Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜ­ப­க் ஷக்­களின் சாம்­ராஜ்யம் இன்னும் முடிந்­து­வி­ட­வில்லை

Featured Replies

ராஜ­ப­க் ஷக்­களின் சாம்­ராஜ்யம் இன்னும் முடிந்­து­வி­ட­வில்லை

CITY-PAGE-01-BLACKGMGPage1Image0014-be4dd748bff8acb0b73a63c4dee79e8c82821f66.jpg

 

(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

நியூயோர்க் டைம்ஸின் குற்­றச்­சாட்டு பொய்­யா­னது;  கூட்டு எதி­ரணி எம்.பி.க்கள் சபையில் தெரி­விப்பு ராஜபக் ஷக்­களின் மீது பொய்­யான குற்­றச் சாட்­டுக்­களை முன்­வைத்தும் சிறை­களில் அடைத்தும் தமது ஆட்­சியை தக்­க­வைத்­துக்­கொள்­ளலாம் என்றே நல்­லாட்சி அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது. ஆட்சி மாற்றம் ஏற்­பட்­ட­வுடன்  

ராஜபக் ஷக்­களின் சாம்­ராஜ்யம் முடி­வுக்கு வர­வில்லை என்­பதை அர­சாங்கம் அறிந்­து­கொள்ள வேண்டும் என பொது எதி­ரணி உறுப்­பி­னர்கள் நேற்று சபையில் தெரி­வித்­தனர்.

சீன நிறு­வ­ன­மொன்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்‌­ஷ­வுக்கு ஜனா­தி­பதி தேர்தல் காலத்தில் 7.6 மில்­லியன் டொலர் நிதியை வழங்­கி­யுள்­ள­தாக நியூயோர்க் டைம்ஸ் பத்­தி­ரி­கையில் வெளி­யா­கி­யுள்ள செய்தி தொடர்­பாக நேற்று வியா­ழக்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் ஐக்­கிய தேசிய கட்­சி­யி­னரால் கொண்டு வரப்­பட்ட சபை ஒத்தி வைப்பு வேளை பிரே­ரணை மீதான விவா­தத்தில் கலந்­துக்­கொண்டு உரை­யாற்றும் போதே அவர்கள் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

விவா­தத்தில் உரை­யாற்­றிய பொது எதி­ரணி உறுப்­பினர் கெக­லிய ரம்­புக்­வெல கூறு­கையில்,

சீனா­விடம் இருந்து மஹிந்த ராஜபக் ஷ பணம் பெற்­ற­தாக அர­சாங்கம் முன்­வைக்கும் கார­ணிகள் அனைத்­துமே பொய்­யா­ன­வை­யாகும். சீனா நிரா­க­ரித்த கார­ணி­களை முன்­வைக்­காது, ஆதாரம் இல்­லாது அர­சாங்கம் பொய் கருத்­துக்­களை முன்­வைத்து வரு­கின்­றது. இந்த அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்த காலத்தில் இருந்து ராஜபக் ஷக்­க­ளுக்கு எதி­ராக பொய் கருத்­துக்­களை கூறி வந்­தது. தங்கக் குதி­ரை­களை வைத்­துள்­ள­தாக, தெற்கில் பல ஏக்கர் நிலம், தோட்டம், கட்­டி­டங்கள் உள்­ள­தாக கூறி­னார்கள், ஆனால் இன்­று­வரை அவை எதையும் தேடிப்­பி­டிக்க முடி­யாது உள்­ளன. இப்­போது நியூயோர்க் டைம்ஸ் பத்­தி­ரிகை கதை ஒன்றை வைத்­து­கொண்டு எம்­மீது குற்றம் சுமத்த முயற்­சித்து வரு­கின்­றனர். காசோலை இலக்­கங்கள், கோடிக் கணக்­கி­லான தொகை என்­பன குறித்து இதற்கு முன்­னரும் கூறி­னார்கள். ஆனால் இன்­னமும் அவை வெறும் கதை­க­ளா­கவே உள்­ளன.

