Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இங்கிலாந்துடன் நாளை முதல் டி20 போட்டி: சவாலுக்கு தயாரா கோலி படை?- ராகுல், தினேஷ் யாருக்கு இடம்?

Featured Replies

இங்கிலாந்துடன் நாளை முதல் டி20 போட்டி: சவாலுக்கு தயாரா கோலி படை?- ராகுல், தினேஷ் யாருக்கு இடம்?

 

 
in

இங்கிலாந்து கேப்டன் மோர்கன், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆகியோர் கோப்பையுடன் இன்று போட்டோவுக்கு போஸ் கொடுத்த காட்சி   -  படம்: ஏபி

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நாளை மான்செஸ்டர் நகரில் நடக்கிறது. இந்தப் போட்டியில் ராகுல், தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரில் யார் இடம் பெறுவார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இங்கிலாந்துக்கு 3 மாதங்கள் சுற்றுப்பயணமாகச் சென்றுள்ள இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள், 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முன்னதாக அயர்லாந்துடன் நடந்த டி20 தொடரை 2-0 என்று இந்திய அணி கைப்பற்றியது.

 

அயர்லாந்து போன்ற கத்துக்குட்டி அணியுடன் இந்திய அணி எளிதாக வென்றுவிடும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால், உண்மையான சோதனைக்களம் என்பது இந்திய அணிக்கு, இங்கிலாந்து மண்ணில் நாளை தொடங்கும் முதல் டி20 போட்டியாகும்.

இந்திய அணியைப் பொறுத்தவரை கடந்த 7 ஆண்டுகளாக நிலையான விளையாட்டுகளை, வெற்றிகளை ஒருநாள், டி20 போட்டிகளில் குவித்து வருகிறது. இங்கிலாந்து, இந்திய அணிகளிலும் உள்ள வீரர்களும் நல்ல ஃபார்மில் உள்ளனர். இங்கிலாந்து வீரர்கள் மோர்கன், பட்லர், ஜேஸன் ராய், ஸ்டோக்ஸ்ஸ, மொயின் அலி, ஹேல்ஸ் ஆகியோர் ஐபிஎல் போட்டியில் விளையாடி நல்ல ஃபார்மில் உள்ளனர்.

இந்திய அணியைப் பொறுத்தவரை கடைசியாக விளையாடிய 20 டி20 போட்டிகளில் 15 வெற்றிகளைப் பெற்றுள்ளது. இதில் தென் ஆப்பிரிக்கா, இலங்கைக்கு எதிரான தொடர்களையும் கைப்பற்றியுள்ளது. இந்திய அணிக்கு சிறிதும் குறைவில்லாமல், ஆஸ்திரேலிய அணியை 6-0 என்று ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றி இருக்கிறது.

அதேசமயம், அயர்லாந்து அணியை 72 ரன்கள், 143 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து தனது நல்ல பயிற்சியை இந்திய அணியினர் எடுத்துள்ளனர்.

dhonijpg

தோனி

 

யாருக்கு வாய்ப்பு?

நாளைய போட்டியில் தொடக்க வீரர்களாக ஷிகர் தவண், ரோகித் சர்மா, 3-வது வீரராக, ரெய்னா, அடுத்து கோலி என வரிசையாகக் களமிறங்குவார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், கூடுதல் பேட்ஸ்மேன்கள் வைத்துக்கொள்ள விரும்பினால், மணிஷ் பாண்டே, ராகுல், தினேஷ் கார்த்திக் இந்த 3 பேரில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது தெரியவில்லை. கூடுதல் பந்துவீச்சாளர்கள் தேவை எனும் பட்டத்தில் உமேஷ் யாதவ் வாய்ப்பு பெறுவார்.

ஐபிஎல் போட்டியில் சூப்பர் ஃபார்மில் இருந்த தோனியின் மீது ரசிகர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பந்துவீச்சில் குல்தீப், யஜூவேந்திர சாஹல் இருவருக்கும் இடம் உண்டு. மேலும், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்குமார், சாகர் ஆகியோர் இடம் பெறலாம்.

பும்ராவுக்குப் பதிலாக இடம் பெற்றுள்ள தீபக் சாஹருக்கு வாய்ப்பு கிடைக்குமா அல்லது மூத்த வீரர் உமேஷ் யாதவ் இடம் பெறுவாரா என்பதும் கடைசி நேரத்தில்தான் தெரியவரும். இதில் உமேஷ் இடம் பெறவே வாய்ப்பு அதிகம் எனத் தெரிகிறது.

நல்ல ஃபார்ம்

இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை அந்த நாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடி இந்திய வீரர்களின் பலம், பலவீனத்தை அறிந்துள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் சிறப்பாக விளையாடி நல்ல ஃபார்மில் இருக்கின்றனர்.

குறிப்பாக அந்நாட்டு வீரர்களில் ஜேஸன் ராய், ஹேர்ஸ், பேர்ஸ்டோ, பட்லர், மொயின் அலி, ஜோய் ரூட், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் எந்த நேரத்திலும் ஆபத்தான ஃபார்முக்கு மாறி பேட் செய்யக்கூடியவர்கள்.

பந்துவீச்சில் ஐபிஎல் தொடரில் சோபிக்காத பென் ஸ்டோக்ஸ் இந்தப் போட்டியில் மிரட்டலாம். மேலும் பிளங்கெட், டேவிட் வில்லி, குரன் ஆகியோர் வேகப்பந்து வீச்சிலும், ராஷித், மொயின் அலி சுழற்பந்து வீச்சிலும் இருக்கின்றனர்.

ஆபத்தான பேட்ஸ்மேன்

ஐபிஎல் போட்டியில் அதிரடியாக விளையாடி 22 பந்துகளில் அரை சதம் அடித்த பட்லர் மிருகத்தனமான ஃபார்மில் இருக்கிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்த பட்லர் 13 போட்டிகளில் 548 ரன்கள் குவித்தார். இவர் இந்திய அணிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒட்டுமொத்தத்தில் இரு அணிகளும் சமபலம் கொண்டதாக இருப்பதால், நாளைய போட்டியில் பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது.

இந்திய அணி விவரம்:

விராட்கோலி (கேப்டன்), ஷிகர் தவண், ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், சுரேஷ் ரெய்னா, மணிஷ் பாண்டே, தோனி, தினேஷ் கார்த்திக், யஜுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், குர்னல் பாண்டியா, புவனேஷ்குமார், தீபக் சாஹர், ஹர்திக் பாண்டியா, சித்தார்த் கவுல், உமேஷ் யாதவ்.

இங்கிலாந்து அணி விவரம்:

எயின் மோர்கன் (கேப்டன்), மொயின் அலி, ஜானி பேர்ஸ்டோ, ஜேக் பால், ஜாஸ் பட்லர், சாம் குரன், டாம் குரன், அலெக்ஸ் ஹேல்ஸ், கிறிஸ் ஜோர்டன், லியாம் பிளங்கெட், அதில் ரஷித், ஜோய் ரூட், ஜேஸன் ராய், டேவிட் வில்லே, மலான்.

http://tamil.thehindu.com/sports/article24313577.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

  • தொடங்கியவர்

பயமா எங்களுக்கா? இங்கிலாந்திடம் கேளுங்கள்: விராட் கோலி ‘கூல்’

 

 
virat

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி : கோப்புப்படம்

மிகவும் ரிலாக்ஸாக இருக்கிறோம், அச்சமில்லாமல் கிரிக்கெட் விளையாட இருக்கிறோம். நாங்கள் விளையாடுவது இங்கிலாந்துக்குத்தான் நெருக்கடி அளிக்கும், எங்களுக்கு அல்ல என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மிகவும் கூலாக தெரிவித்தார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 3 ஒருநாள், 3டி20 மற்றும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் டி20 தொடர் நாளை ஓல்ட் டிராபோர்டில் உள்ள மான்செஸ்டரில் தொடங்குகிறது.

 

அதற்கு முன்பாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஊடகங்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

''நாங்கள் மிகவும் ரிலாக்ஸாக இருக்கிறோம். எந்தவிதமான அச்சமில்லாமல் கிரிக்கெட் விளையாட நினைக்கிறோம். நெருக்கடி, அழுத்தம், பயம் எல்லாம் எங்களுக்கு அல்ல, நாங்கள் வந்திருப்பதால், இங்கிலாந்து அணிக்குத்தான் இருக்கும்.

ஆகச்சிறந்த அணியை அவர்களின் மண்ணில் வைத்து வீழ்த்துவது என்பது சிறப்பானதுதானே. கடந்த 2016-17ம் ஆண்டு இந்தியாவுக்கு இங்கிலாந்து வந்திருந்தது. அப்போது, நாங்கள்தான் கோப்பையை வென்றோம். நாங்கள் எதையும் இழக்க விரும்பவில்லை, ஒரு அணியாக எங்களை முன்னேற்றிக்கொள்ள விரும்புகிறோம்.

Virat-Kohli-1024-Viratjpg
 

ஜோஸ் பட்லர் நல்ல ஃபார்மில் இருக்கிறார். அதைக் கண்டு வியப்படையவில்லை. ஐபிஎல் தொடரில் தொடக்க வீரராகக் களமிறங்கியதால், பட்லர் தனது திறமையை வெளிப்படுத்தி இந்த முறை நல்ல வாய்ப்பு கிடைத்தது. அவருக்குக் கிடைத்த வாய்ப்பை நல்லமுறையில் பயன்படுத்திக்கொண்டது மகிழ்ச்சியாகும். ஐபிஎல் போட்டியில் நல்ல அனுபவங்களைப் பட்லர் பெற்றிருப்பதால், இந்த முறை இங்கிலாந்துக்கு எதிராக விளையாடுவது விறுவிறுப்பாகஅமையும்.

கிறிஸ் வோக்ஸ், மொயின் அலி ஆகியோரும் ஐபிஎல் போட்டியில் விளையாடியுள்ளனர். நல்ல அறிமுகம் இருப்பதால், இந்த முறை போட்டிகள் அனைத்தும் நட்புரீதியாகச் செல்லும் என நம்புகிறேன்.

ஐபிஎல் போட்டியில் அனைவருக்கும் நல்ல அறிமுகம் கிடைத்தது. போட்டி முடியும் தருவாயில், அனைவரும் நன்கு பழகிக்கொண்டோம். இதே மனநிலையில் இரு அணியினரும் விளையாடினால், இந்தத் தொடர் முழுவதும் தரம் வாய்ந்ததாக, இனிமையாகச் செல்லும்.

இங்கிலாந்தில் காலநிலை எங்களுக்கு நிச்சயம் ஒத்துக்கொள்ளும். இதுபோன்ற காலநிலையில் விளையாடி பழக்கமில்லாவிட்டாலும் கூட, சிறிது வித்தியாசமான காலநிலை நீடிக்கிறது. சட்டீஸ்வர் புஜாரா, இசாந்த் சர்மா ஆகியோர் கவுண்டி போட்டியில் விளையாடி இருப்பதால், அவர்களுக்கு இந்தக் காலநிலை ஒத்துக்கொள்ளும். எங்களுக்கும் பழகிவிடும்.

பேட்டிங் வரிசையில் பல்வேறு மாற்றங்கள் தேவைக்கு ஏற்றார்போல் இருக்கும். அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்க முயற்சிப்போம், சில போட்டிகளில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் சம்பவங்களையும் நடத்துவோம். இது டி20போட்டி என்பதால், அதற்கு ஏற்றார்போல் மாறிக்கொள்வோம்.

இந்தப் போட்டித் தொடர் முழுவதும் நல்ல மனநிலையில், நல்ல கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம். போட்டியின் முடிவுகள் எப்படி இருக்கும் என்று உறுதியளிக்க முடியாது. ஆனால், வெற்றிபெறும் மனநிலையைப் பெற்றுவிட்டால் அதுதான் எனக்கு கேப்டனாக பெருமை சேர்க்கும் விஷயமாகும்.

