Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களுக்கு ஸ்ரீலங்கா இராணுவம் செய்யும் உதவிகள்; பட்டியலிட்ட ஆளுநர்!

Featured Replies

தமிழர்களுக்கு ஸ்ரீலங்கா இராணுவம் செய்யும் உதவிகள்; பட்டியலிட்ட ஆளுநர்!

 

 
 

தமிழ் மக்களின் நலன் கருதியே யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையிலும் இராணுவம் உள்ளிட்ட சிறிலங்கா அரச படையினர் தொடர்ந்தும் தமிழர் தாயகத்தில் நிலைகொண்டிருப்பதற்கு வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே புதிய விளக்கமமொன்றை வழங்கியுள்ளார்.

தமிழர் தாயகமான வட கிழக்கில் அதிகளவில் நிலை நிறுத்தப்பட்டுள்ள இராணுவம் உள்ளிட்ட சிறிலங்கா அரச படையினரை வெளியேற்றுமாறு தமிழர் தரப்பிலிருந்து தொடர்ச்சியாக கோரிக்கைகள் விடுக்கப்பட்டுவரும் நிலையில் மைத்ரி – ரணில் தலைமையிலான சிறிலங்காவின் தேசிய அரசாங்கம் அதனை முழுமையாக நிராகரித்து வருகின்றது.

இந்த நிலையில் இந்த தகவலை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் வடமாகாண ஆளுநரின் இன்றைய (27.06.2018) அறிவிப்பு அமைந்திருக்கின்றது.

பொசன் பௌர்னமி தினத்தை முன்னிட்டு போரினால் முழுமையாக அழிக்கப்பட்ட முல்லைத்தீவில் சிறிலங்கா இராணுவத்தினர் விசேட வாழ்வாதார உதவிகளை வழங்கும் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா இராணுவத்தின் 59,64,68 ஆவது படைப்பிரிவுகளின் கட்டளை தளபதிகளின் உதவியுடன் முல்லைத்தீவு மாவட்ட படைத்தலைமையகம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

சிங்கள பௌத்த பேரினவாதத்திற்காக தொடர்ச்சியாக குரல்கொடுத்துவரும் முக்கிய பௌத்த தலைமை பிக்குகளில் ஒருவரான சிறிலங்கா போதி றாஜ மன்றத்தின் தலைவர் ஓமால்பே சோபித்த தேரரின் ஏற்பாட்டில் தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளை சேர்ந்த கொடையாளிகள் உதவியுடன் உதவிகள் வழங்கப்பட்டன.

இதற்கமைய முல்லைத்தீவு மாவட்டத்தில் வறுமைகோட்டின் கீழ் வாழும் 100 குடும்பங்களுக்கு பசு மாடுகளும், 100 நோய்வாய்ப்பாட்டவர்களுக்கு மருத்துவ செலவீனங்களும், சக்கர நாற்காலியும், பாடசாலை மாணவர்கள் 150 பேருக்கு ஆயிரம் ரூபா பெறுமதியான புத்தக பைகளும், விவசாய குடும்பங்களை சேர்ந்த 150 பேருக்கு விவசாய உபகரணங்களும், 1000 மாங்கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

.

இந்த நிழக்வில் கலந்துகொண்ட வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் கூரே வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவம் உள்ளிட்ட படையினர் தொடர்பில் பெருமிதம் வெளியிட்டுள்ளார்.

“ படைவீரர்கள் யுத்தமொன்றில் சிக்கியிருந்தனர். அந்தக் காலப்பகுதியில் இருதரப்பினாலும் தவறுகள் இழைக்கப்பட்டன. குறிப்பாக யுத்தம் என்பது மிகவும் கொடூரமானது அதனால் எந்த நன்மைகளும் இல்லை. எனினும் அந்த கொடூரமான யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு சமாதானம் ஏற்படுத்தப்பட்டதும் எமது படையினரின் கைகளில் துப்பாக்கிகள் இல்லை.

அவர்கள் சமாதானத்திற்கான ஒலிவ் மரக்கிளைகளையே ஏந்திக்கொண்டு அமைதிப் படையாக மாறிவிட்டனர், இன்று வடக்கில் ஒப்பந்தக்காரர் ஒருவர் வீடொன்றை கட்டமுடியாது என்று கூறினால் படையினர் முன்வந்து அந்த வீட்டைக் கட்டிக்கொடுக்கின்றனர், பாடசாலை கட்டடங்களை நிர்மாணிக்கின்றனர், அவை மாத்திரமல்ல வைத்தியசாலைகளை கட்டுகின்றனர், கரையோரங்களில் தில்லைமரக் காடுகளை வளர்க்கின்றனர், ஒரு இலட்சம் தென்னை மரங்களை நட்டுள்ளனர்.

யாழ் நகரில் ஆறாயிரம் மரக் கன்றுகளை நட்டுள்ளனர், யாழ் குடாநாட்டின் அனைத்து தீவுகளுக்குமான போக்குவரத்து சேவைகளை மேற்கொண்டு வருகின்றனர், பாடசாலை மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றனர், போரினால் இடம்பெயர்ந்த மக்களுக்காக வீடுகளை நிர்மாணித்துக்கொடுத்து வருகின்றனர், வடக்கில் வைத்தியசாலைகளில் இரத்தத்திற்கு தட்டுப்பாடு ஏற்படும் போது உடனடியாக முன்வந்து இரத்த தானம் வழங்குகின்றனர், இதேபோன்று தமிழ் மக்களுக்கு என்ன தேவையோ அனைத்தையும் செய்து வருகின்றனர் எமது படையினர்.

இந்த விசேட வாழ்வாதார உதவிகளை வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்தது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட படை கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ராஜகுரு, முல்லைத்தீவு மாவட்டத்தில் வறுமைக் கோட்டின் கீழ் இருக்கும் குடும்பங்களே அதிகமாக இருப்பதாகக் குறிப்பிட்டதுடன், அதனாலேயே அவர்களுக்கு தங்களால் ஆன உதவிகளை வழங்க இந்த நிகழ்வை ஏற்பாடு செய்ததாக தெரிவித்தார்.

https://www.ibctamil.com/srilanka/80/102513

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.