Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொப்பிக்கல, முள்ளிவாய்க்காலில் முன்வரிசையில் போரிட்ட இராணுவ சிப்பாயின் இன்றைய நிலை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தொப்பிக்கல, முள்ளிவாய்க்காலில் முன்வரிசையில் போரிட்ட இராணுவ சிப்பாயின் இன்றைய நிலை!

July 15, 2018
43er.jpg

யுத்­தத்­தின்­போது பெரும் வீரர்­க­ளா­கவும் தன­வந்­தர்­க­ளா­கவும் சித்­த­ரிக்­கப்­பட்ட பல­ரது வாழ்க்கை இன்று யுத்தம் முடிந்­த­கை­யோடு புரட்­டிப்­போ­டப்­பட்­டுள்­ளது. அந்­த வகையில் யுத்­த­கா­லத்தில் பெரும் யுத்த வீர­ராக பல­ராலும் போற்­றப்­பட்ட சாரங்க என்ற நபர் தற்­பொ­ழுது மீன் வியா­பா­ரி­யாக உலா வரு­கிறார்.

யுத்த வெற்­றியின் ஒன்­பது வரு­ட­கால கொண்­டாட்­டங்கள் கடந்­துள்ள நிலையில் இந்த வெற்­றிக்கு காரணமான முக்­கி­ய­மா­ன ஒருவர் இரா­ணு­வ­வீரர் சாரங்க. அவர் இன்று கலே­வெல மாத்­தளை சந்­தியில் மீன் வியா­பா­ரி­யாக தனது ஜீவ­னோ­பா­யத்தை கொண்­டு­ செல்­கிறார்.

 

2004 ஆம் ஆண்டு இலங்கை இரா­ணு­வத்தில் தன்னை இணைத்­துக்­கொண்ட சாரங்க 6 மாத கால ஆரம்ப இரா­ணுவ பயிற்­சியை பூஸா இரா­ணுவப் பயிற்­சிக்­கல்­லூ­ரியில் பெற்­றுள்ளார்.

பின்னர் 2006 ஆம் ஆண்டு 800 க்கும் அதி­க­மா­ன­வர்கள் மத்­தியில் வெற்­றி­க­ர­மாக இரா­ணுவப் பயிற்­சியை முடித்த 138 பேரில் ஒரு­வ­ராக சாரங்­கவும் வெளி­யே­றினார்.

தனது இரா­ணுவ வாழ்க்கைப் பய­ணத்தை தொப்­பி­கல தாக்­கு­தலில் முதல் முத­லாக ஆரம்­பித்தார்.

தொப்­பி­க­லவை மீட்கும் இலங்கை இரா­ணு­வத்தின் விடு­த­லைப்­பு­லி­க­ளு­ட­னான போரில் திற­மை­யாக போரிட்ட இரா­ணுவ வீர­ராகத் திகழ்ந்த சாரங்க அந்த தாக்­குதல் நட­வ­டிக்­கைக்­காக விசே­ட­மாக உரு­வாக்­கப்­பட்ட 8 பேர் அடங்­கிய சிறப்பு கொமாண்டோ படை­ய­ணி­யிலும் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்தார்.

சிறு­வ­யது முதல் சுறு­சு­றுப்­பையும் துடிப்­பான ஆற்­ற­லையும் கொண்­டி­ருந்த சாரங்­க­விற்கு இரா­ணுவ செயற்­பா­டுகள் இல­கு­வா­ன­தாக இருந்­தன.

அவ­ரது துடிப்பு மிக்க ஆற்­றலும் திற­மையும் இரா­ணுத்தில் இவர் பால் நம்­பிக்கை ஏற்­பட கார­ணி­யாக அமைந்­தது.

 

இவ்­வா­றான நிலையில் இலங்கை இரா­ணு­வத்­துக்கும் விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கும் இடை­யி­லான முள்­ளி­வாய்க்கால் இறுதிப்போரிலும் இராணுவத்தின் முன்­வ­ரிசை வீர­ராக இருந்து போரிட்டார்.

யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டதை அடுத்து இலங்கை இரா­ணுவ வீரர்­களை பாராட்­டு­வ­தற்கும் கௌர­விப்­ப­தற்கும் பயன்­ப­டுத்­தப்­பட்ட புகைப்­ப­டங்கள் அநே­க­மா­ன­வற்றில் சாரங்­கவின் புகைப்­ப­டங்­களே இடம்­பெற்­றி­ருந்­தன. காரணம் அவ­ரது கம்­பீ­ர­மான உடல் கட்­ட­மைப்­பாகும்.

