன்டா'' 
"ம்...சொல்லுங்கோ மாமா''
"அக்காவும், மாமியும் சென்னைக்கு வந்துருக்கா. அவா வந்துண்டிருந்த பஸ் ஆக்சிடெண்ட் ஆயிடுத்து''
"ஐயோ! ஈஸ்வரா... என்னாச்சு மாமா''
"ஒண்ணுமில்லடா. பதறாத. லேசா காயம்தான். உயிருக்கொண்ணும் ஆபத்தில்ல''
"எப்டி மாமா? எந்த எடத்துல? என்ன ஆனது... ப்ளீஸ் மாமா''
"சங்கரா நன்னா இருக்கா. கவலப்படாத. சமயபுரம் டோல்கேட்டுக்கு முன்னால பஸ் ஓவர்டேக் பண்ணி முந்திப்போக முயற்சி பண்ணிருக்கா. லெஃப்ட்ல இரும்புத் தகடு ஏத்தின இந்த ஓப்பனா, நீளமா இருக்குமே லோடு லாரி''
"ஆமா''
"அவா நிறுத்திப் போட்ருக்கா. அதக் கவனிக்காம லெஃப்ட்டுல ஏறப் போக இரும்புத் தகடுல இவா பஸ்சோட லெஃப்ட்சைடு ஃபுல்லா கிழிச்சுடுத்து. நியூஸ் சேனல்லாம் போட்டாளே''
"மாமா... ரொம்ப பயமா இருக்கு. அம்மாவும், மாமியும் எப்டி இருக்கா?''
"நன்னா இருக்காடா. இங்க திருச்சி பி.ஏ.சி. ஹாஸ்பிட்டல்லதான் அட்மிட் பண்ணிருக்கா. நீ பத்திரமா பார்வதியோட வந்துசேரு''
"சரி மாமா'' போனைத் துண்டித்தான்.
" "ஏன்'ணா மாமி எப்டி இருக்காளாம், என் அம்மா எப்டி இருக்காளாம்?''
"பார்வதி லெளடு ஸ்பீக்கர்ல தானடி பேசுனேன். நீ கேட்டுட்டு தான இருந்த. கவலைப்படாத. ரெண்டுபேரும் நன்னா இருப்பா. நீ லக்கேஜ்ஜெல்லாம் ரெடி பண்ணு. நான் போயி ரூமை வெக்கேட் பண்ணிட்டு, ஃபிளைட் டிக்கெட் புக் பண்ணிண்டு வர்றேன்''
பார்வதியின் பதிலுக்குக் காத்திருக்காதவனாகக் கிளம்பினான்.
மனசெல்லாம் படபடத்தது. நெஞ்சு வலியெடுக்குது. மூச்சு விட முடியல. அப்பா இறந்தப்போ இருந்த அதே நிலை. ஆனா அதைவிட வலி அதிகமா இருக்கிறது. தன் உயிர் தன்னை விட்டுப் பிரிவது போலவே உணர்கிறான். இதையெல்லாம் பார்வதிக்குத் தெரியாமல் மறைத்துக் கொள்ள பெரும்பாடு படவேண்டியிருந்தது.

பி.ஏ.சி. ஹாஸ்பிட்டலுக்குள் நுழைந்தவனை, அவனது மாமா அழைத்துப் போகிறார். தனது அம்மாவின் பெட் அருகே போகிறான். சிவந்து, மெலிந்து, ஒடுங்கிப் போனவள். இப்போது ஒட்டிப்போய் கழுத்து வரைக்கும் போர்த்திக் கிடக்கிறாள்.
"அம்மா, அம்மா சங்கரன் வந்துட்டேம்மா. அம்மா ப்ளீஸ் பாரும்மா'' துடித்துக் கதறுகிறான். போர்த்தியிருந்த துணியை விலக்குகிறான் இடது கை, இடது கால் முட்டிக்குக் கீழ் காணோம்.
"அம்மா.... ஏம் மாமா எங்கிட்டப் பொய் சொன்னேள். நன்னாருக்கான்னேளே. இதத்தான் நன்னாருக்கான்னேளா?!...''
துடிதுடித்துவாறே மாமியின் பெட்டுக்கும் ஓடுகிறான். மாமியும் இதே நிலை. பார்வதி மயங்கி விழுந்து கிடக்கிறாள்.
