Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபக்ஷவினர் சீனாவுடன் மேற்கொண்ட ஊழலை அம்பலப்படுத்தினார் அனுர

Featured Replies

ராஜபக்ஷவினர் சீனாவுடன் மேற்கொண்ட ஊழலை அம்பலப்படுத்தினார் அனுர

 

 

(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) 

பண நப்பாசையிலும் அதிகார பேராசையிலும் எமது நாட்டின் கொள்க‍ையையும் எமது சுயாதீனத்தையும் மஹிந்த ரஜாபக்ஷ விற்றுவிட்டார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் 7.6 மில்லியன் டொலர் நிதியை வழங்கியுள்ளதாக தகவல் வெளியிட்டு நியூயோர்க டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தி தொடர்பாக  பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சியினரால் கொண்டு வரப்பட்ட சபை ஒத்தி வைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில்  கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 

anura.jpg

மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு சீன நிறுவனம் 7.6 மில்லியன் டொலர் நிதியை வழங்கியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக அவரே இங்கு வந்து விளக்கமளித்திருக்க  வேண்டும். ஆனால் தற்போதைய விவாதத்தின் போது அதற்கு செவிசாய்த்து அது தொடர்பாக பதிலளிக்காது ஊழல் மோசடிகளுக்கு பின்னால் இருக்கும் மக்களின் பொது பணத்தை நாசப்படுத்தியவர்கள் குழப்ப முயற்சித்துள்ளனர். 

பஷில் ராஜபக்‌ஷவின் மனைவியுடன் தொடர்புடைய சீ.ஐ.சீ.டி நிறுவனத்தை பற்றி கூற வேண்டும். அவர்களால் எச்.எஸ்.பீ.சி வங்கியில் அமெரிக்க டொலர் மற்றும் ரூபா அடிப்படையிலான கணக்குகளை பேணி வந்துள்ளனர். கொழும்பு துறைமுகத்தின் தெற்கு துரையடி திட்டம் குறித்த நிறுவனத்திற்கே வழங்கப்பட்டுள்ளது. இதன்படி 2012.05.21 ஆம் திகதி ஒரு இலட்சத்து 57ஆயிரம் டொலர் இலங்கை ரூபாவுக்கு மாற்றப்பட்டுள்ளது. பின்னர் அது  புஸ்பா ராஜபக்‌ஷ மன்றத்தின் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த சீ.ஐ.சீ.டியின் 95 வீதம் சீன நிறுவனத்தினுடையது. இதன்படி 35 வருடங்களின் அந்த துறைமுக திட்டத்தை  அரசாங்கம் மீள பொறுப்பேற்கும் போது புஸ்பாவுக்கும் வழங்கப்பட்ட பணத்தை அரசாங்கமே மீள செலுத்த வேண்டிய நிலைமை உருவாகும்.  

சைனா ஹாபர் நிறுவனம் தேர்தல் காலத்தில் மில்லியன் கணக்கில் பணத்தை வழங்கியுள்ளது. அடிக்கடி மில்லியன் கணக்கில் கசோலைகள் மாற்றப்பட்டுள்ளன. சீனா தனது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள இவ்வாறு செய்துள்ளது. அரச தலைவர்களை பணத்திற்கு வாங்கியுள்ளனர். இப்போது சில விடயங்களே வெளியாகியுள்ளன. மேலும் வெளியாகும். 

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதியை தேசப் பற்றாளர் என கதைக்க முடியாது.  தாய் நாடு என அவரால் கதைக்க முடியுமா? முன்னாள் ஜனாதிபதி என்றில்லாது பாராளுமன்ற உறுப்பினர் என கருதாது சாதாரண  பிரஜையாக கருதி மஹிந்த ராஜபக்‌ஷ ஏதேனும் நிறுவனத்தினால் விலைக்கு வாங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. என்றால் அது தொடர்பாக அவர் விளக்கமளிக்க வேண்டும். 

