Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலக நாயகன் நாரத சுமந்திர முனி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

_15822_1530509811_nnnv.jpg

 

 

நோக்கன்

திருவிளையாடல் புராணத்தில் நாரதரின் பங்கு அளப்பரியது. கலகத்தை உண்டாக்கி அதனூடாக தமது நோக்கத்தை நிறைவேற்றவென சிவபெருமான் நாரதரைப் படைத்திருந்தார். கலகங்களின் மூலம் நன்மைகளைவிடத் தீமைகளே அதிகம் நடைபெறுவதாகக் கணக்கெடுப்பு ஒன்று உண்டு. இது ஒரு புராணக் கதையாக இருந்தாலும் தற்போதைய நடைமுறைகளுக்கும் அது பொருந்தக்கூடியதே.

தேவலோகத்தில் கலகம் என்றால் நாரத முனி போல பூலோகத்தில் இருப்பவர் சுமந்திர முனி. அதுவும் அவர் ஒருவரால் எய்யப்பட்ட அம்பு என்பது தற்போது உலகறிந்த விடயம். எய்தவன் என்ன நோக்கத்தோடு எய்தானோ? அந்த அளப்பரிய பணியை அம்பாகிய சுமந்திர முனி செய்து முடித்திருக்கிறார். இதற்குப் பலிக்கடாவாகிப் போனது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே ஒழிய தமிழ் மக்கள் அல்ல என்பதையும் அனைவரும் அறிவர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலவீனம் அடைந்திருப்பதைப்போல் தமிழ் மக்கள் பலவீனமடைந்தவர்களாக இல்லை. இதனை கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் அவர்கள் உணர்த்தியிருந்தனர். இருந்தாலும் அது கூட்டமைப்புக்கோ அல்லது அதன் மூத்த உறுப்பினர்களுக்கோ அல்லது சுமந்திர முனிக்கோ உறைக்காத விடயமாகவே பார்க்கப்படுகிறது.

வந்த வேலையை அவர் கச்சிதமாக முடித்து விட்டதால் இனி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இருப்பைப் பற்றிய கவலை அவருக்கு இல்லை. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாது தேசியப் பட்டியல் எம்.பியாக ஆக்குவதாக பெரிய கட்சி ஒன்று அவருக்கு வாக்குறுதி அளித்திருப்பதாக பேசப்படுகின்றது. இந்தக் கைமாறானது தமிழரை உடைத்ததற்காகக் கொடுக்கப்படும் சன்மானமும், விருதும் என்று சொல்லப்படுகிறது.

தன்னைப் பற்றிய விமர்சனத்தை - அது எந்தவிதமானது என்றாலும் அதை அவர் எதிர்கொள்கிறார் எனப் பேச்சு உண்டு. அவரின் போக்கை - யாழ்ப்பாணத்துத் தமிழில் சொல்வதானால் “நசுவல் பழக்கம்' என்று சொல்லலாம். சுமந்திர முனியின் இத்தகைய நசுவல் பழக்கத்துக்கு முக்கிய காரணம் அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் நுழைந்த அந்த அளப்பரிய நோக்கமே. தமிழ் உடைப்பு என்ற கூட்டமைப்பின் உடைப்பைக் குறிக்கோளாகக் கொண்டு உள் வந்த சுமந்திர முனிக்கு ஒத்தூதச் சிலர் இருந்தனர்.

அந்த ஒத்தூதல்களை இனங் காண உதவியது மதமே. மதத்தை வைத்து அணி ஒன்றை உருவாக்கினார் சுமந்திரமுனி. இது வெளிப்படையாக நடைபெறாவிட்டாலும் கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட பலருக்கு இது தெரியும். வெளியே தான் ஒரு சாரைப் பாம்பு என்று காட்டிக் கொண்ட சுமந்திரமுனி கட்சியின் உள்ளே சுயநலமிக்க விஷப் பாம்பைப் போல காரியமாற்றலானார். தன்உள்ளக் கிடக்கையாகக் காணப்பட்ட மத மிதவாதக் கோட்பாட்டை வைத்தே தனது அரசியல் சதுரங்கக் காய்களை நகர்த்தியிருந்தார்.

