Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். நக­ரின் அபி­வி­ருத்­திக்­கான -நிதி­யில் ஒரு தொகுதி திரும்­பி­யது!!

Featured Replies

யாழ். நக­ரின் அபி­வி­ருத்­திக்­கான -நிதி­யில் ஒரு தொகுதி திரும்­பி­யது!!

 

 

யாழ்ப்­பாண நகர அபி­வி­ருத்­தித் திட்­டத்­துக்கு ஒதுக்­கப்­பட்ட 55 மில்­லி­யன் அமெ­ரிக்க டொலர் நிதி­யில் 7.9 மில்­லி­யன் அமெ­ரிக்க டொலர் கண்டி மாவட்­டத்­துக்கு மாற்­றப்­பட்­டுள்­ளது.

நக­ரில் உள்ள குளங்­களை மறு­சீ­ர­மைப்­ப­து­டன் அவற்­றைச் சுற்றி மக்­கள் பயன்­ப­டுத்­தக்­கூ­டிய அமை­வி­டங்­களை உரு­வாக்­கு­வதே இந்­தத் திட்­டம். அதன் பரீட்­சார்த்த நட­வ­டிக்­கை­யாக இரு குளங்­களை மறு­சீ­ர­மைத்து சுற்­று­வட்­டத்­தில் பொழு­து­போக்­கி­டங்­களை அமைப்­ப­தற்­காக 7.9 மில்­லி­யன் அமெ­ரிக்க டொலர் நிதி ஒதுக்­கப்­பட்­டி­ருந்­தது. அந்த நிதியே இப்­போது வேறு நக­ரத்­திற்­குத் திருப்­பப்­பட்­டுள்­ளது.

மூலோ­பாய நக­ரங்­க­ளின் அபி­வி­ருத்தி என்­கிற உலக வங்­கி­யின் நிதி உத­வி­யி­லான திட்­டம் கண்டி, காலி, யாழ்ப்­பா­ணம் ஆகிய மூன்று இடங்­க­ளில் இடம்­பெ­று­கின்­றன. இந்த மூன்று நக­ரங்­க­ளி­லுமே திட்­டத்­தைச் செயற்­ப­டுத்­தும் வேகம் திருப்­தி­க­ர­மாக இல்லை என்று உலக வங்கி தனது மீளாய்வு அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளது.

 

அதி­லும் யாழ்ப்­பா­ணமே ஆகப் பின்­தங்­கி­யுள்­ளது. ஒதுக்­கப்­பட்ட நிதி­யில் 3.7 சத­வீ­தம் மட்­டுமே இது­வ­ரை­யில் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

திட்­டத்­திற்கு 2016ஆம் ஆண்டு மே மாதம் உலக வங்கி அனு­மதி வழங்­கி­யி­ருந்­தது. அதே­யாண்டு ஒக்­ரோ­பர் மாதம் திட்­டம் தொடங்­கப்­பட்­டது. மேல்­மா­காண மற்­றும் பெரு­ந­கர அபி­வி­ருத்தி அமைச்­சி­னால் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது.

இதன் கீழ் யாழ். நக­ரப் பகு­தி­யி­லுள்ள 48 குளங்­களை தூர்­வாரி, ஆழப்­ப­டுத்தி முழு­மை­யாக மறு­சீ­ர­மைக்க திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தது. குளங்­களை ஆழப்­ப­டுத்தி நீரைச் சேக­ரிப்­ப­தற்­காக இந்­தத் திட்­டம் உள்­வாங்­கப்­பட்­டி­ருந்­தது.

48 குளங்­க­ளை­யும் எவ்­வ­ளவு தூரம் ஆழப்­ப­டுத்­த­லாம் என்­பது உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்­கள் தொடர்­பில் ஆய்­வுப் பணி­க­ளும் நடத்­தப்­பட்­டன. இதன் அடுத்த கட்­டப் பணி­கள் கடந்த ஆண்டு நடுப் பகு­தி­யில் தொடங்­கப்­பட்­டி­ருக்­க வேண்­டும்.

ஆனால், அதி­கா­ரி­கள் அசி­ரத்­தை­யால் உரிய காலப் பகு­தி­யில் அவை ஆரம்­பிக்­கப்­ப­ட­வில்லை. இந்த ஆண்டு மே மாதம் நடை­பெற்ற, நகர அபி­வி­ருத்­தித் திட்ட மீளாய்­வின்­போது குளங்­களை மறு­சீ­ர­மைத்­த­லில் உரிய முன்­னேற்­றம் இன்­மை­யால் யாழ்ப்­பா­ணத்­துக்கு ஒதுக்­கப்­பட்ட 7.9 மில்­லி­யன் அமெ­ரிக்க டொலர் நிதி, கண்டி நகர அபி­வி­ருத்­தித் திட்­டத்­துக்கு மாற்­றப்­பட்­டுள்­ளது.

