Jump to content

தமிழன் விடுதலை விரும்பி மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்


Recommended Posts

post-3802-1175265690_thumb.jpgதமிழன் விடுதலை விரும்பி மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்

எங்கள் தமிழீழ இதயதெய்வத்திடம் இந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் என்ற தமிழ் மக்களின் இதயக்கனி ஒரு நீங்கா இடம் பிடித்தார்.

ஈழத்தமிழரின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்து குடிகொண்டிருக்கும் பொன்மன்ச் செம்மலின் கருத்தாளம் மிக்க பாடல்கள், அவர் படம்கள் அந்த காலங்களில் எப்படி எமது மக்களால் கவரப்பட்டது. எப்படியான் ஒரு சுவை அவரின்படங்களில் இருந்தது என்று சொல்வதே இம் மடலினூடாக நான் சொல்லவிருக்கும் விடையம். இதிலே எவராவது எனக்குத்தெரியாத தகவல்களினை தர உதவி செய்து இதை சிறப்பிக்க விளைந்தால் நான் நன்றி உடையவனாக இருப்பேன்.

Link to comment
Share on other sites

post-3802-1175265690_thumb.jpgதமிழன் விடுதலை விரும்பி மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்

எங்கள் தமிழீழ இதயதெய்வத்திடம் இந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் என்ற தமிழ் மக்களின் இதயக்கனி ஒரு நீங்கா இடம் பிடித்தார்.

ஈழத்தமிழரின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்து குடிகொண்டிருக்கும் பொன்மன்ச் செம்மலின் கருத்தாளம் மிக்க பாடல்கள், அவர் படம்கள் அந்த காலங்களில் எப்படி எமது மக்களால் கவரப்பட்டது. எப்படியான் ஒரு சுவை அவரின்படங்களில் இருந்தது என்று சொல்வதே இம் மடலினூடாக நான் சொல்லவிருக்கும் விடையம். இதிலே எவராவது எனக்குத்தெரியாத தகவல்களினை தர உதவி செய்து இதை சிறப்பிக்க விளைந்தால் நான் நன்றி உடையவனாக இருப்பேன்.

எம்.ஜி.ஆரும் ஒரு பாமர இரசிகனும்.

எம்ஜிஆரின் எண்பத்தெட்டாவது பிறந்ததினத்தை(17.01.2005- MGR 88) நினைவுகூரும் ஒரு எம்ஜிஆர் இரசிகனின் ஒரு சிறிய பின்னோக்கிய பார்வை.

எம்.ஜி.ஆர் பாடல்களும்...ஒரு பாமரனும்...

- யாழ் சுதாகர்

----------

என் வாழ்க்கையின்

முதல் வெளிச்சத்தை

1969 இல்...

'ராஜா' தியேட்டர் இருட்டில்

கண்டு பிடித்தேன்!

'ஒளி விளக்கு'...

நான் பார்த்த முதல்

எம்.ஜி.ஆர் படம்!!- - -

ஒரு நடுத்தரக் குடும்பத்தின் தடுமாற்றம்

என்று இருந்த என்னை...

நம்பிக்கை என்னும் தடம் மாற்றி...

வாழ்க்கையின் முதல் பிடிப்பைத் தந்தவர்...நீங்கள் தான்!

நாத்திகராக உங்களை நீங்கள்

அடையாளங் காட்டினாலும்...

உண்மையான ஆன்மீகம் எது என்பதை

எனக்குக் கற்றுத் தந்தது...

உங்கள் வாழ்க்கை தான்!- - -

ஒரு தெய்வத்தால் மட்டுமே

தரக் கூடிய ஆறுதலை...

உங்கள்...'என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே'

எனக்குத் தந்திருக்கிறது.

ஒரு குருவினால் மட்டுமே

வரக் கூடிய ஞானத்தை

உங்கள்...'ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்' பாடல்

எனக்கு அருளியிருக்கின்றது.

ஒரு தாயிடமிருந்து வரக் கூடிய

கனிவையும் அரவணைப்பையும்

'செல்லக் கிளியே மெல்லப் பேசு'

எனக்கு அள்ளித் தந்தது.

ஒரு தந்தையிடமிருந்து பெறக் கூடிய தைரியத்தை

'வெள்ளி நிலா முற்றத்திலே' பாடல்

எனக்குச் சொல்லித் தந்தது.- - -

'உன்னை அறிந்தால்..' பாடலைக் கேட்டதால் தான்

எனக்குள் உயர்ந்து நின்ற சோதி மரத்தை

யான் உணர ஆரம்பித்தேன்.

'நாளை நமதே' பாடலைக் கேட்டதால் தான்

எனது பாலைகளையும்

சோலைகளாக மாற்றும்

அற்புதம்' அறிந்து கொண்டேன்.

'உலகம் பிறந்தது எனக்காக'

என்று ஒலிக்க ஒலிக்க...

உரிமை கொண்டாடி ரசிக்கும்

உற்சாக குணம் என்னுள்

துள்ளி வளர்வதை

உணர்ந்து சிலிர்த்தேன்.

உங்கள் பாடல் காட்சிகளில்

இரு கையுயர்த்தி நீங்கள்

'இமய' தைரியம்

தந்திராவிட்டால்...

நேற்றைய என் கனவுகள்

காவியுடை பூண்டிருக்கும்.

'எங்கே போய் விடும் காலம்?!' என்று

நீங்கள் கரம் உயர்த்திப் பாடிய போது...

