Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தனை சந்தித்தார் நோர்வே வெளிவிவகார அமைச்சர்

Featured Replies

சம்பந்தனை சந்தித்தார் நோர்வே வெளிவிவகார அமைச்சர்

 

நோர்வே வெளிவிவகார அமைச்சர் ரோலிட்ச் ஹொல்டே உட்பட்ட குழுவினர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இலங்கைக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வந்துள்ள அவர் இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பில் உள்ள எதிர்க்கட்சி தலைவரின் காரியாலயத்தில் சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

10-1-1.jpg

10-3.jpg

http://www.newsuthanthiran.com/2018/06/22/சம்பந்தனை-சந்தித்தார்-நோ/

  • தொடங்கியவர்

அர­சியல் அமைப்பு உரு­வாக்­கத்தை விரைவுபடுத்த அழுத்தம் கொடுங்கள்

28-9c671e00996239103caf80486d36cdcea4bc99c8.jpg

 

நோர்வே வெளி­வி­வ­கார இரா­ஜாங்க அமைச்­ச­ரு­ட­னான சந்­திப்பில் சம்­பந்தன் வலி­யு­றுத்தல்

(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

புதிய அர­சியல் அமைப்பை உரு­வாக்கும் விவ­கா­ரத்தில் சர்­வ­தே­சத்தின் அழுத்­த மும் அக்­க­றையும் இருக்க வேண்டும் என நோர்வே வெளி­வி­வ­கார இரா­ஜாங்க அமைச்சர் ஜென்ஸ் புரோலிச் ஹோல்ட்­டிடம் தமிழ் தேசி யக் கூட்­ட­மைப்பு வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

தீர்­வு­களை பெற்­றுக்­கொள்ள முன்­னெ­டுக்கும் நட­வ­டிக்­கை­களில் சர்­வ­தேச சமூகம் என்ற வகை யில் தாம் தொடர்ந்தும் அர­சாங்­கத்துக்கு அழுத்தம் கொடுப்­ப­தா­கவும் ஆரோக்­கி­ய­மான தீர்­வு­களை பெற்­றுத்­தர கைகோர்த்து செயற்­ப­டு­வ­தா­கவும் நோர்வே வெளி­வி­வ­கார இரா­ஜாங்க அமைச்சர் ஜென்ஸ் புரோலிச் ஹோல்ட் எதிர்க்­கட்சித் தலை வர் சம்­பந்­த­னிடம் வாக்­கு­றுதி வழங்­கி­யுள்ளார்.

நான்கு நாட்கள் உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் மேற்­கொண்டு இலங்கை வந்­துள்ள நோர்வே வெளி­வி­வ­கார இரா­ஜாங்க அமைச்சர் ஜென்ஸ் புரோலிச் ஹோல்ட் கடந்த சில தினங்­க­ளாக வடக்கில் தமது விஜ­யத்தை மேற்­கொண்­டி­ருந்த நிலையில் நேற்று பிர­தான எதிர்க்­கட்­சி­யான தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பை பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்சி தலைவர் அலு­வ­ல­கத்தில் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தினார்.

 எதிர்க்­கட்சி தலைவர் இரா. சம்­பந்தன், சுமந்­திரன், செல்வம் அடைக்­க­ல­நாதன் உள்­ளிட்ட கூட்­ட­மைப்பு பிர­தி­நி­திகள் இந்த சந்­திப்பில் கலந்­து­கொண்­டி­ருந்­தனர். சந்­திப்பு குறித்து தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன் கூறு­கையில்,

நாட்டின் தற்­போ­தைய நிலை­மைகள் குறித்து நாம் நோர்வே வெளி­வி­வ­கார இரா­ஜாங்க அமைச்சர் ஜென்ஸ் புரோலிச் ஹோல்ட்­டிடம் தெரி­வித்­தி­ருந்தோம், குறிப்­பாக தமிழ் மக்­களின் நீண்­ட­கால பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணப்­படும் வகையில் உரு­வாக்க முயற்­சிக்கும் புதிய அர­சியல் அமைப்பு குறித்தும், அதன் தற்­போ­தைய நகர்­வுகள் குறித்தும் எடுத்­து­ரைத்­தி­ருந்தோம். உரிய காலத்தில் அர­சியல் அமைப்பு உரு­வாக்க நட­வ­டிக்­கைகள் முடி­வ­டைய வேண்டும், காலத்தை கடத்தி அதன் மூல­மாக தீர்­வுகள் தள்­ளிப்­போ­வதை எம்மால் ஏற்­று­கொள்ள முடி­யாது. இந்த அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்த நிலையில் கொடுத்த வாக்­கு­று­திகள் பல­வற்றில் புதிய அர­சியல் அமைப்பு உரு­வாக்­கப்­ப­டு­வது என்­பது மிக முக்­கி­ய­மான வாக்­கு­று­தி­யாகும். சர்­வ­தேச தரப்­பி­டமும் அர­சாங்கம் இதனை தெரி­வித்­துள்­ளது. ஆகவே தீர்­வுகள் பிட்­போ­டப்­ப­டு­வதை ஏற்­று­கொள்ள முடி­யாது என்­பதை வலி­யு­றுத்­தினோம்.

