Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கட்சி பேதங்களை மறந்து உழைத்தால் றெஜினாவின் இழப்பே இறுதி இழப்பாக இருக்கும் – டக்ளஸ்

Featured Replies

கட்சி பேதங்களை மறந்து உழைத்தால் றெஜினாவின் இழப்பே இறுதி இழப்பாக இருக்கும் – டக்ளஸ்

 

அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் சமூக நலன்கருதியும் மக்களின் பாதுகாப்பு கருதியும் அனைவரும் ஒன்றுபட்டு உழைப்பதனூடாகவே எமது சமூகத்தில் இன்னொரு றெஜினாவை கொடிய வன்முறைக்கு காவுகொடுக்காது பாதுகாத்துக் கொள்ளமுடியும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) வட்டுக்கோட்டை சுழிபுரம் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி றெஜினாவின் மரணத்துக்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்ட மாணவர்களின் போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்று எமது மக்களது கலாசாரங்களை சீரழித்துக்கொண்டிருக்கின்ற சமூகச் சீரழிவுகளை இல்லாதொழிப்பதற்கு மக்களின் ஆதரவு அவசியம்.
அரசியல் ரீதியாக இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் நடக்காது என்றும், இதை தொடர்ந்து நடக்க விடக்கூடாது என்றும் சொல்லப்படுகிறது. ஆனாலும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

எனவே இவ்வாறான சம்பவங்களை முளையிலேயே கிள்ளி எறியும் வகையில் இந்த போதை பொருள் பாவனையை நிறுத்த வேண்டும். இதில் பொதுமக்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் பங்குண்டு. இருவரும் ஒன்று சேரும் போதே இலகுவாக தீர்வுகாணமுடியும்.

ஏனெனில் இது ஒரு பிரதேசத்துக்கு மட்டுமான பிரச்சினை அல்ல. தமிழர்கள் வாழும் பகுதிகளெங்கும் இது நடைபெறுகின்றது. இன்று நடந்தேறியுள்ள றெஜினாவின் கொலையே கடைசியானது என எடுத்துக்கொண்டு இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் எங்கும் நடைபெறாது இருக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அந்த தீர்வுதான் இந்த றெஜினா என்ற குழந்தையின் கொலைக்கு மட்டுமல்லாது இவ்வாறான சம்பவங்களுக்கு நீண்டகால தீர்வாக அமையும்.

அந்தவகையில் கட்சிகள், அரசியல் காரணங்களைக் கொண்டதாக பிரச்சினைகளை அணுகாது சமூக நலன் கருதி அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட்டால் நிச்சயம் தீர்வுகாணமுடியும்” என்று தெரிவித்தார்.

http://athavannews.com/?p=695559-கட்சி-பேதங்களை-மறந்து-உழைத்தால்-றெஜினாவின்-இழப்பே-இறுதி-இழப்பாக-இருக்கும்-–-டக்ளஸ்

  • தொடங்கியவர்

போதைப்பொருளை கட்டுப்படுத்துவதே றெஜீனாவுக்கான தீர்வாக அமையும் - ஒன்றிணைந்து குரல் கொடுத்த மாவை, டக்ளஸ்

 

 
 

(ரி.விரூஷன்)

வடக்கில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனைகளை கட்டுப்படுத்த அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜாவும் டக்ளஸ் தேவானந்தாவும் ஒன்றிணைந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

daklas.jpg

யாழ். சுழிபுரம் பகுதியில் கொலைசெய்யப்பட்ட சிறுமி றெஜீனாவின் மரணம் தொடர்பில் நீதி கேட்டு இன்றைய  தினம் யாழில் இடம்பெற்ற வீதி மறியல் போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்ட கோரிக்கையை அவர்கள் விடுத்திருந்தனர்.

இச் குறித்து மாவை சேனாதிராஜா மேலும் தெரிவிக்கையில்,

இச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர்களது பிணைக்கான காரணம் தொடர்பில் சட்டத்துறையினர் மீள் பரிசிலனை செய்ய வேண்டும். மேலும் வடக்கில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையை கட்டுபடுத்த மக்களும் அரசியல்வாதிகளும் காவல்துறையினரும் இணைந்து செயற்பட வேண்டும்.

கொலை செய்யப்பட்டுள்ள மாணவி றெஜீனாவின் உயிரிழப்புக்கு நீதி வேண்டி முன்ன‍ெடுக்கப்படும் இப் போராட்டமானது நியாயமானதாகும். இச் சிறுமிக்கும், அவரது பெற்றோருக்கும் நீதி கிடைக்க நம் எப்போதும் உங்களோடு இருப்போம் என்றார்.

இது குறித்து டக்ளஸ் தேவானந்தா கருத்து தெரிவிக்கையில்,

இப் போதைப்பொருள் பாவனை பிரச்சினை என்பது இங்கு மாத்திரமல்ல. இது தமிழர்கள் வாழ்கின்ற அனைத்து பிரதேசங்களிலும் காணப்படுகின்றது.

எனவே இதனை தடுப்பதற்கு மக்கள் முழுமையாக ஒத்துழைப்பு தர வேண்டியதுடன் அரசியல் கட்சிகளும் கட்சி பேதமின்றி பொது இணக்கப்பாட்டுடன் ஒன்றிணைந்து இப் பிரச்சினைக்கான தீர்வு நோக்கி பயணிக்க வேண்டும். அவ்வாறு பெற்றுக்கொள்ளப்படுகின்ற தீர்வே கொலைசெய்யப்பட்ட சிறுமிக்கான நீதியாக அமையும் என்றார்.

http://www.virakesari.lk/article/35703

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.