Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோத்தாவை களமிறக்குவது குறித்து கூட்டு எதிரணி இதுவரை ஆராயவில்லை

Featured Replies

கோத்தாவை களமிறக்குவது குறித்து கூட்டு எதிரணி இதுவரை ஆராயவில்லை

city-01GMGPage1Image0008-732bf8dc9adf4bb190f3005f41c7b375ec856366.jpg

 

(ரொபட் அன்டனி)

அது தொடர்பில் ஒரு பேச்சுவார்த்தைகூட நடத்தப்படவில்லை என்கிறார் தினேஷ் 

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறக்குவது தொடர்பில் இதுவரை கூட்டு எதிர ணியினர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கலந்துரையாட  வில்லை. நாம் தற்போது எதிர்வரும் மாகாண சபைத் தேர் தல் குறித்தே ஆராய்ந்து வருகின்றோம் என்று கூட்டு எதிர ணியின் பாராளுமன்ற குழு தலைவர் தினேஷ் குண வர்தன தெரிவித்தார். 

ஜனாதிபதி வேட்பாளர் அல்ல. ஜனாதிபதி தேர்தல்  குறித்து கூட இன்னும் நாம் ஆராயவில்லை. ஜனா  திபதித் தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கின்றது. அதற்கு தற்போது அவசரப்பட வேண்டிய தேவையில்லை என வும் அவர் குறிப்பிட்டார். 

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்பட  போவதாக தெரிவிக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் கூட்டு எதிரணியின் நிலைப்பாட்டை வினவிய போதே அதன் பாராளுமன்ற குழு தலைவர் தினேஷ் குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தற்போது அவசரப்பட வேண்டிய அவசியமில்லை. அதற்கு இன்னும் காலம் இருக்கின்றது. ஜனாதிபதி தேர்தல் நெருங்கி விடும் போது நாம் எமது வேட்பாளரை களமிறக்குவோம். அதுவரை இது தொடர்பில் அவசரப்பட வேண்டிய அவசியமில்லை.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படவுள்ளதாக தகவல்கள் வருகின்றன. ஆனால் கோத்தாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவது தொடர்பில் கூட்டு எதிரணியின் பாராளுமன்ற குழு கூட்டத்தில் இதுவரை ஆராயவும் இல்லை. தீர்மானம் எடுக்கவும் இல்லை.

கூட்டு எதிரணியின் பாராளுமன்ற குழு கூட்டம் முன்னாள் ஜனாதிபதி மஹி்ந்த ராஜபக்ஷ தலைமையில் அடிக்கடி நடைபெறும் . அப்போது நாட்டின் பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அண்மை காலமாக கூடிய எமது கூட்டு எதிரணியின் பாராளுமன்ற குழு மாகாண சபை தேர்தல் நடாத்த படாமை தொடர்பில் ஆராய்ந்தது.

குறிப்பாக எப்படியாவது மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என நாம் எமது கூட்டத்தில் தீர்மானம் எடுத்தோம். மாகாண சபை தேர்தல் தொடர்ந்து தாமதப்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றது. ஆனால் அதனை பொறுட்படுத்தாது எதிர்க்கட்சி தலைவர் செயற்பட்டு கொண்டுள்ளமை ஆச்சரியமளிக்கிறது.

அவர் எதிர்க்கட்சி தலைவர் தன்னை அரசாங்கத்தின் அமைச்சர் என்று நினைத்து கொண்டிருக்கின்றாரோ தெரியவில்லை. உண்மையில் எதிர்க்கட்சி தலைவர் பதவி எமக்கே சொந்தமானது. ஆனால் அதனை சபாநாயகர் பெற்றுதராமல் இருக்கின்றார்.எதிர்க்கட்சி தலைவர் பதவி அரசாங்கத்திற்கு சொந்தமானது என்று சபாநாயகரும் நினைத்து விட்டார் போன்று தெரிகின்றது என்றார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-06-28#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.