சங்கரனின் மாமா ஸ்டாப் நர்ûஸ அழைத்து வந்தவர், பார்வதியைக் காட்டி "இவாளுக்கு முதல்ல ஃபஸ்ட் எய்டு பண்ணுங்கோ'' என்றார். சங்கரனைத் தனது தோளில் சாய்த்தவாறு ஆசுவாசப்படுத்தினார்.

இருவாரங்களுக்குப் பிறகு சங்கரனை அழைத்த மருத்துவர்:
"மிஸ்டர் சங்கரன், யுவர் மதர் இஸ் பிஸிக்கலி ஆல்ரைட். மென்டலி ஷி இஸ் சம் பிராப்ளெம். சோ இவங்க அந்த ஆக்ஸிடெண்ட் நடந்தப்போ அதிர்ச்சிக்குள்ளாகி இருக்காங்க. அதான் அன்கான்சியஸ் ஆயிட்டாங்க. சைக்கியார்ட்டிஸ்ட் பாக்குறாரு. எவ்ளோ நாள்ல ரெக்கவர்ங்கறது சொல்ல முடியல. மத்தபடி நோ ப்ராப்ளம்''
"தேங்யூ சார். அவங்க என்னோட மாமி''
" ம்... அவங்க குட். அவங்க நார்மலா இருக்குறதால பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணலாம். பட் நெறைய செலவாகும். வயசானவங்க தேவையான்றத யோசிச்சுக்கங்க. அப்புறம் அவங்களுக்கு வலது கை, வலது கால் நல்லா இருக்கிறதால, அவங்களே எழுந்து உக்காந்துப்பாங்க, சாப்பிட்டுப்பாங்க. கொஞ்சம் வீல் சேர் பழகிட்டங்கான்னா பெரிசா தொந்தரவு இருக்காது. ரெண்டு பேருமே இன்னொரு பத்து நாள் இங்கு இருக்குற மாதிரி இருக்கும். பிளாஸ்டிக் சர்ஜரிப் பத்தி யோசிங்க, பார்ப்போம்''
"ஓகே சார். ரொம்ப நன்றி''
மருத்துவர் அறையை விட்டு வெளியில் சென்றதும்,
"பார்வதி நீ என்ன யோசிக்கற. மாமிக்கு பிளாஸ்டிக் கை, கால் பொருத்திடலாமா''
"வேண்டாம். நான் பணத்துக்காகச் சொல்லல. நம்மகிட்ட என்னென்ன இருக்கோ எல்லாம் அவளோடதுதான். அந்த பிளாஸ்டிக் காலயோ, கையையோ வெச்சுப் பயன்படுத்தணுமின்னா நெறையப் பயிற்சி வேணும். அதெல்லாம் சாத்தியமான்னு தோணல நேக்கு. மாமியைப் போல அம்மாவையும் சேத்துப் பார்த்துக்க வேண்டியதான்''
"ட்ரீட்மெண்ட் முடிஞ்சதும் கெüம்பலாம். அதுக்கு முன்னே இதே மாதிரி நகரும் பெட் ரெண்டு வாங்கிடணும். பெட்பேன் எப்படி பயன்படுத்தறதுன்னு நல்லா ப்ராக்டீஸ் எடுத்துக்கணும்''
" நீங்க கவலப்படாதீங்க. நா இருக்கேன்'' 

 

பத்து நாட்கள் நகர்ந்தன. பார்வதியின் அம்மா தானாக எழுந்து உட்காருகிறார். தானே சாப்பிடுறார். சங்கரனின் தாயாரிடம் எந்த மாற்றமும் இல்லை. இந்த பத்து நாட்களுக்குள் சங்கரன், இப்போது இருவரும் படுத்திருக்கும் இதே தொழில்நுட்பத்துடன் கூடிய இரு கட்டில்களை மருத்துவரின் ஆலோசனையுடன் வாங்கி வீட்டில் தமது மாஸ்டர் பெட்ரூமில் அமைந்திருந்தான். முதலுதவிக்கு தேவையான சில மருத்துவ உபகரணங்களை வாங்கிக் கொண்டான். பெட்பேன், யூரின் டியூப் யாவற்றையும் ஒரு நர்ஸின் ஆலோசனையுடன் வாங்கியவன் அந்த மாஸ்டர் பெட்ரூமை மருத்துவ அறையாக மாற்றியிருந்தான்.
