Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாங்கள் உண்மையில் ராஜபக்சாக்கள் குறித்து அச்சம் அடைகிறோம்

Featured Replies

நாங்கள் உண்மையில் ராஜபக்சாக்கள் குறித்து அச்சம் அடைகிறோம்

முன்னைய மகிந்த ஆட்சியை பகிரங்கமாக விமர்சிக்கிறார் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்

 

MCEcFCF.png

 
 

கேள்வி: நீங்­கள் 2020ஆம் ஆண்­டின் அர­ச­த­லை­வர் வேட்­பா­ளர் பற்றி சாடை­மா­டை­யா­கக் குறிப்­பிட்­டுள்­ளீர்­கள். ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் தலை­வர்­தான் அந்த வேட்­பா­ளரா?

பதில்: ஆம் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் தலை­வர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே நடை­பெ­ற­வுள்ள அர­ச­த­லை­வர் தேர்­த­லில் கட்­சி­சார்­பான வேட்­பா­ளர்.

கே: ஆனால் வேறு­வி­த­மான கதை­க­ளும் கட்­சி­யின் உள்­மட்­டத்­தில் நில­வு­கின்­ற­னவே?

 

ப: அப்­ப­டி­யாக வேறு எது­வித கதை­க­ளும் இல்லை.

கே: ஏன் இல்லை? பின்­வ­ரிசை உறுப்­பி­னர்­கள், குமார் சங்­கக்­கார குறித்து, சஜித் பிரே­ம­தாச குறித்து இன்­னும் சிலர் பொது வேட்­பா­ள­ரொ­ரு­வர் குறித்­தும் பேசிக்­கொள்­கி­றார்­கள். இவற்­றில் எது உண்மை?.

ப: ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­தான் வேட்­பா­ளர் என்­பதே உண்மை. அர­சி­ய­லில் பெரிய கட்­சி­யாக விளங்­கும் கட்சி ஐக்­கிய தேசி­யக் கட்­சி­தான். கட்­சி­யின் நடை­ மு­றை­களை செயல்­ப­டுத்த குழு­ஒன்று உள்­ளது.

அந்­தக் குழு­தான் இதற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கும். எங்­கள் கட்­சி­யின் அர­ச­த­லை­வர் தேர்­த­லுக்­கான வேட்­பா­ளர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­தான்.

கே: ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் தலை­வ­ராக ரணில் விக்­கி­ர­ம­ சிங்­க­வின் பத­விக்­கா­லம் எதிர்­வ­ரும் நவம்­பர் மாதத்­து­டன் முடி­வு­ பெ­ற­வுள்­ளது. அதன் பின்­னர் கட்­சி­யின் தலை­வ­ராக வேறு ஒரு­வர் தெரிவு செய்­யப்­பட்­டால், ¶Ëஅவ்­வி­தம் தெரி­வா­கு­ப­வர்­தான் அர­ச­த­லை­வர் தேர்­தல் வேட் பா­ளரா?

ப: கட்­சி­யின் தலை­வர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­தான். நாங்­கள் சரி­யான நேரத்­தில் இதனை அறி­விப்­போம். 2020 இல் அர­ச­த­லை­வர் தேர்­த­லில் போட்­டி­யி­டப்­போ­வது ரணில் விக்­கி­ர­ம­ சிங்­க­தான்.

கே: அப்­ப­டி­யா­னால் ஏனை­யவை வெறும் கட்­டுக்­க­தை­களா?

ப: மற்­ற­வர்­கள் கூறும் கதை­களை எல்­லாம் நீங்­கள் நம்ப வேண்­டி­ய­தில்லை. கட்­சி­யின் பொதுச் செய­லா­ளர் என்ற வகை­யில் நான்­கூ­றும் தக­வல்­தான் சட்­ட­பூர்­வ­மா­னது.

கே: பிணை­முறி விவ­கா­ரத்­தில் பணம் பெற்­ற­தா­கக் கூறப்­ப­டும் 118பேரில் நீங்­க­ளும் ஒரு­வரா?

