Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தினால் ஒருவரை கூட கண்டறிய முடியாது: பிரபா கணேசன்

Featured Replies

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தினால் ஒருவரை கூட கண்டறிய முடியாது: பிரபா கணேசன்

 

 
 

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தினால் ஒருவரை கூட கண்டறிய முடியாது: பிரபா கணேசன்

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தினால் ஒருவரை கூட கண்டறிய முடியாது என ஜனாதிபதியின் விசேட அபிவிருத்தி செயலணியின் பணிப்பாளரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.

நேற்று இரவு வவுனியா வெளிக்குளத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில்,

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஆரம்ப காலங்களில் வேற கட்சியில் இருந்த போதும், அதன் பின் புது கட்சி ஆரம்பித்த போதும் நான் பல போராட்டங்களை வெலிகடை சிறைச்சாலைக்கு முன்பு நடத்தியிருக்கின்றேன். அதுபோல் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு பாரிய அழுத்தத்தை கொடுத்திருந்த போதும் அந்த அழுத்தங்கள் சரியான முறையில் செற்படுத்தப்படவில்லை.

காணாமல் போனவர்களின் விடயங்கள் மற்றும் வெள்ளைவான் விடயங்களை வைத்து அரசியலில் புகழாரம் பெற்றவர்கள் இன்று தேசிய அரசாங்கத்தில் இருந்து கொண்டு அவர்களை பற்றி பேசுவது இல்லை. எமது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காணாமல் போனவர்கள் என்று யாரும் இல்லை என்றும், அவர்கள் இறந்து விட்டார்கள் இல்லாவிடின் வெளிநாட்டிற்கு தப்பி ஒடிவிட்டார்கள் என நேரடியாகவே கூறியிருக்கிறார்.

இப்படியான ஒரு நிலைமை இங்கு இருக்கின்ற போது காணாமல் போனவர்களிற்காக புதிய அலுவலகம் ஒன்றை அமைந்திருக்கிறார்கள். இந்த அலுவலகம் என்பது வெளிநாட்டினை ஏமாற்றுவதற்கான கண்கட்டி வித்தை என்றுதான் நான் பார்க்கின்றேன். இந்த காணாமல் போன அலுவலகத்தினால் ஒருவரை கூட கண்டறிய முடியாது என்று எனக்கு நன்றாக தெரியும்.

அத்துடன் வன்னிப் பிரதேசம் போரால் மிகவும் பாதிக்கப்பட்ட பிரதேசம். இந்த பிரதேசத்தில் மக்களின் வாக்குகறைப் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அரசியல் தீ{ர்வு நோக்கி நகர்கிறார்கள். அவர்கள் சமஸ்டியைப் பெற்றுத் தருவதாக கூறுகிறார்கள். அரசியல் தீர்வு என்பது ஒரு புறமிருக்க இந்த மக்கள் மிகவும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களது அபிவிருத்தி பற்றி கவனம் செலுத்தப்படவில்லை. ஒரு இனத்தின் இருப்புக்கு அபிவிருத்தியும், அரசியல் கோரிக்.கையும் இரண்டு தண்டவாளங்கள் போன்று சமாந்தரமாக செல்ல வேண்டும். ஆனால் அதை கூட்டமைப்பினர் செய்ய வில்லை. இந்த மக்களின் அபிவிருத்தியை முன்னெடுக்கவே நாம் வன்னியில் கால் பதித்துள்ளோம். இந்த மக்களுக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும். இளைஞர்கள் அரசியலில் ஈடுபட வேண்டும். அபிவிருத்தியையும், அரசியல் கோரிக்கையையும் சமாந்தரமாக நகர்த்த வேண்டும். தேசிய கட்சியில் வன்னியில் தமிழர் ஒருவர் வர வேண்டும். அதன் மூலமே வன்னியின் அபிவிருத்தியை முன்னகர்த முடியும்.

கூட்டமைப்பினர் கடந்த மூன்றரை வருடங்களில் மக்களது பிரச்சனை தொடர்பில் அரசாங்கத்திற்கு போதிய அழுத்தம் கொடுக்கவில்லை. அவர்கள் எதிர்கட்சி தலைவர் பதவியைப் பெற்றுக் கொண்டு அதை பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்களே தவிர அரசிற்கு அழுத்தம் கொடுக்கவில்லை. அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாக்க முயல்கிறார்களே தவிர மக்களது அபிவிருத்தியை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் விரைவில் மக்கள் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் எனத் தெரிவித்தார்.

http://www.samakalam.com/செய்திகள்/காணாமல்-போனோர்-தொடர்பான-15/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.