Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாகாணசபை தேர்தல் விட­யத்தில் அனைத்து கட்­சி­களும் பொது­வான தீர்­மா­னத்­துக்கு வர­வேண்டும்

Featured Replies

மாகாணசபை தேர்தல் விட­யத்தில் அனைத்து கட்­சி­களும் பொது­வான தீர்­மா­னத்­துக்கு வர­வேண்டும்

 

தேர்­தல்கள் என்­பது ஒரு நாட்டின் ஜன­நா­யக கட்­ட­மைப்பின் முக்­கி­ய­மா­ன­தொரு அம்­ச­மாக காணப்­ப­டு­கி­றது. ஜன­நா­யக நாடொன்றின் மக்­களின் பிர­தி­நி­தி­களைத் தெரி­வு­செய்­வ­தற்­கான தேர்­தல்கள் உரிய நேரத்தில் நடத்­தப்­பட வேண்­டு­மென்­பது அனை­வ­ராலும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட பொது­வான ஒரு விட­ய­மாகும். தமக்­கான பிர­தி­நி­தி­களை மக்கள் தெரி­வு­செய்­து­கொள்­வ­தற்கு முறை­யான வகையில் ஜன­நா­யகக் கட்­ட­மைப்பில் தேர்­தல்கள் நடத்­தப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கி­றது. அத­னூ­டா­கவே ஜன­நா­ய­கத்தின் விழு­மி­யங்­க­ளையும் பண்­பு­க­ளையும் பாது­காக்க முடியும்.

எனவே மக்­களின் ஜன­நா­யக உரி­மையை உறு­திப்­ப­டுத்­து­கின்ற மற்றும் தமது பிர­தி­நி­தி­களை தாம் தெரி­வு­செய்­து­கொள்­வ­தற்­கான உரி­மையை வழங்­கு­கின்ற தேர்­தல்கள் ஒரு­போதும் தாம­த­மில்­லாமல் நடத்­தப்­ப­ட­வே­ண்டும். இதனை உறு­திப்­ப­டு­த்­த­வேண்­டி­யது அதி­கா­ரத்தில் இருக்­கின்ற தரப்­பி­ன­ரதும் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­வி­னதும் முக்­கிய பொறுப்­பாகும்.

எனவே எந்­த­வொரு கார­ணத்­துக்­கா­கவும் மக்­களின் ஜன­நா­யக உரி­மையை உறு­திப்­ப­டுத்­து­கின்ற தேர்­தல்கள் பிற்­போ­டப்­ப­டக்­கூடாது. மாறாக உரிய நேரத்தில் தேர்­தல்கள் நடத்­தப்­ப­ட­வேண்­டி­யது கட்­டா­ய­மா­கி­றது. இந்­நி­லையில் தற்­போது நாட்டின் ஒரு­சில மாகா­ண­ச­பை­களின் பத­விக்­காலம் நிறை­வ­டைந்­துள்­ள­துடன் அவை ஆளு­நரின் நிர்­வா­கத்தின் கீழ் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளன. அதே­போன்று இன்னும் சில மாகா­ண­சபைகளின் பத­விக்­காலம் சில மாதங்­களில் நிறை­வ­டை­ய­வுள்­ளன. அவற்­றுக்கும் விரை­வாக தேர்­தலை நடத்­த­வேண்­டி­யுள்­ளது. இந்த சூழலில் தற்­போது ஏற்­க­னவே கலைக்­கப்­பட்­டுள்ள மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தல்கள் நடத்­தப்­ப­டாமல் தாம­திக்­கப்­ப­டு­வது பல்­வேறு தரப்­பினர் மத்­தி­யிலும் விச­னத்தை ஏற்­ப­டுத்­து­வ­தாக அமைந்­தி­ருக்­கி­றது.

