Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக மீனவர்கள் வேட்டையாடப்படும் பிரச்சினை - முதல்வரின் முன்னுக்குப்பின் முரணான அணுகுமுறை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மீனவர்கள் வேட்டையாடப்படும் பிரச்சினை

முதல்வரின் முன்னுக்குப்பின் முரணான அணுகுமுறை

தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினால் தொடர்ந்து சுட்டுக்கொல்லப்பட்டு வருகிறார்கள். நமது கடல் எல்லைக்குள்ளேயே புகுந்து நமது மீனவர்களை சிங்கள வெறியர்கள் படுகொலை செய்யும் போக்கு அண்மைக்காலமாக மிகவும் அதிகரித்துள்ளது. இது குறித்து மீனவர்களும் மற்றும் உள்ள அரசியல் கட்சிகளும் தமிழ்த் தேசிய அமைப்புகளும் கடும் கண்டனங்கள் தெரிவித்த நிலையில் இந்தியப் பிரதமருக்கு கவலைதோய்ந்த கடிதம் எழுதியிருப்பதாக முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்கள் அறிவித்தார். ஆனால் அந்த அறிவிப்பின் மூலம் தமிழர்களின் கொதிப்புணர்வு அடங்கிவிடும் என அவர் எதிர்பார்த்தார். ஆனால் அது மேலும் மேலும் அதிகமானதே தவிர குறையவில்லை. இதைத் தணிப்பதற்காக தி.மு.க.வின் சார்பில் சென்னையில் உள்ள துணைத் தூதுவர் அலுவலகத்திற்கு முன்னால் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அதில் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவரும் கலந்துகொள்வார்கள் என்றும் அறிவித்தார்.

ஆனால் மார்ச் 12ஆம் தேதியன்று இலங்கைத் துணைத் தூதரகத்திற்கு முன்னால் நடத்தப்படவேண்டிய ஆர்ப்பாட்டம் திடீரென இடம் மாற்றம் செய்யப்பட்டு சேப்பாக்கம் அரசு விருந்தினர் விடுதிக்கு முன்னால் நடத்தப்பட்டது. இதற்குரிய காரணங்களும் அறிவிக்கப்படவில்லை. ஆர்ப்பாட்டம் முடிந்ததும் மூத்த அமைச்சர் ஆற்காடு வீராசாமி தலைமையில் அமைச்சர் ஸ்டாலின் உட்படப் பலரைக் கொண்ட தூதுக்குழு ஒன்று இலங்கைத் துணைத் தூதுவர் அலுவலகம் சென்று அவரைச் சந்தித்துப் பேசியது. அதற்குப் பின்னால் அவர்கள் முதலமைச்சரைச் சந்தித்து துணைத் தூதுவர் கூறிய விவரங்களைத் தெரிவித்தார்கள். அதற்குப் பிறகு முதலமைச்சர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த நேர்காண

லில் பின்வருமாறு கூறினார் :

'இலங்கை இராணுவத்தினர் கடலில் ஆய்வு செய்வது என்ற பெயரால் தமிழக மீனவர்களைத் தாக்கியும் படகுகளைக் கடத்தியும் மீனவர்களைச் சுட்டு வீழ்த்தியும் நடத்தியுள்ள வன்முறைச் செயல்களைக் கண்டித்தும் இனியும் அப்படி நடக்காமல் இருப்பதற்கு எச்சரித்தும் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் இலங்கைத் துணைத் தூதரக அதிகாரியைச் சந்தித்து அமைச்சர்கள் மனு அளித்தனர். அப்போது இலங்கைத் தூதர் இதுபோன்ற சம்பவம் குறித்து இந்தியப் பிரதமர் அலுவலகத்தில் இருந்து தகவல்கள் கேட்டு இருப்பதாகவும், இப்படி நடப்பது வருந்தத்தக்கது, ஏற்கத்தக்கது அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார். இத்துடன் இதுபேன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுக்க இந்திய கடற்படையுடன் இணைந்து கூட்டாகச் சோதனை மேற்கொள்ள இலங்கை அரசு ஒப்புக்கொண்டிருப்பதாகவும் அமைச்சர்களிடம் எடுத்துக்கூறியுள்ளார். அது தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்புகிறோம்' என்று குறிப்பிட்டார்.

இச்செய்தி கண்டு அதிர்ச்சியடைந்த தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் 13-03-07 அன்று கீழ்க்கண்ட அறிக்கையை வெளியிட்டார்.

தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்படுவதைத் தடுக்க இந்தியக் கடற்படையினருடன் இணைந்து கூட்டு ரோந்துப் பணியில் ஈடுபட இலங்கை அரசு முன்வந்துள்ளதாகவும் அது தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் என நம்புவதாக முதலமைச்சர் மு. கருணாநிதி கூறியுள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

இலங்கையின் வடகடலில் கடற்புலிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். சிங்களக் கடற்படை அந்தப்பக்கம் செல்லவே அஞ்சுகிறது. எனவே இந்தியக் கடற்படையுடன் கூட்டு ரோந்து நடவடிக்கைத் திட்டத்தைப் பல ஆண்டு காலமாக சிங்கள அரசு வலியுறுத்தி வந்தும் இந்திய அரசு அதற்கு இணங்கவில்லை.

கடற்புலிகளை வெல்ல முடியாத சிங்களக் கடற்படை இத்திட்டத்தின் மூலம் புலிகளுடன் இந்தியக் கடற்படையை மோதவிட முயலுகிறது. இந்த சூழ்ச்சித்திட்டத்தைப் புரிந்துகொள்ளாமல் முதலமைச்சர் மு. கருணாநிதி அதை வரவேற்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இந்தியக் கடற்படை நமது கடல் எல்லையில் ரோந்து சென்று நமது மீனவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டுமே தவிர நமது மீனவர்களைச் சுடும் சிங்களக் கடற்படையுடன் கூட்டுரோந்து போவது நமது மீனவர்களின் பாதுகாப்புக்கு ஏற்றதும் அல்ல. ஈழத்தமிழர்களின் நலனுக்கு உகந்ததும் அல்ல.

சிங்கள அரசின் சூழ்ச்சித்திட்டத்தை முளையிலேயே கிள்ளி எறிய முனையாமல் அதற்கு ஆதரவு தரும் போக்கினைக் கைவிடுமாறு முதலமைச்சரை வேண்டிக்கொள்கிறேன்.

இந்த அறிக்கை 13-03-07 மாலை முரசிலும் இதர மாலை நாளிதழ்களிலும் பரபரப்பாக வெளியானது. இதைக் கண்ட முதல்வர் மு. கருணாநிதி உடனடியாகக் கீழ்க்கண்ட மறுப்பு அறிக்கையை வெளியிட்டார்.

'இந்தியா-இலங்கை இரு நாடுகளுக்கிடையே கடல் எல்லையில் கண்காணிப்புப் பணியை இருநாடுகளும் இணைந்து நடந்த நீங்கள் ஒப்புதல் தந்துள்ளீர்களா என்ற கேள்விக்கு இந்திய அரசு ஒப்புதல் தந்தால் மட்டுமே அது சாத்தியமாகும் என்றேன். நான் ஒப்புதல் தந்துவிட்டதாக செய்திகள் வந்திருந்தால் அது தவறு. இது மத்திய அரசின் முடிவைப் பொறுத்தது. நம்மைப் பொறுத்தவரை மீனவர்கள் பாதுகாக்கப்படவேண்டும்' என்பதுதான் என்று பதிலளித்துள்ளார்.

முதல் நாள் செய்தியாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் அறிவித்த செய்தி அனைத்துப் பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்டிருந்தது. ஓரிரு பத்திரிகை வேண்டுமானால் தவறு செய்யலாமே தவிர எல்லாப் பத்திரிகைகளும் ஒரே மாதிரியான தவறு செய்ய முடியாது. இருநாடுகளும் கூட்டாகக் கடலில் ரோந்து செய்வது என்பது சிங்கள அரசின் சூழ்ச்சித் திட்டம். அதற்கு முதலமைச்சர் இரையானது மிகத்தவறு என்பதை நெடுமாறன் சுட்டிக்காட்டியப் பிறகே முதலமைச்சர் அவசரஅவசரமாக மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார் என்பது வெளிப்படை.

இரு நாடுகளின் கடற்படைகளும் கூட்டாகவும் கண்காணிப்பது என்ற திட்டம் ஏற்க முடியாதது அது தவறானது என்றுத் திட்டவட்டமாகக் கூறுவதற்கு முதலமைச்சர் இன்னமும் தயங்குகிறார். மாறாக மத்திய அரசுதான் இத்தகைய திட்டத்திற்கு ஒப்புதல் தரமுடியும் என்று கூறுகிறார். அப்படியானால் மத்திய அரசு ஒப்புதல் அளித்தால் இவரும் ஏற்றுக்கொள்வாரா? - என்பதை அவர் விளக்கியாக வேண்டும்.