ப: இல்லை; ஒரு­போ­துமே இல்லை.

கே: நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் கௌர­வத்­தைக் காப்­பாற்­றிக் கொள்­வ­தற்­காக, அந்த 118பேரின் பெய­ர்களை வௌியி­டு­வது சரி என்று நீங்­கள் நினைக் கிறீர்­களா?

ப: அவர்­க­ளின் பெயர்­களை வௌியிட இய­லு­மா­னால், அது நல்ல விஷ­யம்­தான். இதில் சம்­பந்­தப்­பட்ட எல்­லோ­ருமே திரு­டர்­கள் என்று அர்த்­த­மில்லை.

இந்­தப் பிணை­முறி சம்­பந்­த­மான பணத்­தைப் பெற்­றுக்­கொண்ட கார­ணத்­திற்­காக மட்­டும் அவர்­க­ளைத் திரு­டர்­கள் என முத்­திரை குத்­தி­வி­டக்­கூ­டாது.

ஏதா­வது ஒரு கொடுக்­கல் வாங்­கல் இடம்­பெற்­றால் மட்­டுமே அதற்­குத் திருட்டு எனப் பெயர் சூட்­ட­லாம். நான் அந்த 118பேரில் ஒரு­வ­னாக இல்லை, அவர்­க­ளின் பெயர்­கள் வௌியி­டப்­ப­ட­வேண்­டும்.

கே: பல­ரது வேண்­டு­கோ­ளுக்­குப் பின்­ன­ரும், ஏன் அவர்­க­ளின் பெயர்­கள் வௌியி­டப்­ப­ட­வில்லை? யார் அத­னைத் தடுக்­கி­றார்­கள்?

ப: அந்­தப் பெயர்­கள் வௌியி­டப்­ப­டு­வ­தில் எவ­ருக்­கும் எந்­தப் பிரச்­சி­னை­யு­மில்லை. இவை அர­ச­த­லை­வ­ரின் செய­லா­ளர், சட்­டமா அதி­பர் மற்­றும் சபா­நா­ய­கர் ஆகி­யோ­ரு­டன் சம்­பந்­தப்­பட்­டவை. அவர்­கள்­தான் இதற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­வேண்­டும்.

கே: அர­ச­மைப்­புக்­கான 20 ஆவது திருத்­தம் என்­பது தற்­பொ­ழுது அர­சி­யல்­வா­தி­க­ளால் அடிக்­கடி விவா­திக்­கப்­ப­டு­கின்ற விஷ­ய­மா­கி­விட்­டது.

ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யும் முழு அதி­கா­ர­முள்ள அர­ச­த­லை­வர் முறை­மை­யைத் தொடர்ந்து செயற்­ப­டுத்­து­வதை விரும்­பு­கி­றதா? அது குறித்து உங்­கள் கட்­சி­யின் நிலைப்­பாடு என்ன?

ப: எங்­கள் கட்­சி­யின் செயற்­கு­ழுக் கூட்­டத்­தில் இது­வ­ரை­யில் நாங்­கள் இந்த விட­யம் தொடர்­பாக எது­வி­த­மான பேச்­சுக்­க­ளை­யும் மேற்­கொள்­ள­வில்லை.

கே: 2020ஆம் ஆண்­டில் நடை­பெ­ற­வுள்ள தேர்­த­லுக்கு ஐக்­கிய தேசி­யக் கட்சி தன்­னைத் தயார்ப் ப­டுத்­தி­வ­ரும் நிலை­யில் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­, மற்­றும் பொதுமக்­கள் முன்­ன­ணி­யும் ஐக் கிய தேசி­யக் கட்­சிக்கு பெரும் சவாலாக அமை­யப்­போ­கின்­ற­னவே?

அத்­து­டன் உங்­கள் கட்­சிக்­குள்­ளே­யும் விரி­சல்­கள் நில­வு ­கின்­ற­னவே? கிரா­மங்­க­ளில் உங்­கள் கட்­சிக்கு பொது­மக்­கள் மத்­தி­யில் வர­வேற்பு இல்லை என்­பது உண்­மையா? நடந்து முடிந்த உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் உங்­கள் கட்­சி­யின் தோல்­விக்கு அது­தான் கார­ணமா?