இதில் அகப்பட்ட முதல்காய் ஆர்னோல்ட். அடுத்து குருகுலராஜா, குற்றச்சாட்டுகளால் நலிந்து போயிருந்த அவரை அணுகி நியாயம் கேட்கின்ற பெருந்தன்மையுடையவர் என்ற போர்வையில் தனது வலைக்குள் வீழ்த்திக் கொண்டு வட மாகாண சபைக்குள் தன் சார்பான அணியை உருவாக்கிக்கொண்டார். இதற்கு கத்தோலிக்க மத நிறுவனங்களும் அவருக்குத் துணை நின்றன. இவர் தென்னிந்திய திருச்சபையைச் சாராதவராக இருப்பினும், அவர்களுக்குரிய சட்ட ஆலோசனை வழங்குபவராக இருக்கிறார். இதனால், அவர்களின் ஆசிர்வாதத்தையும் பெற்றிருக்கிறார்.

வடக்கு மாகாணத்தை கிறிஸ்தவ சாம்ராச்சியமாக மாற்றுவது எனக் கங்கணம் கட்டிக் களத்தில் இறங்கியவராக சுமந்திரமுனி பல இடத்தில் செயற்பட்டிருக்கிறார். ஆனால் உண்மையில் அவர் ஒரு சுத்தமான கிறிஸ்தவ மதக் கோட்பாட்டைக் கொண்டிருக்கவில்லை.  இருந்தபோதும் அரசியலில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவே கிறிஸ்தவன் என்ற பெயர்ப்பலகையைப் பயன்படுத்துவதாகவே மக்கள் கருதுகின்றனர்.

அரசியலில் பிரபலம் பெற இவர் கையாளும் சுய சந்தைப்படுத்தல் முறையே வேறானது. தான் சார்ந்த இணையங்களில், தனக்குச் சார்பான இணையங்களில் தனக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவது போன்ற செய்திகளை வெளியிட வைப்பது, பிறர் தன்னைத் தூற்றுவதாக செய்தி வெளியிட்டு அதற்கூடாக எதிர்காலத்தில் தான் நடைமுறைப்படுத்தவுள்ள செய்திகளை முன்கூட்டியே கசியவிடுவது. அப்படியான செய்திகளை ஊதிப் பெருப்பித்துக் காட்டி மக்களைக் குழப்புவதற்குச் சில ஊடகங்கள் வெறுவாயோடு காத்திருக்கும் என்ற விடயமும் அவருக்குத் தெரியும். எனவே மக்களை அதனின்று விலக்கி வைப்பதற்கு விழிப்புணர்வை தருவதாக இக்கட்டுரை அமையலாம்.

இது போன்று ஒரு செய்தி அண்மையில் வெளிவந்திருக்கிறது. அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் : சுமந்திரனின் தெரிவு இவர்தான்; வடக்கை கிறிஸ்தவ மயமாக்குகிறாரா?' என்ற தலைப்பிட்டு வந்திருக்கிறது அந்தச் செய்தி. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக வட மாகாண சபையின் பிரதம செயலாளர் பத்திநாதனின் பெயர் முன் மொழியப்படுவதற்கான ஆரம்பகட்டச் செயற்பாடுகள்  இரகசியமாகத் தொடங்கிவிட்டன. அண்மையில் குருகுலராஜா வீட்டில் சுமந்திரனுக்காக ஒரு  விருந்துபசாரம் ஏற்பபாடாகியிருந்தது. அதிலே கலந்து சிறப்பித்தபோதே இந்தத் தகவலை வெளியிட்டு குருகுலத்தின் அபிப்பிராயத்தைக் கேட்டுள்ளார். எனவே விருந்துபசாரத்தில் பகிரங்கமாகக் கலந்துரையாடப்பட்ட விடயம் எங்ஙனம் இரகசிய முன்னெடுப்பாக இருக்கும்?