விசே­ட­மாக கிழக்கு, சப்­ர­க­முவ மற்றும் வட­மத்­திய மாகாண சபைகள் கலைக்­கப்­பட்­டுள்ள நிலையில் அவற்­றுக்கு விரை­வாக தேர்­தலை நடத்த வேண்­டி­யி­ருக்­கி­றது. எனினும் கடந்த வருடம் செப்­டெம்பர் மாதம் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்ட ஒரு சட்­டத்தின் பிர­காரம் உட­ன­டி­யாக தேர்­தல்­களை இந்த மூன்று மாகா­ண­ச­பை­க­ளுக்கும் நடத்­த­மு­டி­யாத சூழல் நில­வு­கின்­றது.

மாகாணசபைத் தேர்­தல்­களை 50 வீத தொகுதி முறை­யிலும் 50வீத விகி­தா­சார முறை­யி­லு­மான புதிய கலப்பு முறையில் மாற்­று­வ­தற்­கான சட்டம் கடந்த வருடம் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­டது. அந்த சட்­ட­மூ­லத்தின் பிர­காரம் திருத்­தி­ய­மைக்­கப்­பட்ட அல்­லது புதி­தாக உரு­வாக்­கப்­பட்ட எல்லை நிர்­ணய அறிக்கை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. அந்த எல்லை நிர்­ணய அறிக்கை பாரா­ளு­மன்­றத்தில் தற்­போது நிறை­வேற்­றப்­பட்டால் மாகாணசபை தேர்­தல்­களை புதிய முறை­மையில் உட­ன­டி­யாக நடத்த முடியும்.

அவ்­வாறு அந்த புதிய மாகாணசபைத் தேர்­தல்கள் தொடர்­பான எல்லை நிர்­ணய அறிக்­கையை தற்­போது பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்ற முடி­யா­விடின் பிர­தமர் தலை­மையில் அது தொடர்பில் ஆராய்ந்து ஒரு முடிவு எடுக்­கப்­பட்டு அது பாரா­ளு­மன்­றத்­துக்கு அறி­விக்­கப்­பட வேண்டும். இதன்­போது பழைய முறை­யி­லா­வது தேர்­தலை நடத்­த­வேண்­டு­மென பிர­தமர் தலை­மை­யி­லான குழு முடி­வெ­டுத்தால் அதனை பாரா­ளு­மன்­றத்­துக்கு அறி­வித்து நிறை­வேற்ற முடியும். அதன் பின்னர் பழைய முறை­மை­யில்­கூட தேர்­தலை நடத்த முடியும். ஆனால் மாகாணசபைத் தேர்தல் தொடர்­பான எல்லை நிர்­ணய அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில் அதனை நிறை­வேற்­று­வ­தற்கும் இன்னும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை. அதே­போன்று பிர­தமர் தலை­மையில் கூடி இது­வரை தீர்­மா­னமும் எடுக்­கப்­ப­ட­வில்லை. இதே­வேளை நாட்டின் சிறு­பான்மைக் கட்­சிகள் மாகா­ண­சபைத் தேர்தல் பழைய முறை­மை­யி­லேயே நடை­பெ­ற­வேண்­டு­மென தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வரு­கின்­றன.

இந்த சூழலில் அர­சி­யல்­கட்­சிகள் விரை­வாக மாகா­ண­ச­பை­க­ளுக்­கான தேர்­தல்­களை நடத்­த­வேண்­டு­மென வலி­யு­றுத்தி வரு­கின்­றன. அதன்­படி நேற்­று­முன்­தினம் அர­சி­யல்­கட்­சி­களின் பிர­தி­நி­திகள் தேர்­தல்கள் ஆணைக்­குழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரி­யவை சந்­தித்து மாகாண சபைத் தேர்தல் குறித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்­தனர். இதன்­போது தேர்­தலை நடத்­து­வ­தற்கு அழுத்தம் கொடுக்­கு­மாறு தேர்­தல்கள் ஆணைக்­குழுவின் தலைவர் அர­சி­யல்­கட்­சி­களின் பிர­தி­நி­தி­க­ளிடம் கோரிக்கை விடுத்­தி­ருந்தார்.

