Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வித்தியா முதல் றெஜினா வரை....

Featured Replies

வித்தியா முதல் றெஜினா வரை....

a-9ce548895fec120136b6470185ea44c43acedc94.jpg

 

சமு­தாய சம்­பி­ர­தா­யங்­களை மூட்டை கட்­டி­விட்டு, நாக­ரிக அலங்­கோ­லங்­களின் அவஸ்­தைக்குள் பலர் தங்­களைத் தாங்­க­ளா­கவே தள்ளிக் கொண்­டி­ருக்­கி­றார்கள் அல்­லது பிறரால் தள்­ளப்­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றார்கள். இவற்றின் விளை­வுகள் சம­கா­லத்தில் பல சமூகப் பிரச்­சி­னை­களை உரு­வாக்­கி­யுள்­ளது. சமூக விரோதச் செயற்­பா­டு­க­ளையும் அவை தூண்­டி­யி­ருக்­கின்­றன.

ஆன்­மீக ரீதியில் உள்­ளத்தை அடக்கி ஆள­வேண்­டிய ஆற­றிவு கொண்ட மனிதன் உள்­ளத்தால் அடக்கி ஆளப்­பட்டுக் கொண்­டி­ருக்­கிறான். ஒரு சில வினா­டித்­து­ளி­களில் எழு­கின்ற உணர்ச்சிக் கோளா­று­க­ளுக்கு அடி­மை­யாகி, அதன் வழியே பலரின் வாழ்க்­கையில் விளை­யாடி, அவர்­களும் அழிந்து மற்­ற­வர்­க­ளையும் அழித்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள். இத்­த­கைய உள்­ளங்­களை உருக்கும் நிகழ்­வுகள் நாளுக்கு நாள் அதி­க­ரித்துக் கொண்டே செல்­கி­றது.

நவீன சாத­னங்­களின் வழி தவ­றிய பயன்­பா­டு­க­ளும் நாக­ரிக மோகத்­திற்குள் தள்­ளப்­பட்­டுள்ள வாழ்க்கை முறை­களும், மக்­க­ளி­டையே ஆசை­க­ளையும், தேவை­க­ளையும் அதி­க­ரித்து விட்­டன. ஆன்­மீக வழி­மு­றை­க­ளி­லி­ருந்து விலகி உணர்ச்­சி­க­ளுக்கு அடி­மைப்­படும் அநா­க­ரிக வாழ்க்கை முறை, பொழு­து­போக்­குகள். ஆசைகள், கன­வுகள் என்­பன பகுத்­த­றிவை முட­மாக்கி மனித விழு­மியப் பண்­பு­களை அழித்துக் கொண்­டி­ருக்­கி­றது. இதனால், பலர் மனிதப் பண்­பு­க­ளி­லி­ருந்து விலகி மிருக பண்­பு­க­ளோடு செயற்­ப­டு­கின்­றனர். அவ்­வாறு செயற்­ப­டு­கின்ற­வர்­களின் கோர உணர்ச்­சி­க­ளுக்கு பல சிறுவர் சிறு­மிகள் சம­கா­லத்தில் பலி­யாகிக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

இவ்­வாறு அண்­மைக்­கா­ல­மாக பலி­யா­ன­வர்களின் வரி­சையில் 2015இல் பாலியல் கொடு­மைக்கு இரை­யான இளம்­யு­வ­திதான் புங்­கு­டு­தீவு மகா வித்­தி­யா­லய மாணவி வித்­தியா. இந்த வித்­தியா மாத்­தி­ர­மல்ல, வித்­தியா போன்ற பல பள்ளி மாண­வி­களும், பருவ மங்­கையர்­களும் நாளுக்கு நாள் வன்­நெஞ்­சம்­கொண்­டோரின் பாலி­யல் பசி, பழி­வாங்கல் வன்­னெண்­ணங்­க­ளுக்­காக பலி­யா­கி­ வரும் தொடரில் கடந்த 26ஆம் திகதி யாழ் சுழி­புரம் காட்­டுப்­புலம் அ.த.க. பாட­சாலை மாண­வி­யான ரெஜினா எனும் ஆறு வய­தே­யான சிறுமி கழுத்து நெரிக்­கப்­பட்டு கொலை செய்­யப்­பட்ட நிலையில் அப்­பி­ர­தேச கிண­றொன்­றி­லி­ருந்து சட­ல­மாகக் கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்ளார்.