ப: எங்­கள் கட்­சி­யின் உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் தோல்­விக்கு பல கார­ணங்­கள் உள்­ளன. அந்த நேரத்­தில் நாட்­டில் நில­விய கடும் வரட்சி, நான்கு போக நெற் பயிர்ச் செய்கை அழிந்­து­போ­னமை, என்­ப­ன­வற்­று­டன் ஊட­கங்­கள் மீதான கட்­டுப்­பாட்டை நாங்­கள் தளர்த்­தி­ய­தால் ஊட­கங்­கள் எங்­களை கடு­மை­யாக விமர்­சித்­தன.

ராஜ­பக்­ச­வின் ஆட்­சிக் காலத்­தில் இவ்­வி­தம் இடம்­பெற்­றி­ருந்­தால் எத்­தனை ஊட­க­வி­ய­ளா­ளர்­கள் காணா­மற்­போ­யி­ருப்­பார்­கள் என்­ப­தைக் கணக்­கிட இய­லாது.

லசந்த, பொத்­தல மற்­றும் கீர்த்­நொ­யர் ஆகிய ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு நடந்­ததே அவர்­க­ளுக்­கும் நடந்­தி­ருக்­கும். மறு­பக்­கத்­தில் நாங்­கள் மேற்­கொண்ட அபி­வி­ருத்தி வேலை­கள் குறித்து உரிய விதத்­தில் பொது­மக்­க­ளுக்­குத் தெரி­விக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை.

நாங்­கள் கிராம மட்­டங்­க­ளில் மேற்­கொண்ட அபி­வி­ருத்தி வேலை­க­ளைப்­பற்றி கிராம மக்­க­ளுக்கு நாம் வௌிப்­ப­டுத்­த­வில்லை. பாட­சா­லைப் பிள்­ளை­க­ளுக்கு ‘சுரக் ஷா’ காப்­பு­று­தித் திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்­தி­னோம்.

கர்ப்­பி­ணித்­த­தாய்­மார்­க­ளுக்கு சத்­து­ண­வுப்­பொ­தி­களை வழங்­கி­னோம். அரச ஊழி­யர்­க­ளின் வேத­னத்தை ரூபாய் பத்து ஆயி­ரத்­தால் அதி­க­ரித்­தோம். எரி­பொ­ருள் வகை­க­ளின் விலை­யைக் குறைத்­தோம்.

ராஜ­பக்ச அர­சி­னால் பெறப்­பட்ட 70வீத­மான கடன் தற்­போது எங்­கள் அர­சி­னால் மீளச் செலுத்­தப்­ப­டு­கி­றது. இவற்றை எல்­லாம் செய்த பிற­கும்­கூட எங்­க­ளால் கிரா­மத்­தி­ன­ரின் வாக்­கு­க­ளைப்­பெற இய­லா­மற் போய்­விட்­டது.

கே: இது உங்­கள் கட்­சி­யின் நிறை­வேற்­றுத் தரப்­பின் பல­வீ­னத்தை எடுத்­துக்­காட்­டு­கி­றதா?

ப: அப்­ப­டி­யும் இருக்­க­லாம். ஆனால் நாங்­கள் மக்­க­ளுக்கு ஆற்­றிய சேவை­கள் அவர்­க­ளி­டம் சென்­ற­டைந்து இருந்­தால், நாங்­கள் பெற்ற வாக்­கு­க­ளின் வீதம் அதி­க­ரித்­தி­ருக்­கும்.

நாங்­கள் 14ஆயிரம் கிராம சேவ­கர் பிரி­வு­க­ளுக்கு ஒரு பிரி­விற்கு ரூபாய் 25இலட்­சம் என்ற அடிப்­ப­டை­யில் கடந்த இரண்டு வரு­டங்­க­ளில் வழங்­கி­யுள்­ளோம். நாங்­கள் நிறைய வேலை வாய்ப்­புக்­களை வழங்­கி­யுள்­ளோம்.