இதைவிட இன்னொரு விடயத்தையும் நோக்கலாம். வட மாகாண சபையின் அடுத்து வரும் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் யாரென்பது தொடர்பில் பல ஊகங்கள் வெளிப்படத் தொடங்கியிருக்கின்றன. இந்நிலையில் இலங்கை அரசு உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இமானுவேல் அடிகளாரை நிறுத்தலாம் என ஆலோசனை வழங்கியிருக்கிறது. வட மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் தெரிவில் முன்னணியில் தற்போதைய முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனே உள்ளார். இதை தெளிவாக அறிந்து வைத்திருந்தும் ஒரு தமிழ் பிரதேசத்தில் தமிழ் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பதை மத்திய அரசே தீர்மானிக்கக்கூடியதாக அரசியல் நிலைமைகள் மாறிக் கொண்டிருக்கின்றன. தமிழர் கடிவாளம் தமிழரிடம் இல்லை என்றது தெட்டத் தெளிவாகத் தெரிகிறது.

கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக அரசு உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தையை சிபார்சு செய்தால் நீதியரசர் விக்கினேஸ்வரனின் நிலை என்னவாகலாம்.  அவர் தனித்துச் செல்லும் வாய்ப்புகளே அதிகம். மத்திய அரசைப் பொறுத்தவரை இதுவும் ஒரு வகையில் வெற்றியையே தரும் என்று அவர்கள் நம்புகின்றனர். கூட்டமைப்பு உடைந்து சுக்கு நூறாகிவிடும். இதேசமயம் மாவையும் முதலமைச்சர் கதிரைக்காக் காத்திருக்கிறார். ஆனால் மாவைக்கு அந்தப் பதவியை வழங்க சுமந்திரன் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. ஏனெனில் அவர் விக்கினேஸ்வரனுடன் போட்டிபோடும் வலுவில் இல்லை என்பதே.

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிற்குப் போட்டியாக முன்னிறுத்தப் பலம் வாய்ந்த எவருமற்ற நிலையில் தனது முகவர்கள் ஊடகங்கள் ஊடாக நாளுக்கொரு பெயர்பட்டியலை சுமந்திரன் அவிழ்த்துவருகின்றார். இந்நிலையில் இறுதியாக வட மாகாண சபை பிரதம செயலாளர் பத்திநாதனின் பெயரை முதலமைச்சர் வேட்பாளர் பதவிக்குப் பிரேரித்துவிட்டு சமூகத்தின் எதிரொலிக்காகக் காத்திருக்கிறார் சுமந்திரன். எனினும் இதனை ஒரு அதிசயமாகவே பார்ப்பதாக பத்திநாதன் கருத்துப் பகிர்ந்தமை இன்னொரு சுவையான கதையாகவுள்ளது.

இந்நிலையில் இலங்கையில் இனங்களுக்கிடையிலான நல்லெண்ணத்தைக் கட்டி எழுப்ப அருட் தந்தை இமானுவேல் அடிகளாரே பொருத்தமானவர் எனவும் அவரையே வடக்கு முதல்லர்  வேட்பாளர் பதவிக்கு முன்மொழிந்திருக்கிறார் தற்போதைய அரசின் பலமிக்கவரான அமைச்சர் மங்கள சமரவீர.  இதற்கு இந்திய அரசும் பச்சைக்கொடி காட்டியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனிடையே தற்போதைய அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானமும் முதல்வர் பதவியை நோக்கிக் காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளார் என்றும் பேசப்படுகிறது.

