Jump to content

ஆதி மனிதர்கள் திருவள்ளூரில்தான் தோன்றினார்கள், என நிரூபிக்கிறது பட்டரைபெரும்புதூர் அகழாய்வு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Humans existed 3.75 lakh years ago in Tiruvallur, says Minister Pandiarajan

ஆதி மனிதர்கள் திருவள்ளூரில்தான் தோன்றினார்கள், என நிரூபிக்கிறது பட்டரைபெரும்புதூர் அகழாய்வு!

ஆதி மனிதர்கள் ஆப்பிரிக்காவில் தோன்றினர் என்பதைத் தகர்க்கிறது பட்டரை பெரும்புதூர், அகரம்பாக்கம் அகழாய்வுகள்.

திருவள்ளூர் மாவட்டத்தின் குடியம் பகுதியில் ஆதி மனிதர்களின் கற்கால குகை வீடுகள் கண்டெடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து சர்வதேச ஆய்வாளர்கள் ஆதிமனிதர்கள் அதிரம்பாக்கத்தில் வாழ்ந்ததாக சான்றுகளை வெளியிட்டனர்.

இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் அதிரம்பாக்கம், பட்டரைபெரும்புதூர் பகுதிகளில் தமிழக அரசு அகழாய்வுப் பணிகளை கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது. இந்த அகழாய்வுகளில் இதுவரை 351 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பல்லவர் ஆட்சிக் காலத்தில்

பெருமூர் என்கிற பெயரில் பட்டரைபெரும்புதூர் அழைக்கப்பட்டிருந்தது. இந்த அகழாய்வுப் பணிகளை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நேற்று பார்வையிட்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இங்கு கிடைத்த பொருட்கள் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானவை. ஆதி மனிதன் ஆப்பிரிக்காவில் தோன்றினான் எனக் கூறப்படுகிறது. ஆனால் உலகின் முதல் மனிதன் இப்பகுதியில்தான் தோன்றினான் என புதிய வரலாற்றை தெரிவிக்கும் சான்றுகள் நமக்குக் கிடைத்துள்ளன.

3 லட்சத்து 75 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் இங்கே கிடைத்திருக்கின்றன. கொடுமணல், ஆதிச்சநல்லூர், கீழடியில் அகழாய்வுகள் தொடர்ந்து நடைபெறும் என்றார். இதே பட்டரைபெரும்புதூரில் 24 அடியில் 23 உறைகளுடனான உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/humans-existed-3-75-lakh-years-ago-tiruvallur-says-minister-pandiarajan-323178.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதற்குத்தானே ‘கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி’ என்று அடிக்கடி சொல்லிக் கொள்கிறோமே?

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.