Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சி மாவட்டத்திற்கு தேசிய செயற்திட்டங்கள்

Featured Replies

கிளிநொச்சி மாவட்டத்திற்கு தேசிய செயற்திட்டங்கள்

 
 
1-0.jpg?itok=p9oSOdRc

 ரவி ரத்னவேல்

நீண்டகால யுத்த தாக்கத்திலிருந்து படிப்படியாக விடுபட்டுவரும் கிளிநொச்சி மாவட்டம் இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது எனலாம். இந்தப் பின்னணியிலேயே ‘சிறுவர்களைப் பாதுகாப்போம்’ எனும் தேசிய செயற்திட்டத்தினை கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சுமார் நாலாயிரத்துக்கும் அதிகமான பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் ஆகியோரின் பங்கேற்பில் அன்றைய நிகழ்வு மிகச் சிறப்பாக நடந்தேறியது. நாட்டுக்கும் சமூகத்திற்கும் மாவட்டத்திற்கும் முன்னுதாரணமாகக் கொள்ளக்கூடிய பல சிறப்பம்சங்கள் அதில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

வட மாகாண முதலமைச்சர் என்ற வகையில் அவருக்கென அமையப்பெறும் மேடைகளில் அவரது தனிப்பட்ட கருத்துக்களை வெளிப்படையாக முன்வைத்துவரும் விக்னேஸ்வரன், ஜனாதிபதி தலைமை தாங்கிய இந்நிகழ்வில் ஜனாதிபதியுடன் ஆரம்பம் முதல் இறுதி வரை மிகுந்த சிநேகபூர்வமாக கருத்துக்களைப் பரிமாறிக்கொண்ட அதேசமயம் மக்களின் பல பிரச்சினைகளையும் அதற்கான உடனடி தீர்வினைப் பெற்றுத்தர வேண்டும் என்ற வேண்டுகோளையும் ஜனாதிபதியிடம் முன்வைத்தார். அவற்றில் உடனடி தீர்வினைக் காண வேண்டிய விசுவமடு யானைத்தடுப்பு வேலியினை அமைப்பதற்காக வெகுசீக்கிரமே நிதி ஒதுக்கீட்டினைச் செய்து அப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தருவதாக ஜனாதிபதி தமக்கு உறுதியளித்ததாக முதலமைச்சர் விக்னேஸ்வரனே ஜனாதிபதி முன்னிலையில் தமது பேச்சின்போது பகிரங்கமாக தெரிவித்தார். தமது பிரச்சினைகளை அரச தலைவரிடம் எடுத்துரைத்ததற்காக முதலமைச்சருக்கும் அதற்கு உடனடி தீர்வு தர இணங்கியமைக்காக ஜனாதிபதிக்கும் பாராட்டைத் தெரிவிக்கும் பலத்த கரகோஷம் அரங்கத்தை அதிர வைத்ததுடன் அதன் அடிநாதமாக தமிழ் தரப்பும் அரச தரப்பும் இணைந்து இந்த மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு தர வேண்டும் என்பதே அம்மக்களின் எதிர்பார்ப்பாக அமைந்திருந்தது எனலாம்.

எவ்வாறாயினும் இந் நிகழ்ச்சி கிளிநொச்சியில் நடைபெற்றதனால் அப்பிரதேச மக்களுக்கு குறிப்பாக சிறுவர்களுக்கு பல நற்பலன்கள் கிட்டின. அதற்கமைய வட மாகாணத்தின் சிறுவர் மற்றும் தடுப்பு இல்லங்களில் வாழ்ந்துவரும் பிள்ளைகளுக்கு சிறந்த வாழ்க்கைச் சூழலை உருவாக்கிக் கொடுக்கும் நோக்கில் தெரிவு செய்யப்பட்ட சிறுவர் இல்லங்களிலும் தடுப்பு இல்லங்களிலும் வாழ்ந்துவரும் பிள்ளைகளுக்காக ஜனாதிபதி அலுவலகத்தின் ‘சிறுவர்களைப் பாதுகாப்போம்’ நிகழ்ச்சித் திட்டத்தினால் 4.85 மில்லியன் ரூபா நிதி கரச்சி பிரதேசத்தின் நந்தவனம் சிறுவர் பாதுகாப்பு இல்லம், கோப்பாய் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலை மற்றும் கோப்பாய், நந்தவனம் சிறுவர் பாதுகாப்பு இல்லம் ஆகியவற்றிற்கு வழங்கப்பட்டது. வட மாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவைகள் ஆணையாளர் டி. விஸ்வரூபன் இதற்கான நிதியினைப் பெற்றுக்கொண்டார்.

அதேபோன்று யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் வாழ்ந்துவரும் விசேட தேவையுடைய மாணவர்கள் கல்வி கற்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 பாடசாலைகளில் பாதை வசதிகள் உள்ளிட்ட ஏனைய வசதிகளை மேம்படுத்துவதற்காக 24.95 மில்லியன் ரூபா நிதி ஜனாதிபதி செயலகத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்ததுடன் அதனை வட மாகாணத்தின் பிரதம செயலாளர் ஏ. பத்திநாதன் பெற்றுக்கொண்டார்.

மேலும், சிறுநீரக நோயிலிருந்து சிறுவர்களைப் பாதுகாக்கும் நோக்குடன், சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்ள முடியாத 1000 குடும்பங்களுக்கு ஜனாதிபதி செயலகத்தின் நிதி ஒதுக்கீட்டில் நீர் சுத்திகரிப்பு உபகரணங்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இதனை ஆரம்பித்து வைக்கும் வகையில் ஐந்து குடும்பங்களுக்கு ஜனாதிபதி அவர்கள் இதன்போது நீர் சுத்திகரிப்பு உபகரணங்களை வழங்கி வைத்தார்.