உள்­நாட்டில் மாத்­தி­ர­மன்றி, வெளி­நாட்டு ஊட­கங்­க­ளிலும் கூட சாரங்­கவின் புகைப்­ப­டங்கள் வெளி­வர ஆரம்­பித்­தன. அதேபோல் உள்­நாட்டில் இரா­ணுவ வீரர்­களை வாழ்த்­து­வ­தற்­காக வீதி­யோ­ரங்­களில் வைக்­கப்­பட்ட பதா­கைகள் அநே­க­மா­ன­வற்றில் சாரங்க இடம்­பி­டித்­தி­ருந்தார்.

இந்தப் பிர­சா­ரமே சாரங்­க­விற்கு வினை­யா­கவும், இரா­ணு­வத்தின் மீது வெறுப்­பு­ணர்ச்சி ஏற்­பட கார­ணி­யாகவும் அமைந்­தது. காரணம் சாரங்­கவின் புகைப்­ப­டங்கள் சமூ­கத்தில் அநே­க­மான பிர­தே­சங்­களில் பிர­ப­ல­மான நேரம் முதல் சாரங்­க­விற்கு இரா­ணுவ உயர் அதி­கா­ரி­க­ளி­ட­மி­ருந்து அழுத்­தங்கள் அதி­க­ரித்­தன. இவ்­வா­றான நிலையில் சாரங்க இரா­ணுவ தலை­மை­ய­கத்­திற்கு மாற்­றப்­பட்டு தனக்கு பொருத்­த­மற்ற வேலை­களில் ஈடு­பட நிர்ப்­பந்­திக்­கப்­பட்டார்.

 

இவ்­வா­றான நிலை மேலும் உக்­கி­ர­ம­டைய ஆரம்­பித்­ததை அடுத்து சாரங்­க­விற்கு இரா­ணு­வத்தின் மீது வெறுப்பு ஏற்­பட்­டது. தான் நாட்­டுக்­காக தன் உயிரை துச்­ச­மென மதித்து செயற்­பட்­ட­மைக்கு கிடைத்த கெள­ர­வ­மென மன உளைச்சல் அடைந்த நிலையில் இரா­ணு­வத்தில் இருந்து தப்பிச் சென்றார்.

பின்னர் தான் ஓர் இராணுவ வீரர் என அடையாயப்படுத்திக் கொண்டு பல நிறுவனங்களுக்கு தொழில் தேடி சென்றும் எவரும் அவருக்கு தொழில் வழங்க முன்வரவில்லை. இந்நிலையில், தன் சேமிப்பில் இருந்த சிறிய தொகையைக் கொண்டு மீன் வியாபாரத்தை ஆரம்பித்து இன்று கலேவெல பிரதேசத்திற்கே மீன் மொத்த வியாபாரியாக மாறி தனது மனைவியின் துணையுடன் செயற்பட்டு வருகின்றார்.

 

http://www.pagetamil.com/11346/

  • கருத்துக்கள உறவுகள்

மிக சிறந்த சிங்கள தேசத்தின் தேச பக்தன்....

முடிந்தவரை தனது நாட்டுக்காய்  தனது பங்களிப்பை வழங்கியிருக்கிறான்...

தான் முன்னிலை பெறுவதை தன் இனம் விரும்பாத ஒரு நிலை வந்தாலும், இருப்பதை வைத்து தொழில் செய்கிறான்..

தன் இனத்தை காட்டி கொடுக்கவேயில்லை....

மரியாதைக்குரிய வீரனே,,,,

வீரத்தில் நேர்மையிருந்தால் இராணுவத்தைகூட மதிக்கும் புலிகளுடனேதான் நீ மோதினாய்...

கொப்பேகடுவ  அதனால்தான் புலிகள் மதிக்கும் ராணுவ தளபதி ஆனார்...

.... வாழ்த்துக்கள் ராணுவ வீரனே உன்னோட  தன்னம்பிக்கைக்கும்...உன் தேச விசுவாசத்துக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

அந்த சந்தை நகரத்தில் உள்ள பாடசாலையில் இருந்து மிக மோசமான குழப்படிகள் காரணமாக சிலமுறை தாய் தந்தையர் அழைக்கப் பட்டு எச்சரிக்கை செய்யப்படட அந்த சிறுவன் ஒரு நாள் நிரந்தரமாக வெளியே அனுப்பப்பட்டான்.

