Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வருவான் தலைவர் பிரபாகரன் ஆர்ப்பாட்டத்தில் மக்கள் எழுச்சிக் கோசம்

Featured Replies

றெஜினாவுக்கு நீதிகோரி சுழிபுரத்தில் ஆர்ப்பாட்டம்

media-share-0-02-03-40fad4db9c3711a98fd7
 
 
 
 

சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி றெஜினாவுக்கு நீதிகோரி சுழிபுரப் பகுதியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில், முச்சக்கர வண்டிச் சங்கத்தினர், அரச சார்பற்ற சி நிறுவனங்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் , பொது மக்கள் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் இணைந்துள்ளனர்.

சங்கானை பிரதேச செயலரிடம் மனு கையளிப்பதற்காக ஆர்ப்பாட்டக்காரர்கள் சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

இதே வேளை  பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்ப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

http://newuthayan.com/story/09/றெஜினாவுக்கு-நீதிகோரி-சுழிபுரத்தில்-ஆர்ப்பாட்டம்.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வருவான் தலைவர் பிரபாகரன்

ஆர்ப்பாட்டத்தில் மக்கள் எழுச்சிக் கோசம்

images-9.jpg
 
 

சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி றெஜினாவுக்கு நீதிகோரி சுழிபுரப் பகுதியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளோர் தழிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வருவார் என்று கோசம் எழுப்பியுள்ளனர்.

சங்கானை பிரதேச செயலகம் நோக்கி ஆர்ப்பாட்டப் பேரணி நகர்ந்துகொண்டிருக்கின்றது.

http://newuthayan.com/story/09/வருவான்-தலைவர்-பிரபாகரன்.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஆளுநர் அலுவலகத்தில் மனு கையளிப்பு-சிறுமிக்கு நீதி கோரி

media-share-0-02-03-4c24deeb0daa6764dd69
 
 
 

சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி றெஜினாவுக்கு நீதிகோரி சுழிபுரம் மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது ஆளுநர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களால் மனு கையளிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் அங்கு இல்லாததன் காரணத்தால் ஆளுநரின் பிரத்தியேக செயலரிடம் மனு கையளிக்கப்பட்டது.

 

ddddddddddddd.jpg

media-share-0-02-03-7993a49094680fc40a75

http://newuthayan.com/story/12/ஆளுநர்-அலுவலகத்தில்-மனு-கையளிப்பு-சிறுமிக்கு-நீதி-கோரி.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பாடசாலை மாணவியின் கொலைக்கு நீதியை கோரி மகஜர் கையளிப்பு -(படங்கள் இணைப்பு )

June 29, 2018
June 29, 2018
  • Share This!

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

IMG-20180629-WA0095.jpg?resize=800%2C600
பாடசாலை மாணவியின் கொலைக்கு நீதியை கோரி வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் யாழ் அரசாங்க அதிபரிடம் இன்று மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. படுகொலைக்கு நீதியான விசாரணைகள் மேற்கோள்ளப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென்றும் காவல்துறை காவலரண் அமைக்கப்பட வேண்டுமென்றும் அந்த மகஜரில் கோரிக்கை விடுக்கப்கட்டுள்ளது.

 

சுழிபுரத்தில் பாடசாலை மாணவி றெஜினா துஸ்பிரயோகம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும் நீதியைக் கோரியும் மாணவர்களும் பொது மக்களும் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதற்கமைய இன்று கடையடைப்பும் போராட்டங்களும் பேரணிகளும் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு தொடர்ச்சியாக சுழிபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்கள் இன்று காலை அங்கிருந்து பேரசியாகச் சென்று சண்டிலிப்பாய் பிரதேச செயலரிடம் மகஜர் கையளித்திருந்தனர்.

இதன் பின்னர் அங்கிருந்து பஸ்களில் யாழ் சுண்டுக்குழியிலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் வந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து ஆளூநர் ரெஜினோல்ட் கூரேயிடம் மகஜரொன்றையும் கையளித்தனர். அதன் பின்னர் மாவட்ட அரசாங்க அதிபரிடமும் மகஜரொன்றையும் கையளித்தனர்.

IMG-20180629-WA0080.jpg?resize=800%2C600IMG-20180629-WA0081.jpg?resize=800%2C600IMG-20180629-WA0087.jpg?resize=800%2C600IMG-20180629-WA0088.jpg?resize=800%2C600IMG-20180629-WA0089.jpg?resize=800%2C600IMG-20180629-WA0097.jpg?resize=800%2C600

http://globaltamilnews.net/2018/85708/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.