பொறுமை காத்து...ஆனால்

தலை உயர்த்திக் காத்திருந்தன

எனது திறமைகள்.- - -

உங்கள்...

கம்பு வீசும் சாகசங்களில்

பித்தனானேன்.

கத்திச் சண்டைகளில்

முத்தியடைந்தேன்!

நல்ல நேரம்' படத்தில்

சுருண்ட முடி நெற்றியில் சுந்தரம் கூட்ட

மஞ்சள் உடையுடன் மலையருவி போல் துள்ளிக் குதித்து

மாடிப் படியிறங்கிய

உங்கள் அழகில்

நான் வானம் ஏறினேன்! -

கிட்டத்தட்ட் 12 ஆண்டுகளுக்குப் பிறகு

'ஒளி விளக்கு'

மீண்டும் 'ராஜா'வில் ஏற்றி வைக்கப்பட்ட போது

எனக்கும் என் நண்பனுக்கும் [நெல்லியடி முரளி] இடையே..

ஒரு நூதனமான போட்டி!

'தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா?'

பாடல் காட்சியில் வரும்

நான்கு எம்.ஜி.ஆரில்

எந்த எம்.ஜி.ஆர் அதிக அழகு?

இந்தக் கேள்விக்கு விடை காண்பதற்காகவே

ஒளி விளக்கை

மீண்டும் மீண்டும் பார்த்தோம்.

சந்தோஷமாகத் தோற்றோம்!- - -

உங்கள் கணக்கில்

வரவு வைத்திருக்க வேண்டிய

வசந்தங்களை எல்லாம்

வறுமை...

விரட்டியடித்திருக்கிறது.

உங்கள் இளமைக் காலத்தின்

எண்பது சத வீதத்தை...

விதி...

வீணாக்கி இருக்கிறது.

உங்கள் கனவுகளுக்குக் கூட

மறுக்கப்பட்டது களம்.

கடவுள் மீதான நம்பிக்கையை நீங்கள்

கவிழ்த்துப் போடும் அளவுக்கு

உங்களைப் பந்தாடியிருக்கிறது

கடந்த காலம்.

பெரிய பெரிய திறமைகளை வைத்துக் கொண்டே

சின்னச் சின்ன வாய்ப்புகளுக்கும் கூட

நீங்கள்..

'பகீரதப் பிரயத்தனம்'

செய்ய வேண்டியிருந்தது.- - -

உங்கள் துவக்கப் பாதைகளில் எல்லாம்

தூவப்பட்டன அவமான முட்கள்.

உங்கள் கலைப் பயணத்தின்

பாதித் தூரம் வரைக்கும்

'சூழ்ச்சி'யெனும் தடைக் கற்கள்.

பாவம்....

உங்கள் 'மன வலிமை'யை

அவை உணரத் தவறின.

தடைக் கற்கள்-

உங்கள் கால்களுக்கும்

அவமானங்கள்-

உங்கள் மனதுக்கும்

உலுக்க முடியாத உறுதியைத் தந்தன!

ஏளனங்கள் எல்லாம்

உங்களை

ஒரு வேழமாய் மாற்றின!

எதிர்ப்புகள் எல்லாம்

உங்கள்

ஏணியாய் உயர்ந்தன!

ராமச்சந்திரன்

முகவரி தேடி வந்து

வட்டியும் முதலுமாக

அதிசயங்கள் நிகழ்த்த ஆரம்பிக்கிறாள்

அதிர்ஷ்ட தேவதை!

'ஒரு போதும் தோற்காது உண்மை உழைப்பு' என்று...

உங்கள் வெற்றி வாழ்க்கை

விளக்கு ஏந்தி வந்து

விளக்கம் சொல்கிறது.- - -

'யாம் பெற்ற துன்பம்

இரு மடங்காக

யாம் காண்பவர் எல்லாம் பெறுக...'

என்று அலையும்

சேடிஸ்ட்டுகள் செறிந்த உலகில்...

'யாம் பெற்ற துன்பம்

இனி யாருக்கும் வேண்டாம்' என்று

சத்துணவு தந்தீர்கள்.

இல்லாதவரை எல்லாம் தேடிப் பிடித்து

அவர்கள் தேவைள் படித்தறிந்து

அதனிலும் மேலாக

அள்ளித் தந்தீர்கள்.

போனால் போகட்டும் என்று கொடுத்தால் கூட

அளந்து கொடுக்கின்ற சிறிய உலகில்

கணக்குப் பார்க்காமல் வாரிக் கொடுத்தது

கண்டிக் கர்ணனின் 'பெரிய' மனம்.- - -

உங்களைப் பழித்தவர்களாக இருந்தாலும்

அவர்கள் ஒடிந்து நின்ற காலங்களில்

ஓடிப் போய்

உதவியிருக்கிறீர்கள்.

ஆரம்ப காலங்களில் உங்கள்

கைக்கு எட்டிய வாய்ப்புகளை...

வாய்க்கு எட்டாமல்

தட்டி விட்டவர்கள்...

பின்பு..வாழ்ந்து கெட்டு

உங்கள் வீட்டுக் கதவை வந்து தட்டிய போது...

உங்கள் மனக் கதவையும்

அகலமாகவே அவர்களுக்காக

திறந்து வைத்தீர்கள்.- - -

இறப்பு என்பது...

இயற்கையின் நிஜம்.

ஆனால்...என்னைப் பொறுத்தவரையில்...

இந்த இருவர் மரணமும்

உண்மைக் கலப்பற்ற பொய்கள்!