சிறு குழுவினை ஆரம்பித்து சந்தை வியாபாரிகளுக்கு பாதுகாப்பு தருவதாக கூறி கப்பம் வாங்கி அட்டகாசமாக வாழ்ந்தான் அந்த சிறுவன்.

இவனை இங்கே வைத்திருந்தால் ஊரில் நமே வாழமுடியாது என வெளிநாடு வியாபாரத்துக்கு போ என்று கப்பலில் அனுப்பி வைத்தனர் அந்த 17 வயது சிறுவனை. 

அவனது சுபாவத்துக்கு பொருத்தமான மகத்தான வேலை அவனுக்காக காத்து இருக்கிறது என்று அப்போது அவனுக்கு தெரியவில்லை.

பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் மகுடத்தில் இந்தியா எனும் முத்தினை இணைத்த, 'பிரிட்டிஷ் இந்தியாவின்' தந்தை தான் அந்த சிறுவன் 'ராபர்ட் கிளைவ்'.

கல்கத்தாவில் இருந்த கிழக்கிந்திய கொம்பனி பண்டகசாலையினை, அந்த பகுதி நவாப், பிரெஞ்சுக்காரர்களுடன் சேர்ந்து அழித்து விட, அவர்களுடன் சண்டை போட மதராசுப் பட்டணத்தில் இருந்து 800 ஐரோப்பிய, 3000 சுதேசி வீரர்களுடன் கிளப்பி சென்றான் அந்த இளைஞன்.

ஏனையோர் மறுத்து விட, இளமைக்கால சுபாவம் கை கொடுக்க, துணிந்து சென்றான். 1756, 'battle of palsy' வென்றான். இந்திய துணைக் கண்டத்தில் நமது கொடியினை நடலாம் என மிக தாமதமாக அங்கே வியாபாரத்துக்கு வந்த பிரிட்டிஷ் காரர்களுக்கு நம்பிக்கை கொடுத்தான்.

இளமைக்கு கால அனுபவப்படி, கப்பம், கபளீகரம் மூலம் பெரும் பொருள் சேர்த்துக் கொண்ட அந்த மனிதர், கூடவே பெரும் போதை பழக்கத்துக்கும் அடிமையானார்.

இங்கிலாந்ந்து திரும்பி, லண்டனில் மிகப் பெரிய தனவந்தர்கள் வாழும் இடத்தில் வாழ்ந்தாலும்.... கடைசி காலத்தில் இந்த போதை பழக்கத்தால், மதிப்பு இழந்து, யாரும் இல்லாத அனாதையாக இறந்த நிலையில் கண்டு பிடிக்கப் பட்டார்.

யுத்த வெறியில், மனித தர்மத்தினை, கடாசி விடும் பலரது கதை இந்த ராணுவ வீரர், கிளைவ் ராபர்ட் இன்னும் பலர் போலவே உள்ளது. 

இது தமிழர் தரப்பிலும் பொருத்தம்.

ராஜராஜன் வம்சம் அவனது மகனுடன் வீழ்ந்தது. 

ஆண் வாரிசு வேண்டும் என, 8ம் ஹென்றி மன்னர்,  6 ராணிகளை கட்டி, 2 ராணிகளை சிரசேதம் செய்து, கடைசியில் பிறந்த ஆண் வாரிசு 9 வயதில் அரியணை ஏறி 15 வயதில் இறக்க, எது வேண்டாம் என நினைத்தாரோ, அதுக்கு மாறாக, இரண்டு பெண் வாரிசுகள் ஆண்டு ( Queen Mary and Queen Elizabeth 1), இருவருக்குமே பிள்ளைகள் இல்லாத வகையில் முடிவுக்கு வந்தது இங்கிலாந்தின், அவரது தந்தை 7ம் ஹென்றி மன்னரால் ஸ்தாபிக்கப்படட  , டியூடெர் வம்சம்.

உலகம் முழுவது கட்டியாண்ட பிரிட்டிஷ் சமராஜத்தின், தலை நகரில், அதன் காலனியாக இருந்த அமெரிக்காவின், ஜேர்மன் வம்சாவளி ஜனாதிபதி, டொனால்ட் டிரம்ப் கிரந்தங்கள் பல விடும் நிலையினை என்னென்பது. 

அதனால் தான் சொன்னார்கள். காலம் யாருக்கும் சார்பானதாக நீண்ட காலத்துக்கு இருந்ததில்லை.  

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

மீன் யாவாரியும், இளனி யாவாரியும் தானே ஆமியில் இணைந்தார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.