டாக்டர், "சங்கரன், ரெண்டு பேரையுமே அழைச்சுட்டுப் போகலாம். பார்வதியோட அம்மா நோ ப்ராப்ளம். பட் இந்த இயற்கை உபாதைகளுக்கு நீங்க உதவி பண்ணனும். உங்க அம்மாவுக்குதான் ரொம்பவே கேர் எடுத்துக்கணும். அவுங்களோட எந்தத் தேவையையும் எந்தப் பிரச்னையையும் அவங்களால வெளிப்படுத்த முடியாது. நீங்களாதான் உணர்ந்து நிறைவேத்தணும் ஓ.கே.வா?''
இருவரையும் வீட்டிற்கு அழைத்து வந்தவன், ஏற்கெனவே ஏற்பாடு செய்து வைத்திருந்த மாஸ்டர் பெட்ரூமில் நர்ஸ் உதவியுடன் அவரவருக்கான பெட்டில் படுக்க வைத்தான். 
பகவான் திட்டம் இதுதான்னா அத ஏத்துக்கறதத் தவிர வேற வழி? மனம் முழுதும் கேள்விகளும் குழப்பங்களும் அலைமோதின சங்கரனுக்கு. அடர்ந்து இருண்டிருக்கும் படுக்கையறையில் விழித்துப் பார்த்தாலும் எதுவும் தென்படவில்லை. 
உறக்கமில்லாமலும் உறங்கவில்லை என்பது பார்வதிக்கு தெரியாமலும் இருக்க வேண்டுமென்கிற பதைப்பதைப்பு வேறு. 
அவளும் இதே நிலைதான். "எப்டி சொல்றது? சொன்னா என்ன நினைப்பார்? என் அம்மாவுக்காக சுயநலமா யோசிக்கறதா தப்பா நினைச்சுட்டா! அவரோட அம்மாவுக்காகவும் தான் இந்த முடிவெடுக்கிறேன்னு புரிஞ்சுட்டா ஒண்ணுமில்லை. ஆனால் இந்த முடிவு சரிதானா? ஈஸ்வரா...!
ஒரு புதுமணத் தம்பதி ராத்திரியெல்லாம் இப்படியா யோசிச்சுக் கெடப்பா? என மனங் குமைந்தவள், நம்ம மட்டும்தான் இப்படியெல்லாம் யோசிக்கறோமா? அவரும் இப்படித்தான் யோசிக்கறாரா? சங்கரனும், இதே எண்ணங்களோடதான் இருட்டில் விழித்துக் கிடக்குறான். அவளைப் போலவே அவனும் அழுகையைக் கட்டுப்படுத்திக் கட்டுப்படுத்திப் பார்க்கிறான். 
மூன்று நாள் திருமணச் சடங்குகள், முன்னூறு நாள் தாய்மைக் கனவுகள், வந்தோரின் வாழ்த்துகள், வாஞ்சைகள்.... ஆமா வாழ்க்கை சரியாதானே தொடங்கினது. பிறகெப்படி சூனியப் புள்ளியும் தொடக்கப் புள்ளியிலேயே வந்து கலந்தது? தனக்குத் தானே கேட்டுக் கொண்டான் சங்கரன்.
சங்கரனுக்கும் பார்வதிக்கும் தங்கள் செயல்கள், கடவுள் சித்தம், வாழ்க்கை நெருக்கடி இருவரையும் மாறி, மாறி மனசைத் துவைத்து அலையடித்துக் கொண்டே இருந்தன. கண்ணீரைத் தவிர கவலையைக் கரைக்க மருந்தொன்றுமில்லை இருவருக்கும் இப்போது. மீண்டும் மீண்டும் கல்யாண நாட்களின் நினைவுகள், காட்சிகள், துளிர்க்கும் கண்ணீருள் மிதந்து, மிதந்து வழிந்து கொண்டே இருந்தன.
இனியும் மனஉலைகளை மூடிவைக்க முடியல இருவருக்கும். வெக்கையும், வெப்பமும், கவலையும், துயரமும், கனவுகள் கலைந்து சிதறும் வலிகளும் கூர்கொண்டு துளைத்தன இதயத்தசைகளை.
எழுந்து உட்கார்ந்தான் சங்கரன். அதே விநாடி பார்வதியும் உட்கார்ந்தாள்.