தென் ஆப்பிரிக்காவிலும் இதேபோலத்தான் செய்தோம். முதல் இருபோட்டிகளில் தோல்வி அடைந்து, அதன்பின் மீண்டு எழுந்தோம். இங்கிலாந்திலும் வெற்றி பெறுவோம் என்ற மனநிலையைப் பெற்றுவிட்டால், அதிகமாகக் கற்றுக்கொள்வோம். ஒருநாள் போட்டியில் சில விஷயங்களைச் செய்ய முயற்சிப்போம். உலகக்கோப்பைப் போட்டிக்குச் செல்ல இந்தத் தொடர் அடுத்தகட்டமாக அமையும்.''

இவ்வாறு விராட் கோலி தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/sports/article24313863.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

  • தொடங்கியவர்

ஐபிஎல் தொடரில் விளையாடியது எங்களுக்கு சாதகம் - இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன்

 
அ-அ+

இந்திய அணிக்கு எதிரான போட்டியில் விளையாடும் போது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற அனுபவம் இங்கிலாந்து வீரர்களுக்கு சாதகமாக இருக்கும் என அந்த அணியின் கேப்டன் இயன் மோர்கன் தெரிவித்துள்ளார். #ENGvIND

 
 
 
 
ஐபிஎல் தொடரில் விளையாடியது எங்களுக்கு சாதகம் - இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன்
 
லண்டன் :

3 டி-20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் இந்திய நேரப்படி நாளை இரவு 10 மணிக்கு மான்செஸ்டரில் துவங்குகிறது.

நாளை துவங்கும் டி20 கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு இங்கிலாந்து வீரர்கள் மன்செஸ்டர் ஓல்ட் ட்ரபோர்ட் மைதானத்தில் இன்று தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இங்கிலாந்து அணி கேப்டன் இயன் மோர்கன், அவர்களிடம் குறிப்பிட்டுள்ளதாவது :-

‘இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடிய அனுபவம் நிச்சயமாக இங்கிலாந்து வீரர்களுக்கு சாதகமான அம்சம் ஆகும். இதை பயன்படுத்தி எங்கள் வீரர்கள், இந்திய அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்துவார்கள். இருப்பினும் இந்திய அணியுடன் விளையாடுவது எப்போதும் சவாலானது’ என அவர் தெரிவித்தார்.  #ENGvIND

https://www.maalaimalar.com/News/Sports/2018/07/02203100/1174011/Our-experience-of-playing-in-the-IPL-is-ofcourse-a.vpf

  • தொடங்கியவர்

முதலாவது டி 20 ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை

 

 

 
KRUNALPANDYA

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 டி 20 ஆட்டங்கள், 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் டி 20 தொடர் இன்று தொடங்குகிறது. மான்செஸ்டர் நகரில் இரு அணிகளும் முதலாவது டி 20 ஆட்டத்தில் மோதுகின்றன. 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெறுவதால் இம்முறை நடைபெறும் குறுகிய வடிலான கிரிக்கெட் தொடர் இந்திய அணிக்கு முக்கியவத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்திய அணி அயர்லாந்துக்கு எதிரான டி 20 தொடரை வென்ற வேகத்தில் இங்கிலாந்து அணியை சந்திக்கிறது.

அதேவேளையில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடர், டி 20 ஆட்டம் என தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் வெற்றி பெற்ற உற்சாத்தில் விராட் கோலி குழுவினரை எதிர்கொள்கிறது. இந்திய அணி கடைசியாக விளையாடிய இருபது டி 20 ஆட்டங்களில் 15-ல் வெற்றி கண்டுள்ளது. இதில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் மற்றும், இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு தொடரும் அடங்கும். அதேவேளையில் இங்கிலாந்து கடைசியாக பங்கேற்ற ஒன்பது டி 20 ஆட்டங்களில் 5-ல் வெற்றி கண்டது 4-ல் வீழ்ந்திருந்தது. 4 தோல்விகளில் மூன்று, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் கலந்து கொண்ட முத்தரப்பு டி 20 தொடரில் பெற்றவையாகும்.

 

அயர்லாந்து அணிக்கு எதிரான டி 20 தொடரில் இந்திய அணிக்கு எந்தவித சவாலும் இல்லாமல் போனது. ஒருதலை பட்சமாக அமைந்த இரு ஆட்டங்களிலும் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன் மழை பொழிந்தனர். அதேவேளையில் பந்து வீச்சில் யுவேந்திரா சாஹல், குல்தீப் யாதவ் கூட்டணி எதிரணியை எளிதாக சுருட்டியது. இந்திய அணியில் கடைசி கட்ட ஓவர்களில் சிறப்பாக செயல்படும் ஜஸ்புரித் பும்ரா காயம் காரணமாக விலகியிருப்பது சற்று பின்னடைவுதான். அவரது இடத்தில் அறிமுக வீரராக தீபக் ஷஹார் அல்லது சித்தார்த் கவுல் இடம்பெறக்கூடும். மான்செஸ்டர் நகரில் வறண்ட வானிலையே காணப்படுவதால் இந்திய அணி பிரதான சுழற்பந்து வீச்சாளர்களான யுவேந்திரா சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோருடன் களமிறங்கக்கூடும். இதனால் கிருணல் பாண்டியாவுக்கு இடம் கிடைப்பது சந்தேகம் தான்.

இதேபோல் பேட்டிங்கில் கே.எல்.ராகுல் வெளியே அமரவைக்கப்படக்கூடும். மிடில் ஆர்டரில் சமீபகாலமாக தொடர்ச்சியாக சிறந்த திறனை மணீஷ்பாண்டே வெளிப்படுத்தி உள்ளதால் அவர், வெளியே அமரவைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவுதான். அயர்லாந்து போட்டியில் மட்டையை சுழற்றிய ஷிகர் தவண், ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, ஹர்திக் பாண்டியா ஆகியோரிடம் இருந்து மீண்டும் ஒரு சிறப்பான இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும். ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் அசத்திய தோனியும் மட்டையை சுழற்ற ஆயத்தமாக உள்ளார்.

இங்கிலாந்து அணியில் அதிரடி வீரராக ஜாஸ் பட்லர் உருவெடுத்துள்ளார். ஐபிஎல் தொடரின் பார்மை அவர், சர்வதேச போட்டிகளுக்கும் எடுத்துச் சென்றுள்ளது இங்கிலாந்து அணிக்கு பெரிய பலமாக மாறி உள்ளது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 தொடரில் 22 பந்துகளில் அரை சதம் விளாசி சாதனை படைத்த பட்லர், இந்திய பந்து வீச்சாளர்களுக்கு தொல்லைத் தரக்கூடும். பேட்டிங்கில் அவருடன் ஜேசன் ராய், அலெக்ஸ் ஹெல்ஸ், மோர்கன் ஆகியோரும் டாப் ஆர்டரில் மிரட்ட தயாராகி உள்ளனர்.

நேரம்: இரவு 10 மணி

நேரடி ஒளிபரப்பு: சோனி டென் 1

http://tamil.thehindu.com/sports/article24317735.ece

  • தொடங்கியவர்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20.யில் இந்தியா பந்துவீச்சு - கேஎல் ராகுலுக்கு இடம்

 
அ-அ+

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. #ENGvIND

 
 
 
 
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20.யில் இந்தியா பந்துவீச்சு - கேஎல் ராகுலுக்கு இடம்
 
 
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டி மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. மான்செஸ்டர் நகரில் இன்று முதல் டி20 போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு செய்துள்ளது.
 
இந்திய அணியில் மணிஷ் பாண்டேவுக்கு பதிலாக கேஎல் ராகுல் இடம்பெற்றுள்ளார்

159/8 * (
  • தொடங்கியவர்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி - லோகேஷ் ராகுல் அதிரடியில் இந்தியா வெற்றி

 
அ-அ+

லோகேஷ் ராகுலின் அதிரடி, குல்தீப் யாதவின் சிறப்பான பந்து வீச்சால் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. #ENGvIND

 
 
 
 
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி - லோகேஷ் ராகுல் அதிரடியில் இந்தியா வெற்றி
 
லண்டன்:
 
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டி மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
 
இந்நிலையில், மான்செஸ்டர் நகரில் இன்று முதல் டி20 போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
 
இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் களமிறங்கினர்.
இருவரும் இணைந்து அதிரடியாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தனர். அணியின் எண்ணிக்கை 50 ஆக இருந்தபோது, ஜேசன் ராய் 20 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
 
அடுத்து இறங்கிய வீரர்களை குல்தீப் யாதவ் தனது சுழல் பந்தில் சீக்கிரமாக வெளியேற்றினார். இதனால் 107 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. ஒருபுறம் விக்கெட்டுக்ள் வீழ்ந்தாலும் ஜோஸ் பட்லர் சிறப்பாக ஆடி அரை சதம் அடித்தார். இறுதியில் இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 180 ரன்கள் எடுத்துள்ளது.
 
இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
 
201807040143161714_1_kuldip-2._L_styvpf.jpg
 
இதையடுத்து, 161 ரன்களை இலக்காக கொண்டு இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான், ரோகித் சர்மா இறங்கினர்.
 
தவான் 4 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். ஆனால், அடுத்து இறங்கிய லோகேஷ் ராகுல் தனது அதிரடியை ஆரம்பித்தார். இதனால் அணியின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது. அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த ரோகித் சர்மா 32 ரன்களில் அவுட்டானார்.
 
இறுதியில், இந்திய அணி 18.2 ஓவரில் 163 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. லோகேஷ் ராகுல் சிறப்பாக ஆடி சதமடித்தார். லோகேஷ் ராகுல் 101 ரன்னுடனும், விராட் கோலி 20 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து, இந்தியா
1-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. #ENGvIND #EnglandvIndia

https://www.maalaimalar.com/News/TopNews/2018/07/04014316/1174260/india-won-by-8-wickets-againt-england-in-first-t20.vpf

  • தொடங்கியவர்

இங்கிலாந்தை மூழ்கடித்த குல்தீப் சுழல், ராகுலின் சரவெடி சதம்: முதல் டி20-யில் இந்தியா அபார வெற்றி

 

 
kuldeep-apjpg

5விக். ஆட்ட நாயகன். இங்கிலாந்தின் வைரி. குல்தீப். | ஏஎப்பி.

மான்செஸ்டரில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து முதலில் பேட் செய்து குல்தீப் யாதவ் சுழலில் சிக்கி 159/8 என்று மடிய தொடர்ந்து ஆடிய இந்திய அணி ராகுலின் சரவெடி சதத்தில் 163/2 என்று அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

18.2 ஓவர்களில் இலக்கை ஊதியது இந்தியா.

 
 

95/1 என்று 12வது ஓவரில் வலுவாக இருந்த இங்கிலாந்து குல்தீப் யாதவ்வின் புரியாப் புதிர் ஸ்பின்னில் (5/24) 8 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது. உமேஷ் யாதவ்வும் அருமையாக வீசி ஜேசன் ராயை வீழ்த்தினார், புல்ஷாட் ஆடப்போனார் ராய், பந்து சற்றே தாழ்வாக வர பந்து மட்டையில் பட்டு ஸ்டம்பைத் தொந்தரவு செய்தது. பிறகு கடைசியில் கிறிஸ் ஜோர்டானை வீழ்த்தி 4 ஓவர்களில் 21/2 என்று சிறப்பாக வீசினார். ராய் 30 ரன்களில் வீழ்ந்தார். குல்தீப் யாதவ் இந்த ஒருநாள், டி20 தொடர்களில் இங்கிலாந்துக்கு காத்திருக்கும் அதிர்ச்சி அனுபல்லவி, சரணங்களுக்கு தொடக்கப் பல்லவி இசைத்துக் காட்டியுள்ளார். டி20-யில் முதல் முறையாக 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் குல்தீப்.