மஹிந்த ராஜபக்ஷவின் ஊழல் சர்வதேச ஊடகத்தில் வெளிவந்துள்ளது. என்ன காரணிக்காக வெளிவந்தது, எவ்வாறு வெளிவந்தது என்பதை விடவும் நடைபெற்ற ஊழல் குறித்து முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அமெரிக்கா - சீனா வின் அரசியல் எமக்கு அவசியம் இல்லை, சர்வதேச ஊடகம் எவ்வாறு செயற்படுகின்றது என்பதை எமக்கு முக்கியம் இல்லை. ஆனால் மஹிந்த ராஜபக்ஷ சீனாவிடம் வாங்கிய 7.6 மில்லியன் டொலர் குறித்து விசாரிக்க வேண்டும். அவர் பாராளுமன்றத்தில் உண்மைகளை தெளிவுபடுத்த வேண்டும்.  ஒரு தரப்பினர் குற்றச்சாட்டை முன்வைத்தால் அதற்கு உரிய  பதிலை கூற வேண்டியது எதிரணியின் கடமையாகும். 

ஆனால் இவர்கள் இந்த விவாதத்தை தடுக்க எடுத்த முயற்சிகள் வேடிக்கையாக இருந்தது. மஹிந்த ராஜபக்ஷவை காப்பாற்ற இவர்கள் எடுத்த முயற்சிகள் வேடிக்கையாகவும் வெட்கப்பட வேண்டிய ஒன்றாகவும் அமைந்தது. மஹிந்த ராஜபக்ஷ இந்த கேள்விகளுக்கு பதில் கூற வேண்டும். என்னிடம் பல கேள்விகள் உள்ளன. 

மக்களின் சொத்துக்களை பாரிய அளவில் கொள்ளையடித்து ஆட்சி செய்த அரசாங்கமே இதுவரை காலமாக இருந்து வந்துள்ளது. இதில் ராஜபக்ஷ அரசாங்கத்தின் ஊழல்களை கணக்கெடுப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. இவர்கள்  தேர்தலுக்கு இரண்டு நாட்கள் இருந்த போதே பல கோடி ரூபாய்களுக்கு கோடிக்கணக்கான பெறுமதி கொண்ட காசோலை மாற்றப்பட்டுள் தகவல்கள் கிடைத்துள்ளது.  எமது நாட்டில் சுயாதீனத்துவம் குறித்து பாரிய போராட்டம் உள்ளது. சிலர் வடக்குக்கு எதிரான தெற்கின் இனவாதம் தேசிய வாதம் என கூறுகின்றனர். ஆனால் ஒட்டுமொத்த மக்களையும் நெருக்கும் ஊழலுக்கு எதிராக இந்த தேசிய வாதிகள் வாய்திறப்பதில்லை.  

பண நப்பாசையிலும் அதிகார பேராசையிலும் எமது நாட்டின் கொள்க‍ையையும் எமது சுயாதீனத்தையும் மஹிந்த ரஜாபக்ஷ  விற்றுவிட்டார். மக்களையும் சொத்துக்களையும் சர்வதேசத்துக்கு விற்றுவிட்டு அதில் ஆட்சி செய்யும் மிகவும் கீழ் தரமான அரசியலில் ஈடுபட்டுவிட்டார்.  இந்த குற்றச்சாட்டுக்களுக்கு அவர் ஒரு ஜனாதிபதியாகவோ, எதிர்கால தலைவராகவோ அல்லாது ஒரு சாதாரண குடிமகனாக பதில் கூற வேண்டும் என்றார். 

http://www.virakesari.lk/article/36910

  • தொடங்கியவர்

பண நப்பாசையில் நாட்டின் கொள்கையை மஹிந்த ராஜபக் ஷ விற்றுவிட்டார்

CITY-PAGE-01-BLACKGMGPage1Image0010-da2d3e8cc6d3a30f7957b1a85d7ee76cc8310ecb.jpg

 

(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

சபையில் ஜே.வி.பி. தலைவர் கடும் சாடல் பண நப்பாசையில், அதிகார பேராசையில் எமது நாட்டின் கொள்கையை, எமது சுயாதீனத்தை மஹிந்த ராஜபக் ஷ விற்று விட்டார். மக்களையும் சொத்துக்களையும் சர்வதேசத்துக்கு விற்று விட்டு அதில் ஆட்சி செய்யும் மிகவும் கீழ்த் தரமான அரசியலில் ஈடுபட்ட உண்மைகள் இன்று வெளியாகி வருகின்றன. ஆகவே முன்னாள் ஜனாதிபதியாகவோ, அடுத்த தலைவராகவோ 

 அல்லது இந்த நாட்டின் குடிமகனாக மஹிந்த ராஜபக் ஷ பதிலளிக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்ன ணியின் தலைவர் அனுரகுமார திஸா நாயக தெரிவித்தார்.  

