Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளை தோற்கடிப்பது மிகவும் கடினமானது: தி எக்கொனமிஸ்ற் சஞ்சிகை.

Featured Replies

விடுதலைப் புலிகளை தோற்கடிப்பது மிகவும் கடினமானது: தி எக்கொனமிஸ்ற் சஞ்சிகை.

தமிழீழ விடுதலைப் புலிகள் பல முனைகளில் போரிடும் வலுவை உடையவர்கள். கிழக்கில் கெரில்லாக்களாகவும் வடக்கில் மரபுவழிப் படைகளாகவும், தெற்கை ஒரு பயப்பீதியில் வைத்திருக்கும் தாக்குதல்களையும் அவர்களால் நடத்தமுடியும். எனவே எப்போதும் அவர்களை தோற்கடிப்பது மிகவும் கடினமானது.

ஆசியாவில் இருந்து வெளிவரும் "தி எக்கொணமிஸ்ற்" சஞ்சிகை தனது ஆய்வுச்செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளது.

அந்த ஆய்வின் முக்கிய பகுதிகள் வருமாறு:

"போரியலில் தற்கொலைத் தாக்குதலே மிகவும் ஆபத்தான ஆயுதம், ஆனால் விடுதலைப் புலிகள் புதிய வியூகத்திற்கு நகர்ந்துள்ளனர். தற்போது அவர்களிடம் வான்படையும் உண்டு.

கடந்த மார்ச் 26 ஆம் நாள் விடுதலைப் புலிகள் தமது வான்படை மூலம் சிறிலங்காவின் பிரதான வான்படைத் தளத்தை தாக்கியுள்ளனர். அவர்கள் தமிழ் மக்களுக்கு ஒரு தனிநாடு வேண்டி 25 வருடங்களாக சிறிலங்கா அரசாங்கத்துடன் போராடி வருகின்றனர்.

விடுதலைப் புலிகளின் வான்படை வலு இடம்பெற்று வரும் போரில் பயங்கரமான புதியவகை உத்தி.

5 ஆண்டு கால போர்நிறுத்த உடன்பாடு பேச்சளவில் மட்டும் இருக்கும் போது போர் தீவிரமடைந்து வருகின்றது.

தமது வான்படையின் இரு வானூர்திகள் கொழும்பு அனைத்துலக வானூர்தி நிலையத்திற்கு அண்மையாக உள்ள சிறிலங்காவின் வான்படைத் தளத்தின் மீது தாக்குதல்களை நடத்திவிட்டு பாதுகாப்பாக திரும்பி வந்துவிட்டதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் தலைவருடன் வானோடிகள் நின்று எடுத்த படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தளத்தில் தரித்து நின்ற வான்படையினரின் வானூர்திகளுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் தொடர்பாக இரு தரப்பும் முரண்பாடான தகவல்களை தெரிவித்தனர்.

சிறிலங்காவின் தெற்குப்பகுதி பெருன்பான்மையாக சிங்கள மக்களைக் கொண்ட பகுதியாகும். அங்கு இடம்பெற்ற இந்த தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெதுவாக நகரும் இலகுரக வானூர்தி அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதியின் மேலாக 400 கி.மீ (250 மைல்) தூரத்திற்கு யாரும் கண்டுபிடிக்க முடியாதவாறு பயணித்து வந்தது பெரும் சவாலாகும்.

இந்த தாக்குதலில் பாதிப்படைந்த படையினர் தமிழ் மக்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் மீது வான் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். மேலும் மார்ச் 28 ஆம் நாள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கொக்கட்டிச்சோலையையும் படையினர் கைப்பற்றியுள்ளனர். இது விடுதலைப் புலிகளுக்கு ஒரு பின்னடைவாகும். விடுதலைப் புலிகளின் வான் தாக்குதலுக்கு முன்னரும் விடுதலைப் புலிகளின் பகுதி கடுமையான எறிகணை வீச்சுத் தாக்குதல்களுக்கு உள்ளாகி வந்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் தகவல்களின்படி 155,000 மக்கள் கடந்த 6 வாரங்களில் இடம்பெயர்ந்துள்ளனர். எதிர்வரும் தமிழ் - சிங்கள புதுவருடத்திற்கு முன்னர் கிழக்கின் முழுப்பகுதியையும் விடுவித்து விடலாம் என அராங்கம் நம்புகின்றது.