ஒருவர்...என் தந்தை!

மற்றவர்...நீங்கள்!

- யாழ் சுதாகர்

:lol:

post-3518-1175276167_thumb.jpg

post-3518-1175276183_thumb.jpg

post-3518-1175276197_thumb.jpg

post-3518-1175276209_thumb.jpg

Link to comment
Share on other sites

ஆகா அதிகாலை நேரம் அதுவும் மக்கள் திலகத்தினை நினைவு கூறும் அந்த பழைமையான நாட்கள் என்ன நாட்கள் ஐயா அது. உங்கள் கவிதையுடன் கூறிய இந்த வரிகள் சாகாவரம் பெற்றவை.

நானும் நீங்களும் ஓரே வயது போல எனக்குப்படுகிறது. நான் முதலில் பார்த்தபடம் 3 வயதில் "யாழ்ப்பாணம் ' ராணி" திரைஅரங்கில் ' அடிமைப்பெண்' இன்றும் என் கண்களுக்குள் அவரின் அந்த குணிந்து குணிந்து பாடிய அந்த "தாயில்லாமல் நானில்லை " பாடல். அன்று தொடங்கிய உணர்வு.

ஒளிவிளக்கினை ராஜா திரை அரங்கில் 1979 களில் மீண்டும் மீண்டும் 25 தடவைகளுக்கு மேல் பார்க்கத்தூண்டியது. நான் திரையரங்கினை வெளியிடப்பட்ட நாள் அன்று கடவுட் பார்க்க வழமையாக போன சமையம் 3 வது சோ பகல் 10.30 ற்கு தொடங்க உள்ளதாகவும் சொன்னார்கள்.முதல் நாள் பார்ப்பதென்றால் ஆழ்கடலில் முத்தெடுப்பதிலும் கடினம் அப்படி ஒரு கூட்டம் திரை அரங்கினைச்சுற்றி. என்னிடம் பணம் இல்லை. ஓeல் நன்றாக பாஸ்பண்ணியதற்காக என் பெற்றார் அப்போது எலட்ரோனிக்( புதிய விலை கூடிய பொருள் அப்போது) கடிகாரம் தான் இருந்தது. ஒரு பிளக் டிக்கட் ஒன்று அப்ப 150 ரூபாவிற்கு இருக்கிறது. என் கடிகாரமோ ஆயிரத்துக்கு மேல். என்ன செய்வது சந்தர்ப்பம் இப்படி வருவதே கிடையாது இது என் பல நாள் அங்கலாய்ப்பு.

ஆகவே பண்டமாற்று நடந்தது. கியூவில் நின்று அவ்வளவு சந்தின் ஊடே ஒரு வாக மனம் திக்குத்திக்கென்ற போய் உள்ளே நுழைவதற்காக நெருங்கினேன்.

படம் தொடங்குவதற்காக முதலவது மணியும் அடித்துவிட்டது விசிலடி தியேட்டரினை அதிரவைக்கிறது. வாயில் காப்போன் என் டிக்கெட்டினை வாங்கி கிழிக்க போகும் போது தான் விட்டான் ஒரு அடி என் கன்னத்திலே அப்படி ஒரு அடி.

ஏன் முடிந்து போன சோ டிக்கட்டுடன் கால் கடுக்க நின்ற வேலை கவனிக்கவில்லை அது பழையது என்று. அப்புறம் தான் எனக்கு எல்லாமுமே விளங்கியது.

நன்றி தோழரே உங்கள் உதவியுடன் எமது களகக்குஞ்சுகளுக்கு எம்.ஜி.ஆரின் பாடல்களின் வரிகளினை ஒவ்வொன்றாக எழுதுகிறேன். நீங்கள் உங்கள் அற்புதமான தமிழிணூடு சிறு சொற்றகளினை யாவது இணத்து அதனை மெருகூட்டினால் நானல்ல இந்த உலகின் எம்.ஜி.ஆரின் ரசிகர் கூட்டம் ஆனந்தத்தில் மிதக்கும். ஆகா என்ன மொழிநடை. சத்தியமாக சொல்லுகிறேன். மயம்க்கிவிட்டேன் உங்கள் தமிழில்.

Link to comment
Share on other sites

படம் : உலகம் சுற்றும் வாலிபன்

பாடியவர்: டி.எம்.எஸ்

இசை அமைப்பு: எம்.எஸ்.வி

தயாரிப்பு: எம்.ஜி.ஆர்

டைரக்சன்: எம்.ஜி.ஆர்

படம் பிடிக்கப்பட்ட ஆண்டு: 1973

வசூலில் பெரும் சாதனை படைத்து சிறீதர், மனோகரா யாழ் திரையருங்களில் ஒரே நேரத்தில் போடப்பட்ட படம் 1975 களின் பிற்பட்ட காலங்களில். அதிகாலை 12.30 மணிக்கு முதல் சோ தொடங்கி 100 நாட்கள் வரை கவுஸ் புள்ளாக ஓடி சாதனை படைத்த திரைப்படம். நான் இன்று வரை 100 தடைவைக்கு மேல் பார்த்த்து இன்றும் ஓடிக்கொண்டு இருக்கும் பெரும் காவியம்.

படங்கள் இருக்கு போட அனா இந்த யாழ் களத்தில் அட்டாச் பண்ண முடியாம தவிக்கிறேனுங்க. நம்ம வாத்தியாருகாக கொஞ்சம் சப்போர்ட் தரமாட்டீர்களா மோகன் என்ற பெரும் தமிழ் மகன்.