2015இல் பண ஆசைக்­காக கூட்டுப் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உட்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்ட வித்­தியா முதல் கடந்த 26ஆம் திகதி கழுத்தில் அணிந்­தி­ருந்த தங்க ஆப­ர­ணத்தின் மீது கொண்ட ஆசை அல்­லது பாலியல் பசி அல்­லது பழி­வாங்கல் என்ற கார­ணங்­க­ளுக்­காக கழுத்து நெரித்து கொல்­லப்­பட்­டுள்ள ரெஜினா வரை பல சிறு­வர்கள் மன வக்­கி­ரக்­கா­ரர்­க­ளினால் படு­கொலை செய்­யப்­பட்­டி­ருக்­கி­றார்கள் என்­பது மனி­தா­பி­மானம் கொண்ட மக்­களை கண்­ணீ­ரி­லும் செந்­நீ­ரிலும் ஆழ்த்­தி­யி­ருப்­பது மாத்­தி­ர­மின்றி பல்­வேறு மட்­டங்­க­ள­ிலு­மி­ருந்து இக்­கொ­டூர படு­கொலை­க­ளுக்­கெ­தி­ரான கண்­ட­னங்­க­ளையும் வெளிப்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கி­றது.

 

 

 

சிறுவர் படு­கொ­லை­களின் எதி­ரொ­லிகள்

புங்­கு­டு­தீவு மகா வித்­தி­யா­லய மாணவி வித்­தியா கூட்டுப் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு ஆளாகி, படு­கொலை செய்­யப்­பட்டு சடலம் கண்­டெ­டுக்­கப்­பட்ட அந்த நாள் படு­கொ­லைக்கு நீதி வேண்டி இன, மத, மொழி, பிர­தேச வேறு­பா­டுகள் இன்றி, வடக்கு கிழக்கு உட்­பட மலை­யகம் அடங்­க­லாக பல பிர­தே­சங்­களில் எழுச்சிக் கோஷங்­க­ளும் ஆர்ப்­பாட்­டங்­களும் கண்­டனப் பேர­ணி­களும் ஹர்த்­தால்­களும் இடம்­பெற்­றன. இப்­ப­டு­கொலைச் சம்­ப­வ­மா­னது அவ்­வரு­டத்தில் மக்கள் எல்­லோ­ரி­னாலும் கண்­டிக்­கத்­த­க்கதொரு விட­ய­மாக வித்­தி­யாவின் படு­கொலை­யா­னது மக்­க­ளி­டையே மக்கள் மயப்­ப­டுத்­தப்­பட்­டது.

இப்­ப­டு­கொ­லைக்­கெ­தி­ரா­ன மக்­களின் போராட்­டங்­களைத் தொடர்ந்து படு­கொ­லை­யுடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் கைது செய்­யப்­பட்டு அவர்­க­ளுக்கு எதி­ராக வழக்குத் தொட­ரப்­பட்­டது.

யாழ். மேல் நீதி­மன்றில் ட்ரயல் அட்பார் முறையில் தொட­ரப்­பட்ட இக்­கொலை வழக்கில் குற்­ற­வா­ளி­க­ளாக இனங்­கா­ணப்­பட்ட சுவிஸ் குமார் உள்­ளிட்ட ஏழு பேருக்கு யாழ். மேல் நீதி­மன்­றினால் கடந்த வருடம் மரண தண்­டனை விதிக்­கப்­பட்டு தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது.

இதே­போன்று கடந்த 2015இல் நீர்­கொழும்பு படல்­கம அக்­க­ரங்க பிர­தே­சத்தைச் சேர்ந்த 5 வயது சிறு­மி­யாக சேயா செதவ்மி மிகக் கொடூ­ர­மான பாலியல் வன்­பு­ணர்­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்டு கொலை செய்­யப்பட்ட சம்ப­வத்­திற்­கெ­தி­ராக நீதி வேண்டி தென்­னி­லங்­கையின் பல்­வேறு பிர­தேசங்­க­ளிலும் மக்கள் மய­ப்­ப­டுத்­தப்­பட்ட ஆர்ப்­பாட்­டங்­களும் பேர­ணி­களும் இடம்­பெற்­றன.

