Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹிட்­லரின் மூத்த சகோ­தரர் மேல­திக கடன் பெறு­வ­தி­லி­ருந்து தப்­பித்தோம்

Featured Replies

ஹிட்­லரின் மூத்த சகோ­தரர் மேல­திக கடன் பெறு­வ­தி­லி­ருந்து தப்­பித்தோம்

city-01GMGPage1Image0014-b98cd784df4a6e8770bf11c07ad0a7e42590569c.jpg

 

(எம்.எம்.மின்ஹாஜ்)

டொலர் பெறு­மதி அதி­க­ரிப்­ப­தனை கட்­டுப்­ப­டுத்த முடி­யாது என்­கிறார் பிர­தமர் 

 

ஆட்­சியில் தான் தொடர்ந்து இருந்­தி­ருந்தால் மாகம்­புர, மத்­தள போன்று  துறை­முகம், விமான நிலை­யங்கள் பல அமைத்­தி­ருப்பேன் என ஹிட்­லரின் மூத்த சகோ­தரர் கூறி­யுள்ளார்.  எனினும் அவ்­வாறு அதி­க­ள­வான துறை­முகம், 

 விமான நிலை­யங்­களை நிர்­மா­ணிக்க அதி­க­ளவு கடன்­களை எடுக்க நேரிட்­டி­ருக்கும். ஆனால் அந்த கடனில் இருந்து நாம் இல­கு­வாக தப்­பித்­துக்­கொண்டோம் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

டொலரின் பெறு­மதி அதி­க­ரிப்­ப­தனை கட்­டுப்­ப­டுத்த எம்மால் எதுவும் செய்ய முடி­யாது. அது எமது கைகளில் இல்லை. என்­றாலும் ரூபாவின் பெறு­ம­தியை பாது­காக்க வட்டி வீதத்தை அதி­க­ரிக்க வேண்டும். அவ்­வாறு செய்தால் எமது வியா­பா­ரி­க­ளிடம் பணம் இல்­லாமல் போய்­விடும். இவ்­வா­றான பெரும் நெருக்­க­டி­யான நிலை­மைக்கு நாம் முகங்­கொ­டுத்­துள்ளோம். பொரு­ளா­தார நிலை­மை­களை சமப்­ப­டுத்தி நாட்டை கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

காலி வெலி­விட்­டிய திவி­துர பிர­தேச செய­ல­கத்­திற்­கான புதிய கட்­ட­டத்தை நேற்று முன் தினம் திறந்து வைக்­கப்­பட்­டதன் பின்னர் உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேலும் உரை­யாற்­று­கையில்,

வெள்ள அனர்த்­தத்­தினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான நஷ்­ட­ஈட்டை இன்­றைய தினம் நாம் வழங்­கு­கின்றோம். எனினும் இந்த நஷ்ட ஈடு வழங்­கு­வ­தற்கு தாமதம் ஏற்­பட்­ட­மைக்கு நான் மக்­க­ளிடம் மன்­னிப்பு கோரு­கின்றேன். வெள்ள அனர்த்­ததை கட்­டுப்­ப­டு­த­வது குறித்து நாம் அவ­தானம் செலுத்­தி­யுள்ளோம். இதன்­படி கிங், நில்­வளா கங்­கை­களை அம்­பாந்­தோட்டை பக்கம் திசை­தி­ருப்­பு­வது குறித்து அறிக்கை கோரி­யுள்ளேன். இந்த திட்டம் வெற்­றி­ய­ளித்தால் வெள்­ளத்தை எம்மால் கட்­டுப்­ப­டுத்த முடியும்.

தற்­போது நாம் பிர­தேச செய­ல­கங்கள் பல­வற்றை நவீன மயப்­ப­டுத்தி வரு­கின்றோம். இதன்­படி தெற்கு அபி­வி­ருத்­தியை பொறுத்­த­வ­ரையில் நாம் விசேட அவ­தானம் செலுத்­தி­யுள்ளோம். குறிப்­பாக தெற்கில் சுற்­றுலா துறை உட்­பட பல்­வேறு துறை­களை நாம் வளர்ச்­சிக்கு உட்­ப­டுத்த திட்­ட­மிட்­டுள்ளோம். இதன்­பி­ர­காரம் தெத்­துவ, பெந்­தர போன்ற பகு­தி­களை இதற்­காக தேர்ந்­தெ­டுத்து பெரும் வல­ய­மொன்றை ஆரம்­பிக்­க­வுள்ளோம். அத்­துடன் கிரா­மிய தொழில் முயற்­சி­யா­ளர்­க­ளுக்­கான பூரண உதவி ஒத்­தாசை வழங்கும் வேலைத்­திட்­டத்தை தற்­போது நாம் ஆரம்­பித்­துள்ளோம். மேலும் கிரா­மிய வீதி அபி­வி­ருத்­திக்­காக கம் பெர­லிய வேலைத்­திட்­டத்தை ஆரம்­பித்­துள்ளோம்.