தற்­போது நாட்­டி­லுள்ள வேலை இல்­லா­த­வர்­க­ளின் தொகை 4வீத­மாக குறை­வ­டைந்­துள்ளது. இந்த விப­ரங்­கள் பொது­மக்­களை சென்­ற­டை­ய­வில்லை. இதன் கார­ண­மா­கவே கடந்த உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லின் போது எங்­கள் வாக்கு வங்­கி­யில் சரிவு ஏற்­பட்­டது.

கே: அர­சில் அங்­கம் வகிக்­கும் ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்­கும், சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சிக்­கும் இடை­யி­லான முரண்­பா­டு­க­ளும் நடந்து முடிந்த உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லின் தோல்­விக்கு ஒரு கார­ணம் அல்­லவா?

ப: நாங்­கள் யாவ­ருமே தேசிய அர­சில்­தான் இருந்­தோம். ஆனால் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் உயர் மட்­டத்­தி­னர் எங்­க­ளுக்கு எதி­ரான கருத்­துக்­களை வௌியிட்­ட­னர்.

இது­வும் எங்­க­ளுக்கு பாத­க­மாக மாறி­யது. இதில் உண்மை என்­ன­வென்­றால் அர­சில் அங்­கம் வகிக்­கும் இரண்டு கட்­சி­க­ளும் சண்­டை­யிட்­டுக் கொண்­டி­ருந்­த­தால் பொது­மக்­கள் இரண்டு கட்­சி­க­ள் மீதும் வெறுப்­ப­டைந்து விட்­ட­னர்.

கே: தேர்­தல் பரப்­பு­ரை­க­ளின்­போது மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­களை ஆட்­சிக்கு வந்த பின்­னர் நிறை­வேற்­ற­ வில்லை என்­ப­தும் உங்­கள் தேர்­தல் தோல்­விக்கு ஒரு கார­ணமா?

ப: நாங்­கள் கொடுத்த வாக்­கு­று­தி­க­ளில் பெரும்­பா­லா­ன­வற்றை நிறை­வேற்­றி­யுள்­ளோம். ஆனால் திரு­டர்­க­ளைப் பிடிக்­கத் தவ­றி­விட்­டோம். திரு­டர்­களை கண்­டு­பி­டிப்­ப­தற்­காக நாங்­கள் நிய­மித்த அதி­கா­ரி­களே கையூட்­டுப் பெற்­றுக்­கொண்டு அவர்­க­ளுக்­குக் கொடுக்­கப்­பட்ட கட­மை­களை நிறை­வேற்­றத் தவ­றி­விட்­ட­னர்.

அத்­து­டன் பல விசா­ர­ணைகள் ஒத்­திப் போடப்­பட்­டு­விட்­டன. ராஜ­பக்­ச­வின் இடை­வி­டாத இடை­யூ­று­க­ளுக்கு மத்­தி­யி­லேயே நாங்­கள் இவற்றை செய்­ய­வேண்­டி­யி­ருந்­தது. ராஜ­பக்­ச­மா­ரால் பத­வி­யில் அமர்த்­தப்­பட்ட பல அதி­கா­ரி­க­ளு­ட­னேயே நாங்­கள் எங்­கள் வேலைத்­திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­த­வேண்­டிய நிலை­யில் இருக்­கி­றோம்.

மேற்­கு­றிப்­பிட்ட அரச அதி­கா­ரி­கள்­தான் குற்­றம் சாட்­டப்­பட்­ட­வர்­க­ளுக்­கெ­தி­ரான தட­யங்­களை அழித்­து­வி­டு­கின்­ற­னர். ஆகவே சில சந்­தர்ப்­பங்­க­ளில் குற்­ற­வா­ளி­ களை கைது­செய்ய இய­லா­மல் போய்­வி­டு­கின்­றது.