இக்­கொ­லை­யுடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் கைது செய்­யப்­பட்டு அவர்­க­ளுக்கு எதி­ராக வழக்கு தொடர்ந்த நிலையில் கடந்த 2016இல் இக்­கொலை வழக்கில் குற்­ற­வா­ளி­யாக இனங்­கா­ணப்­பட்ட சமன் ஜய­தி­ல­க­வுக்கு நீர்­கொழும்பு நீதி­மன்றம் மர­ண­தண்­டனை வழங்கி தீர்ப்­ப­ளித்­தது. இவ்­வாறு நாளுக்கு நாள் சிறு­வர்கள் துஷ்­பி­ர­யோகத்துக்கு உள்­ளா­கி வரு­கின்ற போதிலும் ஒரு சில சிறுவர் துஷ்­பி­ர­யோக அல்­லது படு­கொலைச் சம்­ப­வங்கள் குறித்து அப்­பி­ர­தேச மக்­க­ளி­னதும் சமூ­கத்தின் ஏனை­ய­வர்­க­ளி­னதும் கவனம் அதிகம் செலுத்­தப்­ப­டு­வ­தையும் சுட்­டிக்­காட்ட வேண்டும்.

இவ்­வா­றான படு­கொலைத் தொட­ரில்தான் கடந்த 26ஆம் திகதி படு­கொலை செய்­யப்­பட்­டுள்ள சிறு­மி றெஜி­னாவின் படு­கொ­லையும் மக்­களின் கவ­னத்தை அதிகம் ஈர்த்த­தாக மாத்­தி­ர­மின்றி கண்­ட­னங்­க­ளையும் நீதிக்­கான கோரிக்­கை­க­ளையும் ஆர்ப்­பாட்­டங்­க­ளையும் மேற்­கொள்ளச் செய்­துள்­ளது.

பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் முதல் பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் வரை இக்­கொ­லை­யுடன் தொடர்­பு­பட்­ட­வர்­க­ளுக்கு பகி­ரங்கத் தண்­டனை வழங்க வேண்­டு­மெ­னவும் சட்­டத்­தையும் நீதி­யையும் நிலை­நாட்­டு­கின்­ற­வர்கள் தங்­க­ளது கட­மை­களை முறை­யா­கவும் நீதி­யா­கவும் மேற்­கொள்ள வேண்­டு­மெ­னவும் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளதைச் சுட்­டிக்­காட்ட வேண்­டி­யுள்­ளது.

வித்­தியா முதல் றெஜினா வரை வன்­நெஞ்சம் கொண்­ட­வர்­களின் பாலியல் மற்றும் பழி­வாங்கல் செயற்­பா­டு­க­ளுக்­காக படு­கொலை செய்­யப்­பட்­டுள்ள சம்­ப­வங்கள் மக்கள் மனங்­களை வெகு­வாகப் பாதி­த்திருப்­பதை இச்­சி­று­வர்­களின் படு­கொலை­களைத் தொடர்ந்து இடம்­பெ­று­கின்ற ஆத­ரவு எதி­ரொ­லிகள் புடம்­போ­டு­கின்­றன.

ஆனால், இவ்­வெ­தி­ரொ­லிகள் அர்த்­த­புஷ்­டி­யாக்­கப்­பட வேண்­டு­மானால், இவ் விழிப்­பு­ணர்­வுகள் தொடர்ச்­சி­யாக விழிப்­பூட்­டப்­ப­டுத்­தப்­பட வேண்­டு­மானால். பாலியல் துஷ்­பி­ர­யோ­கங்கள் ஏன் ஏற்­ப­டு­கின்­றன? அவற்றை எத்­த­தைய செயற்­பா­டுகள் ஊக்­கு­விக்­கின்­றன. இத்­த­கைய சமூக விரோதச் செயற்­பா­டு­களை எவ்­வாறு தடுக்­கலாம்? யாரார் இவற்றில் ஈடு­ப­டு­கி­றார்கள்? அதற்­கான விழிப்­பு­ணர்­வு­களை எவ்­வாறு ஏற்­ப­டுத்­தலாம் என்றும் சிந்­திப்­பதும் அதற்­காகக் கூட்­டாகச் செயற்­ப­டு­வதும் காலத்தின் தேவை­யா­க­வுள்­ளது.

பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் ஆர்ப்­பாட்டம் செய்­கி­றார்கள் நாமும் அவற்றை மேற்­கொள்வோம் என்றோ, அந்தப் பாட­சாலை மாண­வர்கள் வீதியில் இறங்கி மனித சங்­கிலிப் போராட்டம் செய்­கி­றார்கள் நமது பாட­சாலை மாண­வர்­க­ளையும் வீதிக்கு இறக்கி போராட்டம் நடத்­துவோம் என்றோ, அந்த ஊரில் ஹர்த்தால் கத­வ­டைப்பு செய்­கி­றார்கள் நமது ஊரிலும் ஹர்த்தால் கத­வ­டைப்­புக்­களைச் செய்வோம் என்றோ அவர் அறிக்கை விட்­டி­ருக்­கிறார் நாமும் அறிக்கை விடுவோம் என்றோ நினைத்து மேற்­கொள்ளும் செயற்­பா­டு­க­ளினால் வித்­தி­யாக்­க­ளையோ, சேயாக்­க­ளையோ, றெஜி­னாக்­க­ளையோ காப்­பாற்ற முடி­யாது.

மாறாக, இப்­ப­டு­கொ­லை­களைக் கண்­டித்து அதற்கு நீதி வேண்டி இடம்­பெ­று­கின்ற போராட்­டங்­களும் ஊர்­வ­லங்­களும் உணர்வு பூர்­வ­மா­கவும் தீர்வை நோக்­கி­ய­தா­கவும் விழிப்­பு­ணர்­வு­மிக்­க­தா­கவும் மேற்­கொள்­ளப்­ப­டும்­போ­துதான் வித்­தி­யாக்­க­ளையும் சேயாக்­க­ளையும் றெஜி­னாக்­க­ளையும் காப்­பாற்ற முடியும்.

இப்­ப­டு­கொலை எதி­ரொ­லிகள் அர­சியல் வாதி­க­ளுக்கு அர­சியல் இலாபம் தேடும் ஒரு மூல­மாக கையி­லெ­டுக்­கப்­படக் கூடாது என்ற கருத்­துக்­களும் வெளிவரத் தொடங்­கி­யி­ருப்­ப­தையும் அவ­தா­னிக்க முடி­கி­றது. ஒரு சிலர் குழம்­பிய குட்­டையில் தமது இலக்­கு­களை அடைந்து கொள்­வ­தற்கு முயற்­சிப்­பார்கள் என்­ப­தையும் அதற்கு படு­கொ­லைக்கு நீதி வேண்டி ஒலிக்­கின்ற குரல்­களும் செயற்­பா­டு­களும் அமைந்து விடக் கூடாது என்­ப­திலும் மக்கள் கூடிய கவனம் செலுத்த வேண்­டு­மென்­பதும் முக்­கி­யத்­து­வமிக்­க­வை­க­ளாகும்.

தமது எதிர்ப்­புக்­க­ளையும் ஆதங்­கங்­க­ளையும் வெளிப்­ப­டுத்தும் ஆயு­த­மாக இந்த ஆர்ப்­பாட்­டங்­களும் போராட்­டங்­களும் ஹர்த்­தால்­களும் நடை­பெற்­றாலும் சமூக விரோதச் செயற்­பா­டு­களின் பின்­ன­ணிகள் அறி­யப்­ப­டு­வது அவ­சி­ய­மா­க­வுள்­ளன.

சமூக விரோதச் செயற்­பா­டு­களும் உளக்­கோ­ளா­று­களும்

மாச­டைந்த உள்­ளங்­கொண்­டோ­ரினால் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற சமூக விரோதச் செயற்­பா­டு­க­ளுக்கு அவர்­களின் நோயுற்ற சிந்­த­னை­களும் உணர்ச்­சி­களும் கார­ண­மா­க­வுள்­ளன. உள நோய்­க­ளுக்கு ஆளாக்­கப்­பட்­டோரின் உணர்­வுகள் பல்­வேறு வடி­வங்­களில் காணப்­படும் அந்­தந்த வடி­வங்­க­ளுக்கு ஏற்ப அவர்கள் நடத்தைப் போக்­கு­களும் செயற்­பா­டு­களும் அமையப் பெற்­றி­ருக்கும்.

வெளிநா­டு­களில் இடம்­பெ­று­கின்ற இவ்­வா­றான சமூ­க­வி­ரோதச் சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­பு­பட்­ட­வர்கள் உளப்­ப­ரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­கின்­ற­போது அவர்கள் ஏதோ­வொரு உள நோய்க்கு ஆளா­கி­யி­ருப்­பது கண்­ட­றி­யப்­ப­டு­கி­றது. அவ்­வாறு நமது நாட்­டிலும் இவ்­வா­றான சமூக விரோதச் செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­பவர்கள் உளப்­ப­ரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­கின்­ற­போது இத்­த­கைய பாலியல் துஷ்­பி­ர­யோக சமூ­க­வி­ரோதச் செயற்­பா­டு­க­ளுக்­கான கார­ணங்­களைக் கண்­ட­றிய முடியும். 