விக்கெட்டுகளை குல்தீப் யாதவ் வரிசையாகக் கைப்பற்றிய தருணத்தில் ஜோஸ் பட்லர் 46 பந்துகளில் 8 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 69 ரன்கள் விளாசினார். இலக்கை விரட்டுகையில் கே.எல்.ராகுல் 10 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 54 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். மொயின் அலிக்கு சாத்துமுறை நடந்தது இவர் 2.2 ஓவர்களில் 37 ரன்கள். ராகுலின் 2வது டி20 சர்வதேச சதமாகும்.

குல்தீப் யாதவ்வின் ராங் ஒன், லெக் ஸ்பின், மிக மெதுவான பந்துகளில் இங்கிலாந்து மிடில் ஆர்டர் நிலைகுலைந்தது, தோனி மீண்டுமொரு முறை அபாரமாக கீப்பிங் செய்து ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட் ஆகியோரை ஸ்டம்ப்டு செய்தார்.

ஆரவாரமான இந்திய ரசிகர்கள் கூட்டத்தின் முன் அதைவிடவும் ஆரவாரமான அதிரடி இங்கிலாந்து பேட்டிங் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் சரணடைந்தது. இயான் மோர்கன், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட் ஆகியோரை 14வது ஓவரில் சொற்பமாக வீழ்த்தி பெவிலியன் அனுப்பினார். 180 ரன்களாவது குறைந்தபட்சம் வந்திருக்க வேண்டும். மேலும் அலெக்ஸ் ஹேல்ஸ் திணறலை முடிவுக்குக் கொண்டு வந்த குல்தீப், 8 இன்னிங்ஸ்களில் 7வது அரைசதம் எடுத்த ஜோஸ் பட்லரையும் காலி செய்தார் குல்தீப்.

ராய், பட்லர் நல்ல தொடக்கம்:

இங்கிலாந்து ஆனால் தொடக்கத்தில் இந்தியாவின் சிறந்த பவுலர் புவனேஷ்வர் குமாரை உரித்தனர், அவரது 2 ஓவர்களில் 19 ரன்கள் விளாசப்பட்டது, 4வது ஓவரிலேயே கொண்டு வரப்பட்ட சாஹல் முதல் ஓவரிலேயே 16 ரன்கள் விளாசப்பட்டார். உமேஷ் யாதவ் டாப் எட்ஜில் பட்லரைக் காலி செய்திருந்தால் இங்கிலாந்து இன்னும் கூட குறைந்த ஸ்கோரில் காலியாகி இருக்கும். அலெக்ஸ் ஹேல்ஸ் 18 பந்துகளில் 8 ரன்கள் என்று ஒன்றும் புரியாதவராக ஆடினார். கடுமையாகத் தடவிய ஹேல்ஸ், கடைசியில் குல்தீப்பிடமும் தடவ ஒரு நேர் பந்தில் கடுப்பில் ஒரு ஸ்வீப் ஆடி பந்தைக் கோட்டை விட்டார் பவுல்டு ஆனார்.

buttlerjpg

ஜோஸ் பட்லர். | கெட்டி இமேஜஸ்.

 

அடுத்த ஓவரில்தான் இங்கிலாந்தை முற்றுகையிட்டு ஆட்கொண்டார் குல்தீப்; இயன் மோர்கன் ஸ்லாக் ஸ்வீப் செய்ய முயன்று கோலியிடம் கேட்ச் ஆனார். 3வது பந்தில் குல்தீப்பின் ராங் ஒன்னுக்கு ஸ்டம்ப்டு ஆனார். அடுத்த பந்தே ஜோ ரூட் பந்து உள்ளே வரும் என்று இறங்கி வந்து ஆடப்போக பந்து எதிர்த்திசையில் ஸ்பின் ஆகியது தோனிக்கு 2வது ஸ்டம்பிங். 50/0 என்று இருந்த இங்கிலாந்து 107/5 என்று ஆனது. கடைசியில் டி.ஜே.வில்லே 15 பந்துகளில் 2 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் அடித்து 29 எடுக்க பட்லர் 18வது ஓவர் வரை நின்று 69 எடுக்க இங்கிலாந்து 159/8 என்று முடிந்தது. இந்தியா தரப்பில் குல்தீப் 5, பாண்டியா 1, உமேஷ் யாதவ் 2 விக்கெட்.

கேட்ச் விட்டதைச் சாதகமாக்கி ராகுல் அதிரடி சதம்:

 

 

rahuljpg

சதம் வெளுத்துக்கட்டிய கே.எல்.ராகுல்.| ஏ.எப்.பி.

 

ஷிகர் தவண் 4 ரன்களில் டி.ஜே.வில்லேவின் பந்தில் இன்சைடு எட்ஜில் பவுல்டு ஆனார். அடுத்து வந்த ராகுல் அருமையான டச்சில் இருப்பது அவரது பேட்டிங்கில் பளிச்சிட்டது, ஆனாலும் ஒரு பந்தை அவர் பேக்வர்ட் பாயிண்ட் திசையில் காற்றில் ஆட பந்து கேட்சாக வந்தது ஜேசன் ராய் கோட்டை விட்டார். 26/2 என்று ஆகியிருக்கும் ஆனால் ராயின் தவறை பயன்படுத்திய ராகுல் அதன் பிறகு லியாம் பிளங்கெட்டை 4வது ஓவரில் ஒரு பிளிக், கட் பவுண்டரிகள் அடித்தார். மொயின் அலி வந்தவுடன் ரிவர்ஸ் ஸ்வீப் பவுண்டரி மற்றும் ஒரு லாங் ஆன் சிக்ஸ். லியாம் பிளெங்கெட் மீண்டும் பந்து வீச வந்த போது 6,4,4,6 என்று நாசம் செய்யப்பட்டார். 37 பந்துகளில் 85 ரன்கள் என்று இருந்த போது விரைவுச் சதத்துக்கு ராகுல் தயாராக இருந்தார், ஆனால் இங்கிலாந்து கொஞ்சம் இந்தியாவைக் கட்டுப்படுத்தியது ஆனால் அவர் சதமடிப்பதை ஒன்றும் செய்ய முடியவில்லை. ரோஹித் சர்மா 3 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 32 எடுத்து ரஷீத்திடம் ஆட்டமிழக்கும் போதே இந்திய அணி 130/2 என்று இருந்த்து, ரோஹித், ராகுல் கூட்டணி 11 ஒவர்களில் 123 ரன்களைச் சேர்த்ததில் ரோஹித் பங்களிப்பு 32 மட்டுமே. ராகுல் 101 நாட் அவுட், விராட் கோலி 1 சிக்சருடன் 20 நாட் அவுட்.

இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷீத் மட்டுமே சக்சஸ்புல் பவுலர் (1/25). ஆட்ட நாயகன் குல்தீப் யாதவ். வரும் வெள்ளியன்று கார்டிப்பில் இந்தியா தொடரை வெல்ல நம்பிக்கையுடன் ஆடும், இங்கிலாந்து குல்தீப் யாதவ் அச்சுறுத்தலுக்கு வழி கண்டுபிடிக்க வேண்டும். பிரிஸ்டலில் ஞாயிறன்று இறுதி டி20 போட்டி.

http://tamil.thehindu.com/sports/article24326819.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

  • தொடங்கியவர்

குல்தீப் யாதவ் எங்களை தவறான முடிவுகளை எடுக்க வைத்து ஏமாற்றினார்: இங்கிலாந்து கேப்டன் மோர்கன்

 

 
morgan

குல்தீப்பிடம் ஆட்டமிழந்து நடையைக் கட்டும் மோர்கன். | ஏ.பி.

இங்கிலாந்தில் தன் முதல் போட்டியிலேயே 24 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள், அதிலும் ஒரே ஓவரில் 3 நட்சத்திர வீரர்களை திகைக்கவைக்கும் வகையில் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது வென்ற குல்தீப் யாதவுக்கு புகழாரம் சூட்டப்பட்டு வருகின்றன.

இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன், ‘குல்தீப் யாதவ் எங்களை தவறாக நம்பவைத்து முற்றிலும் ஏமாற்றிவிட்டார்’ என்று புகழ்மாலை சூட்டியுள்ளார். இங்கிலாந்து வீரர்கள் குல்தீப்பைக் கண்டு பதற்றமடைந்தனரே தவிர அவரை நேர்மறையாக விளையாட முடியவில்லை, விளையாடத் தவறிவிட்டனர்.

 

இந்நிலையில் இங்கிலாந்து ஒருநாள் அணி, டி20 கேப்டன் இயன் மோர்கன் கூறும்போது, “பெங்களூருவிலும் நாங்கள் சரியாக ஆடவில்லை (அப்போது சாஹல் 6/25 என்று அசத்தினார்), ஆனால் அந்த ஆட்டத்துக்கும் இதற்கும் வேறுபாடு உள்ளது. குல்தீப் 4 பந்துகளில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி எங்களை தவறான முடிவுகளை எடுக்க வைத்து ஏமாற்றிவிட்டார். பந்தைத் தூக்கி அடித்து ஆட்டமிழந்ததைக் கூறவில்லை, குல்தீப் எங்களை முற்றிலும் ஏமாற்றிவிட்டார், அதாவது அவர் மிகச்சிறப்பாக வீசினார்.

30-40 ரன்கள் குறைவாக எடுத்தோம். நன்றாகத் தொடங்கினோம், குல்தீப் நன்றாக வீசினார், ஆனால் அவரை இதை விடவும் சிறப்பாக ஆட முடியும். அடுத்த போட்டியில் எங்கள் திட்டங்களை மதிப்பீடு செய்ய வேண்டும் அத்திட்டங்கள் சரியானதாக அமைவதை உறுதி செய்ய வெண்டும், அதனை விடாப்பிடியாக பற்றிக் கொள்ள வேண்டும்.

joe%20rootjpg

தோனியிடம் ஸ்டம்ப்டு ஆகும் ஜோ ரூட்.| ராய்ட்டர்ஸ்.

 

ஒரு ஸ்பின்னரை எடுத்த எடுப்பில், இறங்கியவுடன் ஆடுவது கடினம், ஜோஸ் பட்லர், குல்தீப் பந்து வீச வரும்போது ஏற்கெனவே 35 பந்துகளை ஆடியிருந்தார்.

ஸ்பின் பந்து வீச்சை சிறப்பாக ஆடுபவர் ஜோஸ் பட்லர். அலெக்ஸ் ஹேல்ஸ் கூட வாய்ப்புகள் கொடுக்கவில்லை. ஆனால் எங்களை தவறான முடிவுகளை எடுக்குமாறுச் செய்தார் குல்தீப் யாதவ்.

ஒரு பவுலர் இருபுறமும் ஸ்பின் செய்கிறார், அதனை திறம்பட மறைக்கிறார் என்பது எதிர்கொள்ளக் கடினமான ஒரு விஷயம், ஏனெனில் அதுமாதிரி வீசுவதற்கு இங்கு ஆளில்லை. அதனால்தான் குல்தீப்புக்கு எதிராக திட்டமிடல் அவசியம் என்கிறேன்.

அரை வாய்ப்புகளை நாங்கள் பிடித்திருந்தால் ஆட்டம் இன்னும் கொஞ்சம் நெருக்கமாகியிருக்கும், கிறிஸ் ஜோர்டான் பவுண்டரியில் வாய்ப்பைப் பிடித்திருந்தாலோ, அல்லது முதலில் ஜேசன் ராய் கேட்சைப் பிடித்திருந்தாலோ ஆட்டம் வேறு மாதிரி சென்றிருக்கும்

ராகுல் அருமையாக ஆடினார், இன்றைய தினத்தில் பேட்டிங்கை வெகு சுலபமாக அவர் ஆடியது போல் தெரிகிறது.