கத்தோலிக்கர்களை முன்னிறுத்தி எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு வடக்கில் இந்து அமைப்புக்கள் போர்க்கொடி தூக்காவண்ணம் தாம் பார்த்துக் கொளவதாக யாழிலுள்ள இந்திய துணைதூதரகத்தில் பொறுப்பை ஏற்றிருக்கின்ற புதிய தூதர் பாலச்சந்திரன் அரசிற்கு உறுதியளித்துள்ளதாகவும் தெரியவருகிறது. அடுத்து வரும் வட மாகாண சபைத் தேர்தலில் விக்னேஸ்வரன் களமிறங்குவதால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கதிகலங்கிப் போயிருக்கிறதோ இல்லையோ, சுமந்திரமுனி மானசீகமான உளைச்சலில் தள்ளாடிப் போயிருப்பதை இந்தச் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.
முதலமைச்சரின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு வருகை தந்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பேசிய பேச்சில், முதலமைச்சர் களமிறங்குவதை ஆசிர்வதிப்பதாகத் தெரிகிறது. ஆனால் இந்த நெருக்கடியை மதத்தை முன் வைத்தே எதிர்கொள்ளலாம் என்று சுமந்திரன் தீர்மானித்திருக்கிறார் போலத் தெரிகிறது.  

அண்மையில் முல்லைத்தீவு, ஒட்டுசுட்டானில்  முச்சக்கர வண்டி ஒன்றிலிருந்து 15 கிலோ எடையுடைய கிளைமோர் குண்டு, அதனை மறைந்திருந்து இயக்கும் ரிமோட் உள்ளிட்ட கருவிகள், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடை மற்றும் புலிக் கொடி ஒன்று மீட்கப்பட்டன என்ற செய்தியிலிருந்து தெரியவரும் உண்மை என்ன? அதில் இருந்தவர்கள் மூலம் சுமந்திரனை இலக்குவைத்துத் தான் செயற்பட்டனர் எனச் சொல்வது எதைச் குறிக்கிறது? இதனை மறுத்த சுமந்திரனின் செயற்பாட்டையும் என்னவென்று சொல்வது? அதேசமயம் முதலமைச்சரின் புத்தக வெளியீட்டிற்கும், சிவபூமி திருவாகச அரண்மனை திறப்பு விழாவுக்கும் வருகை தந்த சுமந்திரனைச் சுற்றி அதிரடிப் படையினர் வந்து அந்த இடங்களின் புனிதத்தையும், இயல்பையும் பாதித்து நின்றதை என்னவென்று சொல்லலாம்?

தமிழ்த் தேசிய உணர்வை மத உணர்வை அடிப்படையாக வைத்துச் சிதைக்கப் புறப்பட்டிருக்கும் இவர் போன்றவர்கள் எத்தகைய துரோகிகளாகக் கணக்கிடப்பட வேண்டும். ஒரு சிறிய பிரதேசத்தை நெருக்கடிமிக்க காலகட்டத்திலிருந்து மீட்டெடுக்கப் பாடுபடுவதை விட்டு இன்னமும் மதத்தைச் சொல்லி சிதைக்க நினைப்பதை துரோகம் என்று சொல்லாது என்னென்று சொல்வது? இப்படியான துரோகத்திற்குத் துணைபோகின்ற மத நிறுவனங்களை எப்படி ஆன்மிகத்தை வளர்க்கிற நிறுவனங்களாகப் பார்க்க முடியும். அவற்றை வெறும் வியாபாரத்தை முன்வைக்கின்ற கடைகளாகவேதான் பார்க்க முடியும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் எதற்கும் தலையாட்டும் சாத்திரியின் மாடு போல மாவை செயற்படும் வரைக்கும் அக்கட்சிக்கும், அது சார்ந்த மக்களுக்கும் விமோசனமில்லை. இப்படியான கலகத்தை விளைவித்து அதில் தான் குளிர்காய எண்ணும் சுமந்திர முனிகளைப் புறந்தள்ளி தமிழினம் முகிழ்ந்து எழுவதற்கு ஒரு புதிய தலைமையை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் - மக்களின் கடமை.

http://www.battinaatham.net

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.