‘சிறுவர்களைப் பாதுகாப்போம்’ தேசிய செயற்திட்டத்தின் ஒரு பங்குதார நிறுவனமான மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சினாலும் அன்றைய தினம் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. உலக வங்கியின் நிதி அன்பளிப்பில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சினால் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்திக்காக கிளிநொச்சி மாவட்டத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்பள்ளிகளுக்கு புத்தகப் பொதிகள், கல்வி உபகரணங்கள் மற்றும் முன்பள்ளிகளுக்கான உபகரணங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கரச்சி பிரதேச செயலக பிரிவிலுள்ள ஆதவன் முன்பள்ளி, கண்டாவளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வளர்மதி முன்பள்ளி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட புனித அந்தோனியார் பாலர் பாடசாலை மற்றும் பூநகரி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சிறகுகள் பாலர் பாடசாலை ஆகியன அந்த உதவிகளைப் பெற்றுக்கொண்டன.

 

 
 

பாதுகாப்பற்ற சூழலில் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவைகள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் சிறுவர் பராமரிப்புத் திட்டத்தினால் சிறுவர்களின் பாதுகாப்பினை அவர்களது குடும்ப சூழலிலேயே உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக கிளிநொச்சி மாவட்டத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட அவ்வாறான ஆறு குடும்பங்களுக்கு தலா 50,000 ரூபா வீதம் நிதியுதவி வழங்கப்பட்டது.1_0.jpg

அத்தோடு ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட சிறுவர் மன்றங்களில் நூலகங்களை நிறுவுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு சிறுவர் மன்றங்களுக்கு நூலக புத்தக பொதிகள் சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு திணைக்களத்தினால் வழங்கப்பட்டதுடன், எதிர்காலத்தில் இத்திட்டத்தினூடாக நூலகங்களுக்கான சகல உபகரணங்களையும் வழங்க எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் காணப்படும் பொது மக்களின் காணிகளை மீள கையளிக்கும் திட்டத்தின் ஒரு கட்டமாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் ஒரு பகுதி காணிகளை குறித்த மாவட்ட செயலாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வும் அன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கிளிநொச்சி மாவட்டத்திற்கான பாதுகாப்பு படை கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஸ்ஸங்க ரணவக்கவினால் உரிய ஆவணங்கள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர்களிடம் வழங்கி வைத்தார்.

இவற்றுள் கடந்த பல காலங்களாக தமிழ் ஊடகங்கள் மிகுந்த கவனத்தை செலுத்தி வந்த அதேநேரத்தில் அப்பிரதேச மக்களின் முக்கிய வேண்டுகோளாக இருந்த முன்னாள் கிளிநொச்சி பொது நூலகம் அமைந்திருந்த காணியும் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து மீண்டும் பொது மக்களின் உபயோகத்திற்காக பெற்றுக்கொடுக்கப்பட்ட காணியில் உள்வாங்கப்பட்டிருந்ததென்பது குறிப்பிடத்தக்கதாகும். அன்றைய தினம் விடுவிக்கப்பட்ட காணிகளின் விடுவிப்பு தொடர்பாக ஜனாதிபதி செயலகம் இராணுவத் தளபதி மற்றும் கிளிநொச்சி மாவட்ட கட்டளைத் தளபதி ஆகியோருடன் மேற்கொள்ளப்பட்ட நீண்டகால பூர்வாங்கப் பேச்சுவார்த்தையின் காரணமாகவே இக்காணிகளை அன்றைய தினம் விடுவிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற ‘சிறுவர்களைப் பாதுகாப்போம்’ தேசிய செயற்திட்டத்தின் மாவட்ட மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாகப் பங்கேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அன்று காலை பாடசாலை மாணவர்களின் மேலும் ஓர் வேண்டுகோளை நிறைவேற்றிய மனத்திருப்தியுடனேயே அந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்தை திறந்து வைப்பதற்காக அங்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதியிடம் கனகபுரம் மகா வித்தியாலயத்தின் மாணவி சதாநந்தன் கயழினி, தமது பாடசாலைக்கு ஒரு விளையாட்டு மைதானம் இல்லை என்றும் ஆதலால் ஒரு மைதானத்தைப் பெற்றுத்தருமாறும் கேட்டுக்கொண்டார். அந்த வேண்டுகோளை ஏற்ற ஜனாதிபதி கனகபுரம் மகா வித்தியாலயத்திற்கான விளையாட்டு மைதானத்தை அமைத்து தருவதாக உறுதியளித்ததுடன் மைதானத்தை அமைத்துக் கொடுக்கும் பணியினை வான்படை தளபதி கபில ஜயம்பதியிடம் கையளித்தார். அவரின் பணிப்பின் பேரில் இரணமடு வான்படைத் தலைமையகப் பொறுப்பதிகாரி கப்டன் நாணயக்காரவின் வழிநடத்தலில் பல மாதங்களாக முன்னெடுக்கப்பட்ட நிர்மாணப் பணிகளின் முடிவில் கடந்த 18 ஆம் திகதி காலை வேளையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அம்மைதானத்தை மாணவர்களிடம் கையளித்தார்.

இந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு பல வகையிலும் நன்மை பயக்கும் பல்வேறு திட்டங்கள் உள்வாங்கப்பட்ட ஒரு நிகழ்வாகவே கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த திங்களன்று நடைபெற்ற ‘சிறுவர்களைப் பாதுகாப்போம்’ தேசிய செயற்திட்டம் அமைந்திருந்தது.

http://www.vaaramanjari.lk/2018/06/24/அரசியல்/கிளிநொச்சி-மாவட்டத்திற்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.