இந்திய அணி வலுவான அணி, உண்மையில் வலுவான அணி” என்றார் மோர்கன்

http://tamil.thehindu.com/sports/article24328131.ece

  • தொடங்கியவர்

பறந்து கொண்டிருந்த இங்கிலாந்தை தரையிறக்கியது குல்தீப்பின் ஒரு ஓவர்: கோலி புகழாரம்

 

 
kuldeep-kohli

குல்தீப் யாதவ், கேப்டன் விராட் கோலி. | கெட்டி இமேஜஸ்

மான்செஸ்டரில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் அதிரடி இங்கிலாந்தை சாதாரண கட்டினபசுவாக்கினார் தனது இடது கை ரிஸ்ட் ஸ்பின் மூலம் குல்தீப் யாதவ். இந்தியா தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

இதனால் 50/0 என்று இருந்தவர்கள் 107/5 என்று சரிந்தனர். ஒரே ஓவரில் இயன் மோர்கன், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட் ஆகியோரை மிக அருமையாக வீழ்த்தினார் குல்தீப் யாதவ்.

 
 

இங்கிலாந்து வீரர்கள் இவரை நின்று ஆடி, மரியாதை கொடுக்க விரும்பவில்லை, பதற்றமடைந்து தப்பும் தவறுமான ஷாட் தேர்வில் வெளியேறினர். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் இதனால் மடமடவென சரிய நேரிட்டது.

அதன் பிறகு கே.எல்.ராகுலுக்குக் கேட்ச் விட்டார் ஜேசன் ராய், அதன் பலனை அனுபவித்தனர், அவர் மொயின் அலி, லியாம் பிளங்கெட் ஆகியோரைப் பதம் பார்த்து இரண்டாவது டி20 சதம் எடுத்து வெற்றி நாயகனானார். இதில் 10 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் அடங்கும்.

இந்நிலையில் ஆட்டம் முடிந்து கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

3 விதமான திறன் அமைப்பை நோக்குகிறேன். நாங்கள் எப்படி ஆடினோம் என்பதைப் பார்க்க எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. புதிய வீர்ர்களைக் களமிறக்க விரும்புகிறோம், அந்த வகையில்தான் கே.எல்.ராகுல் 3ம் நிலையில் இறங்கினார். நான் 4ம் நிலையில் இறங்கினேன்.

ரன் விகிதத்தில் பறந்து கொண்டிருந்த இங்கிலாந்தை தரையிறக்கியது குல்தீப்பின் அந்த ஒரு ஓவர். அவர் ரிஸ்ட் ஸ்பின்னர் என்பதால் எந்த ஒரு பிட்சிலும் அவர் நிச்சயம் அபாயகரமாகத் திகழ்வார். பந்தை உள்ளே கொண்டுவருவது, வெளியே கொண்டு செல்வது என்று பலதினுசுகளில் அவர் வீசும் போது ராங் ஒன் பந்தை கணிப்பதும் புரிந்த் கொள்வதும் கடினம். இதே திறமையில் அவர் மேலும் வளர்ச்சியடைந்து பேட்ஸ்மெனை எப்போதும் யோசனையில் வைத்திருப்பார் என்று நம்புகிறேன்.

இங்கிலாந்து 30-40 ரன்கள் குறைவாக எடுத்தது குறித்து மகிழ்வே. ராகுலின் இன்னிங்ஸ் நம்ப முடியாத அதிரடியாகும். மிகவும் துல்லியமாகவு, நீட்டாகவும் அடிக்கிறார். பேட்டிங்கை வலுவாக்க இவரைப்போன்ற ஆட்டக்காரர்கள் தேவை. அவர் நல்ல வடிவத்தில் உள்ளார், அருமையான உத்தி, நல்ல பொறுமை, அவர் ஆட வேண்டும் என்ற பசியுடன் இருக்கிறார். அவரது கடைசி சதம் கூட இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் அடித்ததுதான்.

அதிகம் மாற்றம் செய்யவில்லை, நான் நம்பர் 4ற்கு வந்துள்ளேன். இதனால் நடுவரிசையைக் கட்டுப்படுத்த முடியும். பவர் ப்ளேயில் ராகுல் சுதந்திரமாக ஆட வேண்டும், நடுவில் மூத்தவர்கள் இருக்கிறோம், ஆகவே சில வீரர்களுக்கு இத்தகைய சுதந்திரத்தை வழங்குவதை விரும்புகிறோம்.

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

http://tamil.thehindu.com/sports/article24327063.ece

  • தொடங்கியவர்

நாளை 2-வது டி20 போட்டி: தொடரை வெல்லும் துடிப்பில் கோலிப் படை- சுழற்பந்துவீச்சை சமாளிக்க இங்கிலாந்தின் உத்தி கைகொடுக்குமா?

 

 
kul

இந்திய சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் : கோப்புப்படம்

 கார்டிப் நகரில் நாளை நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியிலும் வென்று, தொடரை கைப்பற்றும் முயற்சியில் கோலி தலைமையிலான இந்திய இளம்படை துடிப்புடன் உள்ளது.

அதேசமயம், இந்தியாவின் ரிஸ்ட் ஸ்பின்ர்களான குல்தீப் யாதவ், யஜுவேந்திர சாஹல் ஆகியோரின் பந்துவீச்சை சமாளிக்க இங்கிலாந்து அணி பழைய உத்திகளை மீண்டும் கையிலெடுத்துள்ளது. இது கைகொடுக்குமா என்பது நாளைய போட்டியில்தான் தெரியும்.

   
 

கேஎல் ராகுலின் ஆர்ப்பரிப்பான சதம், குல்தீப்பின் மாயஜால சுழற்பந்துவீச்சால் முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்று முன்னணியில் இருக்கிறது. நாளை போட்டியில் வெல்லும் பட்சத்தில் தொடரைக் கைப்பற்றும் என்பதால், தீவிரமாக விளையாடக்கூடும்.

டி20 போட்டியில் தொடர்ந்து, 6-வதுமுறையாக டி20 தொடரை வெல்லும் முயற்சியில் இந்திய அணி இருக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து விளையாடப்படும் டி20 தொடர்களை இந்திய அணி வென்று வருகிறது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது கோலிபடை. அதன்பின் இலங்கையில் முத்தரப்பு டி20தொடர், அயர்லாந்து தொடர் என வரிசையாக வென்றுள்ளது.

ஐசிசி டி20 தரவரிசையிலும் இந்திய அணியின் வெற்றி பல்வேறு மாற்றங்களை உருவாக்கக்கூடும். 2-0 என்று டி20தொடரை இந்திய அணி கைப்பற்றும் பட்சத்தில், ஆஸ்திரேலியாவின் 2-ம் இடத்தை தட்டிப்பறிக்கக்கூடும். அதேசமயம், 3-0 என்று இந்திய அணி தொடரை வென்றால், முதலிடத்தில் உள்ள பாகிஸ்தான் இடத்துக்கு முன்னேறக்கூடும்.

அதேசமயம், முத்தரப்பு டி20தொடரில் விளையாடிவரும் ஆஸ்திரேலியாவும், பாகிஸ்தானும் பெறும்வெற்றிகளும் தரவரிசையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

ENGLAND-CRICKET-T20jpg

இங்கிலாந்து அணி வீரர்கள்

 

இங்கிலாந்து அணி நாளை நடக்கும் போட்டியில் தோல்வி அடையும்பட்சத்தில், தரவரிசையில் 7-ம் இடத்துக்குச் சரியும்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி டி20 தொடரில் திணறுவது வியப்பாக இருக்கிறது. இதுவரை கடைசியாக 10 டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணி 5 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது.

நாளை நடக்கும் முக்கியப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு கிலிஏற்படுத்தும் விஷயமாக இருக்கப்போதுவது ரிஸ்ட் ஸ்பின்னர்கள் குல்தீப், யஜுவேந்திர சாஹலின் மாயஜால பந்துவீச்சாகும்.

முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பின், இங்கிலாந்து கேப்டன் எயின் மோர்கன், ஜோஸ்பட்லர் ஆகியோர் தங்களுடன் அணி வீரர்களுக்கு சுழற்பந்துவீச்சை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று பாடம் நடத்தினார்கள். பந்துவீச்சாளர்கள் கையில் இருந்து பந்து எந்த முறையில் வெளியேறுகிறது என்பதைக் கணித்து ஆட வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.

இதற்கிடையே இந்தியாவின் ரிஸ்ட் ஸ்பின்னர்களைச் சமாளிக்க மீண்டும் பழைய தொழில்நுட்பத்துக்கு இங்கிலாந்து அணி செல்ல உள்ளது. ஆஷஸ் கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்ன் பந்துவீச்சைச் சமாளிக்க ஸ்பின் பவுலிங் மெஷினை பயன்படுத்தியது இங்கிலாந்து அணி.

அதே இயந்திரத்தை இப்போது இந்திய பந்துவீச்சாளர்களின் சுழற்பந்தை சமாளிக்கப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. கடந்த 2005-ம் ஆண்டு ஆஷஸ் தொடருக்கு பின் மீண்டும் மெர்லின் இயந்திரத்தின் உதவியை இங்கிலாந்து நாடுகிறது இது எந்த அளவுக்குக் கைகொடுக்கும் என்பது நாளை தெரியும்.

இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் பட்லர், ஜேஸன் ராய் வலுவாக இருக்கிறார்கள். ஆனால், நடுவரிசையில் பேர்ஸ்டோ, ஜோய் ரூட், மோர்கன் ஆகியோர் சுழற்பந்துவீச்சை கண்டு அஞ்சி கடந்த போட்டியில் விரைவாக வெளியேறியது பெரும் பின்னடைவாகும். இந்தப் போட்டியில் அவர்கள் நிலைத்து ஆடினால் இந்திய அணிக்குச் சிக்கலாகும்.

rahujpg

முதல் போட்டியில் சதம் அடித்த இந்திய வீர் கே.எல் ராகுல்

 

இந்திய அணியைப் பொருத்தவரை முதல் போட்டியில் ஷிகர் தவண் ஏமாற்றிவிட்டார். ஆனால், இந்த போட்டியில் நிலைத்து ஆடுவார் என்று நம்பலாம். ராகுல் அசுர ஃபார்மில் இருக்கிறார். விராட் கோலி, ரெய்னா, தோனி, ஹர்திக் பாண்டியா, ரோகித் சர்மா ஆகியோர் ஐபிஎல் போட்டியில் விளையாடி ஃபார்மில் இருப்பதால், பேட்டிங்கில் இந்திய அணி வலிமையாகவே இருக்கிறது.

பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார் ஓவரை கடந்த போட்டியில் அடித்துத் துவைத்துவிட்டனர், ஆனால், உமேஷ்யாதவ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி நம்பிக்கை ஏற்படுத்திவிட்டார். இந்திய அணியில் பெரும்பாலும் வீரர்கள் தேர்வில் எந்தவிதமான மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை.

அதிலும் கார்டிப் ஆடுகளங்கள் பேட்ஸ்மேன்களுக்கும், பந்துவீச்சுக்கும் ஓரளவு ஒத்துழைக்கும் ஆடுகளம் என்பதால், ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். ஆனால், கார்டிபில் மழைவருவதற்கான சாத்தியங்கள் இருப்பதால், நாளை போட்டியில் மழை இடையூறு ஏற்பட வாயப்பு உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://tamil.thehindu.com/sports/article24342082.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

  • தொடங்கியவர்

டி20 போட்டி: தோனிக்கு மறக்க முடியாத போட்டியாக அமையுமா?

