Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பதவியால் தப்பிக்கும் அட்மிரல் விஜேகுணரத்ன – விரைவில் கைதாவார்?

Featured Replies

பதவியால் தப்பிக்கும் அட்மிரல் விஜேகுணரத்ன – விரைவில் கைதாவார்?

 

Vice-Admiral-Ravindra-Wijegunaratne-300xஅட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை கைது செய்வதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் திட்டமிட்டுள்ளதாகவும், எனினும், அவரது பதவி நிலை அதற்குத் தடையாக இருப்பதாகவும் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக பதவி வகிக்கும் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக, இவர் சிறிலங்கா கடற்படைத் தளபதியாக இருந்த போது, நேவி சம்பத் என்ற குற்றவியல் சந்தேக நபருக்கு, அடைக்கலம் கொடுத்து உதவினார் என்றும்,  நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல உடந்தையாக இருந்தார் என்றும், குற்றத்தை மறைத்தார் என்றும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, தன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டால், பதவியில் இருந்து விலகி விசாரணைகளுக்கு ஒத்துழைப்பேன் என்று அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கூறியிருந்தார்.

எனினும், குற்றப் புலனாய்வுப் பிரிவினர், இவருக்கு எதிராக, நீதிமன்றத்தில் 9527/18 இலக்க பி அறிக்கையை தாக்கல் செய்த பின்னரும், அவர் பதவியில் நீடித்துக் கொண்டிருக்கிறார்.

இது தொடர்பாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சிறிலங்கா அதிபர், பிரதமர், சட்டம் ஒழுங்கு அமைச்சர் , பாதுகாப்புச் செயலர் மற்றும் காவல்துறை மா அதிபருக்கு அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளனர்.

அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை கைது செய்வதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் திட்டமிட்டுள்ள போதிலும், அவரது பதவி நிலை அதற்குத் தடையாக உள்ளது.

எனினும், அட்மிரல் விஜேகுணரத்ன விரைவில் தமது பதவிகளை இழக்கும் நிலை ஏற்படும் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

http://www.puthinappalakai.net/2018/06/25/news/31575

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.