" பாரு தூங்கலயா''
"நீங்க''
"குரல் இவ்ளோ தெளிவா இருக்கு. தூங்கவே இல்லையோ''
"அதேதான் நானும் கேக்கறேன்''
கொஞ்சநேர மெüனத்திற்குப் பின்
"பாரு, ஒங்கிட்ட ஒண்ணு சொல்லணும்''
"நானும் ஒங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்''
"ம்... சொல்லு''
"நீங்க சொல்லுங்கோ''
"நாம கொழந்த பெத்துக்க வேண்டாம்'' ஒரே நேரத்தில் இருவரும் தங்களின் முடிவை வெளிப்படுத்தினர்.
" பெண்மையின் கொடையே தாய்மைதான். உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு ரொம்ப தவித்தேன்'' 
"எனக்கும் அதே குழப்பம்தான். குழந்தை வேண்டான்னா சம்மதிப்பேளோ மாட்டேளோன்னு''
"ஓஹோ''
"இந்த கிராமத்துலயெல்லாம் கொழந்தயக் கொஞ்சறச்சே "என்னப்பெத்த அம்மா' ன்னு கொஞ்சுவா கேட்டுருக்கியோ''
"இம் கேட்டுருக்கேன்''
"அவாளுக்கெல்லாம் அது உணர்ச்சி பொங்கும் வார்த்த மட்டுந்தான். நமக்கு உண்மையிலேயே நம்ம பெத்த அம்மாதான் நம்ம கொழந்தைங்க''
அவன் எதுவும் பேசாமல் அவள் முகத்தையே பார்த்தான். அவளும் அவனைப் பார்த்தாள். 
"நாளையிலிருந்து கோயிலுக்கு வேலைக்குப் போகலாம்னு இருக்கேன்''
"சரி''
"தெனமுங் காத்தால நாலுமணிக்கெல்லாம் எழுந்து, வெந்நீர் போட்டு, அவா ரெண்டு பேருக்கும் பெட் விரிப்பு மாத்தி, தொடச்சு விட்டு, ட்ரெஸ் மாத்தி, எல்லாஞ் செய்துட்டுப் போறேன். நீ என் மாமிக்கு டிபன் கொடுத்துடு அவா சாப்டுப்பா. உன் மாமிக்கு மட்டும் ஊட்டி விட்டு பாத்துக்கோ. நான் மதியம் சாப்பாடு ஊட்ட வந்துடுறேன். அப்புறம் மூணு மணிக்குப் போயிட்டு எட்டு, எட்டரைக்கு வந்துடுறேன். இதுதான் நமக்கு டெய்லி ஷெட்யூல். இன்னும் முடிஞ்சவரைக்கும் நோக்கு ஒத்தாசையா இருக்கேன்டி''
"இவ்ளோதானே. நான் பாத்துக்கறேன்''

ஆண்டுகள் பல கடந்தன. பார்வதியோட அம்மா வீல் சேர்ல உட்காரப் பழகிக் கொண்டார். சங்கரனின் அம்மாவிடம் எந்த முன்னேற்றமும் இல்ல. 
பார்வதி, " உலகமே இந்த வீடா சுருங்கிடுத்து. வாசல் தாண்டி பத்து வருசமாகறது''
"அந்தக் கவல இருக்கறதா? ஒண்ணு செய்யலாம். நாளைக்கு மதியம் சட்டுன்னு வந்துடறேன். நீ ரெடியா இரு. இப்டியே ஸ்ரீரங்கம், சத்திரம், கடவீதின்னு போய்ட்டு வரலாம்''
"சரி சாப்பாடு ரெடியாயிடுத்தா! அம்மாவுக்கு ஊட்டிடலாம்''
"இருங்கோ எடுத்துட்டு வறேன்'' போனவள் பருப்பு சாதம். வெண்டக்காக் கூட்டு, பொடலங்காய் பொரியல், தண்ணி கொண்டு வந்து தந்தாள். சாப்பாட்டை வாங்கிக் கொண்ட சங்கரன், "மாமிக்கும் சாப்பாடு கொடுத்துடு'' என்று தனது அம்மாவின் கட்டிலருகில் வந்தவன், சாப்பாட்டை டேபிளில் வைத்தான். எலக்ட்ரானிக் பெட்டின் ஸ்விட்சை அழுத்தினான். உட்காருவதை விடவும் கொஞ்சம் சாய்மானத்துக்கு வந்த போது அழுத்துவதை நிறுத்தினான். அம்மா நேற்றிலும் கொஞ்சம் வாடி கண்கள் விழித்தவாறு இருந்தாள். மெதுவாக வலது கன்னத்தில் தட்டினான்.