அமெ­ரிக்க உள­நல மருத்­துவர் சங்கம் ஒவ்­வொரு உள நோயையும் அவற்றின் அறி­கு­றிகள் அடிப்­ப­டையில் வரை­யறை செய்­துள்­ளது. மனி­தனில் பல வகை­யான உள நோய்கள் காணப்­ப­டு­கின்­றன. உலகில் வாழும் மக்­கள் தொகையில் 450 மில்­லியன் பேர் உள­நோ­யினால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இதற்­கேற்ப நாளில் ஒருவர் ஏதோ­வொரு உள­நோய்க்கு ஆளா­கி­யுள்ளார். உலக சனத்­தொ­கையில் 150 மில்­லியன் பேர் மனச்­சோர்வு நோய்க்கும் 50 மில்­லியன் பேர் எப்­லிப்சி நோய்க்கும் இதேபோல் பல மில்­லியன் கணக்­கானோர் பல உள நோய்­க­ளுக்கும் ஆளா­கி­யுள்­ளனர். வரு­டந்­தோறும் 1 மில்­லியன் பேர் தற்­கொலை செய்­வ­தா­கவும் 10-20 மில்­லியன் வரை­யி­லானோர் தற்­கொ­லைக்கு முயற்சி செய்­வ­தா­கவும் உளநோய் தொடர்­பான சர்­வ­தேச ஆய்­வுகள் குறிப்­பி­டு­கின்­றன.

ஒருவர் தற்­கொ­லைக்கு முயற்சி செய்­கிறார் அல்­லது தற்­கொலை புர­ிகிறார் என்றால் அவற்­றுக்­கான கார­ணங்­களின் பின்­ன­ணியில் அவர் தொடர்ச்­சி­யான நெருக்­கீட்­டுக்­குள்­ளாகி மனச்­சோர்­வுக்­குள்­ளா­கி­யி­ருப்பார். ஏனெனில் ஒரு­வ­ரிடம் மனச்­சோர்வு உள நோய் காணப்­ப­டு­மாயின் அந்­நோயின் குணங்­கு­றி­களில் ஒன்­றாக இருந்­தென்ன, இறந்­தென்ன என்ற இறப்­புப்­பற்றி, தற்­கொலை பற்­றிய எண்ணம் காணப்­படும் இந்த எண்­ண­மா­னது எல்லை கடந்து அவரை தற்­கொ­லைக்கு இட்டுச் செல்­வ­தாக உள­வியல் குறிப்­பி­டு­கி­றது. 

அதே­போன்று, ஆளுமை உளக் கோளா­று­களும் மற்றும் பாலியல் உளக்­கோ­ளா­று­களும் மனி­தர்­க­ளி­டையே காணப்­ப­டு­கின்­றன. ஆளுமை உளக்­கோ­ளாறு கொண்­ட­வர்கள் மது, போதைப் பொரு­ளுக்கு அடி­மை­யா­கி­யி­ருப்­பது அவ்­வு­ளக்­கோ­ளாறு உடை­ய­வர்­களின் குணக்­கு­றி­களில் ஒன்­றாகும். அவ்­வாறே அசா­தா­ரண பாலியல் நடத்­தை­களும் அவர்­க­ளி­டையே காணப்­படும். ஒருவர் பிறி­தொ­ரு­வரை வதைத்து, துன்­பு­றுத்தி காயப்­ப­டுத்தி அதில் இன்பம் காணும் அசா­தா­ரண பாலியல் நடத்தை போன்ற குணங்­கு­றி­க­ளுடன் காணப்­ப­டு­வா­ராயின், அவர் சமூக விரோத ஆளுமைக் குறை­பாடு (Antisocial personality disorder) என்ற உள நோய்க்கு ஆளா­கி­யி­ருப்பார். இந்த உளக்­கோ­ளாறு உடை­ய­வர்­க­ளினால் சமூக விரோதச் செயற்­பாடுகள் அதிகம் இடம்­பெறும். 

