Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதலில் அரசியல் தீர்வு பின்னரே அபிவிருத்தி ; சி.வி

Featured Replies

முதலில் அரசியல் தீர்வு பின்னரே அபிவிருத்தி ; சி.வி

 

 
 

வடக்கு, கிழக்கு மக்கள் மீது பொரு­ளா­ தார அபி­வி­ருத்­தி­களை  திணிப்­பதன் மூலம் தேசிய ஐக்­கி­யத்தை ஏற்­ப­டுத்­தி­விட முடி­யாது. எமது வடக்கு, கிழக்கு மக்­களின்  அர­சியல் தீர்­வா­னது முதலில்  ஏற்­ப­டுத்­தப்­பட்ட பின்­னரே   அபி­வி­ருத்­திப்­ப­ணிகள்   செயற்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும் என்று வட­மா­காண முத­ல­மைச்சர்  சி.வி. விக்­கி­னேஸ்­வரன் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

 cv.jpg

வடக்கு, கிழக்கு மாகாண முன்­னேற்­றப்­ப­ணிகள் குறித்து ஆராய்­வ­தற்­காக 48 பேர் கொண்ட   ஜனா­தி­பதி  செய­ல­ணி­யை  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன  அண்­மையில்   நிய­மித்­தி­ருந்தார்.   இந்த செய­லணி  நிய­மனம் தொடர்பில்   அதி­ருப்தி தெரி­வித்து  ஜனா­தி­ப­திக்கு வட­மா­காண முத­ல­மைச்சர் அனுப்­பி­வைத்­துள்ள  கடி­தத்­தி­லேயே  இவ்­வாறு  தெரி­வித்­துள்ளார். 

அந்தக் கடி­தத்தில் மேலும்  தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

தங்­களால் தலைமை தாங்­கப்­ப­ட­வி­ருக்கும் செய­லணி  பிர­தம மந்­திரி, 15 கௌரவ மத்­திய அமைச்­சர்கள், வட­கி­ழக்கு மாகா­ணங்­களின் ஆளு­நர்கள், வட­மா­காண முத­ல­மைச்­ச­ரா­கிய என்­னையும், தற்­போது வெற்­றி­ட­மா­க­வுள்ள கிழக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரையும், இரா­ஜாங்க அமைச்சர் ஒருவர், முன் கூறிய பிர­த­ம ­மந்­திரி அடங்­கிய மத்­திய அமைச்­சர்கள் அனை­வ­ரதும் அமைச்­சுக்­களின் செய­லா­ளர்கள், வட­கி­ழக்கு மாகா­ணங்­களின் பிர­தம செய­லா­ளர்கள், இரா­ணுவம், கடற்­படை, ஆகா­யப்­படை ஆகி­ய­வற்றின் கட்­டளைத் தள­ப­திகள், பொலிஸ்மா அதிபர், யாழ். பாது­காப்புப் படையின் தள­பதி, கிழக்குப் பாது­காப்புப் படை­களின் தள­பதி, மேலும் சிவில் பாது­காப்பு திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் நாயகம் ஆகி­யோரை உள்­ள­டக்­கி­யுள்­ளது. 

என்­னையும் எமது பிர­த­ம­செ­ய­லா­ள­ரையும் தவிர வட­மா­கா­ணத்தை அங்­கத்­துவம் வகிக்க வேறெ­வரும் அதில் இல்லை. செய­ல­ணியின் செய­லாளர் (சிவ­ஞா­ன­சோதி) வட­மா­கா­ணத்தைச் சேர்ந்­த­வ­ராக இருந்­தாலும் அவர் மத்­திய அரசின் அலு­வலர் ஆவார். 