ஆகவே ஆட்­சி­யின்­போது மேற்­கொள்­ளப்­பட்ட களவு, கொலை போன்ற குற்­றங்­கள் மறைக்­கப்­பட்­டு­வி­டு­கின்­றன. டுபாய் நாடு விசா­ர­ணைக்­குத் தேவை­யான விப­ரங்­க­ளைத் தர மறுக்­கி­றது. கறுப்­புப் பணம் மறைக் கப்­பட்­டு­விட்­டது. இவை எல்­லாமே எங்­க­ளுக்­குப் பாத­க­மாக அமைந்­து­விட்­டன.

கே: இந்த அரசே உங்­க­ளு­டை­யது தானே? ஆயி­னும்­கூட இன்­னும் ராஜ­பக்­ச­வைப் பற்­றிய அச்­சம் உங்­க­ளி­டம் உள்­ளதா?

ப: உண்­மை­தான்; நாங்­கள் ஆளும் கட்­சி­யாக இருந்­த­போ­தி­லும், ராஜ­பக்­ச­மா­ரைக் கண்டு அஞ்­சு­கி­றோம். கார­ணம் ராஜ­பக்­ச­மார் பயங்­க­ர­மான நட­வ­டிக்­கை­களை அச்­ச­மின்றி மேற்­கொள்­ப­வர்­கள்.

அர­சில் முன்பு இருந்­த­போ­தும், இப்­போது எதிர்க்­கட்­சி­யில் இருக்­கின்ற போதும் அவர்­கள் பயங்­க­ர­மா­ன­வர்­கள்­தான். அத­னால்­தான் நாங்­கள் அவர்­க­ளைக் கண்டு அஞ்­சு­கி­றோம். அவர்­க­ளுக்கு எதி­ராக சாட்­சி­கள் கிடை­யாது.

கே: எப்­படி சாட்­சி­யங்­களை அழிக்க இய­லும்? ஏன் அவற்றை உங்­க­ளால் தடுக்க இய­லாது?

ப: இவை­யா­வும் சில அரச அதி­கா­ரி­க­ளின் நேர்­மை­யீ­னம் கார­ண­மா­கவே இடம்­பெ­று­கின்­றன. களவு மற்­றும் குற்­றம் புரி­ப­வர் க­ளின் வழக்­கு­கள் கால­வ­ரை­ய­றை­யின்றி ஒத்­தி­வைக்­கப்­ப­டு­கின்­றன. இவை­களை மீண்­டும் ஆராய வேண்­டும். அத­னால் நாங்­க­ளும் அச்­சப்­பட வேண்­டிய நிலைமை தோன்­றி­யுள்­ளது.

கே: 100நாள் திட்­ட­மொன்று ஆரம்­பிக்­கப்­பட்­டது. இத­னைத் தொடர்ந்து முன்­னெ­டுக்க இய­லா­மல் போய்­விட்­டது. இது அரச தலை­வ­ருக்­குத் தெரி­யாதா?

ப: அரச தலை­வ­ரும், தலைமை அமைச்­ச­ரும் இணைந்து செயல்­ப­டும் நோக்­கில்­தான் இந்த 100 நாள் திட்­டம் ஆரம்­பிக்­கப்­பட்­டது. இதைப்­பற்­றித் தெரி­யுமா என்று அர­ச­த­லை­வ­ரையே கேட்க வேண்­டும்.

கே: தேசிய அர­சின் நிலமை என்ன?

ப: நன்­றா­கவே இருக்­கி­றது.

கே: தேசிய அரசு தொட­ருமா இல்­லையா?

ப: அது குறித்து இப்­பொ­ழுது எது­வும் சொல்­வ­தற்கு இல்லை. எதிர்­கா­லத்­தில் என்ன நடக்­கப் போகி­றது என்­ப­தைப் பொறுத்­தி­ருந்து பார்ப்­போம். எங்­க­ளால் முடிந்­த­வ­ரைக்­கும் முன்­னோக்கி நகர்்ந்து கொண்­டி­ருக்­கி­றோம்.

கே: பிரதிச் சபா­நா­க­யர் தெரிவு நாடா­ளு­மன்­றத்­தில் உங்­கள் கட்­சிக்கு ஒரு பலப்­ப­ரீட்­சை­யாக அமைந்­ததா?

