Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் விமானத் தளத் தாக்குதலுக்கு சர்வதேச ஊடகங்கள் பரந்த பிரசாரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் விமானத் தளத் தாக்குதலுக்கு சர்வதேச ஊடகங்கள் பரந்த பிரசாரம்

[29 - March - 2007]

கட்டுநாயக்க விமானத் தளத்தின் மீது புலிகள் இயக்கத்தினரின் விமானம் தாக்குதல் நடத்திய 20 நிமிடங்களுக்குள்ளேயே புலிகள் இயக்கத்தின் இராணுவப் பேச்சாளர் ராசையா இளந்திரையன் கிளிநொச்சிக் காட்டுக்குள்ளே பதுங்கு குழி ஒன்றிலிருந்து செய்மதி தொலைபேசி மூலம் இந்தத் தாக்குதல் பற்றி ராய்ட்டர் தலைமையகத்துக்குத் தகவல் தெரிவித்ததுடன் இந்தத் தாக்குதல் சம்பவம் பற்றி பரந்த முறையில் பிரசாரம் செய்யும் படியும் வேண்டிக் கொண்டுள்ளார்.

இந்தத் தாக்குதல் பற்றி புலிகளின் இணையத் தளமாகிய "தமிழ் நெற்" உடனடியாகவே உலகம் முழுவதும் அறிவித்து விட்டது. தொடர்ந்து ஏ.பி. செய்தி ஸ்தாபனம் (அசோசியேட்டட் பிரெஸ்), சீ.என்.என்., ஏ.எப்.பி. (AFP), பி.பி.சி. ஷின்ஹுவா, பொக்ஸ், என்.பி.சி., எ.பி.சி. ஆகிய செய்தி நிறுவனங்களும் புலிகளின் இந்த விமானநிலையத் தாக்குதல் பற்றி பரந்த பிரசாரம் செய்தன.

2001 செப்டெம்பர் 11 ஆம் திகதி அல்ஹைடா பயங்கரவாதிகள் நியூயோர்க், வாஷிங்டன் நகரில் தாக்குதல் நடத்தியது அமெரிக்காவிலுள்ள தனியார் விமானப் போக்குவரத்து நிறுவனங்களிலிருந்து கடத்தி வரப்பட்ட விமானங்கள் மூலமேயாகும். இதற்கு முன்னரும் கூட பயங்கரவாதிகள் பயணிகள் விமானங்களைக் கடத்தி வந்தே தமது பயங்கரவாதச் செயல்களைச் செய்துள்ளனர். ஆனால், உலகத்துக்கு தற்கொலைப் படையை முதன் முதல் அறிமுகம் செய்தவரான பிரபாகரன் தன்னிடம் விமானங்கள் இருப்பதையும் விமானப் படையினர் இருப்பதையும் இந்தக் கட்டுநாயக்க விமானத்தளத் தாக்குதல் மூலம் உலகத்துக்கு அறிவித்துள்ளார். மேற்கண்டவாறு புலிகள் இயக்கத்தின் விமான நிலையத் தாக்குதலுக்கு மேற்படி சர்வதேச ஊடகங்கள் பெரும் விளம்பரம் கொடுத்து விமர்சனம் செய்துள்ளன.

ஆயிரக் கணக்கான ஸ்ரீ லங்கா படையினரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு பிரபாகரனால் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல் நடவடிக்கை விமர்சனத்துக்குரியது என்பதே. வெளிநாட்டு ஊடகங்களுக்கு ஸ்ரீ லங்காவிலிருந்து தகவல்களை வழங்கிக் கொண்டிருக்கும் வெளிநாட்டு ஊடகப் பிரதிநிதிகளின் நம்பிக்கையாக இருக்கிறது. இவர்களே முன்னர் ஸ்ரீ லங்கா விமானப் படையினருக்கு நவீன ராடர் கருவிகள் வழங்கியது பற்றியும் புலிகள் இயக்கத்தினர் நடத்தக் கூடிய இவ்வாறான தாக்குதல் பற்றியும் விமானப் படையினரிடம் இருக்கும் தொழில் நுட்ப வசதி மற்றும் திறமை பற்றியும் பல்வேறு விமர்சனங்களை வெளியிட்டிருந்தனர்.

-லங்காதீப: 27.03.2007

தினக்குரல்

லங்கா தீபாவில இருக்க மாமாக்கள் பாவம் வன்னிக்குள்ள போய் கிபீர் மக்களுக்கு குண்டு போடும் போது புலிகளின்ட காம்ப் என்டு பொய் சொல்லுரவினயளூக்கு இதில பொய் சொல்ல முடியல என்டு கோபத்தை சர்வதேச ஊடகங்கள் மேல பழு போடியின

2ம் உலக மகா யுத்ததிலயே தற்கொலைக்குண்டு தாக்குதல் ஆரம்பிச்சுட்டு என்டு இவையளுக்கு யாரச்சும் சொல்லி கொடுங்க, சுபாச் சந்திரபோஸ் இந்தியாவில சுதந்திரத்திற்காக யுத்தம் செய்த போதே தற்கொலை குண்டு தாக்குதல் நடந்திருக்கு இதெல்லாம் இவையலுக்கு தெரியாதாமோ............?

சுபாச் சந்திரபோஸ் இந்தியாவில சுதந்திரத்திற்காக யுத்தம் செய்த போதே தற்கொலை குண்டு தாக்குதல் நடந்திருக்கு

இது புதிய செய்தி! யாராச்சும் உறுதிப்படுத்துவியளோ?