முன்னாள் ஜனாதிபதி

 மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் 7.6 மில்லியன் டொலர் நிதியை வழங்கியுள்ளதாக நியூயோர்க டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தி தொடர்பாக நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சியினரால் கொண்டு வரப்பட்ட சபை ஒத்தி வைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் உரையாற்றுகையில்

ஊழல் என்பது இன்று எமது நாட்டில் தவிர்க்க முடியாத ஒரு காரணியாக மாற்றம் பெற்றுள்ளது. அரசியலில் பிரதான கட்சிகள் இடையில் சர்வ சாதாரண காரணியாக கருத்தில்கொள்ளப்பட்டு வருகின்றது. சாதாரண ஊழல்கள், பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் செய்த ஊழலை பற்றியெல்லாம் பெரிய விடயமாக பேசுவதும் கோடிக்கணக்கில் ஊழல் செய்த அரச தலைவர்கள் மீதான ஊழல்களை கருத்தில் கொள்ளாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது. அரச மாளிகையில்

 இன்று மிகப்பெரிய ஊழல் மோசடிகளால் இடம்பெற்று வருகின்றன. பிணை முறி விவகாரம் தொடர்பாக கதைக்கும் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பெயரை கூறாது கதைக்க முடியாது. அதேபோன்று வீடமைப்பில் இடம்பெற்ற மோசடி தொடர்பாக கதைக்கும் போது அப்போது அமைச்சராக இருந்த குறித்த அமைச்சரின் பெயரை கூறாது கதைக்க முடியாது. அதேபோன்று இன்று நடைபெறும் இந்த விவாதத்தில் மகிந்த ராஜபக்‌ஷவின் பெயரை குறிப்பிடாது கதைக்க முடியாது. ஹம்பாந்தோட்டை அபிவிருத்தி வேலைத்திட்ட ஊழலால் ராஜபக் ஷவின் பெயர் உச்சரிக்கப்படாது கடந்து செல்ல முடியாது.

தற்போது நாடு கடன் மற்றும் தரகு பணத்தை வழங்கி அடிமைப்படுத்த முடியுமென்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. அன்று மத்தள விமான நிலையத்தை அமைக்கும் போது வருடாந்தம் 30,000 விமான சேவைகளை நடத்த முடியுமெனவும் ஒரு இலட்சம் மெற்றிக் தொன் வரை பொருட்கள் சேவைகளை நடத்த முடியுமெனவும் கூறப்பட்டது. ஆனால் பல வருடங்கள் ஆகியும் இன்னும் அது 100ஐயும் தாண்டவில்லை. பொய்களை கூறி ஆரம்பித்த வேலைத்திட்டங்கள் அனைத்துமே இன்று தோல்வியில் முடிவடைந்துள்ளன. அதேபோன்று அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக சந்திரிக்கா அரசாங்கத்தில் யோசனை கொண்டு வரப்பட்ட போது அதனை சேவை வழங்கும் நிலையமாக அமைப்பது தொடர்பாகவே யோசனை இருந்தது. ஆனால் அது பொருட்கள் தொடர்பான துறைமுகமாக எப்படி மாறியது. இந்த வேலைத்திட்டம் எமது பொருளாதாரத்துடன் தொடர்புடையதா என பார்த்தால் அப்படியும் கிடையாது. இப்போது இது தொடர்பாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த இலஞ்ச உடன்படிக்கைகள் அனைத்துமே அரச மாளிகளைளில் நடக்கின்றன என்பது உறுதியாகின்றது.