செய­ல­ணியின் வட,­கி­ழக்கு பற்­றிய முன்­னேற்ற செயற்­பா­டுகள் நாட்டின் ஐக்­கி­யத்­தையும் ஒன்­றி­ணை­வையும் ஏற்­ப­டுத்தி சம­மான சமூக பொரு­ளா­தார வளர்ச்­சி­யையும் வரு­மான வளர்ச்­சி­யையும் ஏற்­ப­டுத்தும் என்று குறித்த கடி­தத்தில் கூறப்­பட்­டுள்­ளது. வட­,கி­ழக்கு மாகா­ணங்­களில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் செயற்­றிட்­டங்­களின் மீளாய்வு உள்­ள­டங்­கிய பல வித பணிகள் குறித்த செய­ல­ணிக்கு அடை­யா­ளப்­ப­டுத்தி கொடுக்­கப்­பட்­டுள்­ளன. 

வட,­கி­ழக்கில் நடை­பெற்­று­வரும் முன்­னேற்றப் பணிகள் அனைத்­தையும் நடத்­து­விக்கும், ஒருங்­கி­ணைக்கும், மேற்­பார்வை பார்க்கும் பணி ஜனா­தி­பதி செய­ல­ணி­யிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

என்­னையும் எமது பிர­த­ம­ செ­ய­லா­ள­ரையும் இந்த செய­ல­ணி­யினுள் உள்­நு­ழைத்­த­மைக்­காக நான் உங்­க­ளுக்கு முதலில் நன்­றியைத் தெரி­வித்துக் கொள்­கின்றேன். பல மத்­திய அமைச்­சர்­களும் அவர்­களின் அமைச்சுச் செய­லா­ளர்­களும் இந்தச் செய­ல­ணியில் சேர்க்­கப்­பட்­டி­ருப்­பினும் எமது வட­மா­காண அமைச்­சர்கள் இதில் விடு­பட்­டுள்­ளார்கள். எமது அமைச்­சர்­களின் மற்­றைய செய­லா­ளர்­களும் விடு­பட்­டுள்­ளார்கள். உங்கள் தேர்வில் இது ஒரு பாரிய தவ­றாக எனக்­குப்­ப­டு­கின்­றது. 

வட,­கி­ழக்கின் பொரு­ளா­தார விருத்தி நாட்டின் ஐக்­கி­யத்தை உறுதி செய்யும் என்ற உங்கள் எதிர்­பார்ப்பு இடந்­த­வ­றி­ய­தா­கவே எனக்­குப்­ப­டு­கின்­றது. அர­சியல் ரீதி­யாக பாதிக்­கப்­பட்ட வட­,கி­ழக்கு மக்கள் மீது பொரு­ளா­தார அபி­வி­ருத்­தி­களைத் திணிப்­பதன் மூலம் தேசிய ஐக்­கி­யத்தை ஏற்­ப­டுத்­தி­வி­ட­மு­டி­யாது. எமது வட­,கி­ழக்கு மக்­களின் அர­சியல் தீர்­வா­னது முதலில் ஏற்­ப­டுத்­தப்­பட்ட பின்­னரே அபி­வி­ருத்திப் பணிகள் செயற்­ப­டுத்­தப்­பட வேண்டும். தென்­னா­பி­ரிக்­காவில் அர­சியல் தீர்வு பெற்ற பின்­னரே உண்­மைக்கும் சம­ர­சத்­துக்­கு­மான ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்­டது. 

தெற்­கா­னது வட­,கி­ழக்­குக்கு இவ்­வா­றான அபி­வி­ருத்திப் பணி­களை செய்­தி­ருப்­ப­தாக ஜெனி­வா­விலோ வேறெங்­குமோ உலக சமு­தா­யத்­திற்கு நாம் எடுத்துக் காட்­டி­னாலும் போர் முடிந்து ஒன்­பது வரு­டங்­க­ளுக்கு மேலாக வட,கி­ழக்கு மக்­களின் அடிப்­படை அர­சியல் பிரச்னை­களைத் தொடர்ந்து வந்­துள்ள மத்­திய அர­சாங்­கங்கள் தீர்க்­க­வில்லை என்ற விட­யத்தை நாம் மூடிமறைக்­க ­மு­டி­யா­தி­ருக்கும்.