வேறு நாடு­களின் ஆட்சி மாற்­றத்­துக்கு அமெ­ரிக்கா நியூயோர்க் டைம்ஸை பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றனர் என்ற பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. அவ்­வா­றான ஒரு குற்­றச்­சாட்­டா­கவே மஹிந்த ராஜபக் ஷவின் குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டுள்­ளதா என்ற சந்­தேகம் எழு­கின்­றது. . இந்த அர­சாங்­கமும் இதனை சாத­க­மாக பயன்­ப­டுத்தி தமது இருப்­பினை தக்­க­வைக்க முயற்­சித்து வரு­கின்­றது. ஆனால் மக்கள் இவற்றை வேடிக்கை பார்க்­கப்­போ­வ­தில்லை. மக்கள் கடந்த தேர்­தலில் கொடுத்த செய்­தியை அர­சாங்கம் நன்­றாக விளங்­கிக்­கொள்ள வேண்டும். அடுத்த பொதுத் தேர்­தலில் ஜனா­தி­பதி தேர்­தலில் அர­சாங்கம் அடையும் படு மோச­மான தோல்­வியை எதிர்­பார்த்து இப்­போதே தயா­ரா­கிக்­கொள்ள வேண்டும்.

எம்­மீ­தான குற்றச் சாட்­டுக்கள் எப்­போ­துமே வெறும் குற்­றச்­சாட்­டாக மட்­டுமே அமையும். இவை ஒரு­போதும் உண்­மை­யா­காது. அடுத்த குறு­கிய காலத்­துக்கு அர­சாங்­கத்தின் குற்­றச்­சாட்­டுக்­களை நாம் எதிர்­கொள்ள தயா­ரா­கவே உள்ளோம். எத்­தனை நெருக்­க­டிகள் வந்­தாலும் நாம் முகங்­கொ­டுக்க தயா­ரா­கவே உள்ளோம். எம்­முடன் மக்கள் உள்­ளனர். நாம் மக்­க­ளுடன் எமது கணக்கு வழக்­கு­களை பார்த்­துக்­கொள்­கின்றோம் எனக் குறிப்­பிட்டார்.

விவா­தத்தில் விமல் வீர­வன்ச எம்.பி உரை­யாற்­று­கையில்

மூன்று ஆண்­டு­க­ளா­கவும் இந்த அர­சாங்கம் ஒரே குற்­றச்­சாட்­டினை முன்­வைத்து வரு­கின்­றது. இந்த நகர்­வு­களில் சிவப்பு யானைக்­குட்­டி­களும் உள்­ளன. அவர்­க­ளுக்கும் கோடிக்­க­ணக்­கான நிதி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. இலங்­கையின் ஆட்சி மாற்­றங்­க­ளுக்கு சர்­வ­தேச தலை­யீ­டுகள் இருந்­துள்­ளன. இந்த ஆட்சி மாற்­றத்தில் நேர­டி­யாக சர்­வ­தேச தலை­யீ­டு­களும் உள்­ளன. பல கோடிக் கணக்­கான நிதியும் கொட்­டப்­பட்­டுள்­ளன. இவை குறித்து ஏன் அர­சாங்கம் வாய் திறக்­காது உள்­ளது. ஜனா­தி­ப­தியின் புதல்வர் மீது ஊழல் குற்­றச்­சாட்டு உள்­ளது. பிர­த­ம­ரது பொரு­ளா­தார நகர்­வு­களில் ஊழல் உள்­ளது. முதலில் அங்­கி­ருந்து விசா­ர­ணை­களை ஆரம்­பிக்க வேண்டும். அதை விடுத்து பழைய கதை­களை கூறிக்­கொண்டு மக்­களை ஏமாற்றி வரு­கின்­றீர்கள்.