அர­சியல் கட்­சி­களின் பிர­தி­நி­தி­க­ளிடம் இதன்­போது கருத்து வெளி­யிட்­டி­ருந்த தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய எனக்கு தேர்­தலை நடத்­து­வ­தற்­கான எந்­த­வொரு அதி­கா­ரமும் தற்­போ­தைக்கு இல்லை. பாரா­ளு­மன்­றத்தின் கைக­ளி­லேயே அதற்கான அதி­காரம் தங்­கி­யுள்­ளது. பாரா­ளு­மன்­றத்தில் தேர்­த­லுக்­கான சட்­டத்தை நிறை­வேற்றும் பட்­சத்தில் என்னால் தேர்­தலை நடத்த முடியும். இதற்­காக அர­சாங்­கத்­துக்கு உரிய கால அவ­காசம் கொடுத்­தி­ருந்தோம். எனினும் அர­சாங்கம் தேர்­தலை நடத்­து­வ­தற்­கான எந்­த­வொரு ஏற்­பா­டு­க­ளையும் இ ன்னும் செய்­ய­வில்லை. அர­சாங்கம் தேர்­தலை நடத்­து­வதில் இழுத்­த­டிப்பு செய்து வரு­கின்­றது.

ஆகவே இனி­மேலும் கால அவ­காசம் வழங்க முடி­யாது. தேர்தல் நடத்­து­வ­தற்­கான அதி­காரம் தற்­போது பாரா­ளு­மன்­றத்தின் கைக­ளி­லேயே உள்­ளது. ஆகவே அர­சியல் கட்­சிகள் அனைத்தும் தேர்­தலை நடத்­து­வ­தற்­காக அர­சாங்­கத்­துக்கு அழுத்தம் பிர­யோகிக்க வேண்டும். அத்­துடன் அர­சாங்கம் உடன் தேர்­தலை நடத்­தியே ஆக வேண்டும். இனி­மேலும் பிற்­போ­டு­வ­தற்கு இட­ம­ளிக்க முடி­யாது என்றும் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். இதே­வேளை இங்கு கருத்து வெளி­யி­ட்­டி­ருந்த அர­சியல் கட்­சி­களின் பிர­தி­நி­திகள் மாகா­ண­சபைத் தேர்­தலை விரை­வாக நடத்த நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டு­மென வலி­யு­றுத்­தி­யி­ருந்­தனர்.