இந்­தத் தாம­தத்­திற்­கும் நிதித் திரும்­பு­கைக்­கும் கொழும்பு அரச அதி­கா­ரி­க­ளின் செயற்­பா­டு­களே கார­ணம் என்­றும், இந்­தத் திட்­டத்­தின் கீழ் எல்­லா­வற்­றுக்­கும் கொழும்பு அதி­கா­ரி­க­ளின் கைக­ளையே தாம் பார்த்­தி­ருக்க வேண்­டி­ய­தாக இருக்­கின்­றது என்­றும் யாழ்ப்­பா­ணத்­தில் உள்ள அதி­கா­ரி­கள் கூறு­கின்­ற­னர்.

திட்­டம் தாம­த­ம­டை­வ­தற்­கும் யாழ்ப்­பா­ணத்­தில் உள்ள அதி­கா­ரி­க­ளுக்­கும் தொடர்­பில்லை என்­றும் கொழும்­பில் உள்ள அதி­கா­ரி­கள் உரிய நேரத்­தில் கட­மை­களை நிறை­வேற்­றி­னால் திட்­டத்தை வேக­மாக முன்­னெ­டுக்­க­லாம் என்­றும் அவர்­கள் சுட்­டிக்­காட்­டி­னர்.

http://newuthayan.com/story/10/யாழ்-நக­ரின்-அபி­வி­ருத்­திக்­கான-நிதி­யில்-ஒரு-தொகுதி-திரும்­பி­யது.html

  • தொடங்கியவர்

யாழ். நகர அபி­வி­ருத்­தித் திட்ட- தாமதத்தைக் கண்­கா­ணி­யுங்­கள்!!

 
 

மூலோ­பாய முக்­கி­யத்­து­வம்­மிக்க நக­ரங்­களை அபி­வி­ருத்தி செய்­வது என்­கிற திட்­டத்­தின் கீழ் கண்டி, காலி நக­ரங்­க­ளு­டன் யாழ்ப்­பா­ண நக­ரத்­தை­யும் அபி­வி­ருத்தி செய்­வ­தற்­கான திட்­டங்­கள் வகுக்­கப்­பட்­டன. 2016ஆம் ஆண்டு ஒக்­ரோ­பர் மாதத்­தில் பணி­க­ளும் ஆரம்­பிக்­கப்­பட்­டன.

யாழ்ப்­பா­ணம் நக­ரத்தை அழ­கு­ப­டுத்­து­வ­து­டன், துவிச்­சக்­கர வண்­டி­கள் ஓடு­வ­தற்­கான தனிப் பாதை மற்­றும் நடை­பா­தை­யு­டன் கூடி­ய­தாக வீதி­களை அபி­வி­ருத்தி செய்­வ­தும் இந்­தத் திட்­டத்­தில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது.

நக­ரி­னுள் போக்­கு­வ­ரத்து நெரி­ச­லைக் குறைக்­கும் நோக்­கு­டன் நக­ருக்­கான சுற்­று­வட்­டப் பாதை ஒன்றை உரு­வாக்­கு­வ­தும் கொடி­கா­மம் – பருத்­தித்­துறை வீதி, பொன்­னாலை – யாழ்ப்­பா­ணம் வீதி என்­ப­வற்­றைத் திருத்­தி­ய­மைப்­பது என்­ப­வையும் இந்­தத் திட்­டத்­திற்­குள் அடக்­கம்.

 

யாழ். நக­ரத்­தின் தோற்­றத்தை மாற்­று­வ­து­டன், புதிய நக­ர­மாக எதிர்­கா­லத் தேவை­க­ளை­யும் நிறை­வேற்­றக்­கூ­டி­ய­தாக அதனை நவீ­ன­ம­யப்­ப­டுத்­து­வது இந்­தத் திட்­டத்­தின் வழி கிடைக்­கக்­கூ­டிய மிகச் சிறந்த பயன். உலக வங்கி இந்­தத் திட்­டத்­திற்­கான முதன்மை நிதி வழங்­கு­ந­ராக இருக்­கின்­றது.

2021ஆம் ஆண்­டுக்­குள் இந்­தத் திட்­டம் நடை­மு­றைப்­ப­டுத்தி முடிக்­கப்­ப­ட­வேண்­டும். கிட்­டத்­தட்ட 2 வரு­ டங்­கள் முடிந்­து­விட்­டன. ஆனால், ஒட்­டு­மொத்­த­மா­கவே இந்­தத் திட்­டம் மிக­வும் மந்­த­க­தி­யில் முன்­னெ ­டுக்­கப்­ப­டு­ கின்­றது என்று தனது இடைக்­கால மீளாய்வு அறிக்­கை­யில் உலக வங்கி கூறி­யி­ருக்­கின்­றது.