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்,

இப் படை தோற்கின் எப்படை வெல்லும்,

நீதிக்கு இது ஒரு போராட்டம்,

இதை நிச்சயம் உலகம் பாராட்டும்.

வல்லோர்கள் சுரண்டும் பொல்லாத கொடுமை,

இல்லாமல் மாறும் பொருள் தேடி,

அன்று இல்லாமை நீங்கி எல்லோரும் வாழ,

இன்நாட்டில் மலரும் சமநீதி.

நம்மை ஏற்பவர் கையில் அதிகாரம் ,

இருந்திடும் என்னும் கதை மாறும்,

ஆற்றலும் அறிவும் நன்மைகள் ஓங்க,

இயற்கை தந்த பரிசாகும்,

இதில் நாட்டினைக்கெடுத்து நன்மைகள் அழிக்க,

நினைத்தால் எவர்க்கும் அழிவாகும்.

நல்லதை வளர்ப்பது அறிவாற்றல்,

அல்லலை நினைப்பது அழிவாற்றல்,

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்,

இப் படை தோற்கின் எப்படை வெல்லும்,

நீதிக்கு இது ஒரு போராட்டம்,

இதை நிச்சயம் உலகம் பாராட்டும்.

படம்: நாளை நமதே

பாடியவர்: டி.எம்.எஸ்

இசை அமைப்பு: எம்.எஸ்.வி

தயாரிப்பு: எம்.ஜி.ஆர்

டைரக்சன்: எம்.ஜி.ஆர்

film shooting: 1975

ராணி திரை அரங்கில் 1977 களில் போடப்பட்டு மீண்டும் வசூலில் சாதனை படைத்த படம். நான் படம் பார்ப்பது பொதுவாக கலறியில் இருந்து அப்ப வீடுகளில் சரியான கண்டிப்பு. படிக்காட்டி காசு கூட தரமாட்டார்கள். எல்லாவற்றையும் இரும்புப் பெட்டியில் பூட்டி குஞ்சு பொரிக்க வைத்து காவல் காப்பார்கள் கள்ளன் பூந்து கொள்ளை இடும் வரை.

இப்படி இருக்க கப்பலோட்டிய தமிழன் படம் பார்க்க பாடசாலையின் ஆசிரியர் எங்களை எல்லோருமாக லைனில் கூட்டிக்கொண்டு சாந்தி திரை அரங்கிற்கு போகிறார். நாமும் சில கிறிக்கட்டில் கொடிகட்டி பறந்த சிலருடன் சேர்ந்து நைசாக நழுவி கலரி டிக்கட் எடுத்து ஒரு ரூபா கொடுத்து பார்த்தோம். இடைவேளையின் போது அப்ப குசன் சீட்டில் இருந்து எம்.ஜி.ஆர் படம் பார்க்கவேண்டும் என்று தோன்றியது. ஆகவே பிரியாக இருந்த சீட் ஒன்றில் அமர்ந்தோம். அப்படி இருக்கும் போது பின்னால் எனக்கு தெரிந்த முகம்கள் தெரிந்தன. குனிந்து திரும்பிப் பார்த்தேன். என் குடும்பம் என்னை விட்டு விட்டு படம் பார்க்க வந்துள்ளார்கள் என்று அறிந்து கொண்டு எடுத்தேன் ஓட்டமுங்க. பாதியில விட்டுட்டு. பின்பு அதற்காக வட்டியும் குட்டியுமாக் திருப்திப்படும் மட்டும் பார்த்த படம்.

அன்பு மலர்களே நம்பி இருங்களே,

நாளை நமதே இந்த நாளும் நமதே.

தருமம் உலகிலே இருக்கும் வரையிலே,

நளை நமதே இந்த நாளும் நமதே.

தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்,

ஓர் வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே.

காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து,

காய்கனியாகும் நமக்கென வளர்ந்து நாளை நமதே.

பாசம் என்னும் நூல்வழி வந்த வாச மலர்க்கூட்டம்,

ஆடும் அழகில் அமைந்தது தானே வாழ்க்கைப்பூந்தோட்டம்.

மூன்று தமிழும் ஓரிடம் நின்று பாடவேண்டும் காவியச்சிந்து,

அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது.

வீடு என்னும் கோவிலில் வைத்த வெள்ளி தீபங்களே,

நல்ல குடும்பம் ஒளிமயமாக வெளிச்சம் தாருங்களே,

நாடும் வீடும் உங்களை நம்பி நீங்கள் தானே அண்ணன் தம்பி, :)

எதையுமே தாங்கிடும் இதயம் என்றும் மாறாது.

நாளை நமதே இந்த நாளும் நமதே.

நாளை நமதே இந்த நாளும் நமதே.

Link to comment
Share on other sites

தமிழீழ மக்களின் துயர்கணடு துடித்துப்போனவர், எங்கள் தேசம் விடுதலை பெற வேண்டும் என்று ஆத்தமார்த்தமாக குரல் கொடுத்த புரட்ச்சித்த தலைவர். எமது தலைவர் உண்ணாவிரதம் இருந்த போது ஆழ்ந்த கவலையில் மூழ்க்கிப்போனவர். இலங்கைத்தமிழர் தன் படங்களுக்காக செலவழித்த பணத்தினை எப்படி கைமாறு செய்ய போகிறார் என்று அடிக்கடி தலைவரிடம் கூறிக்கொண்டு இருந்த உண்மையான மக்கள் திலகம்.