இந்­த ­நி­லையில் அர­சாங்கம் தொடர்ந்து இந்தத் தேர்தல் விட­யத்தில் தாம­திக்­காமல் விரைந்து மாகா­ண­சபைத் தேர்­தலை நடத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். நாட்டு மக்­க­ளுக்கு தமது மாகா­ண­ச­பை­களை நிர்­வ­கிக்க தமது பிர­தி­நி­தி­களை தெரி­வு­செய்யும் உரிமை இருக்­கி­றது. அதனை யாரும் மறுக்­க­மு­டி­யாது. எனவே அந்த உரி­மையை அர­சாங்கம் விரை­வாக உறு­திப்­ப­டுத்த வேண்டும். அத்­துடன் புதிய தேர்தல் முறைமை குறித்து சிந்­திக்­கும்­போது அது பரந்­து­பட்ட ரீதியில் அமைய வேண்டும். சிறு­பான்மை மற்றும் சிறிய கட்­சி­களின் பிர­தி­நி­தித்­து­வங்­களை பாதிக்­கா­த­வ­கையில் தேர்தல் முறை அமை­ய­வேண்டும். அத்­துடன் குள­று­ப­டிகள் இல்­லா­த­வ­கை­யிலும் வீண் விர­யங்கள் ஏற்­ப­டா­த­வ­கை­யிலும் தேர்தல் முறை­மையை உரு­வாக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கி­றது. தற்­போது ஏற்­க­னவே உள்­ளூ­ராட்சிமன்றத் தேர்தல் முறைமை 60வீத தொகுதி முறை­மை­யிலும் 40 வீத விகி­தா­சார முறை­மை­யிலும் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. அந்த முறையில் தேர்தல் நடத்­தப்­பட்டு பிர­தி­நி­திகள் தெரி­வு­செய்­யப்­பட்ட பின்­னரே தற்­போது அதி­லுள்ள குறை­பா­டுகள் வெளி­வர ஆரம்­பித்­தி­ருக்­கின்­றன. இந்­த­நி­லையில் உள்­ளூ­ராட்சிமன்றத் தேர்தல் முறை­மையை மீண்டும் மாற்­றி­ய­மைக்க வேண்டும் என்ற கோரிக்­கைகள் தற்­போது எழ ஆரம்­பித்­தி­ருக்­கின்­றன. இந்த முறை­மையில் திருத்தம் செய்­ய­வேண்­டு­மென்று நாட்டின் தலை­வரே சில மாதங்­க­ளுக்கு முன்னர் தெரி­வித்­தி­ருந்­தமை இங்கு சுட்­டிக்­காட்­டப்­பட வேண்­டி­யி­ருக்­கி­றது.

எனவே மாகா­ண­சபைத் தேர்தல் முறை­மையை புதிய முறை­மைக்கு மாற்­றி­ய­மைக்­கும்­போது அத­னூ­டாக எதிர்­கா­லத்தில் குள­று­ப­டிகள் ஏற்­ப­டா­த­வாறு பார்த்­துக்­கொள்ள வேண்டும். அவ­ச­ர­மாக இந்த செயற்­பாட்டை மேற்­கொள்­ளாமல் அனைத்து தரப்­பி­ன­ரு­டனும் கல­ந்­து­ரை­யாடி பரந்­து­பட்ட ரீதியில் இணக்­கப்­பா­டு­களை எட்டி புதிய முறை­மைக்கு செல்ல வேண்டும். அதற்கு நீண்­ட­காலம் எடுக்கும் சூழல் ஏற்­பட்டால் பழைய முறை­மையில் கூட மாகா­ண­சபைத் தேர்­தலை நடத்­த­முடியும். மாறாக புதிய முறை­மையை அவ­ச­ர­மாக தயாரித்து அதனூடாக எந்தவொரு தரப்புக்கும் அநீதி ஏற்படுவதற்கு இடமளிக்கக்கூடாது.அதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுகூடி இதுதொடர்பில் ஆராய்ந்து பொதுவான இணக்கப்பாட்டின் அடிப்படையில் தீர்மானத்துக்கு வரவேண்டியது அவசியமாகிறது.

மாறாக இந்த விடயத்தைக் காரணம்காட்டி மக்களின் ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்துகின்ற தேர்தலை பிற்போடுவதற்கு யாரும் முயற்சிக்கக்கூடாது. இது தொடர்பில் பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக்கட்சியும் விரைவாக ஒரு முடிவுக்கு வரவேண்டும். விருப்பு வாக்கற்ற ஒரு பொருத்தமான தேர்தல் முறைமைக்கு செல்லவேண்டுமென்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால் அவ்வாறு உருவாக்கப்படுகின்ற தேர்தல் முறைமையானது அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றதும் அனைத்து மக்கள் பகுதியினரதும் பிரதிநிதித்துவங்களை உறுதி செய்வதுமாக அமையவேண்டும். அதனால் இந்த விடயத்தில் அனைத்து அரசியல்கட்சிகளும் கலந்துரையாடி விரைவாக பொதுவான ஒரு தீர்மானத்துக்கு வர வேண்டுமென சுட்டிக்காட்டுகின்றோம்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-06-28#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.