ப: சகல நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளும், தாமரை மொட்­டின் உறுப்­பி­னர்­க­ளும்­கூட ஒன்று சேர்ந்தே ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் வேட்­பா­ள­ருக்கு ஆத­ரவு அளித்­த­னர்.

இப்­போது தாம­ரை­மொட்டு கட்சி இரண்டு அல்­லது மூன்று பிரி­வு­க­ளா­கப் பிரிந்­து­விட்­டது. சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யும் பிரிந்­து­விட்­டது. ஐக்­கிய தேசி­யக் கட்சி தோல்­வி­யுற்ற போதி­லும், அதன் கட்­ட­மைப்பு பாது­காக்­கப்­பட்­டுள்­ளது.

எங்­கள் கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்­கி­டை­யில் கருத்து வேறு­பா­டு­கள் இருந்த போதி­லும், கட்­சி­யின் தலை­வர்­கள் சகல உறுப்­பி­னர்­க­ளை­யும் ஒன்­றாக வைத்­துக்­கொண்­ட­னர். இது­தான் அர­சி­யல் சாணக்­கி­யம்.

கே: பின்­வ­ரி­சை­யி­லுள்ள 20 பேரும் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யை­விட்டு வில­கிப்­போக உள்­ள­னரா?

ப: இல்லை; நான் அவர்­க­ளு­டன் கதைத்­துள்­ளேன். அவர்­கள் கட்­சி­யு­டன் இணைந்து செயற்­ப­டு­வார்­கள். அவர்­க­ளு­டைய கோரிக்­கை­கள் நிறை­வேற்­றப்­பட்­டு­விட்­டன.

கே: கட்­சி­யின் மறு­சீ­ர­மைப்பு என்­பது உரி­ய­மு­றை­யில் நடை­பெ­ற­வில்லை என்­றும், தலைமை அமைச்­ச­ரின் ஆத­ர­வா­ளர்­களே மீண்­டும் பத­வி­க­ளுக்கு வந்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கி­றதே?

ப: அநே­க­மான உறுப்­பி­னர்­க­ளின் விருப்­பத்­திற்­கேற்­பவே கட்சி மறு­சீ­ர­மைக்­கப்­பட்­டது. ஒரு ஜன­நா­ய­கக் கட்­சி­யில் உள்ள சக­ல­ரை­யும் திருப்­திப்­ப­டுத்­தும் விதத்­தில் ஒரு காரி­யத்தை செய்ய இய­லாது.

நாங்­கள் எதிர்­பார்த்­தது இதனை அல்ல என்­ப­தை­யும் கூறத்­தான் வேண்­டும். ஆனா­லும்­கூட அநே­க­மான உறுப்­பி­னர்­க­ளின் விருப்­பம்­தானே இங்கு கவ­னிக்­கப்­பட வேண்­டிய விஷ­யம்.

கே: கட்­சி­யின் உறுப்­பி­னர்­கள் வேறு வேறு­வி­த­மான அபிப்­பி­ரா­யங்­களை வௌியி­டு­வது கட்­சி­யின் ஒழுங்­கு­மு­றை­களை மீறு­வ­தாக அமை­யுமே, இது குறித்து கட்­சி­யின் பொதுச்­செ­ய­லா­ள­ரான உங்­க­ளின் கருத்து என்ன?

ப: அர­சில் அங்­கம் வகிக்­கும் ஒரு ஜன­நா­ய­கக் கட்­சி­யென்ற அடிப்­ப­டை­யில் நாங்­கள் இத­னை­யிட்டு பெருமை அடை­கி­றோம். இப்­ப­டி­யா­ன­தொரு ஜன­நா­ய­கக் கட்சி இது­வ­ரை­யில் இலங்­கை­யில் இருந்­த­தில்லை. இனி­மே­லும், எதிர் கா­லத்­தி­லும்­கூட, இப்­ப­டி­யான ஒரு கட்சி அமை­யப்­போ­வ­தில்லை.

