Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஜயகலாவுக்கு எதிராக வழக்கு தொடர முடியாது : முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா

Featured Replies

விஜயகலாவுக்கு எதிராக வழக்கு தொடர முடியாது : முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா

02-390ce9e8170173be0381b18ac1b770b4bdd6e5c6.jpg

 

(ஆர்.யசி)

விடுதலைப் புலிகளை பலப்படுத்த வேண்டும் என விஜயகலா மகேஸ்வரன் கூறிய கருத்து நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி மாகாணசபை  தேர்தலை பிற்போட  எடுத்த முயற்சியேயாகும். அவரது கருத்தின் பின்னணியில் வேறு உந்துதல் உள்ளது என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா குறிப்பிட்டார்.

விஜயகலா மகேஸ்வரன் அரசியலமைப்பின் 6 ஆம் சரத்தை மீறி கருத்துக்களை முன்வைத்துள்ளாரே தவிர வேறு எந்தவித செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை. எனவே அவருக்கு எதிராக வழக்கு தொடர முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய ஒற்றுமைக்கான சட்டத்தரணிகள் சங்கத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே முன்னாள் நீதியரசர் இதனைக் குறிப்பிட்டார்.

 அவர் மேலும் கூறுகையில்

விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் தெரிவித்த கருத்தானது, பிரிவினைவாத செயற்பாடுகளுடன் இணைந்த ஒன்றாக உள்ளது. பிரிவினைவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட அனைத்து நபர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் அமைப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. எனினும் விஜயகலா மகேஸ்வரன் என்பவர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் மிகவும் நெருக்கமாக செயற்படக்கூடிய ஒருவர். பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுடன் மிகவும் நெருக்கமாக செயற்படக்கூடிய ஒருவர். வடக்கில் அண்மையில் அவர் முன்வைத்த இந்த கருத்தானது அவரது தனிப்பட்ட தேவைக்காக முன்வைத்தாரா என்பதில் சந்தேகம் உள்ளது. அவரது தேவைக்காகவே இந்தக் கருத்துக்களை முன்வைத்தார் என்பதை நாம் நம்பப்போவதில்லை. வேறு சிலரது பின்னணியில் , அல்லது உந்துதலில் அவர் இந்தக் கருத்தினை முன்வைத்துள்ளார்.

இப்போது மாகாணசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதனை தடுக்க சகல முறையிலும் நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. எல்லா இடங்களிலும் ஏதோ ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி தேர்தலை பிற்போடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. கண்டியிலோ அல்லது வேறு இடத்திலோ இனவாத பிரச்சினைகள் எழுப்பப்படுகின்றன. வேறு இடங்களில் வேறு பிரச்சினைகள் எழுகின்றன. வடக்கில் பயங்கரவாதக் கதைகள் எழுகின்றன. விஜயகலா மகேஸ்வரன் என்ன காரணிகளை கூறினாலும் சிங்கள மக்களின் கொள்கை, நிலைப்பாடு மாறப்போவதில்லை.

இந்தக் கதைகள் அனைத்துமே அந்தந்த சூழலில் வெடிக்கும் கதைகள் மட்டுமேயாகும். ஆனால் எமக்குள்ள பிரச்சினை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதாகும். அடுத்த ஆண்டு தேர்தல்களை நடத்தப்போனால் தேர்தலை தவிர வேறு எதனையும் செய்ய முடியாத நிலைமை உருவாகும். நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் வரும் போது மக்கள் வாக்குச்சாவடிக்கு செல்ல சலித்துப்போய்விடுவார்கள்.

அவ்வாறான மனநிலை மக்களுக்கு ஏற்படும். இப்போது தேர்தல்கள் பிற்போடப்பட்டால் அடுத்த ஆண்டில் அனைத்து தேர்தல்களும் நடத்தவேண்டிய நிலைமை உருவாகும். ஜனாதிபதி தேர்தல், மாகாணசபை தேர்தல் என அனைத்துமே நெருக்கத்தை உருவாக்கி இந்த நாடு மிகவும் மோசமான வகையில் ஜனநாயகம் இல்லாத நாடாக மாறிவிடும். எவரும் எமது நாட்டுக்கு வந்து முதலீடுகளை செய்ய மாட்டார்கள். இலங்கையின் நிலைமையினை கருத்தில் கொண்டு தயங்குவார்கள்.

விஜயகலா மகேஸ்வரன் குறித்து எனக்கு நன்றாகத் தெரியும். அவரது கணவர் மகேஸ்வரன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பின்னர் அவருக்காக பாராளுமன்றத்திற்கு வந்த நபர். பாரிய மக்கள் செல்வாக்கில் இவர் வரவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்குகள் மட்டுமே இப்போதும் கிடைக்கும். ஆகவே அவர் ஏன் புலிகள் வேண்டும் என்ற கருத்தினை கூறினார் என்பது தான் கேள்வியாக உள்ளது. இதே கருத்தினை வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் அல்லது மாவை சேனாதிராஜா ஆகியோர் கூறினால் அது வேறு அர்த்தமாக அமையும்.

ஆனால் இவர் கூறியதன் மூலமாக குழப்பங்களை ஏற்படுத்தவே முயற்சித்துள்ளார். அவர் கூறிய விடயங்கள் பூதாகரமானதுடன் அவர் இராஜாங்க அமைச்சுப் பதவியை துறந்துள்ளார். இந்த பதவி துறப்புகள் அனைத்துமே சாதாரணமானவை. திலக் மாரப்பன, விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோர் பதவி விலகியிருந்தனர். ஆனால் மீண்டும் அமைச்சுப்பதவியை கொடுத்துவிட்டனர். இந்த நிலைமை தான் சகல சந்தர்ப்பங்களிலும் இடம்பெறுகின்றது. வெறுமனே மக்களை ஏமாற்றும் நாடகமாகவே இதை நாம் பார்க்கின்றோம்.

விஜயகலா முன்வைத்த காரணிகள் அரசியல் அமைப்பின் 6 ஆம் திருத்தத்துக்கு அமைய முழுமையாக முரணானதாகும். அதன் காரணமாக தான் தற்போது அவர் இராஜினாமா செய்துள்ளார். எனினும் அவர் கூறியதற்கு அமைய அவர் செயற்படவில்லை. எனவே அவருக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது. அவர் ஒரு சந்தர்ப்பத்தில் பயங்கரவாதம் குறித்து பேசினாரே தவிர அதற்கமைய செயற்படவில்லை. தனது செயற்பாடுகள் தவறென கருதி அதற்கமைய தனது பதவியையும் இராஜினாமா செய்துள்ளார்.

பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இருப்பதாக கூட அவராக கூற முடியும். விடுதலைப்புலிகள் சார்ந்த கருத்தினை கூறி அவர் நடைமுறை பிரச்சினைகளை திசைதிருப்ப நடவடிக்கை எடுத்துள்ளாரே தவிர அவர் விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் நெருக்கமானவர் என நாம் கருதவில்லை. அவ்வாறான தகவல்கள் எமக்குக் கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-07-11#page-1

  • கருத்துக்கள உறவுகள்

தெரிந்த விடயம்தானே எல்லாம் ஒரு நிகழ்ச்ச்சி நிரல் என்பது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.