Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு மாகாண அமைச்சர்களில்- அனந்­தி­யின் பதவி பறி­போ­குமா?

Featured Replies

வடக்கு மாகாண அமைச்சர்களில்- அனந்­தி­யின் பதவி பறி­போ­குமா?

 

Ananthi-Sasitharan-720x440-720x430.jpg

 
 
 

வடக்கு மாகாண அமைச்­சர் டெனீஸ்­வ­ர­னைப் பதவி நீக்­கி­ய­மைக்கு மேல்­நீ­தி­மன்­றம் இடைக் கா­லத் தடை விதித்துத் தீர்ப்பு வழங்­கி­யது.

இத­னை­ய­டுத்து அவர் அமைச்­சுப் பொறுப்­புக்­களை மேற்­கொள்­வ­தற்கு வச­தி­யாக வடக்கு மாகாண மக­ளிர் விவ­கார அமைச்­சர் திரு­மதி அனந்தி சசி­த­ரனே, அமைச்­சுப் பத­வி­யி­லி­ருந்து நீக்­கப்­ப­டு­வார் என்று அர­சி­யல் ­வட்­டா­ரங்­க­ளில் பர­வ­லா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

அர­ச­மைப்­பின் 13ஆவது திருத்­தச் சட்­டத்­துக்கு அமை­வாக, மாகாண அமைச்­ச­ர­வை­யில் ஆகக் கூடி­யது 5 பேர் மாத்­தி­ரமே பதவி வகிக்­க­லாம். ஏற்­க­னவே 5 பேர் பதவி வகிக்­கின்­ற­னர். நீதி­மன்­றத் தீர்ப்­பி­னால் இவர்­க­ளில் ஒரு­வர் பதவி வில­க­வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது.

 

வடக்கு மாகாண மக­ளிர்­வி­வ­கார அமைச்­சர் திரு­மதி அனந்தி சசி­த­ரனே பதவி விலக்­கப்­ப­டக்­கூ­டும் என்று அர­சி­யல் வட்­டா­ரங்­க­ளில் ஊகம் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

தற்­போது அமைச்­சர்­க­ளாக உள்ள க.சர்­வேஸ்­வ­ரன் கல்வி அமைச்சை பிர­தா­ன­மாக வைத்­தி­ருக்­கின்­றார். க.சிவ­நே­சன் விவ­சாய அமைச்­சை­யும், ஜி.குண­சீ­லன் சுகா­தார அமைச்­சை­யும் பிர­தா­ன­மாக வைத்­தி­ருக்­கின்­ற­னர்.

இந்த அமைச்­சுக்­கள் கன­தி­யா­னவை. திரு­மதி அனந்தி சசி­த­ர­னி­டம், கனதி குறை­வான அமைச்சே வழங்­கப்­பட்­டி­ருப்­ப­தால், அவர் பதவி நீக்­கப்­பட்டு அவ­ரது இடத்­துக்கு டெனீஸ்­வ­ரன் செயற்­ப­டு­வார் என்று அர­சி­யல்­ வட்­டா­ரங்­க­ளில் குறிப்­பி­டப்­ப­டு­கின்­றது.

மேலும், வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னுக்­கும், திரு­மதி அனந்தி சசி­த­ர­னுக்­கும் இடை­யில் முறு­கல் நிலை இருப்­ப­தா­க­வும் கூறப்­ப­டு­கின்­றது.

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் அடுத்த முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ராக தனிக் கட்சி ஆரம்­பித்­துக் கள­மி­றங்­கும் பேச்­சுக்­கள் அடி­ப­டு­கின்ற சூழ­லில், தற்­போது தனது அமைச்­ச­ர­வை­யில் கட்­சி­க­ளைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி அமைச்­சர்­க­ளாக உள்­ள­வர்­களை புதிய கட்­சி­யில் இணைத்­துக் கொள்­வ­தற்கு முத­ல­மைச்­சர் விரும்­பு­கின்­றார்.

தற்­போ­தைய அமைச்­ச­ர­வை­யில் கட்சி எத­னை­யும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தாத வகை­யில் திரு­மதி அனந்தி சசி­த­ரனே இருப்­ப­தால், முத­ல­மைச்­சர் அவ­ரைப் பதவி விலக்­கு­வ­தற்­கான வாய்ப்­புக்­கள் அதி­க­மாக இருப்­ப­தாக அர­சி­யல் வட்­டா­ரங்­க­ளில் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இதே­வேளை, வடக்கு மாகாண ஆளு­நர் குரே, நீதி­மன்ற உத்­த­ரவை நாளை காலை­யில் பெற்­றுக் கொண்ட பின்­னர், அமைச்­சர் டெனீஸ்­வ­ர­னு­டன் தொடர்பு கொள்­வ­தா­கத் தெரி­வித்­துள்­ளார்.

http://newuthayan.com/story/09/வடக்கு-மாகாண-அமைச்சர்களில்-அனந்­தி­யின்-பதவி-பறி­போ­குமா.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.