அதேபோல் வடக்கின் நிலை­மைகள், மக்­களின் வாழ்­வா­தார நிலை­மைகள் மற்றும் அர­சாங்­கத்தின் நகர்­வுகள் என்­பன குறித்தும் எமது தரப்பு நியா­யங்­க­ளையும், நெருக்­க­டி­க­ளையும் நாம் தெளி­வாக முன்­வைத்­தி­ருந்தோம். நடை­முறை செயற்­பா­டுகள் குறித்து ஆழ­மாக கலந்­து­ரை­யா­டி­துடன் எமது நீண்­ட­கால தீர்­வுகள் குறித்தும் அதனை உறு­திப்­ப­டுத்த சர்­வ­தேச அழுத்­தங்கள் மற்றும் அக்­கறை தொடர்ச்­சி­யாக இருக்க வேண்டும் என்­பதை நாம் கூறி­யி­ருந்தோம்.

தீர்­வு­களை பெற்­றுக்­கொள்ள முன்­னெ­டுக்கும் நட­வ­டிக்­கை­களில் சர்வதேச சமூகம் என்ற வகையில் தாம் தொடர்ந்தும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாகவும் ஆரோக்கியமான தீர்வுகளை பெற்றுத்தர தாம் கைகோர்த்து செயற்படுவதாகவும் நோர்வே வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஜென்ஸ் புரோலிச் ஹோல்ட் தமக்குத் தெரிவித்தகாக சுமந்திரன் எம்.பி தெரிவித்தார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-06-23#page-1

  • தொடங்கியவர்
‘புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சி தோல்வியடைந்தால் பிரிவினை உருவாகும்’
 
புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் முயற்சிகள் தோல்வியுறும் பட்சத்தில், அது மேலும் மக்களிடையே பிரிவினையை உருவாக்குமென, எதிர்க்கட்சித் தலைவரும் த.தே.கூ தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

மேலும், மென்போக்காளர்கள் ஒன்று சேர்ந்து இயங்குகின்ற பட்சத்தில் புதிய அரசமைப்பானது மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு நிறைவேற்றப்படுவதை உறுதி செய்யலாம் எனவும் தெரிவித்தார்.

இலங்கை வந்துள்ள நோர்வேயின் அபிவிருத்தி விவகாரங்களுக்கான இராஜாங்க செயலாளர் ஜென் ப்ரோலிச் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பின் குழுவிவுக்கும் இடையிலான சந்திப்பு, நாடாளுமன்றிலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது.

இதன்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் தற்கால அரசியல் நிலை குறித்து செயலாளரை தெளிவுபடுத்திய இரா சம்பந்தன் அவர்கள் கடந்த காலங்களில் இலங்கை தொடர்பில் விசேடமாக இனப்பிரச்சினைக்கான தீர்வொன்றை எட்டுவது தொடர்பில், நோர்வே அரசாங்கத்தின் பங்களிப்புக்கு நன்றி தெரிவித்தார்.

புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் தெளிவுபடுத்திய இரா. சம்பந்தன், மக்கள் பிரதிநிதிகளாக எம்முன்னே எழுந்துள்ள இந்த சந்தர்ப்பத்தை உதாசீனம்  முடியாது என தெரிவித்த அதேவேளை, இந்த முயற்சிகள் தோல்வியுறும் பட்சத்தில் அது மேலும் மக்களிடையே பிரிவினையை உருவாக்கும் எனவும் வலியுறுத்தினார். 