ஏன் எனில் இரண்டு நாட்கள் கழித்து 16-03-07 அன்று இந்தியப் படையின் தென்பகுதி தலைமைத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் ஆதித்யா சிங் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசும்போது இந்திய-இலங்கை கடற்படைகள் கூட்டாகக் கண்காணிப்பது இந்திய மீனவர்களின் நலனுக்கு ஏற்றதே என்று கூறியுள்ளார்.

அதே நாளில் தமிழகக் காவல்துறையைச் சேர்ந்த கடலோரக் பாதுகாப்புக் குழுவும் கடலோரப் பாதுகாப்புப் படையும் இணைந்து கூட்டாகக் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட இருக்கிறார்கள் என்பதை கடலோரப் பாதுகாப்புப் படையின் கிழக்குப் பகுதி தளபதி ராஜேந்திர சிங் அறிவித்தார். இன்னும் 10 நாட்களுக்குள் இந்தக் கூட்டு கண்காணிப்புத் தொடங்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

19-03-2007 அன்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி பின்வருமாறு அறிவித்தார்:

'தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்தியா-இலங்கை கடற்படை கூட்டுக் கண்காணிப்புக் குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. இந்தத் திட்டம் பரிசீலனையில்தான் உள்ளது என்று அறிவித்துள்ளார்.

அதே நாளில் இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் ரோகித பொகலகம டில்லிக்கு வந்து வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து ஒரு மணிநேரம் ஆலோசனை நடத்தினார். இந்தச் சந்திப்பின் போது இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவசங்கரமேனன் இலங்கை வெளியுறவுத்துறைச் செயலாளர் வலித கொகனா மற்றும் மூத்த அதிகாரிகள் உடன் இருந்தனர். இருநாட்டுக் கடற்படையினரும் ஒருங்கிணைந்து ரோந்துப் பணியினை மேற்கொள்ள வேண்டும் என்பதை இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் வலியுறுத்தியதாக இந்திய நாளிதழ்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

அதே நாளில் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணியையும் ரோகித பொகலகம சந்தித்துப் பேசியுள்ளார். 'இருநாட்டுக் கடற்படையினரும் ஒருங்கிணைந்த ரோந்து பணிகளை' மேற்கொள்வது குறித்து அவர் விவாதித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுவரை கூட்டு ரோந்து என்ற வார்த்தையைப் பயன்படுத்தி வந்தவர்கள் முதல் முறையாக ஒருங்கிணைந்த ரோந்து நடவடிக்கை என்ற புதிய வார்த்தையை பயன்படுத்தியிருப்பது பெரும் கேள்விக்குறியை எழுப்பியுள்ளது. இதற்குப் பின்னணி என்ன என்பது குறித்து ஆழமான சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இலங்கை அரசு நீண்ட காலமாக வலியுறுத்தி வரும் கூட்டுக் கண்காணிப்புத் திட்டம் என்பது ஒரு சூழ்ச்சித் திட்டம் ஆகும். இலங்கையின் வட கடலில் கடற்புலிகளின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது. சிங்களக் கடற்படையினர் அப்பகுதிக்குள் நுழைவதற்கே அஞ்சுகின்றனர். இந்நிலையில் கூட்டுக் கண்காணிப்பு என்ற பெயரில் இந்தியக் கடற்படையைக் கொண்டு கடற்புலிகளை அழிக்க இலங்கை திட்டமிடுகிறது. தொடர்ந்து இந்தியாவுக்கு வருகைதரும் சிங்களத் தலைவர்கள் இத்திட்டத்தை ஏற்கும்படி இந்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அதை ஏற்பதற்கு இந்தியா இன்னமும் தயங்கி வருகிறது.

தனது சூழ்ச்சித் திட்டத்திற்கு இந்தியாவை இணங்க வைப்பதற்கு நேரடியான முயற்சிகள் மட்டுமல்ல, மறைமுகமான முயற்சிகளிலும் சிங்கள அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. கடற்புலிகள் வலிமையாக இருப்பதின் மூலம் இந்தியாவுக்குப் பேரபாயம் ஏற்படும் என்ற கூக்குரலை சிங்கள ஊடகங்களும் இந்தியாவில் உள்ள பார்ப்பன ஊடகங்களும் தொடர்ந்து எழுப்பி வருகின்றன. இதன் மூலம் இந்திய அரசை கூட்டு ரோந்து திட்டத்திற்கு ஒப்புக்கொள்ள வைக்க முடியும் என சிங்கள அரசு நம்புகிறது.

