Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஜயகலாவால் நாடாளுமன்றில் சர்ச்சை- சபை அமர்வு ஒத்திவைப்பு!!

Featured Replies

விஜயகலாவால் நாடாளுமன்றில் சர்ச்சை- சபை அமர்வு ஒத்திவைப்பு!!

 
 
Capture-11.jpg
 
 
 

சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விடுதலைப் புலிகள் தொடர்பில் நேற்று யாழ்ப்பாணத்தில் வெளியிட்ட கருத்தால் இன்று நாடாளுமன்றில் குழப்ப நிலமை ஏற்ப்பட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது.

விஜயகலாவைப் பதவி விலக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சபையில் கோரிக்கை விடுத்தனர். இதனால் சபையில் குழப்ப நிலமை ஏற்பட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது.

அதனால் சபை அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

http://newuthayan.com/story/14/விஜயகலாவால்-நாடாளுமன்றில்-சர்ச்சை-சபை-அமர்வு-ஒத்திவைப்பு.html

  • தொடங்கியவர்
விஜயகலாவை கைதுசெய்யுமாறு முறைப்பாடு
 
 

சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை கைதுசெய்யுமாறு, பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது.

சிங்கள ராவய அமைப்பினால் செய்யப்பட்டள்ள அந்த முறைப்பாட்டில், “ தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ்ப்பாணத்தில் வைத்து உரையாற்றியுள்ளார். ஆகையால், அவரை கைதுசெய்து, சட்டத்தை நிலைநாட்ட வேண்டும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/விஜயகலாவை-கைதுசெய்யுமாறு-முறைப்பாடு/175-218454

 
 
விஜயகலாவுக்கு எதிராக விசாரணை
 

image_83761d48f2.jpgவிடுதலை புலிகள் அமைப்பை உருவாக்குவதே எமது நோக்கம் என சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த, சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/விஜயகலாவுக்கு-எதிராக-விசாரணை/175-218459

  • தொடங்கியவர்

இராஜங்க அமைச்சர் விவகாரம் தொடர்பில் பிரதமரின் அதிரடி உத்தரவு!!!

தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும்  உருவாக்கப்பட வேண்டும் என சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணை செய்யுமாறு பிரதமர் சபாநாயகருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ranil___vijayakala.jpg

நாட்டின் ஆட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இராஜாங்க அமைச்சர் ஒருவர் நாட்டில் தடை செய்யப்பட்ட இயக்கம் ஒன்று மீள உருவாக்கப்பட வேண்டும் என கருத்து வெளியிட முடியாது எனவும் இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனக்கு அறிவுறுத்தியதாக சபாநாயகர் கரு ஜயசூரிய ஊடகங்களுக்கு  தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/35924

 

 

இராஜாங்க அமைச்சருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!!!

 

 

நாட்டினுள் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகள் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜங்க அமைச்சர் விஜயகலா மீது பிரதமரின் அறிவுறுத்தலுக்கமைய ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பாராளுமன்றில் சபாநாயர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

vijayakala.jpg

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வடகிழக்கு மாகாணங்களில் தமிழீழ விடுதலை புலிகளின் கைகள் ஓங்கினால்தான் தமிழ் மக்கள் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வழ முடியும் என்று தெரிவித்திருந்தார். 

இந் நிலையில் இன்று பாராளுமன்றம் கூடிய போது விஜயகலா மகேஷ்வரன் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தினால் பாராளுமன்றில் பெரும் வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டதோடு அவரை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் சபாநாயகரிடம் விடுக்கப்பட்டது. 

இதன் காரணமாக தொடர்ந்து பாராளுமன்ற அமர்வுகளை நடத்திச் செல்வதற்கு தடை ஏற்பட்டதால் பாராளுமன்ற அமர்வை நாளை காலை வரையில் ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/35940

  • தொடங்கியவர்

விஜயகலா மகேஸ்வரனுக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு

vijayakalamaheswaran.jpg?resize=685%2C54

 

சிறுவர் மற்றும் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் திடீரென உடல் நிலைபாதிக்கப்பட்டு உள்ளார் என அமைச்சு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழில். உள்ள தனது இல்லத்தில் தங்கியுள்ள இராஜாங்க அமைச்சர் இன்று செவ்வாய்க்கிழமை திடீரென உடல் நல பாதிப்புக்கு உள்ளாகியதனையடுத்து அருகில் உள்ள தனியார் வைத்திய சாலைக்கு சென்று சிகிச்சை பெற்ற பின்னர் இன்று மதியம் வீடு திரும்பியுள்ளார். தற்போது வீட்டில் ஓய்வு பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீரசிங்கம் மண்டபத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வில் ‘ விடுதலை புலிகள் மீள உருவாக வேண்டும் ‘ என உரையாற்றி இருந்தார்.

அவரது அந்த உரையை அடுத்து நாடு முழுவது சர்ச்சைகள் எழும்பியுள்ளநிலையில் இன்றைய தினம் நாடாளுமன்றிலும் கடும் குழப்பம் ஏற்பட்டதனால் நாடாளுமன்றம் நாளைய தினம் வரையில் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. அத்துடன் குறித்த சர்ச்சைக்கு உரிய உரை தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் என பிரதமர் மற்றும் சபா நாயகர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் முகமாக உரையாற்றினார் எனவும் , இராஜாங்க அமைச்சரை உடனடியாக கைது செய்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என சிங்கள ராவய அமைப்பு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

இந்நிலையிலையே இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் திடீரென உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/2018/86230/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.