சிறிலங்கா அரசாங்கம் வடக்கில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி மீது மற்றுமொரு களமுனையையும் திறந்துள்ளது. அதன் பிரதான நோக்கம் மடு தேவாலயத்தை கைப்பற்றுவது தான். அதன் நோக்கம் கிறிஸ்தவர்களின் ஆதரவை பெறுவதாகும்.

தற்போதும் அரசாங்கத்தின் பேச்சாளர்கள் பேச்சுவார்த்தை மூலமான தீர்வின் முக்கியத்துவம் தொடர்பாக வாயை திறப்பதில்லை. ஆனால் எதிர்வரும் 3 வருடங்களில் போரில் வெற்றிபெற்று விடலாம் என அதிகாரிகள் பேசுகின்றனர். இந்த போரில் 70,000 மக்களின் உயிரிழந்துள்ளனர். இதில் 2005 ஆம் ஆண்டில் ஆரம்பித்த மோதல்களில் உயிரிழந்த 4,000 மக்களும் அடங்குவர்.

எப்போதும் விடுதலைப் புலிகளை தோற்கடிப்பது மிகவும் கடினமானது. அவர்கள் பல முனைகளில் போரிடும் வலுவை உடையவர்கள். கிழக்கில் கெரில்லாக்களாகவும் (இங்கு அவர்களிடம் சிறிய கடற்படையும் உண்டு), வடக்கில் மரபுவழிப் படைகளாகவும், தெற்கை ஒரு பயப்பீதியில் வைத்திருக்கும் தாக்குதல்களையும் அவர்களால் நடத்தமுடியும்.

யாராலும் கண்டுபிடிக்க முடியாதபடி தெற்கில் வந்து குண்டுகளை வீசிச் சென்ற விடுதலைப் புலிகளின் வான்படையின் வலிமை தென்பகுதிக்கு மற்றுமொரு வடிவில் போரை கொண்டு சென்றுள்ளது. இது கடும் போக்காளரான அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிற்குகான ஆதரவை மழுங்கடித்து விடும். கடந்த கால இராணுவ நடவடிக்கைகள் விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் நிலைக்கு மக்களை தள்ளியுள்ளது

-Puthinam-

யார் என்ன சொன்னாலும் இந்த மரமண்டைகளுக்கு ஏறாது என்று தெரிந்த பின்பும் இவர்கள் மீது முறையான பயன்தரக் கூடியதான அழுத்தங்களைப் பிரயேகிப்பதற்கு சர்வதேசம் முனவருமானால் மாற்றங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. கிடைக்கின்ற சிறு வெற்றிகளைக் கொண்டாடிக் களிப்பவர்களைத் திருத்தவே முடியாது.

இலங்கையுடன் சம்பந்தம் உள்ள எல்லா வெறியுறவு கொள்கையாளர்களும் விளங்கிக்கொண்ட விடயமாக இதை கொள்ள முடியும்..

ACSA எண்ற அமெரிக்காவுடனான ஒப்பந்தம் கூட அமெரிக்காவின் நீண்டநாள் வேண்டுதல், அது இப்போதைய இலங்கையின் இயலாமையை பயன் படுத்தி கொண்டது..

புலிகளின் எதிர்பாராத திடீர் தாக்குதல்களே உலகத்தின் கண்களைத்திறக்க வைக்கிறது. மற்றும் வேளைகளில்

ஈழத்தில் என்ன மனிதவுரிமைகள் மீறப்பட்டாலும் மௌனமாக இருக்கிறார்கள். சரி எங்கள் போராட்டத்தின் நியாயங்கள் புரிந்தால் சரி.......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது விளங்கினால் எப்பவோ எங்களுக்கு தமிழீழத்தை தந்திருப்பாங்கள்

விடுதலைப் புலிகளை தோற்கடிப்பது மிகவும் கடினமானது: தி எக்கொனமிஸ்ற் சஞ்சிகை.

புலிகளைத் தோற்கடிக்க முடியும் ஆனால் கடினம் என்கிறார்களா? அல்லது புலிகள்

தோற்கடிக்கப்பட முடியாதவர்கள் என்கின்றார்களா ?

சஞ்சிகை என்ன சொல்லவருகின்றதென்று எனக்கு உண்மையில் விளங்கவில்லை.