ஆகவே எமது மக்கள் தமது  அர­சியல்  உரித்­துக்­க­ளையும் மனித உரி­மை­க­ளையும்  நீங்கள் தரும்  பொரு­ளா­தார அபி­வி­ருத்­தியின் பொருட்டு கைவிட்டு விடு­வார்கள் என்று  எண்­ணு­வது  தவ­றான செயற்­பா­டாகும் என்றும் அவர்  தெரி­வித்­துள்ளார். 

http://www.virakesari.lk/article/36422

  • தொடங்கியவர்

முதலில் அரசியல் தீர்வு பின்னரே அபிவிருத்தி:செயலணி குறித்து அதிருப்தி தெரிவித்து ஜனாதிபதிக்கு வடக்கு முதலமைச்சர் சி.வி. கடிதம்

City-Page-01-BlackPage1Image0014-af05f19598e15180fa863cc1a4f029fbdad52924.jpg

 

(நமது நிருபர்)

வடக்கு, கிழக்கு மக்கள் மீது பொரு­ளா­ தார அபி­வி­ருத்­தி­களை திணிப்­பதன் மூலம்

தேசிய ஐக்­கி­யத்தை ஏற்­ப­டுத்­தி­விட முடி­யாது. எமது வடக்கு, கிழக்கு மக்­களின் அர­சியல் தீர்­வா­னது  முதலில் ஏற்­ப­டுத்­தப்­பட்ட பின்­னரே அபி­வி­ருத்­திப்­ப­ணிகள் செயற்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும். தென்­னா­பி­ரிக்­காவில் அர­சியல் தீர்வு பெற்ற பின்­னரே உண்­மைக்கும் சம­ர­சத்­திற்­கு­மான ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்­டது என்று வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.  

எமது கட்­சி­யான தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் அண்­மையில் கூறி­ய­வாறு  இந்த வருட முடி­வுக்குள் எமது அர­சியல் பிரச்­சி­னைகள் யாவும் தீர்க்­கப்­ப­ட­வேண்டும். 

  அதன்­பின்­னரே அபி­வி­ருத்தி செயற்­பா­டுகள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும் என்றும் முத­ல­மைச்சர் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

எமது மக்கள் தமது அர­சியல் உரித்­துக்­க­ளையும் மனித உரி­மை­க­ளையும் நீங்கள் தரும் பொரு­ளா­தார அபி­வி­ருத்­தியின் பொருட்டு கைவிட்டு விடு­வார்கள் என்று எண்­ணு­வது தவ­றான செயற்­பா­டாகும் என்றும் அவர் தெரி­வித்­துள்ளார்.

 வடக்கு, கிழக்கு மாகாண முன்­னேற்­றப்­ப­ணிகள் குறித்து ஆராய்­வ­தற்­காக 48 பேர் கொண்ட ஜனா­தி­பதி செய­ல­ணி­யினை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அண்­மையில் நிய­மித்­தி­ருந்தார். இந்த செய­லணி நிய­மனம் தொடர்பில் அதி­ருப்தி தெரி­வித்து ஜனா­தி­ப­திக்கு வட­மா­காண முத­ல­மைச்சர் அனுப்­பி­வைத்­துள்ள கடி­தத்­தி­லேயே இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