அதி­லும், மிக மோச­மான நிலை யாழ்ப்­பா­ணத்­தையே சாரும். இந்­தத் திட்­டத்­தின் கீழ் இது­வ­ரை­யில் 5.7 சத­வீ­த­மான 3.15 மில்­லி­யன் அமெ­ரிக்க டொலர் நிதியே செல­வி­டப்­பட்­டுள்­ளது. கண்டி, காலி நக­ரங்­க­ளு­டன் ஒப்­பி­டும்­போது ஆகக்­கு­றைந்­த­ளவு நிதி யாழ்ப்­பா­ணத்­தி­லேயே செல­வி­டப்­பட்­டி­ருக்­கி­றது. யாழ்ப்­பா­ணத்தை அபி­வி­ருத்தி செய்­வ­தற்­கான இந்­தத் திட்­டத்­திற்கு செல­வி­டப்­பட வுள்ள மொத்த நிதி 55 மில்­லி­யன் அமெ­ரிக்க டொலர்.

திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது மேல்­மா­காண பெரு­ந­கர அபி­வி­ருத்தி அமைச்சு. அந்த அமைச்­சின் திட்­ட­மு­கா­மைத்­து­வப் பிரிவே இந்­தத் திட்­டத்தை கையாள்­கின்­றது. அந்­தத் திட்­ட­மு­கா­மைத்­து­வப் பிரி­வின் அலகு யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கத்­தில் இயங்­கு­கின்­றது.

2016ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி உலக வங்கி திட்­டத்­துக்கு அனு­மதி வழங்­கி­யது. அதே­யாண்டு ஒக்­ரோ­பர் மாதத்­தில் திட்­டம் ஆரம்­பிக்­கப்­பட்­டது. ஆனால் பணி­கள் துரி­த­மாக நடக்­க­வில்லை.

அமைச்­சர் சம்­பிக்­க­வின் கீழ் வரும் இந்­தத் திட்­டத்­தைச் செயற்­ப­டுத்­து­வ­தில் காணப்­ப­டும் தாம­தத்­திற்கு பொருத்­த­மான செயற்­றி­றன் உள்ள திட்­டப் பணிப்­பா­ளர் ஒரு­வர் இல்­லா­தி­ருப்­ப­தும், எல்லா முடி­வு­க­ளும் கொழும்­பி­லேயே எடுக்­கப்­ப­ட­வேண்­டி­யி­ருப்­ப­தும், ஆலோ­ச­கர்­கள் மற்­றும் ஒப்­பந்­த­கா­ரர்­க­ளின் மோச­மான செயற்­பா­டு­கள், தேவை­யான இடங்­க­ளில் காணி­க­ளைச் சுவீ­க­ரிப்­ப­தில் காட்­டப்­ப­டும் தாம­தம், திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான தகு­திக்­கு­றைவு என்­பன எல்­லாம் திட்­டம் தாம­த­மா­வ­தற்­குக் கார­ணம் என்று உலக வங்கி தனது மீளாய்­வில் தெரி­வித்­துள்­ளது.

யாழ்ப்­பாண நக­ரத்­திற்கு பெரு­ம­ளவு மாற்­றத்­தைக் கொண்டு வரக்­கூ­டிய இந்­தத் திட்­டத்­தைச் செயற்­ப­டுத்­து­வ­தில் காணப்­ப­டும் இந்­தத் தாம­தம் குறித்து இங்­குள்ள அர­சி­யல்­வா­தி­கள் எவரும், அவர்­கள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளாக இருந்­த­தா­லும் சரி மாகாண சபை மற்­றும் நகர சபை­ உறுப்பினர்க ளாக இருந்­தா­லும் சரி அக்­க­றை­யோடு குரல் எழுப்பினார்கள் என்று கூறமு­டி­ய­வில்லை.

போரால் பாதிக்­கப்­பட்ட பகு­தியை மீளக்­கட்­டி­யெ­ ழுப்­பு­வ­தற்கு வழக்­கத்­தி­லும் பார்க்க இரு மடங்கு சக்தி செல­வி­டப்­ப­ட­வேண்­டும். இந்­தத் திட்­டத்­தின் தாம­தத்­தில் மாகாண, மாந­கர சபை­க­ளின் பங்­க­ளிப்பு இல்லை என்­றா­லும், திட்­டத்தை முன்­ன­கர்த்­திச் செல்லப்படா­மல் இருப்­ப­தற்­கான அக்­க­றையை அவர்­கள் காட்­டா­மல் இருப்­ப­தும் தவ­று­தான். திட்­டச் செயற்­பா­டு­களை விரை­வு­ப­டுத்­து­வ­தற்கு வேண்­டிய அனைத்து அழுத்­தங்­க­ளை­யும் ஆத­ர­வை­யும் உட­ன­டி­யாக வழங்­கு­வ­தற்கு அனைத்­துத் தரப்­பி­ன­ரும் முன்­வ­ர­வேண்­டும்.

http://newuthayan.com/story/13/யாழ்-நகர-அபி­வி­ருத்­தித்-திட்ட-தாமதத்தைக்-கண்­கா­ணி­யுங்­கள்.html

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.