Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலை செய்யப்படுவாரா ஆனந்த சுதாகரன்? யாழ் இந்திய துணைத் தூதுவரை நேரில் சந்தித்து கலந்துரையாடல்!

Featured Replies

விடுதலை செய்யப்படுவாரா ஆனந்த சுதாகரன்? யாழ் இந்திய துணைத் தூதுவரை நேரில் சந்தித்து கலந்துரையாடல்!

 

 
Image

யாழ் இந்திய துணைத் தூதுவர் திரு.எஸ்.பாலச்சந்திரன் அவர்களை நேரில் சந்தித்து ஆனந்தசுதாகரனின் விடுதலை தொடர்பாக 22.06.2018 அன்று வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் அவர்கள் கலந்துரையாடினார்.

தாயை இழந்தும், தந்தை சிறையில் அடைக்கப்பட்டதாலும் அனாதரவாக்கப்பட்டு, வயதான பேத்தியாருடன்; வாழும், இரு சிறுவர்களின் ஆரோக்கியமான, பாதுகாப்பு மற்றும் இரு சிறார்களின் மன உளைச்சல் எதிர் காலத்தில் பாதிக்காத வகையில் அரசியல் கைதியான, ஆனந்தசுதாகரனை ஜனாதிபதியின் கருணை அடிப்படையில் விடுவிக்க வேண்டுமென வடக்குக் கிழக்கு, தெற்கு, மேற்கு என இலங்கையின் அனைத்துப் பிரதேசங்களிலும் வாழும் தமிழ் மற்றும் சமுக, அரசியல் அமைப்புக்கள் ஏராளமான கையெழுத்துப் போராட்டங்களை நடாத்தியிருந்தன.

அதனத் தொடர்ந்து ஆனந்தசுதாகரன் .கடந்த தமிழ், சிங்கள புத்தாண்டளவில் விடுவிக்கப்படுவார் என்ற செய்தியும் ஜனாதிபதியிடம் இருந்து வெளிவந்தது.

எனினும் அவரது விடுதலையை உத்தரவாதப்படுத்த மேலும் வலியுறுத்தல்கள் தேவை என்ற அடிப்படையில் பிள்ளைகளை நினைத்து தினமும் சிறையில் தவித்துக்கொண்டிருக்கும் ஆனந்தசுதாகரனை விடுதலை செய்யக்கோரி கடந்த சில மாதங்களாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் மற்றும் வடமாகாணக் கல்வி அமைச்சின் அனுசரணையுடன், வடமாகாண கல்விச் சமூகமாகிய கல்விமான்கள், அதிபர்கள்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோரிடம் இருந்து 3 லட்சம் கையெழுத்துக்கள் மாகாணக் கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் அவர்களால் பெறப்பட்டு நேரடியாக ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து 22.06.2018 அன்று 3 லட்சம் கையெழுத்துக்கள் மாகாணக் கல்வி அமைச்சரினதும், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தினரதும் கோரிக்கைக் கடிதங்களுடன் கூடிய மனு யாழ் இந்திய துணைத் தூதுவரிடம் கையளித்து தற்போது தடுப்பில் உள்ள ஆனந்தசுதாகர் ஆயுதபயிற்சி பெற்ற ஒருவர் அல்லாது ஒரு அரசியல் கைதியாகவே இருப்பதால் அவரது குழந்தைகள் அநாதையாக்கப்படாது இருப்பதற்காக, இந்திய அரசு அவரது விடுதலையில் கவனம் எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இவ் விடயத்தினை இலங்கையில் உள்ள இந்திய தூதுவரின் ஊடாக பாரதப் பிரதமரிடம் தெரியப்படுத்தி இலங்கை அரசிடம் சிறுவர்களின் எதிர்காலத்தையும் நலனையும் கருத்தில் கொண்டு இவ்விடயம் பற்றி கவனம் எடுப்பதாக வடமாகாணக் கல்வி அமைச்சரிடம் நம்பிக்கை ஊட்டும் முகமாக யாழ் இந்திய துணைத்தூதுவர் திரு.எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்திருந்தார்.

https://www.ibctamil.com/srilanka/80/102344

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.