Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு மாகாணசபையின் பதவிக்காலம் நீடிக்கப்படுவதற்கு மகிந்த அணி எதிர்ப்பு

Featured Replies

வடக்கு மாகாணசபையின் பதவிக்காலம் நீடிக்கப்படுவதற்கு மகிந்த அணி எதிர்ப்பு

 

GL-Peiris-300x200.jpgவடக்கு மாகாணசபையின் பதவிக்காலம் நீடிக்கப்படுவதற்கு மகிந்த ராஜபக்ச சார்பு  சிறிலங்கா பொதுஜன முன்னணி கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், வடக்கு மாகாணசபையின் தேர்தலைப் பிற்போட்டு, தற்போதைய சபையின் பதவிக்காலம் நீடிக்கப்படுவதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தார்.

ஏற்கனவே கடந்த ஆண்டு பதவிக்காலம் முடிந்த மூன்று மாகாண சபைகள் ஆளுனர்களின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட நிலையில், தனியொரு மாகாண சபையுடன், சிறிலங்கா அரசாங்கம் சிறப்பு உடன்பாடு ஒன்றை செய்து கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

”வடக்கு மாகாணசபையின், அங்கமாக இருக்கும் அவருக்கு சிறப்பு நிலை  இருக்க முடியாது என்பது முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்குத் தெரியாமல் இருக்காது.

எந்தவொரு சூழ்நிலையிலும், முதலமைச்சரின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கு சட்டத்தில் இடமில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன், கடந்த வார இறுதியில் ஒரே மேடையில் நெருக்கமாக தோன்றிய விக்னேஸ்வரனின் நடவடிக்கைகள் உன்னிப்பாக ஆராயப்பட வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணசபையின் பதவிக்காலம் வரும் ஒக்ரோபர் மாதம் நிறைவடையவுள்ளது.

இந்த நிலையில், மாகாணசபையின் நிர்வாகத்தை ஆளுனரின் கையில் ஒப்படைப்பது 13 ஆவது திருத்தச்சட்டத்தை அர்த்தமற்றதாக்கும் என்றும், தேர்தல் நடத்தும் வரை மாகாணசபையின் பதவிக்காலத்தை நீடிக்கப்படுவதை தாம் எதிர்க்கப் போவதில்லை என்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2018/06/27/news/31607

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.