பாலியல் உளக்­கோ­ளா­று­களும் பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்­வோ­ரிடம் காணப்­படும். பாலியல் உளக்­கோ­ளாறு வகை­களில் பாலியல் விலகல் நடத்தை என்­ற­தொரு வகையும் உள்­ளது. இவ்­வகை நோய்க்­குள்­ளா­ன­வர்­க­ளி­டையே பல குணங்­கு­றி­களும் செயற்­பா­டு­களும் காணப்­ப­டு­கி­றது. இதில் Paedophili என்ற பாலியல் உளக்­கோ­ளாறு கொண்டோர் சிறு­வர்­களை பாலி­ய­லுக்கு உட்­ப­டுத்­து­பவர்­க­ளாக, அவர்­களைப் பாலியல் செயற்­பாட்­டுக்கு தூண்­டு­ப­வர்­க­ளாக இருப்­பார்கள். 

இவ்­வாறு சமூக விரோதச் செயற்­பா­டு­களின் பின்­ன­ணியில் உளக் கோளா­று­களும் தாக்கம் செலுத்­து­கி­றது என்­பதை நாம் அறிந்து வைப்­பதும் அவ­சியம். இத்­த­கைய சமூக விரோதச் செயற்­பா­டு­களை புரியும் படு­பா­வி­களின் பார்­வை­க­ளி­லி­ருந்து நமது சிறுவர் சிறு­மி­யர்­க­ளையும் கட்­டிளம் பரு­வத்­தி­ன­ரையும் பாது­காப்­பதில், அவர்­களை விழிப்­பு­ணர்­வூட்­டு­வதில் அரசும், சமூ­க­ம­ய­மாக்கல் முக­வர்­களும் ஊட­கங்­களும் பொறுப்­புடன் செயற்­ப­டு­வது முக்­கி­ய­மா­ன­தாகும். 

பாலியல் துஷ்­பி­ர­யோ­கங்­களும்  இலங்­கையும் 

முன்­னொ­ரு­போ­து­மில்­லாத அளவு பாலியல் துஷ்­பி­ர­யோகச் செயற்­பா­டுகள் நாளுக்கு நாள் அதி­க­ரித்துக் கொண்டே செல்­கின்றன. பள்ளி செல்லும் மாண­வர்­களும் படுத்­து­றங்கும் மூதாட்­டி­களும் கூட பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு பலி­யாகிக் கொண்­டி­ருக்­கி­றார்கள். தாத்­தாக்­களும் தந்­தை­யர்­களும், மாமாக்­களும், நண்­பர்­க­ளும் காத­லர்­களும் அயல்­வீட்­டுக்­கா­ரர்­களும் என்ற உற­வு­மு­றைக்­கா­ரர்­களால் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு பாவைகள் பலி­யாகி வரு­வதைக் காண­மு­டி­கி­றது. இலங்­கையில் அதி­க­ளவு பாலியல் வல்­லு­றவுச் சம்­ப­வங்கள் உற­வு­மு­றைக்­கா­ரர்­களால் இடம்­பெ­று­வ­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. 

இலங்­கையில் இடம்­பெறும் பாலியல் வல்­லுறவுச் சம்­ப­வங்கள் தொடர்பில் 2013ஆம் ஆண்டில் வெளியி­டப்­பட்ட புள்­ளி­வி­ப­ரங்­களை நோக்­கு­கின்­ற­போது, 1995இல், 542 சம்­ப­வங்­களும், 2007ஆம் ஆண்டில் 1,397 சம்­ப­வங்­களும், 1,582 சம்­ப­வங்கள் 2008லும், 1,624 சம்­ப­வங்கள் 2009லும் நடந்­துள்­ளன.

அதேபோல், 2010இல் 1,854 சம்­ப­வங்­களும், 2011ல் 1,871 பாலியல் வன்­பு­ணர்வுச் சம்­ப­வங்­களும் இடம்­பெற்­றி­ருப்­ப­துடன் 2012ல் 1,463 வல்­லு­றவுச் சம்­ப­வங்கள் நிகழ்ந்­தி­ருக்­கி­றது.

இப்­பா­லியல் பலாத்­கா­ரங்­க­ளினால் அதி­க­ளவு பாதிக்­கப்பட்­ட­வர்கள் 18 வய­துக்கு குறைந்­த­வர்கள் என்­பதும் இங்கு கவனிக்கக் கூடி­ய­தா­க­வுள்­ளது. ஒவ்­வொரு 90 நிமி­டத்­திலும் ஒரு பாலியல் சம்­பவம் இடம்­பெ­று­வ­தா­கவும் அப்­புள்ளி விபரம் சுட்­டிக்­காட்­டு­கி­றது. 