 

 
s-dhoni-army-smile

தோனி : கோப்புப்படம்

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான மகேந்திர சிங் தோனி நாளைப் பங்கேற்கும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டி அவருக்குச் சர்வதேச அளவில் 500-வது போட்டியாக அமைகிறது.

இந்திய அணியில் இன்று தவிர்க்க முடியாத சக்தியாக, பேட்ஸ்மேனாக இருந்து வருபவர் ‘மகி’ என்று அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி.

   
 

கடந்த 2004-ம் ஆண்டு, டிசம்பர் 23-ம் தேதி சிட்டகாங்கில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் எம்எஸ். தோனி அறிமுகமாகினார். தொடக்கத்தில் நீண்டமுடியையும், 7-வது வீரராகவும் களமிறக்கப்பட்ட தோனிக்கு, இந்தியாவில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிதான் திருப்புமுனையாக அமைந்தது. விசாகப்பட்டணித்தில் கடந்த 2004-ம் ஆண்டு நடந்த பாகிஸ்தானுக்கு எதிராக அவர் அடித்த 148 ரன்கள் அனைவரையும் வியந்து பார்க்க வைத்துவிட்டது.

652082-dhoni-retuersjpg

தோனி

 

அதன்பின் ஒருநாள் போட்டியில் அவரின் ஒவ்வொரு ஆட்டமும் முத்திரை பதிக்கும் விதத்தில்தான் அமைந்து. குறிப்பாக 2005-ம் ஆண்டு ஜெய்பபூரில் இலங்கைக்கு எதிராக 183 ரன்கள் குவித்தது, பாகிஸ்தான் பயணத்தில் பைசாலாபாத்தில் 148 ரன்கள் சேர்த்தது ஆகியவை தோனியின் புகழகை உச்சத்துக்குக் கொண்டு சென்றது.

இந்திய அணி பல்வேறு போட்டிகளில் வெற்றிக்குக் கடைசி நேரத்தில் தடுமாறும் போது, இக்கட்டான தருணத்தில் நின்று அணிக்கு பல்வேறு வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்துள்ளார் தோனி என்பது மிகையல்ல. இந்திய அணிக்கு தோனி தலைமை ஏற்றபின் டி20 உலகக்கோப்பை, உலகக்கோப்பைப் போட்டி, சாம்பிய்ஸ் டிராபி என பல்வேறு முக்கிய கோப்பைகளை வென்றுள்ளது.

இதுவரை 318 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள தோனி, 9,967 ரன்கள் சேர்த்துள்ளார். 10 ஆயிரம் ரன்கள் அடிக்க இன்னும் 33 ரன்கள் மட்டுமே தேவைப்படுகின்றன. இதில் 10 சதங்கள், 67 அரைசதங்கள் அடங்கும்.

TH12DHONIjpg
 

போட்டிகள் என எடுத்துக்கொண்டால், 90 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, 4,876 ரன்கள் குவித்துள்ளார். இதில் 6 சதங்கள்,33 அரைசதங்கள் அடங்கும். கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி ஆகஸ்திரேலியாவில் நடந்த போட்டியோடு தோனி போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.

அதன்பின் ஒருநாள் மட்டும், டி20 போட்டிகளிலும் மட்டுமே விளையாடி வருகிறார். இதுவரை 91 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, 1,455 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 2 அரைசதங்கள் அடங்கும்.

ஒட்டுமொத்தமாக டி20, ஒருநாள் மற்றும் போட்டிகள் என 499 போட்டிகளில் தோனி பங்கேற்றுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக நாளை கார்டிப் நகரில் நடக்கும் 2-வது டி20 போட்டி தோனிக்கு சர்வதேச அளவில் 500-வது போட்டியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் போட்டிக்கு பின் தோனி அயர்லாந்துடனான டி20 போட்டியில் பங்கேற்றபோதிலும், அதில் சிறப்பாக விளையாடவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியிலும் தோனி பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. நாளை நடக்கும் போட்டியில் பேட்டிங்கில் முன்வரிசையில் இறங்க வாய்ப்பு கிடைத்தால், அவரின் பேட்டிங் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.

http://tamil.thehindu.com/sports/article24342356.ece

  • தொடங்கியவர்

இந்திய பந்துவீச்சாளர்களின் விநோத யுக்தி குறித்து சர்ச்சை

 

 
 

இந்திய பந்துவீச்சாளர்கள் பந்துவீசுவதற்காக ஓடிவந்த பின்னர் இறுதிநிமிடத்தில் பந்து வீசுவதை நிறுத்திக்கொள்வது குறித்து இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் டேவிட் வில்லி கேள்வி எழுப்பியுள்ளார்.

முதலாவது ரி20 போட்டியில் புவனேஸ்வர் குமாரும், குல்தீவ் யாதவும் இவ்வாறு செயற்பட்டிருந்தனர். பந்து வீசுவதற்காக ஓடி வந்த பின்னர் இறுதி நிமிடத்தில் அவர்கள் பந்து வீசுவதை நிறுத்திக்கொண்டனர்.

பத்தாவது ஓவரில் குல்தீப் யாதவ் இரண்டு முறை பந்து வீசுவதற்காக ஓடிய பின்னர் பந்து வீசுவதை நிறுத்தினார்.

இரண்டாவது தடவை அவர் அவ்வாறு செய்தவேளை பட்லரும் ஹேல்சும் நடுவரிடம் முறையிட்டிருந்தனர்.

இங்கிலாந்து இனிங்சின் இறுதி பந்தில் புவனேஸ்வர் குமாரும் அவ்வாறு செய்தார்.

wiley.jpg

இதன் காரணமாக புவனேஸ்வர் குமாரிற்கும் வில்லிக்கும் இடையில் சிறிய முறுகல் நிலை ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது

இதனை விமர்சித்துள்ள வில்லி இது அனாவசியமற்ற நடவடிக்கை கிரிக்கெட்டின் அடிப்படைகளிற்கு முரணானது என குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் விதிமுறைகள் என்ன சொல்கின்றன என்பது எனக்கு தெரியாது,ஆனால் இதனை நான் ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.virakesari.lk/article/36140

  • தொடங்கியவர்

இரண்டாவது டி20 கிரிக்கெட் - இங்கிலாந்து வெற்றி பெற 149 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

 

 

அ-அ+

கார்டிஃபில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 149 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா. #ENGvIND

 
 
 
 
இரண்டாவது டி20 கிரிக்கெட் - இங்கிலாந்து வெற்றி பெற 149 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா
 
கார்டிஃப்:
 
இங்கிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி கார்டிஃபில் இரவு 10 மணிக்கு தொடங்கியது.
 
இந்த போட்டியில் இங்கிலந்து அணி வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
 
இந்திய அணியின் சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் முன்னணி வீரர்கள் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.
 
ரோகித் சர்மா 5 ரன்களிலும், ஷிகர் தவான் 10 ரன்களிலும், லோகேஷ் ராகுல் 6 ரன்களிலும் வெளியேறினர். இதனால் இந்தியா 3 விக்கெட்டுக்கு 22 ரன்கள் எடுத்து தத்தளித்தது.
 
அடுத்து இறங்கிய கேப்டன் விராட் கோலியும், சுரேஷ் ரெய்னாவும் நிதானமாக ஆடினர். அணியின் எண்ணிக்கை 79 ஆக இருக்கும்போது சுரேஷ் ரெய்னா 27 ரன்னில் அவுட்டானார்.
 
201807062346418952_1_indi-1._L_styvpf.jpg
 
அடுத்து கோலியுடன் எம்.எஸ்.தோனி சேர்ந்தார். கோலி 38 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
 
இறுதியில், இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்துள்ளது. தோனி 32 ரன்களும், பாண்ட்யா 12 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
 
இங்கிலாந்து அணி சார்பில் ஜேக் பால், பிளங்கட், அடில் ரஷித், டேவிட் வில்லி ஆகியோர் ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 149 ரன்களை இலக்காக கொண்டு இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. #ENGvIND #EnglandvIndia
 

https://www.maalaimalar.com/News/Sports/2018/07/06234642/1174924/england-needs-149-runs-against-india-in-second-t20.vpf

 

1.png&h=42&w=42

92/4 * (13.1/20 ov, target 149)
 
  • தொடங்கியவர்

சரிந்தது இந்திய பேட்டிங்: இங்கிலாந்து அணி வெற்றி

 
 
 
kohlidhoni

கார்டிப்: இரண்டாவது ‘டுவென்டி–20’ போட்டியில் பேட்டிங்கில் ஏமாற்றிய இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. நேற்று, இரண்டாவது போட்டி கார்டிப் நகரில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மார்கன் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

கோஹ்லி நம்பிக்கை

இந்திய அணிக்கு ரோகித் சர்மா (6), ஷிகர் தவான் (10) ஜோடி ஏமாற்றியது. லோகேஷ் ராகுல் (6) நிலைக்கவில்லை. ஜோர்டான், பிளங்கட் பந்தில் தலா ஒரு பவுண்டரி அடித்த ரெய்னா, ஜாக் பால் பந்தில் ஒரு சிக்சர் விளாசினார். பொறுப்பாக ஆடிய கேப்டன் விராத் கோஹ்லி, அடில் ரஷித் வீசிய 11வது ஓவரில் தொடர்ச்சியாக ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார். நான்காவது விக்கெட்டுக்கு 57 ரன் சேர்த்த போது அடில் ரஷித் ‘சுழலில்’ ரெய்னா (27) சிக்கினார். ஜோர்டான் பந்தை சிக்சருக்கு அனுப்பிய கோஹ்லி, 38 பந்தில் 47 ரன்கள் (2 சிக்சர், ஒரு பவுண்டரி) எடுத்து வில்லே பந்தில் அவுட்டானார். அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா, ஜோர்டான் பந்தில் ஒரு சிக்சர் பறக்கவிட்டார். ஜாக் பால் வீசிய 20வது ஓவரில் தோனி 3 பவுண்டரி அடித்தார். இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்தது. தோனி (32), பாண்ட்யா (12) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஹேல்ஸ் அரைசதம்

இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய், ஜாஸ் பட்லர் ஜோடி துவக்கம் தந்தது. உமேஷ் யாதவ் வீசிய முதல் ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார் ராய். பின் எழுச்சி கண்ட உமேஷ் ‘வேகத்தில்’ ஜேசன் ராய் (15), பட்லர் (14) அவுட்டாகினர். யுவேந்திர சகால் ‘சுழலில்’ ஜோ ரூட் (9) போல்டானார். அடுத்து வந்த அலெக்ஸ் ஹேல்ஸ், சகால், குல்தீப் பந்தில் தலா ஒரு சிக்சர் விளாசினார். ஹர்திக் பாண்ட்யா பந்தில் கேப்டன் இயான் மார்கன் (17) வெளியேறினார்.

குல்தீப் வீசிய 17வது ஓவரில் தொடர்ச்சியாக 2 சிக்சர் பறக்கவிட்ட பேர்ஸ்டோவ் (28), புவனேஷ்வர் பந்தில் வெளியேறினார். புவனேஷ்வர் வீசிய 20வது ஓவரில் தொடர்ச்சியாக ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த ஹேல்ஸ் அரைசதம் கடந்து வெற்றியை உறுதி செய்தார். இங்கிலாந்து அணி 19.4 ஓவரில், 5 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹேல்ஸ் (58), வில்லே (3) அவுட்டாகாமல் இருந்தனர். இதனையடுத்து தொடர் 1–1 என சமநிலை அடைந்தது. மூன்றாவது போட்டி நாளை பிரிஸ்டோல் நகரில் நடக்கவுள்ளது.