சகல உறுப்­பி­னர்­க­ளும் ஒழுக்­கத்­தைக் கடைப்­பி­டிக்­கு­மாறு வற்­பு­றுத்­தப்­பட்­டுள்­ளது. அப்­ப­டிச் செய்­யத் தவ­றும் பட்­சத்­தில் உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வும் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

எந்­தப் பிரச்­சினை என்­றா­லும் கட்­சி­யின் நிறை­வேற்­றுக் குழுக்­கூட்­டத்­தில் அல்­லது நாடா­ளு­மன்­றக் குழு­வின் கூட்­டத்­தில் உறுப்­பி­னர்­கள் வௌியி­ட­லாம்.

நாங்­கள் அவர்­க­ளின் கருத்­துக்­க­ளைத் தெரி­விப்­ப­தற்கு போதி­ய­கால அவ­கா­சம் வழங்­கு­கி­றோம். அது முடி­வ­டை­யும் காலம் வந்­து­விட்­டது. இனி அப்­படி ஏதா­வது நடந்­தால் நாங்­கள் சில முடி­வு­களை எடுக்­க­வேண்­டி­யி­ருக்­கும்.

கே: கல்­வித் துறை­யில் எது­வி­த­மான முன்­னேற்­றங்­க­ளும் இல்லை எனக் கூறப்­ப­டு­கி­றதே. இதைப்­பற்றி நீங்­கள் என்ன சொல்­லப் போகி­றீர்­கள்?

ப: கல்வி அமைச்சு சகல சந்­தர்ப்­பங்­க­ளி­லும் குறை கூறப்­ப­டும் திணைக்­க­ள­மா­கவே காணப்­ப­டு­கி­றது. நிறை­யவே மாற்­றங்­கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

பாட­சா­லை­யில் மாண­வர்­களை அனு­ம­திக்­கும் போது கட்­ட­ணங்­கள் எது­வும் அற­வி­டப்­ப­ட­மாட்­டாது. அப்­படி பணம் அற­வி­டப்­பட்­டால் தரா­த­ரம் பாராது அப்­ப­டிப் பணம் வாங்­கு­ப­வர்­கள் தண்­டிக்­கப்­ப­டு­வார்­கள்.

கல்­விப் பொதுத் தரா­தர சாதா­ரண தரப் பரீட்­சை­யில் மாண­வர்­கள் சித்­தி­ய­டை­யா ­விட்­டா­லும்­கூட, அவர்­கள் கல்­விப் பொதுத் தரா­தர உயர்­தர வகுப்­ புக்கு வகுப்­பேற்­றப்­ப­டு­வார்­கள்.

நாங்­கள் அவர்­க­ளுக்கு வழி­காட்­டல் திட்­ட­மொன்­றினை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளோம். 4000பேருக்கு அதி­பர் நிய­ம­னங்­கள் வழங்­கி­யுள்­ளோம். இவற்­றில் அர­சி­யல் தலை­யீ­டு­கள் இருக்­க­வில்லை.

நாங்­கள் விஞ்­ஞா­ன­கூ­டங்­களை 3000பாட­சா­லை­க­ளில் உரு­வாக்­கி­யுள்­ளோம். 68வீத­மான பாட­சா­லை­க­ளி­லேயே மின்­சார வச­தி­கள் இருந்­தன. நாங்­கள் அவற்­றைத் 98வீத­மாக அதி­க­ரித்­துள்­ளோம்.

பாட­சா­லை­க­ளின் வாசி­க­சா­லை­க­ளுக்கு புத்­த­கங்­கள் வாங்­கு­வ­தற்­காக 600மில்­லி­யன் ரூபாய் பணம் செலவு செய்­துள்­ள­தோடு 26000மல­ச­ல­கூ­டங்­க­ளை­யும் நிர்­மா­ணித்­துள்­ளோம்.