தான் நடிக்கும் சினிமா என்ற வெகுசன தொடர்புச் சாதனத்தினூடாக இந்திய தமிழ மக்கள் அல்லாது ஒட்டு மொத்த இந்தியர்களினையும் அவர் கவர்ந்தார், விழிப்புணர்வினை ஏற்படுத்திய பொன்மனச் செம்மல் அவர். தமிழீழ மக்களின் நெஞ்சங்களில் தமது இறுதிக் கால நடைவடிக்கை மூலம் நீங்காத இடத்தினை பெற்று எம்மை எல்லாம் ஆளாத்துயரத்தில் விட்டு 87 ல் மறைந்த போது. உலகத்தமிழரே அழுது குளரினார்கள். ஏன் நான் கூட சிங்கள் தேசத்தில் ரேடியோ 3 நாட்கள் எம்.ஜி. ஆர் பாடல்கள் ஒலிபரப்பி சிங்கள மக்களுக்கே அதிர்ச்சியினை ஏற்படுத்திக்காட்டினேன் படித்த பல்கலைக்கழகத்தில்.....

தலைவர் தனக்குப்பிடித்த பாடல்களினை தொகுத்து வழங்கிய படியே உங்களுக்கு நான் வழங்கிக்கொண்டு இருக்கிறேன். வீட்டு வேலைகள் இதனை தொடர்ச்சியாக எழுத முடியாததன் காரணமாக எம்.ஜி.ஆர் ரசிகப்பெருமக்களுக்கு தடங்கலுக்கு வருந்துகிறேன்.

3. படம் : படகோட்டி

இசை: விஸ்வனாதன் - ராமமூர்த்தி

படம் பிடிக்கப்பட்ட ஆண்டு: 1964

இலங்கையில் ராணி திரையரங்கில் 1966 ஆம் ஆண்டுகளில் பெரும் வரவேற்பைப்பெற்று100 நாட்களுக்கு மேல் ஓடிய வெற்றித்திரைபடம்.

கொடுத்த தெல்லாம் கொடுத்தான் அவன்,

யாருக்காக கொடுத்தான்,

ஒருத்தருக்கா கொடுத்தான் ஊருக்காக கொடுத்தான்.

மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா,

மாலை நிலா ஏழை என்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா?

உனக்காக ஒன்று எனக்காக ஒன்று ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை.

படைத்தவன் மேல் பழியும் இல்லை, பசித்தவன் மேல் பாவமில்லை,

கிடைத்தவர்கள் பிரித்துக்கொண்டார், உழைத்தவர்கள் தெருவில் நின்றார்,

பலர் வாட வாட சிலர் வாழ வாழ ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை.

இல்லை என்போர் இருக்கையிலே, இருப்பவர்கள் இல்லையென்பார்,

மடி நிறைய பொருள் இருக்கும், மனம் நிறைய இருள் இருக்கும்,

எது வந்த போதும், பொது என்று வைத்து வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஒரு எம்ஐPஆர் ரசிகன் தான் இன்றும் மிகவும் விரும்பி கேட்கும் பாடல்கள் அவர் வாயசைத்த பாட்டுக்கள் தான்.மிகவும் விருப்பமான் படம் குடியிருந்தகோவில்.

படகோட்டி 100 நாள் ஓடிதென்று எழுதியுள்ளீர்.100 நாட்களுக்கு மேல் ஓடாத படம் எம்ஐPஆர் இன் படம் உள்ளதா?

Link to comment
Share on other sites

ஆம் என்று சொல்லி விட்டு மீண்டும் தொடர்கிறேன். எந்த ஒரு மனிதனுக்கும் தோல்வி என்று ஒன்று இருக்கும் போது தான் வெற்றி பெரும் நாட்டம் இருக்கும். அதற்கு எமது எம்.ஜி.ஆர் விதிவிலக்கல்ல.

படம்: புதிய பூமி

படம் பிடிக்கப்பட்ட ஆண்டு: 1968

வெலிங்டன் திரையரங்கில் 1968 பிற்பகுதிகளில்100 நாட்களுக்கு மேல் ஓடி பாமரமக்களினை அப்படியே அணைத்து எடுத்துக்கொண்டார். இந்தபாடல் பட்டி தொட்டி எல்லாம் பிரபல்யமாக பாடப்பட்ட பாடல். எம்.எஸ். விஸ்வனாதனின் இசை அமைப்பில் தூள் கிளப்பியது. படத்தில் கஸ்டப்பட்ட மக்களினை கட்டி அணைத்து, தூக்கி வைத்து எல்லாம் படம் பண்ணியிருக்கிறார். அது போல வாழ்ந்தும் காட்டினார்.

நான் உங்கள் வீட்டுப்பிள்ளை, இது ஊர் அறிந்த உண்மை,

நான் செல்லுகின்ற பாதை பேரறிஞர் காட்டும் பாதை.

காலம் தோறும் பாடம் கூறும் மாறுதல் இங்கே தேவை,

ஏழை எளியோர் துயரம் போக்கும் செயலே எந்தன் சேவை.

இதயம் என்பது ரோஜாவானால் நினைவே நறுமணமாகும்,

எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே என்னை ஆழும்.

கோவில் என்றால் கோபுரம் காட்டும் தெய்வம் ஒண்டு அங்கே,

உள்ளம் என்றால் உயர்ந்து காட்டும் எண்ணம் வேண்டும் இங்கே.