தற்போது இரண்டு தரப்பிலும் ஊழல்களில் சிக்கிக் கொண்டு ஒருவரை ஒருவரை பாதுகாத்துக்கொள்ளும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். அமெரிக்க பத்திரிகையொன்றில் வெளியாகிய செய்தியொன்றை அடிப்படையாக கொண்டு இந்த விவாதம் நடக்கின்றது. எவ்வாறாயினும் நாங்கள் அதனை அடிப்படையாக கொண்டு விவாதிக்கவில்லை. எம்மிடம் இருக்கும் தகவல்களை அடிப்படையாக கொண்டு இந்த விவாதத்தில் தகவல்களை வெளியிடுகின்றோம். அதாவது மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு சீன நிறுவனம் 7.6 மில்லியன் டொலர் நிதியை வழங்கியுள்ளமை தொடர்பாக அவரே இங்கு வந்து விளக்கமளித்திருக்க வேண்டும். ஆனால் தற்போதைய விவாதத்தின் போது அதற்கு செவிசாய்த்து அது தொடர்பாக பதிலளிக்காது ஊழல் மோசடிகளுக்கு பின்னால் இருக்கும் மக்களின் பொது பணத்தை நாசப்படுத்தியவர்கள் குழப்ப முயற்சித்துள்ளனர்.

பஸில் ராஜபக்‌ஷவின் மனைவியுடன் தொடர்புடைய சீ.ஐ.சீ.டி நிறுவனத்தை பற்றி கூற வேண்டும். அவர்கள் எச்.எஸ்.பீ.சி வங்கியில் அமெரிக்க டொலர் மற்றும் ரூபா அடிப்படையிலான கணக்குகளை பேணி வந்துள்ளனர். கொழும்பு துறைமுகத்தின் தெற்கு துறையடி திட்டம் குறித்த நிறுவனத்திற்கே வழங்கப்பட்டுள்ளது. இதன்படி 2012 .05.21ஆம் திகதி ஒரு இலட்சத்து 57ஆயிரம் டொலர் இலங்கை ரூபாவுக்கு மாற்றப்பட்டுள்ளது. பின்னர் அது புஸ்பா ராஜபக்‌ஷ மன்றத்தின் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த சீ.ஐ.சீ.டியின் 95 வீதம் சீன நிறுவனத்தினுடையது. இதன்படி 35 வருடங்களின் அந்த துறைமுக திட்டத்தை அரசாங்கம் மீள பொறுப்பேற்கும் போது புஸ்பாவுக்கும் வழங்கப்பட்ட பணத்தை அரசாங்கமே மீள செலுத்த வேண்டிய நிலைமை உருவாகும்.

சைனா ஹாபர் நிறுவனம் தேர்தல் காலத்தில் மில்லியன் கணக்கில் பணத்தை வழங்கியுள்ளது. அடிக்கடி மில்லியன் கணக்கில் காசோலைகள் மாற்றப்பட்டுள்ளன. சீனா தனது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள இவ்வாறு செய்துள்ளது. அரச தலைவர்களை பணத்திற்கு வாங்கியுள்ளனர். இப்போது சில விடயங்களே வெளியாகியுள்ளன. மேலும் வெளியாகும். எமது பொருளாதார சுயாதீனத்துவம் இல்லாது போயுள்ளது. தரகு பெற்று இவர்கள் இதனை பொருளாதார சுயாதீனத்துவத்தை இல்லாது செய்துவிட்டனர். இதேவேளை அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியதன் மூலம் இந்தியா இலங்கையுடன் கோபத்தை கொண்டிருந்த நிலையில் மத்தள விமான நிலையத்தை வழங்க திட்டமிட்டுள்ளனர். தற்போது திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவுக்கு கொடுக்கவும் அமைச்சரவையில் ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதிக்கு இன்னும் தேசப் பற்றாளர் என கதைக்க முடியாது. தாய் நாடு என அவரால் கதைக்க முடியுமா?