இவ்வாறான கருத்துக்களால் சர்வதேசத்தின் அணுகுமுறையில் மாற்றம் வருமென கருதமுடியாது. துங்குபவர்களை எழுப்பமுடியும் துங்குபவர்கள் போன்று நடிப்பவர்களை எழுப்பமுடியாது.

சர்வதேச அணுகுமுறைகளில் மாற்றங்கள் வரும். அந்த மாற்றங்கள் எங்களுக்காக ஏற்படுமென்று எண்ணக் கூடாது. மாற்றங்கள் ஏற்படும்போது தமிழர் தரப்பும் அந்த மாற்றங்களுடன் இணைந்து தனது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும். இக் கருத்தைத் தமிழ்த்தரப்பு பல தடவைகள் வெளிப்படுத்தியுள்ளது. தற்போது சர்வதேச அணுகுமுறையில் இலங்கை சம்பந்தப்பட்ட எண்ணங்களில் ஏதோ ஒருவகைமாற்றம் ஏற்பட்டுள்ளதைக் காணக் கூடியதாயுள்ளது. அதன் சாதக பாதக நிலையைக் கருத்திலெடுத்து தமிழர் தரப்பு நிச்சயமாக தனது அடுத்த நடவடிக்கையை மேற்கொள்ளுமென எதிர்பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர் தரப்பு பலமடைகின்றபோது தான், இப்படியானவங்களுக்கு ஞானக்கண் திறக்கின்றது. எனவே, தமிழர் தொடர்ந்து பலமாக இருக்க வேணும். இருக்கின்றதை வைச்சுத் திருப்தி காணாமல், என்னும் பலமடையணுமென்னா, போராட்டத்திற்கு நாங்கள் பலம் சேர்க்க வேண்டும்.

அதற்கு நாங்கள் அனைவரினதும் பங்களிப்பு மிகமிக அவசியம்.

கனம் நீதவான் மாப்பிள்ளை, சாணக்கியன், லிசா

உங்கள் சொற்படி என்னை கட்டுப்படுத்தி, என் உணர்ச்சியைக் கட்டுப்படுத்தி, உங்களின் பெயர் காக்க நான் உங்கள் கருத்துக்களை வாசித்தபடியே தான் உள்ளேன். நீங்கள் எழுதுவது கருத்து. அதை வாசிச்சாலும் ஒரு கிக் இருக்கு.

ஐயோ ஐயோ இந்த ஒற்றன் எல்லாவற்றிற்கும் எல்லோ லோ லோ என்று கருத்து எழுதிறார். இப்ப தான் எனக்கு சத்தியா விளங்குது நான் இப்படி பால் குடி மாதிரி எழுதேக்க எப்படி எல்லாம் இருந்திருக்கும் உங்கள் நெஞ்சங்கள்.

எனக்கு தாங்க முடியலேங்க. கலத்தில இறங்கவும் கூடாது இந்த லொல்ளு பண்ணிறசனத்தினாலேயும் பெரிய பிரச்சைனையாய் இருக்குங்க.

அட நான் தான் அலட்டலில மகாராஜா என்று நினைச்சா இங்க ஒற்றன் மாதிரி சக்கரவர்த்திகள் எல்லாம் இருக்குங்கோ. கொஞ்சம் சாணக்கியன் எடுத்து விடும் வாலினைச்சுருட்ட. கூட கதைக்கிறார் என்று மாத்திரம் விளங்குது. :angry:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் எல்லாவழியாலும் முயற்சித்துப்பார்த்து

மீசையில மண் ஒட்டவில்லையென்று மீண்டும்

ஏன் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து தோற்றுப்போய்

முடியாது என்று தெரிந்த பின்பும் மீண்டும்

மீண்டும் முயற்சி செய்து தோற்றுப்போய்

அதன்பின்........................................................

................................................................................

.................................................. தோற்றுப்போய் வேறு வழியில்லாமல் உண்மை வெளியில் வெளிவரும் நேரமிது.

கவனமாக இருக்கணும் யாராவது இன்னும் புது ஐடியா கொடுத்தா நிச்சயமாக முயற்சி செய்வினம்...

இப்போதைக்கு அவர்களால் முடியவில்லை அவ்வளவு தான்.

எல்லோருடைய மூளைகளும் காய்ந்து போய்விட்டது. தமிழக மீனவர்களின் பிரச்சினைதான் இப்போதைக்குள்ள ஒரு ஐடியா. அதுவும் காயத்தான் போகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.