பிறந்த நாடே சிறந்த கோவில் பேசும் மொழியே தெய்வம்,

இதை மறந்திடாமல் வாழ்ந்து வந்தால் கோபுரமாகும் கொள்கை.

உனக்கொரு பங்கும் எனக்கொரு பங்கும் உலகில் நிச்சயம் உண்டு,

ஒவ்வொரு மனிதன் உழைப்பினாலும் உலகம் செழிப்பதுண்டு.

எதுவந்தாலும் ஏற்றுக்கொண்டால் துணிவே துணையாய் மாறும்,

இளையோர் கூட்டம் தலைமை தாங்கும் பூமியே புதிய பூமி.

Link to comment
Share on other sites

5.படம்: பாசம்

படம் பிடிக்கப்பட்ட ஆண்டு: 1962

இந்த படத்தில் ஒரு வழிப்பறிக்கொள்ளைகாரணாக வந்து கொள்ளை அடித்த பணத்தில் சமூக சேவை செய்லிறார். தாயின் பாசப்பிணைப்பினை காட்டி அதே நேரம் காதலின் உயர்ந்த தியாகத்தினையும் காட்டி பல தடைவைகள் பார்த்தாலும் சலிக்காது, விஸ்வநாதன் - ராமமூர்த்தி இணைந்து இசையமைக்கப்பட்ட பாடல்.

அண்மையில் டி.எம்.எஸ் கலந்துகொண்ட ஒரு கலை நிகழ்ச்சியில் அவர் சொன்னார் தான் விரும்பி கேட்ட்கும் முதல் பாடல் இது தான் என்று

அவரின் தளர்ந்த குரலிலும் பாடிக்காட்டினார். எம்.ஜி.ஆரின் விருப்பமான பட்டல் இது என எம்.ஜி.ஆரினை நினைவு கூர்ந்தார்.

பொஸிட்டீவாக் எதையும் பார்த்தார் என்பதற்கு இப்பாடல் சாட்ச்சி.

உலகம் பிறந்தது எனக்காக,

ஓடும் நதிகளும் எனக்காக,

மலர்கள் மலர்வதும் எனக்காக,

அன்னை மடியை விரித்தாள் எனக்காக. ( அன்னை என்பது பூமித்தாய்)

காற்றில் மிதக்கும் ஒலிகளிலே,

கடலில் கமலும் அலைகளிலே,

இறைவன் இருப்பதை நான் அறிவேன்,

என்னை அவனே தான் அறிவான்.

தவழும் நிலவாம் தங்கரதம்,

தாரகை பதித்த மணிமகுடம்,

குயில்கள் பாடும் கலைக்கூடம்,

கொண்டது எனது அரசாங்கம்.

எல்லாம் எனக்குள் இருந்தாலும் ( கவனிக்க எல்லாம் ஒவ்வொரு மனிதனிலும் இருக்கிறது)

என்னை தனக்குள் வைத்திருக்கும்,

அன்னை மனமே என் கோயில். ( பூமியே தன் தாய் என்கிறார்)

அவளே என்றும் என் தெய்வம்.

குறிப்பு: இதைதான் அண்டத்தில் இருப்பதெல்லாம் பிண்டத்திலும் உண்டு என்று கூறுவார்களோ??

Link to comment
Share on other sites

நான் முதலில் பார்த்தபடம் 3 வயதில் "யாழ்ப்பாணம் ' ராணி" திரைஅரங்கில் ' அடிமைப்பெண்' இன்றும் என் கண்களுக்குள் அவரின் அந்த குணிந்து குணிந்து பாடிய அந்த "தாயில்லாமல் நானில்லை " பாடல். அன்று தொடங்கிய உணர்வு.

ஒளிவிளக்கினை ராஜா திரை அரங்கில் 1979 களில் மீண்டும் மீண்டும் 25 தடவைகளுக்கு மேல் பார்க்கத்தூண்டியது. நான் திரையரங்கினை வெளியிடப்பட்ட நாள் அன்று கடவுட் பார்க்க வழமையாக போன சமையம் 3 வது சோ பகல் 10.30 ற்கு தொடங்க உள்ளதாகவும் சொன்னார்கள்.முதல் நாள் பார்ப்பதென்றால் ஆழ்கடலில் முத்தெடுப்பதிலும் கடினம் அப்படி ஒரு கூட்டம் திரை அரங்கினைச்சுற்றி. என்னிடம் பணம் இல்லை. ஓeல் நன்றாக பாஸ்பண்ணியதற்காக என் பெற்றார் அப்போது எலட்ரோனிக்( புதிய விலை கூடிய பொருள் அப்போது) கடிகாரம் தான் இருந்தது. ஒரு பிளக் டிக்கட் ஒன்று அப்ப 150 ரூபாவிற்கு இருக்கிறது. என் கடிகாரமோ ஆயிரத்துக்கு மேல். என்ன செய்வது சந்தர்ப்பம் இப்படி வருவதே கிடையாது இது என் பல நாள் அங்கலாய்ப்பு.