மேலும் புதிய அரசியல் யாப்பு நிறைவேறுவதற்கான சாத்தியப்பாடுகளை இல்லை என்பதை ஏற்க முடியாது என தெரிவித்த இரா சம்பந்தன், கடந்த காலங்களில் இதனை முன்னெடுத்து செல்வதில் ஏற்பட்ட தாமதங்கள்  தொடர்பில் திருப்தியடைய முடியாது எனவும் வலியுறுத்தினார்.

உண்மையான அர்ப்பணிப்பும் அரசியல் உத்வேகமும் இருந்தால் கடந்த காலங்களில் செய்ய தவறியவற்றை இந்த அரசாங்கத்தால் நிறைவேற்ற முடியும் என தெரிவித்த இரா. சம்பந்தன், தமிழ் மக்கள் தமது விருப்பத்துக்கும் சம்மதத்துக்கும் எதிராக ஆளப்படுவதையும் சுட்டிக்காட்டினார்.

 

1956ஆம் ஆண்டிலிருந்து இந்த நாட்டின் அரசாங்க  கட்டமைப்பில் மாற்றத்தை வேண்டி தமிழ் மக்கள் தொடர்ச்சியாக வாக்களித்து வந்துள்ளமையை எடுத்துக்கூறிய இரா.சம்பந்தன், இந்த ஜனநாயக கோரிக்கையானது தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டு மறுக்கப்பட்டுள்ளதையும் தெளிவுபடுத்தினார்.

அதிகாரப்பகிர்வு தொடர்பிலான எமது கோரிக்கைகள் சர்வதேச சட்டங்களுக்கும் நியமங்களுக்கும் அமைவாகவே இருப்பதனை எடுத்துரைத்த இரா சம்பந்தன், புதிய அரசியல் யாப்பு தொடர்பான கருமங்கள் 1988ஆம் ஆண்டிலிருந்தே முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளதாகவும் ஒவ்வொரு அரசாங்கமும் இது தொடர்பில் கருமங்களை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் தேவையற்ற தாமதங்களை இனிமேலும் ஏற்க முடியாது என தெரிவித்த இரா. சம்பந்தன், வரைபு யாப்பு நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு மூன்றில் இரண்டு பெருன்பான்மையினால் நிறைவேற்றப்பட்ட பின்னர், அது ஒரு சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மக்களின் அங்கிகாரத்தைப் பெறவேண்டும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன், துவேஷ சிந்தையுடன் செயற்படுவோர் இந்நாட்டில் பெரும் எண்ணிக்கையில் இல்லை என தெரிவித்த இரா. சம்பந்தன், துரதிஷ்டவசமாக மென்போக்காளர்களை விட அவர்களின் கருத்துக்கள் முதன்மை பெறுவதாகவும் கூறினார்.

அத்துடன், பொருளாதார மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றில் எமக்கு சமஉரிமை வழங்கப்டுவதில்லை இதனால் எம்மக்கள் விரக்தியடைந்துள்ளனர், மாறாக அதிகாரம் சரியாக பகிரப்படுமிடத்து இந்த பொருளாதார சமூக பிரச்சினைகளை மிக பயனுள்ள, நேர்த்தியான  வகையில் நிவிர்த்தி செய்துகொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

வடக்கு - கிழக்கிலுள்ள காணி விடுவிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த இரா. சம்பந்தன்,

“இந்த விடயம் தொடர்பில் முன்னேற்றம் காணப்பட்டாலும், யுத்தம் முடிவடைந்து 9 வருடங்கள் கடந்துள்ளமையை கருத்திற்கொள்ளுகின்றபோது, இந்த கருமங்கள் இன்னும் துரிதமாக இடம்பெற்றிருக்க வேண்டும்.

“ஆயுத படையினர் இந்த நிலங்களில் பயிர்ச்செய்கை செய்து  விளைச்சலை இந்த காணியின் உரிமையாளர்களுக்கே விற்கின்ற துர்ப்பாக்கிய நிலைமையே உள்ளது.

இதேவேளை, நல்லிணக்கம் மற்றும் நிலையான  சமாதானத்தை நோக்கி செல்வதற்கு இப்படியான நடவடிக்கைகள் தடையாக அமைவதாகவும் அவர் தெரிவித்தார்

 

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/புதிய-அரசமைப்பு-உருவாக்க-முயற்சி-தோல்வியடைந்தால்-பிரிவினை-உருவாகும்/150-218013

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.