இந்தக் கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது:-

தங்­களால் தலைமை தாங்­கப்­ப­ட­வி­ருக்கும் செய­லணி பிர­தம மந்­திரி, 15 கௌரவ மத்­திய அமைச்­சர்கள், வட­கி­ழக்கு மாகா­ணங்­களின் ஆளு­நர்கள், வட­மா­காண முத­ல­மைச்­ச­ரா­கிய என்­னையும், தற்­போது வெற்­றி­ட­மா­க­வுள்ள கிழக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரையும், இரா­ஜாங்க அமைச்சர் ஒருவர், முன் கூறிய பிர­த­ம­மந்­திரி அடங்­கிய மத்­திய அமைச்­சர்கள் அனை­வ­ரதும் அமைச்­சுக்­களின் செய­லா­ளர்கள், வட­கி­ழக்கு மாகா­ணங்­களின் பிர­தம செய­லா­ளர்கள், இரா­ணுவம், கடற்­படை, ஆகா­யப்­படை ஆகி­ய­வற்றின் கட்­டளைத் தள­ப­திகள், பொலிஸ்மா அதிபர், யாழ் பாது­காப்புப் படையின் தள­பதி, கிழக்குப் பாது­காப்புப் படை­களின் தள­பதி மேலும் சிவில் பாது­காப்பு திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் நாயகம் ஆகி­யோரை உள்­ள­டக்­கி­யுள்­ளது.

என்­னையும் எமது பிர­த­ம­செ­ய­லா­ள­ரையும் தவிர வட­மா­கா­ணத்தை அங்­கத்­துவம் வகிக்க வேறெ­வரும் அதில் இல்லை. செய­ல­ணியின் செய­லாளர் (திரு.சிவ­ஞா­ன­சோதி) வட­மா­கா­ணத்தைச் சேர்ந்­த­வ­ராக இருந்­தாலும் அவர் மத்­திய அரசின் அலு­வலர் ஆவார்.

செய­ல­ணியின் வட­கி­ழக்கு பற்­றிய முன்­னேற்ற செயற்­பா­டுகள் நாட்டின் ஐக்­கி­யத்­தையும் ஒன்­றி­ணை­வையும் ஏற்­ப­டுத்தி சம­மான சமூக பொரு­ளா­தார வளர்ச்­சி­யையும் வரு­மான வளர்ச்­சி­யையும் ஏற்­ப­டுத்தும் என்று குறித்த கடி­தத்தில் கூறப்­பட்­டுள்­ளது. வட­கி­ழக்கு மாகா­ணங்­களில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் செயற்­றிட்­டங்­களின் மீளாய்வு உள்­ள­டங்­கிய பல வித பணிகள் குறித்த செய­ல­ணிக்கு அடை­யா­ளப்­ப­டுத்தி கொடுக்­கப்­பட்­டுள்­ளன.

வட­கி­ழக்கில் நடை­பெற்­று­வரும் முன்­னேற்றப் பணிகள் அனைத்­தையும் நடத்­து­விக்கும், ஒருங்­கி­ணைக்கும், மேற்­பார்வை பார்க்கும் பணி ஜனா­தி­பதி செய­ல­ணி­யிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

என்­னையும் எமது பிர­த­ம­செ­ய­லா­ள­ரையும் இந்த செய­ல­ணி­யினுள் உள்­நு­ழைத்­த­மைக்­காக நான் உங்­க­ளுக்கு முதலில் நன்­றியைத் தெரி­வித்துக் கொள்­கின்றேன். பல மத்­திய அமைச்­சர்­களும் அவர்­களின் அமைச்சுச் செய­லா­ளர்­களும் இந்தச் செய­ல­ணியில் சேர்க்­கப்­பட்­டி­ருப்­பினும் எமது வட­மா­காண அமைச்­சர்கள் இதில் விடு­பட்­டுள்­ளார்கள். எமது அமைச்­சர்­களின் மற்­றைய செய­லா­ளர்­களும் விடு­பட்­டுள்­ளார்கள். உங்கள் தேர்வில் இது ஒரு பாரிய தவ­றாக எனக்­குப்­ப­டு­கின்­றது.