நீங்கள் மூன்றாவது வயதில் அடிமைப்பெண் படம் பார்த்ததாக எழுதியிருந்தீர்கள். அந்த படம் வெளிவந்த வருடம் 1969 ஆகும். பின்னர் ஓ-எல் பாஸ் செய்தவுடன் ஒளி விளக்கு(1968 இல் வளிவந்தது) படத்தை 1979 இல் பார்த்ததாகவும் குறிப்பிட்டிருந்தீர்கள். அப்போது உங்களுக்கு 13 வயதுதானே எப்படி ஓ-எல் பாஸ் பண்ணியிருந்தீர்கள். என்ன நடந்தது என்று சரியாக நினைவுபடுத்திச் சொல்லுவீர்களா?. ஏனெனில் ஓ-எல் பாஸ் பண்ணியதற்காக எனது அண்ணனையும் என்னையும் வீட்டில் ஒளி விளக்கு படம் பார்க்க அனுப்பியது எனது நினைவுக்கு வந்தது.

காலத்தால் அழியாத உன்னத தலைவன் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் பற்றிய மேலதிக விடயங்களுக்கு

பின்வரும் இணையத்தளத்துக்கு சென்று பாருங்கள்.

http://www.tamilnation.org/hundredtamils/mgr.htm

Link to comment
Share on other sites

ஏனங்க இப்ப அதுவா பிரச்சனை 1968 ல் படம் வந்தது என்று நான் முதலில் நினைத்து இருந்தேன். அதன் பின்பு இங்கு தரவுகள் எடுக்கும் போது 1969 ல் தான் இந்தியாவில் படம் றிலீசானது. அப்ப ராணித்தியேட்டரில் படம் 1969 கடைசிகள் அல்லது 1970 களில் தான் வந்திருக்கவேண்டும். ஏனெனில் எப்பவும் இந்தியாவில் படம் ஓடி முடிஞ்சுதான் இலங்கையில அப்ப படம் போடுறவை. ஆக காவல்காரன் படம் மட்டும் ஒரே நேரத்தில் ரிலீசானது என்று ஒரு கேள்வி 1967 களில். அப்ப "ராஜா" திரையரங்கு உரிமையாளர் திரு. தியாகராஜா தன் தனிப்பட்ட செல்வாக்கினால் எம்.ஜி.ஆரிடம் இருந்து கொப்பி கடத்திக்கொண்டு வந்து கொழும்பில் இருந்து படக்கொப்பி வரமுதல் படம் திரையிட்டதாக ஒரு கதை அடிபட்டது.

ஆக்வே நான் சொல்லவந்தது எனக்கு தாயில்லாமல் நானில்லை பாடல். சிங்கதினூடு சண்டை இதெல்லாம் நினைவிருக்கு என்று சொன்னா அப்ப என்னக்கு 4 அல்லது 5 வயது இருந்திருக்க வேண்டும். 1969 ல் அடிமைப்பெண் ஓடியிருக்க முடியாது. ஏனென்றால் பொன்னியின் செல்வன் 1969 ல் எம்.ஜி.ஆரின் 100 வது படமான ஒளிவிளக்கு பாத்திருக்கிறார். அடிமைப்பெண் 102 வது படம். ஆகவே அப்ப ஒரே நேரத்தில் இரு எம்.ஜி.ஆர் படங்கள் வசூலினை எதிர்பார்த்து போடுவதில்லை. ஆக சிவாஜின் படம் ரிலீஸ் பண்ணியிருக்க முடியும் எம்.ஜி.ஆரின் படத்துக்கு போட்டியாக.

இதனால் நிச்சயமாக 1969 கடைசிபகுதி அல்லது 1970 அப்ப நான் யாழ் மத்திய கல்லூரியில் முதலாம் வகுப்பு. அப்ப 1979 ல் ஓல் தானுங்க. ஓல் ரிசல்ட் வந்தது பெப், மார்ச் ஆகவே 1980 ல் ஏப்பிரல் வருடப்பிறப்புக்கு ஒளிவிளக்கு மீண்டும் போட்டுள்ளார்கள்.எப்பவும் 10 வருடத்துக்கு ஒரு தடைவை தான் புதுசாக லீல் பிறின்ட் பண்ணுவது வழமை.

தவறுக்கு வருந்துகிறேன். எனக்கு 5 வயது இருந்திருக்கவேன்டும்.

Link to comment
Share on other sites

எங்கள் தங்கம் பொன்னியின் செல்லவனை அன்புடன் இக் களத்திற்கு அழைக்கிறேன். ஆமா சிவாஜிட ராஜா படம் ராணியில எப்ப போட்டாங்க? எனது இரண்டாவது படம் அதுதானுங்க.

என்னங்க வாங்களேன். எனக்கு உங்கள விட்டா இங்க யாரும் இல்லைங்க. பசங்க குறுக்கு கேள்வி வேறு கேட்ட்கிறாங்க? :lol:

Link to comment
Share on other sites

எம்.ஜி.ஆர் என்ற அந்த மாபெரும் மக்கள் திலகம் எப்படி தன் பாடல்கள் உருவாகவேண்டும் என்று செயல்பட்ட விதங்களினை கீழே பர்ர்க முதல்.

பாடல் 6

படம்: அடிமைப்பெண்

படம் பிடிக்கப்பட்ட ஆண்டு- 1969 ,இசை அமைப்பு கே.வி.மகாதேவன்

ராணி தியேட்டரில் அப்ப எழுப்பப்பட்ட கட் அவுட் 150 அடி உயரமானது. அப்போது அது ஒரு பெரிய சாதனையாக ராணி தியேட்டர் உரிமையாளருக்கு இருந்தது. ராஜா தியேட்டர்ருக்கும் ராணித்தியேட்டருக்கும் தான் அப்போது எம்.ஜி.ஆர் படங்கள் போடுவதில் போட்டி. கட் அவுட் போடுவதில் போட்டி ஓவியர் ஞானம் கீறும் எம்.ஜி.ஆர் கட்டவுட்டுகளுக்கு ஒரு தனி கவர்ச்சி இருந்தது.