வீழ்ச்சி கண்­டி­ருந்த பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்­பவே எமக்கு இரு வருட கால அவ­காசம் தேவைப்­பட்­டது. அர­சாங்­கத்­திடம் பணம் இல்­லாமல் நாட்டை கட்­டி­யெ­ழுப்­பு­வது பெரும் கடி­ன­மாகும். நாட்டின் அபி­வி­ருத்­திக்­காக அதி­க­ளவில் கடன் பெறப்­பட்­டது. எனினும் தற்­போது நாம் செலுத்த வேண்­டிய கடன் தொகையை முகா­மைத்­துவம் செய்து பொரு­ளா­தா­ரத்தை சீரான நிலை­மைக்கு கொண்டு வந்­துள்ளோம்.

கடன் செலுத்­து­வது எமக்கு பெரும் பிரச்­சினை கிடை­யாது. எனினும் ரூபா அடிப்­ப­டையில் அன்றி வெளி­நாட்டு டொலர் ஊடாக கடன் பெறப்­பட்­டுள்­ள­மையே எமக்­குள்ள பெரும் சிக்­க­லாகும். இலங்கை சுதந்­திரம் அடைந்­தது முதல் யுத்தம் முடி­வுக்கு வரும் வரை நாம் ரூபாவின் பிர­கா­ரமே கடன் பெற்றோம். இந்த காலப்­ப­கு­தியில் வணிக கடன் அடிப்­ப­டையில் 100 மில்­லியன் டொலர் மாத்­தி­ரமே வெளி­நாட்டு கட­னாகும். என்­றாலும் அந்த காலப்­ப­கு­தியில் கடன் செலுத்­து­வ­தற்கு 40 அல்­லது 50 வரு­டங்கள் வரை­யான கால­அ­வ­காசம் வழங்­கப்­பட்­டது. ஆகவே அப்­போது வெளி­நாட்டு கடன் சலுகை அடிப்­ப­டையில் எமக்கு கிடைக்­க­பெற்­றது. ஆகவே அப்­போது நாம் உள்­நாட்டு கடனே அதி­க­ளவில் பெற்றோம்.

ரூபாவின் பெறு­ம­தியின் பிர­காரம் கடன் பெற்­ற­மை­யினால் ரூபாவின் நகர்வை எம்மால் கட்­டுப்­ப­டுத்த முடியும். நாட்­டி­லேயே நாம் ரூபாவை முகா­மைத்­துவம் செய்தோம். அப்­போது ரூபாவின் பெறு­மதி கூடும் போது கடனின் பெறு­ம­தியும் அதி­க­ரித்­தது. எமது ரூபாவின் நகர்வு விட­யத்தில் வெளி­நா­டுகள் தலை­யீடு செய்­ய­வில்லை. தலை­யி­டவும் முடி­யாது. இதன்­படி 1977 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் நாடு சீரான நிலை­மையில் இருந்­தது. என்­றாலும் இந்த நிலைமை 2009 முதல் 2010 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் பெரு­ம­ளவில் மாற்றம் அடைந்­தது.

இந்த காலப்­ப­கு­தியில் டொலர் ஊடாக கடன் பெறப்­பட்­டது. ஆகவே டொலரை எம்மால் கட்­டுப்­ப­டுத்த முடி­யாது. டொலரை கட்­டுப்­ப­டுத்த எம்மால் எதுவும் செய்ய முடி­யாது. அது எமது கைகளில் இல்லை. டொலரின் பெறு­மதி அதி­க­ரிக்கும் போது கடனின் பெறு­ம­தியும் அதி­க­ரிக்கும். இந்த சந்­தர்ப்­பத்தில் ரூபாவின் பெறு­ம­தியை பாது­காக்க வேண்­டு­மாயின் வட்டி வீதத்தை அதி­க­ரிக்க வேண்டும். அப்­படி வட்டி வீதத்தை அதி­க­ரிக்கும் போது வியா­பா­ரி­களின் கைகளில் பணம் இருக்­காது. பண பரி­மாற்றம் குறை­வ­டையும். இதுதான் நாம் தற்­போது முகங்­கொ­டுத்­துள்ள பிரச்­சி­னை­யாகும். இந்த பிரச்­சி­னை­களை சமப்­ப­டுத்தி கொண்டு செல்ல வேண்டும்.

2013 முதல் 2014 ஆம் ஆண்டு வரை­யான காலப்­ப­கு­தியில் அர­சாங்­கத்­திடம் பணம் இருக்­க­வில்லை. வரு­மா­னமும் இல்லை. அதன்­கா­ர­ண­மா­கவே அப்­போ­தைய அர­சாங்கம் உடன் தேர்­த­லுக்கு சென்­றது. எனினும் நாம் ஆட்­சிக்கு வந்­த­வுடன் இதனை முழு­மை­யாக கட்­டுப்­பத்­தினோம். தற்­போது எமக்கு கடனும் வட்­டியும் செலுத்த முடியும். மேற்­கூ­றிய காலப்­ப­கு­தியின் போதே இலங்கை வர­லாற்றில் முதற்­த­ட­வை­யாக டொலரின் மூலம் பிணை­மு­றி­களை பெற்­றுக்­கொண்­டனர். முன்­னைய காலங்­களில் இலங்கை ரூபாவின் மூலமே பிணை­முறி பெற்­றுக்­கொண்­டது.