இடம் தவ­றிய எதிர்­பார்ப்பு

அடுத்து வட­கி­ழக்கின் பொரு­ளா­தார விருத்தி நாட்டின் ஐக்­கி­யத்தை உறுதி செய்யும் என்ற உங்கள் எதிர்­பார்ப்பு இடந்­த­வ­றி­ய­தா­கவே எனக்­குப்­ப­டு­கின்­றது. அர­சியல் ரீதி­யாக பாதிக்­கப்­பட்ட வட­கி­ழக்கு மக்கள் மீது பொரு­ளா­தார அபி­வி­ருத்­தி­களைத் திணிப்­பதன் மூலம் தேசிய ஐக்­கி­யத்தை ஏற்­ப­டுத்­தி­வி­ட­மு­டி­யாது. எமது வட­கி­ழக்கு மக்­களின் அர­சியல் தீர்­வா­னது முதலில் ஏற்­ப­டுத்­தப்­பட்ட பின்­னரே அபி­வி­ருத்திப் பணிகள் செயற்­ப­டுத்­தப்­பட வேண்டும். தென்­னா­பி­ரிக்­காவில் அர­சியல் தீர்வு பெற்ற பின்­னரே உண்­மைக்கும் சம­ர­சத்­துக்­கு­மான ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்­டது.

தெற்­கா­னது வட­கி­ழக்­குக்கு இவ்­வா­றான அபி­வி­ருத்திப் பணி­களை செய்­தி­ருப்­ப­தாக ஜெனி­வா­விலோ வேறெங்­குமோ உலக சமு­தா­யத்­திற்கு நாம் எடுத்துக் காட்­டி­னாலும் போர் முடிந்து ஒன்­பது வரு­டங்­க­ளுக்கு மேலாக வட­கி­ழக்கு மக்­களின் அடிப்­படை அர­சியல்ப் பிரச்­ச­னை­களைத் தொடர்ந்து வந்­துள்ள மத்­திய அர­சாங்­கங்கள் தீர்க்­க­வில்லை என்ற விட­யத்தை நாம் மூடி மறைக்­க­மு­டி­யா­தி­ருக்கும்.

போருக்­கான காரணம்

உங்­களால் இது­வரை தரப்­பட்­டுள்ள பொரு­ளா­தார நன்­மைகள் தொடர்ந்து வந்த மத்­திய அர­சாங்­கங்­க­ளினால் எமது மக்கள் மீது ஏற்­ப­டுத்­தப்­பட்ட பொறுப்­பற்ற சிதை­வு­க­ளுக்கும் பெரும் அழி­வு­களும் செய்­யப்­படும் பிரா­யச்­சித்­தமே. மேற்­படி அழி­வு­களை நீங்கள் ஏற்­ப­டுத்­தி­ய­மைக்குக் காரணம் தொடர்ந்­து­வந்த அர­சாங்­கங்கள் கௌதம புத்தர் காலத்­துக்கு முன்­பி­ருந்து அடை­யா­ளப்­ப­டுத்தக் கூடிய இந்­நாட்டின் ஒரு பகு­தியின் பெரும்­பான்­மை­யி­னராய் வாழ்ந்து வந்த தமிழ் பேசும் மக்­களின் நியா­ய­மான அர­சியல் கோரிக்­கை­க­ளுக்கு செவி­ம­டுக்­கா­மையே. வட­கி­ழக்குத் தமிழ்ப் பேசும் மக்­களின் உரி­மை­க­ளையும் உரித்­துக்­க­ளையும் ஏற்றுக் கொள்­ளா­மையே போருக்குக் கார­ண­மாக இருந்­தன.

என­வேதான் பொரு­ளா­தார அபி­வி­ருத்­தியால் இன ஐக்­கி­யத்­தையும் தேசிய ஒரு­மைப்­பாட்­டையும் ஏற்­ப­டுத்­தலாம் என்று நீங்கள் நினைப்­பதின் தாற்­ப­ரியம் என்­ன­வென்றால் எம் மக்கள் தமது அர­சியல் உரித்­துக்­க­ளையும் மனித உரி­மை­க­ளையும் நீங்கள் தரும் பொரு­ளா­தார அபி­வி­ருத்­தியின் பொருட்டு கைவிட்­டு­வி­டு­வார்கள் என்று நீங்கள் எண்­ணு­வதே.