8

இங்கிலாந்தை வீழ்த்திய இந்திய அணி, தொடர்ச்சியாக 8 சர்தேச ‘டுவென்டி–20’ போட்டிகளில் (எதிர்: 3 முறை வங்கதேசம் + தலா 2 முறை அயர்லாந்து, இங்கிலாந்து + ஒரு முறை இலங்கை, 2018) வெற்றியை பதிவு செய்தது. இதன்மூலம் சர்வதேச ‘டுவென்டி–20’ வரலாற்றில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பதிவு செய்த அணிகளுக்கான பட்டியலில் 2வது இடத்தை இங்கிலாந்து, அயர்லாந்து, பாகிஸ்தான் அணிகளுடன் பகிர்ந்து கொண்டது. முதலிடத்தில் ஆப்கானிஸ்தான் (11 வெற்றி) உள்ளது.

6

இங்கிலாந்துக்கு எதிராக அசத்திய இந்திய அணி, சர்வதேச ‘டுவென்டி–20’ அரங்கில் தொடர்ச்சியாக 6 தொடரை கைப்பற்றியது. அதிகபட்சமாக பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக 8 தொடரை வென்றுள்ளது.

500

 

இங்கிலாந்துக்கு எதிரான 2வது ‘டுவென்டி–20’ போட்டி, இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தோனியின் 500வது சர்வதேச போட்டியாக அமைந்தது. இதுவரை இவர், 90 டெஸ்ட், 318 ஒருநாள் மற்றும் 92 சர்வதேச ‘டுவென்டி–20’யில் பங்கேற்றுள்ளார். இதன்மூலம் சச்சின் (664 போட்டி), டிராவிட் (509) ஆகியோருக்கு பின் இந்த இலக்கை எட்டிய 3வது இந்திய வீரரானார்.

http://sports.dinamalar.com/2018/07/1530901513/kohli.html

  • தொடங்கியவர்

பேட்டிங்கில் சொதப்பல்: இந்தியாவிடம் இருந்து வெற்றியை பறித்தார் ஹேல்ஸ்; 2 பந்துகள் மீதமிருக்கையில் இங்கிலாந்து வெற்றி

 

 

 
download%203jpg

“பினிஷிங் நாயகன்” தோனிக்கு இன்று 37-வது பிறந்தநாள். முதலில் அவருக்கு வாழ்த்துக்களை கூறிவிடலாம். பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. தோனி

அலெக்ஸ் ஹேல்ஸின் அற்புதமான ஆட்டத்தால், கார்டிப் நகரில் நேற்று நடந்த 2-வது 20 போட்டியில் 2 பந்துகள் மிதமிருக்கையில், இந்திய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி தோற்கடித்தது.

     
 

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒருவெற்றியுடன் 1-1 என்ற சமநிலையில் இருக்கின்றன.

புவனேஷ்குமார் வீசிய கடைசி ஓவர்தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்துவிட்டது. அந்த ஓவரில் மட்டும் பவுண்டரி, சிக்ஸர் அடிக்கவிடாமல் ஹேல்ஸை கட்டுப்படுத்தி இருந்தால், வெற்றி இந்திய அணியின் பக்கம்தான். ஐபிஎல் போட்டிகள் உள்நாட்டு வீரர்களை மட்டுமின்றி வெளிநாட்டு வீரர்களையும் செம்மைபடுத்தி இருக்கிறது என்பது இக்கட்டான நேரத்தில் நமக்கு கிடைத்த தோல்வியின் மூலம் அறியலாம்.

downloadjpg
 

ஹேல்ஸ் நடுவரிசையில் இறங்கி கடைசி வரை நிலைத்து பேட் செய்து 41 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு முக்கியக்காரணமாக அமைந்தார். இதில் 3 சிக்ஸர்,4 பவுண்டரிகள் அடங்கும். ஆட்டநாயகன் விருதும் இவருக்கே தரப்பட்டது.

இந்திய அணி ஸ்கோர் செய்த 148 ரன்கள் என்பது டி20 போட்டியில் தோல்வியில் இருந்து தற்காத்துக்கொள்ளும் அளவுக்கு சிறப்பான ஸ்கோர் இல்லை. இன்னும் கூடுதலாக 20 ரன்கள் அடித்திருந்தால் மட்டுமே தோல்வியில் இருந்து தப்பித்தும், ஆட்டத்தை இன்னும் நெருக்கடியாக கொண்டு சென்றிருக்க முடியும்.

முதல் போட்டியில் குல்தீப் யாதவ் பந்துவீச்சைப் பற்றி புரிந்துகொள்ள முடியாமல், விக்கெட்டை  பறிகொடுத்த இங்கிலாந்து வீரர்கள் இந்தப் போட்டியில் நன்கு கணித்து விளையாடினார்கள். இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் நல்ல “ஹோம் வொர்க்” செய்து இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. அதுமட்டுமல்லாமல், 2005-ம் ஆண்டுக்கு பின் “மெர்லின்” இயந்திரத்தின் உதவியால் சுழற்பந்துவீசச் செய்து பேட்ஸ்மேன்கள் பயிற்சி எடுத்து கைகொடுத்து இருக்கிறது.

இந்திய அணியைப் பொருத்தவரை “பவர் ப்ளே” ஓவர்கள் வரை விக்கெட்டுகளை இழக்காமல் பேட் செய்தால்தான் பின்வரிசையில் களமிறங்கும் வீரர்களுக்கு நெருக்கடி இல்லாமல் இருக்கும். ஆனால், தொடக்கத்திலேயே தவண், ரோகித்சர்மா, ராகுல் விக்கெட்டுகள் விரைவாக வீழ்ந்தது அடுத்து வந்த கோலி, ரெய்னா கூட்டணிக்கு அழுத்தத்தைதக் கொடுத்தது.

download%201jpg
 

அயர்லாந்து போன்ற அணிகளுக்கு எதிராக வீராதி வீரர்கள் போல் சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் ரோகி்த் சர்மாவும், தவணும் அடித்தது பெருமை இல்லை. ஆனால், கடந்த 2 போட்டிகளிலும் இவர்களின் பங்களிப்பு கேள்வியை எழுப்பி இருக்கிறது.

இலங்கைக்கு எதிரான நிடாஹஸ் கோப்பையில் இருந்து ரோகிக் சர்மா பேட்டிங்கில் சொதப்பி வருகிறார், ஐபிஎல் போட்டிகளிலும் சொல்லிக்கொள்ளும் விதமாக ஸ்கோர் செய்யவில்லை, அயர்லாந்து அணிக்கு எதிராக மட்டுமே ஒரு போட்டியில் அடித்தார். ஆனால், அவரின் நிலையற்ற பேட்டிங்கை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வருகிறது அணி நிர்வாகம்.

ஆனால், இலங்கையில் சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக இருந்தவரும், ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்திய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை அணியில் சும்மாவே பெஞ்சில் அமரவைப்பது அவரின் மனஇருக்கத்தை மேலும் அதிகப்படுத்தும். சிறிதுகூட யோசிக்காமல் ரோகித் சர்மா, ரெய்னா, தவண் இதில் யாராவது ஒருவரை அமரவைத்துவிட்டு தினேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பு அளித்துப் பார்க்கலாம்.

download%202jpg
 

அதிலும் இந்த போட்டியில் ஷிகர் தவண் ரன் அவுட் ஆனது கொடுமையிலும் பெருங்கொடுமை. பேட்டை முன்நோக்கி கொண்டு செல்வதற்கு பதிலாக பின்னோக்கி சென்று அதில் கால்காப்பில் சிக்கி இறுதியில் ரன் அவுட் ஆகினார். தொடக்க வீரர்களாக களமிறங்கும் வீரர்கள் நெருக்கடியை சமாளித்து, நிலைத்தன்மை கிடைக்கும் வரை பொறுமையாக பேட் செய்வது அவசியம்.

ரோகித் சர்மா முதல் ஓவரிலேயே கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்திருப்பார், ஆனால், வாய்ப்பு தவறியது, ஆனால், கடைசி பந்தில் விக்கெட்டை வாரிக்கொடுத்துவிட்டு நடையைக் கட்டிவிட்டார். “லெக்கட்டரில்” செல்லும் அதுபோன்ற பந்தை ரோகிக் சர்மா தொடாமல் இருந்திருக்கலாம்.

ராகுல் முதல்போட்டியில் மிகச்சிறப்பாக பேட் செய்தார், அதே எதிர்பார்ப்பு இந்த போட்டியிலும் அனைத்து தரப்பிலும் இருந்தது. ஆனால், அடித்து ஆட முற்பட்டு போல்டாகிவிட்டார். அவசரமில்லாமல் பேட் செய்திருக்கலாம்.

ரெய்னாவின் “வீக்பாயின்ட்” அனைத்து அணிகளும் வெட்டவெளிச்சமாகிவிட்டது. லெக்சைடில் “பவுன்ஸர்” பந்தை அவரால் கணித்து ஆடத் தெரியாது என்பதை தெரிந்து கொண்டு இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் சரியாகப் பந்துவீசினார்கள்.

ஆனால், பெரும்பாலான பந்துகளையும் ரெய்னா குதித்து, குதித்து விளையாடினால், ரன்களை எப்படி சேர்க்க முடியும். பேட்டுக்கு வரும் பந்துகளைக் கூட ரெய்னா குதித்து ஆடினார் என்பதுதான் வெட்கக்கேடு. ஒருவேளை ரெய்னா பேட்டிங் செய்ய லகுவாக பந்துவீசனால்தான் அடிப்பாரா என்னமோ தெரியவில்லை.

 2019-ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டிக்கு ரெய்னா தேவையா இல்லையா என்பதை மறு ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு அணி நிர்வாகத்தை அவரே தள்ளுகிறார்.

விராட் கோலியும், ரெய்னாவும் பேட் செய்தபோது, ஏறக்குறைய 4 ஓவர்களுக்கு மேல் பவுண்டரியும், சிக்ஸர்களும் அடிக்கப்படவில்லை. இது  இந்திய அணியின் ரன்குவிப்பு குறைய முக்கியக்காரணமாக அமைந்தது. விராட் கோலி இன்னும் சிறப்பாக பேட் செய்திருக்கலாம்.

தோனிக்கு நேற்றைய போட்டி சர்வதேச அரங்கில் அவரின் 500-வது போட்டியாகும். ஏதேனும் மறக்கமுடியாத இன்ப நினைவுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில், கசப்பான தோல்விதான் கிடைத்துள்ளது. கடைசி நேரத்தில் தோனியும் நிலைத்து ஆடாமல் இருந்திருந்தால், அணியின் ஸ்கோர் இன்னும் குறைந்திருக்கும்.

“நீலநிற” உடையில் பேட் செய்வதைக் காட்டிலும், “மஞ்சள்நிற” உடையில் பேட் செய்யும்போதுதான் தோனியின் பேட்டிங்கில் ஆக்ரோஷமும், ஷாட்களில் அனல் தெறிக்கும் வேகமும் இருக்கிறது. ஒருவேளை இந்திய அணி ஆடையின் வண்ணத்தை “மஞ்சள்நிறமாக” மாற்றினால், இன்னும் சிறப்பாக விளையாடுவாரோ.

ஒட்டுமொத்தத்தில் 3-வது டி20 போட்டியை விறுவிறுப்பாக கொண்டு சென்று, டிஆர்பி ரேட்டிங்கை ஏற்றமுடிவு செய்துவிட்டார்கள்.

இங்கிலாந்து அணியைப் பொருத்தவரை தொடக்க வீரர்கள் ராய், பட்லர், ரூட் ஆகியோர் விக்கெட்டுகளை விரைவாக இழந்தபோதிலும் அணியை வெற்றியை நோக்கி வழிநடத்தியவர் ஹேல்ஸ். வெற்றிக்கு உரித்தானவரும் ஹேல்ஸ் மட்டுமே. மோர்கனுடனும், பேர்ஸ்டோவுடனும் ஹேல்ஸ் அமைத்த கூட்டணி வெற்றியை இன்னும் அந்த அணிக்கு எளிதாக்கியது.

