Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக ஊடகவியலாளர் பிரகீத் எக்னொளிகொடவின் மனைவி முறைப்பாடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக ஊடகவியலாளர் பிரகீத் எக்னொளிகொடவின் மனைவி முறைப்பாடு

இலங்கை இராணுவப் புலானய்வுடன் தொடர்புள்ளதாக, ஹோமகம நிதிமன்றத்தில் வெளிப்படையாகவே வாக்கு மூலமளித்த பொதுபலசேனவின் செயாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், பிணையில் விடுதலை செய்யப்பட்டதால், தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக ஊடகவியலாளர் பிரகீத் எக்னொளிகொடவின் மனைவி சந்தியா எக்னொளிகொட தெரிவித்துள்ளார். வெவேறு வடிவங்களில் அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் எதிர்கொள்வதாகவும், காணாமல் ஆக்கப்பட்ட தனது கணவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உளவாளி என்று குற்றம் சுமத்தப்படுவதாகவும் அவர், கொழும்பில் உள்ள சுதந்தி்ர ஊடக இயக்கத்திடம் முறையிட்டுள்ளார். 
 
ஞானசார தேரர் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட விடயங்கள் குறித்து சமூகவலைத்தளங்கள் மூலமாக அதிக அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாகவும் சந்தியா எக்னொளிகொட கூறியுள்ளார்.

 

 

ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்ட பின்னர், தனக்கும் தனது பிள்ளைகளுக்கும் உளவியல் ரீதியான சித்திரவதை செய்யப்படுவதாகவும், தங்கள் உயிரைக் காப்பாற்றுமாறும் சந்தியா எக்னொளிகொட உருவாக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

தனது கணவன் கடத்தப்பட்ட உண்மையை அறிந்துகொள்ளாமல், பிள்ளைகளையும் தன்னையும் உளவியல் ரீதியாக சித்திரவதை செய்வதாகவும், முகநூல் ஊடாகவே நாளாந்தம் அச்சுறுத்தல்களும் கொலை மிரட்டல்களும் விடுக்கப்படுவதாகவும் அவர் கூறுகின்றார்.

அடையாளம் தெரியாத முகநூல்கள் ஊடாக. ஞானசார தேரர் விவகாரம் குறித்து மரண அச்சுறுத்தல் வருவதால், தனது உயிருக்கு ஆபத்து என்றும் கூறிய சந்தியா எக்னொளிகொட, ஊடக அமைப்புகள், தனக்கும் தனது பிள்ளைகளின் பாதுகாப்புக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக சுதந்தர ஊடக இயக்கம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள், ஊடகவியலாளர்களின் உறவினர்கள் மீது தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டு்ள்ளது.

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பற்ற நிலைமைக்கு இலங்கை அரசு பொறுப்புக் கூற வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னொளிகொடவின் மனைவி சந்தியா எக்னொளிகொடவை ஹோமகம நீதிமன்ற வளாகத்தில் வைத்து அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டில், கலகொட அத்தே ஞானசார தேரருக்கு நீதிமன்றம் ஆறுமாத கால சிறைத் தண்டனை விதித்திருந்தது.

ஆனால் ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு மாகாநாயக்கத் தேரர்கள், பௌத்த அமைப்புகள், அமைச்சர்கள் ஆகியோர் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழுத்தங்களை கொடுத்திருந்தனர்.

இதனால், ஞானசார தேரர் கடந்த வெள்ளிக்கிழமை 22 ஆம் திகதி ஹோமகம நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.koormai.com/pathivu.html?vakai=1&therivu=116

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.