 மஹிந்த ராஜபக் ஷவின் ஊழல் சர்வதேச ஊடகத்தில் வெளிவந்துள்ளது. என்ன காரணிக்காக வெளிவந்தது,எவ்வாறு வெளிவந்தது என்பதை விடவும் நடைபெற்ற ஊழல் குறித்து முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அமெரிக்கா- சீனா வின் அரசியல் எமக்கு அவசியம் இல்லை, சர்வதேச ஊடகம் எவ்வாறு செயற்படுகின்றது என்பது எமக்கு முக்கியம் இல்லை. ஆனால் மஹிந்த ராஜபக் ஷ சீனாவிடம் வாங்கிய 7.6 மில்லியன் டொலர் குறித்து விசாரிக்க வேண்டும். அவர் பாராளுமன்றத்தில் உண்மைகளை தெளிவுபடுத்த வேண்டும். ஒரு தரப்பினர் குற்றச்சாட்டை முன்வைத்தால் அதற்கு உரிய பதிலை கூற வேண்டியது எதிரணியின் கடமையாகும். ஆனால் இவர்கள் இந்த விவாதத்தை தடுக்க எடுத்த முயற்சிகள் வேடிக்கையாக இருந்தன. மஹிந்த ராஜபக் ஷவை காப்பாற்ற இவர்கள் எடுத்த முயற்சிகள் வேடிக்கையாகவும் வெட்கப்பட வேண்டிய ஒன்றாகவும் அமைந்தன. மஹிந்த ராஜபக் ஷ இந்த கேள்விகளுக்கு பதில் கூற வேண்டும். என்னிடம் பல கேள்விகள் உள்ளன.

மக்களின் சொத்துக்களை பாரிய அளவில் கொள்ளையடித்து ஆட்சி செய்த அரசாங்கமே இதுவரை காலமாக இருந்து வந்துள்ளது. இதில் ராஜபக் ஷ அரசாங்கத்தின் ஊழல்களை கணக்கெடுப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. இவர்கள் தேர்தலுக்கு இரண்டு நாட்கள் இருந்த போதே பல கோடி ரூபாய்களுக்கு கோடிக்கணக்கான பெறுமதி கொண்ட காசோலை மாற்றப்பட்டுள்ள தகவல்கள் கிடைத்துள்ளன. எமது நாட்டில் சுயாதீனத்துவம் குறித்து பாரிய போராட்டம் உள்ளது. சிலர் வடக்குக்கு எதிரான தெற்கின் இனவாதம் தேசிய வாதம் என கூறுகின்றனர். ஆனால் ஒட்டுமொத்த மக்களையும் நெருக்கும் ஊழலுக்கு எதிராக இந்த தேசிய வாதிகள் வாய்திறப்பதில்லை. பண நப்பாசையில், அதிகார பேராசையின் எமது நாட்டின் கொள்கையை, எமது சுயாதீனத்தை மஹிந்த ராஜபக் ஷ விற்றுவிட்டார். மக்களையும் சொத்துக்களையும் சர்வதேசத்துக்கு விற்றுவிட்டு அதில் ஆட்சி செய்யும் மிகவும் கீழ் தரமான அரசியலில் ஈடுபட்டுவிட்டார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு அவர் இந்த நாட்டின் குடிமகனாக பதில் கூற வேண்டும். முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் அல்ல,எதிர்கால தலைவர் என்ற ரீதியில் அல்ல, ஒரு சாதாரண குடிமகனாக அவர் இந்த குற்றச்சாட்டுக்கு முகங்கொடுக்க வேண்டும்.

பதில் கூற வேண்டும். ஒரு இலங்கை பிரஜை என்ற வகையில் அவர் மீதான பாரிய ஊழல் குற்றத்துக்கு பதில் கூறியாக வேண்டும். எந்தவொரு தேசிய வாதிக்கும் இந்த ஊழலை மூடி மறைக்க முடியாது. ராஜபக் ஷவின் பெயரில் அரசியல் செய்யும், ராஜபக் ஷாவின் கைக்குள் செல்லமாக அரசியல் செய்யும் நபர்களுக்கு மட்டுமே இந்த ஊழலை மறைக்க முடியும். மஹிந்த ஆட்டி வைக்கும் கை பொம்மை அரசியல் வாதிகள் இன்று அவர் அணியாக செயற்பட்டு வருகின்றனர். ஆகவே உண்மைகளை மக்களுக்கு வெளிபடுத்த வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-07-20#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.