 முன்­னைய ஆட்­சியின் போது தவனை அடிப்­ப­டையில் 5000 மில்­லியன் டொலரை கட­னாக பெற்­றது. அப்­போது டொலரின் பெறு­மதி 120 ஆகும். ஆனால் தற்­போது டொலரின் பெறு­மதி 160 ஆக அதி­க­ரித்­துள்­ளது. அந்த பெறு­ம­திக்கு ஏற்­ற­வாறு நாம் கடனை மீள்­செ­லுத்த வேண்டும். அதுதான் தற்­போது நாம் முகங்­கொ­டுத்­துள்ள பெரிய சிக்­க­லாகும். எம்மால் கடன் செலுத்த முடி­யா­விடின் கடன் வாங்­கு­வதும் கடி­ன­மாகும்.

 நுரைச்­சோலை அனல் மின் நிலை­யத்­திற்கு 890 மில்­லியன் டொலரும் ,தெற்கு அதி­வேக பாதைக்கு 683 மில்­லியன் டொலரும், மாத்­தறை - பெலி­யத்தை புகை­யி­ரத பாதைக்கு 200 மில்­லியன் டொலரும், கட­வத்தை - கெர­வ­ல­பிட்­டிய அதி­வேக பாதைக்கு 494 மில்­லியன் டொலரும், அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்­திற்கு 1.3 பில்­லியன் ரூபாவும் மத்­தள விமான நிலை­யத்­திற்கு 350 பில்­லியன் ரூபாவும் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு 1000 மில்­லியன் ரூபாவும் கடன் பெற்­றுள்­ளனர். ஆகவே 5000 மில்­லியன் டொல­ருடன் மேல­தி­க­மாக 3000மில்­லியன் டொலரை சேர்த்தால் 8000 மில்­லியன் டொலரை நாம் செலுத்த வேண்டும். இது அப்­போ­தைய டொலரின் பெறு­ம­திக்­கேற்ப நாம் செலுத்த வேண்­டிய கட­னாகும்.

எனவே இந்த கடன் சுமையை குறைக்­கவே நாம் அதி­க­ளவில் வரி அற­வி­டு­கின்றோம். வரி அற­விட வேண்டும் என்ற நோக்கம் எமக்கு இல்லை. இந்­நி­லையில் ரூபாவின் பெறு­மதி விட­யத்தில் தற்­போது ஏற்­பட்­டுள்ள சிக்­க­லுக்கு முகங்­கொ­டுத்து நாம் முன்­செல்ல வேண்டும். வீழ்ச்­சிக்கு உட்­பட்­டுள்ள பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்­பவே நாம் முனை­கின்றோம்.

அத்­துடன் அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீன மெர்சன்ட் நிறு­வ­னத்­திற்கு குத்­த­கைக்கு வழங்­கி­ய­மைக்­காக 1000 மில்­லியன் டொலரை இலங்கை துறை­முக அதி­கார சபைக்கு அந்­நி­று­வனம் வழங்­கி­யது. எமக்­கான தொகை தொடர்ந்து துறை­முக அதி­கார சபைக்கு கிடைத்து கொண்டே இருக்கும். அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்­திற்கு நாம் செலுத்த வேண்­டிய கடனில் 1000 மில்­லியன் குறைந்­துள்­ளது. அதே­போன்று மத்­தள விமான நிலை­யத்தை இந்­திய நிறு­வ­னத்­திற்கு வழங்­க­வுள்ளோம். அதனை குத்­தகை வழங்­கினால் மத்­தள விமான நிலை­யத்­திற்­கான கடனில் 1300 மில்­லியன் டொலர் குறை­வ­டையும். இது பெரும் வெற்­றி­யாகும்.

அத்துடன் தான் தொடர்ந்து ஆட்சியில் இருந்திருந்தால் மாகம்புற, மத்தள போன்று துறைமுக, விமான நிலையங்கள் பல அமைத்திருப்பேன் என ஹிட்லரின் மூத்த சகோதரர் கூறியுள்ளார். எனினும் அவரது ஆட்சி காலத்தின் போது துறைமுகம், விமான நிலையத்தை நிர்மாணிக்க எடுத்த கடனில் இருந்து நாம் இலகுவாக தப்பிக்கொண்டோம் இந்த விவகாரத்தில் நாட்டு மக்கள் சிரிக்க கூடாது கண்ணீர் வடிக்க வேண்டும்.

நாட்டை வெளிநாடுகளுக்கு தாரை வார்ப்பதாக குற்றம்சுமத்துகின்றனர். எனினும் விற்பது எமது நோக்கமல்ல. அந்நிய செலாவணியை அதிகரிப்பதே எமது நோக்கமாகும். தற்போது சீன மெர்சன்ட் நிறுவனத்தின் வருகையை அடுத்து பல நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்ய ஆர்வம் கொண்டுள்ளன என்றார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-06-26#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.