2ம் உலக மகா யுத்ததிலயே தற்கொலைக்குண்டு தாக்குதல் ஆரம்பிச்சுட்டு என்டு இவையளுக்கு யாரச்சும் சொல்லி கொடுங்க

வானவில், கீழே உங்கள் குண்டுத்தாக்குதலை நிறுத்துங்கள், கருத்தை வாசிக்க முடியாமல் இடஞ்சலாக உள்ளது.

இது புதிய செய்தி! யாராச்சும் உறுதிப்படுத்துவியளோ?

என்னால இப்போ உறுதிப்படுத்த முடியாது என்னோட தாத்தா முன்னாடி சொல்ல கேட்டிருக்கன், அவரு மேல போய் ரொம்ப வருசமாச்சு

வானவில், கீழே உங்கள் குண்டுத்தாக்குதலை நிறுத்துங்கள், கருத்தை வாசிக்க முடியாமல் இடஞ்சலாக உள்ளது.

எல்லோரும் ஆளாலுக்கு குண்டு போடுறாங்க நான் போடக்கூடாதா...........? :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது புதிய செய்தி! யாராச்சும் உறுதிப்படுத்துவியளோ?

சுபாஷ் சந்திர போசு ஆங்கிலேய டாங்கி படைகளுக்கு எதிராக தற்கொலைப்படை வீரர்களை பயன்படுத்தியதாக உறுதிப்படுத்தாத தகவல்கள் உண்டு

சுபாஷ் சந்திர போசு ஆங்கிலேய டாங்கி படைகளுக்கு எதிராக தற்கொலைப்படை வீரர்களை பயன்படுத்தியதாக உறுதிப்படுத்தாத தகவல்கள் உண்டு

தற்கொலை தாக்குதல் நடத்திய வீரனின் பெயரைக் கூட மறந்து விடுமளவிற்கு இவர்கள் நன்றிகெட்டவர்களா ?

சுபாஷ் சந்திர போசு ஆங்கிலேய டாங்கி படைகளுக்கு எதிராக தற்கொலைப்படை வீரர்களை பயன்படுத்தியதாக உறுதிப்படுத்தாத தகவல்கள் உண்டு

ஆஆகா எனக்கு ஆதரவா ஒருத்தர் வந்திட்டாரு

star news

Reuters

unknown news station

ரூபவாகினி

செஞ்சோலை படுகொலை

வீரபாண்டிய கட்டபொம்மன் காலத்தில் அம் மன்னனின் படைவீரனில் ஒருவன் வெள்ளையர்களின் வெடிபொருள் கிடங்கைத் தற்கொலைத் தாக்குதல் மூலம் அழித்ததாகவும் அதன் சிதைவுகளை இன்றும் கூட காணமுடியுமெனவும் தமிழ் தொலைக் காட்சியொன்றில் சில மாதங்களுக்கு முன் காட்டினார்கள்.

லங்கா தீபாவில இருக்க மாமாக்கள் பாவம் வன்னிக்குள்ள போய் கிபீர் மக்களுக்கு குண்டு போடும் போது புலிகளின்ட காம்ப் என்டு பொய் சொல்லுரவினயளூக்கு இதில பொய் சொல்ல முடியல என்டு கோபத்தை சர்வதேச ஊடகங்கள் மேல பழு போடியின

2ம் உலக மகா யுத்ததிலயே தற்கொலைக்குண்டு தாக்குதல் ஆரம்பிச்சுட்டு என்டு இவையளுக்கு யாரச்சும் சொல்லி கொடுங்க, சுபாச் சந்திரபோஸ் இந்தியாவில சுதந்திரத்திற்காக யுத்தம் செய்த போதே தற்கொலை குண்டு தாக்குதல் நடந்திருக்கு இதெல்லாம் இவையலுக்கு தெரியாதாமோ............?

கமல் நடித்த இந்தியன் படத்திலே இது சம்பந்தமான காட்சியொன்று வருகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகின் முதல் தற்கொடைதாரி, சாம்சன் என்பவரே என வேதாகமத்தில் எழுதப் பட்டிருக்கிறது என நினைக்கிறேன்.

......சாம்சன் அந்த வீட்டைத் தாங்கி நிற்கிற இரண்டு நடுத்தூண்களில், ஒன்றைத் தன் வலதுகையினாலும், மற்றொன்றைத் தன் இடதுகையினாலும் பிடித்துக்கொண்டு, என் உயிர் பெலிஸ்தரோடேகூட மடியக்கடவது என்று சொல்லி, பலமாய்ச் சாய்க்க, அந்த வீடு அதில் இருந்த பிரபுக்கள்மேலும் எல்லா ஜனங்கள்மேலும் விழுந்தது; இவ்விதமாய் அவன் உயிரோடிருக்கையில் அவனால் கொல்லப்பட்டவர்களைப் பார்க்கிலும், அவன் சாகும்போது அவனால் கொல்லப்பட்டவர்கள் அதிகமாயிருந்தார்கள்.

Judges 16: 29-30

29 With that Samson braced himself against the two middle pillars upon which the house was firmly established, and got a grasp on them, one with his right and the other with his left hand. 30 And Samson proceeded to say: “Let my soul die with the Phi·lis´tines.” Then he bent himself with power, and the house went falling upon the axis lords and upon all the people that were in it, so that the dead that he put to death in his own death came to be more than those he had put to death during his lifetime.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த செய்தியை(?) நகைச்சுவை பகுதிக்குள் இணைப்பதுதான் பொருத்தமானது.. அதை ஏன் தமிழீழ செய்திகளுக்குள் இணைத்திருக்கிறீர்கள்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.