டாஸ்வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்இழப்புக்கு 148 ரன்கள் சேர்த்தது. 149 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 2 பந்துகள் மீதிமிருக்கும் நிலையில், 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணியின் முதல் 3 முக்கிய வீரர்களான தவண்(10), ரோகி்த் சர்மா(5), ராகுல்(6) ஆகியோர் பவர்ப்ளே ஓவருக்குள் ஆட்டமிழந்தது இந்திய அணியின் ஸ்கோர் குறைவுக்கும், நெருக்கடிக்கும் முக்கியக்காரணம். கடந்த 2 ஆண்டுகளுக்குப்பின், பவர்ப்ளேயில் இந்திய அணி 31 ரன்கள் சேர்த்துள்ளது என்றால் என்னமாதிரி மோசமாக ஆட்டமாக அமைந்திருக்கும்

இதற்குமுன் கடந்த 2016-ம் ஆண்டு ஜிம்பாப்வே அணியுடன் ஹராரேயில் நடந்த போட்டியில் பவர்ப்ளேயில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்களைச் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

விராட் கோலி, ரெய்ன ஜோடி ஓரளவுக்கு நிலைத்து பேட் செய்து 57 ரன்கள் சேர்த்தனர். ஆனால், நீண்டநேரமாக பவுண்டரி, சிக்ஸர் அடிக்காமல் விளையாடியது ஸ்கோர் குறைய முக்கியக்காரணம்.

27 ரன்கள் சேர்த்த ரெய்னா நீண்டகாலத்துக்கு பின் டி20 போட்டியில் ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். நல்ல ஃபார்மில் இருக்கும் கோலி இன்னும் சிறிது நிலைத்து ஆடி இருந்தால், அரைசதம் அடித்திருக்கலாம். ஆனால், 2 சிக்ஸர்கள் உள்பட 47 ரன்களில் கோலி  ஆட்டமிழந்தார்.

தோனி தனக்கே உரிய “ஹெலிகாப்டர்” ஷாட்களையும், “புல்” ஷாட்களையும் ஆடி ரசிகர்களை மகிழ்வித்தார். ஆனால், 24 பந்துகளில் 32 ரன்கள் என்பது நெருக்கடியான நேரத்தை எளிதாக சமாளிக்கும் திறமையுடைய தோனிக்கு போதுமான ரன்களாக இல்லை. கடைசி ஓவரில் அதிரடியாக விளையாடியதை முன்கூட்டியே அடித்திருக்கலாம்.

இன்னும் சிறிது அதிரடிக்கு முயன்றிருந்தால், அணியின் ஸ்கோர் உயர்ந்திருக்கும். 5 பவுண்டரிளுடன் தோனி 32 ரன்களிலும், ஹர்திக் பாண்டியா 12 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இங்கிலாந்து அணித் தரப்பில் டேவிட் வில்லி, பிளங்கெட் சிறப்பாகப் பந்துவீசினார்கள். வில்லி, பிளங்கெட், ஜேட்பால், ரஷித் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

149 ரன்கள் என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. ஜேஸன் ராய், பட்லர் களமிறங்கினார்கள். உமேஷ் யாதவ் வீசிய முதல் ஓவரிலேயே ராய் 14 ரன்கள் சேர்த்து பொளந்துகட்டிவிட்டார். ஆனால், அதற்கு பதிலடியாக தனது அடுத்த ஸ்பெல்லில் ராய்(15ரன்கள்) விக்கெட்டை கழற்றிவிட்டார் உமேஷ் யாதவ்.

ஆனால், ஆபத்தான பட்லருடன், ரூட்இணைந்தார். பட்லர் அவ்வப்போது பவுண்டரிகள்  அடித்து மிரட்டினார். உமேஷ் யாதவ் வீசிய 5-வது ஓவரில் பட்லருக்கு விராட் கோலி ஒரு கேட்சை நழுவவிட்டார். சிறிது முன்கூட்டியே குதித்திருந்தால் கைகளில் பந்துசிக்கி இருக்கும். அதேஓவரில் அடுத்த கேட்சை சரியாகப் பிடித்து பட்லரை(14) வெளியேற்றினார் கோலி.

பவர்ப்ளேயில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 42 ரன்கள் சேர்த்தது. சாஹல் வீசிய 7-வது ஓவரில் ரூட்(7) எளிதாக விக்கெட்டை பறிகொடுத்தார்.

4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹேல்ஸ், கேப்டன் மோர்கன் கூட்டணி ஓரளவுக்கு நிலைத்து பேட் செய்தனர். குல்தீப் யாதவ் சுழற்பந்துவீச்சை சரியாகக் கணித்து ஆடி, சிக்ஸருக்கும் பவுண்டரிக்கும் விரட்டினர்.

ஹர்திக் பாண்டியா வீசிய 14-வது ஓவரில் தவண் அருமையான கேட்ச் பிடித்து மோர்கனை 17 ரன்களில் பெவிலியன் அனுப்பினார்கள். இந்த கேட்சைப் பார்த்து ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

இங்கிலாந்து அணி 15.3 ஓவர்களில்தான் 100 ரன்கள் எட்டியது. ஆனால், அடுத்த 4ஓவர்களில் வெற்றிக்கு தேவையான 49 ரன்களை எட்டியது. அதாவது கடைசி 4 ஓவர்களில் இந்திய வீரர்கள் கவனக்குறைவாக பந்துவீசியதால், வெற்றி கைநழுவிப்போனது.

குல்தீப் வீசிய 17-வது ஓவரில் பேர்ஸ்டோ தொடர்ந்து அடித்த  சிக்ஸர்கள் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. ஆனால், நிலைத்து ஆடாத பேர்ஸ்டோ 24 ரன்களில் புவனேஷ்குமாரிடம் விக்கெட்டை இழந்தார்.

கடைசி 2 ஓவர்களில் 20 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை வீசிய உமேஷ் யாதவ் 8 ரன்களைக் விட்டுக்கொடுத்தார். கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது. புவனேஷ்குமாரின் முதல் இரு பந்துகளிலும் ஹேல்ஸ் சிக்ஸர், பவுண்டரி அடித்து இந்திய அணியின் கைகளில் இருந்த வெற்றியை அவர் பறித்துக்கொண்டார்.  2 பந்துகள் மீதமிருக்கும் நிலையில்  இங்கிலாந்து அணி 149 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணித் தரப்பில் உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

http://tamil.thehindu.com/sports/article24357715.ece

  • தொடங்கியவர்

டி 20 தொடரை வெல்வது யார்?- இங்கிலாந்து அணியுடன் இந்தியா இன்று பலப்பரீட்சை

 

 
TH08MSDjpg

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரின் கடைசி ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும்.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான மூன்று டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

 

இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் இரு அணிகளும் கார்டிப் மைதானத்தில் மோதின. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 38 பந்துகளில், 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 47 ரன்கள் சேர்த்தார். தோனி 24 பந்தில் 32 ரன்களும், சுரேஷ் ரெய்னா 27, ஹர்திக் பாண்டியா 12 ரன்களும் சேர்த்தனர். தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா 5, ஷிகர் தவண் 10 ரன்களிலும், அவர்களைத் தொடர்ந்து கே.எல்.ராகுல் 6 ரன்னிலும் வெளியேற பவர்பிளேவில் இந்திய அணி வெறும் 31 ரன்களே சேர்த்தது. ஜேக்பால் வீசிய கடைசி ஓவரில் தோனி, ஹர்திக் பாண்டியா ஜோடி 22 ரன்கள் விளாசியதால் தான் ஓரளவு கவுரமான இலக்கை கொடுக்க முடிந்தது.

இந்திய அணியை குறைந்த ரன்களுக்குள் கட்டுப்படுத்தியதில் டேவிட் வில்லி, லயிம் பிளங்கெட் முக்கிய பங்கு வதித்தனர். இருவரும் கூட்டாக 8 ஓவர்களை வீசி 35 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்த நிலையில் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். 149 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து அணி 18 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது. ஜேசன் ராய் 15, ஜாஸ் பட்லர் 14, ஜோ ரூட் 9, மோர்கன் 17, ஜானி பேர்ஸ்டோவ் 28 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் வில்லி களத்தில் நின்ற நிலையில் உமேஷ் யாதவ் வீசிய 19-வது ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 8 ரன்கள் சேர்க்கப்பட்டது. புவனேஷ்வர் குமார் வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் முதல் பந்தை சிக்ஸருக்கும், அடுத்த பந்தை பவுண்டரிக்கும் விரட்டி மிரளச் செய்தார் அலெக்ஸ் ஹேல்ஸ்.

முடிவில் 19.4 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. அலெக்ஸ் ஹேல்ஸ் 41 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.

5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரை 1-1 என சமநிலையை அடையச் செய்துள்ளது. முதல் ஆட்டத்தில் செய்த தவறுகளில் இருந்து சரியாக பாடம் கற்றுக்கொண்ட இங்கிலாந்து அணி பதிலடி கொடுத்த விதம் பாராட்டக்கூடியதாகவே இருந்தது.

அதிலும் குல்தீப் யாதவ் பந்து வீச்சை இங்கிலாந்து வீரர்கள் சாமர்த்தியமாக எதிர்கொண்டனர். இந்நிலையில் தொடரை வெல்வது யார் என்பதை தீர்மானிக்கும் கடைசி டி 20 ஆட்டம் பிரிஸ்டல் நகரில் இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. போட்டியை சோனி சிக்ஸ் சானல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

http://tamil.thehindu.com/sports/article24361881.ece

  • தொடங்கியவர்

கார்த்திக் உள்ளே... ரெய்னா வெளியே... இங்கிலாந்தை ஆச்சரியப்படுத்துங்கள் கோலி! #ENGvIND

 
கார்த்திக் உள்ளே... ரெய்னா வெளியே... இங்கிலாந்தை ஆச்சரியப்படுத்துங்கள் கோலி! #ENGvIND
 

டி20 தொடரை இந்தியா ஈஸியாகக் கைப்பற்றிவிடும் என்கிற நம்பிக்கையை முதல் டி20 போட்டி கொடுத்தது. குல்தீப்பின் சுழற்பந்தும், கேஎல் ராகுலின் அதிரடி ஆட்டமுமே அதற்குக் காரணம். ஆனால், அடுத்தப் போட்டியிலேயே விக்கெட்டே கொடுக்காமல் சிக்ஸர், பவுண்டரி என குல்தீப்பின் ஓவர்களை அசால்ட் செய்தது இங்கிலாந்து. ராகுலின் பேட்டிங்கையும் சிங்கிள் டிஜிட்டில் முடித்தார்கள். இரண்டாவது போட்டியை வென்று சீரிஸை 1-1 டிசைடருக்கு கொண்டுவந்திருக்கிறது இங்கிலாந்து. 

இந்தியா

 

 

 

சர்ப்ரைஸ் கொடுங்கள் கோலி?

பேட்டிங், பெளலிங் என இரண்டிலுமே இங்கிலாந்தைவிட ஸ்ட்ராங்கான அணி இந்தியா. ஆனால், இங்கிலாந்தைப்போல ஒவ்வொரு ப்ளேயருக்கும் ஒரு அப்ரோச் என்கிற அணுகுமுறை இந்தியாவிடம் இல்லை. முதல் இரண்டு போட்டியிலும் ப்ளேயிங் லெவனை கோலி மாற்றவில்லை. ஆனால் மூன்றாவது போட்டியில் மாற்றங்கள் இருந்தால்தான் அது வெற்றிக்கு வழிவகுக்கும்.