ஆறாம் ஆண்டு வகுப்புக்கு மேற்­பட்ட மாண­வர்­க­ளுக்கு கண­னி­களை வழங்­க­வுள்­ளோம். ஆசி­ரி­யர்­க­ளை­யும் பயிற்­று­வித்­துள்­ளோம். இதன் பெறு­பே­றாக சென்­ற­வ­ருட கல்­விப் பொதுத் தரா­தர சாதா­ர­ண­த­ரப் பரீட்­சை­யின் முடி­வு­கள் எங்­க­ளுக்கு வெற்­றியை அளித்­துள்­ளன.

சிலர் எங்­க­ளைக் குறை­கூ­றக்­கூ­டும். குறை­பா­டு­க­ளைப் படிப்­ப­டி­யா­கவே தான் நிவர்த்தி செய்ய இய­லும்.

கே: இன்­ன­மும் 18மாதங்­க­ளில் உங்­க­ளால் வெற்றி இலக்கை அடைந்து, ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யி­னூ­டாக ஒரு அரச தலை­வரை உரு­வாக்க இய­லுமா?

ப: கடந்த 3 1/2 வரு­டங்­க­ளில் நாங்­கள் செய்த வேலைத்­திட்­டங்­க­ளைப் பார்க்­கி­லும், இனி­வ­ர­வி­ருக்­கும் 18மாதங்­க­ளி­லும் மேல­தி­க­மான வேலைத்­திட்­டங்­களை மேற்­கொண்டு அதன் பலா­ப­லன்­க­ளை­யும் காட்­டு­வோம்.

தாமரை மொட்­டுக் கட்­சி தேர்­த­லில் வெற்­றி­பெற்ற போதி­லும் அந்த வெற்­றியை முறை­யாக நிர்­வ­கிக்­க­ வில்லை. ஆனால் நாங்­கள் தோல்­வி­யுற்­றா­லும் எங்­க­ளின் நிர்­வா­கம் சீரா­கவே இயங்­கி­யது.

கே: எல்­லா­வற்­றை­யும் தனி­யார் மய­மாக்­கு­கி­றது ஐக்­கிய தேசி­யக் கட்சி என்ற குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டுள்­ளதே. இப்­படி செய்­யா­மல் நாட்டை அபி­வி­ருத்தி செய்­ய­மு­டி­யாதா?

ப: ஐக்­கிய தேசி­யக் கட்­சி­தான் நாட்­டில் பெரிய அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தது. நாங்­கள் நாட்­டின் வளங்­களை விற்று நாட்டை அபி­வி­ருத்தி செய்­ய­வில்லை.

மகிந்த ராஜ­பக்ச வௌிநா­டு­க­ளில் கோடிக்­க­ணக்­கில் கடன் வாங்கி துறை­மு­கத்­தை­ யும், விமான நிலை­யத்­தை­யும் அமைத்­தார். அவற்றை இயங்­காத நிலை­யிலே வைத்­துக்­கொண்டு அரசு கடன் பணத்தை மீளச் செலுத்த இய­லாது. அர­சுக்­குப் பணம்­தேவை.

நாங்­கள் இவற்­றைக் குத்­த­கைக்கு விட்டு பணம்­பெற்று நாட்­டின் கடன்­சு­மை­யைக் குறைத்­தோம். நாங்­கள் படிப்­ப­டி­யாக நாட்­டின் கடன் சுமை­யைக் குறைத்­துக் கொண்டு வரு­கி­றோம்.

கட­னில் மூழ்­கிய இலங்கை அல்ல எங்­க­ளுக்கு வேண்­டி­யது. ஐக்­கிய தேசி­யக் கட்­சி ­யதான் நாட்டை முன்­னேற்­றப்­பா­தை­யில் கொண்டு செல்­கி­றது. மக்­க­ளும் இதனை அறி­வார்­கள்.

எதிர்க் கட்­சி­யி­னர் எங்­க­ளுக்கு எதி­ராக பொய்ப் பரப்­பு­ரை­களை மேற்­கொள்­கின்­ற­னர் – என்­ப­து­தான் உண்மை.

http://newuthayan.com/story/08/நாங்கள்-உண்மையில்-ராஜபக்சாக்கள்-குறித்து-அச்சம்-அடைகிறோம்.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.