"அம்மா... அம்மா... சாப்புடுங்கோம்மா''
ஒரு சலனமும் இல்லை. முதலில் கொஞ்சம் தண்ணீர் கொடுத்தான். மெதுவாக இறங்கியது. பருப்பு சாதத்தை கொஞ்சங் கொஞ்சமாக ஊட்டியவன், இடையிடையே கூட்டையும் பொரியலையும் கொடுத்தான். நான்கைந்து வாய் வாங்கியவள் லேசாகத் திணறுவது போலத் தோன்றியது. கண்களை அகல விரிக்கிறாள்.
"அம்மா இந்தாங்கோ தண்ணி கொஞ்சங் குடிங்கோ. ஒண்ணும் பயப்படாதிங்க''
காதுல விழுதோ இல்லயோ, அம்மா உணர்ந்தாளோ இல்லையோ எதுவும் புரிஞ்சுக்க முடியல. இருந்தும் சங்கரன் பேசிக் கொண்டே ஊட்டினான். சாதம் கடைவாயில் வழிந்தது. சங்கரன் துடைத்து விட்டான். கொஞ்சம் கோபமும் வந்தது.
"ஒழுங்கா முழுங்க மாட்டேளா. ஏன் இப்டி வழிய விடுறேள்'' என்றவன் அடுத்தவாய் ஊட்டினான். அவன் கையைத் தட்டி விட்டாள். அவ்வளவுதான். சங்கரனுக்கு எங்கிருந்துதான் கோபம் வந்ததோ, வலது கன்னத்தில் தட்டினான். சுய நினைவு வந்து திடுக்கிட்டவனாய்...
"அம்மா... அம்மா... என்ன மன்னிச்சுடுங்கோ என்ன மன்னிச்சுடுங்கமா''
"ஏன்னா என்னாச்சு''
"சாரிடி பாரு... சாரி அம்மாவ அரஞ்சுட்டேன்''
"என்ன பண்ணிட்டேள். அப்படி என்ன கண்ட்ரோல் இல்லா தனம்?''
"ஏன்னா இங்க வாங்கோ. மாமி கைய லேசா ஆட்டறா. கண்ணு அங்க, இங்க லேசா அசையறது. இங்க வாங்கோ, வந்து பாருங்கோ. ஏதோ பேச முயற்சி பண்றா. வாங்கோ''
"சங்கரா''
"அம்மா... ஒங்க சங்கரன்தாம்மா. பாரு என்ன பத்து வருஷத்துக்கப்பறமா அழச்சுட்டாடி. அம்மா அம்மா ஒங்க சங்கரன்தாம்மா''
லேசாக கழுத்தை அசைத்தவள், வலது கை, காலைப் பார்க்கிறாள். இடது பக்கம் கண்களை நகர்த்தி இடது கை கால் இல்லாததைப் பார்க்கிறாள். மெüனமாகிறாள். வலது கையை அசைத்துப் பார்த்தவள், மெதுவாகத் தூக்கி தலையைத் தடவுகிறாள். மொட்டைத் தலையை உணர்கிறாள். மீண்டும் சில நொடிகள் மெüனிக்கிறாள். 
"சங்கரா''
"அம்மா''
"பார்வதி''
"ஏய் பாரு அம்மா சரியாயிட்டா, நினைவு வந்துடுத்து, அம்மா பார்வதிதாம்மா''
கழுத்தை அரைவட்டத்தில் அசைத்து அறை முழுவதையும் பார்க்கிறாள். அறைக்கு வெளியேயும் கண்களால் துழாவுகிறாள். சங்கரனின் வலது கையைப் பற்றியவள், 
"சங்கரா என்னடா முடியெல்லாம் நரை விழுந்துடுத்து, தாடியெல்லாம் நரையாயிட்ருக்கு''
" ஆமம்மா. ஆமா அதனால என்ன?''
மீண்டும் சில நிமிடங்கள் மெüனமாகிறாள். 
"சங்கரா, பார்வதி - எங்க கொழந்தைங்க, வரச்சொல்லுடா, எங்கடா கொழந்தைங்க. கேட்டுண்டே இருக்கேன் பேசாம நிக்கற. பேர கொழந்தைகள அழச்சுண்டு வா. நா பார்க்கணும்''
இருகைகளாலும் அம்மாவின் கன்னங்களை ஏந்திக் கொண்டு, அவள் கண்களையே பார்க்கிறான். 
"நாங்கதான்மா உனக்கு குழந்தைகள்'' என்கிறான்.

 

 

http://www.dinamani.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.