செய­ல­ணியின் அமைப்­பு­ரு­வாக்கம் வேடிக்கை

மூன்­றா­வ­தாக மேற்­படி செய­ல­ணியின் அமைப்­பு­ரு­வாக்கம் வேடிக்கை பொருந்­தி­ய­தாக இருக்­கின்­றது. கிட்­டத்­தட்ட முழு­மை­யாக மத்­திய அர­சாங்க அணி­யி­னரை மட்­டுமே உள்­ள­டக்­கி­யுள்ள இந்த செய­ல­ணியால் வட­கி­ழக்கில் தேசிய ஐக்­கி­யத்தை ஏற்­ப­டுத்­தலாம் என்று நினைக்­கின்­றீர்கள். அதுவும் அர­சாங்க அமைச்­சர்கள், அவர்­களின் செய­லா­ளர்கள், படை­யினர், ஆளு­நர்கள் சேர்ந்து இவ்­வா­றான சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்­தலாம் என்று நினைப்­பது வேடிக்­கை­மிக்­கது.

தட­வைக்குத் தடவை நான் ஜனா­தி­ப­தி­யான உங்­க­ளுக்கும் தொடர்ந்து வந்த அர­சாங்­கங்­க­ளுக்கும் கூறி­வந்த ஒரு விட­யந்தான் அபி­வி­ருத்­தியை மத்­தி­யா­னது மாகா­ணத்தில் பல­வந்­த­மாக உட்­பு­குத்­தக்­கூ­டா­தென்­பதை. வட­கி­ழக்கு மாகாண மக்­களே தமக்கு வேண்­டி­ய­வற்றை தேர்ந்­தெ­டுக்கக் கூடி­ய­வர்கள் தமது தேவை­களை அடை­யா­ளப்­ப­டுத்தக் கூடி­ய­வர்கள். தற்­போது நிதி­யா­னது மத்­தியின் கையில். செயற்­திட்­டங்­களை வகுப்­பது மத்தி. நடை­மு­றைப்­ப­டுத்தும் பொறுப்பு மத்­தியின் அலு­வ­லர்கள் வசம். ஆனால் எமது மாகாண அலு­வ­லர்­களே தமக்கு ஆணை­யிட்­ட­வாறு அவற்றை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது. இவ்­வா­றான ஒரு தலைப்­பட்­ச­மான செயல்கள் மூலம் நீங்கள் எதிர்­பார்ப்­பது சமா­தானம், அமைதி, ஐக்­கியம் மேலும் ஒன்­றி­ணை­வது.

குடி­யேற்­றங்கள் தொடர்­கின்­றது

இவ்­வா­றான பொரு­ளா­தார முன்­னேற்ற நட­வ­டிக்­கை­களை நீங்கள் மீளாய்வு செய்யும் அதே­நேரம் வட­கி­ழக்கு மாகா­ணங்­களின் இனப் பரம்­பலை மாற்றும் விதத்தில் குடி­யேற்­றங்கள் அங்கு தற்­போது நடை­பெற்று வரு­வது யாவரும் அறிந்­ததே. மற்­றைய மாகா­ணங்கள் ஒவ்­வொன்­றிலும் பேணப்­ப­ட­வேண்­டிய காடு­களின் விகி­தா­சாரம் அங்கு பேணப்­ப­டாமல் எமது மக்­களின் காணிகள் வனத் திணைக்­க­ளத்­தினால் வட­கி­ழக்கில் கைய­கப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. அதேபோல் வன­ஜீ­வ­ரா­சிகள் திணைக்­களம், தொல்­பொ­ரு­ளா­ராய்ச்சி திணைக்­களம் மற்றும் பல மத்­திய திணைக்­க­ளங்கள் படை­யி­ன­ருடன் சேர்ந்து எமது மாகா­ணங்­களில் வசிக்கும் மக்­களின் பெரு­வா­ரி­யான காணி­களைக் கைய­கப்­ப­டுத்தி வரு­கின்­றன.