கண்டி, அநு­ர­ாத­புரம் மற்றும் கொழும்பு மாவட்­டங்­க­ளி­லேயே அதி­க­ளவு பாலியல் வன்­பு­ணர்வுச் சம­்ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ளமை தெரி­ய­வ­ரு­கி­றது. அத்­துடன் குரு­நாகல் மாவட்­டத்தில் அதி­க­ளவில் சிறுவர் துஷ்­பி­ர­யோகச் சம்­ப­வங்­களும் இடம்­பெற்­றுள்­ளன. 2010ஆம் ஆண்டில் மேல், வட, வட மேற்கு மாகா­ணங்­களில் அதி­க­ளவில் பாலியல் பலாத்­காரச் சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ள­தாக 2013ஆம் ஆண்டின் புள்­ளி­வி­பரம் சுட்­டிக்­காட்­டு­கி­றது.

இந்­நி­லையில், கடந்த 2017ல் 3785 சிறுவர் துஷ்­பி­ர­யோகம் தொடர்­பான முறைப்­பா­டுகள் சிறுவர் பாது­காப்பு அதி­கார சபைக்கு கிடைத்­துள்­ள­துடன் இவ்­வ­ரு­டத்தின் முதல் இரு மாதங்­க­ளிலும் 1532 முறைப்­பா­டுகள் அதி­கா­ர­ச­பைக்கு கிடைத்­து­ள­்ளன. உடல், உள மற்றும் பாலியல் துஷ்­பி­ர­யோ­கங்கள் தொடர்பில் இம்­மு­றைப்­பா­டுகள் கிடைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், கம்­பஹா, கொழும்பு, களுத்­துறை, இரத்­தி­ன­புரி மற்றும் புத்­தளம் ஆகிய பிர­தே­சங்­க­ளி­லி­ருந்து அதி­க­ள­வி­லான சிறுவர் துஷ்­பி­ர­யோக முறைப்­பா­டுகள் அதி­கார சபைக்கு கிடைத்­துள்­ள­தாக அதி­கார சபையின் புள்­ளி­வி­ப­ரங்­களின் மூலம் அறிய முடி­கி­றது

சிறுவர் துஷ்­பி­ர­யோகம் உட்­பட பல்­வேறு சமூகச் சீர்­கேட்டில் ஈடு­ப­டு­கின்­ற­வர்­களின் அறிவும், கலா­சா­ரமும் பண்­பா­டும் பாரி­ய­ளவில் மாச­டைந்­துள்­ளதை இப்­புள்ளி விப­ரங்கள் நன்கு புடம்­போட்டுக் காட்­டு­கி­றது. இவ்­வா­றான ஈனச் செய­லினால் பிறக்கும் பச்­சிளம் பாலகர்கள் உயி­ருடன் வீசப்­ப­டு­வதும், கொலை செய்­யப்­பட்டு புதைக்­கப்­ப­டு­வ­தும் கருக்­கலைப்­புக்கள் இடம்­பெ­று­வ­து­மென நாளாந்தம் நடந்­தேறும் நிகழ்­வுகள் மனிதன் மிரு­கமாக வாழ்ந்த ஆதி­கா­லத்­திற்கு 21ஆம் நூற்­றாண்­டையும் இழுத்துச் சென்­று­விட்­டதா? என்று எண்­ணத்­தோன்­று­கி­றது.

மனித நாக­ரி­கத்­தை­யும் கலா­சா­ரத்­தையும் கேள்­விக்­கு­றிக்குள் தள்­ளி­விடும் இத்­த­கைய சமூக விரோதச் செயற்­பா­டுகள் தொடர் சங்­கி­லி­யாக இடம்­பெ­று­வதை எந்த வகை­யிலும் அனு­ம­திக்க முடி­யாது. உரிய சட்ட நட­வ­டிக்­கை­ககள் உரிய காலத்தில் உரிய முறைப்­படி மேற்­கொள்­ளப்­ப­டு­வது கட்­டாயத் தேவையா­க­வுள்­ளது. சட்ட நட­வ­டிக்­கைகள் அத்­த­கை­ய­வர்­க­ளுக்கு எதி­ராக எடுக்­கப்­ப­டு­கின்ற அதே­வேளை, அவர்­களின் உள­நி­லைகள் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வதும் அவ­சி­ய­மாகும்.