நார்வே நாட்டின் சமரச முயற்சியின் விளைவாக இலங்கையில் சிங்கள இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே போர்நிறுத்த உடன்பாடு கையொழுத்திடப்பட்டது. அதற்கிணங்க இராணுவக் கட்டுப்பாடு எவை என்பதும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி எவை என்பதும் திட்டவட்டமாக முடிவுசெய்யப் பட்டன. அதைப் போல கடல் பகுதியிலும் இருதரப்பினரின் ஆதிக்கத்திற்குட்பட்டவை எவைஎவை என்பதும் முடிவு செய்யப்படவேண்டும் என்று நார்வே கூறியது. அதை சிங்கள அரசு பரிசீலனை செய்வதற்கு முன்பாகவே இந்து நாளிதழ் அதைக் குறித்து தலையங்கம் தீட்டியது. கடற்புலிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காகவே நார்வே இத்திட்டத்தைக் கூறுகிறது. இதை ஏற்றால் இந்தியக் கடற்படைக்கு பெரும் அறைகூவலாக கடற்புலிகள் மாறுவார்கள். இந்த விஷயத்தில் இந்திய அரசு சிங்கள அரசுக்கு ஒத்துழைப்புத் தந்து கடற்புலிகளின் அபாயத்தை ஒழிக்க வேண்டும் என்று இந்து நாளிதழ் பொரிந்து தள்ளியது.

உலகின் ஐந்தாவது வலிமை வாய்ந்த கடற்படை இந்தியக் கடற்படை. இந்தக் கடற்படைக்கு கடற்புலிகளால் ஆபத்து நேரும் என கூறுவது எள்ளி நகையாடத்தக்கது. மேலும் விடுதலைப் புலிகள் திரும்பத் திரும்ப இந்தியாவின் நலன்களுக்கு எதிராக தாங்கள் ஒருபோதும் செயல்படமாட்டோம் என்று அறிவித்துள்ளனர். இந்தப் பின்னணியில் கூட்டுக் கண்காணிப்பத் திட்டத்தை நாம் அணுகவேண்டும். தங்களால் வெல்ல முடியாத கடற்புலிகளை இந்தியக் கடற்படையைக் கொண்டு வீழ்த்த வேண்டும் என்பதே சிங்கள இனவெறியர்கள் மற்றும் அவர்களின் இந்தியக் கைக்கூலிகளான இந்து நாளிதழ் போன்றவர்களின் திட்டமாகும். இந்தத் திட்டத்திற்கு தெரிந்தோ தெரியாமலோ முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்கள் ஆதரவு தந்தது மிகப்பெரிய தவறாகும். இந்தத் திட்டம் தங்கள் பரிசீலனையில் இருப்பதாக மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி அறிவித்தி ருப்பதை கவனத்தில் கொண்டு அதற்குக் கடும் எதிர்ப்பினை முதலமைச்சர் தெரிவிக்க வேண்டும் அவ்வாறு செய்வதின் மூலமே தான் இழைத்த தவறுக்கு பரிகாரம் செய்ய முடியும்.

-தென்செய்தி

Rightly said. Unfortunately the Tamil Nadu tamils have no time to think. They are busy with "Sivaji" release and world cup cricket.

"Enru thaniyum intha suthanthira thagam, Enru madiyum engal adimayin (Tamil nadu Tamils) Moham"

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"........தங்களால் வெல்ல முடியாத கடற்புலிகளை இந்தியக் கடற்படையைக் கொண்டு வீழ்த்த வேண்டும் என்பதே சிங்கள இனவெறியர்கள் மற்றும் அவர்களின் இந்தியக் கைக்கூலிகளான இந்து நாளிதழ் போன்றவர்களின் திட்டமாகும். இந்தத் திட்டத்திற்கு தெரிந்தோ தெரியாமலோ முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்கள் ஆதரவு தந்தது மிகப்பெரிய தவறாகும........"

-தென்செய்தி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேற்றும் 4 இந்திய மீனவர்களை இலங்கை அரசு சுட்டது. இன்னும் சுடும். சாவது அப்பாவி தமிழக மீனவர்கள். ஆனால் இந்தியா இது பற்றிக் கவலைப்படாது. ஆனால் இலங்கை,அரசுடன் கூட்டு ரோந்து பற்றியே நினைக்கும். பாவங்கள் அப்பாவி மீனவர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

What Tamil font you are using?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

What Tamil font you are using?

unicode

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.