 

 

 

சுரேஷ் ரெய்னா மூன்றாவது டவுனில் இறங்குகிறார். டி20 போட்டிகளில் அவருக்கான இடம் அது இல்லை. அந்த இடத்தில் அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கை களமிறக்கலாம். தினேஷ் கார்த்திக் ஃபார்மில் இருக்கிறார் என்பதோடு, இங்கிலாந்து கண்டிஷனில் சமாளித்து ஆடக்கூடியவர். ஆனால் ரெய்னாவுக்கு பதில் இன்னொரு ஆல் ரவுண்டர் தேவையென்றால் க்ருணால் பாண்டியாவை அணிக்குள் கொண்டுவரலாம். 

ரெய்னா

 

ஷிகர் தவான் முதல் இரண்டு போட்டிகளிலும் சரியாக விளையாடவில்லை. ஆனால் அவருக்கான ஓப்பனிங் இடத்தை இப்போது மாற்றமுடியாது என்பதால் ஷிகர் தவான் அணியில் நீடிப்பார் என்றே எதிர்பார்க்கலாம்.

 

பெளலிங்கைப் பொறுத்தவரை இன்று போட்டி நடைபெற  இருக்கும் பிரிஸ்டல் மைதானம் பெளலிங்கிற்கு சாதகமானதே. ஆனால் ஸ்பின்னுக்கு அல்ல, வேகப்பந்து வீச்சுக்கு. இங்கிலாந்து ஒரே ஸ்பின்னரைக் கொண்டே போன மேட்ச் விளையாடியது. ஆனால் இந்தியாவில் சாஹல், குல்தீப் என ஒரு வலது, இடது கை ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். வேகப்பந்து வீச்சைப் பொருத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடிய தீபக் சாஹருக்கு வாய்ப்பளிக்கலாம். ஆனால் யாருக்கு பதில் சாஹர் உள்ளே வருவார்? இரண்டு ஸ்பின்னர்களில் ஒரு ஸ்பின்னரை இழக்க கோலி விரும்புவாரா என்பதெல்லாம் பெரிய கேள்வி. ஆனால், இன்று அதிரடியான சில முடிவுகளை எடுத்தால் மட்டுமே டி20 தொடரைக் கைப்பற்ற முடியும்.

 

 

 

பென் ஸ்டோக்ஸ் வருகிறார்?

England

இங்கிலாந்தைப் பொறுத்தவரை பேட்டிங் ஆர்டரில் அவர்களுக்கு ஒரு பிரச்னை இருக்கிறது. இங்கிலாந்தின் முன்னணி டெஸ்ட் பேட்ஸ்மேனான ஜோ ரூட் 20/20 போட்டிகளில் திணறுகிறார். இந்த சீரிஸிலும் சொதப்பலே. அதனால் அவருக்கு பதிலாக காயத்தில் இருந்து குணமடைந்திருக்கும் பென் ஸ்டோக்ஸ் அணிக்குள் வரலாம். ஐபிஎல் போட்டிகளில் ஸ்டோக்ஸ் பெரிய ஏமாற்றத்தைத் தந்தவர். ஆனால், இந்திய பிட்ச்களையும், இங்கிலாந்து பிட்ச்களையும் ஒன்றாகப் பார்க்க முடியாது. அவரது ஆல் அவுண்ட் பெர்ஃபாமென்ஸ் இங்கிலாந்தில் பக்காவாகப் பொருந்தும்.பென் ஸ்டோக்ஸ் உள்ளே வந்தால் மொயின் அலி அணிக்குள் வருவார். இரண்டு ஸ்பின்னர்களோடு இங்கிலாந்து விளையாடும்.

 

டாஸ்!

மிகவும் சிறிய மைதானம் இது. அதனால் ஸ்பின்னர்களின் ஓவர்களை அடித்து விளையாடலாம். இங்கிலாந்து போன மேட்ச்சில் செய்ததுபோல ஷார்ட் பிட்ச் பால்கள் கைகொடுக்கும். அதனால் புவனேஷ்வர், உமேஷ் என இந்திய பெளலர்களும் ஷார்ட் பிட்ச் பந்துகளால்தான் விக்கெட் எடுக்க முடியும். யார் முதலில் ஆடினாலும் 160 ரன்கள் என்பது வின்னிங் ஸ்கோராக இருக்கும்.

https://www.vikatan.com/news/sports/130165-india-versus-england-match-preview.html

  • தொடங்கியவர்

டி20 போட்டி: டாஸ் வென்றது இந்திய அணி; 2 மாற்றங்கள்: இங்கிலாந்து அணியில் ஒரு மாற்றம்

 

 
kohli

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன்   -  படம்உதவி: ட்விட்டர்

பிரிஸ்டல் நகரில் இன்னும் சிறிது நேரத்தில் தொடங்க உள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றது.

இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டி, 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதலாவது போட்டியில் இந்திய அணி வென்றது, 2-வது போட்டியில் இங்கிலாந்து வென்றது. இதனால், 1-1 என்ற சமநிலையுடன் இரு அணிகளும் உள்ளதால். இன்றைய இறுதிப்போட்டி விறுவிறுப்பை எட்டியுள்ளது.

 

2-வது போட்டியில் இரு சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கிய இந்திய அணி இந்தப் போட்டியில் யஜுவேந்திர சாஹலுக்கு மட்டும் வாய்ப்புக் கொடுத்து குல்தீப் யாதவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்குபதிலாக சென்னை சூப்பர் சிங்ஸ் வீரர் தீபக் சாஹர் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த 2-வது போட்டியில் புவனேஷ் குமார் காயம் அடைந்ததால், அவருக்கு பதிலாக சித்தார்த் கவுல் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆகவே, இந்தப் போட்டியில் இந்தியஅணி தீபக் சாஹர், சித்தார்த் கவுல், உமேஷ்யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகிய 4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியுள்ளது. ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக புற்கள் நிறைந்து கடினமாக இருக்கிறது என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

அதேபோல இங்கிலாந்து அணியிலும் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணியில் ஜோய் ரூட்டுக்கு பதிலாக ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி விவரம்:

ரோகித் சர்மா, ஷிகர் தவண், கேஎல் ராகுல், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, தோனி, ஹர்திக் பாண்டியா, சாஹல், தீபக் சாஹர், சித்தார்த் கவுல், உமேஷ் யாதவ்

http://tamil.thehindu.com/sports/article24365995.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

  • தொடங்கியவர்

இந்தியாவிற்கு 199 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து

 
அ-அ+

பிரிஸ்டோலில் நடைபெற்று வரும் 3-வது டி20 போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு 199 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து. #ENGvIND

 
 
 
 
இந்தியாவிற்கு 199 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து
 
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி பிரிஸ்டோலில் இந்திய நேரப்படி இரவு 6.30 மணிக்கு தொடங்கியது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார்.

காயம் காரணமாக புவனேஸ்வர் குமார் இடம்பெறவில்லை. இதனால் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் அறிமுகமானார். குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு சித்தார்த் கவுல் சேர்க்கப்பட்டார். இங்கிலாந்து அணியில் ஜோ ரூட்டிற்குப் பதில் பென் ஸ்டோக்ஸ் சேர்க்கப்பட்டார்.

இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் தொடக்கம் முதலே வாணவேடிக்கை நிகழ்த்தினார்கள்.

முதல் ஓவரை அறிமுக வீரர் தீபக் சாஹர் வீசினார். இந்த ஓவரில் பட்லர் 3 பவுண்டரிகள் விரட்டினார். அடுத்த ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். இந்த ஓவரில் இரண்டு பவுண்டரி விரட்டினார். உமேஷ் யாதவ் வீசிய 4-வது ஓவரில் ராய் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸ் துரத்தினார்.

201807082023406250_1_buttler-s._L_styvpf.jpg

6-வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். இந்த ஒவரில் ராய் இரண்டு சிக்ஸ், இரண்டு பவுண்டரி விரட்டினார். ஹர்திக் பாண்டியா 22 ரன்கள் விட்டுக்கொடுக்க இங்கிலாந்து 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 73 ரன்கள் குவித்தது.

சாஹல் வீசிய 7-வது ஓவரின் ஐந்தாவது பந்தை சிக்சருக்கு தூக்கி 23 பந்தில் அரைசதம் அடித்தார் ராய். 8-வது ஓவரை சித்தார்த் கவுல் வீசினார். இந்த ஓவரில் பட்லர் 34 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். சாஹர் வீசிய 10-வது ஓவரில் ராய் 31 பந்தில் 4 பவுண்டரி, 7 சிக்சருடன் 67 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அப்போது இங்கிலாந்து 9.2 ஓவரில் 103 ரன்கள் எடுத்திருந்தது.

201807082023406250_2_hardikpandy-s._L_styvpf.jpg

அதன்பின் வந்த ஹேல்ஸ் (30) மோர்கன் (6), ஸ்டோக்ஸ் (14), பேர்ஸ்டோவ் (25) ஆகியோரை ஹர்திக் பாண்டியா வீழ்த்த இங்கிலாந்து ஸ்கோரில் சற்று வேகம் குறைந்தது. இருந்தாலும் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது.  இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 199 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து.

இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா 4 ஓவரில் 38 விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். சித்தார்த் கவுல் 35 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும், சாஹர் 43 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 48 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

https://www.maalaimalar.com/News/Sports/2018/07/08202341/1175271/ENGvIND-199-run-target-to-india-won.vpf

 

6.png&h=42&w=42

70/2 * (6.1/20 ov, target 199)
 
  • தொடங்கியவர்

 

6.png&h=42&w=42

190/3 * (18/20 ov, target 199)
 

India require another 5 runs with 7 wickets and 11 balls remaining

 

6.png&h=42&w=42

201/3 * (18.4/20 ov, target 199)
 
  • தொடங்கியவர்

மூன்றாவது டி20 போட்டி - இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா

 

 
 

பிரிஸ்டோலில் நடைபெற்ற 3-வது டி20 போட்டியில் இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதுடன் தொடரையும் கைப்பற்றியது இந்தியா. #ENGvIND

 
 
 
 
மூன்றாவது டி20 போட்டி - இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா
 
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி பிரிஸ்டோலில் இந்திய நேரப்படி இரவு 6.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது.
 
இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் தொடக்கம் முதலே வாணவேடிக்கை நிகழ்த்தினார்கள். இதனால் இங்கிலாந்து 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 73 ரன்கள் குவித்தது.
 
பட்லர் 34 ரன்களும், ராய் 31 பந்தில் 4 பவுண்டரி, 7 சிக்சருடன் 67 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த ஹேல்ஸ் (30) மோர்கன் (6), ஸ்டோக்ஸ் (14), பேர்ஸ்டோவ் (25) ஆகியோரை ஹர்திக் பாண்டியா வீழ்த்தினார். இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது.
 
இந்தியா சார்பில் ஹர்திக் பாண்டியா 4 விக்கெட்டும், சித்தார்த் கவுல் 2 விக்கெட்டும், சாஹர், உமேஷ் யாதவ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
 
இதையடுத்து, 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ஷிகர் தவான் விரைவில் அவுட்டாகி  அதிர்ச்சி அளித்தார்.
 
மறுபுறம், ரோகித் சர்மா பொறுப்புடன் விளையாடினார். அவர் டி20 போட்டிகளில் மூன்றாவது சதமடித்து அசத்தினார். அவருக்கு கோலி ஒத்துழைப்பு கொடுத்தார்.
 
இறுதியில், இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வென்றது. அத்துடன் தொடரையும் 2-1 என கைப்பற்றி அசத்தியது. #ENGvIND #EnglandvIndia

https://www.maalaimalar.com/News/TopNews/2018/07/08220240/1175279/india-won-by-7-wickets-against-england-and-won-the.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.