அர­சாங்­க­மா­னது வடக்கு மாகாண முன்­னேற்­றத்­திட்­டங்­களை மீளாய்வு செய்ய வேண்டும் என்றால் வட­மா­காண முத­ல­மைச்­சரும் பிர­தம செய­லா­ளரும் மேற்­படி செய­லணி நட­வ­டிக்­கை­களில் பங்­கேற்க வேண்டும் என்ற அவ­சி­ய­மில்லை. மத்­திய அமைச்­சர்கள் அவர்தம் செய­லா­ளர்கள், படை­யினர் எல்­லோரும் அந்­தந்த மாவட்ட அர­சாங்க அதி­பர்­க­ளுடன் சேர்ந்து வேண்­டிய தர­வு­களைப் பெற்றுக் கொள்­ளலாம்.

தற்­போது எமது மாகா­ணங்­களில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டு­வரும் செயற்­பா­டுகள் யாவும் மேலி­ருந்து கீழ் நோக்கி ஒரு தலைப்­பட்­ச­மாக இயற்­றப்­படும் செயல்­களே.

உலக நாடு­க­ளுக்கு எம்­மைப்­பற்றி உயர்­வாகக் கூறு­வ­தற்கு அன்றி இவ்­வா­றான நட­வ­டிக்­கை­களால் நன்மை ஏதும் ஏற்­படும் என்று நான் நினைக்­க­வில்லை. அத்­துடன் இவ்­வா­றான நட­வ­டிக்­கை­களால் சாந்தி, சமா­தானம், ஐக்­கியம், ஒன்­றி­ணைப்பு போன்­ற­வற்றை ஏற்­ப­டுத்­தலாம் என்று நான் நம்­ப­வில்லை.

தேவை­யற்ற விடயம்

எனவே மேற்­படி செய­லணி தனது வேலையை செவ்­வனே செய்து கொண்டு போகட்டும். அதன் முடிவில் குறித்த செய­லணி தனது அறிக்­கையை குறிப்­பிட்ட காலத்தில் எமக்கு அனுப்­பட்டும். எனது அமைச்­சர்­க­ளுடன் அதை வைத்து நாம் அதன் தாற்­ப­ரி­யங்­க­ளையும் பெறுபேறுகளையும் ஆராய்ந்து பார்க்கின்றோம். ஆனால் இவ்வாறான மாட்சிமை பொருந்திய அமைச்சர்கள், ஆளுநர்கள், அமைச்சுச் செயலாளர்கள், படையினரை உள்ளடக்கிய ஒரு உயர் மட்ட செயலணியில் நானும் ஒரு பொருட்டாக இணைந்து கொள்வதை தேவையற்றதொன்றாகவே கருதுகின்றேன்.

வடகிழக்கிற்கான முன்னேற்ற நடவடிக்கைகள் யாவும் மக்களாலும் அவர்தம் பிரதிநிதிகளாலும், மாகாண சகல மட்ட அலுவலர்களாலுமே நடத்தப்படவேண்டும் என்பதே எனது கருத்து.

மத்திய அரசாங்கம் அதற்கான நிதியையும் அறிவுரைகளையும் அனுசரணைகளையும் வழங்கவேண்டும். அதிகாரப் பகிர்வென்பது இதையே! இல்லையேல் தற்போது காண்பது போல் அபிவிருத்தியும் அதிகாரப்பகிர்வும் ஹாஸ்யப் பொருட்கள் ஆகிவிடுவன.

எமது கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அண்மையில் கூறியவாறு இந்த வருடமுடிவுக்குள் எமது அரசியல் பிரச்சனைகள் யாவும் தீர்க்கப்படவேண்டும். அதன் பின்னரே அபிவிருத்தி செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவேண்டும். அரசியல் பிரச்சனைகளை ஜனாதிபதியாகிய நீங்கள் விரைவில் தீர்த்து வைத்த பின் நாம் சம அந்தஸ்துடையவர்களாக உட்கார்ந்து இந்த நாட்டைக் கட்டி எழுப்ப இடமளிப்பீர்கள் என்று நம்புகின்றேன்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-07-12#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.