அத்­துடன், இலங்­கையின் வரு­மானத் தின் முது­கெ­லும்­பாக மாறி வரும் உல்­லா­சத்­துறையின் விருத்­திக்­காக கலாசார சீர­ழி­வுகள் இடம்­பெ­று­வ­தையும் அனும திக்க முடியாது. உல்லாசத்துறையின் ஊக்கு விப்பு என்றபோர்வையில் அடிமட்ட சமூ கத்தினரிடையே பாலியல் செயற்பாடா னது வர்த்தகமாக மாற்றப்பட்டு வருகிறது. மசாஜ் கிளப்பென்றும் ஆயுர்வேத சிகி ச்சை நிலையமென்றும் நடத்தப்படும் நிலையங்களில் அப்பாவி யுவதிகள் வேலைக்கு அமர்த்தப்பட்டு அவர்கள் பாலியல் தொழிலாளர்களாக மாற்றப்பட்டு கொண்டிருக்கும் ஒரு புதிய கலாசாரமும் இலங்கையில் உருவாகி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுவதைக் காணக் கூடியதாகவுள்ளது. இவற்­றினால் இலங்­கையில் எயிட்ஸ்/எச்,ஐ.வி தொற்­றா­ளர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரிப்­ப­தா­கவும் தேவை­யற்ற கரு­வு­ரு­வாக்­கத்­தினால் நாளாந் தம் சட்­ட­வி­ரோதக் கருக்­க­லைப்­புக்கள் அதிகம் இடம்­பெ­று­வ­தா­கவும் சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றன. சமூக விரோதச் செயற்­பாட்­டா­ளர்­க­ளினால் இலங்­கையின் சமூக, கலா­சாரக் கட்­ட­மைப்­புக்கள் பாதிக்­கப்­ப­டாது இருப்­ப­தற்­கான ஆரோக்­கி­ய­மான, ஆக்­க­பூர்­வ­மான செயற்­றிட்­டங்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­வதை வித்­தியா முதல் றெஜினா வரை­யான படு­கொலைச் சம்­ப­வங்கள் அவ­சி­ய­மாக்­கி­யுள்­ளது. இவ்­வ­வசியப் பொறுப்பு யாரார் மீது பொறுப்­பாக்­கப்­பட்­டுள்­ளதோ அவர்­க­ளுக்­கு­ரிய பொறுப்பை பொறுப்­புடன் நிறை­வேற்ற வேண்­டு­மென்ற வேண்­டு­கோள்­களும் சிறு­வர்­க­ளி­னதும் பெண்­க­ளி­னதும் பாது­காப்­புக்­கான விழிப்­பு­ணர்­வுக் கோஷங்­களும் பள்ளி மாணவி சிறுமி றெஜி­னாவின் படு­கொ­லைக்­கெ­தி­ரான எதி­ரொ­லி­க­ளி­னூ­டாக எழுப்­பப்­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றது. 

அத்­துடன், பெற்­றோரும் பாட­சாலைச் சமூ­கமும் ஆன்­மீக வழி­காட்டும் மார்க்கப் போத­கர்­களும் தங்­க­ளது பொறுப்பில் விழிப்­பாக இருப்­ப­துடன் மற்­ற­வர்­க­ளையும் விழிப்­ப­டையச் செய்ய வேண்டும். அத்­துடன் சட்டம் அதன் கட­மையை முறை­யாகப் புரி­வ­துடன், சட்டம் அதன் கட­மையைச் செய்­வ­தற்கு வழி­வி­டப்­ப­டு­வதும் அவ­சி­ய­மாகும். அது­போக, ஊட­க­மா­னது பொழுது போக்குச் சாத­ன­மாக மாத்­திரம் செயற்­ப­டாது எதிர்­காலச் சிற்­பி­களை நல்­வ­ழியில் செதுக்­கு­கின்ற பணி­யினைக் காத்­தி­ர­மாகச் செயற்­ப­டுத்தும் சக்­தி­யாகச் செயற்­ப­டு­வ­தற்கும் முன்­வர வேண்டும்.

 

அப்­போ­துதான், வித்­தியா முதல் றெஜினா வரையான படுகொலைகள் ஏற்படுத்தியுள்ள உணர்வலைகள், அதன் எதிரொலிகள் என்பன ஆயிரமாயிரம் வித்தியாக் களினதும் சேயாக்களினதும் றெஜினாக்களினதும் எதிர் காலத்தைப் பாதுகாக்க துணைநிற்கும் என்பதில் ஐயமில்லை. 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-06-30#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.