அமெ­ரிக்­கா­வுக்கு தேவை­யான ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்த துணை­போன சிவப்பு யானைகள் இன்று சுய கொள்கை பற்றி பேசு­வது வெட்­கப்­பட வேண்­டி­ய­தாகும். நாம் முன்­னெ­டுத்த வேலைத்­திட்­டங்­களை முழு­மை­யாக மாற்றி நாட்டின் பாரிய வேலைத்­திட்­டங்கள் அனைத்­தி­னையும் சர்­வ­தே­சத்­துக்கு விற்கும் நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் முன்­னெ­டுக்க தயா­ரா­கி­யுள்­ளது. மூன்று ஆண்­டு­கா­ல­மாக அர­சாங்­கத்தின் நகர்­வுக்கு அச்சம் கொள்­ளாத நாம் இன்னும் குறு­கிய கால ஆட்­சியில் துள்ளும் துள்­ளல்­க­ளுக்கு அஞ்­சப்­போ­வ­தில்லை.

நல்­லாட்சி, தூய்­மை­யான ஆட்­சி­யா­ளர்கள் என்றால் மத்­திய வங்கி ஊழ­லுடன் தொடர்­பு­பட்ட அனைத்து குற்­ற­வா­ளி­க­ளையும் உட­ன­டி­யாக வெளிப்­ப­டுத்த வேண்டும். ஒரு இரு­வரை மட்­டுமே பலி­கொ­டுத்­து­விட்டு தப்­பிக்­கொள்ள முயற்­சிக்க வேண்டாம். உண்­மை­யான குற்­ற­வா­ளி­களை வெளிப்­ப­டுத்­துங்கள். சிவப்பு யானைக்­குட்­டிகள் சாகும் வரையில் உண்­ணா­வி­ரதம் இருந்து உண்­மை­களை வெளிப்­ப­டுத்த வேண்டும். ஆனால் இவர்கள் அனை­வரும் ஒரு அணி­யாக இருந்து ஊழல் அனைத்­தையும் மறைத்து வரு­கின்­றனர். தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு, ஜே.வி.பிக்கும் பத­விகள் வழங்­கப்­பட்­டுள்­ளன. இவ்­வாறு பத­வி­களை தக்­க­வைத்­துக்­கொண்டு இந்த மூன்று ஆண்­டு­களில் எம்மை தாக்கும் நட­வ­டிக்­கை­களை மட்­டுமே முன்­னெ­டுத்து வரு­கின்­றனர் எனக் குறிப்­பிட்டார்.

மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே எம்.பி உரை­யாற்­று­கையில்

இந்த விவாதம் எடுக்­கப்­பட்ட விதம் தவ­றா­னது, அர்த்­த­மற்ற வகையில் இந்த விவாதம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. ஆனால் மஹிந்த ராஜபக் ஷ மீது முன்­வைக்­கப்­பட்ட குற்­றச்­சாட்டு பொய்­யா­னது. நியூ யோர்க் பத்­தி­ரி­கையில் முன்­வைக்­கப்­பட்ட குற்­றச்­சாட்டு அடிப்­படை ஆதாரம் அற்­றது. இந்த குற்­றங்­க­ளுக்கு வழக்கு தொடர முடி­யாது. வெறு­மனே விமர்­சனம் மட்­டுமே முன்­வைக்க முடியும். மஹிந்த ராஜபக் ஷவிற்கு மட்டும் அல்ல பல நிறு­வ­னங்கள் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் பணம் கொடுத்­துள்­ளன. அவற்றை மறைக்க வேண்டாம். இந்த மூன்று ஆண்­டு­களில் பொய்களை கூறிக்கொண்டு மக்களின் நம்பிக்கையை இழந்ததே ஆட்சி இடம்பெற்றது. கம்பனிக்கார்களுக்கு மட்டுமே இந்த அரசாங்கம் முக்கியத்துவம் கொடுக்கின்றது. மாற்றாக மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை. இன்று அரசாங்கத்துக்கு கோத்தாபய ராஜபக் ஷ பயம் ஏற்பட்டுள்ளது. யுத்தத்தை வெற்றிகொண்ட எமது தலைவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் சிறு பிள்ளைகளுக்கு அச்சங்கொள்ளப் போவதில்லை. எமது தலைவர்களை சிறையில் அடைத்து உங்களின் இருப்பை தக்கவைத்துக்கொள்ள முடியாது. ராஜபக் ஷக்களின் சாம்ராஜ்யம் முடிந்ததாக எண்ணி அரசாங்கம் பெருமூச்சி விடவேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-07-20#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.