தாயில்லாமல் நானில்லை

தானே எவரும் பிறந்ததில்லை

எனக்கொருதாய் இருக்கின்றாள்,

என்றும் என்னைக் காக்கின்றாள்.

ஜீவ நதியாய் வருவாள்,

என் தாகம் தீர்த்து மகிழ்வாள்,

தவறினைப் பொருப்பாள்,

தர்மத்தை வளர்ப்பாள்,

தரணியிலே வளம் சேர்த்திடுவாள்.

தூய நிலவாய்க்கிடப்பாள்,

தன் தோளில் என்னைச் சுமப்பாள்,

தன்மையில்லாமல் நான் மிதித்தாலும்,

தாய்மையிலே மனம் களிந்திடுவாள்.

மேகவீதியில் நடப்பாள்,

உயிர் மூச்சிலே கல்ந்திருப்பாள்,

மலை முடி தொடுவாள் மலர் மணம் தருவாள்,

மங்கள வாழ்வுக்கு துணையிருப்பாள்.

ஆதி அந்தம் அவள்தான் நம்மை,

ஆளும் நீதியும் அவள்தான்,

அகந்தையை அழிப்பாள் ஆற்றலை கொடுப்பாள்

அவள் தான் அன்னை மகா சக்தி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் இதை உக்ரேன் போர் ஆரம்பித்த காலங்களிலிருந்தே சொல்லிக்கொண்டு வருகின்றேன். அப்போது என் மீது கோபப்பட்டவர்கள் தான் அதிகம். அண்மையில் ஜேர்மனியும் மற்றும் ஒரு சில நாடுகளும் உக்ரேனுக்கான பண உதவியை நிறுத்தியிருந்தனர். இன்னும் ஒரு சில மாதங்கள் பொறுத்திருங்கள். உக்ரேனைப்பற்றிய நல்ல செய்திகள் வரும். 😂
    • கிந்தியன்ர ஆட்டோ எல்லாத்தையும் நிற்பாட்ட காற்று தானாய் சுத்தமாகும். இலையான் மாதிரி எல்லா இடத்திலையும் குவிஞ்சு போய் கிடக்குதாம்.அதின்ர புகைய சுவாசிச்சாலே நோமல் வாழ்கை கணக்கில 20 வருசம் குறையுமாம்.
    • பொழுபோறதுக்காக லெக்சன் கேக்கிற மாதிரி எனக்கு தெரியுது....
    • 1)கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)                     ஆம் 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                                     இல்லை 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி)                               இல்லை 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி                                                     ஆம் 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி)                                                                                                              ஆம் 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)                                     இல்லை 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி)                                                                                                         ஆம் 8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி)                                                     இல்லை 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி)    இல்லை 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14)                                                                                       இல்லை 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி)                                                இல்லை 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                       ஆம் 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14)                                                                                    இல்லை 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 )                                                                இல்லை 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                 ஆம் 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி)                                                               இல்லை 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                                        இல்லை 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17)                                                                   இல்லை 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி)                                                                  ஆம் 20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்)                                                                            ஆம் 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு)                                            ஆம் 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( தேசிய ஜனநாயக முன்னணி)                     இல்லை 23)சிவனேசதுரை சந்திரகாந்தன் ( தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி)            இல்லை 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு)                                ஆம் 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி)        ஆம் 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்)                            ஆம் வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்) 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும்  தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது) தமிழரசு கட்சி------- 4 28) வன்னி தேசிய மக்கள் சக்தி------ 3 29) மட்டக்களப்பு) தேசிய மக்கள் சக்தி ------ 2 30)திருமலை தேசிய மக்கள் சக்தி-----3 31)அம்பாறை தேசிய மக்கள் சக்தி------3 32)நுவரெலியா தேசிய மக்கள் சக்தி ------ 3 33)அம்பாந்தோட்ட தேசிய மக்கள் சக்தி-------- 5 34)கொழும்பு தேசிய மக்கள் சக்தி--------10 35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 03 36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 02 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்) சுமந்திரன் வினா 38 - 48 வரை பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்) 38) மானிப்பாய் ------------------    தமிழரசுக்கட்சி 39) உடுப்பிட்டி--------------------    தமிழ் தேசிய மக்கள் முன்னணி 40) ஊர்காவற்றுறை------              ஈபிடிபி 41) கிளிநொச்சி------------------       தமிழரசுக்கட்சி 42) மன்னர்-----------------------         ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி 43) முல்லைத்தீவு------------            தேசிய மக்கள் சக்தி 44) வவுனியா-------------------          தேசிய மக்கள் சக்தி 45) மட்டக்களப்பு------------         தேசிய மக்கள் சக்தி 46) பட்டிருப்பு -------------------    தமிழரசுக்கட்சி 47) திருகோணமலை----------     தேசிய மக்கள் சக்தி 48) அம்பாறை-------------------      தேசிய மக்கள் சக்தி 49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) தேசிய மக்கள் சக்தி 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) ஐக்கிய மக்கள் சக்தி 51  - 52 வரை வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) 51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 3 52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) 9 53 - 60 வரை பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? ( 53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி-------     4 54)தமிழரசு கட்சி----------------------              7 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு     2 56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 0 57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 2 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 60 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 120 60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) 3
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.